அத்தியாயம்-17: சிரத்தாத்ரயவிபாகயோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் வாழ்வு விரிவடைவதற்கான தீர்வு
‘வாழ்க்கை’ என்பது சிரத்தையைப்
பெற்றிருப்பதைப் பற்றியது,
அது, ஸத்யத்தை வாழ்வதற்கான
சிரத்தையின் துணிவையே
குறிக்கிறது.
அதை ஒருவர் வெறுமனே படித்தோ,
கேட்டோ, சிந்தித்தோ
புரிந்துகொள்வது என்பது
அர்த்தமற்றது.
தீர்மானங்களுக்கும், உங்களுடைய
அன்றாட வாழ்க்கைக்கும் இடையில்
எவ்வித இடைவெளியும்
இல்லாமலிருப்பதையே நான்
ஸ்லோகங்கள்
அத ஸப்ததஸோSத்யாய:
ஶ்ரத்தாத্রয়விபாகயோக:
ஏ
அர்ஜுந உவாச
யே ஶாஸ்த்ரவிதிமுத்ஸ்ரு'ஜ்ய யஜந்தே ஶ்ரத்தயான்விதா: ந
தேஷாம் நிஷ்டா து கா க்ரு'ஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம: நந 17.1
அர்ஜுனன் சொன்னது: 17.1 ஓ க்ருஷ்ணா, ஆன்மீகப் பயிற்சிகளை சிரத்தையோடு, ஆனால் வேதநெறிகளுக்குட்படாமல் செய்பவர்களின் பக்தி எந்த வகையைச்சார்ந்தது? அது ஸத்வ, ரஜஸ், தமஸ்- இவற்றுள் எவ்வகையைச்சார்ந்தது?
ஸ்ரீபகவாந் உவாச
த்ரிவிதா பவதி ஶ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா ந
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஶ்ரு'ணு நந 17.2
ஸ்ரீபகவான் சொன்னது 17.2 ஜகத்குரு க்ருஷ்ணர் சொல்கிறார்: உடலெடுத்துள்ள மனிதர்களின் சிரத்தை-நல்லது, தீவிரம் மற்றும் அறியாமை என மூவகையானவை. இப்போது இவற்றைப் பற்றி என்னிடமிருந்து கேள்.
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஶ்ரத்தா பவதி பாரத ந
ஶ்ரத்தாமயோsயம் புருஷோ யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ: நந
17.3
17.3 ஓ அர்ஜுனா, ஒவ்வொருவரின் ஶ்ரத்தையும், அவரவரின் சொந்த மனப்பாங்கைப் பொறுத்திருக்கிறது. ஒருவரின் ஶ்ரத்தையே அவரை நிர்ணயிக்கிறது. ஒருவர் என்னவாக விரும்புகிறாரோ, அவ்வாறே ஆகலாம்.
யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: ந
ப்ரேதாந்பூதகணாம்ஶ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: நந 17.4
17.4 ஸத்வ இயல்பில் இருக்கும் மனிதர்கள், கடவுள் உருவங்களை வழிபடுகிறார்கள்; இரஜோ இயல்பைக் கொண்டவர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள்; தமஸில் இருப்பவர்கள் பேய்களையும் ஆவிகளையும் வழிபடுகிறார்கள்.
அஶாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா: ந
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா: நந 17.5
கர்ஷயந்த: ஶரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ: ந
மாம் சைவாந்த:ஶரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஶ்சயாந் நந 17.6
17.5,6 இருள் நிறைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேதநூல்களின் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு கடுமையான தவங்களைப் பயிற்சிசெய்வார்கள். போலித்தனத்திலும் அகங்காரத்திலும் மூழ்கியிருக்கும் இவர்கள், காமத்தினாலும் பற்றினாலும் இழுத்துச் செல்லப்படுபவர்களாகவும், தங்களின் உடல் பாகங்களை அறிவற்றமுறையில் கடுமையாக சித்திரவதை செய்வதுடன், அதற்குள் இருக்கும் என்னையும் சித்திரவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய: ந
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஶ்ரு’ணு நந 17.7
17.7 முவ்விதமான பொருள்சார்ந்த இயல்புகளுக்கு ஏற்றபடி, உணவு முவ்வகைப்படும். அவ்வாறே யாகம், தவம், தானம் இவையும் முவ்வகைப்படும். இம்மூன்றுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கே கள்.
ஆயு: ஸத்த்வ பலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா: ந
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ரு’த்யா ஆஹாரா:
ஸாத்த்விகப்ரியா: நந 17.8
17.8 நீண்ட ஆயுளையும், ஆற்றலையும், வலிமையையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கின்ற உணவுகள், மென்மையானதாகவும் எளிதாக ஜீரணமாகக் கூடியதாகவும், சாறு நிரம்பியதாகவும், திட உணவாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றன. ஸத்வ குணமுடையவர்கள் இதுபோன்ற உணவுகளை விரும்புவார்கள்.
கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந: ந
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து :கஸோகாமயப்ரதா : நந 17.9
17.9 இரஜோ குணமுடையவர்கள், மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, உறைப்பான, உலர்ந்த, எரியச் செய்கின்ற உணவுகளை விரும்புவார்கள். இவை வலியையும் வேதனையையும் நோயையும் உண்டாக்குகின்றன.
யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் ந
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம் நந 17.10
17.10 தமோ குணமுடையவர்கள், யாமம்கழிந்த, சுவையற்ற, அழுகிய, பழைய, ஒதுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருக்கும் உணவுகளை விரும்புவார்கள்.
அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ரு’ஷ்டோ ய இஜ்யதே ந
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக: நந 17.11
17.11 பலனை எதிர்பார்க்காத, வேதநெறிகளுக்குட்பட்ட, இதுவொரு கடமை என்ற நம்பிக்கையோடும் தீர்மானத்தோடும் எந்த யாகம் செய்யப்படுகின்றதோ, அது ஸாத்விகமானது.
அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத் ந
இஜ்யதே பரதஸ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம் ந 17.12
17.12 ஓ பரதகுல சீரேஷ்டனே, பலனை எதிர்பார்த்தோ அல்லது பெருமையைக் காட்டவோ செய்யப்படுகின்ற யாகங்கள், இரஜோ நிலையில் செய்யப்படுவன என அறிந்துகொள்.
விதிஹீநமஸ்ரு'ஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம் ந
ஸ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே ந 17.13
17.13 வேதநெறிகளைப் பின்பற்றாமல், அன்னதானம் அளிக்கப்படாமல், மந்திரக் குறைபாடுடைய, சிரத்தை இல்லாத, தக்ஷிணை அளிக்கப்படாத யாகங்கள், தாமஸீகமானது என்று சொல்லப்படுகிறது.
தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஸௌசமார்ஜவம் ந
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச பாரீரம் தப உச்யதே ந 17.14
17.14 தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, மற்றும் ஞானிகளை வழிபடுவது, மெய்யறிவான தூய்மை, நேர்மை, நிஜத்தில் வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை போன்றவை உடலால் செய்யக்கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன.
அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ந
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே ந 17.15
17.15 குற்றமற்ற, எதிர்ப்பை உருவாக்காத, உண்மையான, இனிமையான, நலன் கொடுக்கக்கூடிய பேச்சும், வேதநூல்களைத் தொடர்ந்து படிப்பதும் வாக்கினால் செய்யக்கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன.
மந:ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ: ந
பாவஸம்பாரத்திclothingரித்யேதத்தபோ மாநஸமுச்யதே ந 17.16
17.16 மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவை மனதால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன.
ஸ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை: ந
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே ந 17.17
17.17 பயனில் கருத்தில்லாத யோகிகளால் மிகுந்த சீரத்தையுடன் செய்யப்படுகின்ற மனம், மொழி, மெய் இவற்றால் ஆற்றப்படுகின்ற அந்த மூன்று விதமான தவம் ஸாத்விகமானது என்று சொல்லப்படுகிறது.
ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத் ந
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம் நந 17.18
17.18 மதிப்பு, மரியாதை, கௌரவத்தைப் பெறுவதற்காகவும், பகட் டுக்காகவும் செய்யப்படும் தபஸ், ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற விளைவையே கொடுக்கும். அந்தத் தபஸ் இங்கு ராஜஸம் எனச் சொல்லப்படுகிறது.
மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப: ந
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ரு'தம் நந 17.19
17.19 முட்டாள்தனமான பிடிவாதத்துடனோ அல்லது சுய சி த்ரவதையுடனோ அல்லது பிறரைத் துன்புறுத்தியோ செய்யப்படும் தபஸ் தாமஸம் எனப்படுகிறது.
தாதவ்யமிதி யத்தாநம் தீயதேண்நுபகாரிணே ந
தேஶே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ரு'தம் நந
17.20
17.20 சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒரு கடமையாகக் கருதி, ப்ரத்யுபகாரம் செய்ய முடியாதெனினும், தகுதியுடையராயிருக்கும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் தானம் ஸாத்விகம் என்று கருதப்படுகிறது.
யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஶ்ய வா புந: ந
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ரு'தம் நந 17.21
17.21 விருப்பமில்லாமலோ அல்லது கைமாறு எதிர்பார்த்தோ அல்லது ஏதோவொரு பலனை எதிர்பார்த்தோ கொடுக்கப்படும் தானம் ராஜஸம் எனப்படும்.
அதேஶகாலே யத்தாநமபாத்ரேப்யஶ்ச தீயதே ந
அஸத்க்ரு'தமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ரு'தம் நந 17.22
17.22 தவறான இடத்தில், தவறான நேரத்தில், தகுதியற்றவர்களுக்கு மரியாதையின்றி அல்லது இகழ்ச்சியுடன் கொடுக்கப்படும் தானம் தாமஸம் எனப்படுகிறது.
ஓம் தத்ஸதிதி நிர்தேஶோ ப்ரஹ்மணஸ்திரிவித: ஸ்ம்ரு'த :ந
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஶ்ச யஜ்ஞாஶ்ச விஹிதா: புரா நந
17.23 ஓம் தத் ஸத் என்று மூன்று விதமாக என்றென்றும் நிலைத்திருக்கின்ற இருப்பு சக்தியான ப்ரஹ்மத்தினுடைய பெயர் மொழியப்பட்டுள்ளது. அந்த ப்ரஹ்மத்தினால் படைப்பின் ஆரம்பத்தில் ப்ராம்மணர்களும், வே தங்களும், வேள்விகளும் படைக்கப்பட்டன.
