அத்தியாயம்-16: தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நீங்கள் ஜீவன்முக்தராவதற்கான தீர்வு
இயற்கையிலேயே
மனிதர்கள் பிறக்கும் பொழுது
தங்களுக்குள்
தெய்விகத்தன்மையுடன்தான்
பிறக்கிறார்கள்.
அவர்கள் பாவிகள் அல்ல!
ஆனால் இந்த உலகம்
ஏற்படுத்துகின்ற
கட்டுறு மனப்பாங்கு
அவர்களை
அசுரர்களாக்கிவிடுகின்றன.
எப்படி நாம் திரும்பவும்
தெய்விகத்தன்மையுடையவர்களாக
மாறுவது
ஸ்லோகங்கள்
அத ஷோடஶோSத்யாய:
தைவாஸுரஸம்பத்விபாக யோக:
ஏ
ஶ்ரீபகவாந் உவாச
அப4யம் ஸத்த்வஸம்ஶுத்திர்ஜ்ஞாநயோக3வ்யவஸ்தி2தி:
தா3நம் த3மஶ்ச யஜ்ஞஶ்ச ஸ்வாத்4யாயஸ்தப ஆர்ஜவம் 16.1
அஹிம்ஸா ஸத்யமக்ரோத4ஸ்த்யாக: ஶாந்திரபைஶுநம்
த3யா பூ4தேஷ்வலோலுப்த்வம் யார்த3வம் ஹ்ரீரசாபலம் 16.2
தேஜ: க்ஷமா த்4ரு'தி: ஶௌசமத்3ரோஹோ நாதிமாநிதா
ப4வந்தி ஸம்பத3ம் தைவீமபி4ஜாதஸ்ய பா4ரத 16.3
ஶ்ரீபகவான் சொன்னது
16.1-3 ஓ பரதக்குலத் தோன்றலே, அஞ்சாமை, உணர்வுத்தூய்மை, ஆன்மீக ஞானத்தை வளப்படுத்திக் கொள்ளுதல், ஈகை, இருத்தலில் மையங்கொள்ளுதல், யாகம், அறிவைச் சேகரித்தல், தவம், எளிமை;
அஹிம்ஸை, ஸத்யம், சினத்திலிருந்து விடுபடுதல், துறவுநிலை, அமைதி, குறை காண்பதிலிருந்து விடுபடுதல், அனைத்து உயிரினங்களின் மீது கருணை, பிறர்பொருள் விரும்பாமை, கனிவு, நாணம், உறுதியாக இருத்தல்;
தைரியம், மன்னிக்கும் மனப்பாங்கு, மன வலிமை, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை போன்ற குணங்கள் தெய்வீக சம்பத்துடன் பிறந்தவனின் இயல்புகளாகும்.
தம்போ தர்போண்டிமாநஸ்ச்ச க்ரோத: பாருஷ்யமேவ ச ந
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம் நந
16.4 ஓ ப்ரீதாவின் மகனே, பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், இரக்கமற்றதன்மை மற்றும் அறியாமை - இவை அசுரத்தன்மையோடு பிறந்திருப்பவர்களின் குணங்களாக இருக்கின்றன.
தைவீ ஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா ந
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோண்ஸி பாண்டவ நந
16.5 தெய்வீக இயல்புகளே ஜீவன்முக்திக்கு சாதகமாக அமையும்; அசுர இயல்புகள் பந்தத்திற்குத்தான் வழிவகுக்கும். பாண்டவா, கவலைப்படாதே, நீ தெய்வீக குணங்களுடன் தான் பிறந்திருக்கிறாய்.
த்வௌ பூதஸர்கௌ லோகேண்ஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச ந
தைவோ விஸ்தரச: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ரு'ணு நந
16.6 பார்த்தா, இந்த உலகில் இரண்டு வகையான ஜீவன்கள் படைக்கப்பட்டுள்ளனர். ஒன்று தேவர்கள், மற்றொன்று அசுரர்கள். முன்பே உன்னிடம் தெய்வீக குணங்களைப் பற்றி மிக விரிவாக விளக்கி இருக்கின்றேன். இப்போது அசுர குணங்களைப் பற்றியும் சொல்லி விட்டேன். அதனால் இவற்றை நீ ஆழ்ந்து புரிந்துகொண்டு, உன் வாழ்க்கையை ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வாயாக.
ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் ச ஜநா ந விதுராஸுரா: ந
ந பௌாசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே நந
16.7 அசுர குணத்தோடு வாழ்பவர்களுக்கு அடிமைத்தனத்திற்கும், சுதந்திரத்தன்மைக்கும் வித்தியாசம் தெரியாது. மேலும் அவர்களுக்கு தூய்மையைப் பற்றியும் தெரியாது; நல்லொழுக்கமும் உண்மையும் அவர்களிடம் இருக்காது.
அஸத்யமப்ரதிஷ்ட₂ம் தே ஜக³தா³ஹுரநீஶ்வரம் ந
அபரஸ்பரஸம்பூ⁴தம் கிமன்யத்காமஹைதுகம் நந 16.8
16.8 அசுர குணம் உடைய மனிதர்கள், இந்த உலகம் பொய்யானது, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கிற சக்தி என்றோ அல்லது அறிவாற்றல் என்றோ ஒன்று இல்லை என்றும் இந்த முழுப்படைப்பும் சிற்றின்பத்தாலும் ஆசைகளினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும் நினைக்கிறார்கள்.
ஏதாம் த்³ருʼஷ்டிமவஷ்டப்⁴ய நஷ்டாத்மாநோண்டல்பபு³த்³தய: ந
ப்ரப⁴வந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜக³தோண்டஹிதா: நந 16.9
16.9 படைப்பைப் பற்றிய இவ்வுலகாயதக் கருத்தைக் கொண்டவர்கள், குறைந்த பட்டறிவுடன் கூடிய தாழ்ந்த ஆன்மாக்கள், தங்களையே தொலைத்தவர்கள், கொடூரமான செயல்களை செய்பவர்கள் இவர்கள் உலகத்தின் அழிவிற்கான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
காமமாஶ்ரித்ய து³ஷ்பூரம் த³ம்ப⁴மாநமதாந்விதா: ந
மோஹாத்³க்³ருʼஹீத்வாஸத்³க்³ராஹாந் ப்ரவர்தந்தேண்டஶுசிவ்ரதா: நந
16.10
16.10 பேராசை, கபடத்தன்மை, தற்பெருமை, அகந்தை ஆகிய குணங்களால் பிடிக்கப்பட்டு, மதிமயக்கத்தால் தவறான அபிப்ராயங்களைப் பிடிவாதமாய்ப் பிடித்துக்கொண்டு, நிலையற்ற பொருட்களுக்காக தூய்மையற்ற நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்.
சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஶ்ரிதா: ந
காமோபபோ⁴க³பரமா ஏதாவதி³தி நிஶ்சிதா: நந 16.11
ஆஶாபாஶஶதைர்பத்³தா⁴: காமக்ரோத⁴பராயணா: ந
ஈஹந்தே காமபோ⁴கார்த²மந்யாயேநார்த²ஸஞ்சயாந் நந 16.12
16.11,12 நிறைவேறாத எதிர்பார்ப்புகளுடன் சாகும்வரை வருந்திக்கொண்டும், புலனின்பங்களையே உயர்ந்த இலக்காகக் கருதி, அவற்றைப் பூர்த்திசெய்வதைத்வீர வேறொரு குறிக்கோளே இல்லையென்று தீர்மானித்துக்கொண்டும், நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் பிணைக்கப்பட்டும், ஆசை வெறுப்பிற்கு ஆட்பட்டும் இருப்பவர்கள் புலனின்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நீதிக்குப் புறம்பாகச் செல்வத்தையடைய முயலுகின்றனர்.
இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம் ந
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம் நந 16.13
16.13 இன்று இது என்னால் பெறப்பட்டது. நான் இந்த ஆசையைப் பூர்த்திசெய்வேன். எனக்கு இவ்வளவு செல்வம் இருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிக செல்வம் அடைவேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அஸௌ மயா ஹத: ஶத்ருர்ஹநிஷ்யே சாபராநபி ந
ஈஶ்வரோSஹமஹம் போகீ ஸித்தோSஹம் பலவாந்ஸுகீ நந
16.14
16.14 அந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான், நான் மற்றவர்களையும் கொல்வேன். நானே கடவுள். நான் தான் அனுபவிப்பவன். நான் வெற்றியாளன், சக்திமிக்கவன், சந்தோஷமாய்ருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.
ஆட்யோSபிஜநவாநஸ்மி கோSந்யோSஸ்தி ஸத்ரு'ஶோ மயா
ந
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: நந
16.15
அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ரு'தா: ந
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேSஶுசௌ நந 16.16
16.15,16 நான் செல்வந்தன், நல்ல உயர் குடும்பத்தில் பிறந்தவன். எனக்குச் சமமானவர் யார்? நான் யாகங்கள் செய்வேன், தர்மம் செய் வன், மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற இவ்வாறான அறியாமையினால் தடுமாற்றமடைந்தவர்களாய் பல எதிர்பார்ப்புகளால் குழப்பமடைந்து, மாயை எனும் வலையில் பிடிபட்டு, புலனின்பங்களில் ஆழமாக சிக்கி, நரகத்தில் வீழ்கின்றனர்.
ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா: ந
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம் நந 16.17
16.17 தற்பெருமையுடையார், பணிவிலார், செல்வத்தினால் மதி மயங்கியோர், தவறான அஹங்காரம்கொண்டோர்- இவர்கள் மேலோட்டமாக பெயருக்காகத் யாகங்களைச் செய்கிறார்கள். அவர்கள் வேத விதிமுறைகளையோ, நம்பிக்கைகளையோ பின்பற்றுவதில்லை.
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா: ந
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோSப்யஸூயகா : நந 16.18
16.18 அசுரத்தன்மையுள்ள மனிதர், அஹங்காரம், அதிகாரம், தற்பெருமை, காமம், மற்றும் கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, மேலான தெய்வத்தின் மேல் பொறாமைகொள்கிறார். தன் தேகத்திலும், பிறர் தேகத்திலுமுள்ள தெய்வத்தை நிந்தனை செய்கிறார்.
தாநஹம் த்விஷத: க்ரூராம்ஸம்ஸாரேஷு நராதமாந் ந
க்ஷிபாம்யஜஸ்ரமஸுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு நந 16.19
16.19 கடவுளிடம் பொறாமைகொண்டவர்களையும், கருணையில்லாதவர்களையும், கீழான குணத்தவர்களையும் நான் இந்தப் பொருள்சார் உலகில் மீண்டும் மீண்டும் அசுரத்தன்மையுள்ள பிறவிகளாகத் பிறப்பெடுக்க வைக்கின்றேன்.
ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி ந
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம் நந 16.20
16.20 குந்தீ மைந்தா! இந்த மூடர்கள், மீண்டும் மீண்டும் அசுரர்களுக்கு இடையில் பிறப்பெடுப்பார்கள். என்னை அடையாமல் அவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க வாழ்க்கையில் மூழ்குகிறார்கள்.
த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஶநமாத்மந: ந
காம: க்ரோதஸ்ததா லோப॒ஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் நந
16.21
16.21 காமம், கோபம் மற்றும் பேராசை இம்மூன்றும் நரகத்திற்கு அழைத்துச்செல்லும் வாயில்கள். அவை ஜீவனைத் தாழ்ந்த நிலையில் ஆழ்த்திவிடும் தன்மையுடையனவாதலால, இந்த மூன்றையும் கைவிட வேண்டும்.
ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர: ந
ஆசரத்யாத்மந: ஶ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம் நந 16.22
16.22 குந்தியின் மைந்தனே, இந்த மூன்று நரக வாசல்களிலிருந்து தப்பியவன், தன் ஜீவனுக்கு பலன் தரும் விதத்தில் நடந்து, மிக உயர்ந்த நிலையை யடைகிறான்.
ய: ஶாஸ்த்ரவிதிமுத்ஸ்ரு'ஜ்ய வர்ததே காமகாரத: ந
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் நந 16.23
16.23 ஆனால் யாரொருவன் வேதசாரங்களை உள்வாங்க மறுத்து, தன்னுடைய இயல்பான உணர்ச்சிகளுக்கேற்றவாறு செயல்படுகின்றானோ, அவன் பூர்ணத்துவத்தையும், ஆனந்தத்தையும், உயர்ந்த நிலையையும் அடைவதில்லை.
தஸ்மாச்சா॒ஸ்த்ரம் ப்ராமணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ ந
ஜ்ஞாத்வா ஶாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி நந
16.24
16.24 ஒருவர், வேதங்களின் விதிமுறைப்படி எது கடமை, கடமையில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதங்களின் கட்டளைகளை நன்றாக உள்வாங்கிய பிறகு, அதன்படி செயல்புரிய வேண்டும்.
ௐ தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே தைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம ஷோடஶோ ந்த்யாய:
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய தெய்வஸுர ஸம்பத் விபாக யோகம் எனும் பெயருடைய பதினாறாவது அத்தியாயம்.
நீங்கள் ஜீவன்முக்தராவதற்கான

தெய்வ அஸுர ஸம்பத் விபாக யோக: - இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் தெய்வ, அசுரத்தன்மைகளைப் பற்றி விளக்குகிறார். இது வெறுமனே ஒரு தீர்மானம் மட்டுமே. நீங்கள், ‘நீங்கள்’ என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தால், அப்பொழுது நீங்கள் தெய்விகமடைகின்றீர்கள்; ‘நான்’ என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தால், அசுரர்கள் ஆகின்றீர்கள், அவ்வளவுதான்.
