KAILASA Library/ஸ்ரீமத் பகவத்கீதை/பதினொன்றாவது அத்தியாயம்.Sign in
ஸ்ரீமத் பகவத்கீதை

பதினொன்றாவது அத்தியாயம்.

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

துக்கங்களைத் துறப்பதற்கான தீர்வு

கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் தேர் காட்சி

பகவத்கீதையின் அனைத்து அத்தியாயங்களைக்காட்டிலும் விஸ்வரூப தர்ஸந யோகம் என்னும் இந்த அத்தியாயம் மிகவும் முக்கியத்துவமும் சிறப்புமாய்ந்தது. இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், தம்முடைய தெய்விக இருப்புத்தன்மையை, பரப்ரஹ்ம கிருஷ்ணரை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

இப்போது, அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு இணங்க தம்முடைய உண்மையான நிதர்சனமான பிரபஞ்ச இருப்பை அர்ஜுனனுக்கு தர்ஸநமாக (விஸ்வரூப தர்ஸநத்தை) வெளிப்படுத்துகிறார்.

நீங்கள் கிருஷ்ணரிடம் காதல்வயப்பட்டு இருக்கிறீர்கள் என்றால், இந்த அத்தியாயம் அவரைத் தெரிந்துகொள்வதற்கும், அவரை ஆனந்தமாக அனுபவிப்பதற்கும்தான்.

இங்கே இந்த அத்தியாயத்தில் அவர் எந்த போதனைகளையும் கொடுக்கவில்லை. கிருஷ்ணர், ‘தானே அனைத்துமாக இருக்கும்’ அனுபவத்தை நேரடியாக வழங்குகிறார்.

அர்ஜுனனைப்போல் பக்குவம் (மன முதிர்ச்சி) அடைந்த ஒருவருக்குத்தான் கிருஷ்ணர் கடவுளாக முடியும். ஒருவர் தேவையான தகுதியும், பக்குவமும் அடையும்போது மட்டும்தான் இந்த ஸத்யங்கள் அவருக்கு அறிவிக்கப்படும்.

நாம் இப்போது மூன்று கேள்விகளை எடுத்து ஆராய்வோம்.

பிரபஞ்ச விழிப்புணர்வை ஒருவர் அனுபவமாகப் பெற முடியுமா? இந்த அனுபவத்தைப்பெற ஒருவருக்கு என்ன அடிப்படை தகுதி தேவை? ஒருவர் இதை அனுபவிக்கும்போது என்ன நடக்கும்?

இந்த மூன்று கேள்விகளுக்கும் கிருஷ்ணர் மிகஅழகாக விளக்கம் தருகிறார்.

தெய்விக வடிவத்தைப் பார்க்கலாம், வாருங்கள்! (11.1-11.4)

இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் தம்மை ஓர் அவதார புருஷராக மட்டுமல்லாமல், எதிலிருந்து அனைத்து படைப்புமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த மூல ஆதாரமே தாம்தான் என்று தம்மை வெளிப்படுத்துகிறார். அவரே எல்லா மூலங்களின் மூலமாகவும், எல்லாக் காரணங்களின் காரணமாகவும், எல்லா உலகங்களையும், எல்லாப் பிரபஞ்சங்களையும் வெளிப்படுத்துகிற மூலமாகவும் இருக்கிறார்.

இப்போது அர்ஜுனனுடைய கேள்விகள் எல்லாம் மாயமாக

ஒருவர் தேவையான தகுதியும்,
பக்குவமும் அடையும்போது
மட்டும்தான் ஸத்யங்கள் அவருக்கு

மறைந்துவிட்டிருந்தன; அவருடைய எல்லாக் குறைவுணர்வுகளும் குழப்பங்களும் கரைந்துபோயிருந்தன.

அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின் தெய்வீகத்தன்மை பற்றியோ, பெருமைகளைப் பற்றியோ விழிப்புணர்வு இல்லாமல் இல்லை.

அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர்மேல் இருந்த ஆழ்ந்த நம்பிக்கைதான், கிருஷ்ணர் ஆயுதம் ஏந்திப் போரிடப் போவதில்லை என்று தெரிந்தபிறகும், அவரையே தம் குருவாக அதாவது சாரதியாகத் தேந்தெடுப்பதற்கு அடிப்படை காரணமாக இருந்தது.

ஆனால் துரியோதனனோ கிருஷ்ணரின் பிரம்மாண்டமான யாதவப் படையே தமக்குத் தேவை என்று தேர்ந்தெடுத்தார்.

அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின்மீது நம்பிக்கை இருந்தபோதிலும், சந்தேகங்களும் இருந்தன. சந்தேகங்களும் நம்பிக்கைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்; ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

பிரபஞ்ச குருவாகத் திகழும் தம்மைப் பற்றி விளக்கியதன் மூலம், கிருஷ்ணர், அர்ஜுனனைச் சுணங்கச் செய்துகொண்டிருந்த அந்த உணர்ச்சிரீதியான சந்தேகங்களைத் தீர்த்துவிட்டார்.

எதையும் தாங்கும் தைரியம் வேண்டும்

முந்தைய அத்தியாயத்தில், உண்மையிலேயே தாம் யார் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்குகிறார். தம்முடைய செயல்பாடுகளையும் மகிமைகளையும் விரிவாக எடுத்துரைத்த பிறகு, தமது தெய்வீக சக்தியின் வெளிப்பாட்டிற்கு எல்லையே இல்லை என்று சொல்கிறார்.

எங்கெல்லாம் புகழ், மகிமை, சக்தி, செல்வசெழிப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தாம் இருப்பதாகச் சொல்கிறார். அவை அனைத்தைப் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. ஏனென்றால் தம்முடைய இறைத்தன்மை நிறைந்த சுய-இருப்பில் இருக்கும் ஒரேயொரு இழைதான் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக்கொண்டிருப்பதாக ஆணித்தரமாகச் சொல்கிறார் கிருஷ்ணர்.

இருந்தும் அர்ஜுனன் தயங்குகிறார். கிருஷ்ணரின் விஸ்வரூபத்தைப் பார்க்க விரும்பியபோதிலும், ஸத்யத்தின் அனுபவத்தைத் தம்மால் தாங்க முடியுமா என்ற சுய- சந்தேகம் அவருக்குள் இருக்கிறது.

“கிருஷ்ணா, என்னால் உமது வடிவத்தைப் பார்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால்... ,” என்ற வாக்கியத்தை அர்ஜுனன் சொல்லும்போது, அது அவருக்குள் ஏற்கனவே ஒளிந்திருக்கும் அச்ச உணர்வை சுட்டிக்காட்டுகிறது.

அர்ஜுனன் சொல்ல விரும்புவதெல்லாம் இதுவே; “நீங்கள் சொல்லியது அனைத்தையும் நான் கேட்டேன். என் கேள்விகள் அனைத்தும் மறைந்துவிட்டன. என் மாயைகளும் கரைந்துவிட்டன. உங்கள் ஒப்புயர்வற்ற பிரம்மாண்டத்தை என்னால் உண்மையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் உண்மையான வடிவத்தை நான் தரிசிக்கலாமா?

