அத்தியாயம்-12: பக்தி யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் வாழ்வை முழுமையாக்கும் தீர்வு
வாழ்க்கை, அன்பில்தான்
தன் இறுதி உச்சத்தை அடைகிறது.
நாம் கடவுளைக் காண்பது
அன்பினால் மட்டுமே!
'பூர்ணத்தன்மை அடைந்தவராகவும் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வேலை செய்பவராகவும் இருக்கும் என்னுடைய பக்தர், எனக்கு மிக பிரியமானவராக இருக்கிறார், என்னை அவர் நிச்சயமாக வந்தடைகிறார்'
ஸ்லோகங்கள்
அத த்³வாத³ஶோSத்⁴யாய:
ப⁴க்தி யோக³:
ஏ
அர்ஜுந உவாச
ஏவம் ஸததயுக்தா யே ப⁴க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே ந
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா: நந 12.1
அர்ஜுனன் சொன்னது
12.1 உங்களுடைய வடிவத்தை சீரத்தையுடன் வழிபடுபவர்கள் மேலானவர்களா அல்லது அழிவில்லாத, கண்ணுக்குத் தெரியாத உங்களுடைய அருவ வடிவத்தை வழிபடுபவர்கள் மேலானவர்களா?
ஸ்ரீப⁴க³வாந் உவாச
மய்யாவேஶ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே ந
ஶ்ரத்³த⁴யா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: நந 12.2
ஸ்ரீபகவான் சொன்னது
12.2 தங்கள் மனத்தை என்மீது நிலைநிறுத்தியவர்களாக யார் இருக்கிறார்க ளோ, மேலான சீரத்தையுடன் என்னை வழிபடுவதிலேயே உறுதியுடன் இருப்பவர்கள் எவர்களோ அவர்களை யோகத்தில் பூர்ணத்தன்மை அடைந்தவர்களாகவும், என்னுள் ஐக்கியமாவதற்குத் தயார் நிலையில் இருப்பவர்களாகவும் நான் கருதுகிறேன்.
யே த்வக்ஷரமநிர்தேஶ்யமவ்யக்தம் பர்யுபாஸதே ந
ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம் நந 12.3
ஸந்நியMyersயேந்த்ரியமக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய:
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா: நந 12.4
12.3,4 ஆனால் அழிவற்றதும், உருவற்றதும், புலன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதும், எங்கும் நிறைந்ததும், சொற்களால் விளக்க முடியாததும், மாற்றமில்லாததும், அசையாததுமான அந்த நித்யமான பரம்பொருளை விழிப்புணர்வோடு வழிபடுகிறவர்; தம்முடைய புலன்களைக் கட்டுப்படுத்தி, சமநிலையான மனத்துடன் மனிதகுலத்தின் நன்மைக்காகவே வேலை செய்கிறவர்; இவர்கள் இருவருமே என்னையே அடைகிறார்கள்.
க்லேஸோSதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம் ந
அவ்யக்தா ஹி கதிர்து:தம் தேஹவத்பிரவாப்யதே நந 12.5
12.5 யார் ஒருவருடைய மனம், மனத்தாலும் வாக்காலும் விளக்க முடியாத அருவ வழிபாட்டில் நிலைபெறுகிறதோ, அவருக்கு ‘உருவ வழிபாடு’ என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது. உருவத்தில் பற்றுகொண்டவர்களுக்கோ மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத அருவத்தை அடைவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது.
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: ந
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே நந 12.6
தேஷாமஹம் ஸமுத்தர்தா
ம்ரு'த்யுஸம்ஸாரஸாகராத் ந
பவாமி நசிராத்பார்த மய்யாவேஸிதசேதஸாம் நந 12.7
12.6,7 ஆனால் பார்த்தனே, யாரெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்துடன் என்னையே பக்தியுடன் வழிபாடு செய்துகொண்டு, எல்லாக் கர்மங்களையும் என்னிடமே அர்ப்பணித்துவிட்டு, என்னையே அவர்களின் உயர்ந்த லட்சியமாகக்கொண்டு, என் மீதே மனத்தை நிலைநிறுத்துகிறார்களோ, அவர்களை நான் பிறப்பு இறப்புக் கடலிலிருந்து விரைவில் கரையேற்றுவேன்.
மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஶய ந
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஶய: நந 12.8
12.8 உங்கள் மனத்தை என்னிடம் மட்டுமே வைத்து, என்னுள் நிலைநிறுத்துங்கள். நீங்கள் என்னுள்ளேயே எப்போதும் வாழ்வீர்கள். இதில் சந்தேகம் இல்லை.
அத சித்தம் ஸமாதாதும் ந ஶக்நೋಷி மயி ஸ்திரம் ந
அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய நந 12.9
அப்யாஸேSப்யஸமர்தோSஸி மத்கர்மபரமோ பவ ந
மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி நந 12.10
12.9,10 மனத்தை என்னிடம் நிலைநிறுத்த முடியாவிட்டால், தநஞ்ஜயா தொடர்ந்து பயிற்சிசெய்தல் என்னும் யோகத்தால் என்னை அடைய முயற்சிசெய். ஒருவேளை இந்த யோகத்தைக்கூட செய்ய முடியாவிட்டால், கடமைகளைச் செய்வது என்பதையே மேலான இலட்சியமாகக்கொண்டு, உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்துவிடு, நீ முழுமையை அடைவாய்.
அதৈতதப்யஶக்தோSஸி கர்தும் மத்யோகமாஶ்ரித: ந
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந் நந 12.11
12.11 இந்த வழியில்கூட உன்னால் பயிற்சிசெய்ய முடியவில்லை என்றால், என்னிடம் சரணடைந்து, உன்னுடைய கடமைகளைச் செய்து, நீ செய்கிற எல்லாச் செயல்களின் பலன்களையும் அஹங்காரம் இல்லாமல் என்னிடம் விட்டுவிடு.
ஶ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஶிஷ்யதே ந
த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரநந்தரம் நந 12.12
12.12 வெறும் பயிற்சியைவிட அறிவு பெரியது. அறிவைவிட தியானம் பெரியது. செயலின் பலனைத் துறப்பது தியானத்தைவிட பெரியது. செயலின் பலனைத் துறந்தவுடன், ஒருவர் தாமதமின்றி அமைதியை அடைகிறார்.
அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச ந
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ நந 12.13
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்ச்சய: ந
மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: நந 12.14
12.13,14 யார் ஒருவர் எந்த உயிர்களிடத்திலும் வெறுப்பும் பொறாமையும் இல்லாதவராகவும், எல்லோரிடத்திலும் நட்புடனும் கருணையுடனும் இருப்பவராகவும், 'நான்' மற்றும் 'எனது' என்ற உணர்விலிருந்தும் அஹங்காரத்திலிருந்தும் விடுபட்டு, இன்ப துன்பங்களில் மனத்தைச் சமநிலையில் வைத்துக்கொண்டு, மன்னிக்கும்தன்மை உடையவராகவும், எப்போதும் திருப்தியுடன் இருப்பவராகவும், யோகத்தில் இணைந்தவராகவும், என்னிடத்தில் ஒரு உறுதியான ஈடுபாடு உள்ளவராகவும், தம்முடைய மனத்தையும் பட்டறிவையும் என்மீது வைத்திருப்பவராகவும் இருக்கிறாரோ, அந்த பக்தர் எனக்கு மிகவும் ப்ரியமானவர்.
யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய: ந
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: நந
12.15
12.15 இந்த உலகம் யாரால் ப்ரதிகூலமான வகையில் பாதிப்படையவில்லையோ, யார் இந்த உலகத்தால் ப்ரதிகூலமான வகையில் பாதிப்படையவில்லையோ, யார் மகிழ்ச்சி, கோபம், கவலை ஆகியவற்றில் இருந்துவிடுபட்டு இருக்கிறாரோ அவர் எனக்குப் ப்ரியமானவர்.
அநப his: ஸுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத: ந
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: நந 12.16
12.16 ஆசைகளிலிருந்துவிடுபட்டவராகவும், தூய்மையுடனும் திறமையுடனும் கவலையில்லாமலும் எதனாலும் பாதிப்படையாமலும், எதைச் செய்தாலும் அதைத் 'தன்னலம்' கருதாமல் செய்பவராகவும், என்னிடம் பக்தியுடையவராகவும் யார் ஒருவர் இருக்கிறாரோ, அவர்
எனக்குப் ப்ரியமானவர்.
யோ ந ஹ்ரு'ஷ்யதி ந த்வேஷ்டி ந ஶோசதி ந காங்க்ஷதி ந
ஶுபாஶுபபரித்யாகீ பக்தாமாந்ய: ஸ மே ப்ரிய: நந 12.17
12.17 யார் ஒருவர் எதனாலும் மகிழ்ச்சியோ, வெறுப்போ, துயரமோ, ஆசைவயப்படுதலோ அடைவதில்லையோ, நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவரோ, யார் ஒருவர் பக்தியால் நிரம்பியவரோ, அந்த பக்தர் எனக்குப் ப்ரியமானவர்.
ஸம: ஶத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ: ந
ஶீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித: நந 12.18
துல்யநிந்தாஸ்துதிர் மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் ந
அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர: நந 12.19
12.18,19 யார் ஒருவர் நண்பரையும் பகைவரையும் சமமாகப் பாவிக்கிறாரோ, மரியாதை அவமரியாதை, வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி இவற்றை யார் சமமாக ஏற்றுக்கொள்கிறா ரா, யார் எப்போதும் பற்றற்றதன்மையுடன், எப்போதும் மௌனமாக இருந்து, எதிலும் திருப்தியடைந்து, தமக்கென்று ஒரு நிரந்தர வீடில்லாமல் மனத்தில் நிலைகொண்டு, என்னிடம் பக்தியுடன் இருக்கிறாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் ப்ரியமானவர்.
யே து தர்ம்யாம்ரு'தமிதம் யதோக்தம் பர்யுபாஸதே ந
ஶ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தேண்தீவ மே ப்ரியா: நந 12.20
12.20 என்னையே உயர்ந்த இலட்சியமாகக்கொண்டு மிக்க நம்பிக்கையுடன், அழிவில்லாத இந்த தர்ம பாதையை உண்மையுடன் யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் எனக்கு மிகவும் ப்ரியமானவர்கள்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
ப॒க்தியோகோ நாம த்வாதஶோsத்யாய: நந
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள க்ருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'பக்தி யோகம்' எனும் பெயருடைய பன்னிரண்டாவது அத்தியாயம்.

உங்கள் வாழ்வை முழுமையாக்கும் தீர்வு
முன் அத்தியாயத்தில், அர்ஜுனன் கிருஷ்ணரின் விஸ்வரூப தர்ஸநத்தை, அதாவது கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைத் தமக்குக் காட்டும்படி கேட்டுப்பெறுகிறார்.
கிருஷ்ணரின் அந்த ஒளிமிகுந்த பிரபஞ்ச வடிவத்தைக் கண்ட அர்ஜுனன் அதன் சக்தியைத் தாங்க முடியாமல், தாம் எப்போதும் பக்தியுடன் வணங்கும் நான்கு கரங்களுடன்கூடிய கருணைமிக்க விஷ்ணுவின் வடிவத்தையே காட்டுமாறு கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்.
அர்ஜுனனுடைய பிரார்த்தனைக்கு இணங்கிய கிருஷ்ணரும், யாதவ குல அரசராகவும் அர்ஜுனனின் தேரோட்டியாகவும் விளங்கும் தம்முடைய மானிட வடிவத்தையே தாங்குகிறார். அர்ஜுனனுக்குத் தம்முடைய பிரபஞ்ச வடிவத்தைக் காண்பித்து, அவருக்குப் பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தை ஏற்படுத்தியபின், கிருஷ்ணர் பக்தியைப்பற்றி, தெய்வீக அன்பைப்பற்றி விவரிக்கிறார்.
ஓ அஹங்காரம் அழியும்போது அன்பின் ஆழத்தைத் தொடுவீர்கள்
பொதுவாக மக்கள், பக்தி மலர்ந்த பிறகுதான் ஆன்மிக அனுபவம் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், ஆன்மிக அனுபவத்திற்குப் பிறகுதான் பக்தி மலர்கிறது.
எவர் ஒருவர் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் என்பதை உணர்கிறாரோ, அவரால் மட்டுமே தம்மைச் சுற்றி உண்மையான அன்பைப் பரவச்செய்ய முடியும். அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றி அவர் மட்டுமே அறிவார்; வேறு எவரும் அறிவதில்லை. எல்லோரும் தாங்கள் அன்பு செய்வதாக நினைக்கிறார்கள் அல்லது அன்பு செலுத்துவதுபோன்று நடிக்கிறார்கள்.
நம்முடைய இருப்பிலிருந்து அன்பு வெளிப்பட வேண்டும். நாம் நம்முள் பிரபஞ்ச விழிப்புணர்வு அனுபவத்தை உணரும்போதுதான், நம்முள் ஆன்மிக அனுபவம் மலரும்போதுதான், நம்முடைய அஹங்காரம் மறையும்போதுதான், நமக்குள் உண்மையான அன்பு மலர்கிறது. படிப்படியாக முழு நுட்பத்தையும் கிருஷ்ணர் நமக்காகத் திறந்து வைக்கிறார்.
ஆன்மிக அனுபவத்திற்குப் பிறகு, நம் இருப்புத்தன்மையிலிருந்து அபரிதமான நன்றியுணர்வும் அன்பும் பொங்கிப் பரவுகிறது.
ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய
மிகப்பெரிய செல்வம் பூர்ணத்வம்,
மிகச் சிறந்த வளப்படுத்தும் பண்பு
அதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமலேயே அவை பொங்கிக்கொண்டே இருக்கும். நம்மால் அதை நிறுத்த முடியாது. ஆன்மிக அனுபவத்தைப் பெற்றவர்களைத்தவிர வேறு எவராலும் அன்பை வெளிப்படுத்தவோ, உணரவோ முடியாது.
