ஞானமடைவதுதான்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
காட்டுக்குள் வசிய சக்திகளைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்து கொண்டிருந்தார் அந்த முனிவர்.
சில சித்துக்களை கற்றுக் கொண்ட முனிவர் அதை வைத்து விளையாட ஆரம்பித்துவிட்டார்.
ஒருநாள், சாப்பிடுவதற்காக அவர் வைத்திருந்த உணவைக் காகம் ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
கண்விழித்துப் பார்த்த முனிவருக்குக் கோபம் தாளவில்லை.
"எவ்வளவு திமிர் இருந்தால் என் உணவில் வாய் வைப்பாய்," எனக் கோபங்கொண்டு, "எரிந்து சாம்பலாக," எனச் சொல்லி அந்தக் காகத்தை முறைத்துச் சபித்தார்.
அந்தக் கணமே காகம் எரிந்து சாம்பலாகியது!
அம்மா!
உணவு
இருக்கிறதா?
காகத்தின் மேல் வந்த கோபம்
தலைக்கேறியதால், அந்த உணவைச்
சாப்பிடாமலே எழுந்து ஊருக்குள் சென்றார்.
கோபத்தில் சாப்பிடாததால் கொஞ்ச நேரத்திலேயே முனிவருக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. அருகேயிருந்த வீட்டு வாசலை அடைந்து, "பவதி பிக்ஷாம் தேஹி," (அம்மா உணவு பிக்ஷை அளியுங்கள்) என சன்யாஸ மரபுப்படி பிக்ஷை கேட்டார்.
உள்ளேயிருந்த வீட்டுத் தலைவியின் குரல், "கொஞ்சம் பொறுத்திருப்பா," என வந்தது. முனிவர் பொறுமையிழந்து விட்டார்.
உடனே முனிவர் "அம்மா உணவு இருக்கிறதா, இல்லையா?" என்று கேட்டார்.
வீட்டுத்தலைவி, "இருக்கிறது. என் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்கிறேன். முடிந்ததும் வந்துவிடுகிறேன்," என்றாள்.
'அவ்வளவு நேரமா!' என யோசித்த முனிவர், 'நான் முனிவர் வந்திருக்கிறேன். என்னைக் கொஞ்சங்கூட மதிக்காமல் இருக்குமளவுக்கு திமிர் பிடித்த இந்தப் பெண்ணை சாம்பலாக்கிவிட்டால் என்ன?' என யோசித்து முடிக்கவும், வீட்டுத் தலைவி வெளியே வரவும் சரியாயிருந்து.
வீட்டுத்தலைவி முனிவரைப் பார்த்து "என்னை என்ன காகம் என்றா நினைத்தாய்?" எனக் கேட்டதும், முனிவர் நடுநடுங்கிப் போனார்.
"சித்துவேலைகள் பல தெரிந்த என்னால்கூட அடுத்தவர்களின் மனத்தைப் படிக்க முடியாது.
ஆனால், இந்த வீட்டுப் பெண்ணால் என் மன ஓட்டத்தைப் படிக்க முடிந்தது என்றால்... இவர் சாதாரண பெண்ணல்ல என அவரின் காலில் விழுந்து வணங்கினார்.

> ஆனந்தமயமான சக்திகளையும்,
> மக்கள் நன்றாக இருக்கட்டும் என்ற
> இனிமையான உணர்வுகளையும்
> தொடர்ந்து வெளியிடும் ஞானிகள்தான்
> பூமியைப் பாதுகாக்கும்
முனிவர், “தாயே நீ யார்?” எனக் கேட்டார்.
வீட்டுத் தலைவி, “நீ உன் மனத்தை வைத்து மற்ற பொருட்களை எரிக்கும் வித்தை கற்றிருக்கிறாய். நான் என் மனத்தையே எரிக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவள்,” எனச் சொன்னதும், முனிவருக்கு எல்லாம் புரிந்தது. மீண்டும் காலில் விழுந்து வணங்கினார்.
மனத்தையே எரித்தவர்தான் ஞானி.
