அத்தியாயம்-13: க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
குறையுணர்வுகளைக் களைவதற்கான தீர்வு
சமுத்திரத்திலிருந்து எழும் அலை,
தானும் சமுத்திரமும் வெவ்வேறு
அல்ல
என்று எப்போது புரிந்துகொள்கின்ற
தோ,
அப்போதே அதனுடைய எதிர்ப்பைக்
கீழே போட்டுவிட்டு
சமுத்திரத்தோடு சங்கமித்துவிடும்.
அதேபோல் பிரபஞ்சம் என்னும்
சமுத்திரத்தில் எழுந்த அலையாகிய
உங்களுள்ளும் புரிதல் மலர்ந்து
ஸdependencies
ஸ்லோகங்கள்
அத த்ரயோதஶோத்யாய:
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞ விபாக யோக:
ஏ
அர்ஜுந உவாச
ப்ரக்ரு'திம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச ந
ஏதத்வேதிதும் இச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஶவ நந 13.0
அர்ஜுனன் சொன்னது
13.0 ஓ கேசவா, ப்ரக்ருதி மற்றும் புருஷ எனப்படும் செயல்படும் மற்றும் செயலற்ற சக்திகளையும், களம் மற்றும் களத்தை அறிந்தவரையும், அறிவு மற்றும் அறிவின் முடிவையும் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்புகிறேன். (சில பதிப்பில் இந்த ஸ்லோகம் இடம்பெறுவதில்லை)
ஸ்ரீபகவாந் உவாச
இத³ம் ஶரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி⁴தீ⁴யதே ந
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித: நந 13.1
ஸ்ரீபகவான் சொன்னது
13.1 ஓ, குந்தீ மகனே, இந்த உடலைத்தான் களம் என்று சொல்கிறோம். யாரொருவர் இந்த உடலைப் பற்றித் தெரிந்துவைத்திருக்கிறாரோ அவரைத்தான் களமறிந்தவர் என்று சொல்கிறோம்.
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத ந
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞானம் யத்தஜ்ஜ்ஞானம் மதம் மம நந
13.2
13.2 ஓ பரத குலத்தில் உதித்தவனே, சிருஷ்டிகர்த்தாவாகிய நானே களமறிந்தவனாக எல்லா உடல்களிலும் இருக்கிறேன் என்பதை புரிந்துகொள். என்னுடைய அபிப்ராயப்படி ‘அறிவு’ எனப்படுவது, படைத்தலுக்குரிய களமான இந்த உடலையும், இந்த உடலை அறிந்த படைப்பாளியையும் புரிந்துகொள்வதே.
தத்க்ஷேத்ரம் யச்ச யாத்ரு'க்ச யத்விகாரி யதஸ்ச யத் ந
ஸ ச யோ யத்ப்ரபாவஸ்ச தத்ஸமாஸேந மே ஸ்ரு'ணு நந 13.3
13.3 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அது எப்படி உருவாக்கப்பட்டது, அது எப்படி அமைக்கப்படுகிறது, மற்றும் அதன் மாற்றங்கள் என்ன என்பதையும், அந்தக் களத்தைப் பற்றித் தெரிந்தவர் யார், அவனுடைய மகிமைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்வாயாக.
ரு'ஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ரு'தக் ந
ப்ரஹ்மஸூத்ரபதைஸ்சைவ ஹேதுமத்பிர்விநிஸ்சிதை: நந 13.4
13.4 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றிய அறிவையும், இந்தக் களத்தைப் பற்றி அறிந்தவனைப் பற்றிய அறிவையும் பல்வேறு ஞானிகள் வேத நூல்களில் விளக்கியுள்ளார்கள். இது காரண காரிய வீதிகளோடு, சரியான தர்க்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
மஹாபூதாந்யஹங்காரோ புத்திர்வ்யக்தமேவ ச ந
இந்த்ரியாணி தசைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா: நந 13.5
இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸங்காதஸ்சேதநா த்ரு'தி: ந
ஏதத் க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ரு'தம் நந 13.6
13.5,6 இயற்கையின் ஐந்து மூலப்பொருட்களான பஞ்சபூதங்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம், உருவமற்றத்தன்மை, மனம், உணர்ச்சிப் புரிதலை ஏற்படுத்தும் புலன்கள் ஐந்து, செயல்புரியும்
புலன்கள் ஐந்து, புலன்களின் விஷயங்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், துக்கம், வாழ்வின் அடையாளம் மற்றும் உறுதி - இங்ஙனம் செயல்பாட்டுக்குரிய இந்தக் களத்தைப் பற்றியும் மற்றும் அவற்றுக்கிடையே நடைபெறும் உட்செயல்கள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன.
அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ந
ஆசார்யோபாஸநம் ஸௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ: நந 13.7
இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச ந
ஜன்மம்ரு'த்யுஜராவ்யாதி து:கதோஷாநுதர்ஸநம் நந 13.8
அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ரு'ஹாதீஷு ந
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு நந 13.9
மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ ந
விவிக்ததேஸஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி நந 13.10
அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஸநம் ந
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோண்ந்யதா நந 13.11
13.7-11 அடக்கம், கர்வமின்மை, அஹிம்ஸை, பொறுமை, ச கிப்புத்தன்மை, எளிமை, ஒரு ஜ்ஞாநகுருவுக்கு சேவைசெய்தல், தூய்மை, மனஉறுதி, சுயக்கட்டுப்பாடு; புலன்களைத் திருப்திசெய்யும் பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் சுழற்சியை அறியும் திறன்; குழந்தைகள், மனைவி, வீடு மேலும் மற்றவைகளின்மீது பற்றின்மை, சுக, துக்கங்களில் சமநிலையில் இருத்தல்; என்னிடத் தில் நிலையான கலப்படமற்ற பக்தி, ஏகாந்தமான இடங்களில் வசி த்தல், பொதுமக்களிடமிருந்து விலகிவசித்தல்; ‘தன்னை உணர்தலின்’ முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், இறுதி சத்தியத்திற்கான தத்துவத் தேடல்; -இவையெல்லாம்தான் ‘புத்திசாலித்தனம்’ என்றும், இதற்கு எதிர்மறையாக உள்ள எல்லாவற்றையும் ‘அறியாமை’ என்றும் வலியுறுத்துகிறேன்.
ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ரு'தமஸ்நுதே ந
அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே ந
13.12 எது அறியப்படவேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ அதை விளக்கிக் கூறுவேன். அது தொடக்கமற்றது, காரண-காரியங்களுக்கு அப்பாற்பட்டது, உலகியலுக்கு அப்பாற்பட்டது.
ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோண்க்ஷிஸிரோமுகம் ந
ஸர்வத: ஸ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ரு'த்ய திஷ்டதி ந
13.13 எங்கும் கைகால்களை உடையதாகவும், எங்கும் கண், தலை, முகங்களோடு கூடியதாகவும், எங்கும் காதுகளை உடையதாகவும் அது உலகனைத்தும் வியாபித்து நிற்கிறது.
ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம் ந
அஸக்தம் ஸர்வப்ரு'ச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு' ச ந
13.14 பரமாத்மாவே எல்லாப் புலன்களுக்கும் அடிப்படை ஆதாரம். ஆனாலும் அது உண்மையில் எல்லாப் புலன்களுக்கும் அப்பாற்பட்டது, எதன்மீதும் பற்றற்றது. எல்லா ஜீவராசிகளைக் காப்பது அதுவே, இருந்தாலும் இயற்கையின் எல்லா செயல்வகைகளையும் கடந்தது, அதே சமயத்தில் நமது உலகியல்ரீதியான இயற்கை செயல் வகைகளில் தலைசிறந்த நிபுணத்வம் மிக்கதாக இருக்கிறது.