ஓ அன்பின் ஆழம் தொட்டால், சேவையில் மலர்வீர்கள்
ஸேவையை ஒருபோதும் நெறிமுறைகளுக்குள் ஒழுங்குபடுத்த முடியாது. அது உள்ளிருந்து இயற்கையாகப் பொங்கிவழிய வேண்டும். ஸேவை வெளி வெளிப்பாடு அல்ல. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், வேத பாரம்பரியத்தில், தானம் என்னும் கருத்து ஸேவை ஆகாது. ஸேவை என்பது அழகற்ற வார்த்தை. தானம் பற்றிய நம்முடைய கருத்து முற்றிலும் வேறுபட்டது. தனம்
- செல்வம், மற்றவர்களை வளப்படுத்த பயன்படுத்தப்படும்போது மட்டுமே தானம் ஆகிறது!
ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய மிகப்பெரிய செல்வம் பூர்ணத்வம், மிகச் சிறந்த வளப்படுத்தும் பண்பு - அன்பு!
செல்வத்துடனான பூர்ணத்வம் அன்பாக வெளிப்படுகிறது, அன்பு வளப்படுத்துதலாக வெளிப்படுகிறது.
பிறருக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்த அவர்களை நாம் வளப்படுத்துவதற்கு முன், நம்முள் உணர்வுமாற்றமும் பூர்ணத்வமும் நிகழ வேண்டும். நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உணராதவரை, உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதை உணராதவரை, உண்மையான அன்புடன் ஸேவை செய்வது, வளப்படுத்துவது என்பது முடியாத காரியம். நாம் கபட வேடதாரிகளாக மட்டுமே இருப்போம்.
இந்தப் பிரபஞ்சக் கடலின் ஓர் அங்கமே நாம். நாம் ஒவ்வொருவருமே அதன் துளிகள்தான்!
விஶ்வரூப தர்ஸநத்திற்குப் பிறகு, கிருஷ்ணர் பக்தி யோகத்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறார். முதலில் விசுவரூபதரிசனம் என்கிற பூர்ணத்வ அனுபவத்தைக் கொடுத்த பிறகு, அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக விளங்கும் தெய்விக அன்பெனும் வளப்படுத்துதலைப் பற்றி விளக்குகிறார்.
யார் முழுமையானவர்? (12.1)
இப்போது அர்ஜுனனின் எண்ணப் போக்கு முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது.
அவர் கேட்கிறார், "இந்த இருவித மனிதர்களில் யார் மேலானவர் என்று கருதப்படுகிறது. உங்களை பக்தியுடன் வழிபடுவதிலேயே தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்பவர்கள் மேலானவர்களா அல்லது ப்ரஹ்மத்துடன், மனத்திற்குப் புலப்படாத, வடிவமில்லாத அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் தங்களை இணைத்துக்கொள்கிறவர்கள் மேலானவர்களா?"
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், அர்ஜுனன் தமக்காக இதைக் கேட்கவில்லை. இது எதிர்கால சந்ததியினர்களுக்காக உண்மைகளைப் பதிவுசெய்யும் ஒரு முயற்சிபோன்றே பெரும்பாலும் இருக்கிறது.
அர்ஜுனன் கேட்கிறார், "விழிப்புணர்வு அனுபவத்தின் காரணமாக பொங்கிக் கொண்டிருக்கும் அந்த அன்பையும் நன்றியுணர்வையும் உலகம் முழுவதும் உள்ள உயிர்களிடத்தில் வெளிப்படுத்துவது நல்லதா?
அல்லது தெய்விக விழிப்புணர்வின் அனுபவத்திலேயே நிலைத்திருந்து, அந்த அனுபவத்திலிருந்து பொங்கிக் கொண்டிருக்கும் முடிவில்லா ஆனந்தத்தை வெறுமனே அனுபவித்துக் கொண்டிருப்பது நல்லதா? எது சரியானது? எது மேலானது என்று கருதப்படுகிறது?"
சிலர் ஆன்மிக அனுபவம் ஏற்படும்போது, அந்த அனுபவதிலேயே ஆழ்ந்து மூழ்கி, கண்களை மூடிக்கொண்டு அமைதியில் ஆழ்ந்துவிடுகிறார்கள். அவ்வளவுதான். மூடிய கண்களுக்குள் மட்டுமே அவர்களால் கடவுளைக் காண முடியும். அவர்கள் கண்களைத் திறக்க விரும்புவதே இல்லை. அவர்கள் தங்களுடைய புலன்களைப் பயன்படுத்த விரும்புவது இல்லை. ஏனென்றால் அவர்களுக்குள் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்தமானது அந்த அளவிற்குச் சிறப்பானது, அழகானது. எந்தவொரு புலனின்பமும் இந்த ஆனந்தத்திற்கு ஈடாக முடியாது.
ஆனால் வேறு சிலரோ பிரபஞ்ச சக்தியினால் தூண்டப்பட்டு தங்கள் கண்களைத் திறக்கிறார்கள். அவர்களுடைய அந்த ஆனந்தமயமான அனுபவத்தை அவர்கள் மூலமாகவே பிறருக்கு வெளிப்படுத்தி மற்றவர்களையும் வளப்படுத்த பிரபஞ்ச சக்தி விரும்புவதால் கண்களைத் திறக்கிறார்கள்!
பக்தி, ஞானம் இரண்டுமே
சமமான பாதைகள்தான்
“எவ்விதமான மனிதர் சிறந்தவர்? கண்களைத் திறந்துகொண்டு எல்லா உயிர்களிடத்திலும் இறைவனைக் காண்பவரா? அல்லது கண்களை மூடிக்கொண்டு தமக்குள்ளேயே கடவுளைக் காண்பவரா, யார் சிறந்தவர்?" என்று அர்ஜுனன் கேட்கிறார்.
உருவ வழிபாடு சிறந்ததா அல்லது அருவ வழிபாடு சிறந்ததா என்று அர்ஜுனன் கேட்கவில்லை என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
அனுபவத்தைப்பெற்று, அனுபவத்தினால் பொங்குகிற நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுதான் பக்தி, அதைக் கொண்டாடி, அந்த அனுபவத்திலேயே லயித்திருப்பது ஞானம்; அவ்வளவுதான்.
இரண்டு பாதைகளுமே ஒன்றே என்பதுதான் கிருஷ்ணருடைய பதிலாக இருக்கிறது. இரண்டு பாதைகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. முதல் பாதை இரண்டாவது பாதையை
அனுபவத்தினால் பொங்குகிற
நன்றியுணர்வை வெளிப்படுத்துவது
பக்தி, அந்த அனுபவத்திலேயே
லயித்திருப்பது ஞானம்.
நோக்கி அழைத்துச்செல்லும். இரண்டாவது பாதை முதல் பாதையை நோக்கித் திரும்பிவரும். இந்த இரண்டும் இணைந்து உருவாக்கும் சுழற்சியை தர்ம சக்ரம் என்கிறோம். இது நம்மை மேலான விழிப்புணர்வை நோக்கி அழைத்துச்செல்லும்.
