தானமா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- தானங்கள் செய்வது நல்லதா? நல்லது. அடுத்தவர்களுக்கு!
- அடுத்தவர்களுக்கென்றால்? ஆம், தானம் செய்பவருக்கு அந்த தானங்கள் ஆபத்தானவை.
- ஆபத்தா! தானமளிக்கும்போது மனதளவில் நீங்கள் சிம்மாசனமிட்டிருப்பீர்கள். தானம் பெறுபவர் உங்களிடம் கையேந்துவார்.
இது அகங்காரத்தை வளர்க்கும் வாய்ப்புகள்தான் அதிகம். எச்சரிக்கை!
- அப்படியென்றால் உண்மையாய் உதவ நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
'சேவை' - மற்றவர்கள்
தானம் செய்யக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.
- தானம், சேவை. என்ன வேறுபாடு?
'தானம்'- நான் கொடுக்கிறேன் என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாகக் கொண்டது. ‘சேவை’- மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? எனும் பண்பை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது.
- சேவையின் மகத்துவம்?
சேவை செய்யும்போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களையுமறியாமல் எளிமைத்துவத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்.
இது அகங்காரத்தைக் கரைக்கும்.
- சேவையை யார் செய்யலாம்?
திமிர் பிடித்தவர்கூட ஒரு பத்து பைசாவை பிச்சைக்காரருக்குத் தூக்கியெறிந்துவிட்டு... “நான் தானம் செய்தேன்,” என காலர் தூக்கிவிட்டுப் பேசலாம்.
ஆனால் சேவை, சேவகனால் மட்டுமே சாத்தியம்.
பக்தர் கடவுளுக்கு,
சீடர் குருவுக்கு,
மனதளவில் கரமேந்தி, “என் சேவை ஏற்றுக் கொள்ளப்படுமா?” எனக் கரம்கூப்பி நிற்பது சேவை.
சேவை செய்பவரால், தம் முன்னிருக்கும் பிச்சைக்காரருக்குள்கூட தெய்வத்தைப் பார்க்க முடியும்.
சேவையால் மேலும் மேலும் உருகிப்போவார்.

சேவை செய்யும்போது மனதளவில் நீ
ங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள்.
உங்களையுமறியாமல் எளிமைத்துவத்தைக்
கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்.
- பாசத்தை ஏன் வேஷம் என்கிறீர்கள்?
கடுகளவுகூட வெறுப்பு இல்லாத ஓர் உறவை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?
முடியாது......
வெறுப்புகள் மனதின் ஒரு மூலையில் குடியிருக்க, மனிதன் இன்னொரு மூலையில் பாசம் குடியிருப்பதாகச் சொன்னால்... அது எப்படி நிஜமாகும்?
துர்வாசனையும், நறுமணமும் ஒன்றாய்க் கலந்து கிடைக்கும் வாசனையானது எப்படி நல்ல வாசனையாக இருக்க முடியும்?
- அன்பு என்பது?
வெறுப்புக் கலக்காத நேசம். எதிர்பார்ப்பு இல்லாத ஊக்கம்.
- காமம், காதல், அன்பு ஒப்பிடுங்கள்.
காமம் - ஹார்மோன்களின் குட்டிக் கலாட்டா
காதல் - உணர்ச்சிகளின் குட்டிக் கலாட்டா
அன்பு - உணர்வுகளின் சங்கமம்.
- சந்தர்ப்பவசத்திற்காகப் பொய் பேசினாலும் அது அநீதிதானே?
பொய் என்பதே பொய். இதில் அநீதி எனும் பேச்சுக்கு இடமேயில்லை.
- என்னது பொய்யே பொய்யா?
இன்பத்தின்
உச்சத்தை ஒருமுறைகூடத்
தொடாததாலும், தொடர்ந்து
தவறாகவே அதைத்
தொட முயற்சிப்பதாலும்
துன்பங்களில்
குடித்ததால் அடித்து சித்ரவதை
செய்யும் குடிகாரன், “என் மகன் உள்ளே
ஒளிந்திருக்கிறானா?” எனக் கேட்கும் போது,
“அவன் இங்கில்லை. முதலில், நீ
இங்கிருந்து இடத்தைக் காலிசெய்,” என்று
சொல்வதை அநீதி என்பதுதான் அநீதி.
இங்கு பொய்யே பொய்யாகிறது.
- இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன்...
மேற்படி சம்பவத்தையொத்த சம்பவங்களில் பேசப்படுவது அநீதியல்ல.
நல்லதிற்காக, எதிராளிக்குப் புரியும் பார்வையில் நீங்கள் பேசிய பேச்சு, அவ்வளவுதான்.
- உண்மை பற்றி...
மற்றவரை நோகடித்து நாசம் செய்யவல்ல ஒரு கிராம் பொய்கூடக் கலக்காத உண்மைப் பேச்சு
பொய்யைவிட மோசமானது... அது அநீதி.
இது பொய் பேச போடப்படும் தூபம் அல்ல.
நீதிநெறிகளால் நெறிக்கக்கூடாது - என உணர்த்தும் ஒரு முயற்சி.
- ஏன் மனிதர்கள் மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறார்கள்?
இன்பத்தின் உச்சத்தை ஒருமுறைகூடத் தொடாததாலும், தொடர்ந்து தவறாகவே அதைத் தொட முயற்சிப்பதாலும் துன்பங்களில் விழுகிறார்கள்.
- அதிலிருந்து வெளிவர வழிதான் என்ன?
ஞானிகள் சொல்லும் ஆனந்தத்தை ஒரே ஒருமுறையாவது சுவைத்தும் பாருங்கள். எல்லாம் சரியாகி விடும்.