பஹிரந்தஸ்ச பூதாநாமசரம் சரமேவ ச ந
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத் ந
13.15 சராசரமான எல்லாப் பிராணிகளினுடைய உள்ளும் புறமும் அது நிறைந்திருக்கிறது. நுண்ணியதாக இருப்பதால் பார்க்க முடியாததாக இருக்கிறது, எட்டமுடியா தூரத்தில் இருந்தாலும், எல்லோருக்கும் அருகில் இருக்கிறது!
அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம் ந
பூதாபர்த்ரு' ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச ந
13.16 பார்ப்பதற்குத் தனித்தனியாகப் பிளவுபட்டதுபோல் தோன்றினாலும், அது பிளவுபடாதது. ஸகல பிராணிகளையும் பேணிக்காப்பவரென்றாலும், அழிப்பவராகவும் படைப்பவராகவும் அவரே இருக்கிறார்.
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே ந
ஜ்ஞானம் ஜ்ஞேயம் ஜ்ஞானகம்யம் ஹ்ரு'தி ஸர்வஸ்ய விஷ்டிதம்
நந 13.17
13.17 அந்தப் பரமாத்மன் ஒளிரும் பொருட்களின் ஒளிக்குக் காரணமாக, ஆதாரமாக இருக்கிறது. இருளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, உருவமற்றது, ஜ்ஞான வடிவானது, அறியப்படவேண்டியது, ஜ்ஞானத்தினால் அடையப்பட வேண்டியதுமாகிய அதுவே எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறது.
இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞானம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: ந
மத்பக்த ஏதத் விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே நந 13.18
13.18 செயல்பாடுகள் நிறைந்த இந்தக் களத்தைப் பற்றியும், அறிவைப் பற்றியும், அறியத்தக்கது பற்றியும் என்னால் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. நம்மைப் பற்றித் தவறான அடையாளங்களை நாமே உருவாக்கிக்கொள்ள காரணமான பொருள்சார்ந்த உலகின் இயல்பைப் புரிந்துகொள்ளும்பொழுது மட்டுமே, நம்மால் இந்தப் பொய்யான அடையாளங்களைக் கடந்து மேலான பரமாத்மனை அடையமுடியும்!
ப்ரக்ரு'திம் புருஷம் சைவ வித்த்யநாஜீ உபாவபி ந
விகாராம்ப்ச குணாம்ப்சைவ வித்தி ப்ரக்ரு'திஸம்பவாந் நந 13.19
13.19 ப்ரக்ரு'தி, புருஷன் - இவ்விரண்டுக்குமே தொடக்கம் இல்லை. நாம் பார்க்கிற அனைத்து இயற்கை உருமாற்றங்களும் ப்ரக்ரு'தியிலிருந்து உண்டானவையே என்று அறிந்துகொள்.
கார்யகரணகர்த்ரு'த்வே ஹேது: ப்ரக்ரு'திருச்யதே ந
புருஷ: ஸுகது:காநாம் போக்த்ரு'த்வே ஹேதுருச்யதேநந 13.20
13.20 உடலையும் புலன்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் ப்ரக்ரு'தி காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸுக துக்கங்களை அனுபவிப்பதில் புருஷன் காரணமென்று கூறப்படுகிறான்.
புருஷ: ப்ரக்ரு'திஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ரு'திஜாங்குணாந் ந
காரணம் குணஸங்கோண்ஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு நந 13.21
13.21 பொருள்சார்ந்த உலகில் வாழும் ஜீவாத்மா, வாழ்க்கைப் பாதையில் வரும் இயற்கையின் இயல்புகளை அனுபவிக்கிறான். மேலும் அந்தக் குணங்களுடன் தொடர்புகொள்ளும் அந்த ஜீவாத்மா நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்கு அந்தக் குணங்களே காரணம்.
உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஸ்வர: ந
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேண்ஸ்மிந் புருஷ: பர: நந 13.22
13.22 இந்த சரீரத்தில் வாழும் அந்தப் புருஷனாகிற ஜீவாத்மா ஸாக்ஷி, அனுமதிப்பவன், தாங்குபவன், அனுபவிப்பவன், மஹேஸ்வரன், பரமாத்மன் என்றும் சொல்லப்படுகிறான்.
ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ரு'திம் ச குணை: ஸஹ ந
ஸர்வதா வர்தமாநோண்பி ந ஸ பூயோண்பிஜாயதே நந 13.23
13.23 இவ்வாறு புருஷனையும் குணங்களோடு கூடிய ப்ரக்ருதியையும் எந்த மனிதன் தத்வரீதியாக அறிவானோ அவனுடைய இப்போதைய நிலை எதுவாகயிருந்தாலும், அவன் மறுபடியும் பிறப்பதில்லை.
த்யாநேநாத்மநி பஸ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா ந
அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே நந 13.24
13.24 சிலர் தியானத்தினாலோ அல்லது கர்மயோகத்தினாலோ தூய்மை செய்யப்பட்ட மனம் மற்றும் அறிவின் மூலம் தங்கள் ஆழ்மனத்தில் பரமாத்மாவை உணர்வார்கள்.
அந்யே த்வேவமஜாநந்த: ஸ்ருத்வாந்யேப்ய உபாஸதே ந
தேண்பி சாதிதரந்த்யேவ ம்ரு'த்யும் ஸ்ருதிபராயணா: நந 13.25
13.25 வேறு சிலர், போதிய ஆன்மீக புத்திசாலித்தனம் இல்லையென்றாலும், மற்றவர்கள் சொல்லக்கேட்டு, ஒப்புயர்வற்ற இறைவனை வழிபடத் தொடங்குகிறார்கள். ஒப்புயர்வற்ற இறைவனைப் பற்றிக் கேட்பதாலேயே சிலர் பிறப்பு, இறப்பு என்னும் வழியைக் கடக்கிறார்கள்.
யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம் ந
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப நந 13.26
13.26 பரத குலத்துதித்தவர்களில் தலைசிறந்தவனே, பிறக்கிற அனைத்துமே, அது அசைகிறதோ அசையவில்லையோ அது க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ என்பவற்றின் சேர்க்கையால்தான் தோன்றின.
ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம் ந
விநப்யத்ஸ்வவிநப்யந்தம் ய: பர்யதி ஸ பர்யதி நந 13.27
13.27 யார் ஒருவர், எல்லா உடல்களிலும் அந்த மேலான பரம்பொருளே தனி ஆத்மாவாக இருக்கிறது என்பதைப் பார்க்கிறாரோ, அந்தத் தனி ஆத்மாவிற்கும், அந்த மேலான பரம்பொருளுக்கும் எப்பொழுதுமே அழிவில்லை என்று புரிந்துகொள்கிறாரோ, அவர்தான் உண்மையிலேயே பார்க்கிறார்.
ஸமம் பர்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஸ்வரம் ந
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம் நந 13.28
13.28 ஒருவர் மனத்தால் இழிவுபடுத்தப்படாமலோ அல்லது தூண்டப்படாமலோ இருக்கும்பொழுதும், அசையும் மற்றும் அசையா பொருட்கள் அனைத்திலும் ஒப்புயர்வற்ற மெய்ப்பொருளை பார்க்க முடியும்பொழுதும் அவர் மனம் கடந்தநிலையை அடைகிறார்.
ப்ரக்ரு'த்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ: ந
ய: பர்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பர்யதி நந 13.29
13.29 பொருட்களினால், பஞ்சபூதங்களால் அமைந்த இந்த உடல்தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது, ஆத்மா எதுவுமே செய்வதில்லை என பார்க்கமுடிந்த ஒருவர்தான் உண்மையில் பார்க்கிறார்.
யதா பூதப்ரு'தக்பாவமேகஸ்தமநுபஸ்யதி ந
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா ந 13.30
13.30 எல்லா உயிர்களிடத்தும் ஒப்புயர்வற்ற ஆத்மாவைக் காண முடிந்த ஒருவர், உயிர்களிடத்தே வேற்றுமைகாணும் தன்மையை விட்டுவிடுகிறார்.அவர் இந்த முழுப்பிரபஞ்சமும் அந்த ஒரே ஸத்யத்தின் விரிவாக்கமும் வெளிப்பாடும்தான் என்பதைப் பார்க்கிறார்.
