சக்திக்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
களஞ்சியம்
உங்களுடைய இலட்சியங்களை முழுமையாக அடைவதற்கான சக்தியும், புத்திசாலித்தனமும் உங்களிடம் முழுமையாக இருக்கின்றதா?
உங்களுடைய பதில் - ‘ஆம்’ என்றாலும், ‘இல்லை’ என்றாலும் உண்மை ஒன்றே...
எல்லோரிடமும், எல்லாவற்றையும் சாதித்துக்காட்டும் புத்திசாலித்தனமும், சக்தியும் 100% இருக்கின்றது.
இதில் சிலர் 27%, சிலர் 5%, சிலர் 10% என்ற அளவில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த அளவுகளே உங்களின் சாதனையின் அளவை நிர்ணயிக்கின்றன. இந்த அளவை அதிகரிக்க உதவும் கல்வியே வாழ்வியல் கல்வி.
✦ “வேலையில்லாதவன்
மூளையில்லாதவன்
நிம்மதியில்லாதவன்
இதயமில்லாதவன்,”
- பாரசீகப் பழமொழி
எல்லோரிடமும்,
எல்லாவற்றையும்
சாதித்துக் காட்டும்
புத்திசாலித்தனமும்,
சக்தியும் 100%
சாதித்தவர்கள் சாக்குப் போக்குச்
சொல்வதில்லை. சாக்குப்போக்குச் சொல்லித்
திரிபவர்கள் சாதித்ததில்லை... எப்போதும்!
இவ்வுண்மை உள்ளுலகிற்கும் பொருந்தும், வெளியுலகிற்கும் பொருந்தும்.
உங்களின் இலட்சியம் எதுவானாலும், அதை அடைய இயற்கை உங்களுக்கு முழு அனுமதியளித்திருக்கின்றது.
மூளையை முடுக்கிவிடத் தெரிந்தவர்களுக்கு, சாதனை என்பது கால் தூசுக்குச் சமம்.
இவர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி அலையமாட்டார்கள். வரும் வாய்ப்புகளை எல்லாம், வேலை வாய்ப்புகளாய் மாற்றிக் கொள்வார்கள்.
உங்களின் இன்றைய முயற்சியைத் தள்ளிப்போட மனம் சொல்லும் சாக்குப் போக்குகளை மதிக்காதீர்கள். சாக்குப் போக்குகளைத் தாண்டி, மூளையை முடுக்கிவிட ஆரம்பியுங்கள்... சாதனை உங்களைத் தேடி வந்து சாமரம் வீசும்.
- தியான சொற்பொழிவொன்றில் ஒருவர், "நிம்மதி இகத்தில் காலியாகி விட்டதே, ஏன்?" எனக் கேட்டபோது, "உங்கள் மதி அகத்தில் போலியாகிவிட்டதே காரணம்," என்றோம்.
"இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்," எனக் கேட்டுக் கொண்டதும் சொன்னோம்...
"இரண்டு உண்மைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்...
1. யாரும், யாருடைய நிம்மதியையும் கெடுக்க முடியாது.
2. யாரும், யாருக்கும் நிம்மதியைத் தரவும் முடியாது. நிம்மதி, என்பது இதயப்பூர்வமாக வாழ்பவருக்கு இறைவனளிக்கும் பரிசு.
இதயப்பூர்வமாக வாழத்தெரியாதவரே, நிம்மதியை வெளியே

உங்களின் இன்றைய முயற்சியைத்
தள்ளிப்போட மனம் சொல்லும் சாக்குப்
போக்குகளை மதிக்காதீர்கள். சாக்குப்
போக்குகளைத் தாண்டி, மூளையை
முடுக்கிவிட ஆரம்பியுங்கள்... சாதனை
உங்களைத் தேடி வந்து சாமரம் வீசும்.
தேட ஆரம்பிப்பார். பின், அது கிடைக்கவில்லை என நொந்து கொள்வார். மதி போலியானதால் வரும் ஒரு பக்கவிளைவே நிம்மதியின்மை," எனச் சொன்னேன்.
"இதனால்தான் நான் நிம்மதியற்றிருக்கிறேன், இவர் என் நிம்மதியைக் குலைக்கிறார்,"
"அது கிடைத்தால், இது நடந்தால் நான் நிம்மதியாயிருப்பேன்," என மனிதர்கள் சொல்லும் எல்லா புலம்பல் வார்த்தைகளும் மனதின் சாக்குப்போக்குகளே.
புலம்பல்களைத் தாண்டி புதுத்தெம்போடு "என் நிம்மதிக்கு நானே பொறுப்பு," என உணர்வு பொங்க செயல்படத் துணிந்து விட்டால்... நிம்மதி கைக்கெட்டும் தூரத்துக்குக் குனிந்து விடும்.
