KAILASA Library/ஸ்ரீமத் பகவத்கீதை/அத்தியாயம்-15: புருஷோத்தம யோகம்Sign in
ஸ்ரீமத் பகவத்கீதை

அத்தியாயம்-15: புருஷோத்தம யோகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வளப்படுத்துதலை
உங்கள்
வாழ்க்கைமுறையாக்குவதற்கான
தீர்வு

கேள்வி கேட்கும்போதெல்லாம் நாம்
நம் கர்வத்தையும் வன்முறையையும்
காட்டுகிறோம்.
சந்தேகப்படும் போதெல்லாம்
நம் சிரத்தையான தேடுதலே
வட்கையையும்
குருவை உள்வாங்கிக்கொள்ளும்
தயார்நிலையையும்
வெளிப்படுத்துகிறோம்.
அர்ஜுனன், இப்போது கே
கள்விகேட்கும் மனநிலையைக்
கடந்தவராகவும்,
தமக்கு புருஷோத்தம

ஸ்லோகங்கள்

அத பஞ்சதஸோஉத்தியாய:

புருஷோத்தம யோக:

ஏ

ஸ்ரீபகவாந் உவாச
ஊர்த்வமூலமத: ஸாகமஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம் ந
சந்தாம்ஸி யஸ்ய பர்ணानि யஸ்தம் வேத ஸ வேதவித் நந 15.1

ஸ்ரீபகவான் சொன்னது 15.1 மேலே வேரும், கீழே கிளைகளும் பரப்பி வளரும் ஆலமரமானது அழியா வாழ்வெனும் மரத்திற்கு உருவகமாக இருக்கிறது. வேதங்களின் துதிப்பாடல்கள்தான் இலைகள் என்று சொல்லப்படுகிறது. இந்த அழியா மரத்தை அறிந்துகொள்ளும் ஒருவர் வேதங்களையும் அறிந்தவராகிறார்.

அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ரு'தாஸ்தஸ்ய ஸாகா
குணப்ரவ்ரு'த்தா விஷயப்ரவாலா: ந
அதஸ்ச மூலாந்யநுஸந்ததாநி
கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே நந 15.2

15.2 பூமிக்கு கீழேயும் மேலேயும் பரவியுள்ள இந்த மரத்தின் கிளைகள் மனிதனின் மூன்று குணங்களால் வலுவூட்டப்படுகின்றன. புலனின்ப பொருட்களே அதன் மொட்டுகள். கீழே செல்லும் வேர்கள் உலகில் செயல்களை நிகழ்த்துபவையாக உள்ளன.

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே
நாந்தோ ந சாதிர் ந ச ஸம்ப்ரதிஷ்டா ந
அஶ்வத்தமேநம் ஸுவிரூடமூலம்
அஸங்கஸஸ்த்ரேண த்ரு'டேந சித்த்வா நந 15.3

15.3 இந்த மரத்தின் உண்மையான உருவத்தைக் காண முடியாது. அது எங்கே முடிகிறது, எங்கே தொடங்குகிறது, எங்கே இருக்கிறது என்பதையும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை, பற்றற்றதன்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு ஒருவர் திடமான உறுதியோடு சாய்க்க வேண்டும்.

தத: பதம் தத் பரிமார்கிதவ்யம்
யஸ்மிங்கதா ந நிவர்தந்தி பூய: ந
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யத: ப்ரவ்ரு'த்தி: ப்ரஸ்ரு'தா புராணீ நந 15.4

15.4 ஆதியில் யாரிடம் இருந்து எல்லாச் செயல்களும் தொடங்கியதோ, ஒருமுறை சென்ற ஒருவர், பிறகு அங்கிருந்து திரும்பிவர முடியாத இடம் எதுவோ, அந்த இடத்தைத் தேடிச் சென்று, அந்த மகோன்னத இருப்புநிலயிடம் சரணடைய வேண்டும்.

நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா
அத்யாத்மநித்யா விநிவ்ரு'த்தகாமா: ந
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:க ஸம்ஜ்ஞைர்
கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத் நந 15.5

15.5 அகங்காரத்திலிருந்தும் தவறான நம்பிக்கையிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபட்டவர்கள், தனக்குள் வசிப்பவர்கள், காமத்தைக் கடந்தவர்கள், சுகதுக்கம் என்ற இருமையிலிருந்து விடுபட்டவர்கள், குழப்பம் இல்லாதவர்கள் மற்றும் அந்த மேலான புருஷரிடம் எவ்வாறு சரணடைய வேண்டும் என்று அறிந்தவர்கள்இவர்கள் அழியா ஞானத்தை அடைகின்றனர்.

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஶஶாங்கோ ந பாவக: ந
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம நந 15.6

15.6 என்னுடைய அந்த நித்யமான விழிப்புணர்வு நிலை சூரியனாலும் சந்திரனாலும் அல்லது அக்னியாலும் பிரகாசிப்பதல்ல. யார் அந்த வெளியை அடைகிறார்களோ, அவர்கள் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை.

மமைவாம்பஶோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந: ந
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ரு'திஸ்தாநி கர்ஷதி நந 15.7

15.7 இந்த லௌகீக உலகில் வாழும் கட்டுறு மனப்பாங்குடைய உயிரினங்கள், நித்தியமான என் இருப்பின் ஒரு பகுதியே. ப்ரக்ரு'தி-செயல்பாட்டுச் சக்தியிலுள்ள மனம் உட்பட ஆறு புலன்களாலும் அவை ஈர்க்கப்படுகின்றன.

ஶரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஶ்வர: ந
க்ரு'ஹீத்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தாநிவாஶயாத் நந 15.8

15.8 மலரிலுள்ள நறுமணத்தை காற்று எடுத்துச்செல்வதுபோல், இந்த உடல்-மன அமைப்புக்குள் குடிகொண்டிருக்கும் ஜீவாத்மா, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் செல்லும்போது, இவற்றை (ஆறு புலன்கள்) எடுத்துச்செல்கிறது.

ஶ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஶநம் ச ரஸநம் க்ராணமேவ ச ந
அதிஷ்டாய மநஶ்சாயம் விஷயாநுபஸேவதே நந 15.9

15.9 ஜீவாத்மாவானது, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் சென்று, காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் புதிய கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன் கூடிய புதிய உடலை எடுத்து, தன் புது மன அமைப்பை அனுபவிக்கிறது.

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜானம் வா குணான்விதம் ந
விமூடா நாநுபஶ்யந்தி பஶ்யந்தி ஜ்ஞானசக்ஷுஷ: நந 15.10

15.10 குணங்களுடன் கூடிய ஜீவாத்மாவானது எப்படி ஒரு உடலில் நுழைகிறது, அனுபவிக்கிறது, அவ்வுடலைத் துறந்து செல்கிறது என்பதை அறியாமையில் மூழ்கியிருக்கும் மூடர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஞானக் கண் பெற்றிருப்பவரே இதை அனைத்தையும் காண்கிறார்.