நம்முள் பொங்கும் நன்றியுணர்வையும் வளப்படுத்துதலையும் வெளிப்படுத்துவதற்கு நம்மை அழைத்துச்செல்லும் பூர்ணத்துவ அனுபவத்தையே ஆனந்தம் என்கிறோம். நன்றியுணர்வையும் வளப்படுத்துதலையும் வெளிப்படுத்தும்போது, அது நம்மை மீண்டும் ஆனந்தத்தை நோக்கி அழைத்துச்செல்லும். ஆனந்தம், பூர்ணத்துவ அனுபவத்தை நோக்கி அழைத்துச்செல்லும்.
ஒன்று மற்றொன்றை நோக்கி அழைத்துச்செல்வதால் இது தர்ம சக்ரம் ஆகிறது. நாம் பொதுவாக அச்சம் ஆசையை நோக்கியும், ஆசை அச்சத்தை நோக்கியும் அழைத்துச்செல்லும் அதர்ம சக்ரத்தின் பிடியில் இருப்போம். அதிக பயம் அதிக ஆசையை நோக்கியும், அதிக ஆசை அதிக பயத்தை நோக்கியும் அழைத்துச்செல்லும். இதுதான் அதர்ம சக்ரம்.
இந்த இடத்தில் கிருஷ்ணர் தர்ம சக்ரத்தை அறிமுகம் செய்கிறார். நாம் ஸத்ய பாதையில் நடக்கும்போது, நம்மால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நல்லொழுக்கத்தைத்தான் கிருஷ்ணர் தர்ம சக்ரம் என்று குறிப்பிடுகிறார்.
தர்மம் என்ற நீதிச் சக்ரம். நம்மை மேலும் மேலும் உயர் விழிப்புணர்வு நிலையில் வாழவும் அதை வெளிப்படுத்தவும் அழைத்துச்செல்கிறது. அதன் மூலம் அது நம்மை மேலும் மேலும் உயர்ந்த ஆனந்த அனுபவத்திற்கு அழைத்துச்செல்கிறது. நம்முள் பொங்கும் ஆனந்தமும் விழிப்புணர்வும் நம்மை அந்த ஆனந்ததையும் விழிப்புணர்வையும் வெளிப்படுத்தச் செய்கிறது. இந்த வெளிப்பாடு, நம்மை உயர்ந்த நிலை அனுபவங்களுக்கு
தர்மச் சக்ரம். நம்மை மேலும்
மேலும் உயர் விழிப்புணர்வு
நிலையில் வாழவும் அதை
வெளிப்படுத்தவும்
அழைத்துச்செல்கிறது.
பக்தி செய்ய வேண்டுமா? முதலில் வளப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் (12.2-12.5)
பகவான் சொல்கிறார், மய்யாவேஶ்ய மநோ யே மாம் நித்யயுக்தா (12.2) -தம் மனத்தை என்மீது நிலைநிறுத்தியவர்; யே த்வகூஷரமநிர் தேஶ்யமவ்யக்தம் பர்யுபாஸதே (12.3) -அழிவற்றதும், புலன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதும், உருவற்றதுமான அந்த நித்யமான பரம்பொருளை விழிப்புணர்வோடு வழிபடுகிறவர்; இவர்கள் இருவருமே என்னையே அடைகிறார்கள்.
யார் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை பக்தியாக வெளிப்படுத்துகிறாறோ, அவர் உபாஸதே (12.2) -உலகத்தைப் பார்க்கிறார்.
உபாஸனா என்ற வார்த்தையைப் பலவிதமாக மொழிபெயர்க்கலாம். எல்லோரிடமும் நாம் தெய்विकத்தைப் பார்க்கும்பொழுது, ஆன்மிக அனுபவத்தின் ஸத்யத்தை நாம் வெளிப்படுத்தும்போது, நாம் செய்கிற எல்லாச் செயல்களும் உபாஸனாதான்.
வாழும் உயிர்களிடத்தில் நாம் தெய்विकத்தைக்காணவில்லையானால், நாம் கடவுளிடத்திலோ அல்லது குருவிடத்திலோ இருக்கும் தெய்विकத்தையும் காண முடியாது.
பூர்ணத்வ விழிப்புணர்வு நிலையிலேயே நிலைத்திருப்பதும் அல்லது அதை இந்தப் பிரபஞ்சத்தை வளப்படுத்துவதற்காக வெளிப்படுத்துவதும் ஒன்றே.
ஒரு மனிதர் ஒன்றியிருக்கும்போது, லயித்திருக்கும்போது அவர் தன்னிச்சையாகவே அதை வெளிப்படுத்துவார். அன்பு நிகழவில்லையென்றால், வெளிப்படுதல் நிகழவில்லையென்றால், அந்த மனிதர் அனுபவப்படவில்லை.
உண்மையான அனுபவம் நிகழும்போது அது தானாகவே நம் மூலமாக வளப்படுத்துதலாக வெளிப்படும். அனுபவம் என்பது ஒருவர் தம்முடைய அலமாரியில் வைத்து உரிமை கொண்டாடக்கூடிய ஒரு உடைமைப் பொருள் இல்லை. அனுபவம்தான் நம்மை உடைமையாக்கிக்கொண்டு, நம் மூலமாக வளப்படுத்துதலாக வெளிப்படும்.
அனுபவம், நம்மை உரிமையாக்கிக்கொள்ளும்போது, நாம் எது செய்தாலும் சரி, அது ஒரு கவிதையாக இருக்கும். நம்முடைய இருப்புநிலையே மிகவும் லேசானதாகிவிடும். நம்முடைய அங்க அசைவுகள் நளினத்தை வெளிப்படுத்தும். நம்முடைய வெளிப்பாடுகள் அனைத்துமே மனித இனத்திற்கு ஒரு மிகச்சிறந்த வளப்படுத்தும் ஸேவையாக இருக்கும்.
ஸத்யங்களை கவிதையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும்
ஞானமடைந்த குரு பேசுவதும் இல்லை. அமைதியாக இருப்பதும் இல்லை. வெறுமனே பாடுகிறார். அதனால்தான் கீதை கவிதை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
கீதை உரைநடையல்ல, அது கவிதை.
உயர்ந்த ஸத்யங்களைத் தர்க்கத்திற்குட்பட்டு விளக்க முடியாது. அவற்றை கவிதையின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். கவிதை உணர்வுப்பூர்வமானது, அன்புமயமானது, அது பாய்ந்து பரவுகிறது.
கிருஷ்ணர் சொல்கிறார், “பூர்ணத்வ விழிப்புணர்வில் லயித்திருக்கும் ஒரு மனிதர் சிறந்தவராகிறார். இருப்பினும் யாரொருவர் வளப்படுத்துதல்மூலம் வாழ்வுசக்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அதைத் தன்னிச்சையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ அவரும்கூட விழிப்புணர்வில் லயித்திருப்பவர்
யார் ஒருவர் தெய்விகத்தின் அருவ
இயல்பினை உணர்ந்திருக்கி
றாரோ, அவர் மனித குலத்தை
வளப்படுத்துவதற்காகவே
போன்று சிறந்தவராகிறார்.
