KAILASA Library/ஸ்ரீமத் பகவத்கீதை/அத்தியாயம்-10: விபூதியோகம்Sign in
ஸ்ரீமத் பகவத்கீதை

அத்தியாயம்-10: விபூதியோகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களின் சுதந்திரத்திற்கான தீர்வு

படைப்பவனும் நானே!
படைக்கப்பட்டவையும் நானே!
படைப்பும் நானே!
நானே தொடக்கம்,
நானே இடை,
நானே முடிவு!
மற்ற எல்லாமும் மாயையே.
என்னுடைய சிறப்பையும் சக்தியையும்
அறிந்தவர் என்னுள் கரைகிறார்.

என்னை அறிந்துகொள்ளுங்கள்...
விடுதலையடைவீர்கள்!

ஸ்லோகங்கள்

அத தஸமோ௨த்யாய:

விபூதியோக:

ஏ

ஸ்ரீபகவாந் உவாச
பூய ஏவ மஹாபாஹோ ஸ்ரு'ணு மே பரமம் வச: ந
யத்தே௨ஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா நந 10.1

ஸ்ரீபகவான் சொன்னது

10.1 ஓ அர்ஜுனா! கவனமாகத் திரும்பவும் கேள். நீ என் ஆத்ம நண்பன், நான் உன்னுடைய நலனுக்காகவே பேசப்போகிறேன்.

ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய: ந
அஹமாதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ: நந 10.2

10.2 கடவுளை வணங்குபவர்களுக்கும், மிகப்பெரிய துறவிகளுக்கும்கூட என்னுடைய 'மூலம்', என்னுடைய பெருமை தெரியாது. தெய்வங்களுக்கும் ஞானிகளுக்கும் நான் ஆதாரமாக இருக்கிறேன்.

யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஸ்வரம் ந
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே நந 10.3

10.3 யார் ஒருவர், என்னைப் பிறப்பும் தொடக்கமும் இல்லாதவன் என்றும் எல்லா உலகங்களுக்கும் கடவுள் என்றும் தெரிந்துகொள்கிறாரோ, அவருக்கு மட்டுமே அறிவில் தெளிவுகிடைக்கிறது. அவர் எல்லாப் பந்தங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

புத்திர்ஜ்ஞானமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஶம: ந
ஸுகம் து:கம் பவோண்பாவோ பயம் சாபயமேவ ச ந

அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தானம் யஶோன்யச: ந
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக் விதா: ந

10.4,5 வாழும் உயிர்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனம், அறிவு, சந்தேகத்திலிருந்தும் மூடநம்பிக்கையிலிருந்தும் விடுதலை, மன்னிக்கும் மனோபாவம், ஸத்யத்தோடு வாழ்வது, புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, சந்தோஷம், மனக்கவலை, பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, சாத்வீகம், துன்பம் வரும்போதும் மன அமைதியோடு இருத்தல், திருப்தி, துறவறம், ஈகை, புகழ், பற்றின்மை என இந்த எல்லாத் தகுதிகளும் என்னால்தான் உருவாக்கப்பட்டன.

மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா ந
மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: ந

10.6 ஏழு மிகப்பெரிய ஞானிகளும், அவர்களுக்கு முன்னால் இருந்த நான்கு மிகப்பெரிய மநுக்களும் என்னுடைய இயல்புகளை உடையவர்களாய் என்னிடமிருந்து வந்தவர்கள்தான். அவர்கள் என்னுடைய மனத்தில் இருந்து வந்தவர்கள், பிறகு அவர்களிடம் இருந்து இந்தப் பூமிக்ரகத்தில் வசிக்கும் உயிர்கள் எல்லாம் வந்தன.

ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத: ந
ஸோண்விகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்சய: ந

10.7 யார் ஒருவன் என்னுடைய இந்த எல்லா மஹிமைகளையும் சக்திகளையும் அறிந்திருக்கிறானோ, நிஜமாகவே, அவன் என்னுடன் இணைந்தே இருக்கிறான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே ந

இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா: நடு 10.8

10.8 பொருள் சார்ந்த இந்த உலகத்திற்கும் ஆன்மிக உலகத்திற்கும் நானே 'மூல'மாக இருக்கிறேன். எல்லாமே என்னில் இருந்தே தோன்றுகின்றன. இதை அறிந்த அறிவாளிகள், என்னிடம் பக்தி செலுத்துவார்கள்; அவர்கள் தங்கள் இதயங்களை என்னிடம் சரணாகதி செய்கிறார்கள்.

மச்சித்தா மத் கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் நடு
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச நடு 10.9

10.9 மனத்தையும் வாழ்வையும் என்மேல் செலுத்தி ஒருவரையொருவர் ஞானமடையச் செய்துகொண்டும், எனது பெருமைகளைப் பேசிக்கொண்டும் இருக்கிற புத்திசாலிகள், மன நிறைவோடும் பேரானந்தத்தோடும் இருக்கிறார்கள்.

தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் நடு
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே நடு 10.10

10.10 யார் என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஞானத்தை அளிக்கிறேன். அதன்மூலம் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.

தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம: நடு
நாஸயாம் யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா நடு 10.11

10.11 அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால், அவர்களுடைய அறியாமையிலிருந்து தோன்றிய இருளை மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழித்துவிடுவேன்.

அர்ஜுந உவாச

பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந் நடு
புருஷம் ஸாஸ்வதம் திவ்யமாதி தேவமஜம் விபும் நடு 10.12

அர்ஜுனன் சொன்னது 10.12 நீரே மேலான ஸத்யம் மேலான புகலிடம், மேலான புனிதம், ஆதியானவர், நிலையானவர், மேலான மஹிமைகள்கொண்ட கடவுள்.

ஆஹுஸ்த்வாம்ரு'ஷய: ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா ந
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே நந
10.13

10.13 நாரதர், அசித, தேவல, வியாஸர் போன்ற எல்லா ஞானிகளும் இதை விளக்கி இருக்கிறார்கள். இப்போது நீங்கள் எனக்கு அதை நேரடியாக விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஸர்வமேதத்ரு'தம் மந்யே யந்மாம் வதஸி கேஸவ ந
நஹி தே பகவந்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா: நந 10.14

10.14 ஓ கேசவா, நீங்கள் சொன்ன எல்லா ஸத்யங்களையும் நான் ஏற்றுகொள்கிறேன். ஓ ப்ரபு, தேவர்களும் அசுரர்களும் உன்னை அறிய மாட்டார்கள்.

ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புருஷோத்தம ந
பூதபாவந பூதேஸ தேவதேவ ஜகத்பதே நந 10.15

10.15 ஓ முழுமையானவரே, உயிர்களின் ஆரம்பமே, உயிர்களின் இறைவனே, தேவாதிதேவனே, இவ்வுலகின் நாயகரே, நிச்சயமாக, உங்களை உங்களால் மட்டும்தான் அறிய முடியும்.

வக்துமர்ஹஸ்யஸேஷேண திவ்யாஹ்யாத்மவிபூதய : ந
யாபிர்விபூதிபிர்லோகானிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸிநந 10.16

10.16 நீங்கள் எந்த முறையில் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறீர்கள் என்கிற உங்கள் பெருமைகளை உங்களால் மட்டும் விவரிக்க முடியும்.

கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந் ந
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோண்ஸி பகவந்மயா நந 10.17

10.17 ஆழ்ந்து சிந்தனை செய்வதன் மூலம் நான் உங்களை எப்படி அறிய முடியும்? ஓ பிரபு, எந்த மாதிரியான உருவத்தை நான் உம்மேல் சிந்தனைசெய்து பார்க்க வேண்டும்?

விஸ்தரேணாத்மநோ யோகம் விபூதம் ச ஜநார்தந ந
பூய: கதய த்ருப்திர்ஹி ஸ்ரு'ண்வதோ நாஸ்தி மேண்ம்ரு'தம் நந
10.18

10.18 ஓ ஜனார்தனா! உங்கள் சக்திகளையும் மஹிமைகளையும் விரிவாகச்சொல்லுங்கள், தயவுசெய்து என் திருப்திக்காகச் மீண்டும் சொல்லுங்கள், உங்கள் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு நான் சோர்வடையவில்லை.

ஸ்ரீபகவாந் உவாச

ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய: ந
ப்ரதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே நந
10.19

ஸ்ரீபகவான் சொன்னது

10.19 கிருஷ்ணர் சொல்கிறார், “ஓ குருச்ரேஷ்ட, நிச்சயமாக நான் எனது தெய்வீக மஹிமைகளைப் பற்றி உன்னிடம் சொல்வேன். ஆனால் முக்கியமானவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். ஏனென்றால் என் மஹிமைகளைப் பற்றிய விளக்கத்திற்கு எல்லை இல்லை.

அஹமாத்மா குடாகேச ஸர்வபூதாஸயஸ்தித : ந
அஹமாதிஸ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச நந 10.20

10.20 ஓ குடாகேச! வாழும் உயிர்கள் அனைத்துள்ளும் நானே ஆத்மாவாக இருக்கிறேன். எல்லாவற்றின் தொடக்கத்திலும், மத்தியிலும், முடிவிலும் நானே இருக்கிறேன்.

ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்பஸுமாந் ந
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ நந 10.21

10.21 ஆதித்யர்களில் நான் விஷ்ணு. கோள்களில் நான் சூரியன். மருத்துக்களில் நான் மரீசி, நட்சத்திரங்களில் நான் சந்திரன்.