யதந்தோ யோகிநஶ்சைநம் பஶ்யந்த்யாத்மன்யவஸ்திதம் ந
யதந்தோண்யக்ரு'தாத்மாநோ நைநம் பஶ்யந்த்யசேதஸ: நந 15.11

15.11 ஆத்மாவைப் பற்றிய புரிதலுடைய யோகிகளால் மட்டுமே இவற்றையெல்லாம் தெளிவாகப் பார்க்க முடியும். ஆத்மாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இவற்றைப் புரிந்துகொள்ள இயலாது.

யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேண்கிலம் ந
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம் நந 15.12

15.12 சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளியும், சந்திரனிலிருந்து மற்றும் தீயிலிருந்து வெளிப்படும் பிரகாசமும் என்னிடமிருந்து பெறப்பட்டவையே.

காமாவிஶ்ய ச பூதானி தாராயம்யஹமோஜஸா ந
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: நந 15.13

15.13 பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் என் சக்தியால் தாங்குகிறேன். குளிர்ச்சியான நிலவாக ஆகி எல்லா செடிகொடிகளையும் நானே பேணிவளர்க்கிறேன்.

அஹம் வைச்வாநரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாஸ்ரித: ந
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம் நந 15.14

15.14 ஒவ்வொரு உயிருக்குள்ளும் செரிமானத் தீயாகவும், உட்செல்லும் மூச்சாகவும், வெளிவரும் மூச்சாகவும் இருந்து நான்கு வகை உணவுகளையும் செரிமானிக்கிறேன்.

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ரு'தி ஸந்நிவிஷ்டோ மத்த:
ஸ்ம்ரு'திர்ஜ்ஞானமபோஹநம் ச ந
வேதைஸ்ச்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்தக்ரு'த்வேதவிதேவ சாஹம் நந 15.15

15.15 நான் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறேன். நினைவும் அறிவும் அவற்றின் இழப்பும் என்னிலிருந்துதான் வெளிப்படுகின்றன. வேதங்களினால் அறியப்படும்பொருள் நானே. உண்மையில் வேதாந்தத்தை உருவாக்கியவனும் நானே, வேதங்களை அறிந்தவனும் நானே.

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்ச்சாக்ஷர ஏவ ச ந
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோண்க்ஷர உச்யதே நந 15.16

15.16 இந்த உலகில் அழியக்கூடியவை, அழியாதவை என்று இரண்டு வகையான விஷயங்கள் இருக்கின்றன. வாழும் உயிர் அனைத்தும் அழியக்கூடியவை. கூடஸ்தன் (ஆத்மா) அழியாதவன்.

உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ரு'த: ந
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: நந 15.17

15.17 இந்த இரண்டைத்தவிர, பரமாத்மா என்றழைக்கப்படும் புருஷோத்தமர் இருக்கிறார். மூன்று உலகங்களிலும் ஊடுருவி, அவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பவர் அவரே!

யஸ்மாத்க்ஷரமதீதோண்ஹமக்ஷராதபி சோத்தம: ந
அதோண்ஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம: நந 15.18

15.18 அழியக்கூடியவை மற்றும் அழிவற்றவைக்கெல்லாம் அப்பாற்பட்டவனாகவும் மேலானவனாகவும் நான் இருப்பதால், இந்த உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழ்பெற்றிருக்கிறேன்.

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ந
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத நந 15.19

15.19 ஓ, பரதவம்சத்தில் உதித்தவனே, எந்தவித சந்தேகமும்கொள்ளாமல் என்னை மேலானவனாக உணர்ந்த ஒருவன், எல்லாமறிந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் தன்னுடைய அத்துணை உணர்வையும்கொண்டு என்னை வழிபடுகிறான்.

இதி குஹ்யதமம் ஶாஸ்த்ரமிதமுக்தம் மயாநக ந
ஏதத்புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ரு'தக்ரு'த்யஶ்ச பாரத நந 15.20

15.20 இந்த மேலான போதனை என்னால் உபதேஸிக்கப்பட்டது. ஓ! பாவங்களற்றவனே! இதை உணர்பவர் ஞானியாகிறார். அவர் எதைச் செய்யவேண்டுமோ அதைச்செய்து முடித்தவராகிறார்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஸாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே புருஷோத்தமயோகோ நாம பஞ்சதஸோ ண்த்யாய: நந

ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய புருஷோத்தம யோகம் எனும் பெயருடைய பதினைந்தாவது அத்தியாயம்.

வளப்படுத்துதலை உங்கள் வாழ்க்கைமுறையாக்குவதற்கான தீர்வு

Illustration of Krishna and Arjuna on the chariot

பகவத்கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தில் கிருஷ்ணர் மட்டுமே பேசுகிறார். அர்ஜுனனின் உள்-உணர்வு அமைதியாக்கப்பட்டது. புருஷ எனப்படும் அர்ஜுனன் இப்போது உபநிஷத்தில் நிலைபெறுகிறார். அவர் புருஷோத்தமரை, ஸ்ரீகிருஷ்ணரைப் பிரதிபலிக்கிறார்.

இந்த அத்தியாயம் புருஷோத்தம யோகம் என்று பாரம்பரிய முறைப்படி பெயரிடப்பட்டுள்ளது. கிருஷ்ணர், தாம் யார் என்பதையும், தம்முடைய சக்தி என்ன என்பதையும், தாமே புருஷோத்தமன் - இருப்புகளிலேயே மேலான இருப்பு என்பதையும், தாம் இப்போது அர்ஜுனனிடம் என்ன பகிர்ந்துகொண்டிருக்கிறாரோ அது மிகவும் ஆழ்ந்த இரகசியம் என்பதையும் விளக்குகிறார்.

அர்ஜுனன், தம்முடைய இருப்புத்தன்மைக்குள் ஆழ்ந்துவிட்டார். அர்ஜுனன் இப்போது ஒரு புதிய ஆத்மா. அவரை இனிமேலும் அர்ஜுனன் என்று அழைக்க முடியாது. அவர் எல்லாவற்றிலும் ஊடுருவி பரவியிருக்கிற கிருஷ்ணர் மீதும், கிருஷ்ணருக்குள் இடம்பெற்றுள்ள அனைத்தின் மீதும் பக்தியை வெளிப்படுத்துகிறார். வாழ்வுசக்தியை வளப்படுத்துதலுடன் வெளிப்படுத்துகிறார். இப்பொழுதிலிருந்து அர்ஜுனன் செய்யும் ஒவ்வொன்றுமே தம்முடைய நீட்டிப்புக்களான மற்றவர்களை வளப்படுத்துவதாகவே இருக்கிறது.