கிருஷ்ணன், ஸகுண ப்ரஹ்மமாக; பிரபஞ்ச சக்தியின் மனித உருவமாக இருக்கிறார். அவரே விஸ்வரூப தர்ஸநத்தில் தம்முடைய இந்த உருவத்தைக் காட்டுகிறார். கிருஷ்ணர் நிர்குண ப்ரஹ்மமாகவும் அதாவது அருவமாகவும் அவரே இருக்கிறார்.
கிருஷ்ணரால் இங்குச் சொல்லப்பட்ட எல்லாக் குணங்களையும், உருவமாக இருக்கும்போதும், அருவமாக இருக்கும்போதும்சரி, தெய்விக விழிப்புணர்வான கிருஷ்ணர் பெற்றிருக்கிறார்.
தெய்விகம் அக்ஷரம் - அழிவற்றது. அது எங்கும் நிறைந்திருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கிறது.
உண்மையான பக்தர்கள் இறைவனை எங்கும் காண்கிறார்கள்.
கிருஷ்ணர் இரண்டு பிரிவுகளை உருவாக்கவில்லை. அர்ஜுனன், நிஜத்தில் தாம் பார்க்கிற இரு குழுவினரைப் பற்றியும் கிருஷ்ணரிடம் விவரிக்கிறார்: பூர்ணத்த்வத்தை வெளிப்படுத்துபவர் மற்றும் பூர்ணத்த்வத்தில் நிலைபெற்றிருப்பவர் அதாவது வளப்படுத்துபவர் மற்றும் லயித்திருப்பவர். கிருஷ்ணர், "இந்த இரு பிரிவினரும் ஒன்றே," என்று சொல்கிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், "யார் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் வெளிப்படுத்துகிறார், யார் வெளிப்படுத்துகிறாரோ அவர் நிலைபெற்றிருக்கிறார்."
நான் முன்பு சொன்னதுபோல் இது ஒரு தர்ம சக்ரம்.
யார் ஒருவர் தம்முடைய புலன்களை அடக்கி, தெய்விகத்தின் அருவ இயல்பினையும் அதன் அழிவற்றதன்மையையும், மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத அதன் வெளிப்படுத்தப்படாத இயல்பினையும் உணர்ந்திருக்கிறோரோ, அவர் மனித குலத்தை
இந்தப் பிரபஞ்ச அரசரின் கர்ஜனை:
"என்னுடைய வேலையைச்
செய்யுங்கள். நான் உங்களை
வளப்படுத்துவதற்காகவே வேலைசெய்கிறார்.
அருவக் கடவுளை உணரும் அனுபவம் ஒருமுறை நிகழ்ந்துவிட்டால் கூட போதும், அது உருவக் கடவுளை அறியும் அனுபவத்திலிருந்து வேறுபட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்வோம்.
இந்த உணர்தலின் வெளிப்பாடே கருணையும் பணிவும். மேலும் இது ஆழ்ந்த நன்றியுணர்வாகவும் ஸரணாகதியாகவும் வெளிப்படுகிறது. இதன் மூலம் ஒருவர், பிரபஞ்ச சக்தியோடு இணைந்துசெல்லக் கற்றுக்கொள்கிறார். அதற்குப்பிறகு அவர் வாழ்க்கையின் ஓட்டத்தை எதிர்த்துத் துன்பப்படுவதில்லை.
ஏனென்றால் நாம் சரணடையும்போது, கிருஷ்ணர் பொறுப்பெடுத்துக்கொள்கிறார்.
நீங்கள் மீண்டும் பிறக்கத் தேவையில்லை (12.6 -12.7)
கிருஷ்ணர் இங்கு ஒரு உறுதிமொழியைக் கொடுக்கிறார். "நான் அவர்களை, அவர்களுடைய உடல் வடிவத்திலிருந்து, ஸம்ஸார கடலிலிருந்து, பிறப்பு-இறப்புச் சக்கரத்திலிருந்து விரைவில் கரையேற்றுவேன்."
இறைவன் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, பக்தர்கள் தம்மீது பூர்ண பக்தி கொண்டிருக்க வேண்டும், அவ்வளவுதான்.
"யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: (12.6) -உங்கள் எல்லாச் செயல்களையும் அதனுடைய பலன்களையும் என்னிடமே சரணடைய செய்து, என்னுடைய வேலைகளைச் செய்துகொண்டு, அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே (12.6) - என்னைத் தியானித்து, என்னுடைய விழிப்புணர்வின்மேல் மனத்தை ஒருமுகப்படுத்தி நீங்கள் என்னிடம் சரணடைந்தால், உங்களைக் கடைத்தேற்றி உங்களுக்கு முக்திகொடுத்து, உங்களை விடுவிப்பேன்," என்று கிருஷ்ணர் சொல்கிறார். இது சிங்கத்தின் கர்ஜனை!
இது, இந்தப் பிரபஞ்சத்தின் அரசரான ஒருவருடைய கர்ஜனை:
"என்னிடம் சரணடையுங்கள். நான் உங்களை மீட்பேன். என்னுடைய வேலையைச் செய்யுங்கள். நான் உங்களை விடுவிப்பேன்!"
நம்முடைய கடவுள் நம்பிக்கை என்பது மேலோட்டமானது. முதலில் நம்மில் பலருக்குக் கடவுள் என்பது ஒரு கருத்து மட்டுமே. நாம் அந்தக் கருத்தை வணங்குகிறோம். பல நேரங்களில் நாம் அந்தக் கருத்திடம் இறைஞ்சுகிறோம். "கடவுளே, எனக்கு இதைக் கொடு, கடவுளே, எனக்கு அதைக் கொடு," என்று வேண்டுகிறோம்.
கடவுளிடம் சரணடைவது என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டதல்ல. அது முழுமையானதாக இருக்க வேண்டும். 'அப்படியென்றால்', 'ஆனால்' - என்பதுபோன்ற அந்த வார்த்தைகளுக்கே அங்கு இடமில்லை.
அவரை அடைய, நம்முடைய புலன்களை அவரிடம் சரணடையச் செய்ய வேண்டும். முழு இருப்பும் அவருக்காக இருக்க வேண்டும், மொத்த விழிப்புணர்வும் அவரைப் பற்றியதாக இருக்க வேண்டும். அவரைத்தவிர வேறெதைப் பற்றியும் இருக்கக்கூடாது. நாம் செய்வதற்கென்று ஒன்றும் இருக்கக்கூடாது. இது மிகவும் எளிமையான நுட்பம்.
கடவுள் இதை மிக எளிமையாக்குகிறார். குரு சொல்கிறார்: "நான் உன்னைக் காப்பாற்றுவேன். பவாமி நசிராத் (12.7) - காலம் தாழ்த்தாமல் உடனடியாகக் காப்பாற்றுவேன், என்னிடம் சரணடை!"
வளப்படுத்துங்கள், தர்ம சக்ரத்தைச் சுழலவையுங்கள் (12.8 -12.11)
"சர்வ வல்லமைப் படைத்த தெய்விகத்தன்மை கொண்ட என்னிடமே உங்கள் மனத்தை நிலைநிறுத்தி, உங்கள் மனம், உடல் மற்றும் புலன்களை என்மேல் ஈடுபடுத்துவதன் மூலம், நீங்கள் என்னிடமே வாழ்கிறீர்கள். ந ஸம்சாய (12.8) - அதில் எந்தவித சந்தேகமும் இல்லை."