வேதாநாம் ஸாமவேதோண்ஸஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ : ந
இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா நந 10.22

10.22 வேதங்களில் நான் ஸாமவேதமாக இருக்கிறேன். கடவுள்களில் நான் இந்திரன். புலன்களில் மனமாகவும், வாழும் உயிர்களில் உயர்ந்த பிரபஞ்ச உணர்வாகவும் இருக்கிறேன்.

ருத்ராணாம் ஶங்கரஸ்சாஸ்மி வித்தேஶோ யக்ஷரக்ஷஸாம் ந
வஸூநாம் பாவகஸ்சாஸ்மி மேரு: ஶிகரிணாமஹம் நந 10.23

10.23 உருத்திரர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன். யக்ஷ, ராக்ஷஸர்களில் நான் செல்வத்தின் அதிபதியான குபேரனாக இருக்கிறேன். வசுக்களில் நான் நெருப்பாகவும், சிகரங்களில் நான் மேருவாகவும் இருக்கிறேன்.

புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம் ந
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர: நந 10.24

10.24 புரிந்துகொள், ஓ, பார்த்தனே! பண்டிதர்களில் நானே தலைமை ப்ரகஸ்பதி. போர் வீரர்களில் நான் ஸ்கந்தன், நீர்நிலைகளில் நான் கடல்.

மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் ந
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோண்ஸஸ்மி ஸ்தாவராணம் ஹிமாலாய: நந 10.25

10.25 சிறந்த ஞானிகளுள் நான் ப்ருகு, அதிர்வுகளில் நான் ஓம். யாகங்களில், நான் புனிதப் பெயர்களின் உச்சரிப்பான ஜபமாகவும் அசையாத பொருட்களில் நான் இமயமாகவும் இருக்கிறேன்.

அஶ்வத்த: ஸர்வவ்ரு'க்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத: ந
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தூநாம் கபிலோ முநி: நந 10.26

10.26 மரங்களில் நான் ஆல மரமாக இருக்கிறேன். முனிவர்களில் நான் நாரதனாக இருக்கிறேன். கந்தர்வர்களில் நான் சித்ரரதன். தம்மையுணர்ந்த ஞானிகளில் நான் கபிலன்.

உச்சை: ஶ்ரவஸமஶ்வாநாம் வித்தி மாமம்ரு'தோத்பவம் ந
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம் நந 10.27

10.27 குதிரைகளில், பாற்கடலில் அமுதம் கடையும்போது வெளிப்பட்ட உச்சைஶ்ரவஸ் நான் என்று தெரிந்துகொள். யானைகளில் ஐராவதம், மனிதர்களில் நான் அரசன்.

ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநுநாமஸ்மி காமதுக் ந
ப்ரஜநஶ்சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: நந 10.28

10.28 ஆயுதங்களில் வஜ்ராயுதமாக இருக்கிறேன். பசுக்களில் நான் காமதேனு. இனவிருத்தியாளர்களில் காதல் கடவுளான மன்மதனாக இருக்கிறேன். நாகங்களில் நான் வாஸுகி.

அநந்தஶ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம் ந
பித்ரூ'ணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் நந 10.29

10.29 மிகப்பெரிய சர்ப்பங்களில் நான் அனந்தா. நீர்க்கடவுளில் நான் வருணன். மூதாதையர்களில் நான் ஆர்யமா. ஒழுக்கத்தை உறுதிசெய்வதில் நான் யமன்.

ப்ரஹ்லாதஶ்சாஸ்மி தைத்யாநாம் கால : கலயதாமஹம் ந
ம்ரு'காணாம் ச ம்ரு'கேந்த்ரோண்ஹம் வைநதேயஶ்ச பக்ஷிணாம்
நந 10.30

10.30 தைத்யர்களில் (அரக்கர்களில்) நான் ப்ரஹ்லாதன். கணக்கீடுகளில் (மதிப்பீடு) நான் காலம். விலங்குகளில், நான் விலங்குகளுக்கெல்லாம் அரசனாகவும், (சிங்கம்) பறவைகளில் நான் கருடனாகவும் இருக்கிறேன்.

பவந: பவதாமஸ்மி ராம: ஶஸ்த்ரப்ரு'தாமஹம் ந

ஜஷாணாம் மகரஸ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ நந 10.31 10.31 தூய்மைப்படுத்துவற்றில் நான் காற்றாக இருக்கிறேன். ஆயுதம் ஏந்துபவர்களில் நான் இராமனாக இருக்கிறேன். நீர்வாழ் உயிரினங்களில் நான் மகர மீனாக இருக்கிறேன். பாயும் நதிகளில் நான் ஜாஹ்னவி (கங்கை).

ஸர்காணாமாதீ ரந்தச்ச மத்யம் சைவாஹமர்ஜுந ந அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம் நந 10.32 10.32 எல்லாப் படைப்புகளிலும் நானே தொடக்கமாகவும் மையமாகவும் முடிவாகவும் இருக்கிறேன். ஓ அர்ஜுனா, அறிவுகளில், நான் 'தன்னை அறிதல்' என்னும் ஆன்மீக அறிவாக இருக்கிறேன். வாதப்பிரதிவாதங்களில், நான் பகுத்தறிவாக இருக்கிறேன்.

அக்ஷராணாமகாரோண்ஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச ந அஹமேவாக்ஷய: காலோ தாதாஹம் விஸ்வதோமுக: நந 10.33 10.33 எழுத்துக்களில், நான் 'அ' வாக இருக்கிறேன். கூட்டுச் சொற்களில் இருசொற்கூட்டாக இருக்கிறேன். உறுதியாக, நானே முடிவற்ற காலமாக இருக்கிறேன். அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்த்துக்கொண்டிருப்பவனாகவும், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனாகவும் இருக்கிறேன்.

ம்ரு'த்யு: ஸர்வஹரஸ்சாஹமுத்பவஸ்ச பவிஷ்யதாம் ந கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ரு'தி: க்ஷமா நந 10.34 10.34 நானே எல்லாவற்றையும் விழுங்குகிற மரணமாகவும், எதிர்காலத்திற்கான பொருட்கள் அனைத்தையும் படைக்கும் படைப்பாளியாகவும் இருக்கிறேன். பெண்மையில் நான் புகழாக, அதிர்ஷ்டமாக, அழகிய பேச்சாக, நினைவாற்றலாக, நம்பகத்தன்மையாக, பொறுமையாக இருக்கிறேன்.

ப்ரு'ஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம் ந மாஸாநாம் மார்கசீர்ஷோண்ஹம் ரு'தூநாம் குஸுமாகர: நந 10.35

10.35 ஸாம வேதப் பாடல்களில் நான் ப்ருஹத்ஸாமவாக இருக்கிறேன். நானே காயத்ரி. மாதங்களில் நான் மார்கழி. பருவ காலங்களில் நான் வசந்த காலம் (இளவேனிற்காலம்).

த்யூதம் சலயாதமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ந
ஜயோண்ஸ்மி வ்யவஸாயோண்ஸ்மி ஸத்த்வம்
ஸத்த்வவதாமஹம்ந 10.36

10.36 ஏமாற்றும் வேலைகளிலேயே நான் சூதாட்டமாக இருக்கிறேன். ஒளிரும் பொருட்களில் நான் சுடராக இருக்கிறேன். நானே வெற்றி, நானே முயற்சி, நானே நல்லவற்றில் எல்லாம் நன்மையாக இருக்கி- றேன்.

வ்ரு’ஷ்ணீநாம் வாஸுதேவோண்ஸ்மி பாண்டவாநாம்தநஞ்ஜய: ந
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஶநா கவி: நந 10.37

10.37 வ்ருஷ்ணியாக இறங்கியவர்களில் நான் வாஸுதேவ க்ருஷ்ணனாக இருக்கிறேன். பாண்டவர்களில் நான் தநஞ்ஜயன். ஞானிகளுக்குள் நான் வியாஸராகவும் சிந்தனையாளர்களில் நான் உசானாவாகவும் இருக்கிறேன்.

தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம் ந
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் நந
10.38

10.38 ஆட்சியாளர்களுக்கு நான் செங்கோலாக இருக்கிறேன். வெற்றியாளர்களில் நான் மேதைத்தன்மையாக இருக்கிறேன். எல்லா ரகசியங்களிலும் நான் மௌனமாக இருக்கிறேன். அறிவாளிகளிடத்தில் அறிவாக இருக்கிறேன்.

யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந ந
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்நந 10.39

10.39 ஓ அர்ஜுனா! அதுமட்டுமல்ல, இருக்கும் எல்லா ஜீவன்களுக்கும் நானே விதையாக இருக்கிறேன். அசையும் மற்றும் அசையாப் படைப்புக்கள் அனைத்தும் நான் இன்றி நிலைத்திருப்பதில்லை.

நாந்தோண்டௗஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப ந
ஏஷ தூத்தேஸத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா நந 10.40

10.40 ஓ பரந்தப! என்னுடைய தெய்வீக மஹிமைகளுக்கு ஒரு முடிவே கிடையாது. என்னால் சொல்லப்பட்ட எல்லாமே, என்னுடைய எல்லையில்லா மஹிமைகளின் எடுத்துக்காட்டுகள் மட்டும்தான்.