இங்கு கிருஷ்ணர், மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்வதைப் பற்றிய ஸத்யங்களை மேலும் ஒரு ஆழமான நிலையிலிருந்து வெளிப்படுத்துகிறார். உடல்-மன அமைப்பில் உள்ள ஆழமான சக்தி அடுக்கான ஆன்ம vரீரத்துக்குள் நம்மை அழைத்துச்செல்கிறார்.
மன விளையாட்டின் விளைவே - தெய்வீகமும் அசுரத்தன்மையும்.
மூல எண்ணப்பாங்குகளும், உயிர்ப்பதிவுகளும் நமது காரண ஶரீரத்தில் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அவை நமது கட்டுப்பாடு இல்லாமலேயே இயங்குகின்றன. முடிவுகள், நமக்குத் தெரியாமலேயே எடுக்கப்படுகின்றன.
ஆனால், ஆன்ம ஶரீரத்தில், 'நீங்கள்' அல்லது 'நான்', 'தெய்வீகம்' அல்லது 'அசுரத்தனம்' என்று விழிப்புணர்வோடு முடிவெடுக்கின்றோம்.
'நீங்கள் அல்லது நான்' என்ற முடிவு, ஆன்ம ஶரீரத்தில் எடுக்கப்படுகிறது. 'நீங்கள்' என்று முடிவெடுத்தால், நாம் தெய்வீகத்தை வெளிப்படுத்துவோம். 'நான்' என்று முடிவெடுத்தால், நாம் அசுரத்தன்மையை வெளிப்படுத்துவோம்.
'நீங்கள்' என்ற மனநிலையில் நாம் எந்த முடிவெடுத்தாலும், அவை அனைத்துமே தெய்வீகமாக மாறுகிறது. 'நான்' என்ற மனநிலையில் நாம் எந்த முடிவெடுத்தாலும், அவை அனைத்துமே அசுரத்தன்மையாக மாறுகிறது.
'நான்' என்பதை அடிப்படையாகக்கொண்டு முடிவெடுக்கும்போது, அது உணர்ச்சிகள்மிக்க நிலை (கச்ண்ட்டிணிண) ஆகிறது. 'நீங்கள்' என்பதை அடிப்படையாகக்கொண்டு முடிவெடுக்கும்போது, அது கருணைமிக்க நிலை (இணிட்ணீச்ச்ண்ட்டிணிண) ஆகிறது.
நாம் ஆனந்தமாக இருக்கும்பொழுது, 'நான்' என்பதற்கு, நாம் 'இல்லை' என்று சொல்லிவிடுகிறோம், 'நீங்கள்' என்கிற கருத்தில் தளர்வாகவும் அமைதியாகவும் இருக்கிறோம்.
நாம் தெய்வீகத்தன்மையுடன்
செயல்பட்டாலும்,
அசுரத்தன்மையுடன்
செயல்பட்டாலும், நமது உள்ளுணர்வு
கேளுங்கள், ‘நான்’ என்றால் அஹங்காரத்தையும், ‘நீங்கள்’ என்றால் அந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையையும் குறிக்கிறது. நமது அடையாளம் மறைந்துவிடுகின்றபோது, அஹங்காரம் கரைந்துவிடுகின்றபோது, மீதி இருப்பது எதுவோ, அதுவே பிரபஞ்ச இருப்புத்தன்மை; அது தெய்விகமானது.
‘நான்’ என்கிற கருத்தைக் கொண்டுவரும்பொழுதுதான், நாம் அசுர குணங்களை உருவாக்குகின்றோம். ‘நான்’ எனும் கருத்தை அழிக்கும்நொடியில், அங்கு என்ன இருந்தாலும் சரி அது தெய்விகமானதுதான்.
நம்முடைய உடலும், மனமும்தான் நம்முடைய எல்லை, நாம் இந்த பிரபஞ்சத்திலிருக்கும் மற்றவர்களிடமிருந்து தனியானவர்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்வரை, நாம் தொடர்ந்து பிரபஞ்சத்துடனும் இயற்கையுடனும் முழுமையுடனும் போராடிக் கொண்டேயிருப்போம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். ஒரு தனிப்பகுதி, முழுமையுடன் போராடி ஒருபோதும் வெற்றியடைய முடியாது.
‘நான்’ என்ற உணர்வில் எதை நினைத்தாலும், பேசினாலும் அல்லது எதைச் செய்தாலும் அது மேலும் மேலும் குறைவுணர்வுகளுக்கும் துக்கத்திற்கும்தான் அழைத்துச்செல்லும்.
நாம் தெய்விகதன்மையுடன் செயல்பட்டாலும், அசுரத்தன்மையுடன் செயல்பட்டாலும், நமது உள்ளுணர்வு தெய்விகமாகவே இருக்கிறது. நமது உள்ளுணர்வு தூய்மையாக, மாசுபடாமல்தான் இருக்கிறது. நாம் உள்ளே அந்தத் தூய்மையுடன் இசைந்திருக்கிறோமா அல்லது வெளியுலக புலன்களை நோக்கி இசைந்திருக்கிறோமா என்பது நமது விருப்பத்தைப் பொறுத்ததே.
இராவணனுக்கு இராமனாக மாறக்கூடிய வாய்ப்பு இருந்தது. மேலும் துரியோதனனுக்கு அர்ஜுனனாக மாறக்கூடிய வாய்ப்பு இருந்தது. அவர்களின் சுய விருப்பத்தாலேயே அவர்கள் அந்த நிலையைத் தேர்ந்தெடுக்கவில்லை.
தெய்விகத்தன்மையின் பண்புகள் (16.1-16.3)
அர்ஜுனன் மௌனமானார், அவர் இப்பொழுது உபநிஷத்தில், தூய 'கேட்டலில்' இருந்தார். கிருஷ்ணர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அனைத்து கேள்விகளும் மறைந்து விட்டன. சின்ன சின்ன சந்தேகங்கள் மட்டுமே மீதி இருந்தன, அவைகூட மற்றவர்களை வளப்படுத்துவதற்காகவே!
நம்மை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்த, கிருஷ்ணர் இங்கு ஏராளமான குணங்களை வரிசைப்படுத்துகிறார்.
அவர் நம்மைப் பேராசையும், பயமும், கோபமும் இன்றி இருக்க சொல்கிறார். அவர் நம்மை உண்மையாக, எளிமையாக, பணிவாக, சாந்தமாக மற்றும் வன்முறையற்றதன்மையுடன் இருக்கச் சொல்கிறார். மேலும், எதிர்ப்பார்ப்பு இல்லாமலும், துறவு நிலையிலும் இருக்கச் சொல்கிறார்.
