7. யந்திர தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
குணமளிக்கும் யந்திரத்தி-ருந்து
அதன் முழுமையான பயனைப்
பெற ஒரு தியானம்.
எப்போதும் பரபரப்பாக
இருப்பவர்கள் கூட இந்த
தியானத்தைச் செய்யலாம்.
அவ்வளவு எளிமையானது. இந்த
தியானத்தை முழுமையாகச்
செய்ய 11 நிமிடங்கள் போதும்.
கண்களை மூடித்தளர்வாக அமர்ந்து கொள்ளுங்கள்.
முதுகெலும்பு, கழுத்து, தலை
மூன்றும் ஒரே நேர்க்கோட்டில்
இருக்குமாறு நேராக அமர்ந்து
கொள்ளுங்கள்.
தியான முறை
குணமளிக்கும் யந்திரத்தை (Healing Yantra) மனக்கண்ணிற்குக் கொண்டு வாருங்கள்.
ஒரு நிமிடம் வரை யந்திரத்தை மனக்கண்ணில் வைத்திருங்கள்.
ஒரு நிமிடம் கழித்து "சிகிச்சையளிக்கப்பட வேண்டிய சக்கரத்தில் குணமளிக்கும் யந்திரத்தை பாவனை நினைப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தால், ஆழ்ந்து கற்பனை செய்து கொள்ளுங்கள்.
சில நாட்கள் நீங்கள் நினைத்த வினாடியில் சிகிச்சையளிக்கப்பட வேண்டிய சக்கரத்தில் யந்திர சக்தியை வெளியிடப்படுவதையும், அந்த சக்தி தொடர்ந்து உடல் முழுவதும் பரவுவதையும் அனுபவமாக உணர்வீர்கள்.
சிகிச்சையளிக்கப்பட வேண்டிய சக்கரத்தை தெரிந்து கொள்ள யந்திர தியான சிகிச்சை அட்டவணையைப் பாருங்கள்!
10 நிமிடம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.
தியானத்தின் போது இனிமையான உணர்வோடும், புன்சிரிப்போடும் முழுமையாக ஈடுபடுங்கள்.
முழு சிரத்தையோடு ஈடுபடுபவர்கள் நிச்சயம் முழுப் பலனைப் பெறுவார்கள்.
8. யந்திர தியான சிகிச்சை வழிகாட்டி
சக்கரங்கள் என்றால் என்ன?
நமது உடலில் ஏழு இடங்களில் சக்தி (ENERGY) கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. அந்தச் சக்கரங்களின் தன்மையைப் பொறுத்தே உடல் நலமும், மனநலமும் அமைகிறது. இந்த சக்தி மையங்களில் (ENERGY CENTERS) இருக்கும் எதிர் மறை சக்தியை (NEGATIVE ENERGY) நீக்கி நேர்மறை சக்தியை (POSITIVE ENERGY) உருவாக்கினால் அந்தந்த சக்கரம் சம்பந்தப்பட்ட உடல், மனநலப் பிரச்சனைகள் நிச்சயம் சரியாகும்.
7 சக்கரங்களின் இடத்தைத் தெரிந்து கொள்ள, பிற்சேர்க்கை - 1 ஐப் பார்க்கவும்.
வியாதி இருப்பவர்கள் எந்தெந்த சக்கரத்தில் யந்திர தியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள,
ஓர் எளிய அட்டவணை பிற்சேர்க்கை - II ஐப் பார்க்கவும்.
சிகிச்சை சிறப்பாக நடைபெற,
பிற்சேர்க்கை - III ஐப் பார்க்கவும்.
பொதுவாகப் பலரால் கேட்கப்பட்ட கேள்விகள்
பிற்சேர்க்கை - IV ஐப் பார்க்கவும்.
பிற்சேர்க்கை - V
சக்கரங்கள் - சக்தி மையங்கள்
சின்மயானந்த தியானம் பற்றிதெரிந்து கொள்ள, பிற்சேர்க்கை - I(A)ப் பார்க்கவும்.