இங்கே கிருஷ்ணர் தர்ம சக்ரத்தைச் சுழலவைப்பதற்கான நுட்பத்தை வழங்குகிறார். "மய்யேவ மந ஆதத்ஸ்வ (12.8) -உங்களுடைய மனத்தை என்னுள் நிலைநிறுத்துங்கள். மயி புத்திம் நிவேஸய (12.8) -உன்னுடைய புத்திசாலித்தனத்தை என்மேல் நிலைநிறுத்து. நிவஸிஷ்யஸி மய்யேவ (12.8) -எல்லையில்லாத விழிப்புணர்வை நீ அடைந்தபின் என்னுள் எப்போதும் வாழ்வாய்."
நாம் நம்முடைய புத்திசாலித்தனத்தை அவரிடம் நிலைநிறுத்துவது எப்படி?
கிருஷ்ணர் கற்றுக்கொடுக்கும் இந்தக் கருத்துகளையும் எண்ணங்களையும்கொண்டு தொடர்ந்து உங்களையும் மற்றவர்களையும் வளப்படுத்துங்கள். தர்ம சக்ரத்தைச் சுழலவையுங்கள்.
தர்மோ ரக்ஷதி ரக்ஷித: - தர்மத்தை நீங்கள் பாதுகாக்கும்போது, தர்மம் உங்களைக் காக்கிறது. அதற்கான பொறுப்பை நீங்கள் எடுக்கும்போது, உங்களுக்கான பொறுப்பை அது எடுத்து க்கொள்கிறது. அது தனிப்பட்ட புத்திசாலித்தனம்மிக்க சக்தி.
ஞானக்கருத்துக்களே உங்களைக் காக்கும் கேடயங்கள்
நீங்கள் உட்கொள்ளும் எண்ணங்கள்தான், உங்களுடைய விழிப்புணர்வின் வெளிப்பாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
கிருஷ்ணரின் கருத்தான, "உங்களுடைய புத்தியை என்னில் நிலைநிறுத்துங்கள்," என்கிற ஒரு கருத்தை மட்டும் உங்கள் எண்ணத்தில்கொள்ளுங்கள். நீங்கள் எதையெல்லாம் உட்கொள்கிறீர்களோ, அவற்றின்மீதுதான் உங்கள் மனத்தை நிலைநிறுத்துகிறீர்கள். அதனால் நீங்கள் உட்கொள்ளும் கருத்துகள்
நீங்கள் உட்கொள்ளும் எண்ணங்களே,
உங்களுடைய விழிப்புணர்வின்
வெளிப்பாட்டில்
முக்கிய பங்கு வகிக்கின்றன.
தூய்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தானாகவே உங்களுடைய விழிப்புணர்வு தெய்விகத்தில் நிலைபெற்றுவிடும்.
மீண்டும் மீண்டும் இந்தக் கருத்துகள் உங்களைச் ஊடுருவிச் செல்லட்டும்.
நான் மக்களிடம் சொல்வது என்னவென்றால், ஞானமடைந்த விழிப்புணர்விலிருந்து வார்த்தைகள் வெளிப்படும்போது அவை உங்களுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடியவையாகவும், எப்போதெல்லாம் அவற்றின் உதவி தேவையோ, அப்போதெல்லாம் அவை தாமாகவே உங்கள் மனத்திற்குள் எழுந்து உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.
மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது: "ஸ்வாமிஜி, நாங்கள் எப்படி இந்தக் கருத்துகளை நினைவில்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவது?"
அப்போது நான் அவர்களிடம் சொல்லும் பதில்: "நினைவில் வைத்துக்கொள்வதைப் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம். வெறுமனே கேளுங்கள், அது போதும். இந்த வார்த்தைகள் என்னுடைய அனுபவத்திலிருந்து வருகின்றன. அதனால் இயற்கையாகவே அவை உங்களுடைய இருப்புத்தன்மையை ஊடுருவிச் சென்றுவிடும் என்பதுதான்."
நம்மை வழிநடத்தும் கடவுளின் உறுதிமிக்க வார்த்தைகள்
இங்கே கிருஷ்ணர், தெய்விகத்துடன் இணைந்த நிலையிலேயே மனத்தைத் தொடர்ந்து வைத்திருக்கச் செய்யும் அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகிறார். இது கிருஷ்ண உணர்விலேயே
தர்மத்தைப் பாதுகாப்பதற்கான
பொறுப்பை நீங்கள் எடுக்கும்போது,
உங்களைப் பாதுகாப்பதற்கான
பொறுப்பை அது எடுத்துக்கொள்கிறது.
முழுவதுமாக மூழ்கியிருக்கும் ஒருநிலை.
அப்யாஸம் என்றால் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்தல் என்று பொருள்.
கிருஷ்ணர் ஏன் அப்யாஸ யோகத்தைப் பற்றிப் பேசுகிறார்?
முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் விஸ்வரூப தர்ஸநத்தை பிரபஞ்ச விழிப்புணர்வின் கணநேரத் தோற்றத்தை, ஒரு துளியைக் காட்டினார். ஆனால் அர்ஜுனன் அந்த நிலையிலேயே தொடர்ந்து, நிலையாக இருக்கக்கூடிய சக்தி இல்லாதவராக இருக்கிறார்.
தம்முடைய கடந்தகால ஆசைகள் மற்றும் பயங்களைப் பற்றிய ஸம்ஸ்காரங்களின் காரணமாக, மூலமனப்பாங்குகளின் காரணமாக அவர் அந்த அனுபவத்திலிருந்து, அந்த விழிப்புணர்வு நிலையிலிருந்து வழுக்கி விழுகிறார். அதனால் மனத்தை எப்படி அந்த விழிப்புணர்வுக்குள் நிலைநிறுத்துவது என்பதைப் பற்றிய அப்யாஸ யோகத்தைக் குறித்து கிருஷ்ணர் பேசுகிறார்.
இந்த நான்கு (12.8-11) ஸ்லோகங்களிலும், கிருஷ்ணர், நம்மை நாமே அந்த விழிப்புணர்வில் நிலைநிறுத்திக்கொள்வதற்கும், பக்தியைப் பரவச்செய்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் மேலும் பல நுட்பங்களைத் தொடர்ந்து கொடுக்கிறார். அவரவர் விருப்பப்படி தேர்வுசெய்வதற்கான பல்வேறு வழிகளை அவர் படிப்படியாக கொடுக்கிறார்.
அவர் சொல்கிறார்: “உன்னால் இதைச் செய்ய முடியவில்லை என்றால் அதைச் செய்; அதைச் செய்ய முடியவில்லையென்றால் இதைச் செய்.” அவர் பல்வேறு வாய்ப்புகளையும் நெறிமுறைகளையும் நமக்குக் கொடுக்கிறார்.
முதல் விஷயமாக அவர் சொல்வது, “ஓ தனஞ்ஜயா! மய்யேவ மந ஆதத்ஸ்வ (12.8) -உன் மனத்தை என்னிடம் நிலைநிறுத்து,” என்பதைத்தான்.