பூர்ணாவதாரமான ஸ்ரீகிருஷ்ணரின் பிரபஞ்ச நாடகத்தில் மனித குலத்திற்கான உச்ச ஸத்யத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு காரணியாக மாறிவிடுகிறார்.

காரண சரீரத்திற்குள்ளான பயணம் (15.1-15.2)

கிருஷ்ணர், காரண ஸரீரத்தின் இரகசியத்தை வெளிப்படுத்துகிறார். அவர், காரண ஸரீரத்தை அஸ்வத்தம் - ஆலமரத்திற்கு ஒப்பிடுகிறார். மொத்தம் ஏழு அடுக்குகளின் தொகுப்பான நம் உடல்-மன- ஆன்மா அமைப்புப் பற்றி ஏற்கெனவே எட்டாவது அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறேன். இங்கு ஐந்தாவது அடுக்கான காரண ஸரீரத்தைப் பற்றிச் சற்று விரிவாக விளக்குகிறேன்.

காரண ஸரீரமே ஆலமரம், முக்குணங்களே கிளைகள், நமது செயல்களும், ஸ்தூல ஸரீரத்தில் இருக்கும் ஐம்புலன்களுமே வேர்கள், ஐம்புலன்களால் உள்வாங்கப்படும் உணர்ச்சிகளே ஆகாரம், நம்முடைய ஸம்ஸ்காரங்களும் மூலமனப்பாங்குகளுமே-பீஜ-விதை. நாம் ஒவ்வொரு இரவும், ஆழ்ந்த தூக்கத்தின்போது, இந்தக்

நீங்கள் ஒரு வார்த்தையைக்
கொடுத்துவிட்டால், அதை வாழ்ந்தே
தீர வேண்டும்.

காரண ஶரீரத்திற்குள் நுழைந்துதான், நம்முடைய உலகத்தை உருவாக்குவதற்கான ஸம்ஸ்காரங்களை எடுக்கிறோம்.

காரண ஶரீரம் என்ற மரத்திற்கு, நமது செயல்களும், ஸ்தூல ஶரீரத்தில் இருக்கும் ஐம்புலன்களுமே நீர் ஊற்றுகின்றன. காரண ஶரீரத்தில் இருக்கும் பீஜ ஸம்ஸ்காரங்கள் அந்நீரைப் பெற்று வளர்கின்றன.

ஐம்புலன் மூலமாக பெறும் நீரே மரத்தின்தன்மையைத் தீர்மானிக்கிறது. நல்ல நீரும் உரமும் கிடைத்தால் மரம் செழிப்பாக வளரும். அதன் இலைகள் பசுமையாக இருக்கும். விஷத்தை ஊற்றினால், மரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும் மெதுவாக மரம் இறந்தே விடும்.

கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், யஸ்தம் வேத ஸ வே வதவித் (15.1) - காரண ஶரீரத்தைக் கட்டமைத்திருக்கும் ஸம்ஸ்காரங்களும் மூலமனப்பாங்குகளும் ஐம்புலன்களின் விளைவே என்ற அறிவைப்பெற்றிருக்கிறாரோ, எவர் ஒருவர் இந்த மரத்தைப் பற்றி அறிந்திருந்திருக்கிறாரோ அவர் வேதங்களை அறிந்தவராகவும், வாழ்க்கையை வழிநடத்தும் ஆற்றலைப் பற்றிய அறிவைப்பெற்றவராகவும் இருக்கிறார் என்று சொல்கிறார்.

நமது வார்த்தைகளே வேத மந்த்ரங்கள். நமது உள்ளுணர்வில் தங்கியிருக்கும் வார்த்தைகளே நமது வாழ்க்கையின் அடிப்படை கட்டமைப்பை வடிவமைக்கின்றன.

நம்மால் வெளிப்படுத்தப்பட்ட, வெளிப்படுத்தப்படாத ஆகிய இரண்டு விதமான வார்த்தைகளுமே நம் காரண ஶரீரத்தில் மூலமனப்பாங்குகள், ஸம்ஸ்காரங்கள் என்னும் வங்கிக் கணக்கை வளர்க்கின்றன. அவையனைத்துமே வார்த்தைகளின் இருப்பிடமான மணிப்பூரக சக்கரத்திற்குள் ஆழமாகப் பதிந்துவிடும். நாம் அந்த வார்த்தைகளைக் கீழேபோட்டுவிட்டு, பூர்ணத்வம் செய்வது என்பது வாழ்க்கைக் கட்டமைப்பை முழுவதுமாக இடித்துவிட்டு பின்பு புதியதொரு கட்டமைப்பைக் கட்டுவது போலாகும்.

நீங்கள் ஒரு வார்த்தையைக் கொடுத்துவிட்டால், அதை வாழ்ந்தே தீர வேண்டும். வார்த்தை என்பது ஒரு மந்த்ரம்.

திட்டமிடாத சேவை, தெய்vicத்திற்கான பாதை

நாம் ஆசை, அச்சம், கவலை என்ற மூன்று அடுக்குகளைக் கடந்துசென்றாலும்கூட, காரண ஶரீரத்தில் வேரூன்றியிருக்கும் பீஜ -விதையான இந்த ஸம்ஸ்காரங்களும் மூலமனப்பாங்குகளும் நிறைவுசெய்யப்படவேண்டும். கிருஷ்ணர் இந்த பீஜ ஸம்ஸ்காரங்களை அழிப்பதற்கான நுட்பத்தைச் சொல்கிறார்.

நமது மொத்த செயல்களும் பலனைச் சார்ந்தே இருக்கின்றன. நாம் பேராசையாலும் பயத்தாலும் வழிநடத்தப்படாமலிருந்தால், நம்முடைய செயல்கள் பலனைச்சார்ந்ததாக இல்லாமலிருந்தால், எந்த பீஜ ஸம்ஸ்காரங்களும் மூலமனப்பாங்குகளும் உருவாகாது.

நீங்கள் எந்தவொரு சுயநல நோக்கமும் இல்லாமல் தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டிருந்தால், அது உங்களைக் காமச் சுழலிலிருந்து விடுபடுத்திவிடும். நீங்கள் உங்களுடைய சுயநல நோக்கத்திற்காக மற்றவர்களை வளப்படுத்தீர்களானால், மக்களை நீங்கள் எளிதில் கைவிட்டுவிடுவீர்கள்.

'வளப்படுத்துதலை' வளப்படுத்துவற்காகவே வளப்படுத்துதலைத் தொடர்ந்து செய்யுங்கள். அது உங்கள் இருப்புக்குள் அளவற்ற சக்தியைப் பாய்ச்சுகிறது. வளப்படுத்துதல் மூலமாகவே வாழ்வுசக்தி உங்களுக்குள் விரிவடைய, பொங்க ஆரம்பிக்கிறது.

