எதிரிகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கடந்த 3000 வருடங்களில், 5000 யுத்தங்களைச் செய்து முடித்த ஜாம்பவான்கள் மனிதர்கள்.
இந்த உலகை எழுநூறு முறை அழிப்பதற்குத் தேவையான அணுகுண்டு களை உலக நாடுகள் உருவாக்கி வைத்திருக்கின்றன.
பல மாதங்களுக்கு முன் படித்த கணக்கெடுப்பில் எழுநூறு என்றிருந்தது. ஒருவேளை இன்று அது எண்ணூறு என உயர்ந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
'பாதுகாப்புக்காக! பாதுகாப்புக்காக!' என்று சொல்லிச் சொல்லியே கோடிக்கணக்கான பணத்தை எல்லா நாடுகளும் வருடா வருடம் செலவு செய்கின்றன.
“இவ்வளவும எதற்காக? யாருக்காக?
நமக்காக என்ற பெயரில் எதிரிகளுக்காக!”
எத்தனை புரட்சிகள், வெடித்திருக்கின்றன. மொத்த உலகையும் இந்த ஒற்றைப்புரட்சி திருத்திவிடும். இனி பொற்காலம்தான் என்ற நம்பிக்கையை எல்லாப் புரட்சிகளும் முதல் சில வருடங்களுக்குத்தான் தருகின்றன.
'பாதுகாப்புக்காக!
பாதுகாப்புக்காக!' என்று
சொல்லிச் சொல்லியே
கோடிக்கணக்கான பணத்தை
எல்லா நாடுகளும் வருடா
வருடம் செலவு செய்கின்றன.
இந்த எதிரிகள் அழிந்தால், இந்த எதிரான செயல்கள் முடிவுக்கு வந்தால், வாழ்வு சுபிட்சமாகும் என்ற கனவு கனவாகவே முடிந்து போகிறது... எதிரிகளும், எதிரான செயல்களும் அழிந்த பின்னும், புரட்சி ஜெயித்த பின்னும்!
புரட்சிகள் புரட்சிகரமானது. அது புரட்சிக்காலம் முடியும் வரையில் மட்டுமே. எதிரிகளையும், எதிரானதையும் அழித்துத்தான் எல்லாப் புரட்சிகளும் ஜெயித்திருக்கின்றன. எதிரானவைகளை அழித்து, புரட்சிகரமாக ஜெயித்ததும் அமைதிமட்டும் ஒரு விலையுயர்ந்த கனவாக மட்டுமே இருக்கிறதே...
அப்படியென்றால்...
அமைதியின்மைக்குக் காரணம் எதிரிகளா, புரட்சியா இல்லை வேறேதுமா...
பதில் காணுங்கள்...
திருத்துபவர்கள்தான் முதலில் திருந்த வேண்டும். மாற்றம் செய்ய நினைப்பவர்கள்தான் முதலில் மாறவேண்டும் என்ற ஞான மொழியை சொல்லும் தாவோ ஞானி விரும்பிக் கூறும் கதை ஒன்று...
பயந்த சுபாவமுள்ள மாணவனொருவன் நடுங்கியபடியே ஆசிரியரிடம் தம் திருத்தப்பட்ட விடைத்தாளைக் காட்டிக் கேட்டார், “என் மதிப்பெண் குறித்த இடத்திற்கு அருகே ஏதோ எழுதியிருக்கிறீர்கள். என்னால் அதைப் படிக்க முடியவில்லை. தயவு செய்து அது என்ன என்று சொல்லுங்கள்.”
“அதுவா உன்னுடைய எழுத்து மற்றவர் படிக்கும்போது புரியும் வகையில் தெளிவாக இருக்க வேண்டும்,” என்று எழுதியிருக்கிறேன். மடையா இதைக் கூடவா உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்று மாணவனைத் திருத்த முயற்சித்தாராம்.

திருத்துபவர்கள்தான் முதலில்
திருந்த வேண்டும். மாற்றம் செய்ய
நினைப்பவர்கள்தான் முதலில்
மாறவேண்டும்.
அமைதியின்மைக்கு மூலகாரணம் எங்கோ இருக்க, அதை மாற்றினால் சரியாகும், இதைத் திருத்தினால் சரியாகும் என ஆரம்பித்ததின் விளைவே இவ்வளவு போர்கள், புரட்சிகள், பண விரயங்கள்.
மூலகாரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். சரிசெய்யப்பட வேண்டும். அதுவரை எதிரிகள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். அமைதி எழுத்தளவில் மட்டுமே உயிர்வாழும்.
எதிரிகளும், எதிரானவைகளும் பிரச்சினைகளுக்குக் காரணமல்ல.
"இவன் எதிரி! இவள் எதிரி. இது எதிரானது," என சுட்டிக்காட்டும் மனக்கோளாறுதான் மூலகாரணம். மூலகாரணம் அரசனின் மனதில் இருந்தால், நாடுகளுக்கிடையே போர். மனித மனதிலிருந்தால், உறவுகளுக்கிடையே சண்டை சச்சரவு.