அடுத்து அவர் சொல்வது, அத சித்தம் ஸமாதாதும் ந ஸக்நோஷி மயி ஸ்திரம் அப்யாஸயோகேந (12.9) - அவ்வாறு மனத்தை என்னிடம் நிலைநிறுத்த முடியாவிட்டால், தொடர்ந்து த்யான பயிற்சியைச்செய்து என்னை அடைய முயற்சிசெய்; இங்கே கிருஷ்ணர், யோகப் பாதையின் பகுதியாக விளங்கும் த்யான பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன்மூலம் மனத்தை நிறைவுசெய்வதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்.
நம்மால் முழு மனத்துடன் பக்தியோடு, நம்மையே அவரிடம் கரைக்க முடியாமல் போகக்கூடும் என்பது அவருக்குத் தெரியுமாதலால், அதற்கு மாற்றாக அவர் இந்த த்யான உபாயத்தைச் சொல்கிறார். "உன் மனத்தை என்னிடம் ஈடுபடச்செய்ய முடியவில்லை என்றால், த்யானத்தின் மூலம் மீண்டும் மீண்டும் என்னை அடையப் பயிற்சி செய்," என்று அவர் சொல்கிறார்.
சேவை மட்டுமே இறைவனை அடைவதற்கான உத்தரவாதம்
மூன்றாவதாக அவர் சொல்வது, "அப்யாஸேப்ய-ஸமர் தோண்ஸி மத்கர்மபரமோ பவ (12.10) - உன்னால் பயிற்சி செய்ய முடியவில்லையென்றால், எனக்காக வேலைகளைச் செய்." முதல் இரண்டு வழிமுறைகளுமே சாத்தியமில்லையெனும்போது கிருஷ்ணர் மூன்றாவதாக மற்றொரு நுட்பத்தைச் சொல்கிறார். "நீ எதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமோ அதைச் செய். ஆனால் அதை நீ எனக்காகவே செய்," என்கிறார்.
நான்காவதாக அவர் சொல்வது, மத்யோகமாஸ்ரித: ஸர்வகர்மபலத்யாகம் (12.11) - என்னிடம் சரணடைந்து, நீ செய்கிற எல்லாச் செயல்களின் பலன்களையும் அஹங்காரம் இல்லாமல் என்னிடம் அர்ப்பித்துவிடு," என்பதுதான். அதாவது, "எனக்காகவே உன்னால் செயல்களைச் செய்ய முடியவில்லையென்றால், உனக்கு விருப்பமான செயல்களையே செய்துகொள், ஆனால் அவற்றின் பலன்களை எனக்குச் சமர்ப்பித்துவிடு," என்கிறார்.
கிருஷ்ணர் இந்தக் கூற்றின்மூலம் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார்: ஒன்று, ஸரணாகதி உணர்வுடன் நாம் எதைச் செய்தாலும், அதனால் விளையும் பலன்கள் அவரையே சாரும். இரண்டாவது, செயலைச்செய்வதற்குத்தான் நமக்கு உரிமை உள்ளதேதவிர, அதைச் சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. நம்முடைய கடமை செயல்புரிவது, அதைச் சிறப்பாகச் செய்வது, அவ்வளவுதான்.
நாம் எதைச் செய்தாலும், சரி, அதை அவரிடம் முழு நம்பிக்கை வைத்து, ஆழமான ஸரணாகதி மனப்பாங்குடன் செய்வதன்மூலம் நாம் அவரை அடைவோம்.
"உங்களால் எந்த வழியில் முடியுமோ, அந்த வழியில் மனித குலத்தின் நலனுக்கான செயல்களைச் செய்யுங்கள். என்னுடைய சார்பாக வேலை செய்யுங்கள்," என்கிறார்.
அவருடைய சார்பாக நாம் செய்யும் செயல்களின் பலன்களுக்குச் சொந்தக்காரரும் அவரே.
நடப்பது எல்லாம் அவர் கையில்தான் இருக்கிறதேதவிர நம் கையில் இல்லை. அதனால், நாம் இலட்சியத்தை விட்டுவிட்டு, பாதையில் நம் மனத்தைச் செலுத்துவோம். இறுதிப் பலன் எப்படி இருக்கக் கூடுமோ என்ற மன அழுத்தம் நமக்கு இல்லாததால், நம் செயலின் தரம் மேன்மையானதாக இருக்கும்.
நம்முடைய செயல்களின் பலன்கள் பாதுகாப்பான கைகளில் இருப்பதால், இனியும் அதற்காகக் கவலைப்படுபவர்களாக நாம் இருப்பதில்லை. எது நடந்தாலும் நன்மையே. இந்த பற்றற்ற, எதிர்பார்ப்பற்றன்மைதான் செயல்களை இறைவனிடம் ஒப்படைத்த ஒரு கர்ம யோகியின் விசேஷ குணமாகும்.
இறைவனுடைய பணிக்காக, குறிக்கோளுக்காகச் சேவையில் ஈடுபடுவது மட்டுமே இறைவனை அடைவதற்கான ஒரு நிச்சயமான உத்தரவாதம்.
இலட்சியத்தை விட்டுவிட்டு, பாதையில் நம் மனத்தைச் செலுத்து
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறார். அர்ஜுனனின் ஆன்மிக எழுச்சிக்காக அவர் காட்டும் கருணை எல்லையற்றது. அர்ஜுனன் கிருஷ்ணருடைய வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று முதலில் சொல்லுகிறார். பிறகு அவரே தாம் வலியுறுத்திச் சொல்லிய கருத்திலிருந்த கடுமையைக் குறைத்து மனம் இரங்குகிறார்.
‘முடியாது’ என்பதையும் சரணாகதி செய்துவிடுங்கள்
சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில், அர்ஜுனனால் தம்முடைய முழு நேரத்தையும் கிருஷ்ணருக்கான செயல்களிலேயே செலவிடமுடியாமல் போகலாம் என்பதை கிருஷ்ணர் உணர்கிறார். அதனால் “எனக்காகவே உன்னால் செயல்களைச் செய்ய முடியவில்லையென்றால், உனக்கு விருப்பமான செயல்களையே செய்துகொள், ஆனால் அவற்றின் பலன்களை எனக்குச் சமர்ப்பித்துவிடு,” என்கிறார்.
கிருஷ்ணரின் போதனைகள் இந்தக் காலத்திற்கும் எப்படி ஒத்துப்போகிறது பாருங்கள். நமக்காகவும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நலனுக்காகவும் நாம் அதிக நேரத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளது.
பலனைக் கருதாமல், சுயநலமின்றி சமுதாய நலனுக்காகவும் ஆன்மிக ஸேவைக்காகவும் நம்மால் சிறிது நேரம் மட்டுமே செலவழிக்க முடியும். இதனால் இழப்பு எதுவுமில்லை என்று கிருஷ்ணர் உறுதிபடுத்துகிறார். மேலும் நம்முடைய பொருளுக்கான தேடல் மற்றும் ஆன்மிகத் தேடல் ஆகிய இரண்டுக்குமிடையே பாலத்தை அமைக்கிறார்.
குருவுடன் இணைந்து
செயலாற்றுவதற்குரிய ஒரேயொரு
உறவுமுறை முழுமையான ஸரணாகதி
நிலையே.
