பரமஹம்ஸ நித்யானந்தர்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பரமஹம்ஸ நித்யானந்தர்
பரமஹம்ஸ நித்யானந்தர் இன்று நம் மத்தியில் வாழும் ஒப்பீடற்ற ஞான குரு ஆவார். இந்த பூமியில் உள்ளுலக ஆனந்தத்திற்கான அறிவியலை மீண்டும் நிர்மாணிப்பதற்கான பணியைச் செய்து வருகின்றார்.
பரமஹம்ஸர் தென்னிந்தியாவின் ஆன்மீக தலைநகரமாம் திருவண்ணாமலை நகரில் ஜனவரி 1, 1978 அன்று பிறந்தார். சிறு வயதிருந்து ஒரு நோக்குடன் செய்த தீவிர தவத்தினால் தன்னுள் உள்ளுலக ஆனந்தத்தை அனுபவமாக அடைந்தார்.
பரமஹம்ஸரின் ஆன்மீகத் தேடுதல் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியது. 12 ஆவது வயதில் ஆழ்ந்த முதல் ஆன்மீக அனுபவம் (சத்தோரி) அனுபூதியாக அடைந்தார். தனது 17 ஆவது வயதில் பரமஹம்ஸர் தன் சுய தன்மையை உணர்ந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் பரிவராஜகம் சென்றார்.
யோகா, தந்திரம் மற்றும் ஞானிகளினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய நுட்பமான அறிவியலையும், கலைகளையும் கற்றார். இதனுடன் ஆழ்ந்த அறிவுமிகு ஆன்மீக அனுபவங்களையும் பெற்றார்.
பெருமைமிக்க புண்ணியஸ்தலங்களைத் தரிசனம் செய்ததுடன், கடுமையான தியானப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தார். பல்லாயிரக்கணக்கான மைல்கள் வெறும் கால்நடைப்பயணமாக நடந்து இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக 70,000 மைல்கள் தூரம் நடந்தே பயணம் மேற்கொண்டார்.
ஆழமாக ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்த கல்வி மூலமாகவும், ஆழ்ந்து செய்த தியானத்தினாலும்
இன்று பரமஹம்ஸர் உலகளவில் பல மில்ர்யன்களுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உத்வேகமளிக்கும் மனிதராக நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.
தன்னுடைய அனுபவத்திருந்து வடிவமைத்த
தனிமனித விழிப்புணர்வடையச் செய்யும் ஆனந்த
நுட்பங்களின் மூலமாக மனிதனை மகானாக
விழித்தெழச் செய்கின்றார். மேலும் இவ்வாறு
உலகிலுள்ள ஒவ்வொரு தனி மனிதரும் தன்னுள்
இருக்கும் ஆனந்தத்தைக் கண்டுணர்வதற்கான
சூத்திரங்களை வடிவமைத்துள்ளார்.
தன்னுடைய வர்மை மிகுந்த எளிமையான தியான நுட்பங்களாலும், ஞானக்கருத்துக்களாலும் மக்களின் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய நேரடித் தீர்வுகளைப் பரமஹம்ஸர் வழங்கி வருகிறார்ப். இதனால் இந்தக் குறுகிய காலத்திலேயே பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் பெரும் பயன் அடைந்திருக்கிறார்கள்.
பொருள் சார்ந்த உலகில் வெற்றி பெறுவதற்கும், தன்னுள் இருக்கும் ஆழ்ந்த தேடுதலை முழுமையடைச் செய்வதற்கும் தியானமே திறவுகோல் என்று வபுறுத்தும் பரமஹம்ஸர். உலகின் எல்லா விதமான மனிதர்களும் வெளியிலும், தன்னுள்ளும் ஆனந்தத்தையும், அமைதியையும் அனுபவமாக பெறுவதற்குப் பல தியான நுட்பங்களைப் வடிவமைத்து வழங்கி வருகின்றார்.
தனிமனிதர் ஒவ்வொருவரும் தன்னுள் தானே உணர்வதை உறுதி செய்வதே பரமஹம்ஸர் மேற்கொண்டிருக்கும் பணியின் ஒரே நோக்கமாகும்.
உலகெங்கும் சமூக சேவைகளாற்றி, பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும், ஆன்ம அளவிலும் ஆரோக்கியத்தை வழங்கி வருகின்றார்.
