KAILASA Library/மனதைத் திற/சுறுசுறுப்பாக்கும் சக்திSign in
மனதைத் திற

சுறுசுறுப்பாக்கும் சக்தி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தெரியுமா உங்களுக்கு?

'அந்நியனை விரட்டிய புண்ணியன்' என குறிப்பிடப்படும் ஒரு மாமன்னர்...

1,00,000 காலாட்படைகள், 30,000 குதிரைப்படைகள், 9,000 யானைப் படைகளோடு வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டி, மௌரியப் பேரரசு எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தையே இந்தியாவில் சில ஆண்டுகளுக்குள் நிறுவியவர். அவர் பெயர் சந்திர குப்தர்.

இவ்வளவு சாதனைகளைப் படைத்த சந்திரகுப்தர், சிறுவயதில் ஒரு சாதாரண மாடு மேய்க்கும் சிறுவன்தான். மாடு மேய்ப்பவர்களால் வளர்க்கப்பட்ட சந்திரகுப்தரால் சாதனையின் உச்சி நுகர முடியும்போது,... உங்களால் முடியாதா?

இப்படி ஒரு பெட்டிச் செய்தியை நம்மூர் மாட்டுக்கார வேலன் படிக்க நேர்ந்தால், அவரின் நரம்புகள் அந்த நேரத்திற்கு முறுக்கேறத்தான் செய்யும்.

ஒரு புத்தகத்தால்
இவ்வளவு
பாதிப்புகளை
ஏற்படுத்த முடியுமா?

அவரை ஒரு புது உற்சாக சக்தி தொற்றிக்
கொள்ளும். கொஞ்ச நேரத்திற்கு வீறுகொண்ட
சிங்கம் போலத்தான் அவரிருப்பார்.

சும்மாயிருந்தவரைப் பரபரப்பாக்கிய அந்த சங்கதி எது?

அதன் பெயர் ரஜஸ், ரஜசிக சக்தி!

‘ஏழு நாளுக்குள், சாதனைக்குள் எகிறிக் குதியுங்கள்’ என்ற ஐரோப்பிய எழுத்தாளரின் புத்தகம் ஒன்றைப் படித்தபின், தமக்குள் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு கல்லூரி மாணவர் அசுக தியான முகாமில் பகிர்ந்து கொண்டார்.

"அந்தப் புத்தகம் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பைத் தூண்டியது. என்னால் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. அதனால், ஒரே நாளுக்குள் படித்து முடித்துவிட்டேன். ஆனால், படித்து முடித்தபின் மிகவும் பரபரப்பானவனாகி விட்டேன்.

என்னால் இப்போதெல்லாம் சும்மா இருக்க முடிவதேயில்லை. உடல் சோர்வாயிருக்கும் போதுகூட, ஓய்வு எடுக்க என் மனம் என்னை அனுமதிப்பதில்லை.

அந்தப் புத்தகம் படித்த நாளிலிருந்து கொஞ்சம்நஞ்சம் இருந்த நிம்மதியும் பறிபோய்விட்டது .

ஒரு புத்தகத்தால் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடியுமா? என் குழப்பத்திற்குத் தீர்வளியுங்கள்," எனச் சொன்னார்.

அந்த இளைஞரிடம் சொன்னோம்,“அது புத்தகத்தால் முடியும். உங்களுடைய ரஜசிக சக்தியைத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட புத்தகங்களால், உங்களைப் பரபரப்புக்குள்ளாக்கும் ஹார்மோன்களை உங்களுக்குள் சுரக்கச் செய்ய முடியும்.

விளைவு, ஓய்வெடுக்கும் போதுகூட மனம் பேய் மாதிரி இயங்கும்.

அப்போது... ஓய்வு, நிம்மதி என்பவை சாதனையைவிட கடினமான

portrait

உங்களுடைய ரஜசிக சக்தியைத் தூண்டும்
வகையில் எழுதப்பட்ட புத்தகங்களால்,
உங்களை பரபரப்புக்குள்ளாக்கும்
ஹார்மோன்களை உங்களுக்குள்
சுரக்கச் செய்ய முடியும். விளைவு,
ஓய்வெடுக்கும் போதுகூட மனம் பேய் மாதிரி

இலக்காக மாறிவிடும்,'' எனச் சொன்னேன்.

இளைஞர், "ரஜசிக சக்தி என்றால்...'' என்று கேட்டார்.

"அது ஒருவருக்குள் விறுவிறுப்பைத் தூண்டும் சக்தி எனச் சொல்லலாம்,'' என்றேன்.

இளைஞர், "ஒரு புத்தகத்தால் இவ்வளவு செய்ய முடியுமா?''

"நிச்சயம் முடியும். இன்றைய மனிதர்களின் மனம் சூம்பிப் போயிருக்கிறது. அது உற்சாகமற்ற ஒரு நோஞ்சானாக இருக்கிறது.

ஒரு நோஞ்சானுக்கு, ஒரு பயில்வான் படத்தைக் காண்பித்து, "இவரும், ஒருகாலத்தில், உன்னைப்போல நோஞ்சானாய் இருந்தவர்தான். இவர் பயில்வானானால்... உன்னால் முடியாதா?'' என ரஜசிக சக்தியைத் தூண்டும் ஒரு கேள்வியை அழகாய்க் கேட்டுவிட்டால் போதும்...

பாவம் அந்த அப்பாவி, தாமும் பயில்வானாக மாற என்ன செய்வார்? அருகே இருக்கும் ஏதோ ஒரு ஜிம்முக்குச் சென்று, பல கிலோ எடையுள்ள உபகரணங்களைத் தூக்கி, இறக்கி, பயில்வானாக முயற்சிப்பார். சில நாட்களுக்குள் பயில்வானாகிட துடிப்பார். என்ன ஆகும் அவரது நிலை?

