அத்தியாயம்-11: விஸ்வரூப தர்ஸன யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
துக்கங்களைத் துறப்பதற்கான தீர்வு
பிரபஞ்ச விழிப்புணர்வுதன்மையை
ஒருவர் எப்படி அனுபவமாக
உணர்வார்?
உண்மையில் அப்போது என்ன
நடக்கிறது?
இந்த அனுபவத்தைப் பெறுவதற்
கான
அடிப்படை தகுதி என்ன?
கிருஷ்ணர்
தமது பிரபஞ்ச ஸாந்நித்யத்தாலேயே
இவற்றை விளக்குகிறார்.
அவற்றை உங்கள்
ஸ்லோகங்கள்
அத ஏகாதஶோsindices
அத ஏகாதஶோsத்யாய:
விஸ்வரூப தர்ஸந யோக:
ஏ
அர்ஜுந உவாச
மநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம் ந
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோsயம் விகதோ மம நந
அர்ஜுனன் சொன்னது
11.1 இறைவா! பிரபஞ்ச விழிப்புணர்வைப் பற்றிய மேலான இரகசியங்களைப் பற்றிய ஞானத்தை நீங்கள் சொல்லிக் கேட்டதால் என்னுடைய குழப்பமான எண்ணங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதை உணர்கிறேன்.
பவாப்யயௌ ஹி பூதாநாம் ஸ்ரு'தௌ விஸ்தரஶோ மயா ந
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் நந
11.2 ஹே! கமலக் கண்ணனே! எல்லா உயிர்களின் படைப்பு பற்றியும், அழிவு பற்றியும் உங்களிடமிருந்து கேட்டு அறிந்தேன். கூடவே தங்களுடைய எல்லையற்ற மேன்மையையும் மகிமையையும் கேட்டறிந்தேன்.
ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஶ்வர ந
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஶ்வரம் புருஷோத்தம நந
11.3 புருஷோத்தமா! நீ யார் என்பதைத் தெளிவாக அறிவித்துவிட்டாய். எல்லாவற்றிலும் இருக்கும் ப்ரபுவே, சிறந்தவனாக இருக்கும் ப்ரபுவே, தங்களுடைய தெய்வீக வடிவைக் காணவிரும்புகிறேன்.
மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ ந
யோகேஸ்வர ததோ மே த்வம் தர்ஸயாத்மாநமவ்யயம் ந 11.4
11.4 என்னால் காண முடியும் என்று நீர் நினைத்தால், யோகத்தின் இறைவா! மறைபொருளின் சாரமே! உம்முடைய ஆதி அந்தமற்ற முழுமையான பிரபஞ்சத்தன்மையை எனக்குத் தயவுசெய்து காட்டி அருள்வீராக.
ஸ்ரீ பகவாநுவாச
பஸ்ய மே பார்த ரூபாணி ஸதஸோ(அ)த ஸஹஸ்ரஸ: ந
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ரு'தீநி ச ந 11.5
பகவான் சொன்னார் 11.5 ஓ பார்த்தா, விதவிதமான வண்ணங்களிலும் வகைவகையான தெய்வீக வடிவங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எனது வடிவங்களைப் பார்.
பஸ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஸ்விநௌ மருதஸ்ததா ந
பஹூந்யத்ரு'ஷ்டபூர்வாணி பஸ்யாஸ்சர்யாணி_பாரத ந 11.6
11.6 ஓ பரதகுலத்தோனே, ஆதித்யர்களையும் வஸுக்களையும் ருத்ரர்களையும் அஸ்வினீ குமாரர்களையும் மருத்களையும் பார், ஒருபோதும் நீ பார்த்திராத அற்புதங்களை எல்லாம் பார்.
இஹைகஸ்தம் ஜகத்க்ரு'த்ஸ்நம் பஸ்யாத்ய ஸசராசரம் ந
மம தேஹே குடாகேஸ யச்சாந்யத்த்ரஷ்டுமிச்சஸி ந 11.7
11.7 உறக்கத்தை வெற்றிகொண்டவனே! அசைகிற அசையாத மற்றும் எதையெல்லாம் பார்க்கவிரும்புகிறாயோ, அனைத்தும் இந்த உடலில் ஒருங்கிணைந்து இருப்பதைப் பார்.
