யார் முடிவு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கல்லூரி வாலிபர் ஒருவரோடு நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. நிறைய சந்தேகங்களோடு வந்த அந்த வாலிபர் கேட்டார்.
"இவ்வளவு மடத்தனமாய் இந்த உலகத்தைப் படைத்தது யார்?"
"நிச்சயமாய் கடவுள்தான்"
"யார் என்னை இவ்வளவு கஷ்டங்கள் நிறைந்த பூமிக்கு அனுப்பி வைத்தது?"
"அதுவும் கடவுள்தான்."
' ' இதிலிருந்து விடுதலை தந்து , என்னைக் காப்பாற்றப் போவது யார்?"
"கடவுள்!
கடவுள்!
கடவுள்
யாரந்தக் கடவுள்?"
"அதுவும் கடவுளைத் தவிர, வேறுயாராக இருக்க முடியும்?"
"கடவுள்! கடவுள்! கடவுள்...
யாரந்தக் கடவுள்?"
“நீங்கள்தான் அந்தக் கடவுள்.’’
இதுவரைக்கும் தலையாட்டித் தலையாட்டிக் கேட்டவரால், இதற்கு மேல் ஒப்புக்கொள்ள முடியவில்லை. காரணம், கடவுள் என்ற வார்த்தையே மாயையாம்.
கடவுள் என்ற நான்கு எழுத்தால், ஞானிகள் குறிப்பிடும் கடவுளுக்கும் மனிதர்கள் குறிப்பிடும் கடவுளுக்கும் சம்பந்தமேயில்லை.
அதனால்தான், “நீங்கள்தான் அந்தக் கடவுள்’’ என்று சொன்ன உண்மையை, அவரால் ஜீரணிக்கக்கூட முடியவில்லை.
பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர், விதண்டாவாதமாக இப்படிக் கேட்டார், “கடவுள் விரும்பிப் படைத்தது பிச்சைக்காரர்களையா? பணக்காரர்களையா?’’
“அவர் விரும்பிப் படைத்தது என்றால் பிச்சைக்காரர்களைத்தான்.’’
“அதெப்படி நிஜமாகும்?’’
பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களருகே நடுத்தர வயதுப் பிச்சைக்காரர் ஒருவர் வந்தார். அவரிடம் கேட்டேன் “உழைத்துச் சாப்பிடலாமில்லையா? உடல் உறுதியாய்த்தானே இருக்கிறது. ஏன் இப்படிப் பிச்சை எடுக்கிறீர்கள்?’’
“அது என் விருப்பம். கை நீட்டினா சோறு, கால் நீட்டினா தூக்கம்...
என்னவொரு இனிமையான வாழ்க்கை இது. அரைஜாண் வயிற்றுக்காக

