KAILASA Library/மனதைத் திற/இளஞ்சிங்கமே...Sign in
மனதைத் திற

இளஞ்சிங்கமே...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழ்க்கைச் சூழலிலிருந்து தப்பிக்க...

உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவெடுப்பவர்களுக்கு இராமகிருஷ்ணர் சொல்லும் அழகான கருத்து...

"குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ, ஆன்மீகத்தைக் கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாய் சிக்கித் தவிக்க மாட்டாய்.

பலாப்பழத்தை வெறுங்கையால் அறுக்கக்கூடாது. அப்படிச் செய்தால், கத்தியும் கையும் பிசுபிசுப்பில் சிக்கிக்கொள்ளும்.

அதுவே, ஒரே ஒருமுறை, எண்ணெயில், கத்தியையும் கையையும் நனைத்துவிட்டுச் செய்தால், விரல்கள் பிசுபிசுப்பில் சிக்கித் தவிக்காது. சங்கடமே இருக்காது.

கொஞ்சம் ஆன்மீகம்
சேர்த்து வாழ்க்கையை
எதிர்கொண்டால்...
வாழ்க்கையையும் நன்றாக
அனுபவிக்க முடியும்.
அதேநேரத்தில், வாழ்க்கைச்
சூழலில் சிக்காமல் எளிதில்

ஆன்மீகமும் இதுபோன்றதுதான். கொஞ்சம் ஆன்மீகம் சேர்த்து வாழ்க்கையை எதிர்கொண்டால்... வாழ்க்கையையும் நன்றாக அனுபவிக்க முடியும். அதேநேரத்தில், வாழ்க் கைச் சூழலில் சிக்காமல் எளிதில் தப்பி விடலாம்,"

'நான் வாழ்ந்து காட்ட வேண்டும்' என
எண்ணும் இளைஞர்கள், ஒன்றுக்கு இரண்டு
முறையாவது இந்த ஞானக்கருத்தைப் படித்து
மனதில் நிறுத்திக்கொண்டு கட்டுரையைத்
தொடருங்கள்.

பதினெட்டில் காதல்...

இருபதில் எதிர்காலக் கனவு...

இருபத்தைந்தில் திருமணம்... .

முப்பதில் குடும்பச்சுமை...

நாற்பதில் வயிற்றுக்கோளாறு, உடல் மனச் சோர்வு...

நாற்பத்தைந்தில் டயாபடீஸ்...

ஐம்பதில் மூட்டுவலி...

என்பதெல்லாம் இன்று கிட்டத்தட்ட எல்லோர் வாழ்க்கைக்கும் பொருந்தும் என்ற நிலை வந்துவிட்டது.

திருமணத்திற்கு பின் ஒருநாள் தாங்களும் எல்லாப் பிரச்சினைகளையும் நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும் என இளைஞர்கள் முன் ஜாக்கிரதையாக யோசிப்பது அரிதாகிவிட்டது. நானும் இவர்களைப் போல சிக்கித்தவிக்க 100% வாய்ப்பு இருக்கிறது என்பதை முழுமையாய் உணராத இளைஞர்கள்தான், எதிர்காலத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தர்களாக மாற வாய்ப்புகள் அதிகம்.

சூஃபி ஞானியிடம் சீடரொருவர் கேட்டார், "விட்டில் பூச்சி போல், எல்லா மனிதர்களும், அதே வாழ்க்கை முறை (ஃடிஞூநு ண்ணூதூடூநு), அதே நோய், அதே துன்பம், துக்கம் என ஒரே மாதிரியே அல்லல்படுகிறார்களே!

அவர்களுக்கு ஒருவரைப் பார்த்து ஒருவருக்குப் புத்தி வராதா?"

"யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். யாருடைய உயிர்க்கும் உலகில் உத்திரவாதமில்லை. இது தெரியுமா உனக்கு?" ஞானி .

Nithyananda

உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவெடுப்பவர்களுக்கு இராமகிருஷ்ணர் சொல்லும் அழகான கருத்து... "குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ, ஆன்மீகத்தைக் கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாய் சி

“ம்... ம் தெரியும் சுவாமி,” சீடன்.

“தெரிந்தும், தெரியாதவனாய்த்தானே இருக்கிறாய்! சாவு உனக்கு மட்டும் வெகு தூரத்தில் இருப்பது போல பேசுகிறாய், நடந்து கொள்கிறாய்.

முதலில் உனக்கு புத்திவரும் வழியைப் பார். மற்றவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள்” என்றார் ஞானி.

யாருக்கு வேண்டுமானாலும், எதுவும், எப்போது வேண்டுமானாலும் நடக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றது.

முன் ஜாக்கிரதை உணர்வு, பின்னாளை ஜாக்கிரதைப்படுத்தும் புத்திசாலித்தனம் கொண்டது. யோசியுங்கள்.

மனோதத்துவ சர்வே ஒன்றில் படித்த, உற்சாகம் தூண்டும் செய்தியொன்று, “10 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட சக்தியை இளைஞர்கள் பயன்படுத்துவதில்லை. இளைஞர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக சக்தியைப் பயன்படுத்தினாலே போதும், உலகின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம்,” என்பதே அது.

