பிற்சேர்க்கை - IV
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தியானம் செய்வதற்கு ஏற்ற நேரம் எது?
எல்லா நேரமும் யந்திர தியான சிகிச்சைக்கு ஏற்ற நேரம்தான். அதில் காலை 7 மணி முதல் 7.30 மணி வரை மாலை 7 மணி முதல் 7.30 மணி வரை மிகச் சிறந்த நேரம். ஏனென்றால் இந்த நேரத்தில் தியானம் செய்பவர்கள் ஞானசக்தியோடு (குரு சக்தியோடு) நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.
எவ்வளவு நாட்கள் யந்திர தியானத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும்?
குறைந்தது ஒரு மண்டலம். அதாவது, 48 நாட்கள் நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
யந்திர தியானம் ஒன்றே எல்லா நோய்களையும் குணப்படுத்திவிடுமா?
எந்த நோய்க்கும் இந்தத் தியானத்தை சிகிச்சையாகச் செய்யலாம். சிலத் தீவிர நோய்களுக்குப் பரிபூரண குணத்தைப் பெற அடுத்தகட்ட தியானங்கள் அல்லது தியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். உலகெங்கும் உள்ள தியானபீட கிளைகளில் தியான சிகிச்சை மையங்கள் இலவசமாகத் தியான சிகிச்சையைச் செய்து வருகின்றன. உங்கள் ஊருக்கு அருகில் உள்ள தியான சிகிச்சை மையத்திற்குச் சென்று தியான சிகிச்சையைப் பெற்று பயன் பெறுங்கள்.
சில நோய்களுக்கு எந்த சக்கரத்தில் சிகிச்சையளிப்பது என்று தெரியாத போது என்ன செய்வது?
அனாஹதம் (4. Anahatha) + சஹஸ்ராரம் (1. Sahasraram) என்ற இரண்டு சக்கரங்களில் யந்திர தியானம் செய்வது 7 சக்கரங்களையும் ஒருசேர சுத்திகரிக்கும். இந்த இரண்டு சக்கரங்களை அதுபோன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.