உங்களிடம் இதை எல்லாம் கேட்பதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனாலும், மிக்க பணிவுடன், உங்கள் பக்தனாக, உங்களிடம் முழுமையாக ஸரணாகதி அடைந்தவனாக, உண்மையில் நீங்கள் யார் என்பதை எனக்குக் காட்டி அருளுங்கள் என்று உங்களிடம் கேட்கிறேன். தயவுசெய்து உங்கள் முழுமையான ஜோதி சொரூபத்தை, விஸ்வரூபத்தை, துணிவை, ஞானத்தை, ஸத்யத்தை, எல்லாமுமாகிய உங்கள் தர்ஸநத்தை எனக்குக் காட்டுவீர்களாக!”

மூன்றாவது கண் (11.5 -11.8)

விஸ்வரூப தர்ஸநம் அளிக்கும் முன்னர் கிருஷ்ணர் மிகவும் முக்கியமான, அழகான ஒரு வாக்கியத்தைச் சொல்கிறார். “ஓ அர்ஜுனா! இந்த வடிவத்தை உன்னுடைய சாதாரண கண்களால் பார்க்க முடியாது. எனது இந்த வடிவைப் பார்ப்பதற்கு, திவ்ய நேத்ரம் என்றழைக்கப்படும் மூன்றாவது கண் உனக்குத் தேவைப்படுகிறது. திவ்யம் ததாமி தே சக்ஷு... ஆதலால் நான் உனக்கு என்னைப் பார்ப்பதற்கும், அனுபவித்து உணர்வதற்கும், தெய்விக கண்களை அளிக்கிறேன்.”

இந்த ஸ்லோகத்திலிருந்து இருந்து விஸ்வரூப தர்ஸநத்தைக் கொடு க்கத் தொடங்குகிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், "ஓ அர்ஜுனா, எவையெல்லாம் படைக்கப்பட்டு இருக்கின்றனவோ அவை அனைத்தையும், ஜங்கம, அசையும் மற்றும் ஸ்தாவர, அசையாத உயிர்கள் அனைத்தையும், சாதாரண மனிதரால் பார்க்கவே முடியாத பிரபஞ்சத்தையும், மிக உயர்ந்த ஞானிகளும் ரிஷிகளும்கூட பார்த்திராத, அறிந்திராத படைப்புகளையும் நீ பார்க்கத் தொடங்குவாய்!"

கிருஷ்ணர் அர்ஜுனன்மீது கொண்ட எல்லையில்லாக்கருணையாலும், அன்பினாலும் அவருக்கு இதுபோன்ற அதிசயமான, அற்புதமான எல்லா வடிவங்களையும் காட்டுகிறார்.

இப்போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் பிரபஞ்சம் முழுவதிலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் சக்தியைக் கொடுக்கிறார். நிகழ்காலத்தில் மட்டுமல்லாமல், கடந்தகாலத்தில் நடந்ததையும், எதிர்காலத்தில் நடக்கப்போவதையும் பார்க்கும் சக்தியைத் தருகிறார்!

தெய்விக வடிவத்தைக் காண்பது சாத்தியமே

இந்த முழு அத்தியாயத்தின் சாரமாக இருக்கும் அதே மூன்று கேள்விகளை மீண்டும் பார்ப்போம்.

கடவுள் வடிவத்தைப் பார்க்க முடியுமா?

கடவுள் வடிவத்தைப் பார்க்க என்ன அடிப்படை தகுதி தேவை?

கடவுள் வடிவத்தைப் பார்க்கும்போது உண்மையில் என்ன நடக்கும்?

இந்த எளிமையான ஸத்யத்தைப் பணிவோடு சொல்கிறேன், "ஆமாம், இதை அனுபவமாக உணரமுடியும்." தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களை இந்தச் சாத்தியத்தை

குரு என்ன சொல்கிறாரோ
'அது நிச்சயம் நடக்கும்' என்று
பரிபூர்ணமாக நம்புங்கள்.

நம்பவைப்பதில் எனக்கு எந்த இலாபமும் இல்லை.

‘இது எனக்கு இல்லை’ என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த அனுபவம் எல்லோருக்கும் சாத்தியமே என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான், கிருஷ்ணர் சொல்வது உங்களுடைய இருப்புநிலையில் வேலைசெய்யத் தொடங்கும்.

உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம், ‘குரு என்ன சொல்கிறாரோ அது நிச்சயம் நடக்கும்’ என்ற பரிபூர்ணமான நம்பிக்கைதான்.

நான் சொல்கிறேன், அது நிச்சயம் நடக்கும்.

அடுத்து, இதற்குத் தேவையான தகுதி என்ன? என்று பார்ப்போம்.

அடிப்படையில், அர்ஜுனனுக்கு இந்த அனுபவத்தை வழங்கியதன் மூலம், இதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை என்பதையே கிருஷ்ணர் நிரூபித்திருக்கிறார். ஏனென்றால் அர்ஜுனனுக்கே எந்தத் தகுதியும் இருக்கவில்லை.

அர்ஜுனன் எந்தப் பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளவில்லை, கிருஷ்ணர் சொன்ன போதனைகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. வெறுமனே, அவருக்குக் கிருஷ்ணரின் ஸாந்நித்யத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது, அவ்வளவுதான்.

அதேபோல, எங்கோ ஒருபோக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல், இங்கே இருக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது! இந்நேரம் நீங்கள் வேறு எங்கெல்லாமோ இருந்திருப்பதற்கான ஆயிரக்கணக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன; ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, இங்கே இருப்பதைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இந்த ஒரே தகுதிதான் தேவைப்படுகிறது.

உண்மையில், கிருஷ்ணரை முந்தைய உருவத்தில் தவறவிட்ட

இந்தமுறை
கிருஷ்ணரைத் தவறவிடுவதில்லை
என்ற உறுதியோடு இருங்கள்!

அர்ஜுனன்கள்தான் நீங்கள். நீங்கள் இங்கே கேட்டுக்கொண்டும், படித்துக்கொண்டும் இருப்பது, வெறுமனே தற்செயலாக நடந்த செயலோ அல்லது தெய்வ சங்கல்பமோ அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தோ அல்ல.

இங்கே நீங்கள் ஒரு காரணத்தோடுதான் இருக்கிறீர்கள். இந்தத் தகுதியே போதும். இந்தமுறை கிருஷ்ணரைத் தவறவிடுவதில்லை என்ற உறுதியோடு இருங்கள்!

ஒன்று, இந்த அனுபவம் நமக்கும் சாத்தியமே என்பதையும் நாம் எல்லோரும் புரிந்துகொண்டோம்.

இரண்டாவது தகுதி: இங்கே வெறுமனே இருப்பதாலேயே, நாம் அந்தத் தகுதியைப் பெற்றுவிட்டோம் என்பதையும் புரிந்துகொண்டோம்.

அடுத்தது, அந்த அனுபவத்தைப் பெறும்போது என்ன நடக்கிறது?

கிருஷ்ணர் சொல்கிறார் :"அர்ஜுனா, உன்னுடைய சாதாரண கண்களால் என்னைப் பார்க்க முடியாது. திவ்ய சக்ஷு என்ற தெய்விக கண்களால்தான் அது முடியும். என்னுடைய பிரபஞ்ச வடிவத்தைப் பார்ப்பதற்கு நான் உனக்குத் தெய்விக கண்களை அளிக்கிறேன்!"

தெய்விக கண்கள் என்றால் என்ன?

360 டிகிரியில் எல்லாத் திசைகளையும் ஒரே நேரத்தில் பார்க்கவும், உணரவும் முடிந்த பார்வையைத்தான், கிருஷ்ணர் திவ்யசக்ஷு, த்ரிநேத்ரம், ஞானக்கண், ஆஜ்ஞா சக்ரம் என்று சொல்கிறார்.