தஸ்மாதோமித்யுதாஹ்ரு'த்ய யஜ்ஞதாநதப:க்ரியா: ந
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம் நந
17.24 அதனால், வேதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் யாகம், தானம், தவம் போன்ற செயல்கள், உச்சபட்ச சக்தியை அறிந்தவர்களால் ‘ஓம்’ என்று உச்சரிக்கப்பட்டே தொடங்கப்படுகின்றன.
ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா: ந
தாநக்ரியாஶ்ச விவிதா : க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி : நந
17.25 மோக்ஷமாகிய நலன் நாடும் நல்லோரால் பல்வேறு வகையான யாகங்களும், தவங்களும், தானங்களும் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் ‘தத்’ (அல்லது எல்லாம் அவனே) என்று உச்சரித்துக் கொண்டே செய்யப்படுகின்றன.
ஸத்பாவே ஸாது பாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே ந
ப்ரஶஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே நந
யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே ந
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே நந
17.26, 27 ஸத் என்ற வார்த்தை ஸத்யம், நன்மை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ‘ஓ அர்ஜுனா, ஸத் என்ற வார்த்தை மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிரத்தையுடன் செய்யப்படும் யாகம், தானம் மற்றும் தவம் போன்றவை ஸத் என்று அழைக்கப்படும். கடவுளுக்காகச் செய்யப்படும் சுயநலமற்ற சேவையும் ஸத் என்று சொல்லப்படுகிறது.
அப்ʼரத்தயா ஹூதம் தத்தம் தபஸ்தப்தம் க்ரு'தம் ச யத் ந
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ நந 17.28
17.28 ச்ரத்தையோடு செய்யப்படாத யாகமோ, தானமோ, தவமோ அல்லது வேறெந்தச் செயலாக இருந்தாலும் அது அஸத்ய என்று அழைக்கப்படுகிறது. ஓ அர்ஜுனா, அதற்கு இப்போதும், எப்போதும் மதிப்பு கிடையாது.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்ʼபகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ʼரஹ்மவித்யாயாம் யோகஸாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே ஶ்ரத்தாத்ரயவிபாகயோகோ நாம ஸப்ததஶோ ண்த்யாய: ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ச்ரத்தாத்ரயவிபாக யோகம் எனும் பெயருடைய பதினேழாவது அத்தியாயம்.
உங்கள் வாழ்வு விரிவடைவதற்கான தீர்வு

கிருஷ்ணர், ஸ்ரத்தா த்ரய விபாகயோகம் என்னும் இந்த அத்தியாயத்தில், ஸ்ரத்தையை உள்வாங்கி, அந்த ஸத்யங்களை வாழ்வதற்கான நுட்பங்களையும் முறைகளையும் நேரடியாகத் தருகிறார்.
ஸ்ரத்தை என்பது ஸத்யத்தை வாழ்தற்கும், உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறில் வாழ்வதற்குமான திடமான நம்பிக்கையுடனான துணிவைக் குறிக்கிறது.
இங்கு மூன்றடுக்கு ஸ்ரத்தையைப் பற்றிப் பேசுகிறார். ஆழ்ந்து கேளுங்கள், மனிதர்கள் ஸத்யங்களைப் பற்றிக் கேட்காததால் கஷ்டப்படுவதில்லை. அவர்கள் அந்த ஸத்யங்களின்படி வாழாததன் காரணத்தாலேயே கஷ்டப்படுகிறார்கள்.
நமக்குத் தேவைப்படுவது சிரத்தை மட்டுமே
ஶ்ரத்தை என்ற வார்த்தை, சிறந்த செயலில் ஶ்ரத்தையைக் காட்டுவதன்மூலம் நம்முள் உருவாகும் திடநம்பிக்கையைத்தான் குறிப்பிடுகிறது. இருப்பினும், தூய்மையான நற்குணம் என்பது பொருள்சார் நடவடிக்கைகளுக்கும் அப்பாற்பட்டது.
கிருஷ்ணர், என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ, அவற்றையெல்லாம் சொல்லி முடித்துவிட்டார். இப்போது நமக்குத் தேவைப்படுவதெல்லாம் ஶ்ரத்தை மட்டும்தான்.
முந்தைய அத்தியாயங்கள் முழுவதும் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஓர் அருமையான ஆன்மிக விருந்தைக் கொடுத்தார். அடுத்து, அர்ஜுனன் செய்ய வேண்டியதெல்லாம், அந்த ஒட்டுமொத்த விஷயங்களையும் ஜீரணிப்பதற்கான ஜீரணமருந்தைக் குடித்து, மகிழ்ச்சியாக இருப்பதுதான். இந்த அத்தியாயம்தான் அந்த ஜீரண மருந்து. அவர் இந்த அத்தியாயம் முழுவதும் ஒருங்குவித்தல், சிரத்தை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறார்.