யத் யத் விபூதிமத்ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா ந
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோண்டௗஸம்பவம் நந 10.41

10.41 என்னவெல்லாம் பெருமையாக வெளிப்படுகிறதோ அல்லது அழகாக, ஒளி மிகுந்ததாக வெளிப்படுகிறதோ அவையனைத்தும் என் பேரழகின் ஒரு பகுதிதான் என்பதை நீ உறுதியாக அறிந்துகொள்வாயாக.

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந ந
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஸேந ஸ்திதோ ஜகத்நந 10.42

10.42 ஓ அர்ஜுனா, பலவகையான தோற்றங்களை அறிந்துகொள்வதால் என்ன பயன்? என்னுடைய ஒரேயொரு அம்சத்தினாலேயே, நான் இந்த உலகம் முழுவதிலும் ஊடுருவி பரவி இருக்கிறேன்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஸாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
விபூதியோகோ நாம தஸமோண்ட்ட்யாய: நந

ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள க்ருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'விபூதி யோகம்' எனும் பெயருடைய பத்தாவது

அத்தியாயம்.

உங்களின் சுதந்திரத்திற்கான தீர்வு

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் தேரில்

விபூதி யோகம் என்கிற இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் அவருடைய பெருமைக்குரிய சிறப்புத்தன்மைகளை, இறைப்பண்புகளை வெளிப்படுத்துகிறார். ஒன்பதாவது அத்தியாயத்தில், இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு நமக்குள்ள ஆழமான தொடர்பை உணர்வது எப்படி என்கிற இறுதி இரகசியத்தை அவர் விவரித்தார்.

இந்த அத்தியாயத்தில், அவரே இறுதியானவர் என்பதையும், அவர் தம்மைத்தாமே எப்படி வெளிப்படுத்திக் காட்டுவார் என்பதையும் மிக விளக்கமாகவும் விவரிக்கிறார்.

ஜகத்குரு கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் தம்மைப்பற்றிப் பேசும்போது, தாம் ப்ரபஞ்ச க்ரு'ஷ்ணர், பரப்ரஹ்ம க்ரு'ஷ்ணர் என்ற கருத்தில்தான் பேசுகிறார்.

கடவுள்- நம்மைச் சுற்றி இருக்கும் ஸத்யம் (10.1)

கிருஷ்ணர், கீதை முழுவதையும் பிரபஞ்ச விழிப்புணர்விலிருந்துதான் உபதேசித்தார். குறிப்பாக, அடுத்த அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு பிரபஞ்ச விழிப்புணர்வாகத் தம்மைத்தாமே வெளிப்படுத்திக் காட்டுவதற்கு முன்னர், அவர் இந்த அத்தியாயத்தில் பிரபஞ்ச விழிப்புணர்வின் உச்சத்தில் இருந்தார்.

இங்கே ஜகத்குரு கிருஷ்ணர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, மொத்த மனித சமுதாயத்திற்குமே ஒரு மிகப்பெரிய பரிசு. இந்த அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகங்கள்தான் பகவத்கீதையின் மிச்சமிருக்கும் எல்லா ஸ்லோகங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஸ்லோகங்கள்தான் கீதையைப் புனித நூலாக ஆக்குகிறது.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், சீடருக்கும் குருவுக்கும் இடையிலான உறவு பல வடிவங்களில் இருக்கும். பொதுவாக இது ஐந்து வடிவங்களில் இருக்கும்.

கிருஷ்ணர், அர்ஜுனனோடு தமக்கு இருக்கும் நட்பை எடுத்துக்காட்டுவதால், இங்கே அவர் நான்காவது உறவான ஸக பாவத்தை வெளிப்படுத்துகிறார். அவர், தம்முடைய சீடர் அர்ஜுனனுக்கு குருவாகவும் இருக்கிறார்; அதே சமயம் நண்பராகவும் இருக்கிறார்.

பொதுவாக, நம்முடைய தனிப்பட்ட அஹங்காரத்தினால், பூர்ணத்வத்தை நம்முடைய எதிரியாகப் பார்க்கிறோம்.

நீங்கள் உங்களுடைய தவறான
அஹங்காரத்தை விட்டுவிடும்கணமே
உங்களுக்குள் ஒரு ஆழமான
தளர்வுத்தன்மையை உணர்வீர்கள்.

நாம் மிகப்பெரிய கடலின் சின்னச் சின்ன அலைகளைப் போன்றவர்கள்தான். ஆனால் எப்படியோ திடீரென இந்தச் சின்ன அலை, கடலையே தம்முடைய எதிரியாக நினைக்கத் தொடங்கிவிட்டது.

அலை உருவாகும்போதும், அலையாக இருக்கும்போதும் அல்லது அது வீழ்ந்துவிடும்போதும்கூட, கடலோடு அது தொடர்புகொண்டுதான் இருக்கிறது. ஆனால் எப்படியோ, கடலோடு தனக்குத் தொடர்பில்லை என்று அலை எண்ணத் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல், கடலோடு அது சண்டைபோடவும் தொடங்குகிறது.

தனக்கு கடலோடு முழுவதுமாகத் தொடர்புண்டு என்று அலை உணர வேண்டுமானால், அது கடலால் விழுங்கப்பட வேண்டும். அஹங்காரம் கரைய வேண்டும். அலையின் தனிப்பட்ட அடையாளம் காணாமல் போக வேண்டும். ஜீவன்முக்திக்கு இதுவே முதல் படி.

நாம் இரண்டு வழிகளில் வாழலாம். ஒன்று, ஸத்யத்தை வரவேற்று அதைத் தழுவிக்கொள்வது. அதற்கு நம்முடைய மூலமனப்பாங்கு கரைய வேண்டும். அப்பொழுது மட்டுமே நம்மால் ஸத்யத்தை எதிர்கொள்ள முடியும். ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், ஸத்யம்தான் கடவுள்.

கடவுள் என்பது ஆகாயத்தில் அல்லது பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் மறைந்து கொண்டிருக்கும் தனிப்பொருள் அல்ல; நம்மைச் சுற்றி இருக்கும் ஸத்யம் அவர்தான். இறை இங்கேயே, இப்பொழுதே! தெய்வீகம் இங்கேயே, இப்பொழுதே!

ஓபிரபஞ்ச இருப்புத்தன்மை

உங்களுடைய நண்பன்

இரண்டாவது, பெரும்பாலானவர்கள் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் அதே முறையிலேயே வாழ்வது.

ஸத்யத்தின் நிழல்கூட படியாத நம்முடைய தவறான அஹங்காரத்தைக் காப்பாற்றுவதற்காகவே ஒரு கூட்டை, ஒரு கனவுலகை நம்மைச்சுற்றி உருவாக்கிக்கொள்கிறோம். இதைத்தான் மாயா என்று சொல்கிறோம்.

பிரபஞ்ச இருப்புத்தன்மையை நம்முடைய எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தாலும்கூட, நீங்கள் சித்ரவதையை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்களுடைய நண்பன் என்ற மனோபாவத்தில் நீங்கள் வாழும்போது, அந்த இருப்புத்தன்மையே உங்கள் சொந்தமாகிவிடும். நீங்கள் உங்களுக்குள் ஒரு ஆழமான தளர்வுத்தன்மையை உணர்வீர்கள்.

சென்ற அத்தியாயத்தில், ராஜவித்யா ராஜகுஹ்ய யோகத்தில் - இரகசியங்களின் இரகசியம் என்று கிருஷ்ணர் உபதேசிக்கும் முதல் இரகசியம், பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது உங்கள் எதிரி இல்லை என்பதுதான்!

அது உங்கள் எண்ணங்களுக்குச் செவிசாய்க்கிறது; அதுவே உங்களை எப்போதும் கவனித்துக்கொள்கிறது; அது பேரறிவாக இருக்கிறது.

கடவுளிடம் சரணடைந்தால் பல அற்புதங்களை நிகழ்த்திடுவார்

இந்த அத்தியாயத்தில் அதனுடன் ஆழமாகத் தொடர்புகொள்வது எ hisப்படி என்பதை விளக்குகிறார். அவர், "நானே அந்தச் சக்தி. என்னை நீங்கள் உங்கள் எதிரியாக நினைக்க வேண்டிய அவசியமே இல்லை, அது மட்டுமல்ல, நீங்கள் என்னை ஆழமாக நேசிக்கவும் முடியும்," என்கிறார்.

அடுத்த அத்தியாயமான விஸ்வரூப தர்ஸந யோகத்தில், அவர்தான் இந்த முழுப்பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறார் என்கிற அனுபவத்தை அர்ஜுனனுக்குக் கொடுக்கிறார்.

முதலில் எதிரியாக நினைக்கும் விரோத மனப்பான்மையை நீக்குகிறார். பிறகு, பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒரு ஆழமான தொடர்புணர்வை உருவாக்குகிறார். இறுதியாக அத்வைத அனுபவத்தைக் கொடுக்கிறார். இந்த மூன்று அத்தியாயங்களிலும்

அர்ஜுனனைப் படிப்படியாக வழிநடத்துகிறார்; அர்ஜுனனை அத்வைத உணர்வில் நிலைகொள்ளச் செய்கிறார்.

நாம் இந்தப் புனித நூலை, மறைநூலை ஆழ்ந்த பக்தியோடும் ஆழமான ச்ரத்தையோடும் உள்வாங்குவோம். அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் பூர்ணத்துவத்திற்கு உயர்வோம்.