அநாதித்வாந்நிர்குணத்வாத் பரமாத்மாயமவ்யய: ந
ஸரீரஸ்தோsபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே ந 13.31
13.31 குந்தீ புத்திரா, மனத்திற்கெட்டாத, அநாதியான, நிர்குணமான இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்தபோதிலும், உண்மையில் ஒன்றும் செய்வதில்லை. எதிலும் ஒட்டுவதும் இல்லை.
யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதா காஸம் நோபலிப்யதே ந
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே ந 13.32
13.32 எங்கும் நிறைந்திருந்தாலும், ஆகாஸம் நுண்ணியதாக இருப்பதால் எவ்வாறு எதனோடும் கலப்பதில்லையோ அவ்வாறே ஆத்மா இவ்வுடலில் வசித்தாலும் இந்த உடலோடு அது கலப்பதில்லை.
யதா ப்ரகாஸயத்யேக: க்ரு'த்ஸ்நம் லோகமிமம் ரவி: ந
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ரு'த்ஸ்நம் ப்ரகாஸயதி பாரத ந 13.33
13.33 பரத குலத்தில் உதித்தவனே, எப்படி சூரியன் ஒருவனே இந்தப் ப்ரம்மாண்டம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறானோ அப்படியே ஆத்மா ஒன்றே இந்த க்ஷேத்ரம் முழுவதையும் ப்ரகாசிக்கச் செய்கிறது.
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞானசக்ஷுஷா ந
பூதப்ரக்ரு'திமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம் ந 13.34
13.34 இவ்விதம் க்ஷேத்ரம், மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் இவற்றின் வேறுபாட்டையும் செயல்முறையையும் எவர்கள் ஜ்ஞானக்கண்களால் தத்வரீதியாக அறிகிறார்களோ, அந்த மஹாத்மாக்கள் உலகியல்ரீதியான பந்தத்திலிருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைகிறார்கள்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகோ நாம த்ரயோதஶோ ண்த்யாய:
நந
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள க்ருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் எனும் பெயருடைய பதின்மூன்றாவது அத்தியாயம்.
குறையுணர்வுகளைக்
களைவதற்கான தீர்வு

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் என்னும் இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனை வளப்படுத்துவதற்காக க்ஷேத்ரம்-களம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் - அந்தக் களத்தை அறிந்தவர்- இந்த இரண்டைப் பற்றியும் பேசுகிறார். விபாக என்றால் க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் வேறுபடுத்திப்பார்க்கும் ஜ்ஞானம் என்று பொருள்.
கிருஷ்ணர், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஸ்தூல உடலைப் பற்றியும், அதனுள் இருக்கும் விழிப்புணர்வைப் பற்றியும் மிகத் தெளிவாகப் பேசுகிறார்.
இந்த மொத்தப் பிரபஞ்சம்தான், இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வுதான், நாம் எல்லோரும் நிகழ்கிற, இருக்கிற இடமாக இருக்கிறது.
கிருஷ்ணர், அலைகளையும் சமுத்திரத்தையும் இங்கு உதாரணமாகப் பயன்படுத்துகிறார். கிருஷ்ணர், இந்த முழு பிரபஞ்சமும் சமுத்திரம்போலவும், நாம் அனைவருமே அதில் அலைகளைப்போலவும் இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறார். நாம் இந்த சமுத்திரத்தோடு பூர்ணத்வத்தை உணர்வது எப்படி என்பதை அவர் விளக்குகிறார்.
க்ஷேத்ரம் என்றால் களம், அதாவது உடல். க்ஷேத்ரஜ்ஞ என்ற வார்த்தைக்கு களத்தை அறிந்தவர், அதாவது உடலை அறிந்த விழிப்புணர்வு என்று பொருள். இதுவே களம் செயல்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. க்ஷேத்ரஜ்ஞனின் இரகசியங்களை நாம் அறியாதிருந்தால் க்ஷேத்ரம் அதுவே முதலாளிபோல் செயல்பட ஆரம்பித்துவிடும்.
நாம் சமுத்திரத்தின் ஒரு பகுதி என்பதையும், க்ஷேத்ரஜ்ஞனின் ஒரு பகுதி என்பதையும் மறந்துவிட்டோம். இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர், க்ஷேத்ரம் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
'நீங்கள்' என்று நீங்கள் நினைப்பது 'நீங்கள்' இல்லை, (13.1-13.7)
கிருஷ்ணர் விளக்குகிறார்: ஓ கௌந்தேயா, இந்த உடலைத்தான் க்ஷேத்ர - களம் என்று அழைக்கிறோம். இந்த உடலைப் பற்றி அறிந்தவனைத்தான் க்ஷேத்ரஜ்ஞ - களம் அறிந்தவன் என்றழைக்கிறோம்.
நீ அறிவதெல்லாம் நீ அல்ல! நீ எதைப் பற்றியாவது அறிந்துகொண்டதாக உணர்ந்தால், அதுவும் நீ அல்ல.
நம்முடைய விழிப்புணர்வே கடவுள்; கடவுள் என்று தனியாக ஒன்று இல்லை.
உதாரணத்திற்கு, நீ இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும். ஏனென்றால் அது உன்னிலிருந்து வேறானது, தனியானது.
இதுபோலவே உன்னுடைய உடலைப் பற்றி உனக்குத் தெரிந்தாலே, அது நீயல்ல என்பதைப் புரிந்துகொள்! உன்னுடைய மனத்தைப் பற்றி நீ அறிந்துகொண்டதாக உணர்ந்தால், புரிந்துகொள், அதுவும் நீயல்ல! உன் எண்ணங்களைப் பற்றி நீ அறிந்துகொண்டால், அதுவும் நீ அல்ல. எதுவெல்லாம் உனக்குத் தெரியுமோ அது அத்தனையும் நீ அல்ல. நீ அவற்றிலிருந்து வேறானவன் அல்லது அவற்றைவிட உயர்ந்தவன். அதனால்தான் உன்னால் இவற்றை அறியமுடிகிறது.
நாம் இந்த இரண்டையும் பிரித்தறிந்துவிட்டால், இந்த உடல் சந்தோஷமாகவும், பூர்ணத்துவ உணர்விலும், ஆனந்தமாகவும் இருக்கும்; விழிப்புணர்வும் விடுதலையடையும்! இந்த இரண்டும் சேர்ந்துகொள்ளும்பொழுதுதான், பிரச்சினையே ஆரம்பமாகிறது!
களம், களம் அறிந்தவன் என்ற இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை கிருஷ்ணர் நமக்கு விளக்க ஆரம்பிக்கிறார்.
இன்னொரு விஷயம், ஏதாவது நம்மில் இருந்து வேறுபட்டது என்று நாம் புரிந்துகொள்ளும்பொழுது, அதை நாம் துறந்தாக வேண்டுமென்ற அவசியமில்லை. ‘அந்தப் பொருள்தான் நாம்’ என்ற குறைநிலை புரிந்துணர்வை மட்டும் துறக்க வேண்டும். அவ்வளவுதான்.
கிருஷ்ணர் இங்கு இரண்டு வாக்கியங்களைச் சொல்கிறார், ஒன்று, க்ஷேத்ரஜ்ஞும் சாபி மாம் வித்தி - எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன். இரண்டாவது, க்ஷேத்ரே க்ஷத்ரஜ்ஞயோர்ஜ்ஞானம் (13.3) -அறிபவனையும் உடலையும் புரிந்துகொள்வதுதான் அறிவு.
