KAILASA Library/மனதைத் திற/மூன்றாவதுSign in
மனதைத் திற

மூன்றாவது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • திபெத்தில், நெற்றி மத்தியில், ஆணி அடிப்பதைப் போல ஒருவகைக் கட்டையை அடிப்பதை ஒரு தவமாக கடைப்பிடிக்கிறார்களாமே... . அது உண்மையா?

மூன்றாவது கண்ணிற்கான சூட்சுமமான தியான முறைகளில் அதுவும் ஒன்று.

  • மூன்றாவது கண் இருப்பது நிஜமா?

நிஜம் என்பதால்தான் உடலின் மிக முக்கியமான ரகசிய பகுதிகளில் ஒன்றான இதற்கு மட்டும் நூற்றுக் கணக்கான தியான முறைகள் இருக்கின்றன.

  • அதென்ன உடலின் ரகசியமான பகுதிகள்? சக்கரங்கள் என்றால் என்ன? என்று தியான முகாம் ஒன்றில் பக்தர் ஒருவர் கேட்டார்.

"மனிதனுடைய உடல், மனம், உயிர், ஆகிய மூன்றும் உடலுக்குள் ரகசியமாய் சந்தித்துக் கொள்ளும் இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றழைக்கிறோம். இதுவே உடலின் ரகசிய பகுதிகள் ஆகும்" எனச் சொன்னேன்.

மனிதனுடைய உடல், மனம்,
உயிர், ஆகிய மூன்றும்
உடலுக்குள் ரகசியமாய்
சந்தித்துக் கொள்ளும்
இடங்களைத்தான் சக்கரங்கள்
அல்லது சக்தி மையங்கள்
என்றழைக்கிறோம்.

  • இப்படி எத்தனை ரகசியமான பகுதிகள் இருக்கின்றன?

நிறைய இருக்கின்றன.

அதில் பிரதானமானவை ஏழு

மூன்றாவது கண் எனக் குறிப்பிடப்படுவது, ஆறாவது ரகசியப்பகுதி. அதன் பெயர் ஆக்ஞா சக்கரம்.

  • மூன்றாவது கண் திறந்தால்... அவர்கள் சொல்வது எல்லாம் நிகழுமாமே? அது எப்படிச் சாத்தியம்?

இரண்டு விஷயம்

1. மூன்றாவது கண் திறந்தவர் சொல்வதெல்லாம் நிகழும்.

2. மூன்றாவது கண் திறந்தவர் நிகழப்போவதை மட்டுமே சொல்வார்.

  • புரியலையே!

முக்காலமும் உணர்ந்தவர் எனப் பெரியோர் சொல்லக் கேள்விபட்டிருக்கிறீர்களா?

ம்ம்.. கேள்விப்பட்டிருக்கிறேன்.

சாதாரண மனிதர்களுக்கு நிகழ்காலம், இறந்தகாலம் மட்டுமே தெரியும்.

உகூக போன்ற சிறப்பு சக்திகளைப் பெற்றவர்களால் எதிர்காலத்தின் சில சிதறல்களைக் கண்டு சொல்ல முடியும்.

portrait of Nithyananda

மூன்றாவது கண் திறந்தவர்
நிகழப்போவதை மட்டுமே
சொல்வார்.

ஏதூரணீணணிணாடிண்ட் மூலம் சென்ற பிறவி பற்றிகூடச் சொல்ல முடியும்.

ESP, ஏதூரணீணணிணாடிண்ட், ஞாதுண்ட்த்துணூடிண்ட் போன்ற எல்லாமே நிகழ்வது இந்த மூன்றாவது கண் எனப்படும் ஆக்ஞா சக்கரத்தின் அபூர்வ ச க்திகளால்தான் சாத்தியமாகிறது.

மூன்றாவது கண் திறந்து கொள்ளும்போது ஆக்ஞா சக்கரம் முழுமையாக விழிப்படைந்து விடும். முழுச்சக்தியும் கிடைத்துவிடும்.

