KAILASA Library/மனதைத் திற/தலைவராகுங்கள் இளைஞர்களே...Sign in
மனதைத் திற

தலைவராகுங்கள் இளைஞர்களே...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பில்கேட்ஸ்-ஐ உலகின் முதல் பணக்காரராக்கியது சாஃப்ட்வேர் நிறுவனம் அல்ல. அதை உருவாக்கக் காரணமாக இருந்த அவரின் ‘புத்திசாலித்தனமும்’ (ஜண ைனூேடீடிஞ்ஞுணஞிஞு), ‘தலைமைப் பண்பும்’ தான் (ஃளுச்ச்ளீஞுணூாண்டடீணீ) அவர் வெற்றியின் இரகசியம்.

அமெரிக்காவில் பிறக்காமல் ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும், பில்கேட்ஸ் சாதித்திருந்திருப்பார். அவரிடமுள்ள அளப்பரிய தலைமைப் பண்பும் அவரை வேறு ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வைத்திருக்கும்.

தலைமைப் பண்பு சும்மா காரியமல்ல. அது ஒரு மாபெரும் குணம்!

மிகவும் பிரபலமான சீனப் பழமொழி ஒன்று.

“சாதிப்பவர்கள் தலைவர்கள். சாதிக்காதவர்கள் வேலைக்காரர்கள்.”

ஒரு மனிதரின் தலையெழுத்தையே
திருத்தி எழுதும் சக்தி படைத்தது இந்தத்
தலைமைப் பண்பு (Leadership Quality).

Dr. A, Dr. B ஆகிய இருவரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள். ஒரே

ஒரு மனிதரின்
தலையெழுத்தையே
திருத்தி எழுதும் ச
க்தி படைத்தது இந்தத்
தலைமைப் பண்பு (Lead-

நகரில் கிளினிக் வைத்து மருத்துவம் செய்ய ஆரம்பித்தவர்கள். இருவரும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்கள்.

Dr. A-யின் சிறிய கிளினிக்கில் எப்போதும் கும்பல் அலை மோதிக்கொண்டேயிருக்கும். ஆனால் ஈணூ. ஆ யின் மருத்துவமனையில் ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள். பதினைந்து வருடங்களாகியும் ஈணூ. ஆ -யின் வாழ்க்கையிலோ, மருத்துவமனையிலோ எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆனால் ஈணூ. அ அதே பதினைந்து வருடத்திற்குள், மூன்று மாடிக் கட்டிடத்தோடு கூடிய மருத்துவமனை ஒன்றையே கட்டிவிட்டார்.

‘Dr. A, ஈணூ. ஆ இருவரும் ஒரே கல்லூரியில், ஒரே படிப்பை படித்தவர்கள்தான். Dr. A வைப்போல அந்த மற்றோர் இளைஞரும் முன்னேற வேண்டுமானால், என்ன விதமான வாழ்க்கை விதிகளைத் (ணூதடே3ண் ணூணிணூ ஞ்ணிணிஞீ டீடுஞூநு) தர விரும்புகிறீர்கள்? என்று ஒருவர் கேட்டார்.

‘மீணி ணூதடே3 டிண ணடநு ணூதடே3’.

வாழ மதிதான் வேண்டுமேயன்றி, விதி அல்ல. மதி குறைந்த மனிதர்கள், மனிதக் கூட்டத்தைப் பாங்காய்க் கட்டுப்படுத்தத் தெரியாததால், கண்டுபிடித்ததே விதிகள், நீதி நெறிகள், ஒழுக்கங்கள்.

ஓர் இளைஞருக்கு மதியைத் தந்து, அவரை அசகாய சூரராக மாற்ற வேண்டுமேயன்றி, அவருக்கு விதிகளைப்போட்டு, அவரைச் சுருக்கி, அவர் சுதந்திரத்தைப் பறித்து, அவரை அசுரராகவோ, சாபமாகவோ மாற்றக் கூடாது.

அந்த இரண்டு டாக்டர்களுமே இருவருமே படுபிசியாக இருக்கிறார்கள், கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் மருத்துவமனை ஒன்றைக் கட்டிவிட்டார். அவரால் மட்டும் சாதிக்க முடிந்தது எப்படி? அவருக்கும் அதே மருத்துவப்படிப்பு, அதே நோயாளிகள், அதே மருந்துகள்தான் மூலதனம்.

portrait of a smiling man wearing a white turban

> வாழ மதிதான் வேண்டுமேயன்றி,
> விதி அல்ல. மதி குறைந்த மனிதர்கள்,
> மனிதக் கூட்டத்தைப் பாங்காய்க்
> கட்டுப்படுத்தத் தெரியாததால்,
> கண்டுபிடித்ததே விதிகள்,

சிறு கிளினிக்கை உருவாக்கக் கூடிய அதே மூலதனத்தைக் கொண்டு, இன்னொருவர் பெரிய மருத்துவமனையை உருவாக்கியது எப்படி?