கிருஷ்ணர் சொல்கிறார், “உன் நன்மைக்காக, ஏனென்றால் நீ என்னுடைய ஆத்ம நண்பன் என்பதற்காக, நான் இதற்குமுன் விளக்கியதைவிட, உயர்ந்த, மேலான அறிவைத் தரக்கூடிய ஸத்யங்களை உனக்கு நான் சொல்கிறேன்.” கிருஷ்ணர் தம்முடைய நன்மைக்காக இல்லாமல், அர்ஜுனனுடைய நன்மைக்காக தம்முடைய பெருமைகளைச் சொல்கிறார்.

கிருஷ்ணர் “நானே கடவுள்,” என்று சொன்ன உடனேயே, அர்ஜுனன் ஞானமடைகிறார். எப்படி? இந்த அனுபவத்தை நீங்களும் உங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள உங்களுக்கு எது தேவைப்படுகிறது?

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், முழுமையான ஸரணாகதி உணர்வு மட்டுமே தேவைப்படுகிறது.

கிருஷ்ணர், புத்தர், மஹாவீரர் எல்லோருமே ஒரே அனுபவத்தைத்தான் அடைந்தார்கள். அவர்களுடைய ஞான அனுபவம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த ஞான அனுபவங்களை அவர்கள் வெளிப்படுத்தியபோது, ஏன் வேறு வேறு விளைவுகள் ஏற்படுகின்றன?

அவர்கள் ஞான அனுபவத்தைச் சொன்னபோது, தங்களுடைய கடவுள்தன்மையைப் பிரகடனப்படுத்தியபோது, சிலர் ஞானமடைகிறார்கள், சிலர் ஓடிவிடுகிறார்கள்.

கிருஷ்ணருடைய வார்த்தைகளைக் கேட்கும்போது, நாமும் எப்படி

உங்களுடைய மூளை
வேலைசெய்வதை நிறுத்தும்போது;
உங்களுடைய தர்க்கம் ஆராய்வதை
நிறுத்தும்போது கிருஷ்ணர் உங்களுள்

ஜீவன்முக்தர்களாக மலர்வது? அவரை நாம் எப்படி உள்வாங்குவது? எப்படிப் பயனடைவது? நமக்குள் அதுபோல நடக்குமா? நாம் இந்த வார்த்தைகளை உள்வாங்குவதற்கு எப்படிப்பட்ட மன நிலையில் இருக்க வேண்டும்?

முழுமையான ஸரணாகதி உணர்வில் இருக்க வேண்டும். அர்ஜுனன் கிருஷ்ணருடைய சீடர், அவரை முழுமையாக நேசிப்பவர். அவர் முழுமையாகக் கிருஷ்ணரிடம் ஸரணாகதி அடைந்திருந்தார். அவருக்குள் சந்தேகமே கிடையாது. இப்போது அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவர் மூளை வேலைசெய்வதை நிறுத்தி இருந்தது; அவருடைய தர்க்கம் ஆராய்வதை நிறுத்திவிட்டிருந்தது.

வாழ்வே இனிமையாக மாறிவிடும்

எவர் ஒருவர் கடவுளோடு முழுமையாக உள்ளார்ந்த உணர்வுப்பூர்வமாக இணைகிறாரோ, அவருக்கு மட்டுமே இந்த ஸத்யம் சொல்லப்பட வேண்டும். அர்ஜுனன் கிருஷ்ணரை முழுமையாகச் சரணடைகிறார். எப்போது நீங்கள் உங்களையே குருவின் பாதத்தில் அர்ப்பணிக்கிறீர்களோ, அப்போதே உங்களுடைய அஹங்காரம் உடைந்துவிடும்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அஹங்காரத்தை மையமாகக்கொண்ட ‘நான்’ என்பது இயற்கைக்கு மாறானது. நீங்கள் முழுமையாகச் சரணடையும்போது, உங்களுக்குள் பேரானந்தமும் மகிழ்ச்சியும் பொங்கத் தொடங்கிவிடும்.

இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்களுடைய நண்பர் என்பதையும், அதுவே உங்களை ஆழமாகக் கவனித்துக்கொள்ளும் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டீர்களானால், நீங்கள் எழுதி வைத்துக்கொண்டுதான் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள்.

உச்ச புத்திசாலித்தனம் என்பது,
பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒரு
கொடூரமான

அதற்குப் பதிலாக, வாழ்க்கையை தன்னிச்சையாக, சூழ்நிலைக்கேற்ப இயற்கையாக வாழ்வதற்கான அளப்பரிய துணிச்சலையும் நம்பிக்கையையும் உங்களுக்குள் பெறுவீர்கள்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்போதுமே உங்களைக் கவனித்துக்கொள்கிறது. உங்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனத்தை நம்புங்கள். வாழ்க்கையை அதன்போக்கில் வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

முந்தைய அத்தியாயத்தில், யோக க்ஷேமம் வஹாம் யஹம்: என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளிக்கிறார். யோக, என்றால் உனக்குத் தேவையானவற்றைக் கொடுப்பது என் பொறுப்பு; க்ஷேமம் என்றால், நான் கொடுத்தவை உன்னிடமே தொடர்ந்து இருக்கவும் நான் பொறுப்பெடுத்துக்கொள்கிறேன்; வஹாம் யஹம்: என்றால் இந்த உறுதிமொழியை அளிக்கிறேன் என்று பொருள்.

கிருஷ்ணர் சொல்கிறார்: “உன்னுடைய ஆன்மிகம் சார்ந்த, உலகியல் சார்ந்த அனைத்து தேவைகளையும் நான் கவனித்துக் கொள்கிறேன். எந்தக் குறையுமில்லாமல் நீ எப்போதும் பேரானந்தத்தில் இருக்கலாம்.”

இது எப்படி நடக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். எப்போது நீங்கள் கடவுளிடம் சரணடைகிறீர்களோ, அப்போதே உங்கள் உயர் விழிப்புணர்வு செயல்பட ஆரம்பித்துவிடும். எங்கும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வாழ்வதற்கான உச்ச புத்திசாலித்தனத்தையும் தைரியத்தையும் பெறுவீர்கள்.

உச்ச புத்திசாலித்தனம் என்பது, பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒரு கொடூரமான சக்தி அல்ல, அது ஒரு புத்திசாலித்தனமான சக்தி, அது நம்மைக் கவனித்துக்கொள்ளும் என்று புரிந்துகொள்வதும், அதனிடம் சரணடைவதும்தான்!

அதுவே ஆனந்தமான வாழ்விற்கான திறவுகோல்.

பிரபஞ்சமே நம்மைத் தோளில் சுமக்கிறது

எப்போது நாம் மனத்தை ஸரணாகதி செய்கிறோமோ அப்போதே நாம் ‘மனம்’ என்ற நிலையிலிருந்து ‘மனம் அற்ற’ நிலைக்குச் சென்றுவிடுகிறோம்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எப்போது நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் ஸரணாகதி அடைகிறோமோ, அப்போதே அது நம்மைத் தன் தோளில் சுமக்கத் தொடங்கிவிடுகிறது. நாம் இந்த வாழ்க்கையின் துன்பங்களை உணர மாட்டோம்.

நம்முடைய குறைகளையெல்லாம் சரிசெய்தபின்பு, ஸரணாகதி செய்யலாம் என்று காத்திருக்காதீர்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே முழு விழிப்புணர்வோடு, ஆழமாக முழுமையாக ஸரணாகதி செய்துவிடுங்கள்; உங்கள் முழு விழிப்புணர்வும் ஒரு புதுவிதமான பேரானந்தத்தில் மிதக்கட்டும்.

கிருஷ்ணர் சொல்கிறார், “நீ என்னுடைய ஆத்ம நண்பன், நீ என்னிடம் ஆழமாகத் தொடர்பு கொண்டிருக்கிறாய். அதனால்தான் உன்னிடம் எல்லா ஸத்யங்களையும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.”

நமக்கு இப்போது தேவையானதெல்லாம் கிருஷ்ணருடான ஆழமான அன்புணர்வே! நம்மை நாம் திறந்துவைத்தால், கிருஷ்ணர் தம்முடைய மஹிமைகளை விவரிக்கும்போது, அவை வெறும் வார்த்தைகளாக மாத்திரமே இல்லாமல், நம்மால் அவற்றை அனுபவமாகவே உணரமுடியும்.

முதலில் கிருஷ்ணர் ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள பகைமையை நீக்குகிறார். அர்ஜுனன் ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா.

இந்த விழிப்புணர்வு இல்லாமலேயே, தொடர்ந்து நாம் பரமாத்மாவுடன், பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் பகைமை கொண்டிருக்கிறோம். அதனால்தான், வாழ்க்கையைச் சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். நாம் இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின்மேல் நம்பிக்கை வைப்பதில்லை.

இன்னொரு விஷயம் : பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் நமக்கு ஆழமான அன்பும் தொடர்பும் இருக்கும்போது, நாம் இறந்தால்கூட, நம்மை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது அதற்குத் தெரியும் என்கிற புரிதல் நமக்குள் ஏற்பட்டுவிடுவதால், நாம் முழுவதுமாகக் கவலையற்றும் தளர்வாகவும் இருப்போம்.

இறந்த பிறகும்கூட, அவர் நம்மைக் காப்பாற்றி வழிநடத்துவார் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். அதனால் இப்போதே அந்த ஸக்தியோடு இணைந்து செல்வதற்கு, அந்த மேலான ஸக்தியிடம் கீழ்ப்படிவதற்கு, சரணடைவதற்கு நம் மனத்தைத் தயார்செய்ய வேண்டும். இப்போதிலிருந்தே நம்முடைய மனத்தையும் உடலையும் தயார்செய்ய வேண்டும்.