“நீங்கள்தான் அந்தக் அல்லல்பட நான் விரும்பவில்லை. அதனால்தான், இந்த மாதிரி வாழ முடிவெடுத்தேன். எந்தப் பொறுப்புமில்லாமல் என்ன நிம்மதியான வாழ்க்கை இது?" எனப் பிச்சைக்காரர் பேசியதைக் கேட்டு, பேச்சாளர் அதிர்ந்து நின்றார்.
சமுதாயத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில் ஆடிப்போய் விட்டார்.
டாக்டராவதும், இன்ஜினியராவதும் பெரிய இலக்கு எனப் பலர் மனதில் பதிந்திருக்கிறது. அதிக மதிப்பெண் பெற்று, ஐந்தாறு வருடங்கள் இந்தப் படிப்பைக் கஷ்டப்பட்டுப் படித்து முடித்தபின்தான், பலருக்கு நிஜ நிலவரமே தெரிய வருகிறது.
நிறைய பணம் சம்பாதிக்கலாம், நிறைய பேர் புகழ் கிடைக்கும் என எதிர்பார்த்துப் பெரிய படிப்புப் படித்து முடித்திருப்பார்கள். ஆனால், அவர்களோடு, படித்தவர்களில் சிலர், ஏதோவொரு வியாபாரம் செய்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பார்கள். இவர்களைச் சந்தித்தால், அந்த மருத்துவரின் மனம் என்ன ஆகும்.
மருத்துவராக ஆக முடிவெடுத்தவர் வியாபாரியானாலும், வியாபாரியாக மாற முடிவெடுத்தவர் மருத்துவராக மாறினாலும் பிரச்சினைதான்.
என்னதான் சாதித்தாலும், தீரா ஏக்கம் மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருக்கும்.
நீங்கள் செய்யும் முடிவுகளுக்கும், வாழ்வின் நிகழ்வுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான், உங்களின் வாழ்வை
நீங்கள் வாழ்ந்தீர்களா, இல்லையா என்பதை நிர்ணயிக்கின்றது.
கடவுள் என்ற நான்கு
எழுத்தால், ஞானிகள்
குறிப்பிடும் கடவுளுக்கும்
மனிதர்கள் குறிப்பிடும்
கடவுளுக்கும்
நீங்கள் செய்யும் சாதனையல்ல.
அந்தக் கல்லூரி வாலிபரைப்போல, நம் கஷ்டங்களுக்குக், கடவுளையும் சுற்றியிருப்பவர்களையும் கைகாட்டுபவர்களால், வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தரமான முடிவுகளை எடுக்க முடியாது.
தரமான, ஸ்திரமான முடிவுகளை எடுப்பவர்களால், பட்டிமன்றப் பேச்சாளர்போல் விதண்டாவாதம் பேசவும் முடியாது. பிச்சைக்காரர்களைப்போல் தவறான வாழ்வைத் தேர்வு செய்யவும் முடியாது.
இப்போது நீங்கள் வாழும் வாழ்வு,உங்களின் விருப்பம். இது உங்களின் சுய முடிவுக்குக் கிடைத்த பரிசு.
வாழ்வு இனிதாக இல்லை என்றால், உங்களின் முடிவெடுக்கும் திறனிலும், தரத்திலும் தகராறு இருக்கிறது என்று அர்த்தம்.
வாழ்வு இனிதாக இருப்பதற்கு, உங்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்க வேண்டும். அதற்கான தியானம்...

நீங்கள் வாழும் வாழ்வு உங்களின் விருப்பம். இது உங்களின்,''ய முடிவுக்குக் கிடைத்த பரி,''. வாழ்வு இனிதாக இல்லை என்றால், உங்களின் முடிவெடுக்கும் திறனிலும், தரத்திலும் தகராறு இருக்கிறது என்று அர்த்தம். வாழ்வு இனிதாக இருப்பதற்கு உங்களின்

ஈஞுஞிடிண்டிணிண ட்ச்டுடிணஞ் ஞிச்கீணீச்கீஞிடிணூதூ எனும் உளவியல் தகுதியே 'யார் தலைவர்? யார் தொண்டர்?' என்பதை நிர்ணயம் செய்கின்றது.
சூழ்நிலைக்கேற்ப, மனதிலிருந்து தாவிக் குதிக்கும் முடிவுகளை, சாதாரண மனிதரால் கட்டுப்படுத்த முடியாது.
சாதாரண மனிதரை, முடிவுகள்தான் கட்டுப்படுத்துகின்றன.
அவரின் வாழ்வையே, முடிவுகள்தான் முடிவு செய்கின்றன.
புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க, மனம் சகஜ நிலையில் இருக்க வேண்டும்.
மனம் சகஜமாகப் புரிந்து கொள்ளுதல் அதிகரிக்க வேண்டும்.
மனித வாழ்வு பற்றிய ஞானக் கருத்துகளை நிறையப் படித்தும், கேட்டும் தெரிந்துகொள்ள ஆரம்பியுங்கள். புரிந்து கொள்ளுதல் அதிகரிக்கும்.
புரிந்து கொள்ளுதல் அதிகரிக்க, அதிகரிக்க, மனம் சகஜமாவதும், புத்திசாலித்தனம் பெருகுவதும் இயல்பாய் நிகழும். முடிவெடுக்கும் தரமும், திறனும் தானாய் அதிகரிக்கும்.
முடிவெடுப்பதைப் பற்றி முடிவெடுங்கள். வாழ்வின் முடிவு வரை ஆனந்தம் வர வழி பிறக்கும்.
தியானம் செய்தாலே நம்முடைய கர்மங்கள் எல்லாமே அழிந்துவிடுமா?
- புஷ்பராஜ், லால்குடி.
தியானம் செய்வதால் கர்மங்கள் அழிவதோடல்லாமல், கர்மங்களை அழிக்கும் கடவுளாகி விடுவீர்கள்.