அப்போது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றையுமே உங்களால் தெளிவாய் காண முடியும்.

  • முக்காலத்தையும், தனித்தனியாய்க் காண முடியுமா?

தனித்தனியாய் அல்ல, ஒன்றாகவே காண முடியும்.

  • வாரநாசி என்பது மூன்றாவது கண்ணைக் குறிக்கும் ஞானச் சொல்தான் என ஓரிடத்தில் சொல்லியிருக்கிறீர்களே? அதுபற்றி

வாரநாசியில் இறந்தால் முக்தி எனச் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அது புவியியல் ரீதியான இடத்தை மட்டும் குறிப்பதல்ல. வாரநாசி பல ஞானிகளை உள்ளடக்கிய புனித ஸ்தலம் என்பதும், அங்கு உயிர் வாழ்வதும், விடுவதும் விழிப்புணர்வை அதிகரிக்கும் என்பதும் நிஜம்தான்.

ஆனால் வாரநாசி என்றால்,வார + நாசி. வார என்றால் புருவ மத்தி, நாசி என்றால் மூக்கு.

வாரநாசி என்றால்
புருவ மத்தியும், மூக்கும்
சந்திக்கும் இடம் என்று
அர்த்தம். இந்த இடம்தான்
ஆக்ஞா
சக்கரத்தின் இருப்பிடம்.
இதன் வழியாய் உயிரை
அதாவது புருவ மத்தியும், மூக்கும்
சந்திக்கும் இடம் என்று அர்த்தம். இந்த
இடம்தான் ஆக்ஞா சக்கரத்தின் இருப்பிடம்.
இதன் வழியாய் உயிரை விடுவதுதான்
முக்தியைத் தரும்.

  • எல்லோரைப்போலவே வாழும் எனக் குக்கூட இந்த மூன்றாவது கண் திறக்க வாய்ப்பு உண்டா? உங்களைப் போலவே எல்லோருக்கும் அந்தத் தகுதி உண்டு.

✦ அன்றாட வாழ்க்கையில் அல்லல்படும் மனிதக் கூட்டத்திற்கும், ஞானக் கூட்டத்தின் மூன்றாம் கண்ணிற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

ஞானிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அந்த மூன்றாவது கண் இருக்கிறது.

ஆழ்ந்த தியான நிலையால் அவர்கள் அதைத் திறந்திருக்கிறார்கள். நீங்கள் இன்னும் உங்களின் மூன்றாம் கண்ணை இறுக மூடி இருக்கிறீர்கள். வித்தியாசம் அவ்வளவுதான்.

மூடியிருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் உங்களுடைய விழிப்புணர்வு பாயும் போதெல்லாம் புத்திசாலித்தனமானது விழித்துக் கொள்ளும்.

சாதாரணமாக, நினைவை அங்கு நிலை நிறுத்தினால் கூட, மனிதனின் புத்திசாலித்தனமானது அருமையாய் வேலை செய்யும்.

அதனால்தான் ஆக்ஞா சக்கரம் இருக்குமிடத்தில் குங்குமம் வைப்பது, சந்தனம் வைப்பது, தீபத்தைத் தரிசனம் செய்வது, தெய்வ விக்ரகங்களை உற்று நோக்குவது போன்ற சடங்குகளை ரிஷிகள் உருவாக்கினார்கள்.

மனிதரின் மூன்றாவது கண்ணில், அவரையுமறியாமல் நிலை நிறுத்தும் தியான முறைகள்தான் மேலே நீங்கள் படித்த சடங்குகள்.

அன்றாட வாழ்க்கையை நடத்தத் தேவையான புத்திசாலித்தனத்தை இயக்கிக்கொள்வதற்காகத்தான் இந்தத் தியான முறைகளை தொழில் தொடங்கும் முன் செய்யும் சடங்குகளாக வடிவமைத்து வைத்தனர்.

portrait

மூடியிருக்கும் ஆக்ஞா சக்கரத்தில்
உங்களுடைய விழிப்புணர்வு
பாயும் போதெல்லாம்
புத்திசாலித்தனமானது விழித்துக்

அப்படியென்றால் சடங்குகள் என்பவை மூடப்பழக்கவழக்கங்கள் இல்லையா?