மேலும், "ஸர்வக்ஷேத்ரேஷு பாரத (13.3)-நானே உயிர்களுக்குள் விழிப்புணர்வாக உறைகிறேன்," என்று அவர் சொல்கிறார். நம்முடைய விழிப்புணர்வே கடவுள்; கடவுள் என்று தனியாக ஒன்று இல்லை. விழிப்புணர்வே ‘தாம்’ என்ற சரியான புரிந்துணர்வுடன் இருக்கும் ஒருவர், தம்மைத்தானே விடுவித்துக்கொள்கிறார்.
நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும், நாம் ‘விழிப்புணர்வே! ‘தாம் விழிப்புணர்வுதான்' என்று ஏற்கெனவே அனுபவம் பெற்ற ஒருவர், "இது விழிப்புணர்வு, அது உடல்-மனம். நீங்கள் விழிப்புணர்வுதான், அந்த உடல்-மனம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்," என்று சொல்லி நம்மை வளப்படுத்துகிறார்.
இங்கு, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் அதே கதைதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கிருஷ்ணர், ஐந்து சிறந்த மூலப்பொருட்கள், தவறான அஹங்காரம், புத்திசாலித்தனம் அல்லது முடிவெடுக்கும் மனம் மற்றும் பத்து புலன்களைப் பற்றிப் பேசுகிறார்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நமக்கு ஐந்து புலன்கள்தான் இருக்கின்றன என்று நாம் நினைக்கிறோம். ஐந்து கர்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்த்ரியங்கள் என நமக்குப் பத்து புலன்கள் இருக்கின்றன. ஞானேந்த்ரியம் என்பது அறிவை உள்வாங்கிக்கொள்ளும் ஐந்து இந்த்ரியங்கள். அவை கேட்டல், தொடுஉணர்வு, பார்வை, ருசி, வாசனை முதலியவற்றை உணரும் காதுகள், தோல், கண்கள், நாக்கு, மூக்கு ஆகியவை.
கர்மேந்த்ரியம் என்பது செயல்புரியும் புலன்கள் அல்லது உறுப்புகள். இவைதான் பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்யும் வாய், கைகள், கால்கள், கழிவு உறுப்பு, பிறப்புறுப்பு ஆகிய உறுப்புகள்.
இந்தப் பத்து புலன்களுடன் இணைந்து பற்று, வெறுப்பு, மகிழ்ச்சி, துக்கம், உடல், பரஸ்பர ஈர்ப்பு, விழிப்புணர்வு ஆகியனவும் களம் செயலாற்றுவதற்கு பயன்படுகின்றன.
உள்ளுலகத்தின் நுட்பங்கள் (13.8-13.12)
நம் உள்ளுலகை சுதந்திரமடையச் செய்யும் இந்த ஐந்து ஸ்லோகங்களையும் நான் 'சிறந்த உள்ளுலக விஞ்ஞான தொழிற் நுட்பங்கள்' என்று சொல்லுவேன். இது க்ஷேத்ராவிலிருந்து ஒருவரை விடுவித்துக்கொள்வதற்கான தெளிவான நுட்பம்.
முதலில், நம் உடல் மனத்தைவிட நாம் சக்திவாய்ந்தவர்கள் என்பதை
நம் உடல் மனத்தைவிட நாம் சக்திவாய்ந்தவர்கள்! நாம் புரிந்துகொண்டால், நாம் உடல் மனதிலிருந்து விடுதலை பெறுவோம்.
இந்த ஸ்லோகங்களில் பல போதனைகளை, ஒரு நீளமான பட்டியலிட்டு கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.
அடக்கம், அஹிம்ஸை, பொறுமை, எளிமை, நேர்மையான, உண்மையான ஜ்ஞானகுருவை அணுகுதல், சுத்தம், தளராத மன உறுதி, சுயக்கட்டுப்பாடு, புலனின்பத்திற்கு காரணமான பொருட்களைத் துறத்தல், அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி ஆகியவற்றின் தீமைகளை அறியும் உணர்வு, எல்லாச் சிக்கல்களிலிருந்தும் சுதந்திரம், இன்ப துன்பத்தில் நடுநிலைவகித்தல், நிலையான பக்தி, ஆன்மிக வழியில் வாழ ஆழமான விருப்பம், இறுதி உண்மைக்கு முக்கியத்துவம் கொடு த்தல், பற்றின்மை- இவை எல்லாவற்றையும் நான் ‘புத்திசாலித்தனம்’ என்று அறிவிக்கிறேன். இவைத்தவிர உள்ள மற்றவை எல்லாமே அறியாமைதான்.
அவர் இங்கே கொடுத்திருக்கும் எல்லாக் குணநலன்களையும் நேரிடையாகக் கடைபிடித்து வாழ முயற்சித்தால், ‘நமக்கு பைத்தியம் பிடித்துவிடும்’ என்றுதான் நாம் நினைப்போம்!
இந்த குணநலன்களை உண்மையிலேயே ஒவ்வொன்றாகப் பயிற்சிசெய்து பெற முடியாது. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது -விழிப்புணர்வு நமக்குள் நிகழ உதவுவதே! விழிப்புணர்வு நிகழ்வதன் மூலம், நாம் இந்த எல்லா குணநலன்களையும் வெளிப்படுத்த ஆரம்பிப்போம். இந்தப் பண்பு நலன்கள் நம்முள் தானாகவே நிகழும், மலரும்!
உதாரணத்திற்கு தண்ணீர்த் தொட்டியில் நீரும் சேறும் கலந்து நீரே அழுக்காகக் கிடக்கும்பொழுது, நீரிலிருந்து சேற்றைப் பிரித்தகற்றி நீரைச் சுத்தப்படுத்த விரும்புகிறோம் என வைத்துக்கொள்வோம்.
अनुபவம், அனுபவிப்பவர் மற்றும்
அனுபவிக்கப்படும் பொருள்
இம்மூன்றும் ஒன்றாகும் நிலையே
த்ருப்தி என்றழைக்கப்படுகிறது.
நாம் நம் கைகளைத் தொட்டியினுள் விட்டு சேற்றை வெளியே எடுக்க முயற்சித்தால், என்ன நடக்கும்? கீழே படிந்திருந்த சேறு முழுவதும், மேலெழும்பி கலங்கி, நீர் மேலும் சகதியாகிவிடும், அவ்வளவுதான்.
ஆனால், அப்படிச் செய்யாமல், நிறைய சுண்ணாம்புத்தூளை அந்தத் தொட்டியினுள் தெளித்தோமென்றால், அது அந்த சேற்று அழுக்கையெல்லாம் ஈர்த்துக்கொண்டு, தொட்டிக்குக் கீழே படிந்துவிடும். அதன் மூலம் தெளிந்த நீரை நாம் பெற முடியும்.
நம்முடைய மனதும் ஒரு சேறுள்ள தொட்டிதான். நாம் அதை அடக்க முயற்சிசெய்தால், அதனோடு போராடினால் நாம் மேலும் குறைவுணர்வுகளை உருவாக்குவோம். அதற்கு பதிலாக, சுண்ணாம்புத் தூளைப் போல, ஒரு சிறிய தியானத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். பின் தளர்வாக இருங்கள். வெறுமனே உங்களுடைய விழிப்புணர்வுக்குள் தியானத்தைப் போட்டுவிடுங்கள்; பிறகு இளைப்பாறுங்கள்.
நாம் விழிப்புணர்வுள்ளவராகவும் நிறைவுணர்வுள்ளவராகவும் மாறும் அந்தத் தருணமே, நமக்குள் ஸாக்ஷி பாவனை மலரத்துவங்கும், மொத்த விஷயங்களுமே சரியாகிவிடும். தானாகவே எல்லா அசுத்தங்களும் கீழே படிந்துவிடும்.
ஸாக்ஷியாக இருந்து பார்க்கும் விழிப்புணர்வுதான் நம்முடைய இருப்பைச் சுத்தம்செய்யும் ‘சுண்ணாம்புத் தூள்’ ஆகும்.
