KAILASA Library/மனதைத் திற/உணர்வு ரீதியான கவனிப்புத் தேவைSign in
மனதைத் திற

உணர்வு ரீதியான கவனிப்புத் தேவை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"பெண்களைப் போலவே, ஆண்களுக்கும் அந்த மூன்று நாட்கள் உண்டு," என நம்முடைய குடும்ப நலவாழ்வு முகாமில் (ஊச்ட்டிடூதோ இணிதணண்துடூேடிணஞ் கணூணிஞ்ணூச்ட்) - சொன்னபோது, எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு குடும்பத்தலைவர் எழுந்து, "நமக்குமா?!" எனக் கேட்டார்.

"ஆமாம். ஆண்களுக்கும் உண்டு. தந்திர சாஸ்திரத்தில் வரும் ஆழமான இந்த ஒரு உடற்குறியியல் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். அது குடும்ப நிம்மதிக்கு பெரும் உதவியாயிருக்கும்."

"குடும்ப நிம்மதிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"

"பெண்களின் மூன்றுநாட்கள் அந்தப் பெண்ணை மட்டும் பாதிக்கிறது. ஆனால், ஆணின் மூன்று நாட்கள், அவரையும் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிறது."

பெண்களின்
மூன்றுநாட்கள் அந்தப்
பெண்ணை மட்டும்
பாதிக்கிறது. ஆனால்,
ஆணின் மூன்று
நாட்கள், அவரையும்

"அப்படியா!" என ஆச்சரியப்பட்டார்.

"தந்திர சாஸ்திரத்தில் தீக்ஷை பெறும்முன்,
ஆண்களின் அந்த மூன்று நாட்களைக்
கண்டுபிடிப்பதை ஒரு தியான முறையாகத்
தந்திருக்கிறார்கள்."

"எங்களுக்கும் அந்தத் தியானத்தைக் கற்றுத் தருவீர்களா?"

"இந்த சொற்பொழிவின் முடிவில் அந்தத் தியானத்தைக் கற்றுக் கொள்ளலாம்.

பெண்களுக்கு நிகழ்வது, இன்றைய சமுதாயம் சொல்வது போல் தீண்டத் தகாத ஒன்றல்ல.

கண்களில் நீர் வருவது இயற்கை. காதுகளிலும், மூக்கிலும் அழுக்கு உருவாவதும் இயற்கை. இதைப்போல்தான் அந்த நிகழ்வும்.

அந்தக்காலத்தில் இருந்த ஆணாதிக்க சமுதாயம்தான், இந்த இயற்கையான நிகழ்வை தீட்டு எனச் சொல்லி, பெண் சமுதாயத்திற்குக் கொட்டு வைத்துவிட்டது.

அதோடு நிற்காமல், அவர்களுக்கும் அதே நிகழ்வு நிகழும் என்பதையும் மறைத்து விட்டார்கள்.''

"மறைத்து விட்டார்களா...?!"

"எந்த ஒரு பலசாலியையும், ஒரு சிறு குற்ற உணர்ச்சியை உருவாக்குவதின் மூலமாக ஒரு மூலையில் முடங்கி உட்கார வைத்துவிட முடியும்.

அதிகாரம் பெற்ற அதிபதிகள் தங்களின் வேலையாட்களை தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு டெக்னிக் இந்தக் குற்ற உணர்ச்சி.

அதேபோல், அப்போதிருந்த ஆணாதிக்கம், பெண்களை ஒட்டுமொத்தமாகத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக உருவாக்கியதுதான் அந்த நாட்களில் பெண்களை வீட்டைவிட்டு வெளியே இருக்கச் சொல்வது, யாரையும் தொடக்கூடாது எனச் சொல்வதெல்லாம்.''

"இப்படிச் செய்வதால், பெண்களுக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வுதானே

portrait

பெண்களுக்கு நிகழ்வது இன்றைய
சமுதாயம் சொல்வது போல் தீண்டத்
தகாத ஒன்றல்ல.
கண்களில் நீர் வருவது இயற்கை.
காதுகளிலும், மூக்கிலும் அழுக்கு
உருவாவதும் இயற்கை.

அதிகரிக்கும். அவர்களுக்கு அது ரெஸ்ட் டைம்தானே. ஆணாதிக்கம் அவர்களை அழித்தது; அடக்கியது; குற்ற உணர்ச்சியில் தள்ளியது எனச் சொல்ல வழியே இல்லையே.''

"ஆழ்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

உடல் ரீதியாக ஓய்வைத் தருவதாய் சொல்லி, மன ரீதியாகக் குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறார்கள்.

இதைத்தான் குணிஙிடிச்சேதோ ச்ஞிஞிஞ்ணீணைஞீ ஞிணாடிட்சூன் எனக் குறிப்பிடுவார்கள்.

வீட்டைவிட்டு ஒதுக்கி வைப்பதாக மட்டுமல்லாமல், இறைவனிடம் இருந்து ஒதுக்கி வைப்பதுதான் மகா மோசம்.

பூஜை அறைக்குள் அப்போது நுழையக்கூடாது என அன்று சொன்னதில் இருந்து, அன்று நிகழ்ந்த தவறைக் கண்டுபிடிக்கலாம். எவ்வளவு சூட்சுமமாக அவர்களின் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவர அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்,'' எனக் கண்டுகொள்ளலாம்.

