KAILASA Library/யந்திர தியானம்/1. யந்திரம்! மந்திரம்!Sign in
யந்திர தியானம்

1. யந்திரம்! மந்திரம்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

யந்திரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன் பிரபஞ்ச சக்தி (Cosmic energy) பற்றியும், அதன் பூரண வெளிப்பாடான ஞானகுருவைப் (Enlightened master) பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக his [?] ஆகாஷம் (Ether) என்ற சக்தி மட்டுமே பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கின்றது. ஆகாஷம் என்ற மூலசக்தியின் வெளிப்பாடே உலகம், நட்சத்திரம், பால்வெளித்திரள் எல்லாம். ஆகாஷம் என்ற ஒரு மூலசக்தியி-ருந்து வெளிப்பட்டதுதான் ஐம்பூதங்கள் (Five Elements). அவை ஆகாஷம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகியனவாகும், இந்த ஐம்பூதங்களின் கலவையே மலைகள், மரங்கள், மற்ற உயிரினங்கள், மனிதன் எல்லாம்.

ஒவ்வொரு செல்-லும், ஒவ்வொரு அணுவிலும் ‘பிரபஞ்ச ரகசியம்’ அடங்கியிருக்கிறது. இந்த பிரபஞ்ச ரகசியத்தை அனுபவப் பூர்வமாக உணர்ந்து தெளிந்தவர்கள்தான் ஞானிகள்.

ஞானிகள், தாம் உணர்ந்த உண்மையையும், ஆனந்தத்தையும் மக்களுக்கு வழங்கி அவர்களை இன்னல்களி-ருந்து. விடுவிப்பதற்காக, ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியி-ருந்து, தொடர்ந்து பல ஞானகுருக்கள் பல உபாயங்களை மக்களுக்கு அளித்திருக்கிறார்கள்.

மனிதனின் ஏட்டறிவு, பிரபஞ்ச ஞானம் என்னும் கட-ன் ஒரு துளிக்குக் கூட ஈடாகாது. மாபெரும் பிரபஞ்ச உண்மையை மனிதர்களுக்கு விளக்குவதற்கு எந்த ஒரு மொழியும் போதிய சொற்களை கொண்டிருக்கவில்லை. எனவேதான், பல தியான நுட்பங்களின் (Techniques) மூலம் இறை சக்தியைப் புரிந்து கொள்ள ஞானிகள் வகை செய்துள்ளார்கள்.

இறைசக்தியையும், இறைத்தன்மையையும் அனுபவமாக உணர்ந்த ஞானகுருக்கள் இறைசக்தியை மக்கள் பெற்று இன்னல்களி-ருந்து மீளப் பல யுக்திகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

அவைதான் மந்திரம் ! யந்திரம் ! தந்திரம் !

மருத்துவம் ! யோகம் ! தியானம் ! எல்லாம்.

2. யந்திரம் என்றால் என்ன?

ஞானகுரு, ஞானசக்தியை ‘வரைபட மந்திரம்’ மூலம் வழங்குவதுதான் யந்திரம். யந்திரங்கள் ஞான அர்த்தத்தோடு ஞான தரிசனத்தில் உருவாக்கப்பட்டவை. யந்திரத்தின் ‘வடிவமே’ சக்தியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

சாதாரண வரைபடம் போலத் தோன்றும் யந்திரம் பிரபஞ்ச சக்தியை வெளிப்படுத்தும் என்றால், புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால் இது சூட்சுமமான உண்மை. இவ்வுண்மை புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும் உண்மை உண்மையே! யந்திரங்கள் சக்தியை வெளியிடும்!

3. “குணமளிக்கும் யந்திரம்” - ஓர் அறிவியல் விளக்கம்

ஒவ்வொரு யந்திரமும் ஒரு குறிப்பிட்ட சக்தியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. அது எப்படி குணமளிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் ஆராய்ச்சி.