அவர் மனதில் பயில்வானாக வேண்டும் என்ற எண்ணம் முளைத்து விட்டது.

ஆனால், அந்த எண்ணத்தை அவருள் புகுத்தியவர், பயில்வானாகுவதற்கான வழிமுறைகளைத் தெளிவாய்ச் சொல்லாமல் விட்டிருப்பார்.

பிறகு என்ன ஆகும், அந்த நோஞ்சானின்
நிலை? கொஞ்ச நஞ்சமிருந்த நிம்மதியும்,
அவருக்குப் பறிபோகும். அவ்வளவுதான்!

"அதைச் செய்! இதைச் செய்!
மலையைப் பிடி! புலி போல் ஓடு!
சிறுத்தை போல் சீறு! எறும்புபோல்
உழை!''

நோஞ்சான் மனத்துக்குத்
தியானம்தான் எளிய,
அரிய தீர்வு.

என ஏதேதோ வாசகங்களால் நிரப்பப்பட்ட புத்தகங்கள்தான்... நோஞ்சான் மனத்தை பயில்வானாக மாறச் சொல்லி உசுப்புகின்றன.

முதலில் நோஞ்சான் மனதிற்கு மருத்துவம் செய்ய வேண்டும். நோஞ்சான் இயல்பாக வேண்டும். இயல்பான பின்தான், புஷ்டியைப் பற்றி யோசிக்க வேண்டும்.

நோஞ்சான் மனத்துக்குத் தியானம்தான் எளிய, அரிய தீர்வு," எனச் சொல்லி முடித்தேன்.

சாணக்கிய தந்திரம் எனப் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பெரும்பாலும் சூழ்ச்சியைக் குறிப்பிட மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நிஜத்தில் வேறு. சாணக்கியர் மிகப்பெரிய சிந்தனைவாதி. அவர் பல யுக்திகளைக் கண்டுபிடித்தவர்.

நாடாளும் அரசருக்கும் மக்களுக்கும் அந்தக் காலத்திலேயே அர்த்தசாஸ்திரம் எனும் நூல் எழுதி, பல புதுச் சிந்தனைகளையும் தீர்வுகளையும் தந்தவர்.

இவ்வளவு திறமைவாய்ந்த சாணக்கியர், ஒருமுறை மாடு மேய்க்கும் ஒரு முரட்டு இளைஞரைச் சந்தித்தார்.

சாணக்கியருக்கு அந்த இளைஞரை மிகவும் பிடித்துப் போகவே, அவருக்குப் பல கலைகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

கலைகள் பல அவர் கற்றுத் தேர்ந்த நிலையில், சாணக்கியர், தாம் பணியாற்றிய பாடலிபுத்திர மன்னன் தனநந்தனால் அவமானப்படுத்தப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், தாம் பயிற்றுவித்த முரட்டு இளைஞர் மூலமாகவே, தனநந்தனை

portrait

முதலில் நோஞ்சான் மனதிற்கு
மருத்துவம் செய்ய வேண்டும்.
நோஞ்சான் இயல்பாக வேண்டும்.
இயல்பான பின்தான், புஷ்டியைப் பற்றி

நாட்டைவிட்டுத் துரத்தி, இளைஞரை அரசனாக்கினார்.

அந்த அரசரின் கூடவே இருந்து, அவ்வப்போது பல மதியூகங்களைச் சொல்லி, சொல்லி, அவரை ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி ஆளுபவராக மாற்றினார்.

அந்த அரசன் வேறு யாருமல்ல - சந்திரகுப்தர்தான்!

மாட்டுக்கார வேலன் மாமன்னரானது என்னவோ உண்மைதான். ஆனால், மாமன்னராக அவரை ஆக்கியது எது? அவர் எப்படி அப்படி ஆனார்?

இந்த உண்மைகளை யாரும் குறிப்பிடுவதில்லை. அப்படிக் குறிப்பிட முயற்சித்தால்கூட, அதற்குப் பல புத்தகங்கள் தேவைப்படும்.

வெறும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் உருவாகும் கருத்துகள் பல, மனிதரின் மனத்துக்குள் நுழைந்து விடுகின்றன.

அவை வெறும் புத்தியை மட்டுமே தருகின்றன. ஆனால், அவை அவற்றை அடைவதற்கான சக்தியைத் தருவதில்லை. அச்சக்தி கட்டாயம் வேண்டும் என்றுகூடக் குறிப்பிடுவதில்லை.

விளைவு: பரபரப்பு, நிம்மதியின்மை.

ரஜசிக கருத்துகள் உங்களுக்குள் நுழையும்போது, இனி மிக எச்சரிக்கையாக இருங்கள்.

ரஜசிக கருத்துகள்
உங்களுக்குள்
நுழையும்போது, இனி
மிக எச்சரிக்கையாக
இருங்கள்.

Meditating figure icon

சக்தியில்லாத புத்தி; புத்தியில்லாத சக்தி இரண்டுமே வீண். உண்மையிலேயே வாழ, வளர விரும்புவர்கள், இரண்டையுமே அதிகப்படுத்துவார்கள்.

நடைமுறை வாழ்வில், இதுவரை உங்களின் மனதில் நுழைந்துவிட்ட ரஜசிக கருத்துக்களைக் களைந்தெடுங்கள்.

"இப்போதைக்கு என் வாழ்வில் நிஜமாக முடியாத கருத்துகள் இவை," எனத் தோன்றும் கருத்துகளை கீழேபோடத் தயங்காதீர்கள்.

நிஜமாக வாய்ப்புள்ளவற்றை நிஜமாக்கச் சக்தியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.