ஆழ்ந்துகேளுங்கள்! வளப்படுத்தலுக்கான சரியான, முழு காரணத்தை இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒவ்வொருவருமே உங்களில் ஒருபாகமாக இருப்பதால், மற்றவர்களை வளப்படுத்துவது என்பது, உங்களின் ஒரு பாகத்தையே வளப்படுத்துகிறீர்கள் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

மற்றவர்களை வளப்படுத்துங்கள்! நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் உங்களுடைய நீட்சியே. ஆகவே, அவர்களை நீங்கள் வளப்படுத்தும்போது, உங்களுடைய பாகங்கள் வளப்படுத்தப்படுகின்றன. அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நிறையுணர்வில் நிலைபெற்று, வளப்படுத்தும் பாதையில் நடைபோட்டு, ஒருங்குவித்தலோடும் ஸ்ரத்தையுடனும் செயல்கள் நிகழவேண்டும் என்னும் பொறுப்பெடுப்பதுதான்.

பற்றின்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு மரத்தை வேரோடு சாய்த்தல் (15.3-15.4)

கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் காரண ஶரீரத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். அவர், இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கான துணிவைப் பெற்றிருந்தார்.

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ ந சாதீர் ந ச ஸம்ப்ரதிஷ்டா (15.3) - ஒருவராலும் இந்த மரத்தின் அமைப்பைப் புரிந்துகொள்ள முடியாது. எவராலும் அது எங்கே துவங்குகிறது, எங்கே முடிகிறது அல்லது அதன் மூல ஆதாரம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. இருந்தபோதிலும்- அஸங்கஶஸ்த்ரேண த்ரு’டேந சித்த்வா (15.3) - பற்றின்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு திடமான மனோபலத்துடன் ஒருவர் இந்த மரத்தை வெட்ட வேண்டும்.

ஒருவர், தம் காரண ஶரீரத்தில் என்ன சேர்த்துவைத்திருக்கிறார் என்பதை ஒருவராலும் பார்க்க முடியாது. இந்தக் காரண ஶரீரத்தில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் எல்லா ஸம்ஸ்காரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தங்களை வெளிப்படுத்துகின்றன. எல்லா ஸம்ஸ்காரங்களையும் பற்றின்மை என்ற உறுதியான தீர்மானத்தினால் வெட்டிவிட முடியும். உறுதியான தீர்மானத்தினாலும் புத்திசாலித்தனத்தாலும் முழு காரண ஶரீரத்தையும் நிறைவுசெய்ய முடியும்.

மூலமனப்பாங்குகள் ஆபத்தானவை. அவற்றிலிருந்து விடுபட, உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் புத்திசாலித்தனமும்

'வளப்படுத்துதலை'
வளப்படுத்துவதற்காகவே
வளப்படுத்துதலைத் தொடர்ந்து
செய்யுங்கள்.

பற்றின்மை என்ற உறுதியான தீர்மானமும்தான்.

கிருஷ்ணர் விவரிக்கிறார். அந்த மூலமனப்பாங்கு மரத்தை வெட்டிய பின், தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே (15.4)- திரும்ப வருதல் இல்லாத நித்யமான அமைதியிடம் சரணடைய வேண்டும். மொத்தப் பிரபஞ்சமும் நிலைபெற்றிருக்கும் இடம் இதுவே.

உடலை விட்டுச்செல்லும் ஆன்மா, இந்தக் காரண vஶரீரத்தைக் கடந்துதான், அடுத்த அடுக்கான ஆன்ம vஶரீரத்திற்குச் செல்கிறது. ஆன்மா இந்த அடுக்கைக் கடந்துசெல்லாதவரை, அதனால் மீண்டும் அந்த உடம்பிற்குள் வரமுடியும். நம்முடைய ஸம்ஸ்காரங்களுக்கும் உயிர்ப்பதிவுகளுக்கும் ஆசைகளுக்கும் இந்த ஆன்மாவை மீண்டும் உடலுக்குள் இழுக்கக் கூடிய சக்தி இருக்கிறது.

ஆனால், அந்த ஆன்மா இந்தக் காரண vஶரீரத்தைக் கடந்துவிட்டால், அது மீண்டும் அந்த உடலுக்குள் நுழைய முடியாது அது அடுத்த அடுக்கான விழிப்படைந்த உணர்வுநிலையான ஆன்ம vஶரீரத்திற்குத்தான் நகர்ந்தாக வேண்டும்.

‘பூர்ணத்வம் என்னும் உயர் விழிப்புணர்வு தியானத்தின் மூலமாக, விழிப்புணர்வopenற்ற பகுதிக்குள் விழிப்புணர்வைக்கொண்டு வருவதுதான், காரண vஶரீரத்தில் சேர்த்துவைக்கப்பட்ட ஸம்ஸ்காரங்களை அழிப்பதற்கு சரியான வழி.

துறத்தலால் மட்டுமே காமத்தைக் கடந்துவிட முடியாது!(15.5-15.6)

கிருஷ்ணர், அதே ஸத்யத்தை இப்போது மேலும் ஆழமாக விளக்குகிறார். "யாரெல்லாம் அகங்காரத்திலிருந்தும் தவறான நம்பிக்கைகளிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுதலைப்

'வளப்படுத்துதலை'
வளப்படுத்துவதற்காகவே
வளப்படுத்துதலைத் தொடர்ந்து
செய்யுங்கள்.

பெற்றவர்களோ, யாரெல்லாம் தனக்குள் வசிக்கிறார்களோ, யாரெல்லாம் காமத்தை நிறைவுசெய்தவர்களோ, சுகம் துக்கம் என்ற இருமையிலிருந்து சுதந்திரம் பெற்றவர்களோ, யாரெல்லாம் குழப்பமடையாதவர்களோ, பரமாத்மாவிடம் ஸரணாகதி அடைந்தவர்களோ, அவர்கள் எல்லோருமே -பதமவ்யயம் தத் (15.5) -அழிவில்லாத நித்ய விழிப்புநிலையை அடைகிறார்கள்," என்று சொல்கிறார்.

வார்த்தைகள் என்ன அழகாக உபயோகிக்கப்பட்டுள்ளன. இப்போது அவர், நிறைவுணர்வின் மூலம் காரண அடுக்கை மறுவடிவமைப்பதைப் பற்றிப் பேசுகிறார். 'காமத்தைத் துறந்தவர்கள்' என்று அவர் சொல்லவில்லை, காமத்தை நிறைவுசெய்தவர்கள் என்கிறார். ஏனென்றால் துறத்தலால் மட்டுமே காமத்தைக் கடந்துவிட முடியாது! அதனால்தான் கிருஷ்ணர் பொருத்தமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்.

