KAILASA Library/மனதைத் திற/புகைப் பிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை!Sign in
மனதைத் திற

புகைப் பிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு மருத்துவ சர்வே: "புகை பிடிக்காதவர்களின் வாழ்க்கைத் துணையை விட, புகைபிடிப்பவர்களின் வாழ்க்கைத் துணைக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம்," என்கிறது.

பத்துபேர் இருக்கும் இடத்தில் ஒருவர் புகைபிடித்தால் பத்துபேரின் நுரையீரல்களும் புகையிலை சுருள் புகையின் 'நிக்கோட்டீன்' வேதிப்பொருளால் தாக்கப்படும்.

இப்படி, சுற்றியிருப்பவர்கள் புகைபிடிக்காமலேயே, புகையிலைப் புகையை சுவாசிப்பதைத்தான் 'கச்ணண்டிதிறு ண்ட்ணிடுடிணஞ்' என்று குறிப்பிடுகிறார்கள்.

பொது இடத்தில் ஒருவர் புகைபிடிப்பது, 'பாஸிவ் ஸ்மோக்கிங்' மூலமாக பலருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும். "இந்த பாஸிவ் ஸ்மோக்கிங் தொடர்ந்தால்... இதனாலேயே 500 மில்லியன் மக்கள் புற்றுநோயுற்று இறக்க நேரிடும்," என்று கணித்து உலக சுகாதார நிறுவனம் (ஙிஏஙி) 1994 ஆம் ஆண்டிலேயே ஓர் அறிக்கைவெளியிட்டிருக்கிறது.

"இந்த பாஸிவ் ஸ்மோக்கிங்
தொடர்ந்தால்... இதனாலேயே
500 மில்லியன் மக்கள்
புற்றுநோயுற்று இறக்க நேரிடும்,"
என்று கணித்து உலக சுகாதார
நிறுவனம் (ஙிஏஙி) 1994
ஆம் ஆண்டிலேயே ஓர்
அறிக்கைவெளியிட்டிருக்கிறது.

பத்துபேர் இருக்குமிடத்தில் ஒருவர்
புகைத்து முடிக்கும்போது, பத்துபேரும்
புகைபிடிக்காமலேயே ஒருமுறை புகை பிடித்து
முடித்திருப்பார்கள்.

அந்தோ பரிதாபம்!

ஒருமுறை மிஸ்டர். குப்பன், நிட்டியிடம், "நான் எப்போதாவதுதான் புகைபிடிப்பேன்," என்றார். நிட்டி, "அப்படியா," என ஆச்சர்யமாய்க் கேட்டார் அடிக்கடி புகைபிடிக்கும் மிஸ்டர் குப்பனைப் பார்த்து.

மிஸ்டர். குப்பன், "ஆமாம்! ஆமாம்!"

நிட்டி, "எப்போதெல்லாம் புகைபிடிப்பீர்கள்," மிஸ்டர். குப்பன், "மூன்று சூழலில் மட்டுமே நான் புகைபிடிப்பேன்...

  1. சந்தோஷமாயிருக்கும்போது,
  1. துக்கமாயிருக்கும்போது,
  1. அப்புறம் இது இரண்டுமில்லாமல் சும்மா இருக்கும்போது, அவ்வளவுதான்" என்றார்.

இப்படிப் புகைபிடிக்க ஏதாவதொரு காரணம் சொல்லிக்கொண்டு, தம் நுரையீரலில் இருக்கும் 3,000,000,000 சுவாச நுண் அறைகளிலும் (அடுதிலுணிடீடி) காற்றுக்குப் பதில்,'அக்னியை' நிரப்புவது அவரவர் விருப்பம். ஆனால், மற்றவர்களை பாதிப்பது எந்தவகையில் நியாயம்?

இந்த நுண்ணறைகள்தான் பிராணவாயுவான ஆக்ஸிஜனை (Oxygen) 'இரத்தக்கடல்' வழியாக உடல் திசுக்களுக்கு எடுத்துச் செல்ல உதவும் துறைமுகங்கள்.

புகையின் சூடும், நிக்கோடினும் நுண்ணறைகளின் உட்தோலைப் புண்ணாக்கிவிடுகின்றன. புண்ணில் தொடர்ந்து 'புகைத் தாக்குதல்கள்' நடைபெற நடைபெற நுண்ணறைச் சுவர்கள் பொத்தலாகின்றன. கிழிந்து போகின்றன. மருத்துவர்கள் இந்தக் கொடூர நிலையின் வெளிப்பாட்டைத்தான் 'Emphysema' என்றழைக்கிறார்கள்.

portrait of Nithyananda

புகைபிடிக்க ஏதாவதொரு காரணம் சொல்லிக் கொண்டு, தம் நுரையீரலில் இருக்கும் 3,000,000,000 சுவாச நுண் அறைகளிலும் (அடுதிலுணிடீடி) காற்றுக்குப் பதில்,'அக்னியை' நிரப்புவது அவரவர் விருப்பம். ஆனால், மற்றவர்களை பாதிப்பது எந்தவகையில்

“தொடர்புகைத் தாக்குதல்கள்தான் ஒருவருக்குள் நுரையீரல் புற்றுநோயை உருவாக்குகின்றன,” என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள். (உணவுக்குழாய் மற்றும் வாய்ப்புற்று நோயையும்கூட இது உருவாக்குகிறதாம்!)