ந து மாம் ஸக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா ந
திவ்யம் ததாமி தே சக்ஷு: பஸ்ய மே யோகமைஸ்வரம் நடு 11.8
11.8 ஆனால் உன்னுடைய ஸ்தூல கண்களினால் என்னை நீ பார்க்க முடியாது. உனக்குத் தெய்வீக கண்களைத் தருகிறேன். என் தெய்வீக சக்தியை உள்வாங்கிக்கொள்.
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்வா ததோ ராஜந் மஹாயோகேஸ்வரோ ஹரி: ந
தர்ஸயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஸ்வரம் நடு 11.9
ஸஞ்ஜயன் சொன்னார்! 11.9 அரசனே, அர்ஜுன் இவ்வாறு சொன்ன பிறகு, யோகத்திற்கே தலைவனாக விளங்கும் ஹரி பார்த்தனுக்குத் தம்முடைய மேலான ப்ரபஞ்ச வடிவைக் காட்டி அருளினார்.
அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஸநம் ந
அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம் நடு 11.10
11.10 அந்த வடிவம் அநேக வாய்களோடும் கண்களோடும் உடையது; பல அதிசயக்கத்தக்க அற்புதக் காட்சிகளைக் கொண்டதாக இருந்தது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்து, அநேக தெய்வீக ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருந்தது.
திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம் ந
ஸர்வாச்சர்யமயம் தேவமநந்தம் விஸ்வதோமுகம் நடு 11.11
11.11 தீவ்யமான மாலைகளும் ஆடைகளும் அணிந்து, தீவ்யமான வாச னை திரவியங்கள் பூசி, பெரும் வியப்பூட்டுவதாக, ப்ரகாசிப்பதாக, முடிவில்லாததாக, எங்கும் முகமுடையதாக ஜொலித்துக் கொண்டிருந்த இந்தப் ப்ரபஞ்ச வடிவத்தை அர்ஜுனன் கண்டார்.
திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா ந
யதி பா: ஸத்ரு'சீ' ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந: நந 11.12
11.12 வானத்தின் ஆயிரம் சூரியன்களுடைய ஒளியானது ஒருமித்து உதித்திருக்குமானால் அது அந்த மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பானதாக இருந்திருக்கும்.
தத்ரைகஸ்தம் ஜகத்க்ரு'த்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா ந
அபச்யத்தேவதேவஸ்ய vரீரே பாண்டவஸ்ததா நந 11.13
11.13 அங்கு தேவ தேவனுடைய தேகத்தில், மொத்தப் பிரபஞ்சமும் தன்னுடைய எல்லையற்ற பாகங்களுடன், திகழ்ந்துகொண்டிருப்பதை பாண்டவனான அர்ஜுனன் பார்த்தார்.
தத: ஸ விஸ்மயாவdependencies்டோ ஹ்ரு'ஷ்டரோமா தநஞ்ஜய: ந
ப்ரணம்ய vஸிரஸா தேவம் க்ரு'தாஞ்ஜலிரபாஷத நந 11.14
11.14 பிறகு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தெய்வத்தைத் தலையால் வணங்கி, கைகூப்பிப் பேசினார்.
