KAILASA Library/ஸ்ரீமத் பகவத்கீதை/அத்தியாயம்-14: குணத்ரயவிபாக யோகம்Sign in
ஸ்ரீமத் பகவத்கீதை

அத்தியாயம்-14: குணத்ரயவிபாக யோகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்வதற்கான தீர்வு

மனிதர்களுக்கு
அறியாமையில் இருப்பது அல்லது
ஞானமடைவது-
இந்த இரண்டில் ஏதோ ஒன்றைத்
தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு
இருக்கிறது.

பெரும்பாலும் நாம் நம்முடைய
மனப்போக்கின்படி
அறியாமையில் இருப்பதையே
தேர்ந்தெடுக்கிறோம்.

பூர்ணத்வத்தில் இருப்பது எப்படி? மற்றும்

ஸ்லோகங்கள்

அத சதுர்தஶோऽத்த்யாய:

குணத்ரயவிபாக யோக:

ஏ

ஸ்ரீபகவாந் உவாச
பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம் ந
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா: நந 14.1

ஸ்ரீபகவான் சொன்னது

14.1 முனிவர்கள் எல்லோரும் பூர்ணத்துவத்தை அடைய எந்த ஜ்ஞானம் உதவியதோ அந்த ஒப்புயர்வற்ற ஜ்ஞானத்தை நான் மீண்டும் உனக்கு உரைக்கிறேன்.

இதாம் ஜ்ஞாநமுபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா: ந
ஸர்கேऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச நந 14.2

14.2 அந்த ஜ்ஞானத்திலேயே உறுதியாக இருப்பதன்மூலம் ஒருவர், என்னைப் போன்றே உடல் மனத்தைக் கடந்த இயல்பை அடைய முடியும்; அழிவற்ற விழிப்புணர்வில் நிலைபெற முடியும். அப்படிப்பட்ட ஒருவர் சிருஷ்டியில் பிறப்பதும் இல்லை, ப்ரலயத்தில் அழிவதும் இல்லை.

மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந் கர்பம் ததாம்யஹம்ந
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத நந 14.3

14.3 பரதக்குலத் தோன்றலே! ப்ரஹ்மம் என்றழைக்கப்படும் மொத்தப் பருப்பொருளின் கருப்பொருளே பிறப்பிற்கு மூலக்காரணமாக இருக்கிறது. நான் அந்த ப்ரஹ்மத்தைக் கருவுறச்செய்து, எல்லா உயிரினங்களும் பிறப்பதை சாத்தியமாக்குகின்றேன்!

ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா: ந
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா நந 14.4

14.4 குந்தியின் மைந்தனே, புரிந்துகொள். எல்லா உயிரினங்களின் பிறப்பிடமாகப் ப்ரக்ருதி இருக்கிறது. அவை பிறப்பதற்குச் சாத்தியமான மூல வித்துக்குரிய தந்தை நானே!

ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ரு'திஸம்பவா: ந
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம் நந 14.5

14.5 உலகாயுத இயல்புகள் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று விதமான குணங்களைக் கொண்டது. ஒரு உயிர் ப்ரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும்பொழுதே, இந்த மூன்றுவிதமான குணங்களால் கட்டுறுத்தப்படுகிறது.

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகமநாமயம் ந
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக நந 14.6

14.6 ஓ! குற்றமற்றவனே! ஸத்வ குணம் மற்ற குணங்களைவிட மிகத் தூய்மையானதாதலால் ஒளி வீசக்கூடியது. ஒருவரை பாவங்கள் செய்வதிலிருந்து விடுவிக்கும். இந்த வகை குணத்தில் இருப்பவர்கள், நல் அறிவை வளர்த்துக்கொள்வார்கள்; ஆனாலும் அவர்கள் சந்ே தாஷம் என்ற கருத்தினால் கட்டுண்டு விடுவார்கள்.

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ரு'ஷ்ணாஸங்கஸமுத்பவம் ந
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம் நந 14.7

14.7 குந்தியின் மைந்தனே, தெரிந்துகொள், ரஜஸ் என்பது வரம்பு கடந்த விருப்பங்களையே இயல்பாகக் கொண்டிருப்பதால், இது ஆசைகளுக்கும் பந்தங்களுக்கும் மூலமாக இருக்கும். ரஜஸ், மனிதர்களைத் தாங்கள் செய்யும் செயல்களுடன் இணைத்துப் பந்தப்படுத்தும்.

தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம் ந
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத நந 14.8

14.8 பரதக்குலத் தோன்றலே, தெரிந்துகொள், செயல் திறன் அற்ற நிலையிலிருந்து பிறக்கும் தமஸ், மனிதர்களை மயர்ச்சிக்குள்ளாக்குகிறது. இது கவனமின்மை, சோம்பேறித்தனம் மற்றும் அதிகப்படியான உறக்கம் ஆகியவற்றால் மனிதர்களைப் பந்தப்படுத்தும்.

ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத ந
ஜ்ஞாநமாவ்ரு'த்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத நந 14.9

14.9 பரதக்குலத் தோன்றலே, ஸத்வ குணம் ஒருவரை மகிழ்ச்சியான நிலைக்கும், ரஜோ குணம் ஒருவரை கர்மபலனிற்கும், தமோ குணம் முட்டாள்தனத்திற்கும் எடுத்துச்செல்கிறது.

ரஜஸ்தமஸ்ச்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத ந
ரஜ: ஸத்த்வம் தமஸ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா நந 14.10

14.10 ஓ பரத புத்திரா! சில சமயங்களில் ரஜோ குணம் ஸத்வ குணத்தை அடக்கியும், சில நேரங்களில் ஸத்வம் ரஜோ குணத்தை அடக்கியும், சில சமயங்களில் தமோ குணம் ரஜஸ் மற்றும் ஸத்வ குணத்தை அடக் கியும் மேலெழுகின்றது. இவ்வகையில் ஒன்றை ஒன்று மிஞ்ச எப்பொ ழுதும் போட்டி நடந்துகொண்டே இருக்கும்.

ஸர்வதவாரேஷு தேஹேண்ஸ்மிந் ப்ரகாஶ உபஜாயதே ந
ஜ்நாநம் யதா ததா வித்யாத்விவ்ரு'த்தம் ஸத்த்வமித்யுத நந 14.11

14.11 ஞான ஒளி, இந்த உடலில் உள்ள எல்லாப் புலன்களையும் ஒளிரச் செய்கிறபோது ஸத்வ குணம் மேலோங்கி நிற்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

லோப: ப்ரவ்ரு'த்திராரம்ப: கர்மணாமஶம: ஸ்ப்ரு'ஹா ந
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ரு'த்தே பரதர்ஷப நந 14.12

14.12 பரத வம்சத்தோரில் உயர்ந்தவனே! எப்பொழுது ரஜோ குணம் மேலெழுகின்றதோ, அப்பொழுது ஆழமான பற்றுதல், கட்டுக்கடங்காத ஆசை, பேராசை மற்றும் தீவிரமான முயற்சி ஆகியவை மேலெழும்புகின்றன.

அப்ரகாஶோண்ட்ப்ரவ்ரு'த்திஶ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச ந
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ரு'த்தே குருநந்தந நந 14.13

14.13 ஓ! குரு வம்சத்தில் பிறந்தவனே, அறியாமை (தமோ குணம்) அதிகரிக்கும்பொழுது விவேகமற்றதன்மை, மாயை, செயலற்றதன்மை மற்றும் மகிழ்ச்சியின்மை ஆகியவை வெளிப்படுகின்றன.

யதா ஸத்த்வே ப்ரவ்ரு'த்தே து ப்ரலயம் யாதி தேஹப்ரு'த் ந
ததோத்தமவிதாம் லோகாநமலாந்-ப்ரதிபத்யதே நந 14.14

14.14 ஒருவர் ஸத்வ குணம் ஓங்கி இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் உயர் உலகங்களைச் சென்றடைவார்.

ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே ந
ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே நந 14.15

14.15 ஒருவர் ஆழ்ந்த உணர்ச்சி நிலையில் (ரஜோ குணத்தில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால், அவர் செயல்களில் ஈடுபாடு உடையவர்களிடையே பிறக்கிறார். ஒருவர் அறியாமை நிலையில் (தமஸில்) இருக்கும்பொழுது மரணம் எய்தினால் அவர் அறிவற்றவர்களிடம் சென்று பிறக்கிறார்.