அக்காலங்களில் ஞானிகள் சகஜமாக வாழ்ந்திருக்கிறார்கள். தான் ஞானி என்பதை உலகிற்குச் சொல்லாமலே வாழுமளவுக்கு ஞானிகள் பெருகியிருந்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று ஞானிகள் எப்போதோ பூக்கும் பூவாய் மாறிவிட்டார்கள். இது பூமிக்கு நல்லதல்ல.
ஆனந்தமயமான சக்திகளையும், மக்கள் நன்றாக இருக்கட்டும் என்ற இனிமையான உணர்வுகளையும் தொடர்ந்து வெளியிடும் ஞானிகள்தான் பூமியைப் பாதுகாக்கும் சக்திக் கேடயங்கள்.
ஞானிகளாகாமல், அறிவு பெருத்து, மனச்செருக்கு மிகுந்து வாழும் அந்த முனிவரைப் போன்ற மனிதர்கள் பூமிக்கே ஆபத்தானவர்கள்.
இது போன்ற அகங்காரம் மிகுந்தவர்கள், மக்களைக் கூட்டம் கூட்டமாக எரிக்கக்கூட தயங்கமாட்டார்கள்.
இவர்களிடமிருந்து தொடர்ந்து
வெளிப்படும் துர் சக்திகளும், கெட்ட
எண்ணங்களும் இயற்கை சீற்றங்களைக்கூட
உண்டாக்கும்.
இயற்கைத் தாயின் வயிற்றில் எட்டி
உதைப்பவர்கள், இது போன்ற சித்து வேலை
செய்பவர்கள்.
ஞானிகளாகாமல்,
அறிவு பெருத்து,
மனச்செருக்கு
மிகுந்து வாழும்
மனிதர்கள் பூமிக்கே
ஆபத்தானவர்கள்.
சித்து வேலை மட்டுமல்லாமல், அறிவை மட்டுமே பெருக்கிக் கொண்டே செல்லும் மனிதர்கள்கூட பூமித்தாய்க்குப் பங்கம் விளைவிப்பவர்களே!
"எங்கும் பொங்கும் இயற்கை சீற்றங்களைக் குறைக்கவும், பூமி சமநிலைக்கு வரவும், ஞானிகள் நிறைய உருவாக வேண்டும்," என்று கருத்தரங்கம் ஒன்றில் சொன்ன போது...
பார்வையாளரொருவர், "ஆம், சரியாகச் சொன்னீர்கள். நிறைய ஞானிகள் வரவேண்டும்," என்றார்.
"நிறைய வரவேண்டுமா?! எங்கிருந்து வருவார்கள்?
வானத்திலிருந்தா அந்த ஞானிகள் குதிப்பார்கள்!
உங்களுக்குள்ளிருந்துதான் அவர்கள் வரவேண்டும்."
"நீங்கள்தான் அந்த ஞானக் கூட்டம் எழுந்திருங்கள். எல்லாம் தயாராகி விட்டது. நீங்கள் ஞானமடைய வேண்டியது மட்டுமே மீதமிருக்கிறது" எனச் சொன்னேன்.

வானத்திலிருந்தா அந்த ஞானிகள்
குதிப்பார்கள்! உங்களுக்குள்ளிருந்துதான்
அவர்கள் வரவேண்டும். நீங்கள்தான் அந்த
ஞானக் கூட்டம் எழுந்திருங்கள். எல்லாம்
தயாராகி விட்டது.
சித்து வேலைகள் மனத்தைப் பாழாக்கும்.
பித்து வேலைகள் வாழ்வைப் பாழாக்கும்.
ஞானிகளாய் எழுந்து நிற்பதை விட்டு விட்டு, மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளும் சித்து வேலைகளுக்குச் சமம்.
மனத்துக்கே பித்துப் பிடிக்க வைக்கும் சித்து வேலையான தியானம், இன்றைய உலகின் அத்தியாவசிய தேவை.
இந்த விழிப்புணர்வை நீங்கள் பெறுவதும், மற்றவர்களைப் பெற வைப்பதும், மாபெரும் தியானங்கள்.
இதைச் செய்யுங்கள். இது எல்லோருக்கும் நல்லது.