அமெரிக்காவில் சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மருத்துவ உலகில் இது ஓர் வித்தியாசமான முயற்சி! Painting Therapy என்ற ஒரு புதிய முறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை 21 நாட்கள் தொடர்ந்து நடந்தது. சிகிச்சையில் மனநோயாளிகளுக்குப் படம் வரைவதற்குத் தேவையான எல்லா உபகரணங்களையும் கொடுத்துத் தனி அறையில் விட்டுவிடுவார்கள். அவரவர்கள் விருப்பப்பட்ட முறையில் வரைந்து கொள்ளலாம்.

இப்படித் தொடர்ந்து 21 நாட்கள், மனநோயாளிகள் வரைந்த படங்களை, ஒரு மருத்துவர் தனி ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டார்.

ஆராய்ச்சியின் முடிவு கொஞ்சம் வினோதமானது.
பணத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
எல்லோருமே ஒரே விதமான முறையில்
வரைந்திருந்தார்கள்.

பெண்ணால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
எல்லோருமே ஒரே விதமான முறையில்
வரைந்திருந்தார்கள்.

புகழால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே ஒரே விதமான முறையில் வரைந்திருந்தார்கள்.

ஆராய்ச்சியின் முடிவில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்றும் கடைசியாக நிகழ்ந்தது. அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு முடிவை வெளியிட்ட மருத்துவருக்கே பைத்தியம் பிடித்து விட்டது. ஆனால் மனநோயாளிகளுக்குப் பைத்தியம் தெளிந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் முடிவி-ருந்து மூன்று
முக்கியமான கருத்துக்களைத் தெரிந்துக்
கொள்ளலாம்.

1. மனதின் உள்ளே இருக்கும் பைத்தியத்தன்மைதான்

  • ஒரு கட்டத்தில் வெளியில் பைத்தியமாக வெளிப்படுகிறது. (பாதிக்கப்பட்ட மனதின் புற வெளிப்பாடே பைத்தியம் என்பது).

2. வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் நிச்சயம் மனித மனத்தைப் பாதிக்கிறது. (Painting Therapy - யில் மன நோயாளிகளின் Painting-ஐ பார்த்ததால் மருத்துவருக்கே பைத்தியம் பிடித்தது இதற்கு ஒரு சரியான உதாரணம்).

3. உள்ளே இருக்கும் அடக்கப்பட்ட உணர்வுகளும், பாதிக்கப்பட்ட எண்ண ஓட்டங்களும் சரியான வகையில் வெளிப்படுத்தப்படும்போது - பைத்தியத் தன்மை குறைகிறது. (21 நாட்கள் முடிந்து, மனநோயாளிகளின் பைத்தியத் தன்மை தெளிந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது!)

வெளி உலகில் நடந்த சில எதிர்பாராத நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட திடீர் மாற்றங்களே மனித மனநலத்தைப் பாதித்து, மனநோயாளிகளை உருவாக்குகிறது. மனநோயாளிகளின் (Paintings) ஓவியங்கள் அவர்களுடைய பைத்தியத் தன்மையின் வெளிப்பாடு. பைத்தியத் தன்மையை (எதிர்மறை சக்தியை) வெளிப்படுத்திய ஓவியங்களைத் தொடர்ந்து பார்த்ததால்தான் மருத்துவருக்கும் பைத்தியம் பிடித்தது.

• மனநிலை பாதிக்கப்பட்ட மனங்களின் எதிர்மறை சக்தியினுடைய வெளிப்பாடே இந்த வகை ஓவியங்கள்.

• கலை உணர்வு கொண்டவர்களின்
இதயப்பூர்வமான படைப்பாற்ற-ன் வெளிப்பாடே
அழகான சித்திரங்களும்! ஓவியங்களும்!

• ஞான நிலையிலேயே நிலைத்து இருக்கும் ஞானிகளின் ஆத்ம சக்தியின் வெளிப்பாடே வரைபட யந்திரங்கள்.