அவர், விநிவ்ரு'த்தகாமா: (15.5) - 'யாரெல்லாம் காமத்தை நிறைவுசெய்தவர்களோ' என்று சொல்கிறார். நிவ்ரு'த்தி என்பது நீங்கள் கொண்டிருக்கும் பூர்ணত্ব உணர்வுநிலையைக் குறிக்கிறது, இந்த நிலையில் நாம் எதையும் சொந்தம் கொண்டாடுவதில்லை, எதையும் நமக்கென்று சேர்த்து வைத்துக்கொள்வதில்லை, எல்லாமே நம்முடைய விருப்பத்தின்படிதான் நிகழும். அது மேலும் பூர்ணత్వத்திற்கே கொண்டுசெல்லும்.

இதை முழுதாகப் புரிந்துகொண்டால், நீங்கள் ராஜாவைப்போல் வாழலாம். சாதாரண உலகியல்சார்ந்த ராஜாவாக அல்ல, ஞானமடைந்த ராஜாவாக, ராஜரிஷியாக!

காரண சரீரத்தைப் பூர்ணத்வம்கொண்டு வடிவமைுங்கள்

ஆழ்ந்து கேளுங்கள்! இரண்டே வார்த்தைகளில் என் போதனைகளின் சாரத்தின் சாரத்தைத் தருகிறேன் - பூர்ணத்வம், உணர்வை உருவாக்குதல் (இனிட்ட்ணீேனுணடிணின ச்ணஞீ குணீச்சிலினு இனுஞச்ணாஸுண).

உங்கள் ஆத்ம ஞானத்தைப் பயன்படுத்தி, உங்கள் விழிப்புணர்வு சக்தியைப் பயன்படுத்தி, உங்கள் உச்சபட்ச சாத்தியங்களைப் பயன்படுத்தி, பூர்ணத்வ உணர்வையும், உணர்வை உருவாக்குதலையும் நிஜமாக்குங்கள், அவற்றை வாழ்க்கைமுறையாக ஆக்குங்கள்.

கிருஷ்ணருடைய வார்த்தைகள் மந்த்ரங்களாகும்.

இந்த அத்தியாயத்தில் அவருடைய அதே வார்த்தைகள் பூர்ணத்வத்தையும் உணர்வை உருவாக்குதலையும் வடிவமைக்கும் நுட்பங்களாகின்றன. கிருஷ்ணர், தம்முடைய அந்த பூர்ணத்வம் மற்றும் உணர்வை உருவாக்குதலுக்கான விஞ்ஞானத்தைக் காரண ஶரீரத்தை வடிவமைக்கும் நுட்பங்களாகப் பயன்படுத்துகிறார்.

அர்ஜுனன், இந்த அத்தியாயத்தில் வாழ்வின் சாரத்தைப் பெறுகிறார். இந்த அத்தியாயத்தின் ஸ்லோகங்களே, உங்கள் காரண ஶரீரத்தைப் பூர்ணத்வம் மற்றும் உருவாக்குதலுடன் புனரமைப்பதில் அதிசயங்களை நிகழ்த்தும்.

இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்வது காரண ஶரீரத்தைச் சீரமைக்கும். குறிப்பாக நீங்கள் ஶரணாகதி மன நிலையில், குருவின் மீதான அலாதி மரியாதையுடன் உச்சாடனம் செய்யும்போது இது நேரடியாக காரண ஶரீரத்தைத் தொடுகிறது.

காமம் அன்பாக மலர நட்புடன் இருங்கள்

காமத்தை விடுவது என்பது ஒரு மனிதனுக்கு கடினமானது. உடலைப் பற்றிய உணர்வு இருக்கும்வரை காமம் இருக்கும். உடல் உணர்வுக்கு அப்பால் சென்றுவிட்ட ஒருவரே காமத்தைத் துறக்க முடியும்.

ஒரு ஞானமடைந்த குரு காமத்தைக் கடந்தவராகவும், பாலினத்தைக் கடந்தவராவும், அர்த்தநாரீஸ்வரர் - ஆண், பெண் இருவருக்குமான இயல்புகளை ஒருங்கே வெளிப்படுத்துபவராகவும் இருக்கிறார். ஞானத்திற்கான ஒரு முக்கியமான இயல்பு, பாலினத்தைக் கடந்திருப்பதுதான்.

கிருஷ்ணர் நேரடியானவர். அவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக மனதிற்கு இனிய வார்த்தைகளை மட்டுமே தருவதில் நம்பிக்கை இல்லாதவர். அவர் நேரடியான வார்த்தைகளைத் தருவதில் கண்டிப்பானவர்.

அவர் சொல்கிறார்-அத்யாத்மநித்யா விநிவ்ரு'த்தகாமா: (15.5) - காமத்தை நிறைவுசெய்வதன்மூலம், காமத்தைக் கடப்பதே, உயர் விழிப்புணர்வை உணர்வதற்கான முதல் முக்கியமான படி!

அன்பில் நட்புத்தன்மையைச் சேருங்கள். உங்களை நோக்கிய உறவுமுறையில் நட்புத்தன்மையைச் சேருங்கள். மற்றவர்களிடம் கொள்ளும் உறவுமுறையிலும் நட்புத்தன்மையைச் சேருங்கள். காமம் அன்பாக மாறும். உங்கள் இருப்பு, எப்போதும் நிலையான மேலான விழிப்புணர்வு வெளியில், நித்ய ஆனந்தத்தில் இருக்கும்!

கிருஷ்ணர் சொல்கிறார், அந்த நிலையான மேலான விழிப்புணர்வு வெளி, அதாவது என்னுடைய விழிப்புணர்வு நிலை, அது சூரியனாலோ, சந்திரனாலோ, அல்லது நெருப்பினாலோ பிரகாசிக்கப்படுவதில்லை. அந்த ‘வெளி’யில் நுழைபவர்கள் யாரும் மீண்டும் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை.

உடலின் மரணம், நிச்சயிக்கப்பட்ட ஒன்று! ஆனால் ஆன்மாவின் மரணம் சாத்தியமில்லாதது. ஆன்மா உயர் விழிப்புணர்வு நிலைகளுக்கு உயரும்பொழுது, அது மீண்டும் முன்பிறவியில் கடந்துவந்த மூலமனப்பாங்கிற்குத் திரும்பாது என்பதைக் கிருஷ்ணர் இங்குச் சுட்டிக் காட்டுகிறார்.

காமத்தை நிறைவுசெய்வதன்மூலம்,
காமத்தைக் கடப்பதே, உயர்
விழிப்புணர்வை உணர்வதற்கான முதல்

கிருஷ்ணர், நம் காரண ஸரீரத்தை, பூர்ணத்வ உணர்வைக்கொண்டு சீரமைப்பதற்காக, இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். இந்த வேத மந்திரங்கள் சிந்திப்பதற்கும் தியானிப்பதற்கும் உரியவை.

