KAILASA Library/மனதைத் திற/பெண்மைSign in
மனதைத் திற

பெண்மை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மாக்களையும் மக்களாக்கும்

கள்ளிகளையும் மல்லிகளாக்கும்

மனப்புண் வரை
தன் மருத்துவ குணத்தைப்
பாய்ச்சும் பண்புடையது.

அரவணைப்பீர்.
அரவணைக்கத் தெரிந்தவர்,
ஆணாக இருந்தாலும்,
அவர் பெண்ணே!
அவர் ஒரு தாயே! ஐயமில்லை.

அரவணைக்கத் தெரியாதவர்,
பெண்ணாகவே இருந்தாலும்,
அவர் பெண்ணல்ல!

பூமா தேவி உடலில்,
இரத்தத் துளிகளைத் தெளித்து
வரலாற்றுக் கோலம் போட்டிருக்கின்றன,
போர்கள், யுத்தங்கள்,
அடவாடித்தனங்கள், வன்மைகள்.

பூமா தேவி மீது...

அன்பெனும் மலர்கள் தூவி, அரவணைப்பெனும் வேலி பாவித்து, ஆனந்தத் தோட்டம் வரும் காலம் கனிந்து விட்டது.

எதிர்கால ஆனந்தத் தோட்டத்தின் அரியணையை அரசாளப்போகிறவர்கள் நிச்சயம் மென்மை மிகுந்தவர்களே.

மென்மை மிக... பெண்மை குறையாதிருக்குமளவுக்காவது முயற்சி செய்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நிறைய தவறுகளைச் செய்கிறவளாக என்னை நான் உணர்கிறேன். திருந்தவழி?

-பூஜா, குரங்குச்சாவடி.

திருமதி. பூஜா உங்களின் கடிதம் படித்தேன்.

சராசரி குடும்பப் பெண்ணுக்குரிய எல்லா கடமைகளைச் செய்தும், ஒழுக்கமான பெண்ணாக இருந்தும், தவறுகள் செய்வதாகவே நீங்கள் உணர்வது - விசித்திரமானதல்ல! சாதாரணமானதுதான்.

ஒரு குட்டி ஜோக்குக்கு சில வினாடிகள் மட்டுமே சிரிப்பீர்கள். நல்ல ஜோக்காக இருந்தால் வினாடிகள் நிமிடங்களாகும். உங்களோடு சம்பந்தப்பட்ட ஜோக்காக அந்த நிகழ்வு இருந்துவிட்டால், அதை நினைத்து, நினைத்துச் சிரிப்பீர்கள்.

பஸ்ஸில், ரோட்டில், வகுப்பில் என எந்த இடத்தில் ஞாபகம் வந்தாலும் அந்த ஜோக்கை நினைத்துச் சிரித்து விடுவீர்கள். இப்படிச் சிரித்து ஆசிரியரிடம் வகுப்பில் மாட்டிக்கொண்டவரைப் பார்த்திருப்பீர்கள்.

நடந்து முடிந்ததை மீண்டும் மீண்டும் எடுத்து அசை போட்டுச் சுகம் காண்பது மனதின் இயல்பு. அசைபோடுவது மனத்துக்குச் சுகம். அசைபோடும் போது வரும் சிரிப்பு உங்களுக்குச் சுகம்.

நடந்து முடிந்தது, மிகப்பெரிய சந்தோஷகரமான விஷயமா, இல்லை துக்ககரமான விஷயமா என மனம் வேறுபடுத்திப் பார்க்காது. அதற்கு அசைபோட

ஏதாவது வேண்டும். அவ்வளவுதான் அது எதுவாக இருந்தால் என்ன?

உங்கள் கதையில், நீங்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்வதாக நினைக்கக் காரணம், குற்ற உணர்ச்சி. சிறுவயதில் ஏதோ ஒரு சூழ்நிலையில் குற்ற உணர்ச்சிக்குள் ஆழமாக அமிழ்த்தப்பட்டிருக்கிறீர்கள்.

நல்ல, கெட்ட உணர்ச்சிகளின் செறிவு பொறுத்து, அது மனதில் திரும்பத் திரும்ப அசை போடப்படும் காலம் அதிகரிக்கும். உங்களின் மனத்தை அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட வைக்கவேண்டும். விடுபட்ட அடுத்த கணமே உங்களின் பிரச்சினை பறந்துவிடும்.