இவை எல்லாம்தான் தெய்விகத்தன்மையின் பண்புகள். உங்களுக்காக என சுயநலத்துடன் செயல்படாமல், மற்றவர்களுக்காகச் செயல்படும்பொழுது இந்தப் பண்புகளை வெளிப்படுத்துகிறீர்கள். இந்தப் பண்புகள் இதயத்திலிருந்து எழுபவை, மனத்திலிருந்து அல்ல; அன்பிலிருந்து எழுபவை, ஆசையிலிருந்து அல்ல!
'நான்' என்ற எண்ணம் மாயையே (16.4-16.7)
அசுர குணம் என்றால் என்ன?
ஒருவர் செய்யும் அனைத்துக் காரியங்களும் கர்வத்தினாலும் இரக்கமற்றத்தன்மையினாலும் பெருமையினாலும் அஹங்காரத்தினாலும் பேர்புகழுக்காகவும் அதிகாரத்திற்காகவும் செய்யப்பட்டால் அதுவே அசுர குணத்தின் இயல்பு என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
தயவுசெய்து ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னசெய்தாலும், வேத நூல்களைப் படித்தாலும், தானதர்மங்கள் செய்தாலும், பொதுச்சேவை செய்தாலும், பூஜைசெய்தாலும், வேள்விகள் செய்தாலும் அல்லது த்யானம் செய்தாலும், அது ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற எண்ணத்தை வலிமையாக்கிக்கொள்வதற்காகச் செய்யப்பட்டால், அது உங்களைத் துக்கங்களை நோக்கித்தான் அழைத்துச்செல்லும்.
‘நான்’ என்பதில் கவனம் செலுத்துவது உள்ளுணர்ச்சியின் உந்துதலினால்தான். நமது கட்டுறு மனப்பாங்குகள் மற்றும் நமது பாதுகாப்பற்ற உணர்வின் அடிப்படையில் எழுகின்ற ‘உயிர் வாழ்வதற்கான’ ஓர் அழைப்பே அது.
வாழவேண்டும் என்ற உள்ளுணர்ச்சிதான் ‘நான்’ என்று அழைக்கப்படுகிறது. எதையாவது பற்றிக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்ச்சிதான் ‘எனது’ என்று குறிப்பிடப்படுகிறது. யார் ஒருவர், இவையிரண்டும் மாயை என்பதைப் புரிந்துகொள்கிறாரோ, அவர் ஒரு பூர்ணத்துவமடைந்த மனிதர்.
எதுவரை உங்களுடைய வேலை, செயல், பேச்சு மற்றும் எண்ணம் எல்லாமுமே ‘நான், நான், நான்’ என்பதை மையமாகக் கொண்டிருக்கின்றதோ, அதுவரை நீங்கள் ஒரு அரக்கனாகத்தான் இருப்பீர்கள். வாழ்க்கையின்மீதும், உடைமைகளின்மீதுமுள்ள உள்ளுணர்ச்சியுடன்தான் நீங்கள் வேலைசெய்துகொண்டிருப்பீர்கள்.
நம் வாழ்க்கை முழுவதும் இந்த அசுரசம்பத்துடன்தான் வாழ்கிறோம். ‘நான், நான், நான்’ என்று வாழும் இந்த ஸ்ரத்தையற்ற மனஅமைப்பைதான் கிருஷ்ணர் அசுர சுபாவம் என்றழைக்கிறார். எப்பொழுது நீங்கள், ‘நீங்கள், நீங்கள், நீங்கள்’ என்ற கருத்தின் அடிப்படையில் வேலைசெய்கின்றீர்களோ அப்பொழுது, நீங்கள் ஒரு புதிய சக்தியை வெளிப்படுத்துவீர்கள்.
‘நான், நான், நான்’ என்று வாழும்
ஸ்ரத்தையற்ற மனஅமைப்பைதான்
கிருஷ்ணர் அசுர சுபாவம் என்கிறார்.
இந்தச் சிறிய பரிசோதனையை முயற்சிசெய்து பாருங்கள். ஒரேயொரு வாரத்திற்கு மட்டும் அடுத்தவர்களுக்காகவே, அவர்களின்மீதுகொண்ட நன்றியுணர்வினால் பொங்கும் அன்புடன் வாழ்ந்துபாருங்கள். நான் உங்களை உங்கள் சொத்துக்களையோ அல்லது வேறு உடைமைகளையோ கொடுக்கச்சொல்லிச் சொல்லவில்லை. 'நீங்கள்' என்னும் புதிய மூலப்புரிந்துணர்வுடன் (மீஞூதீ ணூணிணிணஞாணிண்ஞ்ணடிணாடிணிண) வாழுங்கள்.
'மூலப்புரிந்துணர்வு' என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பொதுவாக நீங்கள், 'நீங்கள்' என்று எதை ஆழமாக, உறுதியாக உணர்கிறீர்களோ, அதையே 'மூலப்புரிந்துணர்வு' என்கிறோம்.
'நீங்கள்' என்னும் மூலப்புரிந்துணர்வில் மையம்கொள்வதற்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள். எடிதினு ச் ஞிட்சணஞிஞ ணூணி ஞஞு ஞிஞூணணூஞணூஞுீ ணிண ணடைஞ ணூணிணிண ஞிணிஞண்ண்டிணாடிணிண ணிஞூ ாஙுணிதீ.
ஒரு வாரத்திற்கு 'நீங்கள்' என்பதை உங்கள் இருப்புத்தன்மையில் வைத்திருங்கள். 'சட்டென' ஆனந்தத் தென்றல் வீசத்தொடங்குவதைக் காண்பீர்கள். உங்களுக்கே தெரியாது, அது எங்கிருந்து வருகிறது என்று! உடனே உங்கள் முழு இருப்புத்தன்மையும் தளர்வாக இருப்பதை உணர்வீர்கள். 'நான்' என்பதில் கவனம் செலுத்தாதபோது, நீங்கள் இறுக்கமாக இருக்கமாட்டீர்கள்.
ஒ 'நீங்கள்' என்பது தெய்விகத்தை ஈர்க்கும்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், மூலப்புரிந்துணர்வுடன் பூர்ணத்வம் செய்வது என்பது சுய-சந்தேகத்துடன் பூர்ணத்வம் செய்வதாகும். 'நான்' என்னும் மூலப்புரிந்துணர்வை 'நீங்கள்'
> 'நான்' என்னும் மூலப்புரிந்துணர்வை
> 'நீங்கள்' என்பதற்கு மாற்றினால்,
> உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழும்.
என்பதற்கு மாற்றினால், உங்களுக்குள் ஆழமான குணமடைதலும், பூர்ணத்வமும் நிகழும்.
இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் அடிப்படையாக வைத்து வேலைசெய்யுங்கள். 'நான், நான், நான்' என்ற மூலப்புரிந்துணர்வின் அடிப்படையில் முடிவுசெய்வதற்குப் பதிலாக 'நீங்கள், நீங்கள், நீங்கள்' என்ற புதிய மூலப்புரிந்துணர்வின் அடிப்படையில் முடிவுசெய்யுங்கள்.