ஆழந்து கேளுங்கள், உங்கள் ஆன்மிகப் புரிதலுக்கும் உங்கள் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே எந்தவொரு இடைவெளியுமின்றி இருப்பதைத்தான் 'வாழ்க்கை' என்று நான் சொல்கிறேன். இங்கே கிருஷ்ணர், ஶ்ரத்தை என்பது மட்டுமே உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் உணர்வுமாற்றம் பெறச்செய்ய முடியும் என்பதை வலியுறுத்துகிறார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்கள் மமகாரம், அஹங்காரம்,
நான்கு அடையாளங்களுக்கும்
நீங்கள் உண்மையுடன் இருத்தலே
ஶ்ரத்தை.
அந்யகாரம் மற்றும் ஸ்வ-அந்யகாரம் என்னும் இந்நான்கு அடையாளங்களைப் பற்றி நீங்கள்கொண்டுள்ள நம்பிக்கைகளை ஒருங்கிணைப்பதில் ஸ்ரத்தையுடன் இருந்தீர்களானால், நீங்கள் இறுதியான ஒன்றை அடையமுடியும்.
உங்களுடைய இந்த நான்கு அடையாளங்களுக்கும் நீங்கள் உண்மையுடன் இருத்தலே ஸ்ரத்தை.
நீங்கள் உணரவிரும்பும், சிந்திக்கவிரும்பும், மற்றவர்களிடம் வெளிக்காட்டவிரும்பும் சிறந்த அடையாளங்களை உருவாக்குங்கள்.
ஸத்யத்தை அடையும் பாதை
கிருஷ்ணர், ஸ்ரத்தாவாந்லபதே ஜ்ஞானம் (4.39) - ஸ்ரத்தையில் நிலைபெற்றிருக்கும் ஒருவரே உண்மையான அறிவையும், ஞானத்தையும் அனுபவமாகப் பெறுகிறார் என்கிறார். நீங்கள் ஸ்ரத்தையை வாழ்ந்தால் மட்டுமே, அது உங்களுக்குள் நிதர்ச னமாகும். பலரும், இந்தப் பாதையில் சென்று கடவுளையும் ஸத்யத்தையும் அடைந்திருக்கிறார்கள்.
ஆழ்ந்து கேளுங்கள், நாம் கீதையில் கேட்ட ஒவ்வொன்றும், நாம் புரிந்துகொண்ட அனைத்தும், 'சாத்தியம்' என்னும் கருத்தினடிப்படையிலேயே பதிலளிக்கப் படவேண்டும்.
நமது இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டிய மந்திரம் இதுவே: கிருஷ்ணருடைய வார்த்தைகள் அனைத்தும் சாத்தியமே! கீதையை வாழ்வது சாத்தியமே!
உங்களை உச்சபட்ச சாத்தியக்கூறுகளுக்குக் கொண்டுவாருங்கள். நீ ங்கள் நம்புகின்ற ஸத்யம் இறுதி ஸத்யந்தானா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
நீங்கள் அதை ஸ்ரத்தையுடன் வாழ்ந்து பார்த்தாலன்றி, அதைப் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் அதை வாழ்ந்து பார்க்காமல், அதைப்பற்றிய ஒரு தீர்மானத்திற்கு நீங்கள் வர முடியாது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். ஞானத்திற்கான இறுதிபடி அல்லது நேரடியான வழி - ஸத்யத்தை வாழ்வதற்கான ஸ்ரத்தையே!
வழிபடும் முறை (17.1-17.6)
அர்ஜுனன் கேட்கிறார்: “கிருஷ்ணா, வேத நூல்களின் நெறிமுறைகளை எல்லாம் விட்டுவிட்டு யாகங்கள் செய்பவர்களின் நிலை என்ன? அது ஸத்வமா, ரஜஸா அல்லது தமஸா? வேதநெறிகளைப் பின்பற்றாமல், தங்களின் சொந்த நம்பிக்கைகளின்படி ஸ்ரத்தையோடு வழிபாடு செய்பவர்களின் நிலை என்ன?”
கேளுங்கள், வழிபாட்டை எப்படிச் செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எங்கிருந்து செய்ய வேண்டும், இன்னும் இது போன்றவை வேதங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன. வழிபாடு பல நிலைகளில் நடக்கலாம். நாம் வழிபடும்முறை நாம் பிறக்கும்போதே நம்மோடு சேர்ந்தே வந்த ஸத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களைப்பொறுத்துத்தான் இருக்கிறது.
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்ரத்தா பவதி பாரத (17.3) - நாம் வழிபடும்முறை நமது இயல்பைச் சார்ந்திருப்பதாகக் கிருஷ்ணர் சொல்கிறார்.
யஜந்தே ஸாத்த்விகா தேவாந் (17.4) - ஸத்வ குணத்தில் இருக்கும் ஒருவர், அமைதியான கடவுள்களை வழிபடுகிறார். ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இயல்பிலேயே தூய்மையான நல்லெண்ணத்தோடு இருக்கக்கூடிய ஒருவரால் மட்டும்தான், கடவுளோடு இணைய முடியும்.
யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: - ரஜோ குணத்தில் இருக்கும் ஒருவர், யக்ஷர்களையும் ராக்ஷர்களையும் வழிபடுகிறார்.
ப்ரேதாந்பூதகணாம்ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: (17.4) - தமோ குணத்தில் (அறியாமையில்) இருக்கும் ஒருவர், ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்.