பெரும்பாலும் நாம் ஶாஸ்த்ரங்களையும் பல புத்தகங்களையும் படித்துவிட்டு. உடனே நாம் அந்த உபதேசங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றத் துவங்கிவிடுகிறோம். உதாரணத்திற்கு, ‘உன்னை நீ நேசிப்பது போலவே உன் பக்கத்து வீட்டுக்காரரையும் நேசி என்று அவை சொன்னால், நாம் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், உடனே அதைக் கடைப்பிடிக்க துவங்கிவிடுகிறோம். முதல் பிரச்சினையே நாமே நம்மை நேசிப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளாமலிருப்பதுதான்.
ஆனால் நம் இருப்பின்மீது செயல்பட்டால், நாம் மலருவோம் சரியான சக்தியை, சரியான விழிப்புணர்வை தானாகவே வெளிப்படுத்துவோம்!
விழிப்புணர்வே முடிவற்றது (13.13-13.18)
கிருஷ்ணர் சொல்கிறார், "நீ அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் விளக்கிவிடுகிறேன். அதையெல்லாம் அறிந்துகொண்ட பின்பே நீ, இந்தப் பொருள்சார்ந்த உலகின் செயல் மற்றும் விளைவுகளுக்கப்பாற்பட்ட ஆதியே இல்லாத விழிப்புணர்வை, நிலையான இருப்பை நீ அறியத்துவங்குவாய்."
நாம் ஒரு ஜ்ஞானமடைந்த, மனமே இல்லாத பூர்ணத்வ நிலையிலிருக்கும் குருவுக்கு முன்னால் இருக்கும்பொழுது, நமக்குள் ஓடும் எண்ண ஓட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வரும். அதனால் நாம் முயற்சிசெய்யாமலேயே, நாம் அமைதியானவர்களாக ஆகிறோம் அதிக ஆனந்தமுடையவர்களாக, அதிக விழிப்புள்ளவர்களாக ஆகிறோம்.
தயவுசெய்து கேளுங்கள் - நமக்குள்ளே இருக்கும் ஒவ்வொரு எண்ணமும் பிரபஞ்சத்தின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.
நேர்மறை மற்றும் எதிர்மறை, படைத்தல் மற்றும் அழித்தல் இவையெல்லாமே, க்ஷேத்ரம் என்னும் நாம் வாழ்கிற, எப்பொழுதும் மாறிக்கொண்டேயிருக்கிற, இந்த உலகத்தினுடைய இயல்புகளாக இருக்கின்றன. நாம், மாறிக்கொண்டேயிருக்கும் க்ஷேத்ரம் அல்ல; என்றுமே மாறாத க்ஷேத்ரஜ்ஞன்தான் என்பதை அறிந்துகொண்ட அக்கணமே நாம் சுதந்திரமடைந்துவிடுகிறோம்.
கிருஷ்ணர் இதை அழியாத நிலையான ஆனந்தத்தைத்தான் - ஜ்ஞேய
- அறிந்துகொள்ளப்பட வேண்டிய பொருள் என்கிறார். அறிதல் நிகழும்பொழுது, அறியப்படுவது (ஜ்ஞேய), அறிபவன் (ஜ்ஞாதா), அறிவு (ஜ்ஞானம்) ஆகியவை ஒன்றாகக் கலந்துவிடுகின்றன. இந்த அனுபவத்தில் அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்துவிடுகிறது. அனுபவம், அனுபவிப்பவர் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் என்று தனித்தனியாக எதுவுமில்லை. அந்நிலையே த்ருப்தி என்றழைக்கப்படுகிறது.
ஜ்ஞானிகளது சக்தி காலம், வெளிபோன்ற தடைகளுக்கெல்லாம்
கிருஷ்ணர், தம்முடைய முடிவற்ற இயல்புநிலையான இருப்புத்தன்மை காலத்தினால் கட்டுப்பட்டதல்ல என்று விளக்குகிறார். இப்பொழுது அவர்-ஸர்வமாவ்ரு'த்ய திஷ்டதி -தாம் எங்கும் நிறைந்திருப்பதாகவும், தாம் இடத்தால் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்றும் சொல்லுகிறார்.
சாதாரணமாக நாம், ஒரு பொருள் அல்லது ஒரு நபர் இருப்பதை அதனுடைய அல்லது அவருடைய ஸ்தூல ரூபத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்கிறோம். நமது ஐம்புலன்களான பஞ்ச இந்த்ரியங்களால் ஒரு பொருளை உணர முடியவில்லையென்றால், அந்தப் பொருளை இல்லை என்றே நினைத்துக்கொள்கிறோம்.
இங்கு கிருஷ்ணர், ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோண்க்ஷியிG ராமுகதம் (13.14)- 'எங்கும் கைகால்களை உடையதாகவும், எங்கும் கண், தலை, முகங்களோடு கூடியதாகவும்' என்று சொல்லும்பொழுது, அவர் எதைக் குறிப்பிடுகிறார்?
கேளுங்கள், ஜ்ஞானிகளின் ஸாந்நித்யம், அவர்களது ஸ்தூல ரூபத்தின் முன்னிலையில் இருப்பதைவிட, அவர்கள் இல்லாத சமயத்தில்தான் அதிகமாக இருக்கும். அவர்களது சக்தி காலம், வெளிபோன்ற தடைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.
பிரபஞ்ச சக்தியின் இழை ஒவ்வொன்றிலும் ஊடுருவிச் செல்வதால்தான் எல்லா உயிர்களும் இயங்குகின்றன என்று சொல்கிறார்.
இந்த முழு நாடகத்தையும் நடத்திக்கொண்டிருக்கும் வாழ்வுசக்தி தூய புத்திசாலித்தனம்மிக்கது. இறைவன் அறியாமல் ஒரு புல்கூட அசைய முடியாது! ஏதாவது ஒரு நிகழ்வு நிகழவேண்டுமானால், பிரபஞ்ச விழிப்புணர்வான அவரை நாமெல்லோரும் சார்ந்திருக்கிறோம். ஆனால், அந்தப் பிரபஞ்ச சக்தி எதிலும் ஈடுபடாமல், எல்லா நடவடிக்கைகளுக்கும், எல்லா வகை வாழ்க்கைமுறைகளுக்கும் ஒரு
உயர்ந்த வெளியை
அடையக்கூடிய சாத்தியம் நம்
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
ஸாக்ஷியாக இருக்கிறது என்ற ஒரு செய்தியைக் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார்.
ஒரு எல்லையோடு நின்றுவிடாதீர்கள்
நீங்கள் கடாகாஸம் என்று சொல்லப்படும், உங்கள் உடல் எல்லைக்குள்தான் வசிக்கின்றீர்கள்.
நாம் வாழக்கூடிய வெளிகள் மூன்று உள்ளன. ஒன்று - உடலால் சூழப்பட்ட வெளி, இரண்டு- மனதால் சூழப்பட்ட வெளி, மூன்று - உடலாலும் மனத்தாலும் சூழப்படாத வெளி.
முதலாவது, கடாகாஸம் - இந்த உடலால் சூழப்பட்ட வெளி. இந்த வெளி நமது ஸ்தூல உடலுக்குள் இருக்கிறது. நம்மில் பலர் கிட்டத்தட்ட, எல்லா நேரமும் இந்த வெளியில்தான் வாழ்கிறோம்.
அடுத்தது, சிதாகாஸம் - நீங்கள் உணர்கின்ற வெளியாகும். இங்கே, இப்பொழுது நீங்கள் இந்தக் கூடத்தை உணர்ந்தால், இது உங்கள் சிதாகாஸம், இது மனம் மற்றும் எண்ணங்களின் வெளியாகும்.
மூன்றாவது மஹாகாஸம் எல்லாமே அடங்கிய பெருவெளி, அண்டவெளி, பிரபஞ்ச வெளி.
பிரச்சினை என்னவென்றால், நம் விழிப்புணர்வு கடாகாஸத்தினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம். இந்த உடலுக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம்.