தனிமனித இருப்புத்தன்மைக்கும் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கும் உள்ள விரோதத்தை நீக்கிய கிருஷ்ணர், இப்போது பிரபஞ்ச இருப்புத்தன்மையின் மஹிமைகளைச் சொல்கிறார்.

அடுத்தது, தனிமனித இருப்புத்தன்மையும், எல்லாம்வல்ல பிரபஞ்ச இருப்புத்தன்மையும் ஒன்றுதான் என்ற அனுபவத்தைக் கொடுக்கிறார்.

அத்வைதம், த்வைதம்,

விஸிஷ்டாத்வைதம் -இம்மூன்றும் ஒன்றையொன்று நிறைவுசெய்பவையே!

படிப்படியாக, அவர் அர்ஜுனனை விஸிஷ்டாத்வைதத்திலிருந்து த்வைதத்திற்கு எடுத்து வருகிறார். பிறகு அத்வைத நிலைக்கு எடுத்து வந்து, பிறகு அத்வைதத்தைத் தாண்டிய அனுபூதியை, அனுபவத்தை அளிக்கிறார்.

தனக்கென தனித்தன்மைகளைக்கொண்ட தனிமனித இருப்புத்தன்மையானது அந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒருபகுதிதான் என்பதை பூர்ணத்துவத்திலிருந்து புரிந்துகொள்வதே விஸிஷ்டாத்வைதம்.

நமக்கு இப்போது மே தலையானதெல்லாம் கிருஷ்ணருடான

தனிமனித இருப்புத்தன்மை என்பது பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பதிலிருந்து வேறுபட்டது. இவை இரண்டும் தனித்தனியானவையே என்கிற கருத்தை பூர்ணத்துவத்திலிருந்து புரிந்துகொள்வதே த்வைதம்.

ஒருமைத்தன்மையை அதாவது - பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதிதான் தனிமனித இருப்புத்தன்மையும் என்ற கருத்தை பூர்ணத்துவத்திலிருந்து புரிந்துகொள்வதே அத்வைதம்.

விஸிஷ்டாத்வைத்தின் கருத்துகளும், த்வைதத்தின் கருத்துக்களும் தனிமனித இருப்புத்தன்மையும் கடவுளும் தனித்தனியானவை, ஆழமான பக்திதான் இவை இரண்டையும் இணைத்து வைத்திருக்கிறது என்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

அத்வைத தத்துவம், தனிமனித இருப்புத்தன்மையையும் கடவுளையும் இணைத்து ஒரேபொருளாகக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், அதனோடு இந்த ஜகத் - உலகத்தையும் ஒரே பகுதியாகக் காட்டுகிறது. இம்மூன்றும் பார்ப்பதற்குத் தனித்தனியாக தெரிந்தாலும், இவை வேறுவேறானவை கிடையாது என்று சொல்கிறது.

விஸிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் - இந்த மூன்றுமே, ஒரே சூழ்நிலையை வெவ்வேறு வழிகளில் பார்ப்பதுதான்! இதில் எதையுமே தவறு என்று சொல்ல முடியாது. ‘இவை வெவ்வேறானவை’ என்கிற கருத்து நிலையிலிருந்து, ‘எல்லாம் ஒன்றே’ என்று புரிந்துகொள்ளும் நிலைக்கு அர்ஜுனனைக் கிருஷ்ணர் உயர்த்துகிறார்.

“இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் நம்பிக்கை வையுங்கள்,” என்று நான் உங்களிடம் சொல்லும்போது, என்னுடைய பட்டறிவை அடிப்படையாக வைத்துச் சொல்லவில்லை. என்னுடைய தனிப்பட்ட

நீங்கள் என்னுடைய வார்த்தைகளில்
நம்பிக்கை வைக்கும்போது,
கண்டிப்பாக

அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

நீங்கள் என்னை நம்பும்போது, என்னுடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கும்போது, பிரபஞ்ச சக்தியை நம்பும்போது, கண்டிப்பாக நீங்கள் கவனித்துக்கொள்ளப்படுவீர்கள். பிரபஞ்ச சக்தி உங்களைத் தன் பாதுகாப்பில் எடுத்துக்கொள்கிறது. உங்களுடைய மனஅழுத்தம், தலைவலி, கவலை மற்றும் உங்களுடைய பிரச்சினைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுகிறீர்கள்.

அதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும். உங்கள் சக்தி மொத்தத்தையும் நம்பிக்கையின்மேல் குவிக்கும்போது, ஏதோ ஒன்று உங்களுக்குள் நிகழும். ஓர் இரஸவாதம் உங்களுக்குள் நடக்கும்.

கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை நம்மால் ஆழமாக உணர முடிந்தால், இங்கே தளர்வான நிலையில் நம்மால் இருக்க முடிந்தால், கிருஷ்ணர் தம்முடைய மஹிமைகளைப் பற்றிச் சொல்லும்போது எதை விளக்கினாரோ அதே நிலையை நாம் இங்கேயே அனுபவமாக உணர முடியும்.

நானே பரபிரம்மம் (10.2-10.3)

கிருஷ்ணர் சொல்கிறார், "தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும்கூட என்னைத் தெரியாது."

அதாவது, சுகங்களுக்காகவும் ஆடம்பரங்களுக்காகவும் செயல்படுபவர்களால் மட்டுமல்ல, சமய சடங்குகளையும் தவங்களையும் செய்பவர்களாலும்கூட அவரை உணர முடியாது என்று சொல்கிறார்.

"அஹமாதிரGeneralஹி (10.2) -ஆனால் நானே அவர்களின் ஆதாரமாக, மூலமாக இருக்கிறேன்," என்கிறார்.

ஒரு முக்கியமான விஷயம்: 'நான், என்னை' என்று கிருஷ்ணர் சொல்லும் போதெல்லாம் அவர், தம் ஞானமடைந்த விழிப்புணர்வு நிலையைத்தான் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

நாம் ஆன்மிகம்சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி, பொருள்சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி, நம்முடைய வேராக இருப்பது நம்முடைய விழிப்புணர்வே.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் என்ன நடந்தது என்ற கீதையின் முழுக் காட்சியையும் என்னால் பார்க்க முடிகிறது. கிருஷ்ணருடைய போதனைகளுக்குப்பின்பு அர்ஜுனன் முழுமையாகக் கரைந்து கிருஷ்ணர் முன்னால் அமர்ந்துவிட்டார்.

கிருஷ்ணர் விளக்குகிறார், “என் அன்புக்குரியவனே! புரிந்துகொள், வேத்தி லோகமஹேஸ்வரம் (10.3) -நானே அனைத்துமாக இருக்கிறேன். நான் இறங்கி வந்திருக்கிறேன். உன்னை விடுதலை செய்வதற்காகவே நான் இந்த உடலில் பிறந்திருக்கிறேன்.”

“நான் கடவுள்,” என்று குரு சொல்லும்போது, நீங்கள் பேராசையில் மையம் கொண்டிருப்பவர்களாக இருந்தால், நீங்கள் அவரைப் பிடித்து உங்களுக்குவேண்டிய வரங்களையெல்லாம் கேட்பீர்கள். “எனக்கு இதைக் கொடுங்கள், அதைக் கொடுங்கள்,” என்று கெஞ்சத் தொடங்குவீர்கள். பிச்சையெடுக்கத் தொடங்குவீர்கள்.

நீங்கள் பயத்தில் மாட்டிக்கொண்டிருந்தால், அவரைப் பிடித்துக்கொண்டு, “தயவுசெய்து என்னை இதிலிருந்து காப்பாற்றுங்கள், என்னை அதிலிருந்து காப்பாற்றுங்கள்,” என்று கெஞ்சுவீர்கள்.

எப்போது நம்முடைய தேவைகளைக் கேட்க ஆரம்பிக்கிறோமோ அப்போது தெய்வீகம் மறைந்துபோய்விடுகிறது. ஏனென்றால் நாம் அதை அப்போது வியாபாரம் என்ற உணர்வுக்குள் கொண்டுவந்துவிடுகிறோம். அங்கு வியாபார மனம்தான் இருக்கும்.

‘இது நான் அல்ல, இது பராஶக்திதான்’ என்ற தெளிவுடன் நான் இருக்கிறவரை, பராஶக்தி இந்த உடலைப் பயன்படுத்திக்கொள்வாள். அவளுடைய பணியைச் செயல்படுத்த இந்த உருவத்தை உபயோகப்படுத்திக்கொள்வாள். ஏனென்றால் ‘நான்’ வெளியேறியதால், அவள் என்னுடைய உடலில் வசித்துக் கொண்டிருக்கிறாள்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், உங்கள் உடல்-மன அமைப்பைவிட்டு வெளியேவாருங்கள். தெய்வீகம் உள்ளே வந்துவிடும்.

நீங்கள் மலர அவகாசம் அளியுங்கள்

நீங்கள் குருவுடன் நெருங்கிய தொடர்புடையவராக உணரும்போது, அந்தப் பிரபஞ்ச சக்தி உங்களை வழிநடத்தும்.

புரிந்துகொள்ளுங்கள், ஆழமான பொறுமையும் காத்திருக்க முடிவுசெய்தலும்தான் ஸரணாகதி.