4. யந்திரம் ஒரு சக்தி கேந்திரம்

ஒ-பரப்பு மற்றும் ஒளிபரப்பு நிலையங்கள் "கேந்திரங்கள்" என்றழைக்கப்படுகின்றன. இந்த கேந்திரங்கள் தொடர்ந்து ஒ-, ஒளிகளின் மூலம் நிகழ்ச்சிகளைத் தந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். நீங்கள் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் கூட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

அதுபோலத்தான் "சக்தியைப் பரப்பும் சக்தி கேந்திரம்" எனும் யந்திர வடிவமும் சக்தியை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். அதைக்கொண்டு பயன் அடைய விரும்புபவர்களுக்கு மட்டுமே யந்திரத்தின் சக்தி வெளிப்பாடும், அதனால் ஏற்படும் சுபகாரியங்களும் சித்திக்கும்.

5. ஞான தரிசனம்

பரமஹம்ஸ நித்யானந்தர் தரிசனத்தில் கண்ட யந்திரம் தான் இந்த Healing Yantra (குணமளிக்கும் யந்திரம்). ஒவ்வொரு வகை யந்திரத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு.

Nithyananda holding a book showing a yantra

6. ஞானிகளின் ஆனந்த அனுபூதியும், யந்திர சக்தியும்

எந்த ஒரு ஓவியமும் சாதாரண ஒரு விஷயம் அல்ல. ஒவ்வொரு ஓவியமும் ஓவியத்தை உருவாக்கியவரின் தன்மையையும், இயல்பையும் வெளிப்படுத்துகிறது.

சில ஓவியங்களைப் பார்க்கும் போது “ஆஹா! என்ன அழகாக இருக்கிறது!“ என்று நீங்கள் பிரமிக்கும் போது என்ன நடக்கிறது? அந்தக் குறிப்பிட்ட ஓவியம் எந்த அர்த்தத்தையும், எந்த வகை சக்தியையும் கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் உங்களின் பிரமிப்பு அமையும். ரம்மியமான ஓவியங்கள் உங்கள் மனதில் ரம்மியமான உணர்வை ஏற்படுத்துகின்றன. அதன் விளைவுதான் பிரமிப்பு. இது வெளிப்படும் சக்தியின் தன்மை எப்படி எனில் அந்த ஓவியரின் தன்மையையும், ஓவியத்தின் தன்மையையும் பொறுத்தது.

அதேபோல்தான் யந்திரங்களும். அவை குருவின்
ஞான சக்தியையும், குருவின் ஆனந்த
அனுபூதியையும் ஒன்றாக வெளிப்படுத்துபவை.

குணமளிக்கும் யந்திரத்திற்கு, நோய்க்குக் காரணமான எதிர்மறை சக்திகளை எரித்துவிடும் சக்தி உள்ளது. இந்த யந்திரத்தை மனதில் நினைத்தாலே உட-ன் சக்தி ஓட்டம் சுத்திகரிக்கப்பட ஆரம்பிக்கும். ஞான தரிசனத்தில் பரமஹம்ஸரின் மனம் கடந்த நிலையில் (No mind State) இருக்கும் போது குணமளிக்கும் யந்திரம் அதுவாகவே தோன்றியது. எனவே மனம் சம்பந்தப்பட்ட, உடல் சம்பந்தப்பட்ட எல்லா கோளாறுகளையும் சரிசெய்யும் வல்லமை கொண்டது - குணமளிக்கும் யந்திரம்.

குணமளிக்கும் யந்திரம் (Healing Yantra) நோய்களை குணப்படுத்தும் நேர்மறை சக்தியை (Positive Energy) இடைவிடாது தொடர்ந்து வெளியிடும் தன்மையைக் கொண்டது.

மழலையின் ஓவியத்தைப் பார்க்கும் போது-பாச உணர்வும்!
இயற்கையின் ஓவியத்தைப் பார்க்கும் போது-அமைதி உணர்வும்
போர்க்களத்தின் ஓவியத்தைப் பார்க்கும் போது-கலவர உணர்வும்!
காமம் சம்பந்தப்பட்ட ஓவியத்தைப் பார்க்கும் போது-காம உணர்வும்!
சொகுசு வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஓவியத்தைப் பார்க்கும் போது-ஆசை உணர்வும்!

குணமளிக்கும் யந்திரத்தைப் பார்க்கும் போது நம்முள் சுகஉணர்வு பெருக ஆரம்பிக்கும்.