அர்ஜுந உவாச
பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே
ஸர்வாம்ஸ்ததா பூதவிசேஷஸ'ங்காந் ந
ப்ரஹ்மாணமீvஸம் கமலாஸநஸ்த -
ம்ரு'ஷீம்vச்ச ஸர்வாநுரகாம்vச்ச திவ்யாந் நந 11.15
அர்ஜுனன் சொன்னது
11.15 கடவுளே, உம்முடைய உடலில் எல்லாக் கடவுள்களையும், பலவிதமான ஜீவன்களையும் பார்க்கிறேன், தாமரை மலர்மீது அமர்ந்திருக்கும் படைப்பின் கடவுளான பிரம்மாவையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம்
பச்யாமி த்வாம் ஸர்வதோண்நந்தரூபம் ந
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம்
பஶ்யாமி விஶ்வேஶ்வர விஶ்வரூப நடு 11.16
11.16 எண்ணிலடங்கா கைகளோடும் வயிறுகளோடும் வாய்களோடும் கண்களோடும் உம்முடைய எல்லையில்லா உருவத்தை எல்லாப் பக்கத்திலிருந்தும் பார்க்கிறேன். ஓ பிரபஞ்சத்தின் வடிவானவனே, ஓ பிரபஞ்சத்தின் கடவுளே! உம்முடைய தொடக்கத்தையோ, இடைப்பட்டதையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை.
கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச
தேஜோராஶிம் ஸர்வதோ தீப்திமந்தம் ந
பஶ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் -
தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம் நடு 11.17
11.17 கிரீடம் அணிந்து, கதாயுதம் தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப் பிழம்பாய், காண்பதற்கு அரியவராய், தகிக்கும் ஸூர்யாக்னி போன்றவராய், எல்லையில்லாதவராக உள்ள உம்மை நான் எங்கும் பார்க்கிறேன்.
த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம்
த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் நிதாநம் ந
த்வமவ்யய: ஶாஶ்வததர்மகோப்தா
ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே நடு 11.18
11.18 தாங்கள் அழியாதவர், அறியத் தகுந்த பரம்பொருள் நீரே! இப்பிரபஞ்சத்தின் ஒப்பற்ற பொக்கிஷம். தர்மத்தைக் காக்கும் மாறாத அழிவில்லாத ரட்சகர். நீங்கள் அழிவில்லாத பரமாத்மா என்பதை நான் நம்புகிறேன்.
அநாதிமத்யாந்தமநந்தவீர்ய -
மநந்தபாஹும் ஶஶிஸூர்யநேத்ரம் ந
பஶ்யாமி த்வாம் தீப்தஹுதாஶவக்த்ரம்
ஸ்வதேஜஸா விஶ்வமிதம் தபந்தம் நடு 11.19
11.19 உம்மை நான் ஆதி நடு அந்தம் இல்லாதவராகவும், எல்லையில்லாச் ச க்தியையுடையவராகவும், எண்ணில்லாக் கைகளையுடையவராகவும், சூரிய சந்திரர்களையே கண்களாக உடையவராகவும், தீப்பிழம்பை வாயாகப் படைத்தவராகவும், உமது தேஜஸினால் உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்பவராகவும் பார்க்கிறேன்.
த்யாவாப்ரு’திவ்யோரிதமந்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைகேந திஶாஶ்ச ஸர்வா: ந
த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம்
லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந் நந 11.20
11.20 விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் இந்த வெளியிலும், மற்ற அனைத்திலும் நீரே வியாபித்திருக்கிறீர். மஹாத்மாவே, உமது அற்புதமான இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூன்று உலகும் நடுங்குகிறது.
அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஶந்தி
கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ரு’ணந்தி ந
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா:
ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: நந 11.21
11.21 தேவ கூட்டங்கள் உம்மிடம் புகுகின்றனர்; சிலர் அஞ்சி கைக்கூப்பி உம்மைப் புகழ்கிறார்கள். மகரிஷிகளும் முனிவர்களும் வாழ்க என்று உம்மைப் போற்றுகிறார்கள்.
ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா
விஶ்வேணப்ஶ்விநௌ மருதஶ்சோஷ்மபாஶ்ச ந
கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா
வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஶ்சைவ ஸர்வே நந 11.22
11.22 உருத்திரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், ஸாத்யர்கள், விச்வதேவர், அஸ்வினிதேவர்கள், மருத்கள், ஊஷ்மபர், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அஸுரர்கள், ஸித்தர்கள் இவர்கள் எல்லோரும்கூடி நின்று வியப்போடு உம்மையே பார்க்கிறார்கள்.
ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம்
மஹாபாஹோ பஹுபாஹூருபாதம் ந
பஹூதரம் பஹுதModernஷ்ட்ராகராலம்
த்ரு'ஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம் ந 11.23
11.23 பெரிய தோள்களை உடையவரே, பல முகங்களையும் கண்களையும் கைகளையும் தொடைகளையும் பாதங்களையும் பல வயிறுகளையும் பயமுறுத்தும் வளைந்த பற்களையும் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.
நப:ஸ்ப்ரு'ஸம் தீப்தமநேகவர்ணம்
வ்யாத்தானநம் தீப்தவிஸாலநேத்ரம் ந
த்ரு'ஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா
த்ரு'திம் ந விந்தாமி ஸமம் ச விஷ்ணோ ந 11.24
11.24 ஓ விஷ்ணுவே, வானளாவிய உருவத்தையும் திறந்த வாய்களையும் ஜொலிக்கிற பெரிய கண்களையும் பல நிறங்களோடும் ப்ரகாசிக்கிற உம்மைக் கண்டு மனம் நடுங்குகிறது. என்னுள் தைரியத்தையும் அமைதியையும் என்னால் காண முடியவில்லை. நான் மிரண்டுபோய் இருக்கிறேன்.
தன்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி
த்ரு'ஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி ந
திஸோ ந ஜாநே ந லபே ச ஸர்ம
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ ந 11.25
11.25 தேவர்களின் தலைவா, பயமுறுத்தும், கோரமான பற்களை உடைய, ப்ரலயகால அக்னிக்கு சமமான உமது முகங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குத் திசைகள் தெரியவில்லை. என்னால் அமைதியும் அடைய முடியவில்லை. உலகிற்கே அடைக்கலமாக, ஆதாரமாக இருப்பவரே, அருள் புரிவீராக.
அமீ ச த்வாம் த்ரு'தராஷ்ட்ரஸ்ய புத்ரா:
ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை: ந
பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ
ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை: ந
வக்த்ராணி தே த்வரமாணா விஸந்தி
தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி ந
கேசித்விலக்நா தஸநாந்தரேஷு
ஸந்த்ரு'ஸ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை: ந
11.26, 27 திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆளும் மன்னர் கூட்டத்துடனும் மற்றும் பீஷ்மர், துரோணர், இரத ஒட்டியின் மகனான கர்ணனுடனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் உமது பயங்கரமான கோரப் பற்களையுடைய வாய்க்குள் பரபரப்புடன் நுழைவதையும் பார்க்கிறேன். சிலர் நசுங்கிய தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பதையும் நான் காண்கிறேன்.
யதா நதீநாம் பஹவோம்புவேகா:
ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி ந
ததா தவாமீ நரலோகவீரா
விஸந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி ந
11.28 எப்படி வெள்ளப் பெருக்கெடுத்து விரைந்தோடும் நதிகள் கடலை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படி, இவ்வுலகைச் சேர்ந்த போர்வீரர்கள், அலைவீசும் உமது வாய்களுக்குள் வேகமாக நுழைகிறார்கள்.
யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா
விஸந்தி நாஸாய ஸம்ரு'த்தவேகா: ந
ததைவ நாஸாய விஸந்தி லோகாஸ் -
தவாபி வக்த்ராணி ஸம்ரு'த்தவேகா: ந
11.29 எப்படி விட்டில் பூச்சிகள் சுடர்விட்டு எரியும் தீயை நோக்கி வேகமாகச் சென்று விழுந்து அழிந்துபோகின்றனவோ, அப்படியே இவ்வுலகின் ஜீவராசிகள் அனைத்தும் அழிவதற்காகவே விரைந்து வந்து உம்முடைய வாய்களில் நுழைகிறார்கள்.
லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தால் -
லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்3பி4: ந
தேஜோபி4ராபூர்ய ஜக3த்ஸமக்ரம்
பா4ஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ ந॥ 11.30
11.30 ஜ்வாலை வீசும் வாய்களால் எல்லா உலகங்களையும், எல்லாப் பக்கத்தில் இருந்தும் விழுங்கி சந்தோஷமாக ருசி பார்க்கிறீர்கள். விஷ்ணுவே, உமது குரூரமான சுடர்கள் முழு உலகையும் நிரப்பிக்கொண்டு எரிக்கின்றன.
ஆக்2யாஹி மே கோ ப4வாநுக்ரரூபோ
நமோSஸ்து தே தே3வவர ப்ரஸீத3 ந
விஜ்ஞாதுமிச்சாமி ப4வந்தமாத்3யம்
ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ரு'த்திம் ந॥ 11.31
11.31 பயங்கர வடிவராகிய தாங்கள் யார் என்று எனக்குச் சொல்லுங்கள். உம்மை வணங்குகிறேன்; தேவர் தலைவா, தயைபுரியுங்கள். மூலப்பொருளே, உம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உமது செயல் எனக்குப் புரியவில்லை.
ஸ்ரீ ப4க3வாநுவாச
காலோSஸ்மி லோகக்ஷயக்ரு'த்ப்ரவ்ரு'த்3தோ4
லோகந் ஸமாஹர்துமிஹ ப்ரவ்ரு'த்த: ந
ரு'தேSபி த்வாம் ந ப4விஷ்யந்தி ஸர்வே
யேSnvவஸ்தி2தா: ப்ரத்யநீகேஷு யோதா4: ந॥ 11.32
ஸ்ரீபகவான் சொன்னது
11.32 உலகங்களை அழிக்கிற எல்லாம்வல்ல காலம் நான். நானே உலகங்களை அழித்துகொண்டு இருக்கிறேன். நீ போர்புரியாவிட்டாலும் எதிர்த்து நிற்கிற சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் யாரும் உயிர்வாழப் போவதில்லை.
தஸ்மாத்த்வமுத்திஷ்ட2 யஸோ லப4ஸ்வ
ஜித்வா ஸத்ரூந் பு4ங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ரு'த்3த4ம் ந
மயைவைதே நிஹதா: பூர்வ மேவ
நிமித்தமாத்ரம் படிவ ஸவ்யஸாசிந் நந 11.33
11.33 இரண்டு கைகளையும் ஒரே மாதிரியாக பயன்படுத்தக் கூடியவனே! நீ எழுந்து, புகழைப்பெறு. எதிரிகளை வென்று, செல்வம்நிறைந்த இராஜ்ஜியத்தை அனுபவி. இந்தப் போர்வீரர்கள் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ ஒரு கருவியாக மட்டும் இரு!
த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச
கர்ணம் ததாந்யாநபி யோதவீராந் ந
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா
யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் நந 11.34
11.34 என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்ட துரோணரையும் பீஷ்மரையும் ஜயத்ரதனையும் கர்ணனையும் மற்ற போர்வீரர்களையும் நீ கொல். பயப்படாதே; போரில் நீ உன்னுடைய பகைவர்களை வெல்வாய்.
ஸஞ்ஜய உவாச
ஏதச்ச்ருத்வா வசனம் கேஸவஸ்ய
க்ரு'தாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ ந
நமஸ்க்ரு'த்வா பூய ஏவாஹ க்ரு'ஷ்ணம்
ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய நந 11.35
ஸஞ்ஜயன் சொன்னது
11.35 கேசவனுடைய இந்த செய்திகளைக் கேட்ட, மணிமகுடம் தரித்த அர்ஜுனன் நடுங்கும் கரங்களால் கைக்கூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குகிறார். தொண்டை அடைக்க, கண்ணீர் நிரம்பிய கண்களுடன், தலைவணங்கி மீண்டும் கிருஷ்ணரைப் பார்த்துப் பேசுகிறார்.