கர்மண: ஸுக்ரு'தஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம் ந
ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞானம் தமஸ: பலம் நந 14.16

14.16 ஒருவர் ஸத்வ நிலையில் செயலாற்றும்பொழுது, தூய்மையானவர் ஆகிவிடுகிறார். ஆழ்ந்த உணர்ச்சி நிலை யில் (ரஜோ குணம்) செயல்படும்பொழுது மனக்கவலை விளைகிறது. அறியாமை நிலையிலிருந்து (தமஸ்) செயல்கள் செய்யப்படும்பொழுது விவேகமற்றதன்மை விளைகிறது.

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞானம் ரஜஸோ லோப ஏவ ச ந
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோண்ஜ்ஞானமேவ ச ந 14.17

14.17 ஸத்வத்தின் நிலையிலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜஸிலிருந்து பேராசை உண்டாகிறது. தமோ குணத்திலிருந்து விவேகமற்றதன்மை, முட்டாள்தனம் மற்றும் மாயை உண்டாகிறது.

ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா: ந
ஜகந்யகுணவ்ரு'த்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா: ந 14.18

14.18 ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் படிப்படியாக உயர் உலகங்களுக்குச் செல்கிறார்கள்; இரஜோ குணத்தில் வாழ்பவர்கள் பூமியைச் சார்ந்த உலகங்களில் வாழ்கிறார்கள்; தமோ குணத்தில் வாழ்பவர்கள் கீழ் உலகங்களுக்குச் செல்கிறார்கள்.

நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஶ்யதி ந
குணேப்யஶ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோந்திகச்சதி ந 14.19

14.19 எல்லாச் செயல்களிலும் இந்த மூன்று குணங்களைத் தவிர வேறொன்றுமில்லை என்றும், பரம்பொருள் இம் மூன்று குணங்களையும் கடந்தவர் என்பதையும் உணரும் ஒருவர் என் தெய்வீக நிலையை உணர்ந்துகொள்ள முடியும்.

குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந் ந
ஜன்மம்ரு'த்யுஜராது:கைர்விமுக்தோண்ம்ரு'தமஶ்நுதே ந 14.20

14.20 மனித உடலில் இருக்கும் ஒருவர், இம்மூன்று குணங்களைக் கடக்க முடிந்தால், அவர் பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் துக்கங்களிலிருந்து விடுபட முடியும். இந்த வாழ்க்கையிலேயே அமிர்தத்தை ருசிக்க முடியும்.

அர்ஜுந உவாச

கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ ந
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந் குணாநதிவர்ததே ந 14.21

அர்ஜுனன் சொன்னது

14.21 இறைவா, இந்த குணங்களைக் கடந்து நிற்கும் ஒருவரை எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளலாம்? அவருடைய நடவடிக்கை எத்தகையதாக இருக்கும்? அவர் மூன்று குணங்களையும் எவ்வாறு கடக்கிறார்?

ஸ்ரீபகவாந் உவாச

ப்ரகாஸம் ச ப்ரவ்ரு'த்திம் ச மோஹமேவ ச பாண்டவ ந
ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ரு'த்தானி ந நிவ்ரு'த்தானி காங்க்ஷதி ந 14.22

உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே ந
குணா வர்தந்த இத்யேவ யோண்வதிஷ்டதி நேங்கதே ந 14.23

ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந: ந
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி: ந 14.24

மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: ந
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே ந 14.25

ஸ்ரீபகவான் சொன்னது

14.22-25 பாண்டுபுத்திரனே, யார் ஒருவர் ஒளியை (ஸாத்விகத்தை), பற்றுக்களை (ரஜஸை), மாயத்தோற்றத்தை (தமஸை) அவை இருக்கும்பொழுது வெறுக்காமலும், அவை மறைந்துவிட்டால் ஏக்கம்கொண்டு கவலைப்படாமலும், குணங்களைக் கடந்தநிலையில் நிலைகொண்டு, குணங்கள் மட்டுமே செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு திடமாக இருக்கிறாரோ, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்து, மண்ணையும் கல்லையும் மற்றும் பொன்னையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமமாக எடுத்துக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இருந்து, மரியாதையிலும் அவமரியாதையிலும் சமநிலை குலையா மல், நண்பர்களையும் விரோதிகளையும் சமமாக நடத்தி, பலன்களை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்கிறாரோ அவரே மூன்று குணங்களையும் கடந்தவராகக் கருதப்படுகிறார்.

மாம் ச யோண்வ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே ந
ஸ குணாந் ஸமதீத்யைதாந் ப்ரஹ்மபூயாய கல்பதே ந 14.26

14.26 எவரொருவர் முழுமையான தெய்வீகச் சேவையில் தன்னை உட்படுத்திக்கொள்கிறாரோ, எந்தச் சூழ்நிலையிலும் நிலை தவறாமல் இருக்கிறாரோ, உலக வாழ்க்கையின் இயல்பான முக் குணங்களையும் கடக்கின்றாரோ, அவர் ப்ரஹ்ம நிலையை அடைய தகுதிபெறுகிறார்.

ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா॒ஹமம்ரு'தஸ்யாவ்யயஸ்ய ச ந
ஶாஶ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுக॒ஸ்யைகாந்திகஸ்ய ச ந

14.27 மேலும் நிலையானதும் அழிவற்றதும் நித்தியமானதும் உச்சநிலை ஆனந்தத்தின் நேர்மையான வெளிப்பாடாக இருப்பதுமான அந்த ப்ரஹ்மத்தின் ஆதாரமாக இருப்பதும் நானே.

ௐ தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே குணத்ரயவிபாக யோகோ நாம சதுர்தஶோ ண்த்யாய: ந

இது ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப்புகட்டுவதும் யோகவிஞ்ஞானமுமாகிய குணத்ரய விபாகயோகம் என்னும் பதினான்காம் அத்தியாயம்.

மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்வதற்கான தீர்வு

Krishna and Arjuna on the chariot

இருப்புத்தன்மையில் இருக்கும் ஒவ்வொன்றுக்குமே ஒரு மூலம் இருக்கிறது. நீங்கள் நடந்துகொள்ளும்விதம், நீங்கள் நினைக்கும் விதம், நீங்கள் எதிர்ச்செயல் செய்யும் விதம், நீங்கள் பதில்செயல் செய்யும் விதம், நீங்கள் புரிந்துணரும் விதம் என அனைத்துமே ஒரு மூலமனப்பாங்கினைக் கொண்டிருக்கிறது!

நம்முடைய கடந்தகால அனுபவங்கள்தான் நமது ஆழ்மனதில், விழிப்பற்ற தளத்தில் மூலமனப்பாங்குகளாகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அவைதான் நம்மைச் சக்தியற்ற உணர்வுக்கும், குறைவுணர்வுக்கும் தவறாக வழிநடத்திச்செல்கின்றன.

நீங்கள் எந்தக் குறைவுணர்வுகளுமின்றி வாழ முடியும்

நீங்கள் உங்களுக்கு உடல்நலமில்லையென்று உணர்ந்தாலோ, உதவியற்றவராக உணர்ந்தாலோ அல்லது உணர்ச்சி ரீதியாக சக்தியற்றிருந்தாலும், தளர்ந்து போயிருந்தாலும், மனச்சலிப்படைந்திருந்தாலும், சோம்பலாக இருந்தாலும், மன உளைச்சலிலிருந்தாலும் அல்லது இவையனைத்துமே உள்ளவராக இருந்தாலும் நீங்கள் பலஹீனராக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதைதான் நான் சக்தியற்று இருப்பது எனச் சொல்கிறேன்.

இப்போது நல்ல செய்தி என்னவென்றால், இந்த எந்தக் குறைவுணர்வுகளுமின்றி நீங்கள் வாழ முடியும் என்பதே.

மூலமனப்பாங்குக்கு ஸம்ஸ்க்ரு’தத்தில் சரியான வார்த்தை மூலவாஸனா அல்லது மூலவிசாரதாரா ஆகும். இந்த மூலமனப்பாங்குகளின் காரணமாகத்தான் நாம் குறைவுணர்வுகளுடன்கூடிய முடிவுகளையே எடுக்கிறோம். நாம் அந்தக் குறைவுணர்வுகளின் மூலத்தை கண்டுபிடித்து அவற்றை நிறைவுசெய்துவிட வேண்டும்; இல்லையென்றால் அவை நம்மை மேலும் சக்தியற்ற நிலைக்கும் துன்பங்களுக்குமே கொண்டுசெல்லும்.

நான், ‘மூலமனப்பாங்கு’ என்பதை விளக்குகிறேன். உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக ஏதோவொரு உணர்ச்சி, வலுவாக ஆழமாக உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி, வாழ்க்கையைப் பற்றிய உங்களுடைய முழு புரிந்துணர்வையும் நிலைக்குலையச் செய்து, உங்கள் மனத்தைப் பிறக்கச்செய்கிறது.

உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக, ஒரு சக்தியற்ற நிலை

குறைவுணர்வுகளின் மூலத்தை
கண்டுபிடித்து அவற்றை
நிறைவுசெய்துவிட வேண்டும்.

உங்களை ஆட்கொள்ளும்போது, நீங்கள் உருவாக்கும் ஒரு மனப்பதிவே அது. அந்த கணத்திலிருந்து நீங்கள் வளர்த்துக்கொள்ளும் மனப்பாங்கினைத்தான், 'மூலமனப்பாங்கு' எனச் சொல்கிறேன்.

நீங்கள் உள்வாங்கும் வலுவான முதல் புரிந்துணர்வானது தொடர்ந்து உங்களை அதே புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இயங்க வைக்கிறது.

ஒரு எளிய உதாரணம், சிறுவயதில் உங்கள் தாயார், “மழையில் நனையாதே, உனக்குச் சளி பிடித்துக்கொள்ளும்,” என்று உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆனால், உங்களுக்கு 25 வயதானபின்பும்கூட, மழைபெய்தால், நீங்கள் வெளியில் போகமாட்டீர்கள், மழை பெய்வதைப் பார்த்தாலே தும்மத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் சிறுவயதில், உங்களுடைய இயல்புநிலையைக் குலையச்செய்த அந்தப் புரிந்துணர்வையே மூலமனப்பதிவு, மூலமனப்பாங்கு எனச் சொல்கிறோம்.

உங்கள் மூலமனப்பாங்குகளிலிருந்து வெளியேறி அவற்றை நிறைவுசெய்துவிடுங்கள். அது, உங்கள் தாயார் உங்களுக்குத் தராமல், உங்கள் சகோதரனுக்கு ஒரு இனிப்பைக் கொடுத்த சிறு விஷயமாகக்கூட இருக்கலாம், அதைவிட இன்னும் ஒரு சிறிய நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்.

ஆழ்ந்துகேளுங்கள், உங்கள் உடல்-மன அமைப்பில், ஒரு மூலமனப்பாங்கு நுழைந்துவிட்டால், பின்பு அந்த மனப்பாங்குதான் உங்களின்மூலம் வாழ்ந்துகொண்டிருக்கும்; நீங்கள் வாழமாட்டீர்கள். ஆகவே எந்தவொரு மனிதரும் முதலில் செய்யவேண்டிய ஒரு விஷயம் அந்த மூலமனப்பாங்குகளைக் கண்டுபிடித்து, நிறைவுசெய்யும் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்வதே.

குணத்ரய விபாக யோகம் என்னும் இந்த அத்தியாயம், பூர்ணத்வ உணர்வை அனுபவிப்பதற்கான நுட்பத்தை வழங்குகிறது. உங்களின் மூலமனப்பாங்குகளையும் குணங்களையும் கண்டுபிடித்து அவற்றை நிறைவுசெய்யும் பூர்ணத்வ விஞ்ஞானத்தைப் பற்றி இங்கு கிருஷ்ணர் விவரிக்கிறார்.

பூர்ணத்வம்,

உங்கள் பிறப்பின் நோக்கத்தை அறியச்செய்யும்

ஆழ்ந்து கேளுங்கள், நிகழ்காலத்தில் உங்களைச் சக்தியற்றவராக்கிக் கொண்டிருக்கும் உங்கள் கடந்தகால தாக்கங்களை, நிகழ்வுகளை மீண்டும் விழிப்புணர்வுடன் வாழ்ந்துபார்த்து, அதிலிருந்து விடுபடுவதைத்தான் பூர்ணத்வம் செய்வது அல்லது நிறைவுசெய்வது என்று சொல்கிறோம்.

அந்தக் கடந்தகால தாக்கங்கள் உங்கள் உடல்-மன அமைப்பிலிருந்தே வெளியேறியாக வேண்டும். புரிந்துணர்வு (கஞுணூஞிணீ ணாடிணிண) என்பது நம் புலன்கள் வழியாக அனுபவிக்கும் அனுபவத்தைக் குறிக்கவில்லை; அந்த அனுபவத்திற்கு நாம் எவ்வாறு உணர்வுப்பூர்வமாகப் பதில்செயல் புரிகிறோம் என்பதையே குறிக்கிறது.

இந்தப் பதில்செயல்கள் நம் மூலமனப்பாங்குகளின் அடிப்படையிலிருப்பதால், அவை முழுமையானவையாகவும், போதுமானவையாகவும் இருப்பதில்லை. உள்ளதை உள்ளபடியே நீங்கள் பார்ப்பதில்லை. நீங்கள் விரும்புவதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் விரும்புவதையே நீங்கள் உருவாக்குகிறீர்கள். உங்களுடைய நிஜம் (கீளுச்டீஏணாதூ) என்ன? அது வெறுமனே உங்கள் புரிந்துணர்வுதான் - உங்கள் அஹங்கார, மமகார, அந்யகாரத்தின் கூட்டுத் தொகுப்பே ‘நீங்கள்’!

ஆழ்ந்துபார்த்து உங்களுடைய பிறப்பின் மூலகாரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். உங்களுடைய மூலமனப்பாங்கினைக் கண்டுபிடித்து அதைப் பூர்ணத்வம் செய்யும்பொழுது, உங்கள் ப்ராரப்தத்தை, உங்களுடைய பிறப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்வீர்கள்.

கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு மூன்று வெவ்வேறு குணங்களைப் பற்றி விவரித்துக் கூறுவதின் மூலம் நம் பிறப்பின் காரணத்தையும், இந்த குணங்களையும் மூலமனப்பாங்குகளையும் அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு சூழ்நிலைக்கும் நாம் எவ்வாறு எதிர்ச்செயல் செய்கிறோம் என்பதையும், அவற்றை எவ்வாறு பூர்ணத்வம் செய்வது என்பதைப் பற்றியும் விவரிக்கிறார்.

கிருஷ்ணர் தம்மை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார்(14.1-14.4)

மீண்டும்மீண்டும்ஸத்யத்தைச்சொல்வதன்
மூலம்கிருஷ்ணர்அர்ஜுனனிடத்தில்சரியான
பூர்ணத்வஉணர்வைஉருவாக்கமுயல்கிறார்.

“இதம் ஜ்ஞானமுபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா: (14.2) - அந்தப் பூர்ணத்வ உணர்விலேயே உறுதியாக இருப்பதன்மூலம் ஒருவர், என்னைப் போன்றே உடல் மனத்தைக் கடந்த ஞானநிலையை அடைய முடியும்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

‘ஞானமடைதல் எல்லோராலும் அடைய முடிந்த ஒன்றே’ என்று தைரியத்துடனும் துணிவுடனும் வெளிப்படையாகவும் உரைத்த முதல் குரு கிருஷ்ணரே!

அவர் நமக்கு ஞானமடைவதற்கான சரியான விஞ்ஞானத்தைக் காட்டியருளியிருக்கிறார். நம்முள் பூர்ணத்வ உணர்வை உருவாக்கவும், நாம் எடுக்கும் விழிப்புணர்வுடன்கூடிய தீர்மானத்தின் வழியாக அதை நம்முடைய அனுபவமாக்கவும் முடியும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அவர் அர்ஜுனனிடம் ‘இந்த அறிவில் நிலைத்து நிற்கும் ‘நீங்கள்’ ஞானமடைய முடியும்’ என்று சொல்லவில்லை; இந்த அறிவில் நிலைத்து நிற்கும் ‘ஒருவரால்’ ஞானமடைய முடியும்’ என்றுதான் சொல்கிறார். அதன் அர்த்தம் யார் வேண்டுமானாலும் ஞானமடைய முடியும் என்பதே!

உங்கள் அஹங்கார, மமகார,
அந்யகாரத்தின் கூட்டுத் தொகுப்பே
‘நீங்கள்’!

கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார், ‘மம - என்னைப் போலவே’. பகவத்கீதையில், வெகுசில கருத்துக்களையே திரும்பத் திரும்பக் கூறுகிறார். அதில் ஒன்று, ‘என்னைப் புரிந்துகொள், என்னுடைய தெய்விகத்தைப் புரிந்துகொள், என்னுடைய உள்ளுணர்வைப் புரிந்துகொள்; நீயும் கடவுளாகலாம், நீயும் அந்த உள்ளுணர்வை அடைவாய்’ என்பதுதான்!

