அத்தியாயம்-9: ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு
பிரபஞ்ச இருப்புத்தன்மை புத்திசாலித்தனமானது.
அது நமது எண்ணங்களுக்குப் பதிலளிக்கிறது.
முடிவில்லாத,
நடைமுறைப்படுத்துவதற்கு எளிதான
ரகசியங்களுக்கெல்லாம் மேலான
இரகசியமான அறிவை
பொறாமைகொள்ளாத
நம்பிக்கைகொண்ட ஒருவருக்கு
கிருஷ்ணர் பரிமாற்றம் செய்கிறார்.
நம்மிடம் என்னவெல்லாம்
குறைகின்றனவோ,
அவற்றைத் தருகிறார்.
ஸ்லோகங்கள்
அத நவமோண்த்யாய:
ராஜ வித்யா ராஜகுஹ்ய யோக:
ஏ
ஸ்ரீபகவாநுவாச
இதஂ து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே ந
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா
மோக்ஷ்யஸேண்பாபாத் நந 9.1
ஸ்ரீபகவான் சொன்னது
9.1 “அர்ஜுனா, நீ என்னை நம்புகிறாய். நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் பொருள்சார்ந்த உலகின் துன்பங்களிலிருந்து விடுதலையடைவாய்.
ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் ந
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம் நந 9.2
9.2 இந்த ஞானமே எல்லா அறிவிற்கும் அரசன்போன்றது. இதுதான் எல்லா ரகசியங்களுக்கும் மேலான இரகசியம். இதுவே தூய அறிவு, புனிதமானது. மேலும் ‘தன்னைத்தானே உணர்தலு’க்கு நேரடியாக வழிநடத்திச் செல்லக்கூடியது. இது முடிவில்லாதது, நடைமுறைப்படுத்த எளிதானது.
அஸ்ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப ந
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ரு'த்யுஸம்ஸாரவர்த்மநி நந 9.3
9.3 இத்தகைய ஞானத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடைய முடியாது. ஒ எதிரிகளை வென்றவனே! அவர்கள் இந்தப் பொருள்சார்ந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறப்பையும் இறப்பையும் எடுக்கிறார்கள்.
மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்தினா ந
மத்ஸ்தானி ஸர்வபூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித: நந 9.4
9.4 என்னால் ஊடுருவிப் பரவப்பட்டுள்ள இந்த மொத்தப் பிரபஞ்சமும் எனது உருவமில்லா இருப்பில் நிலைத்திருக்கிறது. எல்லா இருப்பும் என்னையே சார்ந்துள்ளது. நான் அவற்றைச் சார்ந்திருக்கவில்லை.
ந ச மத்ஸ்தானி பூதானி பஸ்ய மே யோகமைஸ்வரம் ந
பூதப்ரு'ந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந: நந 9.5
9.5 என்னிடம் உள்ள ஈஸ்வரதன்மைகளை, யோக சக்தியைப் பார். நானே எல்லா உயிருள்ளவற்றையும் படைத்து, அவற்றைத் தாங்கியும் நிற்கிறேன். நான் அவற்றைச் சார்ந்தும் இல்லை, அவை என்னைச் சார்ந்தும் இல்லை.
யதாகாஸஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந் ந
ததா ஸர்வாணி பூதானி மத்ஸ்தானீத்யுபதாரய நந 9.6
9.6 எங்கும் சஞ்சரிக்கிற எல்லாம் வல்ல பெருங்காற்று எப்பொழுதும் நிலையான பெருவெளியில் இருப்பதுபோல், எல்லா இருப்பும் என்னிலேயே இருக்கின்றன.
ஸர்வபூதானி கௌந்தேய ப்ரக்ரு'திம் யாந்தி மாமிகாம் ந
கல்பக்ஷயே புநஸ்தானி கல்பாதௌ விஸ்ரு'ஜாம்யஹம் நந 9.7
9.7 குந்தியின் மகனே! ஒவ்வொரு யுக முடிவிலும் எல்லாம் என்னிலேயே கலக்கின்றன. ஒவ்வொரு புது யுகத்திலும் நானே அவற்றை மீண்டும் படைக்கிறேன்.
ப்ரக்ரு'திம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ரு'ஜாமி புந: புந:
பூதக்ராமமிமம் க்ரு'த்ஸ்நமவஸம் ப்ரக்ரு'தேர்வஸாத்தந 9.8
9.8 எனது பொருள்சார்ந்த இயல்பு இந்த உயிர்களையெல்லாம் மீண்டும் மீண்டும் படைக்கிறது; எனது பொருள்சார்ந்த இயல்பினால் அவை கட்டுப்படுத்தவும் படுகின்றன.
ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய ந
உதாஸீநவதாஸீநமஸக்தம் தேஷு கர்மஸு நந 9.9
9.9 தனஞ்ஜயா, இந்தச் செயல்களெல்லாம் என்னைக் கட்டுப்படுத்தாது. நான் எப்போதும் பற்றற்றும், வேறுபாடு இல்லாமலும் இருக்கிறேன்.
மயாத்யக்ஷேண ப்ரக்ரு'தி: ஸூயதே ஸசராசரம் ந
ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே நந 9.10
9.10 ப்ரக்ருதியின் பொருள்மயமானதன்மை எனது வழிகாட்டுதலின் படியே வேலைசெய்கிறது. ஓ, குந்தியின் மகனே! எனது மாயா சக்தியின் மூலம் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் ஆட்சியாலேயே பொருட்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஸ்ரிதம் ந
பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஸ்வரம் நந 9.11
9.11 நான் மனித உருவில் அவதரிக்கும்போது முட்டாள்கள் என்னைக் கேலி செய்கின்றனர். எல்லாவற்றையும் கடந்து நிற்கிற எனது இயல்பானதன்மையையும் எல்லாவற்றின் மீதான எனது மேலான ஆட்சியைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வதில்லை.
மோகாஸா மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸ: ந
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ரு'திம் மோஹிநீம் ஸ்ரிதா: நந 9.12
9.12 தவறான நம்பிக்கையால் திருப்திகொள்ளும் இவர்கள், அசுரத்தன்மை உடையவர்களாகவும் நாத்திகம் பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது இந்த தவறான நம்பிக்கையால், இவர்கள் ‘விடுதலை’ அடைவதற்கான சாத்தியமும், பலன்கருதி இவர்களால் செய்யப்படும் செயல்களும், இவர்களது பண்பட்ட அறிவும் தவறாகின்றன, பயனற்றுப் போகின்றன.
மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ரு’திமாஸ்ரிதா: ந
பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம் நந 9.13
9.13 ப்ரீதாவின் மகனே! மாயையால் மயங்காத சிறந்த ஆன்மாக்கள், நான் மாற்றமில்லாதவன் என்பதை அறிந்துகொள்கிறார்கள். நான்தான் சீர்ஷ்டியின் கர்த்தா என்பதை உணர்ந்துகொள்வதால் எப்போதும் அவர்கள் என்னிடம் புனிதமான பக்தியுடன் இருக்கிறார்கள்.
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச்ச த்ரு’டவ்ரதா: ந
நமஸ்யந்தஸ்ச்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே நந 9.14
9.14 ஸ்தீரமான உறுதியுடன் இருப்பவர்கள் எப்போதுமே என்னை பக்தியுடன் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என் மஹிமையைப் பாடிக்கொண்டும், உறுதியான தீர்மானத்துடன் கடினமான சாதனைகளைச் செய்துகொண்டும் என்னையே சரணடைகிறார்கள்.
ஜ்ஞானயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே ந
ஏகத்வேந ப்ரு’தக்த்வேந பஹுதா விஶ்வதோமுகம் நந 9.15
9.15 சிலர், தங்கள் திறமையாலும் அனுபவத்தாலும் தேடிப்பெற்ற ஆத்ம ஜ்ஞானத்தை உலகில் பரப்புவதன்மூலம் என்னை வழிபடுகிறார்கள். மற்றவர்கள் என்னை ஒரே பொருளாக அதாவது அத்வைத கருத்துப்படி ஒரே தத்துவமாகவோ அல்லது த்வைத கருத்துப்படி இருபொருள் தத்துவமாகவோ அல்லது விசிஷ்டாத்வைத கருத்துப்படி மொத்தப் ப்ரபஞ்ச வடிவாகவோ வழிபாடு செய்கிறார்கள்.
அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம்ந
மந்த்ரோண்ஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்நந 9.16
9.16 நானே சமயச் சடங்குகள், நானே யாகம், நானே ஆகுதி, நானே யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் த்ரவியப் பொருட்கள், நானே மந்திரம், நானே நெய், நானே அக்னி, நானே ஹோமம்.
பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: ந
வேத்யம் பவித்ரமோங்கார ரு'க்ஸாம யஜுரேவ ச நந 9.17
9.17 நானே இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குபவன், நானே தந்தை, நானே தாய், பாட்டனும் நானே, அறியத் தக்கவனும் நானே, அறிவின் பொருளும் நானே, ஓங்காரமும் நானே, புனிதமான வார்த்தையான ரிக், ஸாம, யஜுர் என்ற மூன்று வேதங்களும் நானே.
கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஸரணம் ஸுஹ்ரு'த் ந
ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்நந 9.18
9.18 இலக்கும் நானே, தாங்குபவனும் நானே, கடவுளும் நானே, சாட்சியும் நானே, இருப்பிடமும் நானே, அடைக்கலமும் நானே, நண்பனும் நானே, பிறப்பிடமும் நானே, ஒடுங்குமிடமும் நானே, புகலிடமும் நானே, ஆதாரமும் நானே, களஞ்சியமும் நானே, அழிவற்ற விதையும் நானே.
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ரு'ஹ்ணாம்யுத் ஸ்ரு'ஜாமி ச ந
அம்ரு'தம் சைவ ம்ரு'த்யுஸ்ச ஸதஸச்சாஹமர்ஜுந நந 9.19
9.19 வெயிலைத் தருபவன் நானே. மழையைப் பொழிவிப்பவனும் நானே, அதை நிறுத்துபவனும் நானே. நானே அழிவற்றவன். மரணமும் நானே, நிலையானதும் நானே, நிலையில்லாததும் நானே ஓ! அர்ஜுனா.
த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா:
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே ந
தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோகம்
அஸ்நந்தி திவ்யாந் திவி தேவபோகாந் நந 9.20
9.20 எவர்கள் வேதச் சடங்குகளைச் செய்து, சோமபானம் அருந்தி என்னைப் பூஜிக்கிறார்களோ, அவர்கள் மறைமுகமாகச் சொர்க்கலோக சுகங்களை அடைய விரும்புகிறார்கள். அவர்கள் தேவலோகத்தை அடைந்து மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய புலனின்பங்களை அனுபவிப்பார்கள்.
தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விசாலம்
க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விசந்தி ந
ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா
கதாகதம் காமகாமா லபDomainந்தே ந
9.21 அவர்கள் ஸ்வர்க்கலோக சுகபோகங்களை அனுபவித்த பின்னர், இந்த மனித உலகிலேயே மறுபடியும் பிறக்கிறார்கள். பலன்களைக் கருதி வேத தர்மங்களைக் கடைப்பிடிப்பவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே ந
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ந
9.22 என்னுடைய உணர்வில் நீ நிலைத்திருப்பாய் என்றால், உன்னிடம் என்ன குறைகிறதோ, அதை நான் தருகிறேன். உன்னிடம் எது இருக்கிறதோ அதைப் பாதுகாக்கிறேன்.
யேSப்யந்யதேவதா பக்தா யஜந்தே ச்ரத்தயாந்விதா: ந
தேSபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம் ந
9.23 குந்தியின் மகனே, உண்மையில் மற்ற தெய்வங்களைப் பூஜை செய்பவர்கள்கூட என்னையேதான் பூஜை செய்கிறார்கள். ஆனால் உண்மையான புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இதைச் செய்கிறார்கள்.
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச ந
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே ந
9.24 யாகத்திற்குரிய சிறந்த பொருளும் நானே, அதைச் சிறப்பாக அனுபவிப்பவனும் நானே. மனித மனத்திற்கு அப்பாற்பட்ட என்னுடைய உண்மையான தெய்வீகத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்.
யாந்தி தேவவ்ரதா தேவாந் பித்ரூ'ந்யாந்தி பித்ரு'வ்ரதா: ந
பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோண்டி மாம் நந 9.25
9.25 தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களையே அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். பேய், பூதம் இவற்றைத் தொழுபவர்கள் அத்தகையவர்களை அடைந்து அங்கேயே பிறக்கிறார்கள். முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களை அடைகிறார்கள். என்னை வழிபடுபவர்கள் என்னை அடைந்து, என்னுடனே வாழ்கிறார்கள்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ந
ததஹம் பக்த்யுபஹ்ரு'தமஶ்நாமி ப்ரயதாத்மந: நந 9.26
9.26 ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அல்லது நீரை அன்புடனும் பக்தியுடனும் எனக்கு யார் அளித்தாலும், தூய்மையான மனத்துடன் அளிக்கப்படும் அவற்றை நான் (திருப்தியுடன்) ஏற்று புசிக்கிறேன்.
யத்கரோஷி யதஶ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத் ந
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம் நந 9.27
9.27 குந்தீ மகனே! நீ எதைச் செய்கிறாயோ, எதைப் புசிக்கிறாயோ, எதைப் படைக்கிறாயோ எதைத் தானம் செய்கிறாயோ எந்தத் தவம் செய்கிறாயோ அதையெல்லாம் எனக்கே அர்ப்பணம் செய்!
ஶுபாஶுபபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநை: ந
ஸந்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி நந 9.28
9.28 பலன்களைத் துறப்பதின் மூலம் நல்லது, தீயது என்ற பலன்தரும் கருமங்களின் தளைகளிலிருந்து விடுபடுகிறாய். நீ விடுதலைபெற்று என்னையே வந்தடைவாய்.
ஸமோண்ஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோண்ஸ்தி ந ப்ரிய:
ந
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் நந 9.29
9.29 நான் யாரையும் வெறுப்பதும் இல்லை ; யாரிடமும் பாரபட்சமாகவும் இருப்பதில்லை. நான் எல்லோரிடமும் சமமாகவே இருக்கிறேன்.
என்னிடம் பக்தியாக இருப்பவர்கள், என் நண்பராகி என்னோடு இருக்கிறார்கள். நானும் அவர்கள் நண்பராக இருக்கிறேன்.
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் ந
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: நந 9.30
9.30 பாபியான ஒருவர்கூட, தம்மை பக்திப்பூர்வமான சேவையில் ஈடுபடுத்திக்கொண்டாரேயானால், அவர் ஸாதுவாகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் நிலைகொண்டுள்ளார்.
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஶஶ்வச்சாந்திம் நிகச்சதி ந
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணஶ்யதி நந 9.31
9.31 அவர் மிக விரைவிலேயே தர்மவானாகி, முடிவில்லா அமைதி நிலையைப் பெறுகிறார். குந்தீ மைந்தனே, என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்று துணிவோடு அறிவிப்பாயாக!
மாம் ஹி பார்த வ்யபாஶ்ரித்ய யேண்பி ஸ்யு: பாபயோநய: ந
ஸ்த்ரியோ வைஶ்யாஸ்ததா சூ'த்ராஸ்தேண்பி யாந்தி பராம் கதிம்
நந 9.32
9.32 ப்ரீதாவின்மகனே! என்னை சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும்-பெண்கள், வைச்யர்கள், வேலைசெய்பவர்கள் மட்டுமல்ல பாபிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும்.
கிம் புநர்ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா ந
அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் நந 9.33
9.33 (பாபிகள்கூட உயர்ந்த நிலைபேற்றைப் பெற முடியும் எனும்போது) இந்த நிலையற்ற, சுகமற்ற உலகில் இருந்தாலும் எனக்கே அன்பான சேவை செய்துகொண்டிருக்கும் கற்றவர்கள், தர்மவான்கள், பக்தர்கள், ராஜரிஷிகள்போன்றவர்களுக்கு இந்த நிலையை அடைவது எவ்வளவு எளிதான காரியம்!
மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு ந
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: நந 9.34
9.34 உன்னுடைய மனத்தை என்னிடம் சரணாகதி செய்துவிடு. என்னிடம் பக்திசெய், எனக்கே பூஜைசெய். என்னையே வணங்கியிரு. நீ அடைய வேண்டிய லட்சியமாகவும் ஒரே அடைக்கலமாகவும் என்னையே நிர்ணயித்துக்கொண்டு, என்னுடன் இணைவதன்மூலம் நிச்சயமாக நீ என்னையே அடைவாய்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஸாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகோ நவ'மோண்த்யாய:
ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ராஜ வித்யா ராஜகுஹ்ய யோகம்' என்னும் பெயர்கொண்ட ஒன்பதாவது அத்தியாயம்.
உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு

நாம் இப்போது பகவத்கீதையின் நடுப்பகுதியில், மத்தியப் பகுதியில் இருக்கிறோம்.
அர்ஜுனனுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற மாற்றங்களைக் கிருஷ்ணர் பார்த்தார். அவரது உள்-உலக வன்முறையும் மனப்போராட்டமும் நீங்குவதையும், அர்ஜுனனின் தனிமனித விழிப்புணர்வு பூர்ணத்துவ உணர்வில் மலர்வதையும் உணர்ந்து கொண்டார்.
அதனால் குருவானவர் (கிருஷ்ணர்), உரையாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லத் தயாராகிறார்.
இப்பொழுது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இரகசியங்களிலேயே மேலான இரகசியமான தம்மைப் பற்றிய (கிருஷ்ணரைப் பற்றிய) இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
இரகசியங்களின் இரகசியம் (9.1-9.3)
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்த ஸ்லோகங்கள்மூலம் உறுதி அளிக்கிறார். "என் அன்பிற்குரிய அர்ஜுனா, ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே -நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால், இதம் து தே குஹ்யதமம் (9.1) -நான் உனக்கு இந்த இரகசியமான அறிவையும் உணர்தலையும் தருகிறேன். இதனை அறிந்துகொள்வதன்மூலம் நீ இந்தப் பொருள்சார்ந்த உலகின் துன்பங்களில் இருந்து விடுதலையடைவாய்."
இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்ட உடனேயே நமக்கும் தெய்விகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
இதைத்தான் நான், "நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உணர்ந்தாலும் உணராவிட்டாலும் 'நீங்கள் கடவுள்தான்!'" என்று மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்கிறேன்.
கிருஷ்ணர் இங்கே சொல்கிறார். "நீ என்னிடம் பொறாமைகொள்ளாத காரணத்தால், நான் உனக்கு இறுதியான ரகசியத்தைச் சொல்கிறேன்." அதாவது அவர் அர்ஜுனனிடம் "நீ எனது அந்தஸ்தை அடைய முயற்சிசெய்யாததால், நான் உனக்கு எனது நிலையை அளிக்க முயற்சிசெய்கிறேன்," என்று சொல்கிறார்.
முதலில், 'நிலை' (குணச்ணாது) வருகிறது. பின், 'அந்தஸ்து' (குணச்ணாதண்) தானாகவே வந்துவிடுகிறது. 'அந்தஸ்தை' அடைய
தர்மத்தில் நம்பிக்கைகொள், அது
உன்னை இறுதிநிலைக்கு
அழைத்துச்செல்லும் - ஸ்ரீகிருஷ்ணர்
முயற்சிசெய்தோமேயானால், ஒருபோதும் 'நிலை'யை அடைய முடியாது.
யோக என்றால் 'அடைதல்' என்று பொருள். க்ஷேம என்றால் 'பாதுகாத்தல் என்று பொருள். இரண்டுமே துன்பங்கள்தான்.
கிருஷ்ணர் சொல்கிறார். "இந்த இரண்டு துன்பங்களுமே பொருள்சார்ந்த உலகினால்தான் ஏற்படுகிறது. நான் சொல்லப்போகும் இரகசியத்தை உணர்ந்து கொண்டவுடன் இத்துன்பங்களெல்லாம் மறைந்துவிடும். இதுவே நீ புரிந்துகொள்ள வேண்டிய இறுதி ஸத்யம். இந்த ரகசியத்தைப் பற்றிய அறிவு உன்னை எல்லாத் துன்பங்களில் இருந்தும் சுதந்திரமாக்கும்."
அவர் மேலும் சொல்கிறார். "இந்த அறிவே மற்ற அறிவுகளுக்கெல்லாம் அரசன். எல்லா ரகசியங்களிலும் இதுவே மிகப்பெரிய ரகசியம். இதுவே தூய அறிவு.
ஏனென்றால் இது நேரடியாகவே தன்னை உணர்வதற்கான அறிவைத் தருகிறது. ஒரு மதத்தின் 'முற்றுப்பெற்ற நிலை' அதாவது 'முழுமைத்தன்மை' இதுவே. இதுவே எப்போதும் இருக்கக்கூடியது. ஆனந்தமாக நிகழ்த்தப்படுவது."
தெளிவு ஒன்றே போதும் லட்சியத்தை அடைந்திடலாம்
கேளுங்கள். ஒரு மதமோ அல்லது ஆன்மிகப்பாதையோ மூன்று கோட்பாடுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
முதலில், அது வாழ்வின் இலட்சியத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அடுத்து, அந்த இலட்சியத்தை அடைவதற்கான வழியைத் தெளிவாக விளக்க வேண்டும். மூன்றாவதாக, அந்தப் பாதையில் உங்களை மகிழ்ச்சியாகப் பயணிக்கச் செய்ய வேண்டும். அந்தப் பாதையே இனிமையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணர் இங்கே, "அவ்யயம் -இதுவே நிலையானது, ஸுஸுகம் கர்தும் - செயல்படுத்துவதற்கு எளிமையானது, ராஜவித்யா ராஜகுஹ்யம் -ரகசியங்களுக்கெல்லாம் மேலான இரகசியமான இந்த ஞானமே எல்லா அறிவிற்கும் அரசன்போன்றது,” என்று எல்லாவித விளம்பர வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்!
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், "நான் கடவுள்கூட இல்லை. கடவுளுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறேன். கடவுளைப்பற்றி நீங்கள் நினைப்பது எதுவாயிருந்தாலும் அது எனக்குள் ஒடுங்குகிறது. படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளும் என்னில் ஒடுங்குகின்றன," எனக் குறிப்பிடுகிறார்.
எனவேதான் இப்படிப்பட்ட ரகசியங்கள், ஒருங்குவித்தலும் ஆர்வமும் உள்ளவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும், தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்கிறார், கிருஷ்ணர்.
முதல் இரண்டு ஸ்லோகங்களில் கிருஷ்ணர், "நான் சொல்லப்போவது மேலான ஸத்யம், நான் உனக்கு வெளிப்படுத்தப்போவது மிகப்பெரும் ரகசியம்," என்று சொல்கிறார் இப்பொழுது, அந்த ரகசியங்களை எப்படிப்பட்ட மக்கள் தெரிந்துகொள்ள முடியும் என்பதை அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.
"ஶ்ரத்தையில்லாத, தர்மத்தில் நம்பிக்கையில்லாத மக்களும், எனது போதனைகளில் நம்பிக்கையில்லாத மக்களும், ஞானமடையாமல் மறுபிறவி என்னும் பாதைக்கு மீண்டும் திரும்புகின்றனர்," என்கிறார் கிருஷ்ணர். அவரது போதனைகளில் நம்பிக்கைகொள்வதே ஒருவருக்கு இருக்க வேண்டிய 'அடிப்படை தகுதி' என்று சொல்கிறார்.
ஜ்ஞான குருமார்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஸத்யம்.
அதனால் நான் என்ன பேசுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள, நீங்கள் என்மீது ஶ்ரத்தை - நம்பிக்கைகொள்ள வேண்டும்.
மனிதனுக்கு விலங்கைக்காட்டிலும் அதிகமாக ஒரு சக்தி உண்டு. அவனுக்கு தர்மத்தைப் பின்பற்றுவதற்கும், ஒருங்குவித்தல், சி ரத்தை, பொறுப்புணர்வு மற்றும் வளப்படுத்தலுடன் வாழ்வதற்கும்
ஜ்ஞான குருமார்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஸத்யம்.