ஒரு ஞானி, குணங்களை உருவாக்கும் ஸம்ஸ்காரங்கள் மற்றும் கர்மாக்கள் அனைத்தையும் எரித்துவிடுவதால், அவர் ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களையும் கடந்துசென்றுவிடுகிறார்.
மாம் சைவாந்த:ஶரீரஸ்தம் (17.6) -உடல் பாகங்களை அறிவற்றமுறையில் கடுமையாக சித்திரவதை செய்வதுடன், அதற்குள் இருக்கும் என்னையும் சித்திரவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
உடல், கடவுள் வாழும் ஆலயம். கடவுளின் ஆலயத்தைச் சித்திரவதை செய்வதால், உங்களுக்குள் இருக்கும் பரமாத்ம உணர்வைச் சித்திரவதைச் செய்கிறீர்கள். தான்வித்த்யாஸுரநிஸ்சயாந்உடலுக்குள் இருக்கும் பரமாத்ம உணர்வை சித்திரவதைச் செய்பவர்கள் இராக்க்ஷஸர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இராவணன், தன்னுடைய தலைகளை வெட்டி, அவற்றைத் தீயிலிட்டு தவம் செய்தான். இப்படி தனது உடலையும் அந்த உடலுக்குள் இருக்கும் பரமாத்ம உணர்வையும் சித்திரவதை செய்வதுதான் இராக்ஷஸ தவம். இந்தத் தவமும், இந்தச் சுய சித்திரவதைகளும் அகங்காரத்தை அதிகரிப்பதற்கும் சக்தியைப் பெறுவதற்குமே செய்யப்படுகின்றன.
தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள். அப்படிச் செய்வதன்மூலம், நீங்கள் உங்களை மட்டும் தண்டிக்கவில்லை, உங்களுக்குள் இருக்கும் என்னையும் சேர்த்து தண்டிக்கின்றீர்கள்!
கிருஷ்ணர் சொல்கிறார், "உங்களை நீங்களே சித்திரவதை செய்யாதீர்கள்." உங்களை நீங்களே சித்திரவதை செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் கேட்கவில்லை.
நம்புங்கள், பயிற்சி செய்யுங்கள் (17.7-17.10)
இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஸ்ரத்தையில், சாத்திய உணர்வுக்குள் குதிக்க வேண்டியதுதான். ஸ்ரத்தையில்,
தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள்.
சாத்திய உணர்வுக்குள் குதித்தவுடனேயே, நம்மால் ஸத்யத்தை உணர முடியும். நாம் கிருஷ்ணராக மாறிவிடுவோம். நம்மால் கிருஷ்ண உணர்வை அனுபவிக்க முடியும்.
இந்த இடத்தில்தான் நாம் ஸ்ரத்தையின் அனுபவ நுட்பத்திற்குள், கிருஷ்ண உணர்வு நுட்பத்திற்குள் நுழைவோம்.
கவனியுங்கள், இங்கே நீங்கள் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும்.
ஒன்று, நான் ஸத்யம் என்று எதையெல்லாம் சொல்கின்றே னா, அவையெல்லாம் ஸத்யமே என்று நீங்கள் முழுமையான ஸ்ரத்தையோடு நம்ப வேண்டும். அல்லது, நான் சொல்வதெல்லாம் வெறும் பொய்கள் என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
ஸத்யத்தை சோதிக்க, அதை வாழத் தேவையான ஸ்ரத்தையுடனான துணிவு மட்டுமே போதுமானது. நான் இவ்வளவு நாட்கள் பேசியதைக் கேட்டபின்பு 'இந்த ஸத்யத்தை நான் ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஏன் சோதித்துப் பார்க்கக்கூடாது?' என்று உங்களுக்குள் கேட்டுக்கொண்டீர்களானால் போதும், அந்த அளவுக்குத் துணிச்சல் இருந்தாலே போதுமானது.
உங்களுடைய ஆசைகளுக்கும், உங்களுடைய பொறுப்புகளுக்கும் இடையேயான இடைவெளியையே அஸ்ரத்தை என்கிறோம. மேலும் மேலும் ஸ்ரத்தையை எடுத்துவாருங்கள். மேன்மேலும் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
பகவத்கீதையின் ஸத்யங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு விழிப்புடன் தீர்மானிப்பீர்களாக! ஸ்ரத்தையின் துணிவுடன் ஸத்யம் என்னும் உணர்விலிருந்து சோதித்துப்பாருங்கள். வாழ்க்கை, ஸத்ய உணர்வுடன்தான் துவங்குகிறது!
மொத்த கீதையையுமே சோதித்துப் பார்க்க வேண்டியதில்லை.
வாழ்க்கை, ஸத்ய உணர்வுடன்தான் முதலில் ஒரு தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதன் மையம்வரை ஆழமாக ஊடுருவி அதைப் பகுத்தாய்வு செய்யுங்கள். உங்கள் இருப்பு முழுவதும் அந்த ஒரு சிந்தனையே அதிரட்டும். கிருஷ்ணர் உங்களுக்குச் சொல்லும் அடிப்படை ஸத்யம், ஒருங்குவித்தலும் ஸ்ரத்தையுமே!
