அன்பிற்குரியவர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வித்தியாசமான ஆசீர்வாதமொன்று உபநிஷத்தில் வருகிறது.
"பத்துக் குழந்தைகளுக்கு நீ தாயான பின்- உனக்குப் பதினோறாவது குழந்தையாவான் உன் கணவன்!" எனச் சொன்னார் முனிவர், ஆசீர்வாதம் பெறவந்த புதுத் தம்பதியரிடம்.
குறிப்பாய் புதுப்பெண்ணிடம் சொன்னார், "உன் கணவன், உனக் குக் குழந்தையாகாவிட்டால், நீ உண்மையான மனைவியாய், முழுமையாய் வாழவில்லை என்று பொருள். கணவனே குழந்தையாகுமளவு அன்பில் உயர்ந்து கொண்டேயிரு," என ஆசீர்வதித்தார்.
ஆணின் இயல்பே ஆளுமை! ஆளத் துடிப்பவன், தன்னுள் அன்பில்லாமல் துடிப்பவன்.
""பத்துக் குழந்தைகளுக்கு
நீ தாயான பின்-
உனக்குப் பதினோறாவது
குழந்தையாவான்
உன் கணவன்!." எனச்
சொன்னார் முனிவர்,
ஆசீர்வாதம் பெறவந்த புதுத்
நரம்பியல் வல்லுனர்களின் (மீஞுதணூணிடூணி ஞ்டிண்ணண்) கூற்றுப்படி, "ஆண்களுக்கு இடது மூளை நன்றாக வேலை செய்யும். பெண்களுக்கு, வலது மூளை நன்றாக வேலை செய்யும். இடது மூளை அறிவு சார்ந்தது. தர்க்கம் சார்ந்தது. வலது மூளை உணர்வு சார்ந்தது. படைப்பாற்றல் மிக்கது." அதனால்தான், இயற்கையாகவே ஆண்களுக்கு அறிவு அதிகம், திறன் அதிகம். பெண்களுக்கு உணரும்திறன், அனுபவிக்கும் திறன் அதிகம்.
பெண்ணின் தாய்மை அவளுக்குள் அன்பு சக்தியாய் உறைந்திருக்கிறது.
தன்னுள் இருக்கும் பெண்மையை அடக்கிய ஆண்களிடம், பெண்ணின் அன்பு சக்தியின் வெளிப்பாடான மென்மை, இரசனை, சிறு சிறு விஷயங்களிலேயே குழந்தை போல் சந்தோஷப்படுதல், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், கலையுணர்வு ஆகியன குறைவாக இருக்கும். விளைவு: கடினம், இறுக்கம், அதிகாரம், தவிப்பு.
தன்னுள் இருக்கும் பெண்தன்மையைச் சிறிதளவு பயன்படுத்திய ஆண், கலைஞனாகிறான்.
ஆணின் மனம் மிக உறுதியாயிருப்பதாய்க் காட்டும் கண்ணாடிகள் போன்றது. ஓர் எதிர்பாராத அடியில் சுக்கு நூறாகிடும் கண்ணாடிகள் அவை.
பெண், மனத்தளவில் ஆணைவிட மிக உறுதியானவள் என்பது மனோ ஆராய்ச்சியின் (கண்தூஞிடணி அணச்தூண்டிண்) முடிவான கருத்து.
பலகாலமாய் பெண்களை அடக்கியதால், தம் சரிபாதிப் பகுதியான பெண்மையைக் காலங்காலமாய் அடக்கிவிட்டார்கள் ஆண்கள். அதனால், மென்மை அழிந்து கரடு முரடாகிவிட்ட ஆண், முதலில் குணப்படுத்தப்பட வேண்டும்.
ஆண் முழுமை பெறவேண்டும்.
"என்னிடம் முழுமையாய் அன்பு காண்பிக்காத என் கணவனிடம் நான் ஏன் முழு அன்பு செலுத்த வேண்டும்? நான் மாட்டேன்!" என ஜீூ-மல்கியிடம்

பலகாலமாய் பெண்களை அடக்கியதால்
தம் சரிபாதிப் பகுதியான பெண்மையைக்
காலங்காலமாய் அடக்கிவிட்டார்கள்
ஆண்கள். அதனால், மென்மை அழிந்து
கரடு முரடாகிவிட்ட ஆண், முதலில்
குணப்படுத்தப்பட வேண்டும்.
வெடித்தாள் அந்தப் பெண்.
“உன் பேச்சிலிருந்து இரண்டு விஷயங்கள் சொல்ல முடியும். ஒன்று: உன் கணவன் முழுமையாய் அன்பு செய்வதில்லை. இரண்டாவது: உன்னால் முழுமையாய் அன்பு செலுத்த முடியும். ஆனால், உனக்கு அதில் விருப்பமில்லை,” என்றார் ஜூர்-மல்கி.
“ஆமாம்,” என்றாள்.
“மூடப்பெண்ணே! உன் கணவன் முழுமையாய் அன்பு செலுத்துவதில்லை என்பது தவறு. அவனால் உன்னைப் போல் முழுமையாய் அன்பு செலுத்த முடியாது என்பதே சரி. அவன் கரடுமுரடானவன்.
முடியாதவன் செய்யாதது தவறா? முடிந்தவள் செய்ய மறுப்பது தவறா? எது பெரிய தவறு, சொல்...!” என்றார். ஜூர்-மல்கி.