அடுத்து என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான பேரார்வம் இல்லாமல், ஓர் ஆழமான, எதிர்ப்பற்ற, நேர்மறையான காத்திருப்புடன் இருப்பதுதான் முழுமையான ஸரணாகதி. 'நான் எப்போதும் காத்திருப்பேன்' என்று நீங்கள் முடிவுசெய்கிற அந்தக் கணமே எல்லா நிகழ்வுகளும் நிகழத் தொடங்கிவிடும்.

நீங்கள் அவசரப்படுவர்களாகவும், மனக் கலக்கமும் குழப்பமும் உடையவர்களாகவும் இருக்கிறவரை, நீங்கள் உங்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளைத் தடுத்துவிடுகிறீர்கள்; அது தாமரையை முயற்சிசெய்து மலர வைப்பதுபோல! நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் மலரின் இதழ்களைக் கையால் திறக்கிறீர்கள். அப்படிச் செய்தால், அது பூவாக இருக்குமா?

சூரியக் கதிர்கள் ஊடுருவும்போது தாமரை தானாகவே மலரும். உங்கள் இருப்புத்தன்மை மலர, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

இந்த ஆழமான இணைப்பை உணர்வதற்குத்தான் கிருஷ்ணர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்வதற்கு, குருவுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதுதான் அடிப்படை தேவையாக இருக்கிறது. அதனால்தான் கிழக்கு நாடுகளில் குருவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

நீங்கள் குருவுடன் நெருங்கிய
தொடர்புடையவராக உணரும்போது,
அந்தப் பிரபஞ்ச சக்தி உங்களை
வழிநடத்தும்.

உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளுங்கள் (10.4-10.7)

முதல் ஸ்லோகத்தைப் புரிந்துகொண்டால் போதும், நீங்கள் உடனடியாக அமைதியடைந்துவிடுவீர்கள். "உன்னிடம் என்ன இருந்தாலும், உனக்கு நல்ல பெயரோ அல்லது கெட்ட பெயரோ என்ன இருந்தாலும், அது என்னால் உருவாக்கப்பட்டதுதான்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். பிறகு ஒன்றை உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள், உங்களோடு இருப்பவை எல்லாமே கடவுளின் பரிசுதான்.

கிருஷ்ணர், வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அது அப்படித்தான் இருக்கிறது என்று உணர்ந்து நிறைவுசெய்யச் சொல்கிறார். நம்மை நாமே அப்படியே ஏற்றுக்கொள்ளும்போதுதான், நம்மால் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். அப்போதுதான் மற்றவர்களுடன் ஒரு ஆழமான நட்பை நம்மால் உணர முடியும்.

மற்றவர்களோடு ஆழமான நட்போடு இருப்பதுதான் ஆன்மிகம். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், மற்றவர்கள்மேல் நமக்கு ஓர் ஆழமான பகையும் வெறுப்பும்தான் இருக்கிறது. சுய-மறுப்பு, சுய-வெறுப்பு மற்றும் சுய-சந்தேகங்களோடுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதைச் சரிசெய்ய, நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களுடனே ஸ்வ - பூர்ணத்வ க்ரியாவைச் செய்யுங்கள், நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், "உயிர்களுக்குள் இருக்கும் சந்தோஷம், துக்கம், பிறப்பு, இறப்பு, பயம், தைரியம், சகிப்புத்தன்மை,

உங்களுடன் பூர்ணத்துவத்துடன்
இருப்பது ஸாதோரி.
பிரபஞ்சத்துடன் பூர்ணத்துவத்துடன்
இருப்பது ஸமாதி.

சமத்துவம், திருப்தி, துறவு, ஈகை, பெயர் -புகழ், பாராட்டு, இழிவு என்ற எல்லா குணங்களும் என்னால்தான் உருவாக்கப்பட்டன.

இதன்மூலம் அவர் குறிப்பிடுகிற அந்த ஸத்யம் என்னவென்றால் உங்கள் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், அஹங்காரம், மமகாரம்,அந்யகாரம், ஸ்வ -அந்யகாரம் - என்னும் இந்நான்கு பரிமாணங்களிலும் ஸ்ரத்தையோடு இருங்கள் என்பதுதான். இந்நான்கு பரிமாணங்களிலும் உச்ச சாத்தியக்கூறுக ளோடு செயல்படுவதுதான் ஜீவன்முக்த நிலையாகும்.

நாம் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்கிற அந்தக்கணமே, பூர்ணத்வ உணர்வை உருவாக்கியகணமே, எல்லா இடங்களிலும் கடவுளையே பார்ப்போம்; எதையும் ஒதுக்கமாட்டோம். ஏற்புத்தன்மை வந்தவுடனேயே, பூர்ணத்வம் நம்முள் மலர்ந்தவுடனேயே நமக்குள் ஓர் உள்ளார்ந்த அறிவுமாற்றம் நிகழும்.

இப்போது நம் மனத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த உணர்வுமாற்ற செயல்முறையானது விரோதத்தை மையமாக வைத்து நிகழ்கிறது. நாம் நம்முடனும் வாழ்க்கையுடனும் பூர்ணத்துவத்தைப் பிரகடனப்படுத்திய அக்கணமே, நாம் ஆனந்த நிலையில் மையங்கொள்கிறோம்.

கிருஷ்ணர் தம்முடைய பெருமையை விளக்குகிறார். அவர் சொல்கிறார், “எவர் ஒருவர், நானே அனைத்துமாக இருக்கிறேன், நானே பிரபஞ்ச விழிப்புணர்வாக இருக்கிறேன் என்பதையும், என் மகிமைகளையும் சக்திகளையும் புரிந்துகொள்கிறாரோ, யோகத்தில் ஈடுபடுகிறாரோ, தம்முடைய தனி விழிப்புணர்வைப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் இணைத்துக்கொள்கிறாரோ அவர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் விடுதலையடைவார் (10.7),” என்று பிரகடனப்படுத்துகிறார்.

கேளுங்கள், நீங்கள் உங்களுடன் பூர்ணத்துவத்துடன் இருக்கும்போது, இந்தப் பிரபஞ்சமும் உங்களோடு பூர்ணத்துவத்துடன் இருக்கும். நீங்கள் உங்களுடன் குறைவுணர்வுடன் இருக்கும்போது, இந்தப் பிரபஞ்சமும் உங்களோடு குறைவுணர்வுடனேயே இருக்கும். உங்களுடன் பூர்ணத்துவத்துடன் இருப்பது ஸாதோரி. பிரபஞ்சத்துடன் பூர்ணத்துவத்துடன் இருப்பது ஸமாதி. ‘கிருஷ்ணர்’ என்பது என்ன என்பதைப் புரிந்து ஏற்றுக்கொண்டாலே போதும், ஒருவர் வேறெதையும் செய்ய வேண்டியதே இல்லை. ‘புரிதலும் பூர்ணத்வ உணர்வும்’ மட்டுமே விடுதலையடையச் செய்துவிடும்’ என்று குரு சொல்கிறார்.

தெய்விகத்தை உணர்ந்திட்டால் நீங்களும் விரிவடைவீர்கள் (10.8-10.11)

இப்போது, கிருஷ்ணருடைய வார்த்தைகளை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ள நினைப்பதைவிட, அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொள்ள முயற்சிசெய்ய வேண்டும்.

ஆழ்ந்த த்யான உணர்வில், அந்த பரப்ரஹ்ம கிருஷ்ணனோடு, நம்முடைய உயிரின் மூலத்தோடு, நம்முடைய வாழ்வின் ஆதார ஸக்தியோடு நமக்கு இருக்கும் தொடர்பை உணர்வோமாக!

நாம்த்யானத்திற்குள்நுழையலாம். ஏனென்றால் இந்த அத்தியாயத்தில் இனிவரும் ஸ்லோகங்கள் எல்லாம் அனுபவப்பூர்வமாக உணரப்பட வேண்டியவை. அவை புரிந்துகொள்ள முடியாதவை; அங்குப் புரிந்துகொள்ள வேண்டியது என்று அதிகமாக ஒன்றும் இல்லை.

‘ஏன் இவர் இத்தனை விரிவாக, நீளமாக இதை விவரிக்கிறார்?’ என்று நாம் நினைக்கலாம். எங்கெல்லாம் மஹிமைகளை காண்கிறோமோ, எங்கெல்லாம் தெய்விகம் ஒளி வீசுகிறதோ, அங்கெல்லாம் சிறப்புத்தன்மை இருக்கிறது என்பதை அவர் நமக்குப் புரியவைக்கிறார். நாம் இதைப் புரிந்துகொள்ளும்போதுதான், வாழ்க்கை தெய்விகமானது; வாழ்க்கை ஒரு வரம் என்பதை அனுபவமாக உணர்ந்துகொள்கிறோம்.

நாம் கடவுளோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும்போது, நாம் கடவுளை திடமாக நம்பும்போது, நமக்கு வேறு சொந்த ஆர்வம் எதுவும் இல்லாதபோது, வாழ்க்கையிடம் எதையும் பிச்சை கேட்காமல் இருக்கும்போது இது நிகழும்.

“அது இருந்தால் ஆனந்தமாக இருப்பேன், இது கிடைத்துவிட்டால் ஆனந்தமாக இருப்பேன்,” என்று நம்பி, அவற்றுக்காகப் பிச்சை

கேட்டுக் கொண்டிருக்கிறவரை, நாம் ‘இது’ அல்லது ‘அது’ என்று எதையாவது கேட்டுக்கொண்டிருப்போம்.

