மகாவாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
“பரவசத்தோடு பார்! எல்லாம் பரவசமாகும்.”
கட்டுக்கடங்காமல் பெருகிவிடக்கூடாது என்பதற்காய் ‘அழிப்பது;’ எல்லாம் அழிந்திடக்கூடாதே என்று ‘படைப்பது;’ நல்லாயிருக்க வேண்டும் எல்லாம் எனக் ‘காப்பது;’
காப்பதால், அழிப்பது;
அழிப்பதால், படைப்பது;
படைப்பதால், காப்பது
- இறைவன் தொழில்.
இது விளையாட்டென்றால், எல்லாம் விளையாட்டே. .! இது பைத்தியக்காரத்தனமென்றால், எல்லாம் பைத்தியகாரத்தனமே...! இது புனிதமென்றால், எல்லாம் புனிதமே...!
இதுதான் எல்லாமே. பார்க்கும் விதத்தில்தான் எல்லாம் ஒளிந்திருக்கிறது.
பரவசத்தோடு எல்லோரையும், எல்லாவற்றையும் பார்க்கும் கலையைக் கற்றுக்கொண்டால், எல்லாம் பரவசமாகும்.
மது, குடிப்பவரை மட்டுமே பாதிக்கும்
புகை, குடியிருப்பவரையெல்லாம் பாதிக்கும் 'புகை அது பகை' உங்களுக்கும், உங்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும்.
திபெத்தில் புகைத்தலைக்கூட தியானமாகச் செய்வார்களாமே? உண்மையா?
-கிஷன், மலேசியா
"செய்யாதே!?" என்றால், "செய்வேன்..." எனத் தூண்டும் மனம்
- மன இயல்பு விதி
"புகைபிடிக்காதே," எனச் சமுதாயமும், பெற்றோரும் திரும்பத் திரும்பச் சொல்ல, மனத்தின் இயல்பு, "ஒரு முறை புகைபிடித்துப் பார்த்தால்தான் என்ன,"? என செய்துபார்க்கத் தூண்டும்.
விளையாட்டாய் ஆரம்பிக்கும் புகைபிடித்தல், மன முதிர்ச்சிக் குறைவாய் உள்ளவர்களுக்கு அது விடாது பிடிக்கும் ஆழ்மனப் பழக்கமாகவும், உடற்கூறில் வளர்ச்சி குன்றியவர்களுக்கு அடிமைத்தனமாகவும் மாறிப்போகிறது.
உடல் எரியும் வரை, நுரையீரலையும் ஆரோக்கியத்தையும் எரிக்கும் வில்லனாகிப்போகிறது புக his சுருள்.
திபெத்தில் வழக்கில் இருக்கும் 'புகைத்தல் தியானம்', மன இயல்பில் ஆழ்ந்து வேலை செய்கிறது.
உதாரணத்திற்கு புகைபிடிப்பதை, 'செய்யேன்!' எனப் பக்குவமாய்ச்

மது, குடிப்பவரை மட்டுமே பாதிக்கும்
புகை, குடியிருப்பவரையெல்லாம்
பாதிக்கும் 'புகை அது பகை' உங்களுக்கும்,
உங்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும்.
சொல்லும்போது மனம் அதன் இயல்புப்படி எதிர்திசையில் “செய்யாதே...” என்றே செயல்பட ஆரம்பிக்கும். மனம் விடுபட ஆரம்பிக்கும்.
உடலையும், மனத்தையும் அடிமைத்தனத்திலிருந்து எளிதாய் விடுவிக்கும் திறன் கொண்டது இந்தத் தியானம். ஒரு குருவின் உதவியோடு முறையாய்ச் செய்தால், சில நாட்களிலேயே ‘புகைப் பிடிக்க அவசியமேயில்லை’ என்ற அற்புதமான நிலை உங்களுள் எந்தக் கஷ்டமும் இல்லாமல் உருவாகி இருக்கும்.
தியானப்பீடத்தின் உயர்நிலை தியான முகாம்களிலும், சிகிச்சை முகாம்களிலும் இந்தத் தியானம் கற்றுத் தரப்படுகிறது.
கற்றுப் பலன் பெறுங்கள்.
நாத்திகன் முன்னாள் ஆத்திகன்!
நாத்திகவாதமல்ல, கடவுள் இல்லை என்பது.
காரணம்
கடவுள் இருக்கிறாரா - எனத்
தேடிய ஆன்மிகனின் தேடல்
நசுக்கப்பட்ட வாழ்வின் வளைவுப்பகுதியில்
மனம் சறுக்கியபோது - யாராலோ
கொடுக்கப்பட்ட கருத்தே
கடவுள் இல்லையென்பது.
வாழ்வில் வரும் அதிருப்திகளும் அதிர்ச்சிகளும், தொடர்ந்து ஒருவரை நசுக்க... நசுக்க... நாத்திகனாகிறார் ஆத்திகன், தான் ஆன்மிகன் என அறியும் முன்னே நாத்திகம் பிறந்து விடுகிறது.