இந்த கடாகாஸத்தைக் கடந்து மஹாகாஸத்திற்குள் நுழைந்த ஞானிகள், இந்த எல்லாப் பிரிவுகளுக்கும் காரணம் நம்முடைய 'அறியாமை'தான் என்பதை அறிவார்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இந்த 'வெளி'யை எப்பொழுதும் பிரிக்கவே முடியாது. இருந்தாலும், நம் குறுகிய புரிதலின் அடிப்படையில், நாம் உள்ளே, வெளியே, அண்மை, தொலைவு முதலிய சொற்களைக்கொண்டு எல்லைகளை உருவாக்கி, அதைப் பிரிக்கிறோம். இதுவே நம்முடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம். முதலாவதாக, இந்த வெளியை நம் அறியாமையால் பிரிக்கிறோம். இரண்டாவதாக, 'வெளி' என்பது நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றெண்ணிக்கொண்டு, அதை நமக்கே சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறோம். மூன்றாவதாக, நம்மிடமிருந்து இந்த வெளி பறிக்கப்பட்டுவிடும் என்று நாம் அஞ்சுகிறோம். நமக்கு, மரண பயம் உட்பட, எல்லாவித பயங்களும் ஏற்படுகின்றன. ஏனெனில் நாம், உடலாலும் மனத்தாலும் சூழப்பட்ட வெளிகளைப் பாதுகாத்துக்கொள்ளவே எல்லா நேரத்திலும் முயற்சிக்கிறோம்.
நாம் எந்த 'வெளி'யில் இருந்தாலும், அதைவிட உயர்ந்த வெளியை அடையக்கூடிய சாத்தியம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
கிருஷ்ணர், "மஹோன்னதமான சத்தியம், வாழும் எல்லா உயிர்களின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது. அது, சரமேவ ச- நுண்ணியதாக இருப்பதால் இயங்கிக்கொண்டும் இயங்காமலும் இருக்கிறது," என்று சொல்கிறார்.
இதுதான் எல்லா வெளியையும் உள்ளடக்கிய மஹாகாஸம் என்னும் வெளி. இந்த வெளிதான் முழுமையானது, எல்லையற்றது எல்லாமே இந்த வெளியில் அடக்கம்.
பெயருக்கும் தோற்றத்திற்கும் அப்பாற்பட்டவர்...
பிரபஞ்ச விழிப்புணர்வு, எண்ணற்ற வழிகளில் வெளிப்படுகிறது, மேலும் அதுவே அழிவுக்கும் காரணமாயிருக்கிறது. அதே பிரபஞ்ச சக்தி வெளிப்படாமல் இருக்கும்பொழுது, அது உள்ளடங்கிய ச க்தியாக இருக்கிறது. வேதங்கள் இச்சக்தியைப் புருஷ என்று குறிப்பிடுகின்றன.
இச்சக்தியே, தன்னை விதவிதமான பெயர்கள், உருவங்கள், வடிவங்களாக வெளிப்படுத்திக்கொள்ளும்பொழுது, ப்ரக்ரு'தி என்றழைக்கப்படுகிறது. புருஷனின் படைப்பு சக்தியே ப்ரக்ரு'தி!
ப்ரக்ரு'தியின் வெவ்வேறு படைப்புகள் மற்றும் வெளிப்பாடுகளின் காரணமாக, அந்த ஒப்புயர்வற்ற சக்தியானது-புருஷன் என்றும் ப்ரக்ரு'தி என்றும் பிரிக்கப்பட்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறது. எனினும், தாம் இந்தப் பிரிவினைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நினைவூட்டுகிறார்!
கிருஷ்ணர் சொல்கிறார், அவரே மேலான இருப்புத்தன்மையாகவும், ஒளிரும் பொருட்களின் ஒளிக்குக் காரணமான ஒளி ஆதாரமாகவும் அதாவது ஸாக்ஷியாகவும் இருப்பதாகச் சொல்கிறார்.
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகமியம் - அவரே அறிபவன், அவரே அறியப்பட வேண்டிய பொருள், அவரே அடையப்பட வே ண்டிய அறிவு. ஹ்ரு'தி ஸர்வஸ்ய விஷ்டிதம் (13.18) - அவரே எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருக்கிறார்.
கிருஷ்ணர், இந்த இருப்புத்தன்மையை ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ் (13.18) - ஒளியின் மூலம் என்று அழைக்கிறார். ஒளிரும் தன்மைகொண்ட இருப்புத்தன்மையிலிருந்துதான் ஒளியின் மூலங்களான சூரியன், சந்திரன், மின்னல் ஆகியவை தங்களின் சக்தியைப் பெறுகின்றன. இருப்புத்தன்மை என்பது தூய புத்திசாலித்தனம்; இது நம் அறியாமையைப் போக்குகிறது.
ஒரு ஜ்ஞான குரு, 'விழிப்புணர்வு' என்னும் விளக்கைப் பயன்படுத்தி, 'உண்மை'யை உள்ளது உள்ளபடியே, எந்த வடிகட்டியையும் பயன்படுத்தாமலேயே பார்க்கிறார். 'விழிப்புணர்வு' என்னும் விளக்கைப் பயன்படுத்தி, முழுமைத்தன்மையுடனான பூர்ணத்வ உணர்விலிருந்தே தம்முடைய சூழலை உணர்கிறார்,
அதனால் தான் குருவானவர், தம்மைச் சுற்றி 360 டிகிரியும் பார்க்கிறார்.
அஹங்காரத்தைப் பற்றிய அனைத்தையும் மறந்து விடுங்கள். பதிலாக விழிப்புணர்வு விளக்கை, பூர்ணத்வ விளக்கை உங்கள் இருப்புத்தன்மைக்குள் எடுத்துவருவதில் கவனம் செலுத்துங்கள்.
க்ஷேத்ரம் அல்லது
ப்ரக்ரு'தியைப் பற்றிய புரிதல்
நம்மை நேரிடையாகவே
எப்பொழுது உங்கள் முழு விழிப்புணர்வும் ஒளிச்சுடராக மாறுகிறதோ, அப்பொழுது அங்கு அஹங்காரம் என்பது இல்லை.
பூர்ணத்வமே கடவுள் (13.19-13.24)
அதைப்போலவே, நாம் க்ஷேத்ரத்தை அறிந்துகொள்ளும்பொழுது, நாம் அந்த க்ஷேத்ரம் அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறோம். நாம் க்ஷேத்ரம் அல்ல என்ற இந்தப் புரிதலே, நாம் க்ஷேத்ரஜ்ஞன் என்ற புரிதலைக் கொடுக்கும்.
நாம் க்ஷேத்ரஜ்ஞன் என்பதைப் புரிந்துகொள்ளும்போதே, க்ஷேத்ரத்தைக் கடந்துவிடுகிறோம்.
நாம் க்ஷேத்ரத்தை எப்படிப் புரிந்துகொள்வது? ஸத்யத்தை உணர்ந்த ஒரு ஜ்ஞான குருவால் மட்டுமே, நம்மை அந்தப் புரிதலுக்கு, ஸத்யத்திற்கு எழுப்பிவிட முடியும்.
ஞானிகள் தங்களுடைய கருணையினால், நம்மைச் சுற்றி நாம் பார்ப்பதெல்லாம் நம் மனத்தின் காட்சிகளே என்று உணர்த்துவதற்காகவே இந்தப் புவியுலகிற்கு இறங்கிவருகிறார்கள்.
"கடந்து, கடந்து, கடந்து, அதற்குமேலும் கடந்து செல்லுங்கள். நீங்கள் உங்கள் உடலையே ஸாக்ஷியாகப் பார்க்க முடிந்தால், அதையும் கடந்து செல்லுங்கள். உங்களின் எண்ணங்களை ஸாக்ஷியாகக் கவனிக்க முடிந்தால் அதையும் கடந்து செல்லுங்கள். உங்கள் மனதின் போக்கை ஸாக்ஷியாகக் கவனிக்க முடிந்தால் இன்னும் கடந்து செல்லுங்கள். உங்கள் உணர்ச்சிகளை ஸாக்ஷியாகக் கவனிக்க முடிந்தால் அதையும் கடந்து செல்லுங்கள். இவை எதுவுமே நீங்கள் இல்லை!"