இதுபோன்ற மருத்துவ இரகசியங்களை ஒருமுறை நிட்டி, மிஸ்டர் குப்பனிடம் எடுத்துச் சொன்னவுடனேயே... “இவ்வளவு பாதகங்களா! இனி என் வாழ்நாளில் ஒருமுறைகூட புகைபிடிக்க மாட்டேன். இது சத்தியம்,” என்றார்.

அங்கிருந்த நிட்டியின் மகன் ஆச்சரியமாய்க் கேட்டார், “எப்படி அங்கிள்! உடனே இந்த பழக்கத்தை உங்களால் விடமுடிகிறது?”

மிஸ்டர் குப்பன், “அது ரொம்ப சுலபமடா!”

நிட்டி மகன், “அப்படியா!”

மிஸ்டர் குப்பன், “ஆமாம்! ஆமாம்!” இதற்கு முன் “குறைந்தது முப்பது முறையாவது புகைபிடிப்பதை நான் நிறுத்தியிருப்பேன்.” என்றார்

நீங்கள் புகைபிடித்தாலும், புகை பிடிக்குமிடத்தில் நீங்கள் இருந்தாலும், கார்பன்-டை-ஆக்ஸைடைக் கொடுத்து, ஆக்ஸிஜனைப் பண்டமாற்று செய்யும் துறைமுகங்களான நுண்ணறைகள், புகைத்தாக்குதலால் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

சுவாச நுண் அறைகளின் எண்ணிக்கை குறையும் போது ஆக்ஸிஜன் குறையும். (0_2) பண்டமாற்றும் அளவு குறையும்போது உடலில் கார்பன்-டை -ஆக்சைடு (0_2) அளவு அதிகமாகும். விளைவு, உடற் திசுக்களில் நச்சு அதிகமாகும்.

புகைத்தலின் பக்கவிளைவாக
உருவாகும் கார்பன்
மோனாக்சைடு (ஞிணி)
என்னும் நச்,” வாயு,
ஆக்ஸிஜனை எடுத்துச்
செல்லும் பேருந்துகளான ‘சி
வப்பணுக்களை'
பிரேக் டவுன்

புகைத்தலின் பக்கவிளைவாக
உருவாகும் கார்பன் மோனாக்சைடு (ஞிணி)
என்னும் நச்,” வாயு, ஆக்ஸிஜனை எடுத்துச்
செல்லும் பேருந்துகளான ‘சிவப்பணுக்களை’
பிரேக் டவுன் ஆக்கிவிடுகின்றன.
(சிவப்பணுவில் ஆக்ஸிஜன் அமரும்
“ஹீமோகுளோபின் எனும் இருக்கையை
கார்பன் மோனாக்ஸைடு ஆக்கிரமிப்பதன்
மூலமாக இந்த பிரேக்டவுன் நிகழ்கிறது).

இதன் விளைவு உடல் திசுக்கள் சோர்வடைய ஆரம்பிக்கின்றன. உடலில் மந்தத்தன்மையும், இறுக்கமும் குடியிருக்க ஆரம்பிக்கின்றன. புகையிலையின் பகுதிப்பொருட்கள் முதலில் ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்கின்றன. இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும்.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்களையும், புகையிலையின் பகுதிப்பொருட்கள் சுரக்கச் செய்கின்றன. விளைவு, இரத்த அழுத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிறது.

"அதிகரிக்கும் இரத்த அழுத்தமும், சுருக்கத்தால் அதிகரிக்கும் இதய தசையின் இரத்தகுழாய் அடைப்புகளும் சேர்ந்து, மாரடைப்புக்கான வாய்ப்புகளை ஏகத்துக்கும் அதிகரித்து விடுகின்றன," என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள்.

புகைப் பகுதிப்பொருட்கள் உடலுக்குள் பிராண சக்தி ஓட்டத்தைக்கூட வெகுவாக குறைத்து விடுகின்றன.

ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்த 'புகைப்பழக்கம்' புகை பிடிக்காத அப்பாவிகளையும் அதே அளவு பாதிக்கிறது என்பது பரிதாபத்திற்குரியது. மனிதாபிமான அடிப்படையில் உடனே யோசித்து உடனடி தீர்வு காணப்பட வேண்டியது.

புகைப் பிடித்தலின் பக்கவிளைவுகளிலிருந்து, புகைபிடிக்காதவர்கள்தான் முதலில் காப்பாற்றப்படவேண்டும்.

வீட்டிலேயே புகைப் பிடிப்பவர்கள் பாஸிவ் ஸ்மோகிங் மூலம் புற்றுநோயையையும், மாரடைப்பையும் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தருவது முடிவுக்கு வரவேண்டும்.

Sadhguru

ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்த
'புகைப்பழக்கம்' புகைபிடிக்காத
அப்பாவிகளையும் அதே அளவு பாதிக்கிறது
என்பது பரிதாபத்திற்குரியது. மனிதாபிமான
அடிப்படையில் உடனே யோசித்து உடனடி தீர்வு

பொதுக்கூட்டத்தில் புகைபிடித்துத் தன்னையும் கெடுத்து, மற்ற அப்பாவிகளையும் கெடுக்கும் கொடுஞ்செயல் முடிவுக்கு வரவேண்டும்.

முடிவுக்கு வருமா??? வீட்டின், நாட்டின் விடிவு உங்கள் கையில்.

குறைந்தபட்சம், புகைபிடிக்காதவர்கள், இனி எச்சரிக்கையாக இருப்பார்கள். நீங்கள் இருக்குமிடத்தில் மற்றவர்கள் புகைபிடிக்க அனுமதிக்காதீர்கள்.