மகா வாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அன்பு செய்தல் உங்களின் இயல்பு.
பெண்களே! அன்பின் வள்ளலாகுங்கள்.
உங்களினுள் இருக்கும் ஆண்தன்மை சந்தோஷமடையும். காலங்காலமாக உங்களினுள் அடக்கப்பட்ட ஆண் குணாதிசயங்கள் சுதந்திரம் பெறும். பெண் விடுதலை நிகழும்.
அன்பு செய்தல் உங்களின் இயல்பு.
இப்போது செய்யும் அன்பு போதாது. அதே அன்பைப் பலமடங்காக்குங்கள். இல்லம் கோயிலாகும். அன்பைப் பெறுபவரைவிட, செய்பவரே, அதிக மகிழ்ச்சியையும், அருமையான வளர்ச்சியும் பெறுவார்கள்.
அன்பைத் தன்னுள் சேர்க்கச் சேர்க்க பெண்மட்டுமல்ல, ஆணும் முழு ஆணாவான்.
அன்பு அதிகம் கொடுத்தால், என் கணவர் அதைத் துஷ்பிரயோகம் செய்கிறார். அத்துமீறி அடிமையாக்க முயற்சிக்கிறாரே, என்ன செய்ய?
பார்வதி, புதூர்
கலில் ஜிப்ரானின் அருமையான பாடல் வரி ஒன்று...
"அன்பில், உங்கள் இதயத்தையே கொடுங்கள். ஆனால்,அவர்கள் அதைப்பிடித்து வைத்துக் கொள்ளும் வகையில் அல்ல!"
வெளியிலிருந்து பார்க்க, உறைந்த பனிபோல் கடினாமயிருப்பவர்கள்தான் ஆண்கள். அவர்களுக்குள் அன்பென்னும் இளஞ்சூடு குறைந்ததால், உறைந்து விட்டார்கள். கடினமாகத் தெரிகிறார்கள்.
எந்தப் பனியும், இளஞ்சூடால் உருகவே செய்யும். சில நேரங்களில், கொஞ்சம் காலம் பிடிக்கலாம். அவ்வளவே.
உங்கள் கேள்வியே, நீங்கள் பொறுமை இழந்துவிட்டீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
பொறுமை அன்பின் மிக முக்கியமான அங்கம்.
புத்திசாலித்தனம் அன்பின் அடுத்த முக்கியமான அங்கம்.
உங்கள் கணவர் உங்களை அடிமைப்படுத்தும்போதும், அதிகாரம் செய்யும்போதும், 'கழுவும் மீனில் நழுவும் மீனாக' தப்பிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
அமைதியாயிருங்கள்.
அது ஏமாற்றுதலல்ல.
காப்பாற்றுதல்.
இது அன்பு விளையாட்டு.
மகிழ்ச்சி தரும் விளையாட்டு. மூர்க்கம் தணிந்து அவர் சும்மா இருக்கும் எல்லா நிமிடங்களையும் அன்பு பொழியும் சிகிச்சை நேரமாக்குங்கள்.
மூர்க்கமாகும்போது, அவர் மேல் பரிதாபப்பட்டு அமைதியாக இருப்பது, "என்ன நடந்தாலும் நான் அன்பு செய்வேன்," என்ற தாய்மைக் குணம் மலரும் போது சாத்தியமாகும்.
மூர்க்கக் குழந்தைக்கு அன்பு உணவளியுங்கள். குழந்தை மனிதனாகும். நீ ங்கள் தாயாவீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக் காற்று வீசும்.