சுதந்திரம் இருக்கிறது. ஒன்றைச் செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கும் அவனுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
கிருஷ்ணர், தர்மம் என்று சொல்லும்போது எதுவெல்லாம் நம்மை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு அழைத்துச்செல்கிறதோ அதையே தர்மம் என்று குறிப்பிடுகிறார்.
கிருஷ்ணர் தெளிவாகச் சொல்கிறார், நமக்கு தர்மத்தில் நம்பிக்கை இல்லையென்றால், நாம் பிறப்பு-இறப்பு சுழலில் சிக்க வேண்டும்.
கிருஷ்ணர் ஒரு உத்தியைத் தருகிறார்: "தர்மத்தில் நம்பிக்கைகொள், அது உன்னை இறுதிநிலைக்கு அழைத்துச்செல்லும்," என்று சொல்கிறார்.
ஒபிரபஞ்ச சக்தியுடன் சேர்ந்து பாய்ந்தோSharedுகள் (9.4 -9.8)
ரகசியங்களை வெளிப்படுத்த இதுவே தருணம்.
கிருஷ்ணர் ஆரம்பிக்கிறார்: "ஜகதவ்யக்தமூர்திநா (9.4) -என்னால், எனது உருவமற்ற இருப்பால், மொத்தப் பிரபஞ்சமும் நிரப்பப்படுகிறது. எல்லா இருப்பும் என்னில் உள்ளன. நான் அவற்றில் இல்லை."
மொத்தப் பிரபஞ்சமும்-கிரகங்கள், காற்று, பெருங்கடல்கள், ஆறுகள், பூமி, நெருப்பு, ஆகாஸம், சூரியன் - நுண்ணறிவால் ஆனதே!
மொத்தப் பிரபஞ்சமும் இறந்துபோன பொருள் அல்ல. அது விபத்து அல்ல. நமது எண்ணங்களுக்கு அதனால் பதிலளிக்க முடியும்.
நமது புலன்களால் பார்க்கிற, உணர்கிற ஒவ்வொன்றும் பிரபஞ்ச மிகப்பரந்த அந்தப் பிரபஞ்ச நுண்ணறிவின் பாகமாகவே நாம் இருக்கிறோம், நம்மை நாமே மனச்சோர்விற்குள் ஆழ்த்திக்கொள்ளவும், தேவையில்லாத பிரச்சினைகளாலும் கவலைகளாலும் நம்மை நாமே வருத்திக்கொள்ளவும் தேவையில்லை என்ற இந்தப் புரிதல், நமது வாழ்வில் ஊடுருவினால் அதுவே போதுமானது!
பிரபஞ்சத்தின் பாகமாக இருக்கிற காரணத்தால், பிரபஞ்ச சக்தியுடன் சேர்ந்து பாய்ந்தோStandardங்கள். அதை எதிர்க்காதீர்கள்.
கிருஷ்ணர், “ததா ஸர்வாணி பூதாநி மதஸ்தானீத்யுபதாரய (9.6) -எல்லா இடங்களிலும் வீசக்கூடிய பலம்வாய்ந்த காற்றானது ஆகாயத்தில் நிலைபெற்றிருப்பதைப்போல, எல்லாப் படைப்புகளும் என்னில் நிலைபெற்றிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்," என்று சொல்கிறார்.
ஆகாயம்கூட ஒரு சக்தியே. அதன் சக்தி பற்றி நமக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நம் வாழ்க்கையில் எந்தவிதமான நேரடியான தாக்கத்தையும் விளைவுகளையும் அது ஏற்படுத்துவதில்லை. ஆனால் நம் கூட்டு எதிர்மறை எண்ணங்களால் அது பாதிப்பிற்குள்ளாகிறது.
பிரபஞ்சத்தின் கூட்டு சக்தியே ஆகாயம். ஆகாயம் வெற்றிடமே என நினைத்துவிடாதீர்கள். அது சக்திமயமானது. அது மிகவும் ஸூக்ஷ்மமானதாகவும் மிகவும் நுட்பமானதாகவும் இருப்பதால், அதில் நடக்கும் நிகழ்வுகளை நாம் உணர முடிவதில்லை. ஒரு பொருள் நுட்பமாக மாறுகிற அளவிற்குத்தான், அது மேலும் மேலும் வலிமையடைகிறது, சக்திமயமாக மாறுகிறது.
அடுத்த ஸ்லோகத்தில், "ஒவ்வொரு யுக முடிவிலும் எல்லாம் என்னிலேயே கலக்கின்றன. ஒவ்வொரு புது யுகத்திலும் நானே அவற்றை மீண்டும் படைக்கிறேன் (9.7)," என்று கிருஷ்ணர் இந்தப் பிரபஞ்சம் உருவாவதைப் பற்றியும், அழிவதைப் பற்றியும் சொல்லுகிறார். ஒரு அவதாரபுருஷரால் மட்டுமே இப்படிப்பட்ட தெளிவான, துணிச்சலான வாக்குமூலங்களைத் தர முடியும். ஏனென்றால் அவற்றை அவர் அனுபவங்களிலிருந்து சொல்கிறார்.
கல்பம் என ஸம்ஸ்க்ரு’தத்தில் அழைக்கப்படும் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும், பொருள்ரீதியாகத் தெளிவாகத் தெரிகிற பிரபஞ்சத்தின் எல்லாப் படைப்புகளும் அவரிடம் ஒன்றாகக் கலக்கின்றன.
“பொருட்களெல்லாம் என்னையே அடைகின்றன,” என்று கிருஷ்ணர் சொல்லும்போது, பிரபஞ்ச உணர்வை அடைகின்றன என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.
நாம் நமது புலன்களால் பார்க்கிற, உணர்கிற ஒவ்வொன்றும் பிரபஞ்ச உணர்வின் பாகமே. அவை நமது சொந்த இருப்புத்தன்மையின் வெளிப்பாடே என்பதை நாம் உணர்கிறோம். ஞானமடைந்த ஒருவர் மட்டுமே இந்த ஸத்யத்தை உள்ளது உள்ளபடியே பார்க்கிறார்.
ஒப்பந்தத்திலிருந்து விடுபடுவதே
பிரச்சினைக்கான தீர்வு (9.9 -9.12)
இந்தப் பிரபஞ்ச செயல்பாடுகளால் தாம் பாதிக்கப்படுவதில்லை என்று கிருஷ்ணர் சொல்கிறார். அதனால்தான், இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படும்போதோ, அழிக்கப்படும்போதோ தாம் பாதிக்கப்படுவதில்லை என்கிறார்.
மொத்தப் பிரபஞ்சமும் அவருக்குள் இருந்தே உருவாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும்கூட அவர் அந்தச் செயல்களால் பாதிக்கப்படவே இல்லை. ஏனென்றால் அவர் இந்தப் பிரபஞ்சத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் அவர் வெறும் ஸாக்ஷியாகப் பார்வையாளராக மட்டுமே இருக்கிறார்.
நாம் கிருஷ்ணருடைய வார்த்தைகளைப் புரிந்துகொண்டோம் என்றால், நமது தினசரி வாழ்க்கையில் அவற்றை நம்மால் நடைமுறைப்படுத்த முடியும். அதனால்தான் பகவத்கீதை ஒரு அருமையான நடைமுறை வேத நூலாக இருக்கிறது.
நாம் வைத்திருக்கும் பொருட்களில் கட்டுப்பட்டோ அல்லது பந்தப்பட்டோ நாம் இருக்கிறோம். நம்மிடம் இருக்கும் எல்லாப் பொருட்களும் நம்முடையதே என்று நினைக்கிறோம்.
இங்குக் கிருஷ்ணர், தம்மை ஒரு நடுநிலையானவர் எனச் சொல்கிறார். நடுநிலையாளராக இருத்தல் என்பது நாம் ஒரு ‘பார்வையாளராக’, ஸாக்ஷியாக இருப்பதே. அவர் அழியா நிலையான பூர்ணத்வத்தில் இருக்கிறார். எப்போது நாம் நமது எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஒரு பார்வையாளராக ஆகி றாமோ அப்போது நமக்குள் ஒரு விடுதலையுணர்வை உணர்கி றோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒன்றுதான்.