நீங்கள், ஒரு காலியான மூங்கிலாக, தெய்விகத்தின் கைகளில் ஒரு புல்லாங்குழலாக ஆகிவிடுவீர்கள். உங்கள் மூலம் என்ன நடந்தாலும் அது தெய்விகமாக இருக்கும். தெய்விக இயல்பை உள்வாங்கிக்கொண்டவராக இருப்பீர்கள்.
'நான்' என்பதற்குப் பதிலாக 'நீங்கள்' என்னும் உணர்வைக் கொண்டுவருவதற்கும், உங்களுடைய தெய்விக இயல்புகளை மற்றும் 'நீங்கள்' என்னும் உணர்வை அனுபவமாக உணர்வதற்கும் உதவும் நேரடியான அதே சமயத்தில் மிக ஸூக்ஷ்மமான ஒரு நுட்பத்தை இங்குக் கிருஷ்ணர் வழங்குகிறார். அதற்கு முதலில், நீங்கள், உங்களுடைய சிந்தனை, தெய்விக இயல்புகளின்படி செயல்படுகிறதா அல்லது அசுர இயல்புகளின்படி செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
சில நேரங்களில், உங்களில் பலரும் பேய், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்கள்போல் செயல்படுகிறீர்கள். அந்தப் பேய், பிசாசு என்பது என்ன? 'நான், நான், நான்' என்பதுதான்!
நீங்கள் தெய்விக இயல்புகளை வெளிப்படுத்த வேண்டுமானால், மற்றவர்களை 'நீங்கள்' என்னும் உணர்வு தளத்திலிருந்து வளப்படுத்துங்கள்.
வளப்படுத்துதல் உங்கள் வாழ்க்கைமுறையாகும்போது, 'நீங்கள்' என்னும் உணர்வை வளப்படுத்துவது என்பது, அது திருப்பி 'நான்' என்னும் உணர்வை வளப்படுத்துவதாகவே இருக்கிறது. அப்போது அனுபவப்பூர்வமாகவே, நீங்கள் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து இருப்பதையும் மற்றவர்களும் உங்களுடன் ஒன்றுபட்டு இருப்பதையும் புரிந்துகொள்வீர்கள். பின்பு நீங்கள் தானாகவே, ஆனந்தமயமாவீர்கள். கோம் போன்ற ஂணர்ச்சி கொந்தளிப்புகளிலிருந்தும் விடுபடுவீர்கள், தர்மப் பாதையில் செயல்படுபவர்களாக இருப்பீர்கள்.
'நான்' என்பது எவ்வாறு தெய்விகத்தை நம்மிடமிருந்து தூரவிலக்கிவிடுகிறது என்பதையும் 'நீங்கள்' என்பது எவ்வாறு தெய்விகத்தை நம்மிடம் ஈர்க்கிறது என்பதையும் நிரூபிக்க பல வரலாறுகள் இருக்கின்றன.
நமது உள்ளுணர்வில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமே, நமது புரிந்துணர்வில் ஏற்படும் மாற்றத்தைப் பாதுகாக்கத் தொடங்கிவிடும். நாம் எவ்வாறு மையம் கொண்டிருக்கிறோம், நமது உள்ளுணர்வு தளம் எதை நோக்கிச் செயல்படுகிறது என்பதே நம்மை தேவர்களாகவோ அல்லது அசுரர்களாகவோ ஆக்குகிறது.
நாம் நினைப்பதுபோல், 'நாம் சாதாரணமானவர்கள்' இல்லை
இப்பொழுது, 'நான்' மற்றும் 'நீங்கள்' என்பதைக் கேட்டபிறகு, அர்ஜுனனுக்கு பயம் வந்துவிட்டது. 'பகவானே, நான் தெய்விகத்தன்மையில் வாழ்கின்றேனா அல்லது அசுரத்தன்மையில் வாழ்கின்றேனா?' என்பதை அவர் வெளிப்படையாகக் கேட்கவில்லையென்றாலும் அவர் முகம் அதை வெளிக்காட்டியது.
இப்போது பகவான் கிருஷ்ணர் விளக்குகிறார். இயல்பான வரம்புகளைத் தாண்டியதன்மையில் வாழ்வது, அதாவது 'நீங்கள்' என்ற மனப்பான்மையில் வாழ்வது, ஒருவரை முக்தியடையச் செய்கிறது. அது 'நிவ்ருத்தி' மார்க்கம் என்றழைக்கப்படுகிறது. 'நான்' என்ற மனப்பான்மையில் வாழ்வது, அசுரத்தன்மை. அது பந்தங்களைத்தான் உருவாக்கும். இது 'ப்ரவ்ருத்தி' மார்க்கம் என்றழைக்கப்படுகிறது.
மா பஶுச: ஸம்பதம் தைவீமபிஜாதோsஸி பாண்டவ (16.5)
'நீங்கள்' என்ற மனப்பான்மையில்
வாழ்வது, ஒருவரை முக்தியடையச்
செய்கிறது.
-அர்ஜுனன் தெய்விக குணங்களுடன்தான் பிறந்திருக்கிறார் என்று பகவான் கிருஷ்ணர் உறுதியாகச் சொல்கிறார்.
நான் உறுதியாகச் சொல்கிறேன். எப்பொழுது இந்தப் பயம் உங்களுக்குள் வந்ததோ, அதுவே நீங்கள் தெய்விகத்தன்மையில் இருக்கின்றீர்கள் என்பதற்கான சாட்சி. எவரொருவர், தாம் செய்வது சரியா, தவறா என்று பயப்படுகின்றாரோ, அவர் எப்போதும் சரியாகவே வாழ்வார். யார் ஒருவர் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மிகவும் கடுமையாக நடந்துகொள்கின்றாரோ அவர்தான் அசுரத்தன்மையில் இருப்பவர்.
நாம் என்றாவது ஸ்ரத்தையோடு அமர்ந்து, நான் ‘நான்’ என்ற மனப்பானமையில் வாழ்கின்றேனா? அல்லது ‘நீங்கள்’ என்ற மனப்பானமையில் வாழ்கின்றேனா? என்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்திருந்தால், அதைக்குறித்து நமக்கு பயமோ குற்றவுணர்வோ ஏற்பட்டால், தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், அர்ஜுனனைப்போல் நாமும் தெய்விகத்தன்மையில்தான் பிறந்திருக்கிறோம்.
