KAILASA Library/மனதைத் திற/உங்களைSign in
மனதைத் திற

உங்களை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நிர்ணயிப்பது எது?

'மஞ்சள் நிறத்திற்குப்' பேர் போனவர்கள் இந்தியர்கள். அமெரிக்க வெள்ளையர் நடுவில் சென்றால், இதே இந்தியர் 'கருப்பர்'. ஆப்ரிக்கக் கருப்பர் நடுவில், இதே இந்தியர், 'சிவந்தவர்,' 'வெள்ளையர்.'

எதை வைத்து இங்கு உங்களின் நிறம் நிர்ணயிக்கப்படுகிறது? நிறத்தை நிர்ணயிப்பது தனி மனிதரா அல்லது சூழ்நிலையா?...

நீங்கள் அழகற்றவர், ஒல்லியானவர், குட்டையானவர்... அது... இது... என நிர்ணயமாவதின் இரகசியம் புரிகிறதா?

ஒல்லியான நீங்கள் சோமாலியா சென்றால், அங்கிருப்பவர்கள், "பார்! எவ்வளவு திடகாத்திரமாக இந்த மனிதரிருக்கிறார்," என்று உங்களைப் பற்றி பெருமைப்படப் பேசுவார்கள்.

ஏதாவதொரு வகையில், 'நீ
குறைந்தவன், தாழ்ந்தவன்'
என்ற எண்ணத்தை
எல்லோருக்கும், எப்படியாவது
விதைத்து விடுகின்றன இந்தச்
சமுதாயச் சூழ்நிலைகள்.

உயரம் கொஞ்சம் கம்மியான
நீங்கள், குள்ள மனிதர்கள் வாழுமிடத்திற்கு
சென்றால், உங்களைத் தலைநிமிர்ந்து
பார்ப்பார்கள். உங்கள் அளவுக்கு
வளரவில்லையே எனத் தவிப்பார்கள்.

இப்போது நீங்களே சொல்லுங்கள்...

இந்தத் தவிப்பு நியாயமானதா?

தேவைதானா?

நீங்கள் எவ்வளவு அழகானவர், எந்த அளவுக்கு திடகாத்திரமானவர், எவ்வளவு புத்திசாலி, எவ்வளவு பணம் படைத்தவர் என்ற எல்லாமே உங்களால் நிர்ணயிக்கப்பட வேண்டியது. ஆனால், தொடர்ந்து, அதைச் சமுதாயமும், சுற்றியிருக்கும் சூழ்நிலைகளும்தான் நிர்ணயிக்கின்றன.

ஏதாவதொரு வகையில், “நீ குறைந்தவன், தாழ்ந்தவன்,” என்ற எண்ணத்தை எல்லோருக்கும், எப்படியாவது விதைத்து விடுகின்றன இந்தச் சமுதாயச் சூழ்நிலைகள்.

புத்திசாலி, அடுத்தவரை முன்மாதிரியாய் வைத்து, தம்முள், தம்மைப்பற்றி விதவிதமாய் விதைக்கப்பட அனுமதிக்கமாட்டார்.

நோய்களின் காரணகாரியங்களைப்பற்றி விளக்கும்போது, ஆழமான வேதப் பகுதி ஒன்றில் இப்படி வருகிறது...

“ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு மன அமைப்பு, ஒவ்வொரு விதத்தில் காரணமாயிருப்பதால்தான், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய்கள் இருக்கின்றன,” மேலும், அதே வேதப்பகுதி தொடர்ந்து சொல்கிறது,

‘அடக்குதல்’ (குதண்ணீஞூணூண்டிணிண) எனும் மனஅமைப்பு, தோல் நோய்களையும், ஒவ்வாமையையும் (அஞேணூாஞ்தூ), நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும்;

‘பயப்படுதல்’, நரம்புத் தளர்ச்சியையும்; ‘கவலைப்படுதல்’, வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளையும்;

portrait

ஒவ்வொரு நோய்க்கும்,
ஒவ்வொரு மன அமைப்பு,
ஒவ்வொரு விதத்தில்
காரணமாயிருப்பதால்தான்,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு

'அ his எதிர்பார்ப்புகள்', இதய நோய்களையும் உருவாக்குகின்றன. எனப் படிப்படியாக எல்லா நோய்களையும் விளக்கும் வேதக் கருத்துக்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை நம்புபவர்களின் நம்பிக்கையாக மட்டுமே இருந்தது.

ஆனால், இன்றைய மனம், உடல், மருந்து பற்றிய மனோதத்துவ ஆராய்ச்சிகள், வேதங்கள் சொல்லும் அதே கருத்துகளை, பல ஆய்வுகளுக்குப் பின், தாங்கள் கண்டுபிடித்த கருத்துகளாக வெளியிட்டிருப்பது, வேதங்கள் உண்மையானவை என்பதற்கான ஆதாரங்கள். வேதக்கருத்துகள், எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைக் கருத்துகளாக இன்று மாறியிருக்கிறது.

அதே வேதத்தில் வரும் ஓர் ஆச்சரியம் தரும் பாராயணம் ஒன்று, 'உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் இடையில் சொருகப்பட்ட ஆப்பிற்குச் சமம்

  • மற்றொரு உடல் மீதான கவர்ச்சியும் அந்த உடல் போல் நான் மாறக்கூடாதா? என்ற எண்ணமும்! '

இப்படிப்பட்ட மன அமைப்புதான் பிற்காலத்தில் புற்றுநோயாகப் புறப்படும்," எனச் சொல்கிறது. மேற்கண்ட ஒவ்வொரு விதமான மன அமைப்பும்தான், ஒவ்வொரு விதமான நோயை உங்களுக்குள் உருவாக்குகின்றன.