விழிப்புணர்வை ஸாக்ஷியாகக் கவனித்துக்கொண்டிருங்கள், பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, உங்கள் எண்ணங்களிலிருந்து
உங்கள் 'புரிந்துணர்வை
மாற்றியமைக்க முடியும்' என்பதே
உங்கள்
விலகிவிடுங்கள், தளர்வாகுங்கள். உங்கள் எண்ணங்களை உருவாக்கவோ, வளர்க்கவோ, அழிக்கவோ முயற்சிசெய்யாதீர்கள்.
‘நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்ற இந்தக் கடைசி எண்ணமானது, கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு பாலம்போல் இருக்கிறது. பூர்ணத்வ உணர்வுக்கும் உங்களுக்கும் நடுவில் ஒரு பாலம்போல் இருக்கிறது.
அதையும் கடந்து செல்லுங்கள். ‘நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்ற எண்ணத்தை ஸாக்ஷியாகப் பாருங்கள். உங்களுக்குள் நிகழும் களங்கப்படாத தூய பூர்ணத்வ உணர்வில் கடவுள் மலர்வார்; தெய்வீக விழிப்புணர்வும் உணரப்படும்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பூர்ணத்வமே கடவுள்!
எல்லாப் பூட்டுக்களையும் திறக்கும் சாவி
எல்லாப் பூட்டுக்களையும் திறக்கும் மிகச்சிறந்த சாவியை இந்த அத்தியாயத்தில் தருகிறார்.
‘ஸாக்ஷியாகப் பார்ப்பதே’ அந்த மிகச்சிறந்த சாவி. உங்கள் உடலையும் மனத்தையும் இருப்பையும் ஸாக்ஷியாகப் பார்ப்பது’. இப்படி ஸாக்ஷியாகப் பார்க்கும் நுட்பத்தில் உங்களால் நுழையமுடிந்தால், பூர்ணத்வ ஸாக்ஷி உணர்வை ஒருசில நிமிடங்களுக்கு அனுபவிக்க முடிந்தால், நீங்கள் அந்த சுவையைக் கண்டுகொள்வீர்கள்.
கிருஷ்ணர் இன்னும் ஒருபடி மேலே சொல்கிறார். இதுவரை அவர், நம் உள்-உணர்வை தூய்மையாக்குவது எப்படி, நமக்குள் இருக்கும் தெய்வீக விழிப்புணர்வை உணர்ந்துகொள்வது எ hisபடி என்பதைச் சொல்லிக்கொண்டுவந்தார். இப்பொழுது, இந்தக் கடைசி ஸ்லோகத்தில், ஸர்வதா வர்தமாநோஉபி ந ஸ பூயோஉபிஜாயதே (13.24)- ‘இப்படிச் செய்பவர்கள் இப்பொழுது எந்த நிலையிலிருந்தாலும், அவர்கள் முக்தி அடைவார்கள்’ என்று சொல்லுகிறார்.
க்ஷேத்ரம் அல்லது ப்ரக்ரு'தியைப் பற்றிய புரிதல் நம்மை நேரிடையாகவே ஜீவன்முக்தராக்கிவிடும்.
நம்முடைய உண்மையான இயல்பைப் பற்றிய அறியாமையிலிருந்தே நம்முடைய எல்லாப் பிரச்சினைகளும் குறைவுணர்வுகளும் எழுகின்றன. ஒரு உணர்வுமாற்றம் நிகழ்ந்தால், அது நம்மை இந்தப் பொருட்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துவிடும்.
இந்தப் புரிதல் எந்த நேரத்திலும், எவருக்கும் நடக்கலாம்! அதற்கு நீ ங்கள் ஆஸ்ரமத்தில்தான் வளர வேண்டும், கடவுளின் நாமத்தைத்தான் எல்லா நேரங்களிலும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், எதை வேண்டுமானாலும் செய்துகொண்டிருக்கலாம். உணர்வுமாற்றம் எவருக்கும், எந்த நேரத்திலும் நேரலாம்.
மேலும் அது நிகழும்பொழுது, விழிப்புணர்ளவில் ஒரு பெருமாற்றமாக, ஒரு பெருந்தாவலாக இருக்குமேதவிர, அது படிப்படியாக நிகழ்வதில்லை. விளக்கேற்றியவுடன் அறை முழுவதும் சட்டென ஒரேசமயத்தில் வெளிச்சம் பரவுவதைப் போன்றதாகும்.
உங்கள் ‘புரிந்துணர்வை’ மாற்றமுடியும், இதைப்பற்றிய முழுமையான புரிதலுடன் இருங்கள், ஆம், உங்கள் ‘புரிந்துணர்வை மாற்றியமைக்க முடியும்’ என்பதே உங்கள் முதல் புரிந்துணர்வாக இருக்க வேண்டும். மக்கள், தாங்கள் இந்த உடல்-மனத் தளைகளுக்கப்பாற்பட்டவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது, தங்கள் ‘புரிந்துணர்வை’ மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது, உடனடி ஜீவன்முக்தி நிகழ்கிறது!
உங்கள் ‘புரிந்துணர்வை’ மாற்றியமைக்க முடியும் என்ற தெளிவுடன் உங்கள் குறைவுணர்வுகளைக் கையாண்டீர்களானால், க்ஷேத்ரத்தினுடைய குறைவுணர்வுகள் உங்கள்மீதான தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். க்ஷேத்ரஜ்ஞனைப் பற்றிய புரிதலுடன் உங்கள் வாழ்க்கையை, சிந்தனையைத் தொடங்குங்கள். பிறகு உங்கள் சிந்தனையே பூர்ணத்வ உணர்வாக இருக்கும். இதுவே உடனடி பூர்ணத்வ விஞ்ஞானம், இதுவே தன்னிச்சையான பூர்ணத்வ விஞ்ஞானம். பூர்ணத்வம் என்றால் உங்கள் வாழ்க்கையில், உங்கள் டூ க்ஷேத்ரத்தில் நிகழும் அனைத்தையும் கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது அல்ல, உங்களுக்கு நிகழும் வாழ்க்கையைத் தடுக்காமல், எதிர்க்காமல் இருப்பதே. உங்களுடைய எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் மூலகாரணம் - 'வாழ்க்கை இந்தவிதத்தில் நிகழக்கூடாது' - என்று வாழ்க்கையைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்தே!
பலமனிதர்கள், பலவழிகள் (13.25-13.27)
இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர், த்யானம், ஜ்ஞானம், கர்ம யோகா, வழிபாடு என்று பலவித நுட்பங்களைத் தருகிறார். கேளுங்கள், எல்லா நுட்பங்களும் பூர்ணத்வ உணர்விலிருந்தே செய்யப்படவேண்டும்.
ஒவ்வொரு செயலையுமே தியானமாக ஆக்கலாம், நீங்கள் விழிப்போடும், தீவிரத்தோடும் செய்வது எல்லாமே தியானம்தான். கிருஷ்ணர், இறுதி விழிப்புணர்வை அடைதவற்கான வழியாக அதைக் கொடுத்திருக்கிறார்.
ஸாங்க்யேந - அறிவை உபயோகப்படுத்தி நீங்கள் இலக்கை அடையலாம் என்கிறார்.
கிருஷ்ணர், கர்ம யோகம் என்னும் உச்ச நுட்பத்தைத் தருகிறார். அவர், "உங்களின் செயல்களுடைய விளைவுகளை என்னிடமே விட்டுவிடுங்கள்," என்கிறார். இதுவே மிகவும் சரியான பயனளிக்கும் நுட்பம். இதைப் பற்றித்தான் அவர் கீதை முழுவதும் பேசுகிறார்.