குறைகளையே தேடித்தேடிக் குற்றம் காணும் மன அமைப்பு (Mental set-up) மாறாத வரை சச்சரவுகளும் போர்களும் தொடர்ந்தபடிதான் இருக்கும்.
அமைதி புரட்சிவேகத்தில் தனி மனிதனுள் நிகழ வேண்டும். தனி மனிதப் புரட்சியே உலகைக் காக்கும். இல்லையேல் சர்வநாசம் நிச்சயம்.
(ஜணஞீடிதிடீஞீதச்டு ணூனுதிணிதேணடிணிண (ணினு) ஞ்பேணிஞர்டு ண்தடிஞிடிஞீஞூ, குணி ட்னுஞீடீணாச்ணூது டிணணூனுணண்டிதிநுடூதூ)
"உதிரமே கொடுத்தேன் எதிரிகளுக்காக. என்ன கொடுத்தேன் என் உறவுகளுக்குப் பிரிவுத் துயர் தவிர?" என்ற சாமுராய் வீரரின் சோக வரிகள் மனிதரின் சிந்தனைப் போக்கைத் திருகிப்பார்க்கும் ஆற்றல் பெற்றது.
"எதிரிகளுக்காக இரத்தம் தந்தேன்," என்ற வரி சாதாரண மனிதரைத் தாண்டிக் கொஞ்சம் ஆழமாக யோசித்திருக்கிறார் அந்த சாமுராய் வீரர் என்பதை உணர்த்துகிறது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாமும் அதே செயல்களைச் செய்கிறோம் என்று புரியும்.
எதிரிகளை நினைத்துக் கோபப்பட்டு நம் நேரத்தை வீணாக்குகிறோம். மனதின்
எதிரிகளும்,
எதிரானவைகளும் பிரச்சி
னைகளுக்குக் காரணமல்ல.
""இவன் எதிரி! இவள் எதிரி.
இது எதிரானது," என
சுட்டிக்காட்டும்
மனக்கோளாறுதான்
மூலகாரணம்.
கோபம் எனும் ஓட்டை வழியாக சக்தியை வீணடிக்கிறோம். மன நிம்மதியைத் துடைத்தெறிகிறோம்.
எதிரானவைகளையும், எதிரிகளையும் நினைத்துப் பொங்கியெழும் போதெல்லாம் சக்தி விரயமாகிறது.
அதிக சக்தி விரயம், ஆரோக்கிய குறைவு. மனத்துக்கும் கேடு. இதன் பக்க விளைவு - அந்த நேரத்தில் உங்களோடு இருப்பவரின் சந்தோஷம் தடுக்கப்படுகிறது. அவரோடு சந்தோஷமாகச் சிரித்து இன்னும்கொஞ்சம் நெருங்கக் கிடைத்த காலம் கோபத்தில் கரைந்துபோயிருக்கும்!
கோபத்தால் பொங்கி, எதிரிகளுக்காகச் சக்தியை வீணடிக்கும்போது, உறவுகளின் நினைவில், உறவுகளின் எரிச்சலான முகத்தையும் உங்களோடு கழித்த கலவர நிமிடங்களையும்தான் பதிய வைக்கிறீர்கள். இனி உங்களைப் பற்றிய எதிர்மறை நினைவுகள் அதிகமாகும்.
இது தேவைதானா, நியாயம்தானா. தீவிரமாக யோசித்துத் தீர்வுகாணப்பட வேண்டிய ஒன்று இது என்பது புரிந்தால், புது வாழ்வு காத்திருக்கிறது உங்களுக்காக.

எதிரானவைகளையும், எதிரிகளையும்
நினைத்துப் பொங்கியெழும்
போதெல்லாம்
சக்தி விரயமாகிறது. எதிரிகளை நினைத்துக்
அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டி விட்டேன் என பெருமிதத்தோடு முகுந்த் சொன்னார்.
"என்ன அது?" எனக் கேட்ட நண்பனிடம், கண் சிமிட்டி முகுந்த் சொன்னார் "அந்தக் குப்பன் அடிக்கடி என் முதுகில் தட்டிக் கொண்டேயிருக்கிறான். இன்று மட்டும் தட்டினால் இன்றோடு, மகன் ஒழிந்தான்!"
"அதுதெப்படி ஒழிவான்," எனக் கேட்ட நண்பரிடம், "என் முதுகில் பத்து வெங்காய வெடிகளைக் கட்டி வைத்திருக்கிறேன்," என்றார்.
சிலவற்றை எதிரானதாகவும், சிலரை எதிரிகளாகவும் காட்டும் குறை காணும் மனம் சரியாகும் வரை முகுந்தனின் செயல் போலத்தான் நம் செயல் இருக்கும். எதிரிகளை நோகடிக்க முயற்சித்து, நாம் நொந்து போயிருப்போம்.
மாறவேண்டியது எதிரி அல்ல. குறைதேடும் குணம். குறையையே நிறைய தேடுபவரா நீங்கள்? உங்களோடு நீங்களே ஒரு கலந்தாலோசனை செய்யுங்கள், குண அமைப்பைச் சீர்த்திருத்துங்கள், சீர்மிகு திருத்தங்கள் உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்வதைக் காண்பீர்கள்.