மகா வாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
“தியானம் வாலிபனுக்கு அவசியமானது”
தியானமும் ஞானமும்
வாழ்க்கையை அனுபவித்து
வாழத்தவறிய வயோதிகரை விட,
வாழ்க்கையை அனுபவித்து
வாழத்துடிக்கும்
வாலிபருக்குத்தான்
மிக மிக அவசியம்.
காரணம்...
தியானம்-அனுபவிக்கும் சக்தியையும், ஞானம் - வாழும் பழகும் திறனையும் அதிகரிக்கிறது.
தெளிவில்லாமல் குதித்தாலும், சாதனைகள் சாத்தியமே. ஆனால், சாதித்த திருப்தி இருக்காது. சாதனை முக்கியமா? திருப்தி முக்கியமா? இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
-விஜய், தேனி
சாதனையின் உச்சியில் இருக்கும் அமெரிக்காவில், மூன்றில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது இரண்டு வருடங்களுக்குமுன் படித்தது.
இன்று இன்னும் அதிகமாகியிருப்பதாக டாக்டர். முரளி கிருஷ்ணா சமீபத்தில் சொன்னார். வெறும் சாதனை மாத்திரமே, சந்தோஷத்தையும், திருப்தியையும் தருமென்றால், அமெரிக்காவில் மன நோயாளியே இருக்கக்கூடாது.
ஏனென்றால், வளரும் நாடுகளின் கவலைகளுக்குக் காரணமான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு, அதைத் தாண்டி வாழும் மக்கள் நிறைந்த நாடு அமெரிக்கா!
எதையாவது சாதிக்க ஆரம்பித்து, சாதித்தபின், அந்தச் சாதனைக்கும் உங்களின் ஆழ்மன விருப்பத்திற்கும் சம்பந்தமே இல்லையென்றால், அந்த சாதனையே வேதனையாகி விடும். அதை ஆங்கிலத்தில் (ஈஞுணீஞூளுஞுண்டீணிண ணிஞூ ண்தஞிஞூஞுண்) என்று சொல்வார்கள்.
ஆழ்மன விருப்பம் தெரிய, ‘ஏன் சாதிக்கணும்?’, ‘எதைச் சாதிக்கணும்’ என்னும் கேள்வி ஆராய்ச்சிகள் பெரிதும் உதவும். இந்த ஆராய்ச்சிக்கு உங்களைப்பற்றிய உங்களின் புரிந்து கொள்ளுதல்கள் மிக மிக அவசியமானது.
உங்களை நீங்களே புரிந்துகொண்டு, உலகில் உங்களின் சாதனையை வடிவமைக்கப் பல வழிகளில் உதவும் ஆன்மீகத்தைப் பிடியளவாவது எடுத்துச் செல்லுங்கள். சாதனையின் வேதனையில் சிக்க மாட்டீர்கள். சாதனை சந்தோஷமாகும்.