இந்த ஞானக்கண் திறக்கும்போது 360 டிகிரியில் செங்குத்தாகவும், கிடைமட்டமாகப் பார்ப்பது மட்டுமல்லாமல், முழுப்படைப்புமே நீங்களாக இருப்பதையும், அந்த அனுபவமாகவும் நீங்களே இருப்பதையும் உணர்வீர்கள். இந்த அனுபவத்தைத்தான் கிருஷ்ணர் பிரபஞ்ச விழிப்புணர்வு என்று சொல்கிறார்.

இந்த வரிகளுக்குப்பிறகு கிருஷ்ணரோ, அர்ஜுனனோ பேசவில்லை. திடீரென்று ஸஞ்சயன் பேச ஆரம்பிக்கிறார்.

பகவத்கீதையின் முதல் அத்தியாயத்திற்குப் பிறகு இப்போதுவரை ஸஞ்சயன் பேசவே இல்லை. ஆனால் இங்கே அவர்தான் பேசுகிறார். இதுவொரு அடையாள குறியீடு. அளவு கடந்த ஆனந்தத்தால், அர்ஜுனன் பேசமுடியாமல் இருக்கிறார். கிருஷ்ணரின் குரலோ, நம்மால் கேட்கமுடியாத பிரபஞ்ச அலைவரிசையின் நிலையில் இருக்கிறது. ஆகவே ஸஞ்சயன் விளக்குகிறார்.

ஒசுடர்விடும் சூரியன்கள் (11.9 -11.14)

“வானத்தின் ஆயிரம் சூரியன்களுடைய ஒளியானது ஒருமித்து உதித்திருக்குமானால் அது அந்த மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பானதாக இருந்திருக்கும்.” இந்த வரிகள், எல்லையில்லாத, முடிவில்லாத, வியப்பூட்டும், எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின்தன்மையைக் காட்டுகிறது.

இந்த அனுபவத்தைப் பெற்ற ஒவ்வொருவரும் மறுபடியும் புதிதாகப் பிறக்கிறார்கள். உடல் விரிவடைந்து எல்லாவற்றையும் நிரப்புகிறது. இந்த முழுப்பிரபஞ்சமுமே உடலின் ஒரு பாகமாக மாறுகிறது.

முழுமைக்கும், தனிப்பட்டதற்கும் எந்தப் பிரிவினையும் இல்லை, தனிப்பட்ட ஒரு பாகமே முழுமையாகவும், முழுமையே தனிப்பட்ட ஒரு பாகமாகவும் இருக்கிறது. மற்றொரு நிலையில் முழுப்பிரபஞ்சமும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.

இதைத்தான் அர்ஜுனன் விஸ்வரூப தர்ஸநத்தில் பார்த்தார். அந்தப் பிரபஞ்ச வடிவில் கணக்கிலடங்காத வாய்களும் கண்களும் அற்புதமான காட்சிகளும் அடங்கியிருக்கக் கண்டார். அது மட்டுமல்ல, இடது வலது,மேல் கீழ், முன் பின் என்று 360 டிகிரியில் எல்லாத் திசைகளிலும், எல்லாப் பக்கங்களிலும் உள்ளவற்றையும் அவர் பார்த்தார்.

அவர் முழு உலகையும் தம்முடைய சொந்த ‘இருப்பா’கவே

விஷ்ணு என்கிற சொல்லுக்கு
எல்லையில்லாமல் விரிவடைபவர்
என்று அர்த்தம்.

உணர்ந்தார்.

கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்திற்கு எல்லையே இல்லை. விஷ்ணு என்கிற சொல்லுக்கு எல்லையில்லாமல் விரிவடைபவர் என்றுதான் அர்த்தம். அதுதான் அவருடைய உண்மையான வடிவம்.

ஸஞ்சயன் சொல்லும் இந்த அற்புதக்காட்சி, மனித மனத்திற்கு தெரிந்த அத்தனைக்கும் அப்பாற்பட்ட அற்புதமாக இருந்தது. ஏனென்றால் அதுவே அற்புதங்களின் பிறப்பிடமாக இருக்கிறது.

அர்ஜுனன் பயபக்தியில் அமைதியாக இருந்தார். அவருக்கு, எங்குப் பார்த்தாலும் கிருஷ்ணரின் வடிவமே தெரிந்தது. கிருஷ்ணர், பல்வேறு உருவங்களாகவும், உருவமே அற்றவராகவும் தெரிந்தார்.

அர்ஜுனன் பார்த்ததை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மனத்தைத் தாண்டி, தர்க்க அறிவைத்தாண்டி, வார்த்தைகளைத்தாண்டி, எல்லாப் புரிதல்களையும் தாண்டியிருக்கும் ஒன்றை ஒருவர் எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்?

முழுப்பிரபஞ்சமும் உங்களுக்குள் இயங்குகிறது

பரமாத்மாவின் உடலில் இந்த முழுப்பிரபஞ்சமும் பலவிதங்களில் பிரிந்து இருப்பதையும், அதே சமயத்தில் ஒரே வடிவத்தில் ஒன்று கூடி இருப்பதையும் அர்ஜுனன் பார்த்தார்.

சூரியன், சந்திரன், பூமி, கிரஹங்கள் மற்றும் அண்ட வெளியிலுள்ள பிற பொருட்கள் என பல்வேறு விதமாக இந்தப் பிரபஞ்சம் பிரிந்திருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் இங்கே ஒரே வடிவமாக அவர் பார்க்கிறார்.

கிருஷ்ணர் அர்ஜுனன்மீது கொண்ட
எல்லையில்லாக் கருணையாலும்,
அன்பினாலும் அவருக்கு எல்லா
வடிவங்களையும் காட்டுகிறார்.

அர்ஜுனன் பார்த்த காட்சி அவரை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அவரும் அந்தக் காட்சியின் ஒருபாகமாகவே மாறிவிட்டார். அவரே பார்வையாளராகவும், எது பார்க்கப்பட்டதோ அதுவாகவும் இருந்தார்.

மேலும் அவரே அந்த அனுபவமாகவும் இருந்தார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒன்றாக வளர்ந்தார்கள். இந்த ஒரு நொடியில் அந்த உறவு மாற்றி அமைக்கப்பட்டது. இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில், அர்ஜுனன் கிருஷ்ணருடைய விஸ்வரூப தர்ஸனத்தைப் பார்த்த அந்த நொடியில் நட்பைப் பற்றிய எல்லா நினைவுகளும் மறைந்தது; அவர் ஒரு வேலைக்காரராகவே, தாஸராகவே மாறினார்.

கைகள் நடுங்க, ரோமம் சிலிர்க்க, கண்ணில் நீர்வழிய, தாம் என்ன பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் அர்ஜுனன் மலைத்துப்போனார். தம்முடைய நண்பரான கிருஷ்ணர் முன்னால் கைகளைக்கூப்பி, தலைவணங்கி, தம்மை மறந்த பரவச நிலையில் பேசத் தொடங்கினார்.

தம்மை மறந்த பரவச நிலையை ஒருவர் வரவழைக்க முடியாது. அர்ஜுனன் பக்திப் பூர்வமான பயத்தில் இருந்தார். ஈடு இணையில்லாத ஒரு சக்தியின் முன்னால் தாம் இருப்பதை அவர் உணர்ந்தார். அவர் மனம் செயல்படாதபோது, அவர் இருப்புத்தன்மை முழுமையாகத் திறந்துகொண்டது.

