இனி காலம் பெண்மையின் கையில்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தியானச் சொற்பொழிவொன்றில் பெண்மணியொருவர் கேள்வி பதில் நேரத்தில் ""உங்களைப் பொறுத்தளவிற்கு யார் புனிதர்?" எனக் கேட்டார்.
""நீங்கள்!" என்ற ஒற்றை பதிலில், அவர் ஆடிப்போனதைப் பார்க்க முடிந்தது.
சொற்பொழிவு முடிந்தபின் வந்து, "தாம் ஏன் புனிதர் அல்ல," என விலாவாரியாகப் பேசி முடித்தபின்தான் அமைதியானார்.
‘தாம் புனிதர்’ என்ற உண்மையை உடனடியாக ஏற்றுக்கொள்ள, எவருமே தயாராக இல்லை. ஏன்?
பெண்மை மரியாதைக்குரியது.
அதன் மென்மை போற்றுதலுக்குரியது.
அதன் எளிமை பூஜைக்குரிய பூ!
‘தான் புனிதர்’
என்ற உண்மையை
உடனடியாக
ஏற்றுக்கொள்ள,
எவருமே தயாராக
இல்லை.
வாழ்க்கை சாஸ்திரம் வகுத்தவர்கள் சொல்லும் அழகான ஒரு கருத்து இதோ...
""பெண்மையும், பெண்மையும் சேர்ந்து வாழுமிடம் சொர்க்கம்! நந்தவனம்!
பெண்மையும், ஆண்மையும் சேர்ந்து வாழுமிடம் வீடு. ஆண்மையும், ஆண்மையும் சேர்ந்து வாழுமிடம் நரகம். போர்க்களம்!"
உலகில் உடலெடுத்து வாழும் எல்லா மனிதர்களும் புனிதர்களே!
ஒவ்வொரு புனிதருமே ஆண், பெண் கலவை.
மனிதருக்குள் பாதி தாய், பாதி தந்தையாய் கலந்து செய்யப்பட்ட செல்களே வலம் வருகின்றன.
எவரும், தனி ஆண், தனி பெண் என அழைக்கப்பட முடியாத அளவுக்கு முழுமையான புனிதர்கள்.
மருத்துவம்கூட ஆண், பெண்ணைப் பிரிக்கச் சிரமப்படுகிறது. மனிதர்களின் அடிப்படையான 46 குரோமோசோம்களில், எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன, ஆணுக்கும், பெண்ணுக்கும்!
46 ஆவது குரோமோசோம் ‘ஙீ’ என்றால் ‘சிசு’ பெண் உடலெடுக்கிறது. அது ‘ஙூ’ என்றால் ஆண் உடலெடுக்கிறது. வெளியே பார்க்க ஆணாக இருப்பதால், அவரை பெண்ணிலிருந்து முற்றிலும் மாறானவர் என அறிவிக்க முடியாது. 1% ஆண்தன்மை அதிகம் பெற்ற மனிதர் எனச் சொல்லலாம்.
அதேபோல் பெண்ணும் 1% பெண்தன்மை அதிகம் பெற்ற மனிதர் என அழைக்கப்படலாம்.
எளிமை, மென்மை, பெண்மை ஆண்களுக்குள்ளும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களால்தான் காவியங்கள் படைக்க முடியும்.

பெண்மை அவ்வளவு பெரியசக்தி.
படைப்பாற்றல் மிக்கது. அதனால்தான்
எல்லாப் படைப்புக்கும் காரணமாய் பரத்தில்
இருக்கும்
சக்தியைப் ‘பராசக்தி!’ என அழைக்கின்றனர்.
காரணம், பெண்மை அவ்வளவு பெரியசக்தி. படைப்பாற்றல் மிக்கது. அதனால்தான் எல்லாப் படைப்புக்கும் காரணமாய், பரத்தில் இருக்கும் சக்தியைப் 'பராசக்தி!' என அழைக்கின்றனர். பராசக்திக்குத் தாய் அந்தஸ்து தந்திருக்கின்றனர்.
சராசரி ஆண்தன்மை என்பது நேர்மாறானது. அது முரட்டுத்தனம், ஆளுமை, ஆண்மையின் தொகுப்பு.
வெறும் ஆண்மை பாலைவனம். அதில் பெண்மைக் குணம் வளர்ந்தால் அது நீர்த்தடாகமாக மாறிப்போகும்.
அதேபோல் பெண்மைக் குணம் பெண்ணில் குன்றினால் நீர்த்தடாகம் வற்ற ஆரம்பித்து விடும்.
திருமணத் தம்பதியரில்... பெண்மை மிகுந்த பெண்ணுக்கும், பெண்மை சிறிது மலர்ந்த ஆணுக்கும் திருமணம் நிகழ்ந்தால், அந்த வீடு சொர்க்கமாக இருக்கும். அவர்களைப்போல் வாழ்க்கையை அனுபவித்தவர்கள், அவர்கள் மட்டுமே இருப்பர்.
வெறும் பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணமானால் அந்த வீடு வீடாக இருக்கும்.
வாழ்க்கையைக் கொண்டாடி மகிழத் தேவையான எளிமையும், மென்மையும் வற்றியவர்களால் என்ன கூத்தாட முடியும்? அவர்களுக்குத்தான் வாழ்வு சலிப்புத் தட்டிவிடும்.