பிரபஞ்ச விழிப்புணர்வாகிய அவரிடமே உங்கள் செயல்களின் பலனை விட்டுவிடுங்கள், எல்லாவற்றையும் சமர்ப்பியுங்கள்! ஒருமுறை இதைச் செய்துவிட்டால், நீங்கள் சுதந்திரத்தை உணர்வீர்கள். ஸத்யத்தை அடைவதற்கான மிகச்சுலபமான வழி இதுவே.
ஒவ்வொரு ஜீவனிலும்
பரமாத்மாவைப் பார்க்கும்பொழுது,
நாம் தனி, அவர்கள் தனி என்று
நீங்கள் பார்ப்பது எதுவானாலும், அது பொருளும் சக்தியும் சேர்ந்திருக்கிற சேர்க்கைதான். இந்த முழு பிரபஞ்சமும் க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞனாகவும், மாயை ஆத்மனாகவும், ப்ரக்ரு'தி புருஷனாகவும், பொருள் சக்தியாகவும், உடல்-மனம் விழிப்புணர்வாகவும் அறியப்படுகிறது. பிரபஞ்ச இருப்புத்தன்மை நாம் பார்ப்பதுபோல வெறுமனே பொருளால் ஆனதல்ல, நாம் பார்ப்பது வெறும் பொருள்தான் என்று நாம் நம்பினால், அது மாயையே.
ப்ரக்ரு'தி என்பது வெளிப்படுவது, புருஷ என்பது வெளிப்படாதது. க்ஷேத்ரமும் க்ஷேத்ரஜ்ஞனும் தனித்தனியான அமைப்புகள் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 'இருப்பு' நிகழ்வதற்கு, ஸ்தூல அமைப்பும் ஸூக்ஷ்மமான அமைப்பும் அங்கே இருக்க வேண்டும். அதனால் க்ஷேத்ரம், க்ஷேத்ரஜ்ஞன் ஆகியவற்றின் சேர்க்கை அவசியமாகிறது.
நாம் ப்ரஹ்மம் (13.28-13.31)
"தம்மை உணர்ந்துகொண்ட ஒருவர் அதாவது மேலான விழிப்புணர்வை அடைந்த ஒருவர், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் மேலான பரமாத்மாவின் ஸாந்நித்யத்தைப் பார்க்கிறார். பரமாத்மாவை அழிக்கப்பட முடியாத, ஆதியற்ற ஸாக்ஷி விழிப்புணர்வாக உணர்கிறார்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாம் காணும் பிரபஞ்ச இருப்பு, தனிப்பட்ட அடையாளங்களால் ஆனது அல்ல. நாம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் அனைவரும் ஒன்றேதான். கிருஷ்ணர் சொல்லும்
ஒருங்குவித்தலில் நிலைபெற்று,
மனத்தை ஒரு நல்ல நண்பனாகவே
கவனியுங்கள். நிறைவுணர்வில்
அதே பிரபஞ்ச இருப்பு, நம் எல்லோருக்குள்ளும் மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் இருக்கிறது.
ஆம், நாம் எல்லோரும் ப்ரஹ்மம். கடவுள் எங்கும் இருக்கிறார். தெய்வீக சக்தி நிறைந்து, எல்லா இடங்களிலும் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. நாம் கடவுளை வேறு யாரோ ஒருவராகப் பார்க்கிறோம். நாமே கடவுளுக்கும் நமக்கும் நடுவில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிக்கொள்கிறோம்.
கிருஷ்ணர், 'நமக்குள்ளே இருக்கும் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே' என்று சொல்கிறார். நாம் அந்தப் பரமாத்மாவை நம்புகி றோம், ஆனால் நமக்குள்ளும் அதே பரமாத்மாதான் இருக்கிறது என்பதை நாம் நம்புவதில்லை. அதனால் நாம் என்ன செய்கி றோம்? நாம் நம்முடைய ஆத்மாவைத் தனிப்படுத்திவிடுகி றோம். நாம் நம்முடைய ஆத்மாவுக்கு ஒரு எல்லைவகுத்து, பரமாத்மாவிடமிருந்து பிரித்துவிடுகிறோம்.
கிருஷ்ணர், "ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம் (13.28)-நமக்குள்ளும், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் உறையும் ஆத்மாவானது அழிக்கப்பட முடியாதது என்பதைப் பார்க்கும்பொழுது, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்," என்கிறார்.
கிருஷ்ணர், இங்கு ஒரு நுட்பத்தைத் தருகிறார். வெறுமனே உடலைப் பாருங்கள். உங்கள் உடலைப் பற்றிய உணர்வில் இருங்கள். நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் இன்பங்களுக்கும் உங்கள் ஆத்மாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைப் பார்ப்பீர்கள். நீங்கள் இதைச் செய்யும் சமயம், இந்த உடலையும் மனத்தையும் ஒரு வெளி ஆள்போல ஸாக்ஷியாகப் பார்ப்பீர்கள்.
நாம் மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்று எதை நினைத்தாலும், உண்மையில் அதை நம் உடல்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. புலனின்பங்களை அனுபவிக்கும் நம் உடலை நாம் கவனிக்கும்பொழுது, வெளியுலக பொருள் சுகத்துடன் நம்முடைய உடல் மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறது, நம்முடைய ஆத்மா சம்பந்தப்படவில்லை என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே, நாம் ஸத்யத்தைப் பார்க்கிறோம்.
கிருஷ்ணர், இந்த ஸ்லோகத்தில் ஒரு அத்வைத ஸத்யத்தைத் தருகிறார். ஒவ்வொரு ஜீவனிலும் பரமாத்மாவைப் பார்க்கும்பொழுது, நாம் தனி, அவர்கள் தனி என்று பிரித்துப்பார்க்க மாட்டோம். நாம் ஒவ்வொன்றையும் பரமாத்மாவாகவே பார்ப்போம். தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா (13.31) - இந்தப் பிரபஞ்சம் முழுவதையும், அதே ஸத்யத்தை வெளிப்படுத்தும் ஒரே அமைப்பாகவும், பரமாத்மாவின் நீட்டிப்பாகவும் பார்ப்போம். இதுவே கிருஷ்ணர் வழங்கும் செய்தி.
உடலில் உறைந்திருக்கும் ஆத்மா எதுவும் செய்வதில்லை (13.32-13.35)
கிருஷ்ணர், மீண்டும் மீண்டும் பிரபஞ்சத்தின் உண்மை இருப்புநிலையைப் பற்றிப் பேசுகிறார். அவர், 'ஆத்மாவானது எந்தப் பிடிப்புகளிலும் சிக்கிக்கொள்ளாமல் சுதந்திரமாக இருக்கிறது' என்று அர்ஜுனனிடம் சொல்கிறார்.

ஆத்மா எல்லையற்றது, முடிவற்றது, மனம் கடந்தநிலையில் உள்ளது, இந்த 'ஸ்தூல உடலோடு தொடர்புகொண்டிருந்தாலும்கூட, அது இன்னமும் சுதந்திரமாகத்தான் இருக்கிறது. அது தடாகத்தில் மிதக்கும் தாமரையைப்போன்று இருக்கிறது. தாமரை இலைகளின்மேல் விழுகிற நீர்த்துளிகள் அதனோடு ஒட்டிக்கொள்வதில்லை. அவை வெறுமனே உருண்டோடி, தண்ணீருடன்தான் கலந்துவிடுகின்றன.
அதைப் போலவே, உடலின் உள்ளே உறையும் ஆத்மாவானது, உலக சுகதுக்கங்களிலிருந்து முழுவதுமாக விடுபட்டிருக்கிறது. அது தாமரையின் மீதிருக்கும் அந்த நீர்த்துளிகளைப் போல இருக்கிறது. ஆத்மாவானது பரமாத்மாவுடன் எளிதில் கலந்துவிட முடியும்.
கிருஷ்ணர் சொல்கிறார், சூரியன் உலகையே பிரகாசி