உண்மையில் அர்ஜுனன் அந்தக் கணத்தில் ஐந்து பாவங்களையும் கடந்து, மேலான மஹா பாவத்தில் இருந்தார்.

வார்த்தைகளால் விவரிக்கமுடியாது (11.15 -11.22)

அர்ஜுனன் சொல்கிறார், “பகவானே, உமது உடலில் எல்லாக் கடவுள்களையும் பார்க்கிறேன்; எல்லா ஜீவத் தொகுதிகளையும் பார்க்கிறேன்; தாமரைமலரில் அமர்ந்திருக்கும் பிரம்மாவையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.

பிரபஞ்சக் கடவுளே, எண்ணிலாக் கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது எல்லையிலா வடிவத்தைப் பார்க்கிறேன். பிரபஞ்ச வடிவே, உமது தொடக்கத்தையோ, நடுவையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை (11.15 -16)."

பரமாத்மா இருக்கும் அதே உணர்வுநிலையில் அர்ஜுனனும் இருப்பதால் இந்த வரிகள் 'பகவான் சொன்னது' (பகவான் உவாச) என்றே தொடங்கி இருக்க வேண்டும்.

இந்த வரிகள் நம்முடைய மனத்தில் நாம் பதிவுசெய்து கொள்வதற்காகவே, அர்ஜுனனிடமிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அழகான முறையில் அவர் தெய்விக ரூபத்தை வர்ணிக்கிறார். அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் வியப்படையலாம்.

தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த தரிசன அனுபவத்தை அடைவதற்கும், இந்தப் பாதையில் செல்வதற்கான செயல்களைச் செய்வதற்கும் நம்மை உத்வேகமூட்டுவதற்காகவே அவர் இப்படிச் செய்கிறார்.

பல்வேறு கிரீடம் அணிந்தவராக, கதாயுதங்களைத் தாங்கியவராக, சக்கரம் ஏந்தியவராக, ஒளிப்பிழம்பாக விளங்கும் கிருஷ்ணரை அர்ஜுனன் எல்லா இடங்களிலும் பார்க்கிறார். ஒருவகையில் அர்ஜுனன், கிருஷ்ணரின் வடிவமில்லாச் சக்தியைப் பார்க்கிறார். ஆயிரம் சூரியன்கள் ஒரேசமயத்தில் உதித்தாற்போல் பிரகாசிக்கின்ற, கண்களைக் கூசச் செய்யும் அந்த ஒளிப்பிழம்பானது, கிருஷ்ணரால் புதிதாக அருளப்பட்ட தெய்விக கண்களால்கூட காணமுடியாததாக இருப்பதை அர்ஜுனன் உணர்ந்தார்.

உங்களைப் பிரபஞ்சத்திடமிருந்து பிரிப்பது பய உணர்வே (11.23 -11.31)

"பெரிய தோள்களை உடையவரே, பல முகங்களையும் கண்களையும் கைகளையும் தொடைகளையும் பாதங்களையும் வயிறுகளையும் பயமுறுத்தும் வளைந்த பற்களையும் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன் (11.23)''.

நீங்கள் உங்களுடைய தவறான
அஹங்காரத்தை விட்டுவிடும்கணமே
உங்களுக்குள் ஒரு ஆழமான
தளர்வுத்தன்மையை உணர்வீர்கள்.

திடீரென்று இந்த வரிகளில் காட்சி மாறுகிறது.

"திருதராஷ்டிர புத்திரர்கள் எல்லோரும் இவ்வுலகை ஆளும் மன்னர் கூட்டத்துடனும் மற்றும் பீஷ்மர், துரோணர், இரத ஓட்டியின் மகனான கர்ணனுடனும், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் உமது பயங்கரமான கோரப் பற்களையுடைய வாய்க்குள் பரபரப்புடன் நுழைவதையும் பார்க்கிறேன். சிலர் நசுங்கிய தலைகளோடு உமது பல்லிடுக்குகளில் சிக்கிக்கொண்டிருப்பதையும் நான் காண்கிறேன். (11.26 -27)," என்று சொல்கிறார்."

பேரண்ட தர்ஸநத்திலிருந்து கீழிறங்கி குருக்ஷேத்ர போரின் நாசகரமான விளைவுகளையும் அர்ஜுனன் பார்க்கிறார். அவர் அந்த முழுக்காட்சியையும் மிகத்துல்லியமாக விவரிக்கிறார்.

பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நிகழும் பேரிழப்புக்களைப் பார்த்து, அழிவின் கோர சொரூபத்தைக் கண்டு அவர் நடுக்கமடைகிறார்.

இனி இந்த ஸ்லோகங்களில் இருந்து, 'அர்ஜுன உவாச!' (அர்ஜுனன் சொல்கிறார்) என்றுதான் சொல்ல வேண்டும். தம்முடைய தெய்விக நிலையிலிருந்து மெதுவாகக் கீழிறங்கி, அர்ஜுனன் அர்ஜுனனாகப் பேசத் தொடங்குகிறார்.

"பிரபஞ்ச வடிவே, உமது தொடக்கத்தையோ, நடுவையோ, முடிவையோ என்னால் பார்க்க முடியவில்லை (11.16)," என்று இதுவரை சொல்லிக்கொண்டிருந்த அர்ஜுனன், இப்போது "ஓ விஷ்ணுவே, வானளாவிய உருவத்தையும் திறந்த வாய்களையும்... (11.24)," என்கிறார்.

கிருஷ்ணரின் விஸ்வரூப தர்ஸநத்தின் ஒரு துளியை முதன்முதலாகத் தரிசித்தபோது, அந்தக் காட்சியோடு கலந்திருந்தார். அங்கு எந்தப் பிரிவும் இல்லை. இப்போது திடீரென்று பிரிவு ஏற்பட்டதாக உணர்ந்தார். இந்தப் பிரிவுணர்வோடு, அவருக்குப் பய உணர்வும்

தெய்விகத்தின் கரங்களில் ஒரு கருவியாக மட்டும் இருங்கள். வந்துவிடுகிறது. அச்சவுணர்வு வந்த உடனேயே, அவர் தம்முடைய இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுகிறார்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய அச்சவுணர்வுதான், உங்களைப் பிரபஞ்ச விழிப்புணர்வுதன்மையிலிருந்து பிரித்து வைக்கிறது.

ஒரு குரு உங்கள் கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவர்

"நீங்கள் யார்?" என்று அர்ஜுனன் மிகத் துக்கமான குரலில் கேட்கிறார்.

"தாங்கள் இங்கே வந்திருப்பதன் காரணம் என்ன? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பயங்கரமாக இருக்கிறீர்கள். விரைந்து ஓடும் நதிகள் கடலை நோக்கிப் பாய்வதைப்போல தகிக்கும் உமது வாய்க்குள் மனிதர்கள் புகுவதைப் பார்க்கிறேன். எப்படி விட்டpermission விட்ட பூச்சிகள் வெகுவேகமாகத் தீயை நோக்கிப் பாய்கின்றனவோ அப்படியே உலக மக்களும் அழிவதற்கே வேகமாக உம்முள் நுழைவதை நான் பார்க்கிறேன்.