உலகின் தலையெழுத்து மாறுவது ஒருபுறமிருக்கட்டும்.

தெளிவில்லாமல், தம் சக்தியை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தி, வாழ்க்கைக் கடலுக்குள் குதிப்பவர்கள் - வேறொரு சூழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்தச் சூழலுக்குப் பெயர்- சாதனை!

அசந்து தூங்கிக் கொண்டிருந்த எலியொன்று, திடீரென விழித்ததும், எலிக் கூட்டமொன்று ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தது. உடனே தானும் கூட்டம் கூட்டமாய் ஓடும் எலிக் கூட்டத்தில், எம்பி எம்பிக் குதித்ததாம்.

அடுத்த நிமிடம், தன்னைத் தாண்டி பல எலிகள் ஓடுவதைப் பார்த்து, இன்னும் வேகவேகமாக ஓட ஆரம்பித்ததாம்.

‘10 சதவிகிதத்
திற்கும் மேற்பட்ட ச
க்தியை இளைஞர்கள்
பயன்படுத்துவதில்லை.
இளைஞர்கள் இன்னும்
கொஞ்சம் அதிகமாக சக்தியைப்
பயன்படுத்தினாலே போதும்,
உலகின் தலையெழுத்தையே

அந்த எலியைத் தடுத்து, “எங்கே
இவ்வளவு வேகமாய் ஓடுகிறாய்,” என்று
கேட்டதற்கு, “விடு என்னை, நான் ஜெயிக்க
வேண்டும், இல்லாவிட்டால் பெருத்த
அவமானம்!” என்றதாம்.

இதேதான் மனித வாழ்விலும் நிகழ்கிறது. இருபத்தைந்து வயதுவரை விளையாட்டாக வாழ்க்கையைக் கழித்த இளைஞர், திடீரென்று கண்முன் வந்து நிற்கும் எதிர்காலத்தைப் பார்த்து எம்பிக் குதித்து விடுகிறார்.

குதித்தபின்தான் உண்மை நிலவரம் புரிகிறது... "எல்லோருமே ஏதோ ஒன்றைச் சாதிக்க வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறார்கள்," - என்று!

ஏன்? எதற்கு? என்ற அடிப்படைப் பகுப்பாய்வு செய்யாமல், தாமும் சாதித்தே ஆக வேண்டும் என்ற இலக்கில்லாப் பயணத்தை விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறார்.

ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஓட்டம், கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறி விடுகிறது. இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசைமாறிப் போகிறது.

சாதனை தவறென்று சொல்லவில்லை. சாதனை தேவை. ஒவ்வொரு இளைஞனும் சாதிக்க வேண்டும். சோம்பேறியாக வாழ்க்கையை வீணடித்து விடக்கூடாது.

ஆனால், ஏன் சாதிக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும். அந்தத் தெளிவிலிருந்து, எதைச் சாதிக்க வேண்டுமென்ற சரியான இலக்கு உதயமாக வேண்டும்.

இவை நிகழும் முன், "எப்படியாவது! எதையாவது சாதிக்க வேண்டும்!" என்று செயல்பட ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினை உருவாகிறது. விளைவு சாதனைப்பயணம் வெறியாக வெடிக்கிறது. கண்ணெதிரே இருக்கும் அறிவு, புகழ், பணம், பதவி என்ற ஏதாவதொன்றை மனம் பற்றிக் கொள்கிறது. மொத்த வாழ்வும் திசை திரும்பிவிடுகிறது. எனவே சாதனைப்பயணம் தொடங்கும் முன், 'ஏன்? எதற்கு?' என்ற தெளிவு ஒவ்வொரு இளைஞருக்கும் வேண்டும்.

சிந்தனையில் தெளிவையும் செயலில் உற்சாகத்தையும் உடனே தரும் எளிய வழி, தியானம். ஆன்மீகத்தை வாழ்வில் ஒவ்வொரு இளைஞரும் சேர்க்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்.

portrait of a spiritual figure

ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற
ஓட்டம், கொஞ்ச நாளிலேயே வெறியாக
மாறி விடுகிறது. இங்குதான் பிரச்சினை
ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசைமாறிப்
போகிறது.

“இதைத்தான், இதனால்தான் நான் சாதிக்க விரும்புகிறேன்,” என்ற தெளிவென்னும் சிப்பிக்குள், திருப்தியென்னும் முத்து ஒளிந்திருக்கிறது.

‘ஏன்? எதற்கு?’ என்ற அடிப்படைத் தெளிவில்லாமல், ‘எப்படி சாதிக்கலாம்?’ என சிந்திக்கும் மனமா உங்களது...

ஆராயுங்கள்.

எதிர்காலச் சோதனைகளும், வேதனைகளும் விலகிப்போகும். உங்களின் சாதனை ஆசையை ஆராயுங்கள். சிப்பியைக் கண்டுபிடியுங்கள். முத்துமுத்தான இனிய வாழ்வு உங்களுக்குச் சொந்தமாகும்.