ஸத்யத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல், ஒருபோதும் எதையும் செய்யாதீர்கள். அதேபோல, இதுதான் ஸத்யம் என்று உங்களுக்குப் புரிந்துவிட்டால், அதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள். ஸ்ரத்தையின் துணிவே, உங்கள் எலும்பினுள் உள்ள மஜ்ஜையாக ஆனதுபோல் நீங்கள் உறுதியாக எழுந்து நில்லுங்கள். இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஸத்யத்தைப் பயிற்சிசெய்யும்போது எதையாவது இழக்க வேண்டியதிருந்தால், அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இழந்துவிடுவதே நல்லது.
நமது ரிஷிகள், மனிதகுலத்திற்காகவே வாழ்ந்தார்கள் (17.11-17.13)
தானம் எப்படி வழங்கப்பட வேண்டும், யாகங்கள் எப்படிச் செய்யப்பட வேண்டும், மற்றவர்களை எப்படி வளப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார்.
வேத பாரம்பரியத்தில், அக்னிச் சடங்குகள் (யஜ்ஞம், ஹோமம்) போன்ற வளப்படுத்தும் யாகங்கள் தெய்வங்களை வழிபடுவதற்கான வெறும் சடங்குகள் மட்டும் அல்ல; அவை, 'வளப்படுத்துதல்' என்னும் மிக ஆழமான அர்த்தத்தைக்கொண்டுள்ளன.
நமது ரிஷிகள், வேள்விகளைச் செய்தபோது அவர்களிடம் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை. அந்த சடங்குகள் தேவர்களை மகிழ்விக்கவும், மனிதகுலத்தின் நலத்தை வளப்படுத்துவதற்காகவுமே செய்யப்பட்டன. அவை, தன்னலம்கருதா ஸத்வ குணத்திலிருந்து செய்யப்பட்டன.
ஆனால் அரசர்கள் நடத்திய வேள்விகள் அவர்களுடைய ஆதிக்கத்தையும் அகங்காரத்தையும் காட்டுவதற்காக செய்யப்பட்டன. யுதிஷ்டிரர் போன்ற பேரரசர்களும்கூட அவர்களுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, இரஜோ குணத்திலிருந்து ராஜசூய யாகம் போன்ற யாகங்களைச் செய்தனர்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எவ்வளவு தாத தர்மங்கள் செய்யப்படுகின்றன என்பதைப்பொறுத்து, ஒரு 'வளப்படுத்தும் வேள்வி'யின் தரம் மதிப்பிடப்படுவதில்லை.
நம்மால் கொடுக்க முடியாத ஒன்றையும், எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் பொறுத்தே வேள்வியின் தரம் மதிப்பிடப்படுகிறது. இதுபோன்ற வளப்படுத்தும் யாகம், நேரடியாக முக்திக்கு அழைத்துச்செல்கிறது.
ரஜோ நிலையிலிருந்து கொடுப்பதற்குப் பதிலாக, ஸத்வ நிலையிலிருந்து கொடுக்கும் நிலைக்கு மனிதர்கள் மாறும்போது, செல்வம் அவர்களைத் தேடிவரும். செல்வத்திற்கு அதிபதியான தெய்வம் லஷ்மி, கேட்காமலேயே அவர்களைத் தேடி வருகின்றாள்! மனித குலத்தை வளப்படுத்துவதற்கான சிறந்த பாதையாக இவர்கள் விளங்குவார்கள் என்பதை அவள் அறிவாள்.
மற்றவர்களை வளப்படுத்தவேண்டுமென்ற விருப்பமும், மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டுமென்ற விருப்பமும் எல்லையற்றதாக இருக்கட்டும். அப்பொழுது செல்வம் உங்களைத் தேடிவருவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
௵செயல், சொல் மற்றும் எண்ணங்களிலுள்ள தவம் (17.14-17.19)
கிருஷ்ணர் செயல், சொல் மற்றும் எண்ணங்களிலுள்ள தவங்களைப் பற்றி விளக்குகிறார்.
தவம் என்பது அபரிக்ரஹத்தை (எளிமை) அடிப்படையாகக்கொண்ட எளிமையான வாழ்க்கைமுறை.
அது ஒருவரின் தேவை என்பதைப் பொறுத்ததேதவிர, ஒருவரின் ஏக்கங்களை, பேராசைகளை, விருப்பங்களைப் பொறுத்தது அல்ல.
எளிமையான தவ வாழ்க்கைமுறையை வெற்றிகரமாகப் பயிற்சி செய்பவர்தான் ‘தபஸ்வி’.
கிருஷ்ணர், ஶாரீரம் தப (17.14) - உடலால் (செயல்) தவங்களை விளக்குகிறார். தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, ஞானிகளை வழிபடுவது, தூய்மை, நேர்மை, நிகழ்காலத்தில் வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவை உடலால் செய்யக்கூடிய தவம் எனப்படுகிறது.
ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ஸ்வாத்யாயாப்யஸநம் (17.15) -ஸத்யத்தைப் பேசுவதும், இனிமையான சொற்களைப் பேசுவதும், ஆன்மிக இலக்கியங்களைத் தொடர்ந்து படிப்பதும்தான் சொல்லால் செய்யவேண்டிய தவம்!