உமது மஹிமைகளை நீரே சொல்லக் கேட்டேன். அந்த இரக்கத்தின் திருவுருவான பரமாத்மாவை இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. நான் நினைத்தவராக உம்மை என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு மனச்சாந்தியை அளிக்கவே உம்மை நாடினேன். மாறாக என்னை நடுக்கமடையச் செய்கிறீர்கள். என்மேல் இரக்கம்கொள்வீர்களாக!"

'மரணம்' என்பதே இறுதியான பயம். மாபெரும் வீரரான அர்ஜுனனே மரணத்தைப் பார்த்து அஞ்சிநடுங்குகிறார். அர்ஜுனனுக்கு மரணம் தவிர்க்க முடியாதது என்பதோ, மரணத்தின் இயற்கைதன்மையைப் பற்றியோ தெரியாமலில்லை.

ஆனால் இப்போது எதைக் கண்டு அர்ஜுனன் பயப்படுகிறார்? ஒரு விஷயம், அர்ஜுனன், கிருஷ்ணரின் கருணைமிகுந்த, தயைமிகுந்த பிரபஞ்ச வடிவத்தை பார்க்கவே விரும்பினார். இதைத்தவிர வேறு எந்த வகையிலும் அவர் எதிர்பார்க்கவில்லை.

அவர் ஏற்கனவே, கிருஷ்ணரைத் தமது கற்பனையில் தாம் விரும்பியவிதமாக வடிவமைத்து வைத்திருந்தார். ஆனால் கிருஷ்ணர் தற்சமயம் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் வடிவமோ, அனைத்தையும் விழுங்கிக்கொண்டிருக்கும் கோரவடிவம்! அர்ஜுனனால் புரிந்துகொள்ள முடியாத இந்த வடிவம், அவர் அறிந்த கிருஷ்ணன் என்கிற அம்சத்தின் பிரதிபலிப்பு அல்ல.

குரு என்பவர் கணிப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை அர்ஜுனன் முதன்முறையாக உணர்கிறார். எந்த ஆதர்ஸ வடிவத்தோடும் ஒரு குருவைச் சுருக்க முடியாது.

ஆதி அந்தமில்லா அந்தத் தெய்விக சக்தி, குருசக்தி எந்த வடிவில் தம்மை வெளிப்படுத்திக்கொள்கிறதோ, அவ்வடிவையே எவ்வித எதிர்பார்ப்புகளும் பயமும் இல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்றும் அர்ஜுனன் உணர்கிறார்.

யாருமே கிருஷ்ணரைப் பயமுறுத்துபவராக எதிர்பார்ப்பதில்லை. எனவேதான் கிருஷ்ணர் தம் கோர உருவத்தை வெளிப்படுத்தியபோது, அர்ஜுனனால் அதைத் தாங்கமுடியவில்லை; அவர் காலுக்கு கீழிருந்த பூமி நழுவியது. அவருக்கு எந்தப் பிடிப்பும் இல்லை. யாரிடத்தில் உதவி கேட்பது என்று தெரியவில்லை. எனவே அவர், "நமோண்ஸ்து தே தேவவர ப்ரஸீத (11.31) -என்மீது கருணை காட்டுவீராக, உங்களை வணங்குகிறேன்," என்று மன்றாடுகிறார்.

ஓபயப்படாதீர்கள்... நிகழ்காலத்தைத் தப்பிக்க விடாதீர்கள்

தான் உண்மையில் யார் என்பதை கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார். "காலோண்ஸ்மி (11.32) -நானே வல்லமைவாய்ந்த காலம், லோகக்ஷயக்ரு'த் (11.32) -நானே ஆக்ரோஷமாக உலகங்களை உண்டு அழிக்கிறேன்!" என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

கீதையில் கிருஷ்ணரால் சொல்லப்பட்ட ஸத்யங்களுள் மிகவும் வீரியம்வாய்ந்த ஸத்யம் இதுவே. அர்ஜுனனிடம் கிருஷ்ணர் முன்பே, ஆன்மாவைப் பற்றியும், மறுபிறவி, கர்மாவின் இயல்பு, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வது பற்றியும், தம் மஹிமைகள் பற்றியும் சொல்லி இருக்கிறார்.

முதன்முறையாக தம் முகத்திரையை எடுத்துவிட்டு, உண்மையைச் சொல்கிறார், "நானே அழிப்பவன்."

"தாங்கள் யார்? தங்களின் நோக்கம்தான் என்ன?" என்ற அர்ஜுனனின் கேள்விகளுக்கு, கிருஷ்ணர் எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் சொல்கிறார்.

"நானே காலம், நானே அழிப்பவன்," என்று பகவான் சொல்கிறார்.

காலம் ஒருபோதும் அப்படியே நிற்பதில்லை. அது நகர்ந்துகொண்டே இருக்கிறது. காலத்தின் ஓட்டத்தை எதுவும் நிறுத்த முடியாது; காலத்தை எதுவும் திரும்பவும் கொண்டுவர முடியாது; முன்னோக்கியும் நகரச்செய்ய முடியாது. காலம் அழிக்கிறது.

எதிர்காலம், தொடர்ந்து நிகழ்காலமாக மாறுகிறது; பிறகு கடந்தகாலமாகி விடுகிறது. நமது வாழ்வின் இப்போதைய அலைவரிசையின்படி, நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே பார்க்க முடியும். கடந்தகாலத்தை நினைவாக மட்டுமே வைத்திருக்க முடியும்.

வாழ்க்கை நதியின் திசைக்கேற்ப நீந்திடலாம்

கிருஷ்ணர்ஒருஎளியஸத்யத்தைஇங்கேசொல்கிறார். “ஒஸவ்யஸாசிந் (அர்ஜுனா), நீ போர்புரிந்தாலும் போர்புரியாவிட்டாலும், இந்தப் போர்வீரர்கள் எல்லாரும் இறப்பார்கள். பெருவல்லமை மிக்க காலமாக நான் அவர்களை விழுங்குவேன். நீ அதற்கு காரணம் அல்ல. நிமித்தமாத்ரம் பவ (11.33) -நீ ஒரு கருவியாக மட்டும் இரு, தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஸோ லபஸ்வ ஜித்வா பஸத்ரூந் புங்க்ஷ்வ

> கிருஷ்ணரிடம் பூர்ணத்வ உணர்வோடு
> இருந்தால், நம் வாழ்வில் என்னென்ன,
> எப்படி நடக்கவேண்டுமோ அப்படி
> நிகழ ஆரம்பித்துவிடுகிறது.

ராஜ்யம் ஸம்ரு'த்தம் (11.33) -அவர்களது அழிவிற்கு கருவியாக இருப்பதன்மூலம் புகழ், சக்தி, செல்வங்களைப் பெறுவாயாக.''

மஹாகாலமாகக் கிருஷ்ணர் சமநிலையில் இருக்கிறார். அவர் அப்படியே இருக்கிறார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்திருந்தும் அதன்மேல் ஆதிக்கம் செலுத்துவதில்லை. காலமாக, என்ன நிகழ்கிறதோ அதை அவர் நிகழ்த்துகிறார். அவர் வெறுமனே, பாய்ந்தோடும் பெரும் வல்லமைபொருந்திய சக்தியாக இருக்கிறார்.