அர்ஜுந உவாச
ஸ்தாநே ஹ்ரு'ஷீகேஸ தவ ப்ரகீர்த்யா
ஜகத்ப்ரஹ்ரு'ஷ்யத்யநுரஜ்யதே ச ந
ரக்ஷாம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி
ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா நந 11.36
அர்ஜுனன் சொன்னது
11.36 ரிஷிகேசா, உம்முடைய புகழைப் பாடுவதில் உலகம் இன்புற்று ஆனந்தமடைகிறது. ராக்ஷஸர்கள் அஞ்சி நாலாபக்கமும் ஓடுகிறார்கள். சித்தர்கள் எல்லோரும் உம்மை வணங்குகிறார்கள். இவை யாவும் உமக்குப் பொருத்தமானவையே.
கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்
கரீயஸே ப்ரஹ்மணோண்ப்யாதிகர்த்ரே ந
அநந்த தேவேஸ ஜகந்நிவாஸ
த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத் ந
11.37 மஹாத்மாவே, அனைத்தைக்காட்டிலும் மேலானவரே, உலகைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்தவரே, பிரபஞ்ச பேரண்டத்தின் தோற்றுவாயே, தேவதேவருக்கெல்லாம் சிறந்தவரே, முடிவில்லாதவரே, உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்க மாட்டார்கள்? தோன்றியுள்ளதும் தோன்றாததும் ஆகிய இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட அழியாப்பொருளும் நீரே!
த்வமாதிதேவ: புருஷ: புராணஸ் -
த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம் ந
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம
த்வயா ததம் விஸ்வமநந்தரூப ந
11.38 நீரே முழுமுதற் பொருள், தொன்மையானவர், பிரபஞ்ச பேரண்டத்திற்கு மேலான புகலிடமாக இருப்பவர். நீரே அறிபவராகவும், அறியத்தக்க விஷயமாகவும் இருக்கிறீர். மேலான இருப்பிடமும் நீரே. கணக்கில் அடங்கா வடிவங்களாக இருப்பவரே! தாங்கள் ஒருவரே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறீர்கள்.
வாயுர்யமோணக்நிர்வருண: ஸஸாங்க:
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹம்ச ந
நமோ நமஸ்தேண்ஸ்து ஸஹஸ்ரக்ரு'த்வ:
புநச்ச பூயோண்பி நமோ நமஸ்தே ந
11.39 வாயு, எமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரஜாபதி, ஆகிய எல்லோருக்கும் தாங்களே முப்பாட்டனார். உமக்குப் பல நமஸ்காரங்கள். ஆயிரம் ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரங்கள்!
நம: புரஸ்தாதத ப்ரு'ஷ்டதஸ்தே
நமோண்ஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ ந
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
ஸர்வம் ஸமாப்நோஷி ததோண்ஸி ஸர்வ: ந
11.40 எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும், பின்புறத்திலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்களிலும் நமஸ்காரம், அளவில்லா வல்லமையையும் முடிவில்லாப் பராக்கிரமத்தையும் உடைய நீர் அனைத்திலும் நன்கு வியாபித்து இருக்கிறீர்கள். அதனால் நீரே எல்லாமுமாக இருக்கிறீர்.
ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம்
ஹே க்ரு'ஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி ந
அஜானதா மஹிமாநம் தவேதம்
மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி ந
11.41 அர்ஜுனன் சொல்கிறார்: உம்முடைய இந்த மஹிமையை அறியாமல், உம்மை வெறும் நண்பராக மட்டும் நினைத்து, கவனமில்லாமலோ அல்லது அன்பாலோ உம்மை 'கிருஷ்ணா, யாதவா, என் நண்பரே' என்றெல்லாம் பணிவில்லாமல் சொல்லிவிட்டேன்.