கீதையின் மையக்கருத்தான துறவைப் பற்றிக் கிருஷ்ணர் எடுத்துரைக்கிறார். அவர் சொல்கிறார், "நீ எதைச் செய்ய வேண்டுமோ அந்தச் செயல்களை ஸரணாகதி மனப்பான்மையுடன் செய். உன்மீதும் உன்னுடைய அஹங்காரத்தின்மீதும் முழுக் கட்டுப்பாட்டை வைத்து, அந்தச் செயலின் பலன்களைத் துறந்துவிடு, நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன்.''
இரண்டு வகை அஹங்காரங்கள் இருக்கின்றன. செயல்படும் அஹங்காரம், செயல்படுத்தப்படும் அஹங்காரம்.
செயல்படும் அஹங்காரம் என்பது நம்மிடம் இல்லாததை வெளிக்காட்டுவது.
செயல்படுத்தப்படும் அஹங்காரம் என்பது நம்மிடம் இருப்பதை மறைப்பது. "ஓ! நான் என்ன செய்ய முடியும்? நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் எதையும் சாதிக்க முடியாது, என்னால் எதையும் செய்ய முடியாது' என்ற எண்ணங்களால் உருவாக்கப்படும் தாழ்வு மனப்பான்மை செயல்படுத்தப்படும் அஹங்காரத்தின் ஒரு வெளிப்பாடே. அதையும் சரணாகதி செய்துவிடுங்கள்.
உயர்வு, தாழ்வு இரண்டையும் கடப்போம்
உயர்வு மனப்பான்மையில் குறைந்தது ஒரு நல்ல விஷயம் உண்டு. தம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணங்களுடன் ஒருவர் எங்குச் சென்றாலும், அங்கு அவர் ஒரு பெரிய அடியையாவது பெற்றுக்கொள்கிறார்!
அடிகொடுத்து, அடிகொடுத்து இந்தச் சமுதாயம் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிசெய்யும். பிறகு நீங்கள் உங்களுடைய உயர்வு மனப்பான்மையிலிருந்து விடுபடும் முயற்சி யை எடுப்பீர்கள்.
ஆனால் உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால், சமுதாயம் உங்களைத் திருத்த முயற்சிசெய்யாது. அது வாழ்க்கையிலிருந்து உங்களை நீங்களே மறைத்துக்கொள்ளும் ஒரு கபடப் பாதையே.
உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதைக்கூட நீங்கள் தெரிந்துகொள்ள மாட்டீர்கள். தம்முடைய தாழ்வு மனப்பான்மையில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒருவர், உயர்வு மனப்பான்மையில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒருவரைவிட ஆழமாக அவதிப்படுகிறார்.
பெயர் புகழை விரும்பும் மனிதர், பெயர் புகழை விரும்பாத மனிதர் - இருவருமே அஹங்காரத்தை உடையவர்கள்தான். நீங்கள் பெயரை விரும்பினீர்களானால், அஹங்காரம் கொண்டவர். பெயரை விரும்பவில்லையானால், அது போலி அஹங்காரத்தை, செயல்படுத்தப்படும் அஹங்காரத்தைக் காட்டுகிறது.
ஆனால் நிகழ்ச்சிகளை அதனதன் வழியில் நிகழ அனுமதிக்கும் ஒருவரே, நிகழ்ச்சிகளைப் பொங்கி ஓட அனுமதிக்கும் ஒருவரே நிஜத்தில் வாழ்கிறார்.
எனக்குப் பிரியமானவர்கள் (12.12 -12.20)
"யார் பொறாமையில்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் கருணைமிக்க நண்பராக உள்ளாரோ, யார் தம்மைச் செயல்களுக்குரியவராக நினைக்காமல் இருக்கிறாரோ, யார் பொய்யான அஹங்காரத்திலிருந்துவிடுபட்டு இருக்கிறாரோ, யார் இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக இருக்கிறறோ, யார் சகிப்புத்தன்மையுடன் இருக்கிறாரோ, எப்போதும் திருப்தியுடன் இருக்கிறாரோ, மனம் புலன்களோடுகூடிய உடலைத் தம் வசப்படுத்தி இருக்கிறாரோ, யார் பக்தி ஸேவையில் உறுதியுடனும் முழு மனத்துடனும் ஈடுபட்டுள்ளாரோ, தம்முடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் ஈடுபடுத்தி உள்ளாரோ, அப்படிப்பட்ட ஒரு பக்தர் எனக்கு மிகவும் பிரியமானவராகிறார் (12.13 -14)."
"யாரெல்லாம் இவற்றைச் செய்கிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்," என்று சொல்கிறார். ஒருவிதத்தில் இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான மிரட்டல்தான். நேரிடையாக இல்லாத ஆனால் மறைமுக மிரட்டல். ஆனாலும் அது நம்மை வளப்படுத்துவதற்காகத்தான்!
கிருஷ்ணர் குறிப்பிடுகிற தர்ம பாதை என்பது த்யான பாதைதான்.
“யார் பிறர்மீது பொறாமையில்லாமல், எல்லா உயிர்களுக்கும் கருணை மிக்க நண்பராக இருக்கிறாரோ,” என்று கிருஷ்ணர் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இவையிரண்டும் முக்கியமான குண நலன்கள்.
யாராவது உங்களிடம் வந்து அவர் உங்கள்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார் என்று சொன்னால், அப்போது நீங்கள் செய்யும் முதல் காரியம் என்னவாக இருக்கும்? அந்த நபர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிய முயற்சி செய்வீர்கள். ஏனென்றால் நீங்களும் நேசிக்கப்படுவதற்குத் தகுதியான ஒரு நபர்தான் என்பதை நீங்களே நம்புவதில்லை.
அடுத்து, உங்களை ஒருவர் நேர்மையாக, உண்மையாக நேசிக்கக்கூடும் என்பதை நம்பமாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் யாரையும் நேர்மையாக நேசிப்பதில்லை. நீங்கள் எதையும் கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பவராக இருப்பதால், மற்றவரும் அப்படித்தான் இருப்பார் என்று நினைக்கிறீர்கள்.
நம்முடைய அன்பெல்லாம் தோலின் ஆழம் வரைதான்.
சரணாகதி, அன்பையும் வெறுப்பையும் கடந்த ஒருநிலை
‘ ‘ ய ா ர் தம்முடைய மனத்தையும்
பட்டறிவையும் என்னிடம் நிலைபெறச்
செய்கிறார்க ளோ,” என்று கிருஷ்ணர்
சொல்கிறார்.

ஒரு பக்தருக்கோ அல்லது சீடருக்கோ பிரபஞ்சத்திடமோ அல்லது குருவிடமோ இந்த அளவிற்கு ஸரணாகதி செய்யும் மனநிலையைக்கொள்வது என்பது கடினமான காரியம்தான்.
சீடர் விரும்பியபடி நிகழ்ச்சிகள் நடக்கும்வரை, அவர் ஒரு சிறந்த குரு ஆகிறார். வழிப்படத் தகுதியானவராகிறார். ஆனால் குரு