ஒரு சனாதன ஞானியிடம், குடும்பப் பெண்ணொருவர், "பூஜை, குழந்தை, வேலை, பொருட்கள் என்று எல்லாவற்றிடமிருந்தும், அந்த நேரங்களில் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.

கடவுளை மனதளவில் அப்போது பூஜிப்பதில் தவறு ஏதுமில்லையா?'' எனக் கேட்டபோது,

ஞானி, "அந்த நேரங்களில் பூஜையறைக்குள் வராதே எனச் சொன்னால் அது கடவுளல்ல.

அந்த நேரங்களில்
பூஜையறைக்குள் வராதே எனச்
சொன்னால் அது கடவுளல்ல.
கடவுளால் அப்படிச் சொல்ல
முடியாது. மீறிச் சொன்னால்,
அந்தக் கடவுளை
பூஜையறையை விட்டு
வெளியே எடுத்து வைத்து

கடவுளால் அப்படிச் சொல்ல முடியாது.

மீறிச் சொன்னால், அந்தக் கடவுளை
பூஜையறையை விட்டு வெளியே எடுத்து
வைத்து விடுங்கள்.

நிம்மதியாய் கடவுளை மனதளவில் பூஜியுங்கள். தப்பில்லை,'' எனச் சொன்னார்.

கடவுள் என்பதே உணர்வுதான். ஆண்களைவிடப் பெண்கள் இந்த உணர்வில் ஆழ்ந்திருப்பவர்கள்.

அறிவில் ஆழ்ந்திருக்கும் ஆண்குலம், உணர்வில் ஆழ்ந்திருக்கும் பெண்குலம் ஆகிய இரண்டும், ஒன்றையொன்று புரிந்துகொண்டுவிட்டால், அங்கே சொர்க்கம் பிறந்துவிடும்.

புரிந்து கொள்ளாதபோது, அந்த இடமே நரகமாக இருக்கும். அப்படியிருந்த காலத்தில்தான், பெண்களின் இயற்கையான நிகழ்வைக் கண்டனப்படுத்தி, அந்த மூன்று நாட்களில் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துவது எனும் முறை வழக்கில் வந்துவிட்டது.

ஆண்களுக்கும் இதைப்போல் மூன்று நாட்கள் வரும் என்பதையும் மறைத்து விட்டார்கள்.

"ஏன் மறைத்தார்கள்?"

"அப்போதுதான் உன்னைவிட நான் உயர்ந்தவன் எனக் காட்டிக் கொள்ள முடியும்.

ஆண்களுக்கும் நிகழும் என்றால், எப்படி?
பெண்களுக்கு அது உடல் ரீதியானது.
ஆண்களுக்கு அது மன ரீதியானது.

இந்தத் தியானத்தைச் செய்து பாருங்கள். உங்களாலும் இதைப் புரிந்துகொள்ள முடியும்" எனச் சொன்னேன்.

portrait

> அறிவில் ஆழ்ந்திருக்கும் ஆண்குலம்,
> உணர்வில் ஆழ்ந்திருக்கும் பெண்குலம்
> ஆகிய இரண்டும் ஒன்றையொன்று
> புரிந்துகொண்டு விட்டால், அங்கே
> சொர்க்கம் பிறந்துவிடும்.

ஆண்களுக்குள்ளும் இயற்கையான சக்திச் சுற்றுகள் நிகழ்கின்றன.

தாந்த்ரீகத்தில், தீக்ஷை பெறும்முன் ஆண்களைச் சுய ஆராய்ச்சி செய்யச் சொல்வார்கள்.

அதாவது,....

தொடர்ந்து 6 மாதங்களுக்கு உங்களின் சந்தியாநேர (இளம்மாலை நேர) உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் குறித்து கொண்டே வாருங்கள்.

பலநாள் உற்சாகமாயிருக்கும். சிலநாள் நடுத்தரமாய் இருக்கும். இன்னும் சிலநாள் மனம் உற்சாகமிழந்திருக்கும். அதில், மிகச் சரியாக, ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட அதே இடைவெளியில் தொடர்ந்து மூன்றுநாட்களும் மனம் உற்சாகம் இழந்திருக்கும். இது ஒரு சுற்றுப் போல தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்தப் பயிற்சியைச் செய்து, உங்களுக்கும் அதேமாதிரியான உடல்-மனச் சோர்வு மூன்று நாட்கள் வருகிறது என்பதைக் கண்டுகொண்டால்தான், பெண்களின் நிலை புரியவரும். அவர்களையும் நம்போல் மதிக்க ஆரம்பிப்போம்.

ஒருவர், இன்னொருவரின் உணர்வுகளை முழுமையாய் மதிக்கும் சொர்க்கம் உருவாக இதுபோன்ற அடிப்படைப் புரிந்து கொள்ளுதல்கள் நிகழ வேண்டும். இன்னொரு முக்கியமான டிப்ஸ். ஆண்கள் அந்த மூன்று நாட்களில் எந்தவொரு பெரிய முடிவுகளையோ, செயல்களையோ செய்யாதீர்கள். அது தோல்வியைத் தழுவச் செய்துவிடும்.

அந்த மூன்று நாட்களில்தான் ஆண், பெண் ஆகிய இருவரின் வாழ்வில் அதிக அன்பு, அதிக தியானம், அதிக கடவுள்தன்மை சேர்க்கப்பட வேண்டும். அப்போது உடல்-மனச் சோர்வு தாண்டி உணர்வு ரீதியான ஆதரவும் கவனிப்பும் தேவை.