காமம் - ஹார்மோன்களின் குட்டிக்க
லாட்டா
காதல் - உணச்சிகளின் குட்டிக்கலாட்டா
அன்பு - உணர்வுகளின் சங்கமம்.

'எனக்கு யோகமும் ஒத்துவராது. தியானமும் சுத்தப்படாது' என்பவர்களுக்கான தியானம் இது.
தெரிந்து கொண்டபின், என்ன? என்று ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
வேறொன்றுமில்லை.
நடக்கும்போது தியானம் செய்யுங்கள் என்பதுதான் அது.
ரோட்டில் நடக்கும் போதும், கடற்கரையில் நடக்கும் போதும் விழிப்புணர்வோடு இருங்கள்.
நடக்கும்போது, “நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருக்கின்றன. வலது பக்கத்தில் பூனை வந்து கொண்டிருக்கிறது. இடது பக்கத்தில் ஆலமரம் இருக்கிறது,” என்பதையெல்லாம் தாண்டி முழு விழிப்புணர்வோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
ஒவ்வொரு முறை பூமி மீது அடியெடுத்து வைக்கும்போதும், பாதங்கள் பூமியோடு உறவாடட்டும்.
அந்த நொடியிலிருந்து... .
பூமியை மிதித்து மிதித்து நடக்காமல் மதித்து மதித்து நடக்கத் தொடங்குவீர்கள்.
இது உங்கள் விழிப்புணர்வை அதிகப்படுத்தி உங்களை அருமையானவராக மாற்றும் தியானமாக அமையும்.
என் வயது 32, இளம் வயதில் செய்த ஒரு தவறு என்னை இன்றளவும் நிம்மதியற்றதாக்குகின்றது. பாவியான என்னைக் கடவுள் மன்னிப்பாரா? -ரோகினி, சென்னை.
கடவுள் மன்னிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.
உங்களை நீங்கள் மன்னித்து விட்டீர்களா? நீங்கள் உங்களை மன்னிக்காத வரை கடவுளே உங்களை மன்னித்தாலும், அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. செய்வதைவிட அந்தத் தவறையே மீண்டும் மீண்டும் மனதில் நினைத்துக்கொண்டிருப்பதுதான் பெரிய தவறு.
ஒவ்வொரு முறையும் நீங்கள் அந்தத் தவறை மனதில் ரீப்ளே (Replay) செய்யும்போது, அந்தத் தவறை மீண்டும் ஒருமுறை செய்வீர்கள்.
"கடவுள் மன்னிப்பாரா? கடவுள் மன்னிப்பாரா?" என சாக்குபோக்குச் சொல்லி, பழைய தவறை அசைபோட்டுச் சுகம் காணும் மனச்செயலுக்கு இன்றே முற்றுப்புள்ளி வையுங்கள். முதலில் உங்களை மன்னியுங்கள்.
கடவுள் உங்களை ஏற்கனவே மன்னித்து விட்டார்.