கட்டுறு மனப்பாங்கு (15.7-15.8)

ஜீவபூத: - ‘கட்டுறு மனப்பாங்குகொண்ட’ ஜீவன். கிருஷ்ணர் ‘கட்டுறு மனப்பாங்கு’ என்னும் புதிய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். மனிதனின் இயல்பு என்று நாம் நினைப்பவை எல்லாம் கட்டுறு மனப்பாங்கைத்தவிர, வேறொன்றுமில்லை. சரி தவறு, மரியாதை அவமரியாதை என நாம் பல வகைகளில் கட்டுறுத்தப்பட்டவர்களாக இருக்கிறோம். இவை எல்லாமே கட்டுறு மனப்பாங்குதான், எல்லாமே மூலமனப்பாங்குகள்தான்.

கிருஷ்ணர் சொல்கிறார், ‘அவர்கள் - மந: ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ரு’திஸ்தாநி கர்ஷதி (15.7) - மனம் உட்பட ஆறு புலன்களால் கவரப் பட்டிருக்கிறார்கள்’.

ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களுடன் சேர்த்து ஆறாவதாக மனத்தையும் சேர்த்து - ஷஷ்டாநீந்த்ரியாணி - ஆறு புலன்கள் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.

மனம் மட்டுமே புலன். புலன்கள் என்று சொல்லப்படும் மற்ற ஐந்து புலன்களும் அதன் அடிமைகளே! மனத்தைக் கையாள முடிந்தால், மற்ற ஐந்து புலன்களையும் கையாள முடியும்.

ஞானமடைதல் என்பது மூலமனப்பாங்குகளையும் ஸம்ஸ்காரங்களையும் நிறைவுசெய்வது; நம்முள் ஆழப்பதிந்துள்ள கட்டுறுமனப்பாங்கைக் கரைக்கும்போது, நாம் நம்முடைய உண்மையான தூய்மையான நிலைக்குத் திரும்புகிறோம்.

மனத்தைக் கையாள முடிந்தால், ஐந்து புலன்களையும் கையாள

இதனால்தான் ஞான நிலையை ஸமாதி என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்.

ஸம்ஸ்க்ரு’த வார்த்தை ஸமாதி என்பதற்குப் பூர்வீக நிலைக்கு திரும்புதல் என்று பொருள்.

வாயுர்கந்தாநிவாஸயாத் (15.8) - காற்று மணத்தை எடுத்துச்செல்வது போல், உடல்-மனத்தைத் தாங்கி இந்தப் பொருள்சார்ந்த உலகில் வாழும் ஆன்மா, ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்குச் செல்லும்பொழுது, இந்த ஆறு புலன்களையும் தன் கூடவே எடுத்துச்செல்கிறது.

காற்று எப்படி நறுமணத்தை எடுத்துச்செல்கிறதோ அதே போல், விழிப்புணர்வு நிலை ஸம்ஸ்காரங்களை, ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு எடுத்துச்செல்கிறது. கிருஷ்ணர், இவ்விதம் தொடர்ந்து நடக்கும் ஸம்ஸ்காரங்களின் விஷச் சுழற்சியை ஸம்ஸாரம் என்ற பிறப்பு, இறப்பு சக்கரம் என்று குறிப்பிடுகிறார்.

அந்த வாஸனாவை, துர்நாற்றமாகவோ அல்லது அருமையான ஒரு நறுமணமாகவோ மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

எல்லா சமூகக் கட்டுறு மனப்பாங்குகளையும் நிறைவுசெய்த ஒருவர், காரண vரீரத்தில் பதித்திருக்கும் மூலமனப்பாங்குகளைக் கரைத்துவிட்ட ஒருவர், ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு, ‘ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு’ச் செல்வதுபோல எளிதாகச் செல்கிறார்.

ஓநீங்களே உங்களின் சம்ஸ்காரங்கள் (15.9-15.10)

அதிஷ்டாய மநஸ்சாயம் (15.9) - உங்களுடைய காரண vரீரத்தில் பதிந்திருக்கும் மூலமனப்பாங்குகளின் அல்லது ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில்தான் உங்களுடைய உடலையே உருவாக்குகிறீர்கள் என்கிற இன்னொரு ரகசியத்தையும் கிருஷ்ணர் இங்கே வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய காரண ஸரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நம்முடைய புலன்களை நாம் உருவாக்குகிறோம். அதாவது, மன அமைப்பைப் பொறுத்தே மனிதர்கள் புலன்களைத் தேர்வுசெய்கிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இது, நாம் இன்னொரு உடல் எடுக்கும்போது மட்டும் நடப்பதல்ல. ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து நாம் வெளிவரும்போதும் நம்முடைய புலன்கள் மீண்டும் பிறக்கின்றன. அதனால், நம்முடைய மன அமைப்பினை மாற்றுவதாலேயே, சிறிது காலத்திலேயே நம்முடைய முகத்தை மாற்றிவிட முடியும்.

உடல் முழுதும் பரவியிருக்கிற புத்திசாலித்தனத்தைத்தான் 'மனம்' என்கிறோம்! நம் செல்களில் இருக்கும் புத்திசாலித்தனமும் இது தான். ஒவ்வொரு செல்லும் மரபுசார்ந்த புத்திசாலித்தனத்தைத் தன்னகத்தேகொண்டுள்ளது. இந்த உடல்-மன அமைப்பிற்குள், ஒவ்வொரு வினாடியும் ஆயிரமாயிரம் செல்கள் இறக்கின்றன, புதிதாய் ஆயிரமாயிரம் செல்கள் பிறக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இயற்கை அல்லது பிரபஞ்ச புத்திசாலித்தனத்தின் ஆணைப்படி, இதுவொரு தொடர் செயல்முறையாகவே நடக்கிறது.

ஆசை, அச்சம் என்ற வாசல்கள் வழியே நுழையாதீர்கள்

கிருஷ்ணர், உங்கள் காரண ஸரீரம் பூர்ணத்வத்தில் நிலைபெறும்வகையில், அதை மாற்றி வடிவமைக்கும் தியான மந்திரத்தைத் தொடர்ந்து வழங்குகிறார்.

நாம் தூக்கத்திலிருந்து விழித்தவுடன் எழும் முதல் எண்ணம், அன்றைய தினத்தை வளப்படுத்துவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

கிருஷ்ணர் சொல்கிறார், 'நம்முடைய உடலை ஆசையாலோ அச்சத்தாலோ பிடித்தோமானால், அந்த நாள் முழுவதும் ஆசை அல்லது அச்சம்சார்ந்த விஷயங்களையே ஈர்ப்போம்.

உடம்பிற்குள் நுழைய எத்தனையோ வாயில்கள் இருக்கின்றன. ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள். ஒரு ஆன்மீக எண்ணத்துடன் படுக்கையிலிருந்து எழுங்கள். அது உங்களுக்குள் நிறைவுணர்வைக் கொண்டுவரும்.