‘நான் அவரை மட்டுமே விரும்புகிறேன், வேறெதையும் இல்லை; எனக்கு அந்தச் சுத்தமான தெய்விக அனுபவம் மட்டும்தான் வேண்டும்’ என்ற புரிதல் நமக்குள் ஏற்படும்போது, இந்த முழுப்பிரபஞ்ச இருப்புத்தன்மையையும் முற்றிலும் ஒரு வித்தியாசமான முறையில் உணரத் தொடங்கிவிடுவோம். அப்போது நம்முள் உணர்வு மாற்றம் ஏற்படத் தொடங்கிவிடும்.

கிருஷ்ணர், இந்த உண்மைகளை முதல்முறையாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னபோது, அர்ஜுனன் அவற்றை எப்படிப் புரிந்துகொண்டிருப்பார் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

“ஓ, அர்ஜுனா! நானே அதுவாக இருக்கிறேன். நானே இதுவாக இருக்கிறேன். நான் அனைத்துமாக இருக்கிறேன்,” என்று கிருஷ்ணர் சொல்லும்போது, அர்ஜுனன் கண்டிப்பாகத் தாம் விரிவடைந்து கொண்டிருப்பதை உணர்ந்திருப்பார்.

நாம் குருவுடன் ஆழமாகத் தொடர்புகொண்டிருப்பதாக உணரும்போது, அவர் தம்முடைய மஹிமைகளை வெளிப்படுத்தும்போது, நாமும் விரிவடைகிறோம்.

இங்கே, கிருஷ்ணர் அனுபவிக்கும் அதே மனநிலையை அர்ஜுனனும் அனுபவிக்கிறார். “ஓ பிரபு! இது அழகாக இருக்கிறது. எனக்குச் சலிப்பே இல்லை. தயவுசெய்து உங்களுடைய எல்லா மஹிமைகளையும் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்,” என்று அர்ஜுனன் கேட்கிறார்.

கிருஷ்ணர், அவர் யார் என்பதையும் அவர் எப்படிப் பிரகாசிக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

வாழ்க்கையிடம் எதையும் பிச்சை கே
கட்காமல் இருக்கும்போது, வாழ்க்கை
ஒரு வரம் என்பதை உணர்ந்துகொள்கி

ஒரு குருவே நம் அறியாமையை நீக்க முடியும்

கிருஷ்ணர் லீலா த்யானத்தைப் பற்றிப் பேசுகிறார். கடவுளின் திருவிளையாடல்கள்மீது த்யானம் செய்வது பற்றிப் பேசுகிறார். நம்முடைய கண்கள் ஆழ்ந்து பார்க்கும் எதுவுமே நம் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

மனத்தைத் தெய்விகத்திலேயே லயிக்கச்செய்தால், நம்முடைய இதயம் தெய்விகத்தால் பிடித்துவைக்கப்பட்டிருந்தால், நாம் இயற்கையாகவே, ஒவ்வொரு நிமிடமும் கடவுளையே நினைத்திருப்போம்.

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் கடவுள் நினைவிலேயே மூழ்கச்செய்தால், தெய்விகத்தன்மையோடு நமக்கு நிகழ்ந்த பழைய அனுபவங்களை நினைவுக்குக்கொண்டுவந்து அவற்றில் நம் மனத்தை லயிக்கச்செய்தால், பிறகு நம்முடைய மனமும் செயல்களும் இயற்கையாகவே, இந்தத் தொடர்பை, இந்தத் தெய்விகத்தைப் பிரதிபலிக்கத் தொடங்கும்.

நாம் ஒருவருக்கொருவர் தெய்விகத்தின் மஹிமைகளைப் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்றால் நாம் எல்லோருமே நம்மைச் சுற்றி அந்தப் பேரொளியைப் பார்க்கிறோம். நாம் தெய்விக இன்பத்திலும், ஆனந்தத்திலும் மெய்மறந்து மிகத் திருப்தியான மனநிலையில், வேறு எதுவும் தேவையில்லாமல் இருக்கிறோம். ஏனென்றால் நாம் நம்முடைய வாழ்க்கையில் தெய்விக இன்பமும் மஹிமையும் நிரம்பியிருப்பதைப் பார்க்கிறோம்.

"மனத்தாலும் உயிராலும் யார் என்னையே சிந்திக்கிறார்களோ, யார் ஒருவரையொருவர் ஞானமடையச் செய்துகொள்கிறார்களோ,

யார் என்னோடு எப்போதும் அன்பால்
இணைந்து இருக்கிறார்களோ,
அவர்களை ஜீவன்முக்தர்களாக மலரச்
செய்கிறேன். -ஸ்ரீகிருஷ்ணர்.

யார் எனது பெருமைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்களோ அந்த அறிவாளிகளே மன நிறைவோடும் பேரானந்தத்தோடும் இருக்கிறார்கள். யார் என்னோடு எப்போதும் அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை ஜீவன்முக்தர்களாக மலரச் செய்கிறேன். அதனால் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள் (10.10),'' என்கிறார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் இங்கே ஸத்ஸங்கத்தைப் பற்றிப் பேசுகிறார். இதயமும் மனமும் உடலும் கடவுளோடு கரைந்துவிட்டவர்கள் ஒன்றுகூடும் இடம்தான் ஸத்ஸங்கம். அவர்களால் கிருஷ்ணரைத்தவிர வேறு எதைப் பற்றியும் பேச முடியாது. அவர்கள் தங்கள் கடவுள்மீதும் குரு மீதும்கொண்ட அன்பாலும் ஆனந்தத்தாலும் நிரம்பியிருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஞானமடைவதற்கான புத்திசாலித் தனத்தைக் கொடுத்து, அவர்களைத் தன்னோடு இணைத்துக்கொள்வதாக அவர் உறுதிமொழி அளிக்கிறார்.

"யார் எப்போதும் என்னோடு அன்பால் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை ஜீவன்முக்தர்களாக மலரச்செய்கிறேன். அவர்களிடம் நான் வைத்திருக்கும் கருணையினால், அவர்களுடைய அறியாமையிலிருந்து தோன்றிய இருளை, ஜ்ஞானதீபேந பாஸ்வதா (10.11) - மெய்யுணர்வு என்ற ஞான ஒளியால் அழிக்கிறேன்," என்று சொல்வதன்மூலம், இந்த ஸ்லோகத்தில் குரு தம்மையே விவரிக்கிறார்.

குரு என்ற ஸம்ஸ்க்ரு'த வார்த்தை இரண்டு எழுத்துக்களைக் கொண்டது. கு என்ற எழுத்து இருளையும் ரு என்ற எழுத்து ஒளியையும் குறிக்கும். குரு, தம்முடைய கருணையால், சீடனை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச்செல்கிறார்

'அறியாமை இருள்' என்பது, ஒருவர் தம்முடைய சுயத்தோடு ஒட்டிவைத்திருக்கும் அடையாளங்களையும், பொருள்சார்ந்த பற்றுதல்களையும் குறிக்கும். இந்த அடையாளங்கள் நிச்சயமாக நம்மைத் துக்கத்திற்குத்தான் அழைத்துச்செல்லும்.

சொல்வதற்கு இனி ஒன்றுமே இல்லை (10.12 - 10.18)

அர்ஜுனன் மிகச்சிறந்த சீடராக ஆகிறார்.

இப்போது அர்ஜுனன் விரும்புவதெல்லாம் என்னவென்றால், அவருடைய கடவுளான, அவருடைய குருவான கிருஷ்ணரே தம்முடைய மஹிமைகளைப்பற்றி மேலும் மேலும் சொல்ல வேண்டும் என்பதுதான்.

"நான் உங்களை அடைவது எப்படி என்பதைப் பற்றியும், உங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதைப் பற்றி அதிகம் சொல்லுங்கள். எனக்கு உங்களுடைய வார்த்தைகளைக் கேட்பதில் சோர்வே இல்லை."

அர்ஜுனன் அவருடைய குருவிடம் மிகவும் அன்பு வைத்திருந்தார். அர்ஜுனனுக்கு இப்போது இருப்பது போன்ற ஆழமான அன்பு இருக்கும்போது, பிருந்தாவனத்தில் கோபிகைகள் கிருஷ்ணர்மீது வைத்திருந்த அன்பைப் போன்ற ஒரு ஆழமான அன்பு உங்களிடம் இருக்கும்போது, அங்கே சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. அங்கே கேட்பதற்குக்கூட ஒன்றுமிருக்காது!

கிருஷ்ணர் இனிமேல் ஏதும் சொல்லத் தேவையில்லை என்று அர்ஜுனனுக்குத் தெரிகிறது. ஆனாலும் கிருஷ்ணர் தம்முடைய பெருமைகளை, லீலைகளை சொல்லக் கேட்பது அர்ஜுனனுக்கு ஆனந்தமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அர்ஜுனன் மிக உயர்ந்த த்யான நிலையில், தமது இறுதி அனுபூதியை அடைவதற்குத் தயார்நிலையில்தான் இருந்தார்.

அவருடைய குரு இனி என்ன சொன்னாலும்சரி, எதைச் செய்தாலும்சரி, அது அவரைப் பொறுத்தமட்டில் எந்தவித வேறுபாட்டினையும் ஏற்படுத்தப் போவதில்லை.

