KAILASA Library/மனதைத் திற/மலர்ந்தால் போதும்Sign in
மனதைத் திற

மலர்ந்தால் போதும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

1. தியானம் செய்தால் உலகத்தையே மாற்றிவிடலாமா?

பிரபஞ்சத்தையே மாற்றிவிடலாம்.

2. ஆனால் நான் இன்னும் மாறவில்லையே?

நீங்கள் மாறவேண்டியதில்லை. மலர்ந்தால் போதும்.

3. மலர்வதென்றால்?

பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தி, புத்தி உங்களிடமும் இருக்கிறது. அதை மலர்த்துவதுதான் மலர்வதென்பது.

4. சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு சுதந்திரம் இல்லையே?

சும்மா விரும்பினால் சுதந்திரம்
வராது. விருப்பத்தைச் செயலாக மாற்றினால்
சுதந்திரம் பெருகும்.

பில்கேட்ஸ்-க்கும், பில்கேட்ஸைப் போன்று மாற விரும்புபவர்களுக்கும் இருப்பது 24 மணி நேரம்தான்.

பிரபஞ்சத்தையே

இயக்கும் சக்தி, புத்தி

உங்களிடமும் இருக்கிறது.

அதை மலர்த்துவதுதான்

மலர்வதென்பது.

செயல்படுத்துபவர் சாதிக்கிறார். சுதந்திரத்தைப் பெருக்கிக்கொள்கிறார்.

விரும்புபவர் கனவு காண்கிறார். சுதந்திரம் தரவில்லையெனக் குறை சொல்கிறார்.

5. சுதந்திரம்?

அதை யாரும் தர மாட்டார்கள். நீங்கள்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

6. திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் என்பது கட்டாயமான ஒன்றா?

திருமணத்திற்குப் பின்னும் அவசியம்தான்.

7. பிரம்மச்சரியம் என்றால்?

ஆண் பெண்ணைப் பார்த்து விலகி ஓடுவதும், பெண் ஆணைப் பார்த்து விலகி ஓடுவதும் அல்ல. இதையெல்லாம் கடந்தது.

8. கடந்தது என்றால்?

உடலளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பது பிரம்மச்சரியம் அல்ல.

மனதளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பதே பிரம்மச்சரியம்.

9. சலனம்?

யாராலும் எந்த உணர்ச்சியாலும் அசைக்கப்பட முடியாமல் இருக்கும் நிலையே, கிருஷ்ணரின் பிரம்மச்சரிய நிலை.

சுவாமி விவேகானந்தர் படம்

உடலளவில் சலனப்படுவதைக் கடந்து
இருப்பது பிரம்மச்சரியம் அல்ல.
மனதளவில் சலனப்படுவதைக் கடந்து
இருப்பதே பிரம்மச்சரியம்.

இதைத் தொட்டவர், திருமணம் ஆன பின்கூட சலனப்படாமல் இனிமையாக ஆழ்ந்து வாழ்ந்து கடந்து வருவார்.

இந்த நிலையைத் தொடாதவர், கட்டைப் பிரம்மச்சாரியாக வாழ்ந்தாலும்கூட சலனப்படுவார்.

இதுதான் கடக்கப்பட வேண்டும். இது எல்லோருக்கும் பொருந்தும்.

10. வம்பிழுப்பவர்களை என்ன செய்வது?

அவரோடு விளையாடுங்கள்.

11. கோபப்பட்டால்?

சிரியுங்கள்.

12. இன்னும் கொஞ்சம் கோபமாகி அடிக்க வந்தால்?

அங்கிருந்து ஓடிவிடுங்கள்.

13. இது என்ன வம்பில்போய் முடியும் போலிருக்கிறதே?

இதுவரை சொன்னது... வம்பல்ல. கிருஷ்ணரை மற்றவர்கள் வம்பிழுக்கும் போது அவர் செய்த லீலை.

14. கேட்க அருமையாயிருக்கிறது. செய்ய முடியுமா?

செய்ய முடியுமா? என்று பெரிய மனித
தோரணையில் கேட்காமல், செய்து பார்த்தால்
என்ன? என்று குழந்தையின் குதூகலத்தோடு
செய்து பாருங்கள்.

வெற்றி காண்பீர்கள்.

வம்புகூட விளையாட்டாகும்.

திருமணத்திற்கு முன்
பிரம்மச்சரியம் என்பது
கட்டாயமான ஒன்றா?
திருமணத்திற்குப் பின்னும்
அவசியம்தான்.

நாம் ஒன்றுபோல் மற்றவரைப் பற்றிச் சொல்லும் வாக்கியம். "என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை," என்பதுதான்.

"ஏஞ டிண் ணணிண தணஞீனுணுfrontண்சணஞீடிணஞ் ட்ஞு என்னால் இயன்றவரை எடுத்துச் சொன்னேன். ஆனாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" என்று சொல்லும்போது, புரிந்து கொள்ளுங்கள், "அடுத்தவர் மாற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதைப் போன்று, மற்றவரும் நாம் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்," என்று.

மற்றவர்களை மாற்ற வேண்டும் என்பதற்காக உபயோகிக்கும் சக்தியையும் புத்தியையும், நேரத்தையும், 'தான் மாற வேண்டும் என்பதற்காக உபயோகிக்கும் மனிதன் மகானாக மாறுகிறார்.'

ஏனெனில், அடுத்தவருடன் செய்யும் வாதத்தை (அணூாந்தட்ஞுணண) விடவும், தனிமனித மாற்றமே (கூணூாFrontண்ஞாணிfrontட்சணாடிணிண) மற்றவரை எளிதில் மாற்றும் சக்தி பெற்றது.

ஐண டிண் ச் நிடச்டிண ணூநுச்கிfrontாடிணிண. அ ண்டிணஞ்frontஞு ட்Frontண் frontணூFrontண்frontஞாணிfrontட்சணாடிணிண, frontணூFrontண்frontஞாணிfrontட்front ணfrontடஞு தீடFrontணிஞு தீfrontணிfrontஞுfront.

நுfrontண frontணூFrontணநுட்ஞுணண உங்கள் மாற்றம் உங்களுடன் நிற்காது.

அது ஒரு சங்கிலித் தொடரான செயல்முறை. தனி மனிதனின் உருமாற்றம், இந்த மொத்த உலகத்தையே மாற்றிவிடும். ஜென் வாக்கியம்.

இந்தக் கருத்தைத் தியானியுங்கள். அது உங்களுக்குள் முதலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களிடமிருந்து அன்புசக்தி, ஆனந்தசக்தி வெளிப்படத் தொடங்கும்.