மொத்த பூர்ணத்வ விஞ்ஞானமும் உங்கள் முன்னே இருக்கிறது. கிருஷ்ணர் சொல்கிறார், “பஶ்யந்தி ஜ்ஞானசக்ஷுஷ: (15.10) -அறிவால் பயிற்றுவிக்கப்பட்டவர்களின் கண்கள் மட்டுமே, புத்திசாலித்தனமுடைய கண்களை உடையவர்களால் மட்டுமே இந்த அறிவியலின் ஸத்யத்தைப் பார்க்க முடியும், புரிந்துகொள்ள முடியும்! முட்டாள்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது!’’

முட்டாளாக இருப்பதோ அல்லது ஜ்ஞானசக்ஷுஷ: - புத்திசாலித் தனமான கண்களுடன் இருப்பதோ, நம் கையில்தான் இருக்கிறது.

காரண ஶரீரத்தையும் தாண்டிய பிறகு, கட்டுறு மனப்பாங்குகளிலிருந்து விடுபட்ட ஒரு வெளிக்குள் நுழைவீர்கள். அப்பொழுது நீங்கள் எல்லாக் கட்டுறு மனப்பாங்குகளிலிருந்தும் விடுபட்டிருப்பீர்கள்!

இதுவே பூர்ணத்வ உணர்வும் படைத்தலுமாகும் (கூடடிண் டிண் ணடநு ண்ணீச்ஞிநு ணினிஞா ஞிணிட்ணீநே)ணாடிணின ச்ணஞீ ஞிணூநுச்ணாடிணின!).

குரு, நம் மூலமனப்பாங்குகளை

அழிப்பவர் (15.11-15.14)

வெளிச்சம் என்பது விழிப்புணர்வு. வெளிச்சம் என்பது வாழ்வின் ஆதாரம். சூரியனின் ஒளியும் வெப்பமும் இல்லாமல் இப் பிரபஞ்ச வாழ்வு சாத்தியமற்றது என்ற உண்மை நமக்குத் தெரியும். ஒவ்வொரு பொருளும் உயிரும் சூரியனிடமிருந்து வெளிப்படும்

முட்டாளாக இருப்பதோ அல்லது
புத்திசாலித்தனமான கண்களுடன்
இருப்பதோ, நம் கையில்தான்

ஒளியிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் கிடைக்கும் சக்தியினை மையமாகக்கொண்டுதான் சுழல்கின்றன.

சூரியன், இருளைப் போக்குகின்ற சக்தியுங்கூட! கிருஷ்ணர், "இந்தப் பிரபஞ்சத்தை- சூரியனையும் சந்திரனையும், உயிர்களின் வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமான நெருப்பினையும் படைத்தது நானே!" என்று சொல்வது மட்டுமல்லாமல், இருளைப் போக்குவதும் நானே என்று பிரகடனப்படுத்துகிறார். கிருஷ்ணர், இருளை அழிக்கும் ஒரு குரு. சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பைப்போன்று கிருஷ்ணர் ஒரு தலைசிறந்த குருவாக இருந்து, இருளை அழித்து, நம்முடைய இயல்புநிலையான பூர்ணத்வத்தை நோக்கி அழைத்துச்செல்கிறார்.

சந்திரன் ஒளிவீசி பிரகாசிப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் அது அவ்வொளியை சூரியனிடமிருந்தே பெறுகிறது என்பதையும், சந்திரனுக்கென ஒளி கிடையாது என்பதையும் மறந்துவிடுகிறீர்கள். அதைப்போலவே உங்கள் மனதிற்கும் தன் சொந்த சக்தி கிடையாது. நீங்கள் உங்கள் மனத்தைப் பார்க்கத் துவங்கியதிலிருந்தே, அது, விழிப்புணர்வைத்தான் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான், நீங்கள் உங்கள் மனத்தை ஒரு தனிப்பட்ட சக்தியாக உணரத் தொடங்கி விட்டீர்கள். ஆனால், அது உண்மையல்ல. நீங்கள் உங்களுக்குள் சுமந்துகொண்டிருக்கும் மனப்பாங்குகளுக்கென்று எந்தத் தனிப்பட்ட சக்தியும், வலிமையும் கிடையாது.

கிருஷ்ணர், இருளின் விளைவுகளான ஸம்ஸ்காரங்களை, நம் மூலமனப்பாங்குகளை அழிப்பவர். ஒளியினுடைய இருப்பு, இருளைப் போக்கிவிடுகிறது. குருவின் ஸாந்நித்யம், ஸம்ஸ்காரங்களை அழித்துவிடுகிறது.

கிருஷ்ணர், தம்முடைய ஸாந்நித்யம் ஊடுருவி பரவியிருக்கும் விஷயங்களை மேலும் விவரிக்கிறார். ஒளியாகவும் வெப்பமாகவும் இருந்து இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து ஜீவன்களையும்

எல்லா உயிரினங்களும்
அழியக்கூடியதே. ஆனால்
அவை அழியாத சக்தியில்

பேணிக்காப்பவராகவும் தாமே இருப்பதாகச் சொல்கிறார்.

தாமே ப்ரஹ்மமாக இருப்பதாகவும், தம்முடைய வெளிப்பாடுகளான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றின் மூலமாக இவ்வுலகில் செடிகளையும் மரங்களையும் வாழவைப்பதாகவும், அதன் மூலம் உருவாகும் காய்களையும் பழங்களையும்கொண்டு மனிதர்களை வாழச்செய்வதாகவும் கூறுகிறார்.

அழியக்கூடிய மற்றும் அழிவில்லாத புருஷசக்தி (15.15-15.16)

கிருஷ்ணர் அர்ஜுனனை, இந்தப் படைப்பின் ஆதார சக்தியான புருஷ பற்றிய ஆழமான புரிதலுக்குள் அழைத்துச்செல்கிறார். புருஷ என்பது அங்கும் இங்கும் நகராத, செயல்படாத ஒரு சக்தி. ப்ரக்ரு’தி என்பது இயங்குகின்ற உலகியல் சக்தி என்று ஸாங்க்ய தத்துவம் சொல்கிறது.

கிருஷ்ணர், இந்த ஸாங்க்ய தத்துவத்தையும் தாண்டிச் செல்கிறார். மூல சக்தியான புருஷ என்பது இந்த மொத்தப்பிரபஞ்சமும் இயங்குவதற்குப் பின்னணியில் இருக்கும் அடிப்படை விதி. புருஷ என்பது இரண்டு அடுக்காக இருக்கிறது என்கிறார். ஒன்று, அழியக்கூடியது; மற்றொன்று, அழிவில்லாதது.

புருஷனின் அழியக்கூடிய சக்தி, உடல்-மன சக்தியாக அனைத்து உயிர்களுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது. இதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட, எல்லைக்குட்பட்ட வாழ்நாளே உள்ளது. அவர் சொல்கிறார், எல்லா உயிரினங்களும் அழியக்கூடியது தான். ஆனால் அவை எல்லாம் அழியாத சக்தியில் நிலைகொண்டிருக்கின்றன என்கிறார்.