அது, ஒன்றுக்கொன்று தொடர்பற்றிருக்கும் எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையே நாம் உருவாக்கிவைத்துள்ள தண்டைத் தகர்த்தெறிவதுதான். நாம் அன்க்ளட்ச் செய்ய வேண்டும்.
நமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வானில் கடந்துபோகிற மேகங்களைப் போன்று பார்க்கும்போது, நாமாக அவற்றோடு கொண்ட இணைப்பை, நம் உறவை நிறுத்திக்கொள்வோம். அதற்குப்பிறகு நாம் அவற்றால் கட்டுப்படுத்தப்பட மாட்டோம்.
அவர் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தாலும், நடப்பவையெல்லாம் அவரது மேற்பார்வையிலேயே நடப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார். இங்கே அவர் தமது அதிகாரத்துவத்தைக் (அதணடணிணாடிணதூ) காண்பிக்கிறார். மேலும் இந்தப் பொருள்சார்ந்த உலகம், அவரது விருப்பப்படி அவரது இயற்கை சக்தியான ப்ரக்ரு’தியினாலும், மாயா சக்தியினாலும் உருவாக்கவும் அழிக்கவும்படுகிறது என்று சொல்கிறார்.
நமது உள்-இருப்புத்தன்மையின் சக்தி
கிருஷ்ணர், “நானே மேலான சக்தி, மயாத்யக்ஷேண ப்ரக்ரு’தி:
> ஞானிகள், உண்மையை உள்ளது > உள்ளவாறே பேசுகிறார்கள். ஸூயதே ஸசராசரம் (9.10) -நடப்பது எல்லாமே எனது மேற்பார்வையில் நடைபெறுகிறது,'' என்று சொல்கிறார்.
கிருஷ்ணரே இந்தப் பிரபஞ்ச நாடகத்தின் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். அவர், இவற்றை இயக்கமற்ற நிலையில் ஓர் பார்வையாளராக இருந்தே நடத்துகிறார்.
மேற்சொன்ன ஸத்யம் நம்முள்ளும் பிரதிபளிக்கிறது. நம்மை நாமே படைக்கவும் அழிக்கவும் செய்கிறோம். மகிழ்ச்சி, துக்கம், கற்பனைகள், வருத்தங்கள், உறவுகள்போன்ற நம் செயல்கள் அனைத்துமே நம்மாலேயே படைக்கப்படுகின்றன. நாம் உயர்ந்த, உன்னதமான நிலையிலிருந்து பார்த்தால், இந்த மொத்தப் பிரபஞ்சத்தின்மீதும் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
இதனால் நாம் எவ்வளவு சக்திமிக்கவர்கள் என்பதையும் நம்முடைய உள்-இருப்புத்தன்மை எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதையும் கிருஷ்ணர் காட்டுகிறார்.
நாம் இதை நம்பினாலும் நம்பாவிட்டாலும், இதுவே ஸத்யம். நாம் எதையெல்லாம் பார்க்கிறோமோ, உணர்கிறோமோ, கேட்கிறோமோ அவற்றையே நாம் படைக்கிறோம். இதுவே நமது ஆன்மாவின், உள்-இருப்புத்தன்மையின் சக்தி.
ஆனால் நம்மால் கிருஷ்ணரைப்போல பற்றில்லாமல் செயல்களைச் செய்ய முடிவதில்லை. நம் எண்ணங்களும், உள் மனத்தின் பேச்சுக்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உங்கள் அருகிலிருக்கும்போதே என்னை அனுபவியுங்கள்
ஒரு ஜ்ஞான குருவின் சந்திப்புதான்
நம் வாழ்க்கையில் நிகழ வேண்டிய
ஒரு நல்ல நிகழ்வு.
அடுத்த ஸ்லோகத்தில் "அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தனுமாஸ்ரிதம் (9.11) -நான் மனித உருவத்தில் அவதரிக்கும்போது 'முட்டாள்கள்' என்னை ஏளனம் செய்கிறார்கள். பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஸ்வரம் (9.11) -எனது இறுதியான இயல்பையும், அழிவற்ற எனது இயற்கைதன்மையையும், எல்லாவற்றிற்கும் மேலான மிக உயர்ந்த இறைசக்தி நானே என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை."
இங்கே கிருஷ்ணர் 'முட்டாள்கள்' என்ற கடுமையான வார்த்தையை உபயோகிக்கிறார். ஜீவன்முக்தி அடைந்த ஞானிகள் மனத்திலிருந்து எழும் வார்த்தைகளைக் கூட்டியோ, குறைத்தோ சொல்லாமல் அப்படியே சொல்கிறார்கள். அவர்கள் உண்மையை உள்ளது உள்ளவாறே பேசுகிறார்கள்.
வாழும் அவதாரப் புருஷரை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் உயிருடன் வாழும்வரை மக்கள் அவரைவிட்டு விலகியே இருக்கிறார்கள். அவரை அவதூறு செய்யவும் சிலர் தயங்குவதில்லை.
ஆனால் அந்த ஞானி உடலை விட்டுச்சென்ற பிறகு, அனைவரும் அவர் வாழ்ந்த அந்த இடத்திற்குச் சென்று, பூக்களை அர்ப்பணித்து பூஜை முதலிய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஒரு ஜ்ஞான குருவின் சந்திப்புதான் நம் வாழ்க்கையில் நிகழக்கூடிய, நிகழ வேண்டிய ஒரு நல்ல நிகழ்வு. இப்பொழுது இதை நம்மை வளப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி நாம் ஜீவன்முக்தராகலாம் அல்லது தவறவிடவும் செய்யலாம்; அது நம்மைப் பொறுத்தது.
கிருஷ்ணர், தமது வடிவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொள்ளவில்லை. அவரது பக்தியைப் பின்பற்றவே நம்மைக் கேட்டுக்கொள்கிறார். கிருஷ்ணருடைய விழிப்புணர்வைப் புரிந்துகொண்டு அவரைப் பின்பற்றுங்கள். நிலையான ஆனந்தத்திலேயே இருங்கள்.
என்னை எந்த உருவத்திலும் வழிபடுங்கள்
ஆனால் பக்தியுடன்... (9.13 -9.15)
கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில் பக்தியைப் பற்றிப் பேசுகிறார்.
கேளுங்கள். பக்தியே கடவுளை அடைய மிகவும் சக்திவாய்ந்த வழி. கிருஷ்ணர் மற்றும் ராமருடைய மகாபக்தர்கள் எல்லோரும் முழுமையான நன்றி உணர்வையும் அன்பையும் காட்டி இருக்கின்றனர். பக்தி அப்படிப்பட்ட உயர்ந்தநிலையை அடையும்போது, அவர்கள் இறுதி விழிப்புணர்வை அடைகிறார்கள்.
ஆரம்பநிலையில், கடவுளை நோக்கி நாம் அடிவைக்கத் தொடங்கும்போது பிரார்த்தனைகள் சக்திவாய்ந்தவைதான். ஆனால் நாம் அந்த நிலையிலேயே நின்றுவிடக் கூடாது. நம் பிரார்த்தனைகள், நமக்காக வரங்களைக் கேட்பதாக அல்லாமல், நம் பக்தியை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும்.
மக்கள், தம்மை எந்தெந்த வழிமுறைகளில் எல்லாம் வழிபடுகிறார்கள் என்பதைப் பற்றிக் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தொடர்ந்து விவரிக்கிறார். இங்கு அவர் ஞானப்பாதையைப் பற்றிப் பேசுகிறார்.
ஞானப்பாதையைப் பின்பற்றுபவர்கள் கடும் முயற்சிகளின் மூலம் அறிவைப் பெற்று, திறமையாலும் அனுபவத்தாலும் பெற்ற அந்த அறிவைப் பரப்பி, அதன்மூலம் என்னை வணங்க முயற்சி செய்கின்றனர்.