✦ ஹஸிப் ஞானியிடம், "சாதனை மிகச் சாதாரணமானது எனச் சொன்னீர்களே. அது எனக்குக் கூடவா பொருந்தும்," என பக்தர் ஒருவர் கேட்டபோது,
"ஆம்! அறிவுத் தெளிவையும், ஆனந்தமென்னும் ஆரோக்கிய உணர்வையும் அடைந்தவருக்கு, சாதனையும் சாதாரணமே. அடைய வேண்டியதை அடைய ஆரம்பி," எனச் சொன்னார்.
நீங்கள் அடைய வேண்டியதை அடைந்து விட்டீர்களா?
எல்லோரும் அடைய விரும்புவது அருமையான வாழ்க்கையைத்தான். அதற்காகத்தான்...
நிம்மதி, என்பது
இதயப்பூர்வமாக
வாழ்பவருக்கு
இறைவனளிக்கும்
பரிசு.
வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை, அதாவது
இருபத்தைந்து வருடங்களைப் படிப்பதற்கே
செலவிடுகிறோம். ஏன் என்று கேட்டால் "நல்ல
வேலை கிடைக்க," எனப் பதில் சொல்வோம்.
"எதற்கு நல்ல வேலை?" எனக் கேட்
டால், "நல்லா சம்பாதித்து, நல்ல அறிவோடு
அருமையாய் வாழ வேண்டும்," எனச்
சொல்வோம்.
"அருமையான வாழ்வு பெற இவ்வளவு படித்தீர்களே! வாழ்வுக்காக என்ன படித்தீர்கள்?
வாழ்க்கையை வாழ்வது எப்படி எனக் கற்றுக்கொள்ள என்ன செய்திருக்கிறீர்கள் இதுவரை...?" எனக் கேட்டால், என்ன பதில் சொல்வோம்?
'சமைக்கத் தேவையான எல்லா உணவுப் பொருட்களை வெகு, பிரயத்தனப்பட்டுச் சேர்த்தவர்... சேர்த்து முடித்த பின்தான், 'சமைப்பது எப்படி?' என யோசித்தாராம்! எனும் கதையாய்க் கழிகிறது மனித வாழ்வு.
- "வாழும் கலையை யார் கற்றுக்கொள்வது மிக மிக அவசியம்?" என ஒருவர் என்னிடம் கேட்டார்.
அதற்கு...
"பூமியில் மனிதராய் வாழ அவதாரமெடுத்த ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமானது," எனச் சொன்னோம்.
வாழும் கலையைப் பற்றிக் கற்க விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் பாடம்... "அவரவரின் மனவரைபடத்தின் நெளிவு சுழிவுகளைப் பற்றிய விவரங்கள்," என்று மேலும் அவரிடம் சொன் னோம்.

ஒரு செயலைத் தட்டிக் கழிக்க,
ஒரு நூறு காரணங்கள் கதைக்கும்,
ஓயாமல் வாழும் மாய மனம்.
- மன இயல்பு விதி.
ஒரு செயலைத் தட்டிக் கழிக்க,
ஒரு நூறு காரணங்கள் கதைக்கும்,
ஓயாமல் வாழும் மாய மனம்.
- மன இயல்பு விதி.
விரும்பியதை அடையும் துணிவு கனிவதைத் தொடர்ந்து தடுப்பது எது? நினைத்ததைச் சாதிக்கும் தெளிவு துளிர்வதைத் தடுப்பது எது?
பதில் காணுங்கள்.
எந்தவொரு இலட்சியத்தை எடுத்து நீங்கள் சாதிக்க விரும்பினாலும் சரி, தொடக்கத்தில் உங்களைத் தூண்டும் உற்சாகம், முடிவுவரை நிழல்போல உங்களைத் தொடர்ந்து வர வேண்டும். அப்போதுதான் இலட்சியத்தை அடைய முடியும்.
உற்சாகம் உங்களை விட்டு விலகும் நிமிடங்களை ஆராய்ந்து பார்த்தால்... அந்த நிமிடங்களைத் தட்டிக்கழிக்க, மனம் ஏதாவதொரு காரணம் தந்திருப்பது புரிய வரும். மனம் கதைக்கும் சாக்குப்போக்குகளைப் பற்றிய மன ஆராய்ச்சி... உங்களைத் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் ஓர் ஆசான்.
மேலும், அது உங்களின் மூளையையும், இதயத்தையும் உற்சாகமாக இயங்க உதவும் ஓர் ஊக்குவிப்பான். அது ஓர் உண்மையான தியானம்.
இனி உங்களுக்கு சாக்குப் போக்குக் காட்டும் காலங்களைக் கவனத்திற்குள் எடுத்து வாருங்கள்.
சாக்குப் போக்குகளைத் தூக்கியெறியுங்கள்... சாதனை என்னும் சிம்மாசனத்துக்கு அழகாய்த் தூக்கியெறியப்படுவீர்கள்.
உள்ளுலகிலும், வெளியுலகிலும் ஆனந்தமாய் இருப்பீர்கள்.