சடங்குகள் வெறும் மூடப்பழக்கவழக்கங்கள் அல்ல. அவை மூடி பழக்கவழக்கங்கள்.

மூடி பழக்கவழக்கங்கள் என்றால்...

முகத்தை மூடியிருக்கும் சிப்பியைப்போல், சிறுசிறு தியானங்களை தன்னுள்ளே மூடி வைத்து கொண்டிருக்கும் தியான முறைகள்தான் சடங்காச்சாரியங்கள்.

தியானங்களை மூடி மூடி பாமரர் வரை அந்தத் தியானங்களைக் காலங்காலமாக எடுத்துச் சென்று சேர்க்கும் சடங்காச்சாரியங்கள், தியான மூடி பழக்கவழக்கங்கள். மூடப்பழக்க வழக்கங்கள் அல்ல.

ஒவ்வொரு சடங்கும் உடல் மன உயிரின் ஏதோ ஒரு பகுதியில் ஆரோக்கியத்தையோ அல்லது ஆனந்தத்தையோ ஏற்படுத்தும் ஞான நோக்கில் உருவாக்கப் பட்டவையே. அவை ஒவ்வொன்றும் நல்ல தியானங்களே.

மூன்றாவது கண் இருப்பதை மருத்துவ ரீதியாக நிரூபிக்க முடியுமா? அது மிகவும் சூட்சுமமானது. கருவிகளால் கண்டுபிடிக்க முடியாது. விழிப்புணர்வால் மட்டுமே கண்டுபிடிக்க, கண்டு கொள்ள முடியும்.

உடலின் சக்தி செறிவு மிகுந்த பகுதி இந்த ஆக்ஞா சக்கரம். அதன் சக்தி

portrait of spiritual master

ஒவ்வொரு சடங்கும் உடல் மன
உயிரின் ஏதோ ஒரு பகுதியில்
ஆரோக்கியத்தையோ அல்லது
ஆனந்தத்தையோ ஏற்படுத்தும் ஞான

வெளிப்பாடாகத்தான் உடலையே ஆட்டிப்படைக்கும் சுரப்பிகளின் அரசனாக கடிணதணச்சைதூா ஞ்சேணஸ்ரீ (ஒடினஞ் ணிரூா ஞ்சேணஸ்ரீண்) அங்கே இருக்கிறது

மருத்துவத்துறைக் குறிப்பிடும் மூளையின் புத்திசாலித்தனத்திற்குக் காரணமான மீலியல்ஃப்ரான்டல் லோப் (ஞூதுண்டிச்டு ஞாணுாணிணணாச்டு டூணிருது) எனும் பகுதியும் ஆக்ஞா ச க்கரப்பகுதியில்தான் இருக்கிறது.

புத்திசாலித்தனம், விழிப்புணர்வு ஆகியவற்றின் உடல் ரீதியான தடயம் வரை மருத்துவ அறிவியல் நிரூபித்திருக்கிறது. ஆக்ஞா சக்கரத்தின் வெளிப்பாடுகளுக்கான நிரூபணங்கள் பல கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.

கடைசியாக சில வார்த்தைகளை சுய அனுபவத்திலிருந்து சொல்லவேண்டுமானால்... எந்தக் காலத்திலும் ஆக்ஞா சக்கரத்தை கருவிகளால் நிரூபிக்க முடியாது.

அதை உணர முடியும். பொது நிரூபணம் சாத்தியமில்லை. தனி நிரூபணமே சாத்தியம். அதிலும் அதை உணர்வது முழு விழிப்புணர்வால் மட்டுமே சாத்தியம்.