KAILASA Library/மனதைத் திற/மகா வாக்கியம்Sign in
மனதைத் திற

மகா வாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"உங்களின் முடிவுகள் உங்களை முடிவு செய்கிறது"

சாதிக்க நினைப்பவருக்கு ஆதிக்க மனத்தைவிட, பண்பும் புகழைவிட, ஆள் பலத்தைவிட...

புத்திசாலித்தனமும், அறிவு பலமுமே வேண்டும். அவையே அவரை ஆட்கொள்ள வேண்டும்.

பணமா? பண்பா?
புகழா? தெளிவா?
பதவியா? பரவசமா?

ஒவ்வொரு வரியிலும் இரண்டாவதாக உள்ள கேள்விக்கு 'ஆம்' எனச் சொல்பவரா நீங்கள்? 'ஆம்' என்றால் பணம், புகழ், பதவியும் உங்களுக்குச் சேர்ந்தளிக்கப்படும்.

'இல்லை' என்றால் சோகம், ரோகம், சோர்வு உங்களுக்குச் சேர்ந்தளிக்கப்படும். அது பணம், புகழ், பதவி கிடைத்திருந்தாலும்!

வாழும் கலையைப் பற்றி அழகாய் எழுதுகிறீர்கள். அது எப்படி என நீங்கள் கற்றுக் கொடுத்தால் நலமாயிருக்குமே.

  • கிரிஸ்டி, ஷெனாய் நகர்.

18-30 வயதுக்குட்பட்ட வாலிபர்களுக்கு, ஒரு வருட இலவச உணவு, உடை, இருப்பிடத்தோடு தியானபீடத்தில், 'வாழும் கலை' பற்றிய கல்வி கற்றுத் தரப்படுகிறது.

'Life Bliss Technology' என்றழைக்கப்படும் இக்கல்வித் திட்டத்தில் ஆனந்தம், ஆரோக்கியம், திருப்தி ஆகியவற்றை ஒருவர் பெறுவதற்கான அடிப்படை சூத்திரங்களும், அதற்கான தியான முறைகளும் கற்றுத் தரப்படும். தாமும், மற்றவர்களும் வெற்றிகரமாக வாழ உதவும் சேவை மனம் கொண்டவர்கள் உளமாற வரவேற்கப்படுகிறார்கள்.

வாழ்விற்குள் நுழைய இருப்பவர்களுக்கு, வாழ்க்கையின் ரகசியங்களைக் கற்றுத் தருவதே இக்கல்வித்திட்டத்தின் நோக்கம்.