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒருங்குவித்தலில் நிலைபெற்றிருக்கும் ஒருவருக்கு, தம்முடைய வார்த்தைகள்மூலம் மற்றவர்களுக்குள் குணப்படுத்துதல் விளைவை ஏற்படுத்துவதே அடிப்படை பயிற்சியாக இருக்கிறது. அநுத்வேககரம் வாக்யம் - மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளை நாம் பேசக் கூடாது.
நம்முடைய ‘இருத்தலே’ மற்றவர்களைக் குணப்படுத்துவதாகவும், வளப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். கிருஷ்ணர் இதை, வாங்மயம் தப உச்யதே (17.15)- வாக்கினால் செய்யக்கூடிய தவம் என்று கூறுகிறார்.
மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவை மனதால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன (17.16).
ஒட்டுமொத்த ஶரணாகதி என்ற இயல்பில் இருக்கும்போதுதான், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும்போதுதான், அது ஸத்வ தவமாக இருக்கிறது, ஆன்மிக மதிப்பு உடையதாகிறது (17.17).
ஸத்யத்தைப் பேசுவதும்,
இனிமையான சொற்களைப்
பேசுவதும், ஆன்மிக
இலக்கியங்களைப் படிப்பதும்தான்
பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் தவம், ஞானமடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு செய்யப்படும் தவமும்கூட, ரஜோ மனநிலையில் இருந்து, ஆளுமை அல்லது பேராசையோடு செய்யப்படுவதுதான் (17.18).
உடலால் மட்டுமல்ல, வார்த்தைகளாலும் எண்ணங்களாலும்கூட தன்னையே துன்புறுத்திக்கொள்வது, பிறரைத் துன்புறுத்துவது, தனக்குத்தானே வேதனைகளைத் திணித்துக்கொள்வது, பிறருக்கு வேதனைகளைத் தருவது, இவையெல்லாம் தவம் அல்ல. இப்படிச் செய்யப்படும் தவம், தன்னையும், தனக்குள் வாழும் கடவுளையும் அவமானப்படுத்துவதையே குறிக்கும். இதுபோன்ற செயல்கள் அறியாமையால், தமஸிலிருந்து செய்யப்படுகின்றன (17.19).
உச்சமான வளப்படுத்தும் சேவை - ஞானதானம் (17.20-17.22)
கிருஷ்ணர் தானம் பற்றி, வளப்படுத்தும் சேவை பற்றிப் பேசுகிறார்.
தானம் என்பது வளப்படுத்தும் உணர்விலிருந்து செய்யப்பட வேண்டும். தானம் செய்வதனால் நல்ல பலன் கிடைக்கும் என்றோ அல்லது சொர்க்கத்திற்குச் செல்ல சுலபமான வழிகிடைக்கும் என்றோ எதிர்பார்க்காத ஒரு பகிர்ந்துகொள்ளலாக அது இருக்க வேண்டும்.
அன்பினாலும் நன்றியுணர்வினாலும் பிரபஞ்சத்தை வளப்படுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்விலிருந்தும் செய்யப்படுவதுதான் உண்மையான தானம்!
இங்கே, நான் எந்தெந்த வகையில் ஸத்யத்தை உணர்ந்து அனுபவித்தேனோ, அதை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படுத்தி, அதை மற்றவர்களோடு ச்ரத்தையோடு
யாகம், தபஸ் அல்லது தானம்
என்பவை மேலான விழிப்புநிலைத்
தன்மையை வளப்படுத்துவதாக
பகிர்ந்துகொள்கிறேன். கிருஷ்ணரைப் பொறுத்தவரை இதுதான் ஸாத்விக தாநம்.
சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபருக்குக் கொடுக்கப்படும் தாநம்தான் ஸத்வத்திலிருந்து உண்டாவது (17.20).
ஸத்வ மனோநிலையில் செய்யப்படும் செயல்கள் மட்டும்தான் முழுமையான பலனைக் கொடுக்கிறது. அவை நிறைவுணர்விலிருந்தும், கடவுள் மீதான நன்றியுணர்வுடனும் செய்யப்பட்டால் மட்டுமே, நீங்கள் ஆன்மிக உயர்வடைவீர்கள்.
மூன்று விதமான தானங்கள் இருக்கின்றன. தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அன்னதாநம் - இது உணவு, உடை மற்றும் ஒருவரின் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு கொடுப்பது. அடுத்தது வித்யாதாநம். இது கல்வி அளிப்பது, மற்றும் ஒருவரின் மன வளர்ச்சிக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் கொடுப்பது. மூன்றாவது ஜ்ஞானதாநம், அதாவது ஆன்மிக அறிவைக் கொடுப்பது.
அன்னதாநம் மூன்று மணி நேரத்திற்கு மட்டும் திருப்தி அளிக்கிறது, வித்யாதாநம் அந்த ஒரு பிறவிக்கு மட்டுமே திருப்தி அளிக்கிறது. ஜ்ஞானதாநம், ஒருவரைப் பிறவிக் கடலிலிருந்தே கரையேற்றுகிறது.