தம்முடைய குருவைப் பற்றி என்ன கேட்டாலும், அவர் காதுகளுக்கு அது அமிர்தமாக இருக்கிறது. அவர் சந்தோஷத்தில் முழுவதுமாக மூழ்கிப்போய் இருந்தார்.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும், பரப்ரஹ்ம கிருஷ்ணரிடம் முறையிட்டால், அந்த ஜகத்குரு உங்களிடமும் தம்முடைய பெருமைகளைப் பற்றி, மஹிமைகளைப் பற்றிப் பேசுவார்.

அதன்பிறகு ஒருமுகப்பட்ட மனத்தோடு அவரின் மஹிமைகளின்மீது உங்களால் த்யானம் செய்ய முடியும்.

அவர் வாக்குறுதி கொடுத்தபடி, உங்களுக்கும் ஞான ஒளியைக் காட்டி ஜீவன்முக்தனாக்குவார்.

நானே முதலாகவும், மையமாகவும், முடிவாகவும் இருக்கிறேன் (10.19 -10.38)

இங்குக் கடவுளை எந்த வழியிலும் முழுமையாக விவரிக்க முடியாது. ஏனென்றால் அது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவிப் பரவியிருக்கிறது. அது ஒவ்வொரு அணுவிலும் வெளிப்படும்போது, ஊடுருவியிருக்கும்போது, அனைத்து உயிர்களின் சாரமாகவே இருக்கும்போது நம்மால் அதன் முழுமையை எப்படி விவரித்து விளக்கிச் சொல்ல முடியும்?

அதனால் கிருஷ்ணர் முக்கியமான விளக்கத்தை மட்டும் விவரித்து, ஆழம் காண முடியாத தெய்விகதன்மையின் ஒரு துளியை மட்டும் காட்டுகிறார்.

கிருஷ்ணர், நான் அனைத்துமாக இருக்கிறேன் என்று சொல்வதுதான் உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தாக இருக்கிறது. தாமே எல்லா உயிர்களுக்குள்ளும் இறுதி விழிப்புணர்வாக இருப்பதாகவும் தாமே தொடக்கத்திலும் மத்தியிலும் முடிவிலும் இருப்பதாகவும் சொல்கிறார். அவர் தாமே இந்த முழு ஆகாயமாக, காலமாக, அதையும் தாண்டி இருப்பதாகச் சொல்கிறார் (10.20).

> கடவுளை நாம் எந்த வழியிலும் > முழுமையாக விவரிக்க முடியாது.

கிருஷ்ணர், எல்லா அண்டங்களையும் அடக்கிய ப்ரஹ்மாண்டமாகவும், அண்டங்களின் எல்லாப் பதிவுகளையும் உள்ளடக்கிய பிண்டாண்டமாகவும், (சிறிய பதிவாகவும்) இருக்கிறார்.

ப்ரஹ்மாண்டம் என்பது பிரபஞ்சம். பிண்டாண்டம் என்பது தனியான ஒர் உயிர். எல்லா உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் உள்ளும் அவருடைய சக்தியே ஊடுருவி பரவியிருக்கிறது. அவரே அவற்றினுடைய இயற்கையை நிர்ணயம் செய்கிறார்.

படைப்பவரும் அவரே; படைப்பும் அவரே; படைக்கப்பட்டனவும் அவரே.

இந்தப் பிரபஞ்சம் என்ற மிகப்பெரிய ஓவியத்திரையில், அவரே ஓவியத்திரையாக இருக்கிறார். அவரே வர்ணமாக இருக்கிறார். அவரே கோடுகளாகவும் சித்திரமாகவும் இருக்கிறார். அவர் இல்லை என்றால் இங்கே எதுவும் இல்லை.

நாம் அவருடைய ஒரு பகுதியாகவே இருந்தாலுங்கூட, அவரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒரேவழி, அவருக்குள் மூழ்கி அவரோடு கலந்துவிட வேண்டும்.

அசையும்பொருள்,அசையாபொருள்

அனைத்தும் நானே

"கடவுள்களில், நான் வாசவராகவும் (இந்திரன்), ருத்ராணாம் ஸங்கரஸ்சாஸ்மி (10.23)-ருத்ரர்களில் சங்கரனாகவும், நீர் நிலைகளில், முடிவற்ற விரிவையுடைய கடலாகவும், ரிஷிகளுள் ஸப்தரிஷிகளில் ஒருவரான ப்ரு'குவாகவும், கிராமஸ்ம்யேகமக்ஷரம் (10.25)-அதிர்வுகளில், இயற்கை ஆற்றல்களுக்கப்பாற்பட்ட

உங்களை மறந்துவிடுங்கள். பிரபஞ்ச சக்தியை மட்டும் தெய்விகமான ஓம் என்ற ஶப்தமாகவும் இருக்கிறேன்,’’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஓம் என்ற முதன்மையான ஶப்தத்திலிருந்துதான், பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறது.

ஓம் - ☐ என்ற வடிவத்தில், மூன்று வளைவுகளும், ஒரு அரை வட்டமும், ஒரு புள்ளியும் இருக்கின்றன.

மூன்று வளைவுகளில்மேல் வளைவு நனவு அல்லது விழிப்புணர்வு நிலையையும், கீழ் வளைவு ஆழ்ந்த தூக்கத்தையும், வலது பக்க வளைவு கனவு நிலையையும் குறிக்கின்றன, இது தனிப்பட்ட மனித விழிப்புணர்வின் மூன்று நிலைகளைக் குறிக்கிறது. அந்தப் புள்ளி, நான்காவது நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வை, துரிய நிலையை முழுமையான விழிப்புணர்வு நிலையைக் குறிக்கிறது.

அந்த அரை வட்டம், மாயையைக் குறிக்கிறது. இந்த மாயைதான், இந்த அரைவட்டம்தான், புள்ளியை மூன்று வளைவுகளிடமிருந்தும் பிரிக்கிறது.

ஆனால் திறந்தநிலையில் இருக்கும் அரைவட்டம், பூர்ணதன்மையை எவ்வகையிலும் பாதிக்கமுடியாது என்பதைக் குறிக்கிறது. நான்காவதுநிலையான துரியநிலை, மாயையால் பாதிக்கப்பட முடியாததாக இருக்கிறது என்பதையே இது குறிக்கிறது.

‘‘பல வகையான யஜ்ஞங்களில், புனிதப் பெயர்களைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும். ஜப யஜ்ஞயமாக நான் இருக்கிறேன், ஸ்தாவராணம் ஹிமாலாய: (10.25) -அசையாத பொருட்களில், நான் இமயமலையாக இருக்கிறேன், அஶ்வத்த: ஸர்வவ்ரு’க்ஷாணாம் (10.26) - மரங்களில் நான் ஆலமரமாக இருக்கிறேன், ஸித்தூநாம் கபிலோ முநி: (10.26) -தன்னையுணர்ந்த ஞானிகளுக்குள் கபிலராக இருக்கிறேன்,’’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

‘‘பவந: பவதாமஸ்மி (10.31) -தூய்மைப்படுத்தும் பொருட்களில் தாம் உருவமற்ற தூய்மையான காற்றாக இருக்கிறேன், அத்யாத்மவித்யா வித்யாநாம் (10.32) -அறிவின் பல்வேறு கிளைகளில், இறுதி ஆன்மிக அறிவாக, அதாவது ‘தன்னை உணர்தலாக’ இருக்கிறேன், நான் முடிவற்ற காலமாகவும், படைப்பவனாகவும் அழிப்பவனாகவும் இருக்கிறேன்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

பெருமைகளுக்கு முடிவே இல்லை (10.39 - 10.42)

கிருஷ்ணர் அர்ஜுனனிடம், “நான் உனக்குப் போதுமான அளவிற்குச் சொல்லிவிட்டேன். இனி நீ கேட்பதற்கு எதுவும் இல்லை. நான் என்னவெல்லாம் சொன்னேனோ, இன்னும் என்னவெல்லாம் என்னால் சொல்ல முடியுமோ, அது கடலின் ஒரு துளியைப்போல, அது என்னில் ஒரு சிறு பகுதி மட்டும்தான். நானில்லாமல் எதுவும் இல்லை. என்னைவிட்டு வெளியில் எதுவும் இருக்க முடியாது. என்னால் அல்லாமல், என்னிடம் இருந்து அல்லாமல் எதையும் உருவாக்க முடியாது,” என்று சொல்கிறார்.

கிருஷ்ணருடைய வடிவமற்ற வடிவத்தைப் பார்ப்பதற்காக, அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் ஓர் அஸ்திவாரத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்.

அர்ஜுனன் இப்போது முழு ஸரணாகதியிலும் ஆழமான நன்றியுணர்விலும் நிறைந்து இருக்கிறார்.

உங்களை மறந்துவிடுங்கள். உங்களை விட்டுவிட்டு, அந்தத் தெய்விகமாகவே இருங்கள், பிரபஞ்ச சக்தியை மட்டும் இருக்கவிடுங்கள். அவரை மட்டும் இருக்கவிடுங்கள், தெய்விகத்தை மட்டும் இருக்கவிடுங்கள்.

இந்த ஸரணாகதி உணர்வால், உங்களுடைய முழு விழிப்புணர்வையும் மாற்றமுடியும். ‘அவருடைய பெருமைகள், - அவருடைய விபூதி

  • அவருடைய தெய்விகப் பேரொளி, உங்களுக்குள் இறுதியான ஸத்யத்தை அனுபூதியாக மலர வைக்கும்’ என்று கிருஷ்ணர் இங்கே அழகாகச் சொல்கிறார்.

நீங்கள் ஆனந்தத்தில்

Flute played by Krishna's hands