உங்கள் கடந்தகாலத்தை வலுவிழக்கச்செய்யுங்கள்

கிருஷ்ணர் ஸத்யத்தைப் பற்றிப் பேசுகிறார், அது நிலையானது; அது என்றும் அழியாதது; அது பிறப்பு, இறப்பினால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.

‘அழியா நிலை’ என்பது படைத்தலுக்கும் அழித்தலுக்கும் அப்பாற் பட்டது. அது கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் கடந்த ஒரு நிரந்தரமான நிலை. நிரந்தரமான நிலை என்பது நிகழ்கால பூர்ணத்வ தருணங்களே! (கணூஞூண்ஞூணூ டணிட்துணூ ணினூ ஞிணிட்டீணே ணாடிணிண!)

பிரம்மா படைத்தலின் அதிபதி. படைத்தல் என்பது கடந்தகாலம். பாதுகாப்பது விஷ்ணுவின் வேலை. பாதுகாப்பது என்பது நாம் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்; நாம் எதையெல்லாம் அடைய விரும்புகிறோம்; நம்முடைய ஆசைகள், நம்முடைய எதிர்பார்ப்புக்கள்போன்ற எதிர்காலத்துடன் தொடர்புடைய எல்லா விஷயங்களையும் பற்றியது.

ஆழ்ந்து கேளுங்கள், உங்களுடைய உள்ளுணர்வு, கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் ஒரேமொழியில்தான், ஒரேமாதிரியாகத்தான் உணர்கிறது. உங்கள் கடந்தகாலம் எப்படிக் கட்டப்பட்டது என்பதை

உங்கள் எதிர்காலம்
உணர்வுமாற்றமடைய
வேண்டுமானால், உங்கள் கடந்தகாலத்தை

இப்போது நான் விளக்குகிறேன். சம்பவங்கள், உங்கள் நேர் உணர்வுகள், சுயமதிப்பீடுகள் ஆகிய இந்தத் தூண்கள் மீதுதான் உங்கள் கடந்தகாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கடந்தகாலத்தின் மீதுதான் உங்கள் எதிர்காலம் கட்டப்படுகிறது. ஆகவே உங்கள் எதிர்காலம் உணர்வுமாற்றமடைய வேண்டுமானால், உங்கள் கடந்தகாலத்தை நிறைவுசெய்தாக வேண்டும்.

இப்போதே உங்கள் புரிந்துணர்வுகளையும், சுயமதிப்பீடுகளையும் நிறைவுசெய்துவிட்டால், உங்கள் 60% கடந்தகாலம் எரிக்கப்பட்டு விடும்! அதற்குப்பிறகு உங்கள் கடந்தகாலம், இப்போதுள்ளபடியே வலுவாக நிற்க முடியுமா? முடியாது! பின்பு வெறுமனே, தகவல்களை மட்டும் கொண்டிருக்கும். அதனால், உங்கள்மீதான தன் பிடிப்பை, கடந்தகாலம் இழந்துவிடும். உங்கள் கடந்தகாலம் உணர்வுமாற்றமடைந்துவிடும், இப்படித்தான் உங்கள் எதிர்காலத்தை உணர்வுமாற்றமடையச் செய்ய முடியும். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, இதை உள்வாங்கி, வாழ ஆரம்பிப்பதுதான்.

வாழ்க்கையில் ஏதோவொரு பரிமாணத்தில் மட்டும் வெற்றியடைவது ஒரு வெற்றியல்ல!

நீங்கள் பூர்ணத்துவத்தை இப்பொழுதே பிரகடனப்படுத்தினால், நீ ங்கள் இப்பொழுதே பூர்ணத்துவ நிலையில் இருப்பீர்கள். நீங்கள் பூர்ணத்துவம் செய்யும்பொழுது, நீங்கள் கடந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் கடந்து அப்பால் செல்கிறீர்கள். அதன்பின் நீங்கள் எங்குச் சென்றாலும், இந்த மங்களத்தையும் எடுத்துச்செல்வீர்கள், அதை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் ஒரு நடமாடும் மங்களத்துவம், சிவனாகி விடுகிறீர்கள்.

இதைப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் குறைவுணர்வுகளிலிருந்து செயல்படும்போது உங்கள் வாழ்க்கையில் ஏதோவொரு பரிமாணத்தில் வெற்றி கிடைக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையே தோல்வியில்தான் முடியும்.

ஆழ்ந்து கேளுங்கள், வாழ்க்கையில் ஏதோவொரு பரிமாணத்தில் மட்டும் வெற்றியடைவது என்பது ஒரு வெற்றிகரமான வாழ்க்கையாகி விடமுடியாது. உதாரணத்திற்கு, உங்களில் வேரூன்றியிருக்கும் பயம் என்னும் மூலமனப்பாங்கின் காரணமாக உழைக்கஆரம்பித்து

நீங்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பாதித்தாலும்கூட, நீங்கள் உங்களுக்குள் திருப்தியை அடையமுடியாது. ஏனெனில், நீங்கள் பணம் எதற்காகச் சம்பாதிக்கிறீர்களென்றால், நீங்கள் பாதுகாப்பாக உணர்வதற்காகவே.

ஆனால் பணத்தால் உங்களுக்குப் பாதுகாப்பளிக்க முடியாது. இதுவொரு தவறான அணுகுமுறை. நீங்கள், பயம் என்னும் அந்த மூலப்பாங்கினை உடைத்து வெளிவந்தால் மட்டுமே உங்களுக்கு முழுபாதுகாப்பு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

'ஏன்' என்ற கேள்வியை உயிர்ப்போடு வைத்திருங்கள்

நடைமுறைரீதியாகப் பதில் சொல்ல இயலாத தத்துவரீதியான கேள்விகளுக்குக் கிருஷ்ணர் பதில் சொல்ல முயல்கிறார்: இந்தப் பிரபஞ்சம் ஏன் படைக்கப்பட்டது? எல்லாமே கடவுள்தான் என்றால், ஏன் பிரபஞ்சம் படைக்கப்பட்டது? நாம் ஏன் பிறந்தோம்?

கிருஷ்ணர் “ஹம் பீஜப்ரத: பிதா (14.4)-நானே பிதா, நானே எல்லாவற்றிற்கும் மூல விதையாக இருக்கின்றேன்,” என்கிறார்.

‘ஏன்’ என்னும் இந்தப் பெரிய விதையைத்தான் கிருஷ்ணர் உங்களுக்குள் வைத்து அனுப்பியிருக்கிறார். அப்போதுதான் நீங்கள் ஒரு மரமாக வளரும் வரையில் நீங்கள் நிம்மதியாயிருக்க முடியாது. புரிந்துகொள்ளுங்கள், ஒவ்வொரு விதையும் தனக்குள் ‘வீர்யம்’ என்னும் சக்தியைக் கொண்டிருக்கிறது: அது ஒரு மரமாக வளரும்வரை, அது சும்மா இருக்க முடியாது. இங்கு, அர்ஜுனனும் அதே ‘ஏன்’ என்பதற்கே திரும்பத் திரும்ப வருகிறார்.

இயல்பின் குணநலன்கள் (14.5-14.8)

வெளியுலக மூலப்பொருள்கள் சாத்விகம், அதீத உணர்ச்சி, அறியாமை என்ற மூன்று விதமான பண்புகளைக் கொண்டவையாக உள்ளன. இப்பொழுது இந்தப் பண்புகளை உங்களுக்கு விவரிக்கின்றேன்.

ஸத்வ என்பது நம்மை பூர்ணத்வ உணர்வைநோக்கி, ஆனந்தத்தை நோக்கி அழைத்துச்செல்லக்கூடிய மூலமனப்பாங்குகளைக் குறிக்கின்றது.

ஒருவரை உணர்ச்சிபெருக்குள்ளவராகவும் பரபரப்பானவராகவும் செய்து, ஆழமான தீவிரத்தன்மையுடன் வேலைகளைச்செய்யும் மூலமனப்பாங்குகள் ரஜஸ் எனப்படுகின்றன. இது நம்மை சுறுசுறுப்புள்ளவராகவும், வசதிபடைத்தவராகவும் ஆக்குகிறது.

மூன்றாவது குணம் தமஸ். மந்தத்தன்மையிலும் கீழான மனநிலையிலும் ஆழ்த்தும் மூலமனப்பாங்குகள் நம்முள் தன்னிச்சையாகவே எழுந்து, நம் உணர்வை நிலைகுலையச் செய்து, நம்மை மனச்சோர்விற்குள் ஆழ்த்துவதை தமஸ் என்று அழைக்கிறோம்.