யச்சாவஹாஸார்தமஸத்க்ரு'தோண்ஸி
விஹாரஸய்யாஸநபோஜநேஷு ந
ஏகோணதவாப்யச்யுத தத்ஸமக்ஷம்
தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் ந
11.42 ஓ அச்சுதா, உம்முடன் நான் விளையாடும்போதும், ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோதும், உட்கார்ந்திருந்தபோதும், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதும், நாம் தனித்திருந்தபோதும், மற்றவர்களுடன் இருந்தபோதும் உம்மை ஏளனமாக எந்தவிதத்தில் அவமதித்திருந்தாலும், அதையெல்லாம் மன்னித்தருளுமாறு உம்மைக் கேட்டுக்கொள்கிறேன்.
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர்கரீயாந் ந
ந த்வத்ஸமோண்ஸ்த்யப்யதிக: குதோண்ந்யோ
லோகத்ரயேண்யப்ரதிமப்ரபாவ ந
11.43 அசையும், அசையா பொருட்களால் நிறைந்திருக்கும் இப்பிரபஞ்சத்திற்கு நீரே தந்தை, போற்றுதலுக்கு உரிய குருவும் நீரே. உமக்குச் சமமானவரும் வேறு ஒருவரும் இல்லை. ஒப்பற்ற பெருமையுடையவரே, இம்மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மிலும் மேலானவர் வேறு ஒருவர் எப்படி இருக்க முடியும்?
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாமஹமீஸமீட்யம் ந
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு:
ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் ந
11.44 அதனால் உடலால் விழுந்து வணங்கி, போற்றத்தக்க உம்மை அருள்புரிய வேண்டுகிறேன். மகனுக்குத் தந்தைபோலவும், தோழனுக்குத் தோழன்போலவும், காதலிக்குக் காதலன்போலவும், தேவனே என்னைப் பொறுத்து மன்னித்தருளுங்கள்.
அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோண்ஸ்மி த்ருஷ்ட்வா
பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே ந
ததேவ மே தர்ஸய தேவரூபம்
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ ந
11.45 பிரபஞ்சத்திற்கே புகலிடமாக விளங்குபவரே, இதற்குமுன்பு பார்த்திராத உம் வடிவத்தைப் பார்த்தபிறகு நான் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறேன்; ஆனால் அதே சமயம், பயத்தால் தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறேன். தேவ தேவர்களுக்கெல்லாம் தலைவரே! நீர் உம்முடைய முந்தைய இனிய வடிவத்தையே எனக்கு கருணைகூர்ந்து காட்டுவீராக.
கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த -
மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ ந
தேநைவ ரூபணே சதுர்புஜேந
ஸஹஸ்ரபாஹோ பவ விஶ்வமூர்தே நந 11.46
11.46 ஆயிரம் கரங்களையுடைய விஶ்வரூபத்தை உடையவரே! கிரீடம் அணிந்தவராக, கதையும் சக்கரமும் கரங்களில் ஏந்தியவராக நான்கு கரங்களுடன் உம்மைக்காண விரும்புகிறேன்.
ஸ்ரீபகவாந் உவாச
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் ரூபம் பரம்
தர்ஶிதமாத்மயோகாத் ந
தேஜோமயம் விஶ்வமநந்தமாத்யம்
யந்மே த்வதந்யேந ந த்ரு'ஷ்டபூர்வம் நந 11.47
ஸ்ரீபகவான் சொன்னது
11.47 அன்புக்குரிய அர்ஜுனா என்னுடைய உள்ளார்ந்த சக்தியின் வெளிப்பாடாக விளங்கும் இந்தப் பொருளியல் சார்ந்த உலகத்திற்குட்பட்டு, மனித அறிவுக்கு எட்டாத என் ஆன்மிக வடிவத்தை உனக்குக் காட்டினேன். உன்னைத்தவிர வேறுயாரும் இதற்குமுன் இந்த இறுதி வடிவத்தைப் பார்த்ததில்லை.