ஒருவர் ஆழ்ந்த பக்தியோடு கிருஷ்ணரிடம் தம்மையே ஸரணாகதி செய்துவிட்டால், கிருஷ்ணரிடம் பூர்ணத்வ உணர்வோடு இருந்தால், கிருஷ்ணரின் விருப்பப்படியே, அவர் வாழ்வில் என்னென்ன, எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நிகழ ஆரம்பித்துவிடுகிறது.

ஒரு செயலைச் செய்தால், பின்விளைவாக, பக்கவிளைவாக என்ன நிகழுமோ, எப்படி நிகழுமோ என்று கவலைகொள்ளாமல் நாம் எதைச் செய்யவேண்டுமோ, எப்படிச் செய்யவேண்டுமோ, அதை அப்படியே செய்ய வேண்டும், அவ்வளவுதான். இப்படிச் செய்வதனால் நாம் காலத்தின் ஓட்டத்தோடு இயைந்துசெல்கிறோம். கிருஷ்ணரின் சக்தியோடு கலந்துசெல்கிறோம்.

பிரபஞ்சத்தில் அழிவென்பது இல்லை அனைத்தும் புதுப்பித்தலே

இந்த உலகத்தை நான் அழித்துக்கொண்டு இருக்கிறேன் என்று கிருஷ்ணர் சொல்லும்போது, உடல்ரீதியான, பொருள்சார்ந்த உலகத்தின் மாயையை அழிப்பதைத்தான் குறிப்பிடுகிறார்.

அவர் கற்பனைகளை அழிப்பவர், அடையாளங்களை அழிப்பவர், அஹங்காரத்தை அழிப்பவர், உண்மையல்லாத மாயையை

மஹாபாவ உறவுக்குள் நுழையுங்கள்.
அது, உங்களுக்குள் தேங்கியிருக்கும்
குற்றவுணர்ச்சிகளை வெளியேற்றி

அழிப்பவர். அவர் முன்பே சொன்னதுபோல, அழிக்கப்படுவது இந்த உடல்-மனம் என்கிற கூடுதானேதவிர, அழிக்கப்பட முடியாத ஆத்மா அல்ல.

போர்க்களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உளவியல்ரீதியான நாடகத்தைத்தான் மஹாகாலம் அழிக்கிறது. உச்சநிலை விழிப்புணர்வாக, மாபெரும் இறைசக்தியாக, கிருஷ்ணரும் சிவத்தன்மையைத்தான் பிரதிபலிக்கிறார். சிவன், அழிப்பதற்கு என்று உருவாக்கப்பட்டிருந்தாலும், அவர் அழிப்பவர் அல்ல. அழிப்பதன் மூலம் மீண்டும் உருவாக்குபவர். அழித்தல் இல்லாமல் படைத்தல் நிகழவே முடியாது.

இறப்பில்லாமல் பிறப்பு இல்லை. சிவனுடைய காலபைரவர் என்னும்தன்மையைத்தான் கிருஷ்ணரின் மஹாகாலம் குறிக்கிறது. காலபைரவர் நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என்னும் முக்காலத்திலும் நிகழும் அனைத்தையும் கட்டுப்படுத்துபவராக இருக்கிறார்.

இம்மாபெரும் சக்தியின் முன்பு ஒருவர் ஸரணாகதி செய்யும்போது, காலத்தை பற்றிய பய உணர்வை இழக்கிறார்; அவர் காலத்தோடு இணைந்து செயல்படுகிறார்.

அப்போது ஒருவர் எதைச் செய்தாலும் அது சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான செயலாகிவிடுகிறது. காலம் குறித்த பயத்தை ஒருவர் இழக்கும்போது மரணபயம் அவரைவிட்டுச் சென்றுவிடுகிறது. இறக்கின்ற அத்தனையும் மீண்டும் உருவாக்கப்படுகிறது.

அர்ஜுனன் முன்பே, தாம் மிகவும் மதிக்கும் பெரியவர்களை, ஆச்சாரியர்களை, நேசிக்கும் சொந்தபந்தங்களை அழிக்க வேண்டிய சூழ்நிலையை எண்ணிக் குழப்பமடைவதாகச் சொல்கிறார்.

மீண்டும் ஒருமுறை கிருஷ்ணர் இந்த அழிவிற்கு 'தாமே பொறுப்பு' என்று உணர்த்துகிறார். முன்னர் அவை வெறும் வார்த்தைகளாக இருந்தன. ஆனால் இப்போது அர்ஜுனன் தாமே அந்த அழிவைக் காண்கிறார். பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வடிவமாகக் கிருஷ்ணர் மாறி கௌரவவீரர்களை விழுங்குவதைப் பார்க்கிறார்.

கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றுகிறார், "என்ன நடக்கிறது என்ற ஸத்யத்தை நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய். அவர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டார்கள். தைரியத்தை இழக்காதே அர்ஜுனா. நீ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக. உன்னுடைய பயத்தின் விளைவாக ஏற்பட்ட மாயத்தோற்றங்கள் அனைத்தையும் நீ போரிட்டு அழிப்பாயாக."

ஓநீங்களே எல்லாமாக இருக்கிறீர்கள் (11.35 -11.44)

கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவைப் புரிந்துகொள்ளும் ஞானத்தின் மூன்றாவது நிலையை அர்ஜுனன் அடைகிறார்.

தம்மைச் சுற்றி இருக்கும் உலகனைத்தையும் விழுங்கும் மஹாகாலமாக விளங்கும் கிருஷ்ணரின் கோர வடிவைக் கண்ட அர்ஜுனன் பிரமித்து நடுங்குகிறார். இருந்தாலும், தாம் இன்னும் உயிருடன் விழுங்கப்படாமல் இருப்பதைக் கண்ட அர்ஜுனன் அச்சத்திலிருந்து சிறிது விடுபடுகிறார். அதனால் அர்ஜுனனால் கிருஷ்ணரைப் போற்றி வணங்கத்தான் முடியும்.

சிறிதுநேரம் முன்புவரை தோழனாகவும், தேரோட்டியாகவும் காட்சியளித்த கிருஷ்ணரின் எல்லையில்லாப் பிரபஞ்ச விழிப்புணர்வுதன்மையைப் பற்றிய சந்தேகம் இப்போது சிறிதுகூட அர்ஜுனனிடம் இல்லை. ஆகவே இந்தப் பரம்பொருளை பரமாத்மாவை வர்ணிக்க என்னென்ன பெயர்கள், வர்ணனைகள் உள்ளனவோ அவற்றால் போற்றிப் புகழ்கிறார்.

இப்போது அர்ஜுனனின் பக்தி உச்சத்தில் இருந்தது.

கிருஷ்ணரை முதற்பொருளாகவும் உலகைப் படைத்தவராகவும் வணங்குகிறார். எல்லாப் பக்கங்களிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கிருஷ்ணர் இல்லாத இடமே இல்லை. அர்ஜுனன் அவரை எல்லாத் திசைகளிலும் வணங்குகிறார். ஆதி அந்தமில்லாமல், பேருண்மையாக, எல்லாமுமாக இருக்கும் கிருஷ்ணரைக் கைக்கூப்பி உளமாறப்போற்றி வணங்குகிறார்.

கிருஷ்ணரின் எல்லையில்லாத்தன்மையைப் புரிந்துகொண்டபிறகு, இந்தப் பெருமைகளை அறியாமல் இத்தனை நாட்கள் கிருஷ்ணரை மிகச்சாதாரணமாக, சராசரி நண்பராகக் கருதியதை எண்ணி வேதனையடைகிறார், அர்ஜுனன்.

