KAILASA Library/மனதைத் திற/ஆண் சுதந்திரம்Sign in
மனதைத் திற

ஆண் சுதந்திரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • பெண்கள் ஞானமடைய முடியுமா?

பெண்கள் ஞானமடைய முழு தகுதி வாய்ந்தவர்கள். சொல்லப் போனால், ஓர் ஆணைவிட பெண் ஞானமடைவது எளிது.

  • அப்படியென்றால், ஆண் ஞானிகள்தான் அதிகமிருக்கிறார்கள். பெண் ஞானிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியல்லவா இருக்கிறது. மனித வரலாற்றில்... ஏன் இப்படி?

இரண்டு காரணங்கள்.

ஒன்று : பெண்களுக்கு முழுச் சுதந்திரமளித்த காலக்கட்டங்கள் வரலாற்றில் மிக மிகக் குறைவு.

பெண்கள்
ஞானமடையத் முழு
தகுதி வாய்ந்தவர்கள்.
சொல்லப் போனால்
ஓர் ஆணைவிட பெண்

அடுத்து : பெண்கள் ஞானம் நோக்கி
வாழ்வைத் திருப்ப வாய்ப்பில்லாததால்,
ஞானம் அடைவதற்கான நுட்பங்கள்
எல்லாமே ஆண்களுக்கு மாத்திரமே
வடிவமைக்கப்பட்டுவிட்டது.

  • பெண்கள் ஞானமடைவது இனி சாத்தியமா?

சாத்தியம்தான்.

  • உண்மையில் பெண் மனம் ஆழமானதுதானா?

ஆண் மனமும் ஆழமானதுதான்.

  • ஆண், பெண் என்பதெல்லாம் வெறும் உடல் ரீதியான வேறுபாடு மட்டும்தானா? இல்லை மன ரீதியான வேறுபாடும் உண்டா?

உணர்வு ரீதியான வேறுபாடும் உண்டு.

  • என்ன இது, புது குண்டாக இருக்கிறதே...... ?

ரொம்ப பழைய உண்மைதான். நாம்தான் மறந்துவிட்டோம்.

  • உணர்வு, மனம், உடல் என்ற மூன்று தளத்திலும் ஆண்-பெண் வேறுபட்டு இருக்கும்போது, எல்லோருக்கும் ஒரே தியானங்களைச் செய்யச் சொல்வது சரியா?

கர்ப்பிணிப் பெண்களுக்காக, பிரத்யேகமான தியானமுறைகள் இருக்கின்றன.

அதேபோல் சிறுகுழந்தைகள், படிப்பவர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தனித்தனி தியான முறைகள் உண்டு.

நாங்கள் பொது தியான முகாம்களில், பொது மக்களுக்கான தியான முறைகளையே கற்றுத் தருகிறோம்.

  • பெண்ணின் சிறப்பு என்ன?

அவளின் இனிமை.

  • இனிமை என்றால்... .?
A photograph of a smiling ascetic with a turban and robes, next to a text box

ஆண், பெண் என்பதெல்லாம் வெறும்
உடல் ரீதியான வேறுபாடு மட்டும்தானா?
இல்லை மன ரீதியான வேறுபாடும்
உண்டா?

பெண்ணின் மென்மை, பெண்ணின் கலைநயம்,பெண்ணின் குதூகலம் ஆகியவற்றை எந்தச் செயலில் சேர்த்தாலும், அச்செயலில் கொண்டாட்டம் ஒட்டிக் கொள்ளும். ஆனால், பெண்ணின் இனிமைத்துவம் மலரத் தேவையான முழுச்சுதந்திரத்தை சமுதாயம் தராததால்... மொத்தச் சமுதாயமுமே கொண்டாட்டம் எனும் இனிய பரிமாணத்தை இழந்துவிட்டிருக்கிறது.

✦ ஓர் இனிய சமுதாயம் அமைய, பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடை த்தால் போதுமா?

இல்லை. ஆணுக்கும் கிடைக்க வேண்டும்.

✦ ஆணுக்குச் சுதந்திரமா?

ஆம். ஆண் சுதந்திரம் பெற வேண்டும்.

✦ விளக்கமாகச் சொல்லுங்கள்

ஆணுக்குத் தேவையான இனிமையும், ஆறுதலும் பெண்ணிடமிருக்கிறது.

பெண்ணுக்குத் தேவையான பாதுகாப்பும், ஆதரவும் ஆணிடம் இருக்கிறது.

ஆணின் பிரச்சினை ஆசை; பெண்ணின் பிரச்சினை பயம்.

பெண்ணின் மீதான ஆதிக்கத்தை மட்டுமே விலக்கிக் கொள்வதால் சுதந்திரம் நிகழாது. பெண் மலர மாட்டாள்.

பயம் என்ற ஒன்றே அறியாத
அளவுக்கு பாதுகாப்பையும்,
சுதந்திரத்தையும் தரும்போதுதான், ஒரு
பெண்ணின் இனிமைத்துவம் மலர்கிறது.

இனிமைத்துவம் மலராதவரை ஆணின் பிரச்சினையான ஆசைகள் பூர்த்தியாவது சாத்தியமில்லை. ஆணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்காது.