இயற்கையாகவே, நாம் எல்லோருமே தெய்விகத்தன்மையோடுதான் பிறந்திருக்கிறோம் என்பதை கிருஷ்ணர் நமக்குச் சொல்கிறார். இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம், நாம் தெய்விகத்தன்மையிலேயே வாழ்வது மற்றும் அதை அனுபவமாக உணர்வது எவ்வாறு என்பதைத்தான்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், ‘நீங்கள்’ என்ற மூலப்புரிந்துணர்வில் வாழ ஆரம்பித்தால், நாம் நம்மை முழுமையாக மறந்துவிடுவோம். நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்குள் மறைந்துவிடுவோம். நாம் பேரானந்தத்தில் இருப்போம்.
மற்றவர்களை அன்பாக
நடத்துவது, வளப்படுத்துவது
இவை இயல்பாகவே உங்களைத்
தெய்விகத்தை நோக்கி அழைத்து
நாம் ஆனந்தமயமாய் இருந்தால்,
கடவுள் நம் அருகில் இருப்பார்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பேசிய முக்கியமான ஒரு நுட்பத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஒரு மூன்று நாட்களுக்கு, உங்களை வேறுயாரோபோன்று உணர்வதற்கான ஒரு உணர்வுநிலையை உருவாக்கி, உங்களை வேறுயாரோபோன்று நினைத்துக்கொள்ளுங்கள்.
இந்தக் கருத்து உங்களுக்கு கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தால், ஒரு மூன்று நாட்களுக்கு உங்களை ஒரு விளையாட்டு வீரராக, சிவனாக... என்று உங்களை வேறொருவராக நினைத்துக்கொள்ளுங்கள்.
மருத்துவராக அல்லாமல் தெளிவாக உங்களை ஒரு கடவுளாக உருவகப்படுத்திப் பாருங்கள். உங்களைப் பற்றிய கருத்து, மூலப் புரிந்துணர்வு மாறிய அந்த வினாடியே, ஒரு மிகப்பெரிய சுதந்திரம் உங்களுக்குள் நிகழும். உங்கள் மன இறுக்கம் காணாமல் போகும்.
ஒரு புதிய பிரபஞ்ச விழிப்புணர்வு உங்களுக்குள் உதிப்பதை நீங்கள் காணலாம். நீங்கள் 'நான்' என்பதைத் தூக்கி எறிந்தால்போதும், அதுவே உங்களை ஜீவன்முக்தராக்கி விடும். மேலும் நீங்கள் 'நீங்கள்' என்ற அடிப்படையில் வேலைசெய்யத் தொடங்கிவிட்டால், நீங்கள் அளப்பறிய ஆனந்தத்தை அனுபவமாக பெறலாம். இதுதான் அமைதிக்கும், ஆனந்தத்திற்குமான நேரடியான வழி.
மற்றவர்களை அன்பாக நடத்துவது, வளப்படுத்துவது, 'நான்' என்பதற்குப் பதிலாக, 'நீங்கள்' என்பதில் கவனம் செலுத்துவது, இவை இயல்பாகவே உங்களைத் தெய்விகத்தை நோக்கி அழைத்துச்செல்லும்.
ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நாம் ஆனந்தமயமாய் இருந்தால், கடவுள் நம் அருகில் இருப்பார். நாம் துக்கத்தில் இருந்தால், நாம் கடவுளைவிட்டுத் தூரவிலகிவிடுகிறோம். ஆனால் இதில் தர்மசங்கடமான நிலை என்னவென்றால், நம்முள் பலபேர் துன்பம் வரும்போது மட்டும்தான் கடவுளை நினைக்கின்றோம், அதனால் அந்த வினாடியே நாம் கடவுளைவிட்டுத் தூரவிலகிவிடுகிறோம்!
நாம் ஆனந்தமயமாய் இருக்கும்பொழுதுதான், நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையால் ஆசீர்வதிக்கப்படுவதாக உணரும்பொழுதுதான் நாம் கடவுளின் அருகில் இருக்கிறோம். அந்த நேரங்கள் பிரார்த்தனையாக, தியானமாக, நன்றியுடையதாக இருக்கட்டும்.
அந்த நேரத்தில், கடவுளை இருப்புத்தன்மையில் உணருங்கள். வார்த்தைகளாக அல்ல! உங்கள் முழு இருப்புத்தன்மையும் இந்த அதிர்வை உணர அனுமதியுங்கள். எல்லாம் கடந்தநிலையில் ஒன்றிவிடுங்கள், அதனுள் மூழ்குங்கள். அந்த நேரத்தை இழந்துவிடாதீர்கள். அது விலைமதிக்க முடியாதது.
ஒவ்வொருவரும் தெய்வத்தன்மை அடைவதற்குத்தான் பிறந்திருக்கிறோம். அதைத் தவறவிட்டோமானால், அது நம்முடைய பொறுப்பு.
நாம் நமக்குள் பார்க்கத் தவறிவிடுவதால், அதைத் தவறவிடுகிறோம். வாழ்க்கை கொடுக்கும் சந்தர்ப்பங்களை உபயோகிக்கத் தவறுவதால், நாம் அதைத் தவறவிடுகிறோம். நமது சோம்பேறித்தனத்தாலும், நம்மைக் கைவிட்டுவிடுவதாலும் அதைத் தவறவிடுகிறோம். வாழ்க்கை என்பது மிகப்பெரிய ஆசீர்வாதம் என்பது புரியாததனால் நாம் அதைத் தவறவிடுகிறோம்.
நமது கிரகத்தை எப்படிக் காப்பாற்றுவது (16.8-16.9)
தயவுசெய்து, ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். நமக்குள் இருக்கும் சக்தியே, நம்மை இயக்கும் சக்தியே, இந்தப் பிரபஞ்சத்தையும், சூரிய குடும்பத்தையும் (நவகcolumnsளையும்) பூமியையும் இயக்குகிறது. இச்சக்தியே புத்திசாலித்தனம், மேலான புத்திசாலித்தனம்!
கிருஷ்ணர் சொல்கிறார், நம்மால் இச்சக்தியை உணர முடியாதபோது, நாம் அசுரத்தன்மை உடையவர்களாக இருக்கிறோம். அனைத்துமே இச்சக்தியினால் இயக்கப்படுகிறது என்பதை நாம் நம்புவதில்லை.
நம்முடைய பேராசையினாலும் காமத்தினாலும் ஆசையினாலும் மட்டுமே எல்லாச் செயல்களும் நிகழ்வதாக நாம் நம்புகிறோம். நம்முடைய அற்ப பட்டறிவைக்கொண்டுதான் இந்த உலகையே இயக்குகிறோம் என்று நம்புகிறோம். அந்த அற்ப பட்டறிவையே, 'அதிபுத்திசாலித்தனம்' என்று சொல்லிக்கொள்கிறோம்.
இந்த உலகம் வெறும் வேதியியலால் உருவானது என்று நினைப்பவர்கள் அசுரர்கள். இந்தப் பிரபஞ்சத்தை நாம் எப்போது புத்திசாலித்தனம் உடையது என்றும், நம்முடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பதிலளிக்கிறது என்று புரிந்துகொள்கிறோமோ அப்போதுதான் நம் வாழ்க்கையை பூர்ணத்வ உணர்வில் வாழ்வோம், அப்போதுதான் உண்மையான வாழ்வை வாழ ஆரம்பிப்போம்.