ஏதோ கோபத்தில் பேசினாலும், அந்த புத்திசாலிப் பெண், ஜூர்-மல்கியின் வரிகளைப் புரிந்துகொண்டதால் தலை கவிழ்ந்தாள்.
“தெரிந்துகொள்! நீ அவனுக்கு மனைவியல்ல, குரு.”
முழு அன்பை உன் கணவன் மீது பொழிவதன் மூலமாக, “அன்பு என்றால் என்ன? முழுமையாய் அன்பு செய்வது எப்படி? எதையும் எதிர்பாராமல் அன்பு செய்வது எப்படி? என்ற வாழும் கலைகளை, நீ விரும்பினால், அவனுக்குக் கற்றுக்கொடு. முடிந்தவர்கள்தானே, முடியாதவர்களுக்கு உதவ வேண்டும்,” என்றார்.
ஆணின் வன்மையைத் தணிக்கத்தான்
பெண்ணிடம் மென்மையை வைத்தான்
இறைவன். ஆனால், பல இடங்களில் இன்று
நிலைமை தலைகீழாகிக் கொண்டிருக்கிறது.
“பெண் விடுதலை இயக்கம்
கருத்தரித்ததே ஆண் மனதில்தான். அதனால்தான்
ஆண்மன வாசனை வீசுகிறது. விடுதலை
பேசும் பல பெண்களின் வார்த்தைகளில்,
மன்னிக்கத்தெரிந்தவர்
அன்பு செய்யத்
தெரிந்தவர்.
அன்பானவரால்
மன்னிக்காமல்
பெண் விடுதலை என்ற பெயரில், பெண்கள் மேலும் மேலும் மென்மையாகித் தாயாகாமல், வன்மையானாலோ, கரடுமுரடானாலோ தெரிந்துகொள்ளுங்கள், அது ஆழ்மனதின் தந்திரம்."
ஜீ-மல்கியிடம் பொறுமையிழந்து பேசிய பெண் போல் இருப்பவர்கள் செய்யும் செயல். அனைவருமே, தங்களையுமறியாமல் ஆழ்மன தந்திரத்தில் சிக்கிக்கொண்டவர்கள் தாம்.
"பாவம்! இப்படிச் சிறுபிள்ளை போல நடந்து கொள்கிறார்களே," எனப் பரிதாபப்படும் மென்மையில்லாமல், "அவன் அப்படிச் செய்தால், நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன்" என வம்புக்கு நிற்கும் வன்மைமிகு சண்டைக்கோழிகள் அதிகமானால் உலகம் தாங்காது.
இயேசுநாதரிடம் ஒருவர் கேட்டார், "ஒருவன் தவறுசெய்தால், மன்னிக்கச் சொல்கிறார்கள். அதுசரி, ஆனால் மீண்டும் அவன் அதேமாதிரி தவறு செய்தால், அவனை என்ன செய்வதாம்?" எனக் கேட்டார்.
கேள்வி கேட்பவரின் உள்ளார்த்தத்தை உடைத்துத் தூள் தூளாக்கியது இயேசுவின் பதில்... "ஒருமுறையல்ல, ஏழு, எழுபது முறைகள் (7 x 70) மன்னி," என்றார்.
மன்னிக்கத்தெரிந்தவர் அன்பு செய்யத் தெரிந்தவர். அன்பானவரால் மன்னிக்காமல் இருக்கமுடியாது.
கரடுமுரடான ஆண் அன்பிற்குரியவன். மென்மை குறைந்து வன்மை மிகுந்த எல்லாருமே அன்பிற்குரியவர்கள்.
இவர்களுக்கு அன்பு ஓர் மருந்து! இது போன்ற ஆண்கள், அன்பை மழைபோல் பொழியும் ஒரே ஒரு பெண்மையை, தங்கள் வாழ்வில் சந்தித்தாலே

கரடுமுரடான ஆண் அன்பிற்குரியவன்.
மென்மை குறைந்து வன்மை மிகுந்த
எல்லாருமே அன்பிற்குரியவர்கள். போதும் - அவர்களின் பெரும்பாலான மனக்காயங்கள் குணம் பெறும். அவர் புதுப்பிறவியெடுப்பார். இது ஒரு முழுப்பெண்ணால்தான் முடியும்.
முழுப்பெண், எல்லோருக்கும் தாய்.
ஆண்கள் எல்லாரும் முழுமையாய் அன்பு செய்யப்பட்டு, பெண்கள் எல்லாரும் முழுமையாய் மதிக்கப்பட்டால்... .
ஆணிண்டு ணினூ டீஞுநீ ணீணூச்சூதுனுனூ என்ற புத்தகத்தில் வரும், யூதப்பிரார்த்தனை ""ஓ பிதாவே: தம்பதியரின் மகிழ்ச்சி கீதங்களால், கொண்டாட் டக் கூச்சலால் நகரம் நிரம்பி வழியட்டும்." என்று உள்ளது. அப்பொழுது இல்லத்தில் நிஜமாக மகிழ்ச்சிக் காற்று வீசும்.
''எப்போதோ வாங்கும் தங்கப்பதக்கத்திற்கு, சில வீராங்கனைகள் நாட்டுக்குப் போதும்.
வீட்டுக்குத் தேவை, பெண்கூட அல்ல, பூரணமான தாய்!''