புரிந்துகொள்ளுங்கள், வெறுமனே அறிவைச் சேர்த்துக்கொள்வதால், உங்கள் அஹங்காரம்தான் வளர்கிறது. அது ஞானத்தை அளிக்காது. அந்த ஆன்மிக அறிவைத் திரும்பத் திரும்ப அனுஷ்டித்து, அதை உங்கள் அனுபவமாக, அனுபூதியாக மாற்றுங்கள். அதற்குப்பிறகு உங்களின் வாழ்வில் சந்தோஷத் தென்றல் வீசத் தொடங்கிவிடும்.
உபநிஷதங்களில் உள்ள ஞானக்கருத்துக்கள் பிண்டாண்டத்தைப் பற்றியும் பிரம்மாண்டத்தைப் பற்றியுமே பேசுகின்றன. அந்த ஞானக்கருத்துக்களை நாம் அனுபவப்பூர்வமாக உணராமல் இருந்தோமேயென்றால், நம்முடைய அறிவு என்பது வெறும் பேச்சளவிலேயே நிற்கும். அந்த ஸத்யங்கள் நமது அனுபவமாகும்போதுதான் மாற்றங்கள் ஏற்படும்.
உண்மையில் எல்லாப் பாதைகளுமே ஒன்றுதான். எதுவும் எதைவிடவும் உயர்ந்ததோ அல்லது தாழ்ந்ததோ கிடையாது.
கிருஷ்ணர் இங்கு பல்வேறு மார்க்கங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை நமக்காகத் தருகிறார். ஸததம் கீர்தயந்தோ மாம் (9.14) -கடவுளின் மகிமையைப் பாடி வழிபடுவது அல்லது ஜ்ஞானயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே (9.15) -ஞானத்தை வளர்த்துக்கொண்டு, எல்லாவற்றையும் கடவுளின் பாதங்களில் காணிக்கையாக்கி வழிபடுதல் போன்ற பலவழிகளை நமக்காகச் சொல்கிறார்.
என்ன சொல்லி அழைத்தாலும் வருவது அவர் ஒருவரே (9.16 -9.19)
கிருஷ்ணர், சில குறிப்பிட்ட வார்த்தைகளின்மூலம், தாம் யார் என்பதை இங்குச் சொல்கிறார். செயலைச் சிருஷ்டிப்பவரும் அவரே, செய்பவரும் அவரே, செயலும் அவரே என்றும், நாம் செய்கிற, பார்க்கிற, உணர்கிற செயல்கள் எல்லாமே அவருடைய அருளால்தான் நடக்கிறது என்றும், எல்லாவற்றிற்கும் விதையாகவும் அவரே இருக்கிறார் என்றும் சொல்கிறார்.
நாம் பார்க்கும் அனைத்துமே பராஸக்தி என்கிற ப்ரபஞ்ச ஸக்திதான். இதுவே கிருஷ்ணர் இங்கு சொல்லும் செய்தி.
நாம் எல்லோருமே ப்ரஹ்மம்தான், தெய்விகமானவர்கள்தான். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்விக சக்தியானது எங்கும் நிறைந்து எல்லா இடங்களிலும் பொங்கிவழிந்துகொண்டு இருக்கிறது. இதை த்தான் கிருஷ்ணர் இந்த ஸ்லோகங்களில் சொல்கிறார்.
நாம் ஒரு விக்ரஹத்தையோ, வடிவத்தையோ வழிபடும்போது,
> நமது உள்-உணர்வு
> பூர்ணத்வ உணர்வுக்கு மாறிய கணமே,
> நாம் நல்ல விஷயங்களையே
> நம்மை நோக்கி ஈர்க்கிறோம்.
நாம் உண்மையில் அதனுள் இருக்கும் உருவமற்ற ஶக்தியைத்தான் வழிபடுகிறோம். சஞ்சலித்துக் கொண்டிருக்கும் நம்முடைய மனத்தை நிகழ்காலத்திற்குக் கொண்டுவர முதலில் நமக்கு வடிவம் ஒன்று தேவைப்படுகிறது. நாம் ஒரு வடிவத்தை த்யானம் செய்வதற்கு நன்றாகப் பழகியபிறகு, வடிவமற்றதை த்யானம் செய்வது மிகவும் சுலபமாகிறது.
நாம் வடிவத்தை த்யானம் செய்யும்போதுகூட, நாம் விக்ரஹத்தின் மூலமாக வழிபடுகிறோமேதவிர விக்ரஹத்தையே நாம் வழிபடவில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ப்ரபஞ்ச ஶக்தியானது எங்கும் நிறைந்து இருக்கிறது. அது நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் இருக்கிறது. அது நமக்குள்ளும் இருக்கிறது; வடிவம்தான் மாறியுள்ளது.
நான், ‘அனைத்தும்’ என்று சொல்லும்பொழுது, எல்லாம் கிருஷ்ணன், எல்லாம் ப்ரஹ்மம் என்ற பொருளில்தான் சொல்கிறேன்.
அவர் அளித்த வாக்கு (9.20 -9.24)
இப்போது தயவுசெய்து கேட்டல் உணர்வுக்குள் வாருங்கள்!
அடுத்த வரிகள்தான் முக்கியமான பாகம். அது ரகசியத்தை வெளிப்படுத்துகிறது. கிருஷ்ணர், அர்ஜுனனுக்கும் நம் எல்லோருக்கும் சொல்கிறார்.
அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே /
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் // 9.22
“எவர் என்னை எப்போதும் ஆராதித்தும், எவர் எப்போதும்
உங்களது விழிப்புணர்வு
எப்போதுமே பிரபஞ்சத்துடன்
தொடர்புகொண்டுதான் இருக்கிறது
என்னுள்ளேயே நிலைத்தும் இருக்கிறார்களோ, எவரெல்லாம் அநந்யாஸ்சிந்தயந்தோ மாம், இரட்டைத்தன்மையற்ற மனநிலையில், அத்வைத உணர்வில், நானாகவே மாறியநிலையில், எல்லையற்ற விழிப்புணர்வு நிலையில் நிலைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு நான், அவர்களிடம் இல்லாதவற்றைத் தருகிறேன். இருப்பவற்றை பாதுகாக்கிறேன். அவர்களை நானே கவனித்துக்கொள்கிறேன்."
வேறு எந்த மஹா அவதாரமும் இந்த ஸத்யத்தை இவ்வளவு தெளிவாக வெளிப்படுத்தவில்லை.
"நீங்கள் நிலையான விழிப்புணர்வு நிலையில், தெய்விக சக்தியில், ஆனந்த விழிப்புணர்வில் நிலைத்திருந்தீர்களென்றால், நானே உங்களை எல்லா வழிகளிலும் தாங்குகிறேன்," என்று தெளிவாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
யோக க்ஷேம - "அவர்கள் ஆன்மிகரீதியான பலன்களைக் கே ட்டாலும்சரி, உலகியல்ரீதியான பலன்களைக் கேட்டாலும் சரி, அதைத்தருகிறேன். அது அவர்களிடமே நிலைத்திருக்கவும் செய்கின்றே றன். அதை யாரும் அவர்களிடமிருந்து எடுத்துச்செல்லாமல் பாதுகாக்கிறேன்." இது மிகவும் அழகான ஒரு உறுதிமொழி மற்றும் வாக்குறுதி.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். இது வெறும் உறுதிமொழி மட்டும் இல்லை. இது ஒரு ஸத்யம்.
இதில் நமக்கு வியப்பூட்டும் விஷயம் என்னவென்றால், நமக்கு அனைத்து விஷயங்களும் கிடைக்கும் என்றும், எதையுமே நாம் இழக்கமாட்டோம் என்றும் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார். இது நம்புவதற்குக் கடினமான ஒன்றுதான்!
ஒபிரபஞ்சம் நமது எண்ணங்களுக்குப் பதிலளிக்கும்
கேளுங்கள், பிரபஞ்ச இருப்புத்தன்மை நம்முடைய எண்ணங்களுக்கு மறுமொழியளிக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் தனித்தனித்தீவு இல்லை. நம்முடைய வெளி
வாழ்க்கையும் உள் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பு உள்ளவையாக இருக்கின்றன. நாம் ஆன்மிக வாழ்வு வாழ்ந்தோம் என்றால் தானாகவே நாம் ஆன்மிக நண்பர்களை வசீகரிக்கிறோம். நம்முடைய உள்-உணர்வுக்கு இந்த மொத்தப் பிரபஞ்சமும் மறுமொழி தருகிறது.