அசுரத்தன்மையுள்ள மனிதருக்கு இந்த உலகமே காமத்தாலும், உடல்சார்ந்த இன்பங்களாலும் உருவாக்கப்பட்டது என்றும், காமமே இந்த மொத்த பிரபஞ்சத்திற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள். காமமே காரணம் என்று நாம் நினைக்கும்பொழுது, 'நான்' என்ற கருத்திலேயே நாம் வாழ்கிறோம்.
இந்த சுயநல புரிந்துணர்வு அழிவுக்கே வழிவகுக்கும். க்ஷயாய ஜகதோண்ஹிதா: (16.9) - சுற்றுச்சூழல், உலகம் மற்றும் மொத்த மனிதகுலத்திற்குமே அழிவை உண்டாக்கும்.
தயவுசெய்து தெளிவாக இருங்கள், காமம் காரணமாக இருக்க முடியாது. தெய்விக பிரபஞ்ச சக்தியே மொத்த பிரபஞ்சத்திற்கு காரணமாகவும் மற்றும் அதன் விளைவாகவும் இருக்கிறது.
முன்னேறிய நாடுகள் என்றழைக்கப்படும், உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமேகொண்ட மேற்கத்திய நாடுகளே, உலகின் 50% மேலான இயற்கை வளங்களை உபயோகிக்கின்றன.
நாம் - அல்பபுத்தய: - தாழ்நிலை புத்திசாலித்தனத்தில் இருக்கும்போது, ப்ரபவந்த்யுக்ரகர்மாண: (16.9) - நாம் கொடூரமான செயல்களைச்
நாம் உருவத்தில் கவனம்
செலுத்தும்போது, அந்த
உருவத்தை சாத்தியமாக்கிய
உருவமற்றதன்மையைப் பார்க்க
செய்யும் அசுரர்களாகிவிடுகிறோம். 'நாம் யார்' என்ற விழிப்புணர்வு இல்லாதபோது, நாம் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
ஆனால் இந்த மனப்பாங்கு மாற்றப்படக்கூடியதே. இதற்குத் தேவையானது எல்லாம் ஒன்றேதான். அது, அசுரத்தன்மையிலிருந்து, தெய்வத்தன்மைக்கு, 'நான்' என்ற உணர்விலிருந்து 'நீங்கள்' என்ற உணர்விற்கு மாறும் உணர்வுமாற்றமே.
நாம் வாழும் சூழல், சுவாசிக்கும் ஆக்ஸிஜன், நாம் குடிக்கும் நீர், நாம் உண்ணும் உணவு விளையும் மண், இவை எல்லாமே சக்தி. இச்சக்திகளைத்தான் ஸம்ஸ்க்ரு'தத்தில் பஞ்சபூதம் என்றழைக்கிறோம். இந்த ஐந்தும் தான் நமக்குத் தேவையான சக்தியைக் கொடுத்து நம்மைத் தாங்கிப்பிடித்துள்ளது. நம்முடைய தாழ்ந்த புத்திசாலித்தனத்தினால் இவற்றை நம் சுயநலத்திற்காக அழிப்பதால், நம்மைச் சுற்றியுள்ள மொத்த உலகமுமே பாதிக்கப்படுகிறது.
நம்மை நாமே எப்படிக் காப்பாற்றிக்கொள்வது (16.10-16.16)
அசுரத்தன்மையில் இருக்கும் ஒருவர் எவ்வாறு தன்னையே அழித்துக்கொள்கிறார் என்பதை விளக்குகிறார். தற்பெருமையிலும் செருக்கிலும் கபடத்தன்மையிலும் சிக்கிக்கொண்ட அவர், சுயநலத்தாலும் உலகாயத ஆசைகளாலுமே வழிநடத்தப்பட்டு, துக்கங்களையே பலனாகத் தரக்கூடிய பாதையிலேயே செல்கிறார்.
நாம் ஒரு பொருளில் ஆர்வம்கொள்ளும்போது, அதன் உள்ளார்ந்த சக்தியைப் பார்க்கத் தவறிவிடுகிறோம். நாம் உருவத்தில் கவனம் செலுத்தும்போது, அந்த உருவத்தை சாத்தியமாக்கிய உருவமற்றதன்மையைப் பார்க்க முடிவதில்லை.
'நீங்கள்' என்ற உணர்வே ஸரணாகதியின் அஸ்திவாரம்.
ஒரு மனிதர், தம்முடைய உணர்வில் மலர்ந்தால் மட்டுமே, அவர் கடவுள்.
ஒருமுறை நாம் 'நான்' என்னும் அசுரத்தன்மையில் இருந்து ‘நீங்கள்’ என்ற தெய்வநிலைக்கு மாறிவிட்டால், பிறகு சொத்து சேர்ப்பது பற்றியோ, நமக்கென்று ஒரு அந்தஸ்தை உருவாக்குவது பற்றியோ, உறவுமுறைகளை விரிவுபடுத்துவதைப் பற்றியோ அல்லது நம் வாழ்க்கையில் எதற்கெல்லாம் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறோமோ அவற்றைப் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை. பிரபஞ்சம் அவை எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும். பிரபஞ்சம் நமக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளும்.
அப்படி இல்லாமல், ‘நான்’ என்று நம்முடைய சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருந்தோம் என்றால், தெரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர் சொல்வதுபோல், நாம் நரகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய புரிதல்தன்மை வளர வேண்டும்
(16.17-16.20)
கிருஷ்ணர், "அசுர இயல்பு உடையவர்களைக் துன்பக் கடலில் தூக்கியெறிவேன்," என்று சொல்கிறார். இன்னொரு ஸ்லோகத்தில், “யாராகயிருந்தாலும், கருணையோடு வரவேற்று, அவர்களை விடுவிப்பேன்,” என்று சொல்கிறார். எப்படி நாம் இந்த இரண்டு நிலைகளையும் ஒற்றுமைப்படுத்த முடியும்.
இரண்டு நிலைகளுமே ஸத்யம்!
ஒரு ஜ்ஞான ஸத்குருநாதர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையுமே ஸத்யம். நம்முடைய புரிதல்தன்மைதான் வளர வேண்டும்.
கிருஷ்ணர் கருணையின் அவதாரம். எவரொருவர் அவரைச் சரணடைகின்றாரோ, அவர் விடுதலையடைகிறார். அதுவே முழுமையான ஸத்யம். கிருஷ்ணருடனான நம் ஸரணாகதி முழுமையானதாக இருந்தால் மட்டுமே, நமக்கும் அவருக்கும் இடையில் எதுவும் இருக்க முடியாது. பின், அவர் நிச்சயமாக நமக்கு விடுதலை அளிப்பார்.