புருஷவின் அழிவற்ற அம்சமான கூடஸ்த என்னும் சக்தியே நம்முள் என்றும் அழியாமல் இருக்கும் ஆன்ம சக்தி. அக்ஷரஒருபோதும் அழிக்க முடியாத, என்றென்றும் தொடர்ந்திருக்கும் ஆத்மா!

எல்லையற்ற சக்தியும் புத்தியும்கொண்டிருக்கும் நிலையே அத்வைதம்! (15.17-15.20)

கிருஷ்ணர் சொல்கிறார், “புருஷனின் இந்த இரண்டு அம்சங்களான அழியக்கூடிய உடல்-மன அமைப்பு மற்றும் அழியாத ஆன்ம சக்தியையும் தாண்டி, புருஷ என்ற ஒரு மேலான சக்தியும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தைத் தொடர்ந்து என்றும் இயக்கிக்கொண்டிருக்கும் அந்த மேலான புருஷ சக்தி-புருஷோத்தமன்- நானே!”

லோகத்ரயமாவிஶ்ய பி_ப_ர்த்யவ்யய ஈஶ்வர: (15.17) - புருஷோத்தம என்ற சக்தியே மூன்று உலகங்களிலும் ஊடுருவி, அவற்றைத் தாங்கிக்கொண்டிருக்கிறது! இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் அந்தச் சக்தி அழிவற்றது.

அவர் பரப்ரஹ்ம கிருஷ்ணரான, ஈஶ்வரனைப் பற்றிப் பேசுகிறார். அவரே ஸகுணமாகவும் நிர்குணமாகவும் இருக்கிறார். அழிவற்ற ஆன்மாவும், அழியக்கூடிய உடல்-மன அமைப்பும் சங்கமிக்கும் ப்ரஹ்மம் அவரே.

இந்தப் பூமியில் வாழும் அறுநூறு கோடி மனிதர்களும் மற்றும் எண்ணிலடங்கா உயிரினங்களும் மற்ற கிரகங்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான, கோடிக்கணக்கான உயிர்வகைகளும் ப்ரஹ்மமான அவருக்குள்ளேயே ச ங்கமிக்கின்றன. அந்தப் புருஷோத்தமன், பரப்ரஹ்ம கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்!

இப்போது, கிருஷ்ணர், பிரபஞ்ச கூட்டுவிழிப்புணர்வாக விளங்கும் தம்முடைய உண்மையான பிரதிநிதித்துவத்தைப் பற்றிய உயர் ஸத்யங்களை அர்ஜுனன் முன்வைக்கிறார்:

நாம் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. இந்த மொத்தப் பிரபஞ்சத்துடன், நாம் இசைந்து நடக்கும்போது, பிரபஞ்சம் நமக்கு நண்பனாகிறது. நாம் எப்போது பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்து, பிரபஞ்சத்திற்கு எதிராக நடக்க ஆரம்பிக்கிறோமோ,

அப்போது பிரபஞ்சம் நமக்கு எதிரியாக நடிக்க ஆரம்பிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்சம் இங்கு நம்மைக் கொல்வதற்காகவோ, அழிப்பதற்காகவோ இல்லை.

கூட்டு விழிப்புணர்விற்குள் நாம் கரையும்போது, நமக்குள் நாம் புதுப்புது பரிமாணங்களையும் சாத்தியங்களையும் உயிர்ப்பிப்போம்.

வாழ்க்கை என்பது உயிருள்ள ஜீவன்களுக்கு மட்டும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று கூறிவிட முடியாது, வாழ்க்கை, எல்லாவற்றுக்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எல்லாவற்றுடனும் பூர்ணத்வம் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.

நான் உங்களுக்கு சொல்கிறேன், பூர்ணத்வ நிலையே உங்களை வாழ்வதற்குத் தயாராக்கும் வழிமுறை. உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றுடனும் பூர்ணத்வம் செய்யும்போது, நீங்கள் அத்வைத உணர்வை அனுபவமாகப் பெறுவீர்கள்.

ஒவ்வொருவரும் எல்லையற்ற சக்தியும் புத்தியும்கொண்டிருக்கும் நிலையே அத்வைதம்!

கிருஷ்ணர், 'நானே ப்ரஹ்மம், புருஷோத்தமன் என்று எந்தவொரு சந்தேகமுமின்றி அறிந்த ஒருவர், எல்லாவற்றையும் அறிந்தவராகவும், என்னையே அவருடைய முழு இருப்புடனும் தொழுபவராகவும் இருக்கிறார் (15.19)' என்கிறார்.

மாயையில் சிக்குண்டவர்கள் மட்டுமே, புருஷன் தனிமனித இருப்பு, அழிவற்றது அழியக்கூடியது எனப் பிரித்து வேற்றுமைகளைக் கற்பித்துக்கூறுவார்கள். இவ்விரண்டுமாகவும் அவற்றுக்கும் அப்பாற்பட்டவராகவும் திகழும் புருஷோத்தமனைப் பற்றி அறிந்துகொள்ளும் ஒருவர், அத்வைத உணர்வில் கலந்துவிடுகிறார்.

இவ்வாறு நான் சொல்லும்போது உங்களுள் எழும் கேள்வி,

கூட்டு விழிப்புணர்விற்குள் நாம்
கரையும்போது, நமக்குள் நாம்
புதுப்புது பரிமாணங்களையும்
சாத்தியங்களையும் உயிர்ப்பிப்போம்.

புருஷோத்தமனின் ஒரு பாகமாகவே என்றென்றும் இருக்கும் ஒருவர், எப்படி மீண்டும் அவரைச் சென்றடைய முடியும்? அவருள் எப்படி கலக்க முடியும்? என்பதாகத்தான் இருக்கும்.

இதற்கான பதில்: நீங்கள் அவரை ஒருபொழுதும் அடைய முடியாது, அவருடனான உங்களுடைய ஒருமைத்துவத்தை, அவரின் ஒரு பாகம்தான் நீங்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை மட்டுமே அடைய முடியும்.

ஜகத்குருவான ஸ்ரீகிருஷ்ணரின் மேலான போதனை, உபதேசம் இதுவே!

உங்களுள், நித்யானந்தோஹம் - நானே நித்யானந்தர் என்னும் அனுபவம் நிகழும்வரை, குருவானவர் ஓய்வதில்லை. நீ ங்கள் சரணடைந்து, உங்கள் உணர்வின்மீது செயல்பட அவரை அனுமதியுங்கள்.

பிரபஞ்ச அறிவாக இருக்கின்ற, மிகச்சிறந்த சக்தியாகிய புருஷோத்தம கிருஷ்ணரிடம், எல்லையற்ற விழிப்புணர்வு அனுபவத்தையும், ஞானக் கண்களையும் தந்தருளுமாறும், நித்யானந்தத்தில் நி லை பெ ற அ ரு ளு மா று ம்

Krishna's hands playing the flute

வேண்டிக்கொள்வோம்.