இறைவன் அளித்த
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அமெரிக்க தியான சொற்பொழிவு ஒன்றில், மன அழுத்தம் பற்றிய உங்களின் அபிப்ராயம் என்ன? என பிராங் எனும் பக்தர் கேட்டபோது...
"45 வயதைத் தாண்டிய பின்னும் மன அழுத்தம் (Depression) வரவில்லை என்றால், வாழ்ந்து முடித்த வாழ்வில் ஏதோ தவறு இருக்கிறது. என்று அர்த்தம்," எனச் சொன்னேன்.
கேள்வி கேட்டவர் திடுகிட்டவராய் "என்ன சொல்கிறீர்கள்?!" எனக் கேட்டார்.
"இன்னொரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், சாதித்த பின் வரும் மன அழுத்தம் என்பது இறைவன் தரும் பரிசு,"
"மன அழுத்தம் இறைவன் தரும் பரிசா?"
சாதித்த பின் வரும்
மன அழுத்தம்
என்பது
"ஆம்,"
"எப்படி?"
"அர்ஜுனனுக்கு வந்த மன அழுத்தம்தான்
'பகவத் கீதை,' எனும் மகா உபதேசத்தைப்
பெறும் பாக்கியத்தை அர்ஜுனனுக்கு தந்தது."
'அர்ஜுன விஷாத யோகம்' எனும் தலைப்பின் அர்த்தம் “அர்ஜுனன் முழு மன அழுத்தத்தில் இருந்தார்,” என்பதே.
வாழ்வில் பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் பார்த்தபின்தான், அர்ஜுனனுக்கு மன அழுத்தம் வந்தது.
இதை விடுங்கள், நம் புத்தர் வீட்டை விட்டு வெளியேறியது ஏன்?
இதற்கு மேல் வெளியுலக வாழ்க்கையிலிருந்து அனுபவித்துப் பார்க்க எதுவும் இல்லை. அதனால் ஆனந்தத்தை, பூரணத்துவத்துவத்தை அடைய முடியாது என அவருக்குள் நிகழ்ந்த தெளிவால்தான் கௌதம சித்தார்த்தருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால் வீட்டை விட்டு வெளியேறினார். ஞானமடைந்தார்.
மாயையிலிருந்து விடுபட ஆரம்பிக்கும் சாதனையாளருக்கு வரும் முதல் அறிகுறி மன அழுத்தம்.
இதிலிருந்து விடுபட ஆரம்பித்தவரால்தான் ஆனந்தத்தின் மகிமையையும் ஞானத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும், தியானத்தில் ஆழ்ந்து மூழ்க முடியும்,” எனச் சொன்னோம்.
உடனே அந்த மருத்துவர், “அப்படியென்றால் சாதாரண மனிதனால் தியானம் செய்ய முடியாதா?”
“தாகமிருப்பவர் நீரை அருந்தும் விதத்திற்கும், சாதாரண மனிதர் நீரை அருந்தும் விதத்திற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.”
“புரியவில்லையே...,”

மாயையிலிருந்து விடுபட ஆரம்பிக்கும்
சாதனையாளருக்கு வரும் முதல் அறிகுறி
மன அழுத்தம்.
“உலகின் எல்லா சௌகரியங்களுக்கும் ஓர் எல்லை உண்டு. அதற்கு மேல் அவை அதிருப்தியை உண்டு பண்ணும். சலிப்புத் தட்டிவிடும். அப்போது ஏற்படும் தாகம் புதிதானது. நிரந்தரமான நிம்மதிக்காகவும், ஆனந்தத்திற்காகவும் ஏங்கும். அப்போது மனதிற்குள் உருவாகும் தாகம் புனிதமானது. இந்த தாகம்தான் ‘மன அழுத்தம்’ இதுதான் இறைவனளிக்கும் வரம்,” எனச் சொல்லி முடித்தோம்.
சாதாரண மனிதருக்கு தியானம் ஒரு மருந்து. ஆனால், ஆண்டு அனுபவித்து எல்லாம் பார்த்தவருக்குத்தான் தியானம் ஒரு விருந்து.
தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்வது எளிது. அப்படி வாழும் மனிதருக்கு மன அழுத்தம் என்ற ஒன்றே வராது. இப்படி வாழ்வது ஒரு மாபெரும் போலித்தனம். அப்படியென்றால், எருமை மாட்டைக் கூடத்தான் கும்பிடலாம். அது கூடத்தான் யாருக்கும் தொந்தரவு தராமல் நிம்மதியாய், அமைதியாய் இருக்கிறது.
எப்படி இந்த நிம்மதியும், அமைதியும் போலியோ, அதேபோல்தான் அடி க்கடி கூடிச் சிரிக்கும் சாதாரண மனிதரின் சிரிப்பலைகளும் கொண்டாட்டங்களும்.
நிஜ சிரிப்பும், நிஜ கொண்டாட்டமும் முழுக்க முழுக்க வேறானது. அது புத்த நிலை.
சாதாரண மனிதனின் சிரிப்பும், கொண்டாட்டமும் கௌதம சித்தார்த்தன் நிலை.
இந்த நிலையிலிருந்து உச்சியைத் தொட்டால்தான், புத்த நிலை அடைய

உலகின் எல்லா சௌகரியங்களுக்கும் ஓர்
எல்லை உண்டு. அதற்கு மேல் அவை
அதிருப்தியை உண்டு பண்ணும். சலிப்புத்
தட்டிவிடும்.
முடியும். இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த நிலையை முழுதாய் விட்டால்கூட புத்த நிலையை அடைய முடியும்.
ஆனால், இரண்டையும் செய்யாமல் வாழ்க்கையையும், இப்பிறவியையும் வீணடிப்பது உயிருக்கு செய்யும் துரோகம்.
ஈஞுண்ணூஞுண்டீணிண ணினிஞூ ண்தஞிஞிஞுண்ண் (சாதனையின் வேதனை) எனும் தலைப்பில் நடந்த தியான சத்சங்கத்தின் முடிவில் அங்கு வந்திருந்த அன்பரொருவர்...,
“இன்னும் சாதிக்கவே ஆரம்பிக்காதவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.
“இந்த நொடியிலிருந்து முழுமூச்சாய் சாதிக்க ஆரம்பியுங்கள்,”
“எதற்கு, பிறகு தெரிந்தே மன அழுத்தத்தில் விழவா?”
“இல்லை, “மன அழுத்தத்தைத் தாண்டிக் குதிக்க.”
“ புரியவில்லை.!’
“சாதனை, அதிக உலக சௌகரியங்கள் ஆகிய எல்லாம் உங்களுடைய விழிப்புணர்வை மீறி உங்களை ஆக்கிரமிக்கும் போதுதான் அவை ஒரு வெறியாக உருவெடுக்கின்றன.
வெறி ஒருவருக்குள் கிளப்பிவிட்ட எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாதபோதுதான் சலிப்புத் தட்டுகிறது. மன அழுத்தம் உருவாகிறது.
விழிப்புணர்வோடு சாதனையை
அணுகினால், அது ஒரு விளையாட்டாக
மாறிவிடும். சாதனை வேதனையாக மாறாது.
வெறி ஒருவருக்குள்
கிளப்பிவிட்ட
எதிர்பார்ப்புகள்
பூர்த்தியாகாதபோதுதான்
சலிப்புத்
தட்டுகிறது. மன
அழுத்தம் உருவாகிறது.
விழிப்புணர்வு இல்லாத மனிதருக்குத்தான் சாதனை ஒரு சோதனை.
விழிப்புணர்வுள்ள மனிதருக்கு சாதனை ஒரு பரிசோதனை. அவ்வளவே.
மன அழுத்தம் வந்தவர்கள் கவலைப்படாதீர்கள். அது உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சி. மன அழுத்தம் வராதவர்கள் உஷாராகுங்கள். அதற்குள் நுழையாமலே தாண்டிவிடலாம்.
எது எப்படியானாலும், நீங்கள் இருக்கும் நிலை மாறக்கூடியதே. மாற்றப்படக் கூடியதே.
எந்த நிலையில் இருந்தாலும், உங்களால் ஆனந்தத்திற்குள் நுழைய முடியும்.
இந்த வரிகளை ஆழமாகத் தியானியுங்கள்.
வாழ்வும், வாழும் விதமும் ஆகிய இரண்டும் புதுப் பரிமாணம் எடுக்கும் நிஜசாதனை உதயமாகும்.