இங்கே கிருஷ்ணர், தாங்கள் கிருஷ்ணரிடம் சரணடைய தேவையில்லை என்று நினைக்கும் மக்களைப் பற்றியே பேசுகிறார்.
கிருஷ்ணரை அவர்களுக்குப் போட்டியாக நினைக்கின்ற அளவுக்கு அவர்கள் முழுவதும் அஹங்காரத்தினால் நிறைந்துள்ளார்கள். கிருஷ்ணர் அவர்களைப் பொருள்சார்ந்த உலகில் விழச்செய்வதாகச் சொல்கிறார்.
‘நீங்கள்’ அல்லது ‘நான்’ அதாவது தெய்விகம் அல்லது அசுரக்குணம் என்பதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவுசெய்யும் சுதந்திரத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். அது நம்முடைய முடிவுதான். கிருஷ்ணராலும் அதை மாற்ற முடியாது. ‘நான்’ என்ற உணர்வு மறைந்து, ‘நீங்கள்’ என்ற உணர்வு மலரும்போது, ‘நான்’ என்பதை அடையாளமாக வைத்திருக்கும் நம் கருத்து கரைந்துவிடும். இந்த ‘நீங்கள்’ என்ற உணர்வே ஸரணாகதியின் அஸ்திவாரம்.
‘நான்’ என்பதிலிருந்து ‘நீங்கள்’ என்பதற்கு செல்லும் தைரியமே, ஸத்யத்தை நம்புவதற்கும், அன்பு செய்வதற்கும், ஸரணாகதி செய்வதற்குமான துணிவு எனப்படுகிறது. எப்போது அந்தத் துணிவு நிகழ்கின்றதோ, அப்போது அவரைத்தவிர வேறொன்றும் இருக்காது. நாம் கிருஷ்ணராகிவிடுவோம்.
நாம் பிரபஞ்சத்தோடு ஒன்றிவிடும்போது, கிருஷ்ணருடன் ஒன்றாகும்போது, நாம் நிலையான ஆனந்தத்தை, நித்யானந்தத்தை அடைந்துவிடுவோம்.
கடவுள் நம்மை நேசிக்கிறார் (16.21-16.24)
கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை இந்த அறிவுரைகளோடு முடிக்கிறார். கோபத்தையும், பேராசையையும் காமத்தையும் கீழே போட்டால், நாம் காக்கப்படுவோம். நம்மை இந்த குணங்களே, ‘நான், நான்’ என்று பந்தப்படுத்துகிறது.
த்ரிவிதம் நரகஸ்யேதம் - நரகத்தின் வாயில்கள் என்று அழைக்கப்படும்-காம: க்ரோதஸ்ததா லோபஸ் (16.21)- கோபத்திலும், காமத்திலும், பேராசையிலும் இருக்கும்வரையில், நாம் அடிமைத்தனத்தில் இருக்கிறோம்; நாம் துக்கத்தில் இருக்கிறோம். இவற்றை விட்டுவிடும்போது சுதந்திரம் அடைகிறோம்.
இந்த மூன்றும் இணையும்போது மோகம் அதாவது தவறான நம்பிக்கையை உருவாக்குகின்றன.
ஒரு கட்டத்தில் இந்த உணர்ச்சிகளே நம்முடைய ஆசைகளாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆசையும் துன்பத்திற்கான விதை. அதனால் தான் கிருஷ்ணர் இதை 'நரகத்தின் வாயில்' என்று அழைக்கிறார். ஆனால் இந்த ஆசைகளை எவ்வாறு வெளியேற்றுவது?
கிருஷ்ணர், நம்மை என்ன செய்யுமாறு கேட்கிறார் என்றால், எதிர்மறை உணர்ச்சிகளான காமம், பேராசை, கோபம் போன்றவற்றை நிறைவுசெய்து, நேர்மறை சக்திகளாக மாற்றச்சொல்கிறார்.
நாம், 'நான்' என்ற மூல உணர்விலிருந்து இவற்றைப் பயன்படுத்தும் வரை, இவையே நம்மை நரகத்திற்குக்கொண்டு செல்லும் நுழைவாயில்கள் என்கிறார். நாம் இந்த உணர்ச்சிகளை நிறைவுசெய்து, சக்தியாக உணர்வுமாற்றம் செய்து, 'நீங்கள்' என்ற உணர்வை உருவாக்கும்போது, அவை ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும் நுழைவாயில்களாகின்றன.
கடவுள் நம்மை நேசிக்கிறார். அவர் நம்மைக் கைவிடவில்லை, அவர் நமக்கு மாறுபட்டவர் அல்ல, அவர் தொடர்ந்து

நம்மீது அக்கறைகொண்டிருக்கிறார். இந்தக் கருத்து உங்கள் இதயத்திற்குள் ஆழமாக நுழைவது நல்லது. நீங்கள் கடவுளால் அதிகம் நேசிக்கப்படுவதாக உணர்ந்தால்தான், நீங்கள் கடவுளையும் மற்றவர்களையும் நேசிக்க முடியும்.
நாம் நேசிக்கப்படவில்லை என்றால், எவ்வாறு நேசிக்கவேண்டும் என்று நமக்குத் தெரியாது.
நீங்கள் சாட்சியாக இருக்கும்போது, நான், 'நான்' என்பது விழுந்துவிடும். உங்கள் சக்தியுடனான அடையாளம் மட்டுமே இருக்கும். அந்நிலையில் நீங்கள் எல்லாவற்றுடனும் ஒன்றாகிவிடுவீர்கள். 'நான்' என்பதில் இல்லாமல் 'நீங்கள்' என்பதில் நிலைபெறுவீர்கள். நீங்கள் ஒருமைத்துவ உணர்வில், அத்வைத உணர்வில், நீங்களே அனைத்தும், அனைத்துமே நீங்கள்தான் என்னும் ஸத்யத்தை வாழ்வீர்கள்.
'நீங்கள்' என்பது 'நானே' என்பதாலும், 'நான்' என்பது 'நீங்களே' என்பதாலும், 'நீங்கள்', 'நான்' என்பது 'நீங்கள் - நான்' என்றாகிவிடுகிறது. 'நீங்கள் - நான்' என்பதே நமது மையமாகிவிடுகிறது. 'நான்' என்பது மறைந்துவிடுகிறது. நீங்கள் தெய்விகமாவீர்கள்.
நாம் அனைவரும் தெய்வ ஸம்பத்துடன், நிலையான ஆனந்தத்தில், நித்யானந்தத்தில் நிலைபெற்று வாழ ஆசீர்வதிக்குமாறு, அந்த தெய்விக விழிப்புணர்வை, மகோன்னதமான சக்தியான பரப்ரஹ்ம கிருஷ்ணரைப் பிரார்த்தனை செய்வோம்.
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் எனும் பெயருடைய பதினாறாவது அத்தியாயம்.