நம்முடைய முழு வாழ்க்கையையுமே இந்த மூன்று விதமான மூலமனப்பாங்குகள் அல்லது ஸம்ஸ்காரங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த மூலமனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்யும் விஞ்ஞானம்தான் வாழ்க்கைக்கான உரிமையாளரின் கையேடு. கிருஷ்ணர் அதை குணத்ரய விபாக யோகம் என்று அழைக்கிறார்.

கேளுங்கள், ஸம்ஸ்காரம் என்பது ஏதோ ஒரு உயிரற்ற மூலமனப்பாங்கு அல்ல. அவை உயிர்ப்புள்ள வாழும் உயிர்நினைவுகள், தசைநினைவுகள், அவை உயிரற்ற நினைவுகள் அல்ல.

நாம் அந்த நினைவுகளோடு இசைந்து பயணம் செய்யும்பொழுது, அந்த நினைவுகளுடனேயே வாழும்போது அவை நம் இருப்புத்தன்மையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது. அவை

பூர்ணத்வ விஞ்ஞானம்தான்
வாழ்க்கைக்கான ‘உரிமையாளரின்
கையேடு’.

நம்முடைய மூளைக் கட்டமைப்பில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.

புரிந்துகொள்ளுங்கள், உங்களின் உள் - உணர்வு ஒரு சக்தி வாய்ந்த உணர்வாகும். பலம்வாய்ந்த, சக்திகள் நிறைந்த ஒருவர் குறைவுணர்வுகளில் சிக்கி, பலஹீனமான செயல்களையே செய்துகொண்டிருந்தாரேயானால், நாம் அந்த சக்தியைத் தட்டியெழுப்பி, அவரைப் பூர்ணத்வ உணர்வுக்குக்கொண்டுவந்து, அவரை வலிமைமிக்க, சக்திமிக்க செயல்களைச் செய்யவைக்க முடியும்.

உண்மையான ‘உங்களை’க் கண்டுகொள்வீர்கள்!

உங்களுடைய அடையாளம் தோன்றுவதே உங்களுடைய விழிப்புணர்வற்ற மனத்திலிருந்துதான். நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அப்படித்தான் உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்கிறீர்களே தவிர, உண்மையில் நீங்கள் யாரோ அப்படி வெளிப்படுத்திக் கொள்வதில்லை. முதலில், உங்களுக்கே நீங்கள் யார் என்பது தெரிவதில்லை.

உங்களுடைய மூலமனப்பாங்கினை அடையாளம்கண்டு நிறைவுசெய்யுங்கள், உண்மையான ‘உங்களை’க் கண்டுகொள்வீர்கள்!

உங்கள் மூலமனப்பாங்கு செயல்படத் துவங்கும் அந்தக் கணமே, நீங்கள், ‘உங்களை’ உங்கள் தனிப்பட்ட அடையாளமாக உணர்கிறீர்கள். நீங்கள் அந்த மூலமனப்பாங்கினை நிறைவுசெய்யும்வரையில், நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து விபத்துக்களையே சந்திக்கநேரிடும்.

நிறைவுசெய்தல், நம்மைப் பாதித்துக் கொண்டிருக்கும் குழப்பங்களையும், நமது வாழ்வில் நாமே உருவாக்கிக்கொள்ளும் மாற்றுக் கற்பனைவடிவங்களையும் நீக்கிவிடுகிறது. நீங்கள்

> நீங்கள் சக்தியற்றோ, குழப்பத்திலோ
> இருக்கும்பொழுது, தயவுசெய்து
> எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள்.

இப்போதே பூர்ணத்வ உணர்வில் நிலைபெற்றுவிட்டால், உங்கள் அஹங்கார, மமகார, அந்யகாரங்களுக்கிடையே ஒரு முழுமையான சுமுகமான நிலை நிலவும்.

ஆழ்ந்து கேளுங்கள், உங்களுடைய மூலமனப்பாங்குகளின் விளைவுகள்தான், உங்களுடைய முரண்பட்ட மனப்பாங்குகள்.

நீங்கள் சக்தியற்றோ, குழப்பத்திலோ அல்லது நிம்மதியற்றோ இருக்கும்பொழுது, தயவுசெய்து எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள். மன அமைதியற்ற எல்லாத் தருணங்களும் சக்தியற்ற நிலைகளே. நீங்கள் எந்தளவுக்கு மனப்பாங்குகள் வைத்திருக்கிறீர்களோ, அந்தளவுக்கு சக்தியற்றும் நிம்மதியற்றும் ரஜோகுணம் கொண்டவராகவும் இருப்பீர்கள்.

கிருஷ்ணர், 'நான் எப்படி நிஜத்தைத் தவறவிட்டேன்?', 'நான் ஏன் மயக்கத்தில் இருக்கிறேன்' என்று நம் இருப்பினிடமே நம்மைக் கேட்கச்சொல்லுகிறார்.

நாம் ரஜஸ், தமஸ், ஸத்வம் என்னும் வெவ்வேறான முரண்பட்ட மனப்பாங்குகளுடன் செயல்படும்பொழுது, அந்த மூன்றுமே ஒன்றுக்கொன்று குறுக்கிடும்பொழுது, அவை நம் வாழ்க்கையில் நரகத்தை உருவாக்கிவிடும். கிருஷ்ணர் இந்த மூன்று குணங்களையும் எப்படிப் பூர்ணத்வம் செய்வது என்பதற்கான நுட்பங்களைத் தருகிறார்.

பிரபஞ்சத்திற்கு நீங்கள் கட்டளையிடலாம்

நாம் நம்புகிறோமோ இல்லையோ நாம் எல்லோரும் கடவுளே. நாம் எவ்வளவு காரணங்களைக் காட்டினாலும் அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல!

இன்னும் மாற்றப்பட முடியாத சில விஷயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று: 'நாம் எல்லோரும் தூய்மையான விழிப்புணர்வு உள்ளவர்களே, நம்முடைய உள்ளுணர்வு எல்லையற்றது, அது எல்லையற்ற சக்தி கொண்டது, அஹம் ப்ரஹ்மாஸ்மி - நான் பிரஹ்மமாக இருக்கிறேன் என்பதனுடைய மரபணுவை அது தன்னகத்தே கொண்டிருக்கிறது' என்பதுதான்!

நீங்கள் உங்களுக்குள் உருவாக்கும் உணர்வு, மிகுந்த சக்திவாய்ந்தது. அது, நீங்களும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் வாழ்க்கையை அனுபவிக்கும் விதத்தையே நேரிடையாகப் பாதிக்கக் கூடியது.

‘உணர்வு’ (குணீச்ளினு) என்ற வார்த்தையின் பொருளை இப்போது விளக்குகிறேன்!

நீங்கள், உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகள் எந்த விதத்தில் நிகழவேண்டுமென உங்களுக்குள் நினைக்கிறீர்களோ, அதுவே ‘உணர்வு’! அதைத்தான் நான் ‘நீங்கள் உங்களுக்குள் உருவாக்கும் உணர்வு’ என்கிறேன்.

உங்களுடைய எதிர்காலத்தைத் தயார்செய்வதற்கு பிரபஞ்சத்திற்கு நீ ங்கள் தரும் கட்டளையே உங்கள் ‘உணர்வு’!

கேளுங்கள் நீங்கள் ஓட்டலுக்குச் சென்று அங்குள்ள ‘உணவுப் பட்டியல் அட்டை’யைப் பார்த்துவிட்டு, நீங்கள் விரும்பியதைக் கொண்டுவரகட்டளையிடுவதுபோலவே ‘என்னுடைய வாழ்க்கைக்கு இது, இதெல்லாம், வேண்டும்’ என்று பிரபஞ்சத்திற்கு நீங்கள் இடும் கட்டளையே உங்கள் உணர்வு! நீங்கள், இந்த உணர்வில் எந்தளவுக்கு ஆழமாக எண்ணங்களை உருவாக்குகிறீர்களோ அந்தளவுக்கு அவை அதிக சக்தியை உங்களுடைய விழிப்புணர்விடமிருந்து பெறுகின்றன.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களிடம் சுயசந்தேக மனப்பாங்கு இருக்கிறது. உங்களுடைய ஆளுமையின் ஏதாவதொரு பகுதி, எந்தவொன்றைச் செய்தாலும் அல்லது எந்தவொன்றைப் பற்றி முடிவுசெய்தாலும், உங்களுடைய ஆளுமையின் மற்றொரு பகுதி அந்தப் புரிந்துணர்வைச் சந்தேகப்படுகிறது. உங்களுடைய வலது கை எதைச் செய்தாலும், உங்கள் இடது கை அதைச் சந்தேகப்படுகிறது. அந்தச் சுய சந்தேக மனப்பாங்கு, நமது மொத்த ஸத்வ உணர்வுநிலையையும் பாழ்படுத்திவிடுகிறது.