அறிவைப் பகிர்வதன் மூலம் மற்றவர்களை வளப்படுத்தும் ஜ்ஞான தாநமே தானங்களிலேயே தலைசிறந்த தாநம், வளப்படுத்தும் உணர்விலிருந்து செய்யப்படும் தாநமே ஸாத்விக தாநம். ஸத்யத்தை நேரடியாக, ஒருங்குவித்தலுடனும் ஸ்ரத்தையுடனும் அணுகும்முறையையே ஸாத்விக தாநம் என்கிறார் கிருஷ்ணர்.
யாகம், தபஸ் அல்லது தாநம் என்பவை மேலான விழிப்புநிலைத் தன்மையை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும்; ஒருவருடைய தனிப்பட்ட நன்மைக்காகவோ அல்லது பொருள்சார்ந்த இலக்கின் அடிப்படையிலோ இருக்கக்கூடாது என்ற புரிதலே இங்கு ஸ்ரத்தை எனப்படுகிறது.
உங்களுக்கு ஓர் இரகசியத்தைச் சொல்கின்றேன், ஜ்ஞானதாநத்தில், நீங்கள் எந்தளவுக்கு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றீர்களோ, அந்தளவுக்கு அது உங்களுக்குள் வளரும்! வித்யாதாநத்தில், கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை. மற்ற எல்லா தாநத்திலும் கொடுப்பவர் எந்தளவுக்குக் கொடுக்கிறாரோ, அந்தளவுக்குத் தாம் வைத்திருப்பதில் இழப்பார்.
பூர்ணத்வ விஞ்ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களை வளப்படுத்தும்போது, உங்களுள் பூர்ணத்வ உணர்வு வளர்கிறது, ஆழமாகிறது.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எல்லாவிதமான யாகமும் தவமும் தாநமும் கிருஷ்ணர் சொன்ன சாத்வீக, ரஜோ, தமோ ஆகிய மூன்று அடிப்படை பிரிவுகளுக்குள் வந்துவிடும்.
ௐ தத் ஸத் (17.23-17.28)
முடிவாக, கிருஷ்ணர் மொத்தமாக வேறொரு தளத்திற்குச் செல்கிறார்.
பூர்ணத்வ உணர்வே வளப்படுத்தும் உணர்வாக வெளிப்படுகிறது. ஆதலால், நாம் ஒவ்வொருவருமே நம்முள் பூர்ணத்வ உணர்வை நிலைநிறுத்தியாக வேண்டும். அந்தப் பூர்ணத்வ உணர்வை அடைவதற்கான நுட்பத்தை இங்கு ஒம் தத் ஸத் என்று தீக்ஷையாக கிருஷ்ணர் வழங்குகிறார். இந்தமுறையில் ஒருவர், தாம் செய்கின்ற செயல்களின் பலனை அந்தத் தெய்விகத்திடம் சரண்செய்துவிட முடியும்.
ஓம் தத் ஸத் என்னும் உணர்விலிருந்து செயல்பரியும், வளப்படுத்துதல் பணியைப்புரியும் ஒருவர் தெய்விக உணர்வோடு ஒன்றாகிறார்.
இந்த மூன்று வார்த்தைகளும் சொல்வது என்னவென்றால்: ‘நான் எல்லாவற்றையும் அந்த ஸத்யத்திற்கு அளிக்க முன்வருகிறேன். நான் கடவுளிடம் எல்லாவற்றையும் சமர்ப்பித்துவிட்டேன். அதுவே ஸத்யமாக இருக்கட்டும்’.
யாகம், தவம், தாநம் ஆகிய அனைத்துச் செயல்களிலும் ப்சரத்தையை உறுதிசெய்ய, இந்த மகாவாக்கியத்தை, மாபெரும் ஸத்யத்தை ஒரு நுட்பமாக அர்ஜுனனிடம் ஒப்படைக்கிறார், ஞான குருநாதர்.
தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், எந்தச் செயலாக இருந்தாலும்,
அது தவமாகட்டும், தானமாகட்டும் அல்லது யஜ்ஞமாகட்டும்
- முழுமையை, கடவுளை அடைவதை நோக்கScreensமாகக் கொண்டிருக்கவில்லையென்றால் அதில் எந்தவித அர்த்தமுமில்லை. கிருஷ்ண அனுபவத்தைப் பெறுவதே, உச்சபட்ச விழிப்பு நிலையை அடைவதே எல்லா வேதங்களிலும் இறுதியான குறிக்கோளாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
குரு மட்டுமே, உங்களைப் பூர்ணத்வ உணர்வால் வளப்படுத்தி, உங்கள் வாழ்க்கையை வெற்றியுடையதாகவும் நிறைவுடையதாகவும் ஆக்க முடியும்.
மிக உயர்ந்த விழிப்புநிலையான நித்யானந்த நிலைக்கு நம்மை வழிநடத்திச்செல்லுமாறு பரப்ரஹ்ம கிருஷ்ணரை வேண்டிக்கொள்வோம். கீதையின் மூலம் உபதேஸித்த ஸத்யங்களை அனுபூதியாக்கிக்கொள்வதற்கான ஸ்ரத்தையை நமக்குத் தந்தருளுமாறு பிரார்த்தித்துக்கொள்வோமாக!
ஓம் தத் ஸத். இது, ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய சிரத்தாத்ரயவிபாக யோகம் எனும் பெயருடைய பதினேழாவது அத்தியாயம்.