ந வேதயஜ்ஞாத்யயநைர்ந தாநைர் -
ந ச க்ரியAIRந தபோபிருக்ரை: ந
ஏவம்ரூப: ஶக்ய அஹம் ந்ரு'லோகே
த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர நந 11.48
11.48 குருவம்சத்தின் சிறந்த வீரனே, உன்னைத்தவிர வேறு யாரும், வே வததைப் படித்ததாலும், சமார்ப்பணங்களாலும், தானங்களாலும்கூட இந்த வடிவத்தைப் பார்க்கவில்லை. நீ மட்டுமே இவ்வடிவத்தைக் காணும் பேறு பெற்றிருக்கிறாய்.
மா தே வ்யதா மா ச விமூடபாவோ
த்ரு'ஷ்ட்வா ரூபம் கோரமீத்ரு'ங்மமேதம் ந
வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம்
ததேவ மே ரூபமிதம் ப்ரபஸ்ய நந 11.49
11.49 அன்பான சீடனே, இனியும் நீ என்னுடைய இந்தக் கோர வடிவத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அச்சம் நீங்கி, அமைதியான மனத்தோடு மறுபடியும் நீ பார்க்க விரும்பிய எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக.
ஸஞ்ஜய உவாச
இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்தோக்த்வா
ஸ்வகம் ரூபம் தர்ஸயாமாஸ பூய: ந
ஆஸ்வாஸயாமாஸ ச பீதமேநம்
பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா நந 11.50
ஸஞ்ஜயன் சொன்னது
11.50 வாஸுதேவர் இவ்வாறு சொல்லிவிட்டு, அர்ஜுனனுக்கு நான்கு கரங்களுடன்கூடிய தம்முடைய வடிவத்தைக் காட்டினார். பிறகு, தம்முடைய இனிய மானுட வடிவமெடுத்து, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அர்ஜுனனைத் தேற்றினார்.
அர்ஜுந உவாச
த்ரு'ஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந ந
இதானீமஸ்மி ஸம்வ்ரு'த்த: ஸசேதா: ப்ரக்ரு'திம் கத: நந 11.51
அர்ஜுனன் சொன்னது
11.51 ஜனார்தனா, உமது இந்த இனிய மானுட வடிவம் கண்டு, இப்போது மனம் தெளிந்து சாந்தமாக என்னுடைய இயல்பை அடைந்தவனாக இருக்கிறேன்.
ஸ்ரீபகவாநுவாச
ஸுதுர்தர்ஸமிதம் ரூபம் த்ரு'ஷ்டவாநஸி யந்மம ந
தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஸநகாங்க்ஷிண: நந 11.52
ஸ்ரீபகவான் சொன்னது
11.52 தரிசிப்பதற்குரிய என்னுடைய இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய். இந்த ரூபத்தைத் தரிசிக்க தேவர்களும் எப்போதும் விரும்புகிறார்கள்.
நாஹம் வேதைர்ந தபஸா ந தானேந ந சேஜ்யயா ந
ஶக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ரு'ஷ்டவாநஸி மாம் யதா ந் 11.53
11.53 நான்கு கரங்களோடு நீ என்னை எப்படித் தரிசித்தாயோ, அதை வேதங்களைப் படிப்பதாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் புரிந்துகொள்ள முடியாது. இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதால் மட்டுமே ஒருவர் என்னை இவ்வாறு தரிசித்துவிட முடியாது.
ப௵க்த்யா த்வநந்யயா ஶக்ய அஹமேவம்விதோணர்ஜுந ந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப ந் 11.54
11.54 என் அன்பிற்குரிய அர்ஜுனா, எதிரிகளை வாட்டுபவனே, ஒருமுகப்பட்ட பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும், காணவும், அடையவும் முடியும்.
மத்கர்மக்ரு'ந்மத்பரமோ மத்ப௵க்த: ஸங்கவர்ஜித: ந
நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ ந் 11.55
11.55 அன்பிற்கினிய பாண்டு புத்திரனே, எனக்காகப் பக்திஸேவை புரிபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனும் எவனோ அவனே என்னை அடைகிறான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
விஶ்வரூபதர்ஶநயோகோ நாம ஏகாதஶோஉத்யாய: ந்
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய விச்வரூபதர்சந யோகம் எனும் பெயருடைய