குருவுக்கும் சீடருக்கும் இடையில் நட்புரீதியான ஸகபாவம் என்ற உறவுமுறைக்கு உண்மையில் அர்ஜுனன் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். கிருஷ்ணர், தாமே பரமாத்மா என்பதை வெளிப்படுத்தியவுடன், அர்ஜுனன் ஸகபாவ உறவிலிருந்து ஞானமடைந்த ஒரு சீடராக, மஹாபாவ உறவுக்குள் நுழைகிறார். இந்த மனமாற்றம்தான் அவருக்குள் தேங்கியிருக்கும் குற்றவுணர்ச்சி களை வெளிக்கொண்டு வருகிறது.

"ஒரு தந்தை மகனை மன்னிப்பதுபோல, ஒரு தோழன் தோழனுக்கு, ஒரு காதலன் காதலிக்கு மன்னிப்பு தருவதுபோலவும் என்னைப் பொறுத்தருளுங்கள்." என்றார்.

குருவுடனான பூர்ணத்வ உணர்வே ஜீவன்முக்தி

ஒருவிதத்தில் அர்ஜுனன் அந்தக் குற்றவுணர்ச்சியினைச் சுமந்துகொண்டிருக்க விரும்பவில்லை. தம் தோழனும், குருவும் மற்றும் இறைவனுமாக இருக்கும் கிருஷ்ணரிடம் 'என்னை மன்னிப்பீர்களாக' என்று சொல்வதன் மூலம் தம் குற்றவுணர்ச்சி களை விட்டுவிடுகிறார். எதிர்மறையான குற்றவுணர்ச்சி கள் ஒவ்வொன்றாக அர்ஜுனனிடம் இருந்து வெளிக்கிளம்பி வருகின்றன. ஒரு ஸத்குருவின் ஸாந்நித்யத்தில் அர்ஜுனன் அவற்றிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டு, நிறைவடைகிறார்.

ஒருவருடைய வாழ்வில் அமையும் உறவுகளில் தலையாய உச்ச

> உங்களுடைய சுய-சந்தேகமே
> குருவின் மீதான சந்தேகமாகவும்
> வெளிப்படுகிறது. ஆகவே
> உங்களுடைய சுய-சந்தேகத்தை

உறவு - குரு!

அப்படிப்பட்ட குருவுடன் பூர்ணத்வ உணர்வில் ஒருவர் இருப்பது மிக மிக அவசியம். அர்ஜுனன், தம்முடைய ஆழமான அன்பிலிருந்து வெளிப்பட்ட குற்றவுணர்ச்சி என்னும் குறைவுணர்வை நிறைவுசெய்வதன்மூலம் குருவுடனான பூர்ணத்வ உணர்வின் வலிமையை நமக்கு உணர்த்துகிறார்.

உங்கள் வாழ்வில் நீங்கள் சுமந்துகொண்டிருக்கும் சிக்கல்களுக்குள் மிகமுக்கியமான சிக்கல் சுய-சந்தேகம். உங்களுடைய சுய-சந்தேகமே குருவின் மீதான சந்தேகமாகவும் வெளிப்படுகிறது. ஆகவே உங்களுடைய சுய-சந்தேகத்தை நிறைவுசெய்யுங்கள். அப்போது மட்டுமே, குருவுடனான உங்களுடைய உறவு பூர்ணத்வ உணர்வில் மலரும்.

உங்களுக்கு சொல்கிறேன் குருவுடனான பூர்ணத்வ உணர்வே ஜீவன்முக்தி!

குருவுடனான பூர்ணத்வ உணர்வில் இருந்தாலே போதும், வேறெதுவும் தேவையில்லை. அவருடைய உணர்வு உங்களுக்குள் பிரவாகமாகப் பாய்ந்து, உங்கள் உள்-உணர்வை உயர்த்திவிடும்.

உங்களின் பிரசித்திப்பெற்ற வடிவம் (11.45 -11.46)

விஸ்வரூப தர்ஸநத்தைக் கண்டு கலங்கிப்போன அர்ஜுனன், தமது கடைசி வேண்டுகோளை இந்த வரிகளில் சமர்ப்பிக்கிறார்.

"எனக்குப் பழக்கமான இனிமையான வடிவத்தையே காட்டுங்கள்," என்று அர்ஜுனன் இறைஞ்சுகிறார். "உலகத்தைக் காத்து அருள்பவரே, இதுவரை காட்டிய காட்சிகளை, எல்லாம் கண்டு

குருவின் போதனைகள்
செயலில் ஸ்ரத்தை,
நம்மையும் மற்றவர்களையும்
வளப்படுத்துதல்.

மகிழ்ந்து நன்றியுடையவனாக இருக்கிறேன்," என்றும் சொல்கிறார்.

இந்தக் கொந்தளிப்புகளை எல்லாம் கடந்தநிலையில் இருப்பவரே ஒரு யோகி. அவர், பரப்ரஹ்மம் என்பது குணங்களைக் கடந்த குணமில்லாத்தன்மை என்பதை அறிவார். அதற்கு அமைதி, ஆறுதல், பயமுறுத்தும் கோர வடிவம் என்று எந்தக் குணமும் இல்லை. இந்த வெளிப்பாடுகள் அனைத்தும் கற்பனைகளே!

இந்த வெளிப்பாடுகளுக்கு ஆதாரமாகவும், இவற்றைக் கடந்தும், தெய்வத்தன்மை தன் இயல்புநிலையில் இருக்கிறது. மூன்று குணங்களையும் கடந்தநிலையில், அது சலனமற்று வீற்றிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும்.

அர்ஜுனன் இந்த நிலையை இன்னும் எட்டவில்லை. பயமுறுத்தும் மஹாகாலத்தின் வடிவத்தைக்காட்டிலும், நான்கு கரத்துடன் அபயமளிக்கும் இனிமையான தெய்வ வடிவத்தையே அவர் காண விரும்புகிறார்.

கிருஷ்ணராகவோ, ஸதாசிவனாகவோ இனிமையான வடிவம் தாங்குவது மற்றும் விராட்ரூபம் என்னும் பயங்கர வடிவம் தாங்குவது - இவ்விருதன்மைகளுமே தெய்விகத்தின் முகமூடிகளே!

இந்த இரு வடிவங்களுமே தெய்விகத்தின் உண்மையான வடிவங்கள் இல்லை என்பதையும், ஆனால் இந்த இரு வடிவங்களுக்கும் பரப்ரஹ்ம சொரூபமே அடிப்படையாக இருப்பதால், இவை தெய்விகத்தின் உண்மையான வடிவங்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் மாயையைக் கடந்து நாம் முக்தியடைய முடியும்.

ஓ நீ மட்டுமே இந்த வடிவத்தைப் பார்த்திருக்கிறாய் (11.47 -11.55)

இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் அர்ஜுனனைத் தேற்றி ஆறுதல் அளிக்கிறார். கலங்கிய தமது சீடருக்கு மீண்டும் கருணாமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.

அர்ஜுனன் பார்த்த விஸ்வரூப தர்ஸநம் அவரைத்தவிர வேறு யாரும் பார்த்திராத, பார்க்கமுடியாத அரியகாட்சி என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். "தவங்கள் செய்வதனாலோ, யாகங்கள் செய்வதனாலோ, வேதத்தைப் படிப்பதனாலோ தானங்களாலோகூட ஒருவர் இதற்குமுன் இவ்வடிவத்தைக் கண்டதில்லை. எது எப்படியோ, நீ கலக்கமடைந்து இருக்கிறாய். சரி, நீ அன்றாடம் வழிபடும், பார்க்கவிரும்பும் எனது இயல்பான வடிவத்தையே பார்ப்பாயாக."