'ஈணூ அ' யிடம் எது அதிகமாக இருந்தது? இந்த எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில்...

கடவுளை விடப் பெரிய தலைவனில்லை."

தலைமைப் பண்பு மலர மலரக் கடவுளைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறீர்கள். அப்பண்பு முழுமையாகும்போது, கிருஷ்ணரைப்போன்று, சிவனைப்போன்று, புத்தரைப்போன்று, கடவுளாகவே மாறிவிடுவார்கள்.

விவேகானந்தர் ஓரிடத்தில் மிக அழகாகச் சொல்கிறார்... "ஞானிகள் சொன்ன ஏதாவது ஐந்து ஞானக் கருத்துகளை வாழ்வில் முழுமையாய்க் கடைப்பிடியுங்கள். அது, மிகப்பெரிய நூலகத்தின் நூல்களையெல்லாம் படித்து முடித்த ஒரு அறிவாளியின் அனுபவத்தைத் தாண்டிய அனுபவத்திற்கு உங்களை எடுத்துச்செல்லும்."

உங்களை மிகப்பெரிய சாதனையாளராக மாற்றவல்ல தலைமைப் பண்பை, நூல்களில் படித்துக் கற்றுக்கொள்ள முடியாது. நூலகத்தையே கரைத்துக்குடித்தாலும் அறிவு மட்டும்தான் வளருமேயன்றி, தலைமைப் பண்பு வளராது.

தலைமைப் பண்பு வளர... ஞானக் கருத்துகளின் வழிநடத்தலும், தியான சக்தியும் மிக மிக அவசியமானது.

விவேகானந்தரை உலகமெல்லாம் போற்றும் மனிதராக்கியது, அவரின் தலைமைப் பண்புதான். இராமகிருஷ்ணரிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட தியானங்களும், அவை அவருக்குள் செய்த இரஸவாதங்களும்தான், சிகாகோ வரை அவரை உயர்த்தியது.

நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலையேபடாதீர்கள்.

என்னாலெல்லாம் சாதிக்க முடியுமா?

தலைமைப் பண்பு
மலர மலரக்
கடவுளைத்
தொட்டுத்
தொட்டுப்

நான் பெரிய ஆளாவேனா? எனக்குத் தகுதியிருக்கிறதா?

என்றெல்லாம் தயங்குவதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

எல்லா ஆல விதைக்குள்ளும் ஆலமரம் ஒளிந்திருக்கிறது.

எல்லா இளைஞருக்குள்ளும் ஒரு மாபெரும் சாதனையாளர் ஒளிந்திருக்கிறார்.

விதை மரமாக, இளஞ்சூடும் ஊட்டச்சத்தும் தேவை. மனிதர் சாதனையாளராக, சக்தியும் புத்தியும் தேவை.

சக்தியை தியானமும் புத்தியை ஞானிகளின் வாழ்வியல் கருத்துக்களும் தரவல்லவை.

சக்தியும் புத்தியும் பெருகப் பெருக, தலைமைப் பண்பு ஒருவருக்குள் எளிதில் மலர்ந்துவிடும். ஒரு தலைவர், கோடீஸ்வரர்களுக்குச் சமம்.

தலைமைப் பண்பு மிகுந்த ஒருவரால்தான் கோடீஸ்வரராக முடியும்.

ஒவ்வொரு ரூபாயாகப் பிச்சை எடுத்துக் கோடீஸ்வரரான யாராவது ஒருவரை இதுவரை பார்த்திருக்கிறீர்களா... இப்படி கோடீஸ்வரராவது சாத்தியமேயில்லாத ஒன்று. சாதனையின் உச்சம் தொட, அறிவின் உச்சம் தொடவேண்டியதில்லை.

சாதிக்கச் சக்தியும் புத்தியும்தான் பெருக வேண்டும். தலைமைப் பண்பின் உச்சத்தைத்தான் தொடவேண்டும்.

Swami Vivekananda

விதை மரமாக, இளஞ்சூடும் ஊட்டச்சத்தும்
தேவை. மனிதர் சாதனையாளராக,
சக்தியும் புத்தியும் தேவை. சக்தியை
தியானமும் புத்தியை ஞானிகளின்
வாழ்வியல் கருத்துக்களும் தரவல்லவை.

புத்தர் உள்ளுலக சாதனையாளர் !
பில்கேட்ஸ் வெளியுலக சாதனையாளர் !
இருவருமே சாதனையின் உச்சம் !

நீங்கள் சாதிக்க விரும்புவது உள்ளுலகிலா, இல்லை வெளியுலகிலா ?

உங்களின் பதில் எதுவாயிருந்தாலும்... சாதனை நிகழ்வதற்கான மூலதனம் தலைமைப் பண்பு மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதைப் பெருக்குங்கள். நீங்கள் சாதனையாளராவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. தலைவராகுங்கள்... உலகம் உங்கள் கையில்.