இத்தனை விதவிதமான மன அமைப்புகளை உருவாக்குவது விதவிதமான சமுதாயச் சூழ்நிலைகள்தான். அதுவும் மனிதர்களுக்குள், அவர்கள் பற்றிய விவரம் தெரியும் பக்குவம் பெறுவதற்கு முன்பே, பல வகையான மன அமைப்புகள் உருவாக தேவையான விதைகளைச் சமுதாயம் விதைத்துவிடுகிறது.

இந்த விதைத்தல் செயல் தடுக்கப்பட்டுவிட்டால், நம்முள் ஆனந்தம் பெருகுவதோடு, எதிர்கால நோய்களும் தடுக்கப்பட்டுவிடும்.

எல்லாப் புது நாகரிகத்திற்கும்
அடிப்படையானது தன்னம்பிக்கை If you
radiate confidence, whatever you do and
wear will become fashion.

உங்களின் தன்னம்பிக்கைக்கு இந்த விதைத்தல் செயலைத் தடுத்து நிறுத்தும் சக்தி உண்டு.

> 'உங்களுக்கும், உங்கள்
> உடலுக்கும் இடையில்
> சொருகப்பட்ட ஆப்பிற்குச்
> சமம் - மற்றொரு உடல்
> மீதான கவர்ச்சியும்,
> அந்த உடல் போல் நான்
> மாறக்கூடாதா என்ற

உங்களளவில் நீங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. உங்களுக்குள் தவறான கருத்துகளை விதைக்க முடியாது.

தியான சத்சங்கத்திற்காக முதல் முறை அமெரிக்கா செல்வதற்கு முன் விசா எடுக்கச் சென்றிருந்தேன். அப்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம்.

விசா கொடுக்க விசாரணை செய்யும் அந்தக் கிறிஸ்தவ மனிதர் கேட்டார்... "அமெரிக்காவில் 30 வயது தாண்டிய பிறகே மதப்போதகராக முடியும். உங்களுக்கு வெறும் 27 வயது. நீங்கள் அங்குப்போய் என்ன போதனை செய்யப் போகிறீர்கள்?"

பெங்களூர் தியான சத்சங்கங்களில் பேசிய சில ஆங்கிலச் சொற்பொழிவு ஒலிநாடாக்களைக் கொடுத்து, "இவற்றை ஒருமுறை கேட்டுப் பாருங்கள். கேட்டுப் பார்த்தபின் முடிவு செய்யுங்கள்," எனச் சொன்னேன்.

அடுத்து அவர், "அமெரிக்காவில் கோட் சூட் போட்டிருந்தால்தான் மதிப்பார்கள். உங்களின் உடை அங்கே நாகரிகமற்ற உடையாகக் கருதப்படும். இந்த உடையிலிருந்தால் பல ரெஸ்டாரண்ட்டுகளில் உள்ளே நுழையக்கூட அனுமதிக்க மாட்டார்கள். எனவே, உங்கள் உடையை மாற்றிக்கொள்வதைப்பற்றி யோசியுங்கள்," என்றார்.

உடனே பதிலளித்தேன், "ஒரு வாரம் மட்டும் அமெரிக்காவிலிருக்க விசா கொடுங்கள். இந்தியர்களின் பெருமைமிக்க இந்த உடையை விரும்பி அணியும் அமெரிக்கர்களை

portrait

மற்றவர் உடலைப் பார்த்து, தம் உடல்
மெலிந்திருப்பதாக நினைப்பது,
ஆசைகளை அடக்குவது, பயப்படுவது,
கவலைப்படுவது போன்றவற்றிற்கு
முற்றுப்புள்ளி வைத்தால், தன்னம்பிக்கை

உருவாக்குகிறேன். அவர்களின் உடை மாறும்,'' என்ற பதில் வார்த்தைகளைக் கேட்ட அவர் சந்தோஷமாய்ச் சிரித்துச் சொன்னார், "உங்களுக்கு உங்களைப்பற்றி எவ்வளவு கான்ஃபிடன்ஸ். இந்தத் தன்னம்பிக்கைமட்டும் இன்றைய வளரும் சமுதாயத்திற்குக் கிடை த்தால் உலகமே மாறிவிடும்,'' என்றார்.

தன்னம்பிக்கையை உங்களுக்குள் வளர்ப்பது பெரிய அசுர சாதனை அல்ல. அது எளிதானது.

மற்றவர் உடலைப் பார்த்து, தம் உடல் மெலிந்திருப்பதாக நினைப்பது, ஆசைகளை அடக்குவது, பயப்படுவது, கவலைப்படுவது போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தால், தன்னம்பிக்கை வளர ஆரம்பிக்கும்.

உங்கள் உடலை, உங்கள் மனத்தை முழுமையாய் நம்புங்கள். உள்ளதைக் கொண்டு உயரப்பறக்க ஆரம்பியுங்கள் .

உங்களிடம் இல்லாத அழகுக்காவும், இல்லாத அறிவுக்காகவும் ஏங்குவதை நிறுத்துங்கள். உங்களிடம் இருக்கும் அழகையும், அறிவையும் மூலதனமாக்கி வாழ்வை அணுகுங்கள். தன்னம்பிக்கை பெருகும்.

தன்னம்பிக்கை பெருகப் பெருக... மன அமைப்பு பக்குவப்படும். தவறான விஷயங்கள் உங்களைத் தாக்காத, திடகாத்திரமான நிலையை அடைவீர்கள்.