பிரபஞ்சம், முழுமை; நாம், அதில் ஒரு பகுதி. முழுமையை எதிரியாக நாம் பார்த்தோமானால், நம்மால் அமைதியாக இருக்க முடியாது. இந்த முழுமைதான் தம்முடைய இருப்புநிலை என்பதையும், தாம் முழுமையின் பகுதிதான் என்பதையும் புரிந்துகொள்ளும் மனிதர் மட்டுமே அதீதமான அமைதியையும் ஆனந்தத்தையும் உணர்கிறார்.
நமது சிந்தனையில் ஒருங்குவித்தலைக் கொண்டுவந்து, நமது குறைவுணர்வு எண்ணங்களையும் எதிர்மறை வாக்குறுதிகளையும் நிறைவுசெய்த கணமே, நமது உள்-உணர்வு பூர்ணத்வ உணர்வுக்கு மாறிய கணமே, நாம் இயல்பாகவே நல்ல விஷயங்களை நம்மை நோக்கி ஈர்க்கிறோம்.
நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான்: “நீங்கள் உங்களுள் பூர்ணத்வ உணர்வை உருவாக்கும்போது, உங்கள் உடல்-மன அமைப்புக்குள் உங்களால் கற்பனைசெய்துகூட பார்க்கவியலாத, உங்கள் சிந்தனைக்கெட்டாத பல மங்களகரமான விஷயங்கள் நிகழும்.”
நான் ஒருங்குவித்தலுடனும் சிரத்தையுடனும் சொல்கிறேன், என்னுடைய சொந்த பொறுப்பில் நான் இதை அறிவிக்கிறேன்:
யோகக்ஷேமம் வஹாம்யஹம் - இந்த வரிகள் திடமான ஸத்யம்.
இது தெய்வத்தின் வாக்கு. ஒன்பது வருடங்கள் நான் முழுமையாகப் பாதுகாப்பே இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். கிருஷ்ணர் இன்றும் யோகக்ஷேமம் வஹாம்யஹம் என்ற தம் வார்த்தைகளை நிரூபணம் செய்கிறார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
உங்களது விழிப்புணர்வு எப்போதுமே பிரபஞ்சத்துடன் தொடர்புகொண்டுதான் இருக்கிறது என்பதை நம்புங்கள். பிரபஞ்சம் உங்களைப் பற்றி அக்கறைகொள்கிறது. தெய்விகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அது உங்களது எண்ணங்களுக்கு மறுமொழி அளிக்கிறது.
நாம் என்றுமே மரணமடைவதில்லை
உங்களது விழிப்புணர்வுக்கு, உள்-உணர்வுக்கு உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களை, பல அற்புதங்களை நிகழ்த்துவதற்கான தன்மை இருக்கிறது. நீங்கள் அந்த நிலையான விழிப்புணர்வுக்குள் நிலைகொள்ளும்போது, நீங்கள் உங்கள் விருப்பங்களை நிஜமாக்கிக்கொள்வதற்கான சக்தியையும் உங்களை நோக்கி ஈர்க்கிறீர்கள்.
இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் காக்கும் கடவுளான விஷ்ணுவின் சக்திதான் ஊடுருவி பரந்து இருக்கிறது என்று நாம் புரிந்துகொண்ட மறுகணமே, விஷ்ணுவின் மனைவியான லஷ்மியை, செல்வத்தின் கடவுளை நம்மிடம் வசீகரிக்கிறோம்.
தெளிவான சிந்தனை, படைப்பாற்றல், பொறுப்பெடுக்கும்திறன்
- இவை மூன்றும்தான் செல்வத்தை உருவாக்கி, அதைப் பாதுகாக்கின்றன. நம்முடைய உள்-உணர்வை ஆனந்தமாக வைத்திருக்கும்போது இந்த மூன்றும் தானாகவே நிகழ்கின்றன. பிறகு நம்மைச்சுற்றி செல்வம் உருவாக்கப்படுகிறது, அது நம்மையும் மற்றவர்களையும் வளப்படுத்துவதற்கென நம்மிடமே தங்கிவிடுகிறது.
நம்முடைய உள்-உலக ஆனந்தத்திற்கு, இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை மறுமொழி தந்து, நம்மை ஆசீர்வதிக்கிறது. பிரபஞ்சம் உயிர்ப்புடன் இல்லை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்தப் பிரபஞ்சம் என்பது வெறும் பொருள் என்று நினைக்காதீர்கள். அது உயிர்ப்புள்ள வாழும் புத்திசாலித்தனம்.
நாம் ஆன்மிக வாழ்வில் நுழைந்துவிட்டோமானால், நாம் ஆன்மிக வாழ்க்கையைத்தான் வாழவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டோமானால், இந்த வெளி-உலக விஷயங்களைப்
பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது
ஒரு பேரறிவு என்பதை நாம்
புரிந்துகொண்டால், நாம் என்றுமே
பற்றிய பொறுப்பை தெய்வீகம் எடுத்துக்கொள்கிறது.
இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு, "ஸ்வாமிஜி இன்றிலிருந்து நான் வேலைசெய்வதை நிறுத்திவிடுகிறேன். எனக்கு வேண்டியது எல்லாம் கிடைக்குமா?" என்று கேட்காதீர்கள்.
நீங்கள் 'வேலையை விட்டுவிடுவதை'ப்பற்றி ஏன் நினைக்கவேண்டும்?
நீங்கள் 'வேலையைப் பற்றிய கவலை'யைத்தான் விடவேண்டுமேதவிர 'வேலையை விட்டுவிடுவதை'ப் பற்றி அல்ல!
அப்போது நாம் மேலும் சிறந்த முறையில், உச்ச செயல்திறனில் செயல்படுவோம். நமக்குள் அபரிமிதமான தன்னம்பிக்கை நிறையும். தன்னிச்சையாகவே நாம் பூர்ணத்வ உணர்விலிருந்து செயல்புரியத் தொடங்கிவிடுவோம்.
"இந்த முழுப்பிரபஞ்ச இருப்புத்தன்மையும் என்னைப் பாதுகாக்கிறது. இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை என்னுடைய நண்பன். நான் இந்த முழுமையின் எதிரி இல்லை. நான் இந்த முழுமையின் நண்பன்," என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருப்போம்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நாம் இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் நண்பன் என்பதைப் புரிந்துகொண்டு விட்டோமானால், மரணத்திற்கு நாம் அஞ்சமாட்டோம். ஏனென்றால் நம்முடைய மரணத்திற்கு பின்புகூட நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் இருப்போம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.
என் அனுபவத்திலிருந்து நான் சொல்கிறேன். நாம் ஒருபோதும் அழிவதில்லை. நாம் தொடர்ந்து ஏதோ வடிவத்தில், எங்காவது இருந்துகொண்டே இருக்கிறோம். நாம் ஞானமடைந்தால்கூட, நாம் தூய விழிப்புணர்வு சக்தியாக மாறி, எல்லா இடத்திலும் இருக்கிறோம்.
தெய்விகத்திற்கும் நமக்கும் இடையிலுள்ள தூரத்தின் அளவு -
பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது ஒரு பேரறிவு என்பதை நாம் புரிந்துகொண்டால், நாம் என்றுமே மரணமடைவதில்லை.
எளிமையே தெய்விகத்தின் குணம் (9.25 - 9.28)
"ஒருவர் எனக்கு அன்புடனும் பக்தியுடனும் ஒரு இலையோ, பூவோ, பழமோ, அல்லது நீரோ கொடுத்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன்."
தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். அவர், "நான் பெரிய விஷயங்களைத்தான் ஏற்றுக்கொள்வேன்," என்று சொல்லவில்லை. அவர் சொல்கிறார், 'எளிய விஷயங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.' இதுவே தெய்விகத்தின் சிறப்பு. இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை, தெய்விகம் உயிர்ப்புடன் இருப்பதால், எளிய விஷயங்களுக்கும் மறுமொழி அளிக்கிறது.