ஸத்வ உணர்வைத் தூய்மையாக

வைத்திருப்பது அவசியம்

ஆழ்ந்து கேளுங்கள், நாம் நம்முடைய ஸத்வ உணர்வை, சுயசந்தேக மனப்பாங்குகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் தூய்மைகெடச் செய்கிறோம். நீங்கள் உங்களுடன் அமர்ந்து, உங்களுடைய எல்லா எதிர்மறை சுயசந்தேக மனப்பாங்குகளையும் பூர்ணத்வம் செய்யுங்கள். உங்களுக்குள் இனிய பண்புகளை நுழையவிடுங்கள். திரும்பத் திரும்ப ஸ்வ-பூர்ணத்வம் செய்து, சரியான உணர்வை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

ஸத்வ வெளியில் சுயமுரண்பாடுடைய மூலமனப்பாங்குகளை உருவாக்கினோமானால், நாம் தன்னிச்சையாக ரஜஸுக்குள் தூக்கியெறியப்படுவோம்.

கிருஷ்ணர், ரஜஸைப் பற்றி என்ன சொன்னார் என்பதை விவரிக்கின்றேன். ராகம் -அளவற்ற ஆசைகள் மற்றும் த்ர்ஷ்னா -ஏக்கம், இவற்றிலிருந்துதான் உணர்ச்சிகொந்தளிப்புடன்கூடிய மனப்பாங்கு பிறக்கிறது. இதனால்தான், உயிர்கள் பலன்சார்ந்த செயல்களைச் (கீ³னுண்தடூண ஙீணூடிநுணணூஞூ) செய்வதிலேயே தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றன.

ஆசைகள் எல்லாம் நம்முடையவை. அவை நம்முடன் பிறந்தவை. அவற்றை நாம் நிறைவேற்றி முடித்தவுடன், நாம் அமைதியாகவும் நிறைவுடனும் இருப்பதை உணர்வோம். ஆனால் பேராசைகளும் ஏக்கங்களும் நமக்கு சமுதாயத்தால் தரப்பட்டவை. அவற்றைப் பொறுத்தமட்டில், அவை பூர்த்திசெய்யப்பட்டுவிட்டாலும்கூட, நாம் வெறுமையைத்தான் உணர்வோம்.

ஒரஜஸ் உங்களை தமஸுக்குள் தள்ளிவிட்டுவிடும்

சுய முரண்பாடுடைய ஆசைகள், நம்மை ரஜஸுக்கு அழைத்துச் செல்கின்றன. ஆசைகள் ஒன்றுக்கொன்று முரண்படும்பொழுது,

சுய சந்தேக மனப்பாங்கு, நமது
மொத்த ஸத்வ உணர்வுநிலையையும்
பாழ்படுத்திவிடுகிறது.

நாம் குழப்பமடைந்து விடுகிறோம். நாம் ரஜஸில், அமைதியற்றதன்மையில் வீழ்ந்து விடுகிறோம். நாம் அமைதியற்று இருந்தோமானால், நாம் எல்லாவற்றையும் கைவிட்டு விடுவோம். நாம் தமஸில் விழுகிறோம்.

மனிதன் என்பவன் குழப்பம் நிறைந்தவன். குழப்பத்தைத்தான் கிருஷ்ணர் ரஜஸ் மற்றும் அமைதியற்றதன்மை என்று அழைக்கிறார். நாம் ரஜோ குணத்தில் இருக்கும்பொழுது அசாதாரணமான கோபத்துடனும், வன்முறைப்போக்குடனும் இருப்போம் என்கிறார், கிருஷ்ணர்.

ரஜோ குண மனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்வது எப்படி?

கேளுங்கள், உங்களுடைய குறைவுணர்வுகளைக் கையாள்வதற்கு மூன்று வழிகளே உள்ளன. ஒன்று, அவற்றை தரைவிரிப்புக்கு அடியில் தள்ளி மூடிவிடுவது. இரண்டாவது, அவற்றை குடிப்பழக்கத்தாலோ அல்லது வேறேதாவது கேளிக்கைகள் மூலமோ மறக்கமுயற்சிப்பது, மூன்றாவது, அவற்றை நிறைவுசெய்துவிட்டு, உங்களையே விடுவித்துக்கொள்வது.

நீங்கள் உங்கள் குறைவுணர்வுகளை விழிப்பற்ற மனத்திற்குள் தள்ளிவிட முயற்சிக்கும்பொழுது துரதிஷ்டவசமாக அவை ஆழமாகச்சென்று, உங்கள் விழிப்புணர்வுக்கு அருகில் சென்றுவிடும். விழிப்புணர்வுக்கு அருகில் வரும் எதுவும் மிகுந்த சக்திபெற்றுவிடும். ஆதனால்தான், நீங்கள் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு சிறு குறைவுணர்வுகூட ஒரு அபாயகரமான, சமநிலையற்ற ரஜோகுண மனப்பாங்குகளாக வெடிக்கிறது.

நீங்கள் விளைவுகளை எதிர்பார்க்காமல் அல்லது அவற்றைப் பற்றிய கவலையில்லாமல் செயல்களைச் செய்யும்பொழுது, ரஜோ குண மனப்பாங்குகள் பூர்ணத்வம் பெறுகின்றன. நீங்கள் ஸத்வத்தை நோக்கி நகர்வீர்கள்.

கேளுங்கள், நிறைவுணர்விற்காகவே
நிறைவுசெய்வது, உங்களை ஞான
அனுபவத்திற்கு அழைத்துச்செல்லும்.

ஆழ்ந்து கேளுங்கள், நிறைவுணர்விற்காகவே நிறைவுசெய்வது, உங்களை ஞான அனுபவத்திற்கு அழைத்துச்செல்லும்.

ஓதமஸை ஜெயித்தவர்களே

உண்மையான தைரியசாலிகள்

அடுத்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் தமஸ் பற்றிப் பேசுகிறார். அவர் அர்ஜுனனை நோக்கி, "ஓ, பரத புத்திரனே! தெரிந்துகொள்; இருளின்தன்மை உடைய தமஸ், அறியாமையிலிருந்துதான் பிறக்கிறது. எல்லா உயிரினங்களிடமும் இருக்கின்ற மாயை இது தான். முட்டாள்தனம், சோம்பல்தனம் மற்றும் உறக்கம் இவையே இந்த மனப்பாங்கின் விளைவுகள். இவையே கட்டுறுத்தப்பட்ட ஆத்மாவைப் பிணைக்கின்றன.

கேளுங்கள், உள்ளுணர்ச்சியால் தூண்டப்பட்டுச் செயல்படும் நிலை விலங்கு நிலை. பட்டறிவால் தூண்டப்பட்டுச் செயல்படும் நிலை மனித நிலை. உள்ளுணர்வால் தூண்டப்பட்டுச் செயல்படும் நிலை கடவுள் நிலை!

உள்ளுணர்ச்சி நிலை தமஸ் நிலையையும், பட்டறிவு நிலை ரஜஸ் நிலையையும், உள்ளுணர்வு கடவுள் நிலையையும் குறிக்கின்றன.

ஸத்வ நிலையில் நம்முடைய மனம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்; நாமும் தொடர்ந்து தீர்மானங்களை எடுப்போம். ஆனாலும் நாம் சோர்வடைவதில்லை. நாம் 24மணிநேரமும் சுறுசுறுப்பாகவும் அமைதியாகவும் இருக்க முடியும். இதைத்தான் நான் செயல்பாட்டில் செயலற்றதன்மை மற்றும் செயலற்றதன்மையில் செயல்படுதல் என்று அழைக்கின்றேன்.

நாம் ஸத்வ நிலையில் இருக்கும்பொழுதுதான், நாம் நமக்குள் மையம்கொள்வோம் என்று கிருஷ்ணர் சொல்கிறார். நம்முள் மையம் கொள்ளும்போது, நம்மைச் சுற்றி பல செயல்கள் நடந்தாலும், நாம் முற்றிலும் தளர்வாக இருப்போம்.

இவை அனைத்துமே நம்முடைய மூலமனப்பாங்குகள் அல்லது உயிர்ப்பதிவுகளைச் சார்ந்திருக்கின்றன. மூலமனப்பாங்குகளின் எண்ணிக்கையே நாம் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற இந்த மூன்று குணத்தில் எந்த குணத்தில் சிக்கியுள்ளோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. இந்த மூன்றுமே ஜ்ஞான நிலை அல்ல. ஜ்ஞான நிலை என்பது இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டது.