கிருஷ்ணர் இங்கே மிகத்தெளிவாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். தம் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் எவ்விதம் தம்மை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதைக் கிருஷ்ணர்தான் முடிவுசெய்கிறார். இது குருஸக்தியிடம் இருந்து, தெய்வஸக்தியிடம் இருந்து கிடைக்கும் ஒரு பரிசு.

கிருஷ்ணர் முதலில் அர்ஜுனனுக்கு, அவர் சௌகரியமாக உணரும் வடிவமான நான்கு கரங்களுடன் கூடிய தனது அழகிய தெய்விக வடிவத்தை, நாராயண வடிவத்தைக் காட்டியருளினார். பிறகு, அர்ஜுனனுக்கு மிகவும் பழக்கமான இனிய மானிட வடிவமெடுத்து, வாசுதேவ கிருஷ்ணராக அவரை மகிழ்விக்கிறார்.

அர்ஜுனன், இப்போது கிருஷ்ணரின் எல்லா வடிவங்களையும் பார்த்துவிட்டார். கிருஷ்ணரின் உண்மையான பிரபஞ்ச வடிவமான விஸ்வரூபம் அல்லது விராட்ரூபத்தையும் கண்டுவிட்டார். அது அர்ஜுனனுக்குப் பயத்தை விளைவிப்பதாக இருந்தது.

சங்கு சக்கரதாரியாக, அபயமளிக்கும், வரமருளும் நான்கு கரங்கள்டன்கூடிய அழகிய, திவ்யமான, இனிமையான போற்றுதற்குரிய நாராயணனாகவும் கண்டுவிட்டார்.

முடிவாக, அர்ஜுனனுக்கு மிகவும் பழக்கமான மானுட வடிவத்திற்கே திரும்புகிறார்.

தம் எதிரில் நிற்கும் கிருஷ்ணர், அந்த எல்லையில்லாப் பேருண்மையின் பிரம்மாண்ட வடிவம் என்பதை அர்ஜுனன் புரிந்துகொண்டார். கிருஷ்ணர், இப்போது எந்த வடிவமெடுத்துக் காட்சியளித்தாலும், அர்ஜுனரின் இந்தப் புரிதல் அவருடனேயே இருக்கும்.

ஒரு குருவின் போதனைகளோடு ஒத்திசைந்து செல்லுங்கள்

கிருஷ்ணர் தம்மை அடைவதற்கு ஒரு பக்தர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவான ஒரு பாதையைச் சுட்டிக்காட்டி இந்த அத்தியாயத்தை நிறைவுசெய்கிறார். 1, 2, 3 - என்று சொல்வதைப் போன்ற மிக எளிமையானதொரு பாதை அது.

"‘மத்கர்மக்ரு’ந் -எனக்காகத் தொண்டுசெய், எனது சங்கத்திற்காகத் தொண்டுசெய். ஸங்கவர்ஜித: - எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் மத்பரமோ மத்பக்த: -என்னையே மேலான புகலிடமாகக்கருதி, என்னிடமே சரணடைவாயாக!

என்னசெய்தாலும் பற்றற்று கடமையைச் செய்வதன்மூலம் பலனை என்னிடம் விட்டுவிடுவாயாக. உன் செயல்களின் பலனை என்னிடம் ஸரணாகதி செய்வாயாக! நிர்வৈর: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி -விருப்பு வெறுப்பில்லாமல், எல்லோரையும் உனது சொந்த ஆத்மாவாகக் காண்பாயாக (11.55)!’'

hands playing flute

கிருஷ்ணர் இங்கே சொல்வது மிகவும் முக்கியத்துவம்வாய்ந்தது. "எனக்காகத் தொண்டுசெய், எனக்காகத் தொண்டுசெய்பவன் என்னை வந்தடைகிறான்," என்று சொல்கிறார்.

எல்லாப் பக்தர்களும் சீடர்களும் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விக்ரஹத்தை வைத்தோ, புகைப்படத்தை வைத்துக்கொண்டோ பிரார்த்தனைசெய்வது பக்தி அல்ல. உங்கள் வாழ்நாள்முழுதும் புகைப்படத்தையோ, உருவத்தையோ பார்த்துக்கொண்டே இருந்தாலும், அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

இப்போது நமக்குத் தேவைப்படுவதெல்லாம், 'செயலில் ஸ்ரத்தை, நம்மையு‌ம் மற்றவர்களையும் வளப்படுத்துதல்' -போன்ற குருவின் போதனைகளோடு ஒத்திசைந்து செல்லும்தன்மையே!

ஆழ்ந்து கேளுங்கள், ரூபம் - உங்களை நீங்களே நினைவுகொள்ளவும், உங்களுடன் நீங்களே தொடர்புகொள்ளவும் மற்றும் மற்றவர்கள் உங்களை 'நீங்களாக' உணரவும் உதவும் உங்களின் பாகங்களே ரூபம் எனப்படுகிறது.

பொதுவாக உங்களை நீங்கள் என்னவாக உணர்கிறீர்களோ, மற்றவர்கள் உங்களை என்னவாக உணர்கிறார்களோ அதுவே ரூபம் எனப்படுகிறது. ஒருசாதாரண மனிதன், தன்னை ஒரு உடலாக உணர்கிறான், மற்றவர்களையும் தன்னை ஒரு உடலாகவே உணரச் செய்கிறான்.

விஸ்வரூபம் என்றால், உங்களை நீங்கள் இந்தப் 'பிரபஞ்சமாக' உணர்ந்து, இந்தப் பிரபஞ்சத்தையும் உங்களை 'பிரபஞ்சமாகவே' உணரச்செய்வது. உங்களை நீங்கள் 'பிரபஞ்சமாக' உணரவும், அதேபோல் பிரபஞ்சத்தையும் உங்களை 'பிரபஞ்சமாகவே' உணரச்செய்யவும் உதவும் நேரடியான நுட்பம் வளப்படுத்துதல்.

வளப்படுத்துதல், உங்கள் வாழ்வை வெற்றிகரமாக்கும், ஏனென்றால் நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக வளப்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் உங்களை ஒரு உடலாக உணர்வதும் குறையும். மேலும் உங்களைப்போன்றே பூர்ணத்வ உணர்வில் வாழும் மனிதர்களைப் புரிந்துணர்ந்துகொள்வீர்கள். அவர்கள் உங்களுடைய வலிமையை உணர்ந்துகொள்வார்கள், நீங்கள் அவர்களுடைய வலிமையை உணர்ந்துகொள்வீர்கள்.

உங்களையும் மற்றவர்களையும் வளப்படுத்துவதையே உங்கள் வாழ்க்கைமுறையாக்குங்கள், வளப்படுத்துதலை உங்கள் உணர்வாக்குங்கள், சட்டென உங்களுள் 'நீங்கள் ரூபம் - உங்களுடைய வாழ்க்கையின் மையம் மட்டுமல்ல, விஸ்வரூபம் - பிரபஞ்சத்தின் மையம்' என்ற புரிதல் பூக்கும்.

நான் உங்களுக்கு கதைகளையும் கோட்பாடுகளையும் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. என்னுடைய வாழ்க்கையிலிருந்து