அவர் எல்லாவற்றினுள்ளும் பரவி இருந்தாலும்கூட, அவர் மஹோன்னதமானவராக இருந்தாலும்கூட, நாம் அன்புடனும் பக்தியுடனும் சமர்ப்பிக்கும் எந்தவொரு சிறிய பொருளையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்.
உண்மையான உயர்வு என்பது அவர் மஹோன்னதமானவராக இருந்தால் மட்டும் போதாது, அவர் எல்லோராலும் தொடர்புகொள்ள முடிந்தவராகவும் இருத்தல் வேண்டும். அப்படியில்லையென்றால், அவர் உயர்ந்தவராக இருந்தாலும், அதனால் என்ன பயன்?
இங்கே கிருஷ்ணர், சாதாரண மனிதர்களும் அவரோடு தொடர்புகொள்வதற்கான ஒருவழியை உருவாக்கித் தருகிறார். ஒரு பக்கம், தம்முடைய மிக மிக உன்னதமான நிலையையும் காட்டுகிறார். இன்னொரு பக்கம், தம்முடன் இணைந்து கொள்வதற்கான எளிய வழியையும் காட்டுகிறார்.
"அன்போடு ஒரு இலையையோ, பூவையோ, பழத்தையோ அல்லது நீரையோ சமர்ப்பித்தால் போதும். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். உங்களுடன் தொடர்புகொள்கிறேன்," என்கிறார்.
அதனால்தான், ஜ்ஞான குருமார்கள் பிக்ஷையெடுத்து உண்ணவே வண்டும் என்பதே தொன்றுதொட்டுவரும் கோட்பாடு. ஏனென்றால், அப்போதுதான் சாதாரண மக்களாலும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.
இப்படிக் கிருஷ்ணர் சொன்னது, தெய்விகத்திற்கும் நமக்கும் இடையிலுள்ள தூரத்தை பூஜ்யமாக்கிவிடுகிறது.
நீங்கள் தெய்வத்திற்கு காணிக்கையைச் சமர்ப்பிக்கும்போது, அவரிடம் அது இல்லை, அதனால் நீங்கள் கொடுக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். தெய்வத்தோடு இணைவதற்கான, உங்களின் மனப்பூர்வமான ஒப்புதலை வெளிப்படுத்துகிறீர்கள்; அவரும் அதை ஏற்றுக்கொள்கிறார், உங்களோடு இணைந்துகொள்கிறார்.
என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை
(9.29 -9.34)
ஒரு ஜ்ஞான குருவிற்குத் தேவைகள் என்று எதுவும் இல்லை. அவர் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அன்பை எப்போதும் வெளிப்படுத்தி அவர் பரவச்செய்கிறார், ஏனென்றால் அதுவே அவரது உண்மையான இயல்பு! யார், யார் அதனைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் கவலைகொள்வதில்லை. வெறுமனே கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
மலையிலிருந்து புறப்படும் நதியானது, கடலில் சென்று கலக்கும்வரை உள்ள ஒவ்வொரு பகுதியையும் ஆனந்தமாகக் கடந்துசெல்கிறது. தனது பாதையில் பலவகையான கற்களையும் புற்களையும் அது சந்திக்கிறது. பல்வேறு வகை மக்கள் அந்த நதியில் நீராடுகிறார்கள். யார் வந்து தன்னைத் தொடுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த நதி தொடர்ந்து மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு ஜ்ஞான குருவின் செயல்கள் எல்லாமே இதேபோலத்தான்.
இப்போது கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், "ஒருவர் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்திருந்தாலும், பக்திப்பூர்வமான சேவையில் ஈடுபடும்போது அவர் தர்மவானாகிறார். அவர் விரைவில் அழிவில்லாதவராகி, நிலையான முடிவில்லாத விழிப்புணர்வு நிலையைப் பெறுகிறார். ஓ கௌந்தேயா, என் பக்தனுக்கு என்றுமே அழிவில்லை என்பதை துணிவுடன் அறிவிப்பாயாக!’’
“நான் உனக்கு மட்டும் இதனை வெளியிடவில்லை. ந மே பக்த: ப்ரணஸ்யதி - என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்பதை இந்த முழு உலகத்திற்கும் அறிவிப்பு செய்,’’ என்று அவர் சொல்கிறார்.
அடுத்த ஸ்லோகத்தில், ‘‘எவர் வேண்டுமானாலும், அவர்கள் பெண்களோ, வைஸ்யர்களோ அல்லது வேலைசெய்பவர்களோ அல்லது பாபிகளாக இருந்தாலும்கூட. பக்தியினால் என்னை அடைய முடியும்,’’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தம்மை அடைவதற்கு பக்தியைத்தவிர, வேறு முன் தகுதி எதுவும் தேவை இல்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். கிருஷ்ணர் இங்கே சொல்லும் குறிப்பு என்னவென்றால், ஒருவர் எந்த ஜாதியினராக இருந்தாலும்சரி, அவர் கிருஷ்ணரின் மேல் பக்தி, நம்பிக்கைகொண்டிருந்தால் போதும், அவரை அடைய முடியும்.
ஒரு நபர் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவரது உள்-உணர்வு தூய்மையாக இருந்துவிட்டால் போதும், அவர் கிருஷ்ணரின் உணர்வுநிலையை அடைந்து அனுபவிக்க முடியும்.
என்னையே நினைத்திரு
இந்த அத்தியாயத்தின் கடைசி ஸ்லோகங்களில் கிருஷ்ணர் சொல்கிறார்: ‘‘என்னைப் பற்றி நினைப்பதில் மட்டுமே எப்போதும் உன் மனத்தை ஈடுபடுத்து.’’
கிருஷ்ணர், இதைச் சொல்லும்போது, உள்-உணர்வைத்
மூன்று விதமான கர்மாக்களையும்
நாம் முழுவதுமாக அனுபவித்து
தீர்த்தால் மட்டுமே ஞானமடைய
தூய்மைப்படுத்துவதைப் பற்றித்தான் சொல்கிறார்.
நமது உள்-உணர்வை வைத்தே வெளி-உலக நிகழ்வுகள் பிரதிபலிக்கப்படுகின்றன. இந்த முழுப்பிரபஞ்சம், நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திற்கும் மிக அழகாகப் பதிலளிக்கிறது. அதனால்தான், நம்முடைய உள்-உலகைத் தூய்மையாகவும் பூர்ணத்வ உணர்விலும் வைக்கவேண்டியது மிகஅவசியம். உள்ளே இருக்கும் எண்ண ஓட்ட அமைப்பை ஒருங்குவித்தலைக்கொண்டு தூய்மையாக்கி, அதை நேர்மறை உணர்வோடு இருக்கச்செய்ய முடியும்.
அதனால் நாம் என்ன எண்ணுகிறோமோ, அதில் ஒருங்குவித்தலோடு இருக்கவேண்டும். உங்களுக்கு நீங்களே உங்களுடைய கேட்டலைக் கொடுத்துக்கொள்ளும்போது, உங்களுக்குள் ஒருங்குவித்தல் நிகழ்கிறது.
கேளுங்கள், உங்கள் உள்-உணர்வுக்குள் நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளை மிகுந்த கவனிக்கத்தக்க வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீ ங்கள் உச்சரிக்கும்

வார்த்தைகளுக்கு -ததாஸ்து, ததாஸ்து - 'அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்' என்று ஒரு சக்திமிக்க
மனிதர் சொல்லிக்கொண்டிருக்கிறார், அது யார் தெரியுமா?
- நீங்கள்தான்!
நீங்கள், 'நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். ஸ்வாமிஜி இந்த உடலில் வாழும்வரை நானும் அவருடன் வாழ்வேன்' என்ற வார்த்தைகளை உச்சரித்தீர்களானால், அந்தர்யாமியாக இருக்கும் உங்கள் உள்-உணர்வு ததாஸ்து, ததாஸ்து - 'அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்' என்று ஆசீர்வதிக்கும்.
நம்முடைய மனம் தெய்விகத்தைப் பற்றிய நினைவுகளிலேயே எப்போதும் இருந்துகொண்டிருந்தால் நாமும் தெய்விகமாகிவிடுகிறோம். இந்த ஸத்யத்தை உணர்ந்துகொண்ட