நாம் தமஸில் சிக்கியிருந்தால், ரஜஸை நோக்கிச்செல்ல வேண்டும். நாம், ரஜஸில் சிக்கியிருந்தால் ஸத்வத்தை நோக்கிச்செல்ல வேண்டும். நாம் ஸத்வத்தின் பிடியில் சிக்கியிருந்தோமென்றால், அது தன்னிச்சையாக நம்மை ஞானமடைதலை நோக்கி எடுத்து ச்செல்லும்.

தமஸ் என்பது தூக்கம் மற்றும் மன அழுத்தம் மட்டும் அல்ல. போதுமான அளவு பொறுப்பெடுக்காமல் இருப்பதும் தமஸ்தான். நீங்கள் பொறுப்பெடுக்க விரும்பாதபோதுதான் மனச்சலிப்பையும் களைப்பையும் பயத்தையும் வரவழைத்துக்கொள்கிறீர்கள்.

கேளுங்கள், தமஸை நிறைவுசெய்வதற்கான நுட்பம் இதுவே: ‘உங்கள் ஆத்மாவுடன் ஒருங்குவித்தலோடு இருங்கள், ஆத்மா களைப்பே அடைவதில்லை’ என்ற ஸத்யத்தை உள்வாங்கி, போது மான அளவு பொறுப்பெடுங்கள், தமஸை ஜெயித்துவிடுவீர்கள், ரஜஸை நோக்கிச் செல்வீர்கள்!

புலன்களைக் காத்தல் (14.9-14.12)

கிருஷ்ணர், மூன்று குணங்களைப் பற்றி மேலும் விவரிக்கிறார்.

ஓ பரதா! சில நேரங்களில் நல்ல குணங்களின் பாங்கு (ஸத்வ குணம்), ஆழமான உணர்ச்சி நிலையையும் (ரஜோ குணம்) மற்றும் அறியாமையையும் (தமோ குணம்) வீழ்த்திவிட்டு மேலெழும்புகிறது; சில நேரங்களில் ரஜோ குணம், ஸத்வ குண த்தையும் தமோ குணத்தையும் வீழ்த்திவிட்டு மேலெழும்புகிறது; சில நேரங்களில் அறியாமை, நல்ல குணங்களையும் ஆழமான உணர்ச்சி நிலையையும் வீழ்த்திவிட்டு மேலெழும்புகிறது. இந்த வகையில், ஒன்றை ஒன்று முந்துகின்ற போட்டி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது (14.10).

நாம் எல்லோரும் முழுமையாக ஸத்வ அல்லது ரஜஸ் அல்லது தமஸ் நிலைகளில் பிடிபடவில்லை. நாம் ஸத்வம், ரஜஸ், மற்றும் தமஸ் ஆகியவற்றிற்கு இடையில் ஊசலாடுகிறோம். நாம் இந்த எல்லையிலிருந்து அந்த எல்லைக்கும், அந்த எல்லையிலிருந்து இந்த எல்லைக்கும் சென்றுகொண்டிருக்கிறோம்.

கிருஷ்ணர் சொல்கிறார், “ஸர்வத்வாரேஷு தேஹேண்ஸ்மிந் ப்ரகாஶ உபஜாயதே (14.11)- உடலின் எல்லா வாயில்களும் அறிவாற்றலால் ஒளிரும்பொழுதுதான், ஸத்வ குணங்களின் வெளிப்பாட்டை உணரமுடியும்.” இது ஒரு நுட்பம்.

தகவல்கள் அல்லது செய்திகளைப் பெறும் நுழைவாயில்களையே உடலின் வாயில்கள் என்றழைக்கிறோம்; ‘கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தொடுஉணர்வு’ இந்த வாயில்கள் மூலமாகத்தான் நாம் செய்திகளை வெளியிலிருந்து பெறுகிறோம். நாம் இந்த ஐந்து வாயில்களையும் ஒளிர்கின்ற அறிவாற்றல் மூலமாகக் கவனமாகக் காக்க வேண்டும். நாம் இந்த நுழைவாயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அறிவாற்றலே பாதுகாப்பு அமைப்பு என்கிறார், கிருஷ்ணர்

கிருஷ்ணர், “நாம் 5 நுழைவாயில்களையும் அறிவாற்றல் என்னும் பாதுகாப்பு அமைப்பால் பாதுகாத்து, தொடர்ந்து நாம் ஆனந்தத்திலேயே குடியிருப்போமாக!” என்று சொல்கிறார்.

நாம் நம் புலன்களை ஸத்வ குணத்தைக் கொண்டு பாதுகாக்கும்பொழுது, நாம் எதிர்மறையான மூலமனப்பாங்குகளை நம் உள்-உணர்வுக்குள் அனுமதிப்பதில்லை. தயவுசெய்து, உங்களுக்குத் துன்பங்கள் தரக்கூடிய, உங்களுக்குள் சக்தியற்ற நிலையை உருவாக்கக்கூடிய குறைவுணர்வு எண்ணங்களை உங்கள் விழிப்புணர்வுக்குள் புகுத்தாதீர்கள்; தொடர்ந்து ஆனந்தத்தையும்

> ‘ஆத்மா களைப்பே அடைவதில்லை’
> என்ற ஸத்யத்தை உள்வாங்கி,
> போதுமான அளவு பொறுப்பெடுங்கள்,
> தமஸை ஜெயித்துவிடுவீர்கள்,

அமைதியையும் சக்தியையும் தரக்கூடிய நிறைவுணர்வு எண்ணங்களையே சேர்த்துக்கொண்டிருங்கள்.

வாழ்க்கையின் அர்த்தமே இறைத்தன்மையை உணர்வது... (14.13-14.17)

தமோ குணத்தை கிருஷ்ணர், அஞ்ஞானம், முட்டாள்தன்மை, மாயை, செயலற்றதன்மை மற்றும் இருண்டதன்மைபோன்ற வலிமையான வார்த்தைகளால் குறிப்பிட்டுச்சொல்கிறார்: .

ஒருவர் ரஜஸிலிருந்து தமஸு¿க்கு நழுவிச் செல்வது மிகவும் எளிது. பொதுவாகவே, நம்முடைய உண்மைதன்மையை அறியாதபொழுது பிறப்பதுதான் தமஸ்.

தமஸ் என்பது இருளின்தன்மை. இது எதிர்மறையானது. நாம், வெளிச்சத்தை உள்ளே எடுத்து வருவதன் மூலமே இருளை நீக்க முடியும். அதுபோலவே நாம் அறியாமையை வெளியேற்றுவதற்கு, பூர்ணத்வ உணர்வை உள்ளே எடுத்து வரவேண்டும்.

தமஸோ மா-ஜ்யோதிர்கமய அதாவது, "எனது அறியாமை என்னும் இருள் ஒளியினால் நீக்கப்படுவதாக!' என்று உபநிஷதம் கூறுகிறது.

ஜகத்குருவாகிய கிருஷ்ணருடைய ஒளியும் அறிவாற்றலும் உங்களுடைய இருள்தன்மையையும் தமோ குணத்தையும் சிதறச் செய்யட்டும்.

இந்த ஸ்லோகங்களில், இந்த மூன்று குணங்களான ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் நிலையில் ஒரு மனிதர் நிலைபெற்றிருக்கும்பொழுது மரணம் சம்பவித்தால் எங்கே செல்கிறார் என்பதைக் கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். ஸாத்விக நிலையில் உள்ள ஒரு மனிதர்

'மற்றவர்கள் உங்களிடமிருந்து
வேறானவர்களே' என்ற
குறைவுணர்வு மாயையை
விலக்குவதையே பூர்ணத்வம் என்கிட

ஞானியாகிறார்; தமஸ் நிலையில் உள்ள ஒரு மனிதர் கீழான வாழ்க்கையையே தேர்ந்தெடுக்கிறார்; ரஜோ நிலையிலுள்ள ஒரு மனிதர் பேராசையினால் துன்பத்தையே தொடர்ந்து அனுபவிக்கிறார்.

நம்முடைய உண்மையான இயல்பே தெய்விகம்தான். நாம் கடவுளுடன், பராசக்தி என்னும் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றியிருக்கிறோம். நாம் அதை உணர முடியும். ஆனால் வாழ்க்கை முழுவதும் நாம் பூர்ணத்வ உணர்விலிருந்து, ஆனந்தத்தின் மையத்திலிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நாம் முழுமையாக ஸத்வ நிலையில் திளைத்திருக்கும்பொழுது, நாம் விழிப்பு உணர்வுநிலையில் வாழ்கிறோம்; நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். நாம் எதனுடனும் பந்தப்படுவதில்லை. நாம் நம்மைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மற்றவர்களுக்காக வாழ ஆரம்பிப்போம்.