ஆண் சுதந்திரம் பெற, பெண் சுதந்திரம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

  • ஆணைவிட, பெண் திடமானவள் என்கிறார்களே... அது உண்மையா?

உடலளவில் ஆண் திடமானவன்; உணர்வளவில் பெண் திடமானவள்.

உடல் பலத்தைவிட, உணர்வு பலமே முக்கியம் என்பதால்தான், ஆணைவிட, பெண் திடமானவள்.

  • பெண் ஞானமடைய, ஆணின் உதவி தேவை என்கிறார்களே... அதுபற்றிச் சொல்லுங்கள்?

ஞானி குருட்ஜீஃப் சொன்னக் கருத்தைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்.

  • ஆமாம்.

பெண் கொடி; ஆண் கொடிமரம்.

பெண், உணர்வுப் பிரவாகம். பக்திப் பிரவாகம். பக்தி உணர்வில் பழுத்தவர்கள். அவர்கள் ஞானமடைய, தியானம்கூட தேவையில்லை. அவர்களின் பொங்கும் அன்பே போதுமானது.

ஒரு மீராவும், ஒரு ஆண்டாளும், கிருஷ்ணனை மையமாய் வைத்து ஞானமடைவது வெகு எளிது.

ஆணைப்போன்று பெண்ணால் கடுந்தவங்களிலும், தியானங்களிலும் ஈடுபடுவது சாத்தியமில்லை; தேவையும் இல்லை.

portrait

> உடலளவில் ஆண் திடமானவன்;
> உணர்வளவில் பெண் திடமானவள்.
>
> உடல்பலத்தைவிட, உணர்வு பலமே
> முக்கியம் என்பதால்தான், ஆணைவிட,
> பெண் திடமானவள்.

பக்தி மார்க்கமே பெண்களுக்குச் சிறந்தது.

பக்தி மார்க்கத்தில், தியான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவரைப் போன்று, தனிக் கொடிமரமாய் நிற்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நிற்கவும் முடியாது.

பக்தி உணர்வு படர, அன்பு படர, ஞானகுரு எனும் கொடிமரம் தவிர்க்க முடியாதது. மீராவுக்கும், ஆண்டாளுக்கும் கிருஷ்ணர் இல்லாமல் ஞானம் சாத்தியமில்லை. இந்த ஆழமான உண்மையைத்தான் ஜியார்ஜ் குருட்ஜிஃப் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.

  • ஆண், பெண் என்ற இருவரில் யார் உயர்ந்தவர்?

கேள்வியே தவறு.

ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவ்வளவே.

  • ஆண் சுதந்திரத்திற்கும் பெண் சுதந்திரத்திற்கும் ஒரேயொரு தீர்வு சொல்லுங்கள்?

தியானம் செய்யுங்கள்.

  • பெண்களுக்குத் தியானத்தைவிட, பக்தியே சிறந்தது, போதுமானது எனச் சொன்னீர்களே?

உண்மைதான். ஆனால், பெண் இன்னும் பெண்ணாக மாற பல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறது.

ஆணும், பெண்ணும்

இருவருமே

தனித்துவம்

வாய்ந்தவர்கள்.

பெண் சேர்த்து வைத்திருக்கும் பல
ஆழ்மனப் பிரச்சினைகளிலிருந்து விடுபட
வேண்டும். சுதந்திரம் பெற வேண்டும்.

ஆழ்மன ஆதிக்கத்திலிருந்து ஒரு பெண்
விடுபடாதவரை... கிருஷ்ணரைப் போல் பூரண
சுதந்திரமளிக்கும் ஆண்களின் சமுதாயம்
உருவானால்கூட, அந்த பெண்ணால் தன் சு

தந்திரத்தை உணர முடியாது. எனவே, அந்தப் பெண்ணே அந்தப் பெண்ணுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்.

அதற்குத் தியானம் மாபெரும் உதவியாக இருக்கும்.

  • ஆண்-பெண் கடந்த நிலை என்றால் என்ன? அது அர்த்தநாரி நிலை. கடவுள் நிலை. ஞானநிலை.
  • இன்னும் விளக்கமாய்ச் சொல்லுங்கள்? ஆண், பெண், அலி என்ற உணர்வுகள் இருக்கும்வரைதான், நான் ஒரு மனிதப் பிறவி என்ற உணர்வு இருக்கும்.

இந்த உணர்வுகளைக் கடப்பதுதான் ஞானம்.
அதற்கு முதற்படியாய் உதவுவது தியானம்.
இந்தச் சுதந்திரம்,
ஆண் சுதந்திரத்தையும்
பெண் சுதந்திரத்தையும்விடப் புனிதமானது.

அதன் பெயர் மனித சுதந்திரம்.

நீங்கள் ஆணாயிருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும் உங்களின் இறுதி இலக்கு மனித சுதந்திரம்தான்.

இந்த சுதந்திரம் பெறுவதைப் பற்றி ஆழமாய் தியானியுங்கள்... பெண் சுதந்திரம், ஆண் சுதந்திரம் என்பதெல்லாம் கடுகாய்விடும்.

எளிதாய் அவற்றை அடைந்து, அடுத்த நிலைக்குள் ஒய்யாரமாய் நடக்க ஆரம்பிப்பீர்கள்.