கிருஷ்ணர் சொல்கிறார், “ஸத்வ நிலையில் வாழும் ஒரு மனிதர், ஞானிகள் வாழும் உயர்ந்த உணர்வுநிலையை அடைகிறார். அவர் இறைத்தன்மையை உடையவராகிறார்.’’

நாம் இங்கிருந்து எங்கே செல்கிறோம்?

(14.18-14.20)

முக்திக்கான சாவியை கிருஷ்ணர் இங்கு வழங்குகிறார். முக்குணங்களையும் கடந்தவர்கள், இந்த குணங்கள் ஏற்படுத்தும் செயல்களைக் கடந்தவர்கள், மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்தவர்கள், பிணைப்புகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக, ஆனந்தத்தை அனுபவிப்பார்கள் - இது குருவிடமிருந்து வருகின்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்; இது ஒரு உத்திரவாதம்.

இந்த வார்த்தைகளே ஒரு சிறந்த நுட்பம்தான்!

முதல்படி : நம்முடைய ஒவ்வொரு செயலும், ஸத்வ, ரஜஸ், மற்றும் தமஸ் ஆகிய மூலமனப்பாங்குகள் ஏதோ ஒன்றிலிருந்து எழுகிறது.

இரண்டாவது படி : ஒரு குறிப்பிட்ட செயல் எந்த குணத்திலிருந்து, எந்த மூலமனப்பாங்கிலிருந்து எழுகின்றது என்று புரிந்துகொள்வதும், அந்த குணம் துல்லியமாக நமக்கு என்ன செய்கிறது என்று புரிந்துகொள்வதும் மற்றும் நம்மை சக்தியற்றவராக உணரச்செய்யும் எந்த குணம், எந்தப் புரிந்துணர்வு நமது அஹங்கார, மமகார, அந்யகார, ஸ்வ- அந்யகார அடையாளங்களைக் கட்டமைக்கிறது என்று புரிந்துகொள்வதும்தான் இரண்டாவது படி.

மூன்றாவதுபடி: அந்த குணத்தைப் பூர்ணத்வம் செய்வதும், உருவாக்கும் செயல்முறையில் நமது ஆற்றல்களைப் பயன்படுத்துவதும்தான். அதாவது அந்த மூலமனப்பாங்கினை நிறைவுசெய்து, உங்கள் எண்ணத்தை நிஜமாக்கும் ஸத்வ உணர்வை உருவாக்குவதுமே மூன்றாவதுபடி.

‘மற்றவர்கள் உங்களிடமிருந்து வேறானவர்களே’ என்ற குறைவுணர்வு மாயையை விலக்குவதையே பூர்ணத்வம் அல்லது நிறைவுசெய்தல் என்கிறேன். சோர்வடையாமல் தொடர்ந்து பூர்ணத்வம் செய்வது, மேலான நிலைகளை அடைவற்கான மேல்நிலை ஆன்மிக சாதனைகளுக்கான அடிப்படையை உருவாக்குகிறது.

பூர்ணத்வ விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே, உங்கள் கற்பனைகளிலிருந்து வெளிவர பூர்ணத்வமே உதவும் என்ற புரிதலும், அதுவே உங்கள் எண்ணங்களை நீங்கள் விரும்பியபடி நிஜமாக்குகிறது என்ற புரிதலும் உங்களுள் மலர்கிறது.

நாம் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் பாதிக்கப்படாமலும் பிணைக்கப்படாமலும் இருந்தால், நாம் ஸத்வத்திலிருந்து செயல்படுகிறோம்.

இங்கு கிருஷ்ணர் - ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா (14.18)-'நற்பண்புகளுடனே வாழ்பவர், படிப்படியாக மேன்மை அடைகிறார்' என்று உறுதியளிக்கிறார். இறுதியாக நாம் ஸத்வ குணத்தையும் கடந்து நிர்குண நிலைக்குள் நுழைகிறோம்.

குணங்களைக் கடந்துசெல்வது (14.21-14.25)

கிருஷ்ணர், மூன்று குணங்களையும் கடந்த ஒருவரது இயல்பையும், ஒருவர் மூன்று குணங்களின் பாதிப்பிலிருந்தும் விடுபட வேண்டுமானால், அதாவது த்ரிகுண ரஹிதனாக ஆவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் மிகத்தெளிவாக விளக்குகிறார்.

மூன்று குணங்களைக் கடந்த ஒருவர் அவற்றின் விளையாட்டால் பாதிக்கப்படமாட்டார். அவர் உணர்ச்சிகளின் விளையாட்டை கடந்தவராகிறார். என்ன நடந்தாலும் அது அவருக்கு சரியாகவே இருக்கும். வெற்றியும் தோல்வியும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். நண்பர்களும் எதிரிகளும் எந்த வித்தியாசத்தையும் அவரிடத்தில் ஏற்படுத்துவதில்லை. ஏழ்மையும் செல்வசெழிப்பும் அவரிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்த மாதிரியான முழுமையான பற்றற்றதன்மைக்கு ஒரு விஷயம் தேவைப்படுகிறது. அது, முழுமையான நம்பிக்கையே!

என்ன நிகழ்ந்தாலும், அது நடக்க வேண்டிய நிகழ்ச்சிதான் என்ற நம்பிக்கைகொள்ளும்பொழுது, எது நடந்தாலும், நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். நாம் முழுமையாக பற்றற்று இருப்போம். அதன்பிறகு எது நடந்தாலும் அது சரியாகவே இருக்கும். இப்படிப்பட்ட நம்பிக்கை, முழுமையான ஸரணாகதியிலிருந்து மட்டுமே ஏற்படும்.

இறைத்தன்மையின் வெளிப்பாடு

(14.26-14.27)

மூன்று குணங்களையும் இயல்புகளையும் கடந்த ஒரு நிலையே ப்ரஹ்மன், இறுதி பிரபஞ்ச விழிப்புணர்வுதன்மை, பூர்ணத்வ உணர்வு என்று சொல்லி கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். இந்த

குறைவுணர்வுகளின் மூலத்தை
கண்டுபிடித்து அவற்றை
நிறைவுசெய்துவிட வேண்டும்.

நிலையை பக்தியால் அடையுமாறு வலியுறுத்துகிறார். மேலும் அவர், ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா॒ஹம் (14.27)- தாமே ப்ரஹ்மன் என்றும், மாறாத ஆனந்தத்தின் 'மூலம்' என்றும் சொல்கிறார்.

கிருஷ்ணர், தனிமனிதரான வஸுதேவ கிருஷ்ணராக அல்லாமல் உயர்ந்த இறுதி சக்தியான பரப்ரஹ்ம கிருஷ்ணராகப் பேசுகிறார். அவர் விரிவடைந்த ப்ரஹ்ம விழிப்புணர்வு நிலையிலிருக்கிறார்; மூன்று குணங்களையும் கடந்து இருக்கிறார்; குணங்களின் மூலமும் அவரே.

நம்முடைய குரு யார் என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. நம்முடைய நம்பிக்கையே முக்கியமாகக் கருதப்படுகிறது. நம்முடைய ஸரணாகதி, நம்முடைய பூர்ணத்வநிலையையும் குண த்தையும் பொறுத்ததேதவிர, குருவினுடையநிலையை அல்ல.

நாம் பூர்ணத்வ உணர்விலிருந்து, ஒரு கல்லைச் ச ரணடைந்தால்கூட நாம் ஜீவன்முக்தி பெறலாம். இது ஸத்யம். நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் சரணடைவதுதான் மேலான ஸரணாகதி.

இதையே கிருஷ்ணர், மாம் ச யோண்வ்யபிசாரேண பக்தி யோகேன ஸேவதே (14.26)- எந்தச் சூழ்நிலையிலும் தோல்வியுறாத பக்தி என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட பக்தியைவிட அதிகமாக வேறொன்றும் வேண்டியதில்லை. அதுவே ஜீவன்முக்தியை அளிக்கும். அப்படிப்பட்ட பூர்ணத்வநிலை மட்டுமே நமக்கு விடுதலை அளிக்கும்.

நாம் முழுமையாகச் சரணடையும் எந்தவொரு மனிதரும் கிருஷ்ணரே, அதன் பிறகு நாம் கிருஷ்ணத்தன்மையில் வீழ்ந்துவிடுகிறோம்.

நாம் பரப்ரஹ்ம கிருஷ்ணரிடம், பிரபஞ்ச விழிப்புணர்விடம்,

flute