அத்தியாயம்-8: அக்ஷரப்ரஹ்ம யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மரணபயத்தை வெல்வதற்கான தீர்வு
மரணபயம் -
அதுவே நமது உச்சக்கட்ட பயம்!
மரணபயம் பற்றிய எண்ணம்
என்னைத் தொந்தரவு செய்யவில்லை
என்று
எவரொருவர் சொல்கிறாரோ,
அவர் பொய் சொல்கிறார்.
நாம் இறப்பைப்
புரிந்துகொள்ளும் அக்கணமே
நம்முடைய வாழ்க்கை ஒரு
கொண்டாட்டமாகிவிடுகிறது.
கிருஷ்ணர் நமக்கு
மரணத்தின் ரகசியத்தை
வெளிப்படுத்துகிறார்.
ஸ்லோகங்கள்
அதாஷ்டமோகுத்யாய:
அக்ஷரப்ரஹ்ம யோக:
ஏ
அர்ஜுந உவாச
கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம ந
அதிபூகதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே நந 8.1
அர்ஜுனன் சொன்னது
8.1 ஓ பரம்பொருளே! மனிதர்களுக்குள் உயர்ந்தவரே, ப்ரஹ்மம் என்றால் என்ன? 'நான்' என்பது என்ன? 'கர்மா' என்பது என்ன? பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் எவை? வெளிப்படையாகத் தெரியும் பொருள்சார்ந்த உலகம் என்பது என்ன? சிறு தெய்வங்கள் என்றால் என்ன? தயவுசெய்து விளக்குங்கள்.
அதியஜ்ஞ: கதம் கோண்த்ர தேஹேண்ஸ்மிந்மதுஸூதந ந
ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோண்ஸி நியதாத்மபி: நந 8.2
8.2 யாக, யக்ஞ வடிவான கடவுள் இந்த உடலில் எவ்வாறு வாழ்கிறார்? ஓ மதுசூதனரே! உடலின் எந்தப் பகுதியில் அவர் இருக்கிறார்? பக்தி சேவையில் ஈடுபடுபவர்கள், மரண காலத்தில் உன்னை எவ்வாறு அறிகிறார்கள்?
ஸ்ரீபகவாநுவாச
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபா_வோண்த்யாத்மமுச்யதே ந
பூதபா_வோத்ப_வகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித: நடு 8.3
பகவான் சொன்னது
8.3 அழிக்க முடியாததும், எல்லாவற்றையும் கடந்ததுமான ஒன்றே ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நிலையானதன்மையே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது. பொருள்சார்ந்த உலகத்தின் வளர்ச்சி தொடர்பான செயல்கள் அல்லது பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் கர்மா என்று அழைக்கப்படுகிறது.
அதிபூகதம் க்ஷரோ பா_வ: புருஷஸ்சாதிதைவதம் ந
அதியஜ்ஞோண்ஹமேவாத்ர தேஹே தேஹப்ரு’தாம் வர நடு 8.4
8.4 உடலின் இயல்பே முடிவில்லாமல் மாறிக் கொண்டிருப்பதுதான். அந்த மேலான இறைவனின் சக்தி வடிவமே இந்தப் ப்ரபஞ்சம். உடல் எடுத்திருக்கும் எல்லா உயிர்களின் இதயத்திற்குள்ளும் வசிக்கிற பரமாத்மா நானே!
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் ந
ய: ப்ரயாதி ஸ மத்பா_வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய: நடு 8.5
8.5 மரணத்தறுவாயில் யாரொருவர் என்னை நினைத்துக்கொண்டே உயிர்விடுகிறாரோ அவர் உடனடியாக என his தன்மையை அடைந்துவிடுகிறார். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
யம் யம் வாபி ஸ்மரந்பா_வம் த்யஜத்யந்தே கலேவரம் ந
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பா_வபா_வித: நடு 8.6
8.6 மரணகாலத்தில் தம் உடலை விடும்போது எதை நினைத்துக்கொள்கிறாரோ, அந்த நிலையையே ஒருவர் நிச்சயமாக அடைவார்.
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச ந
மய்யர்பிதமநோபுத்தீர்மாமேவைஷ்யஸ்யஸம்சயம் நடு 8.7
8.7 அர்ஜுனா, உனக்கு விதிக்கப்பட்ட போர்செய்தலாகிய கடமையைச்
செய்துகொண்டிருக்கும்பொழுதும், கிருஷ்ணராகிய என்னையே நினைப்பாயாக! உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கே அர்ப்பணம்செய்து, மனத்தையும் புத்திசாலித்தனத்தையும் என்னிடமே பதித்தால் நிச்சயமாக நீ என்னை அடைவாய். அதில் சந்தேகமே இல்லை
அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா ந
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந் நந 8.8
8.8 ஓ ப்ரிதாவின் மைந்தனே! யாரொருவர் என் நினைவிலேயே நிலைபெற்று, பாதை விலகாமல் என்னையே தியானம் செய்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னை அடைவார்.
கவிம் புராணமநுசாஸிதார-
மணோரணீயாம்ஸமநுஸ்மரேத்ய: ந
ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப -
மாதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் நந 8.9
8.9 அந்த மேலான பரம்பொருளைத் தியானிக்கும் ஒருவர், அவரை எல்லாம் அறிந்தவராகவும், பழமைகளுக்கெல்லாம் பழமையானவராகவும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்து பவராகவும், அணுவிலும் அணுவானராகவும், எல்லாவற்றையும் காப்பவராகவும், பருப்பொருள்சார்ந்த உலகாயுதக் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவராகவும், மனத்திற்கும் கற்பனைகளுக்கும் எட்டாதவராகவும் உணர்ந்து தியானிக்க வேண்டும். அவர் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவராகவும், இயற்கை ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், வியக்கத் தக்கவராகவும், சூரியனைப்போன்ற ஒளியுடையவராகவும் விளங்குகிறார்.
ப்ரயாணகாலே மநஸாசலேந
பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ ந
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேச்ய ஸம்யக்
ஸ தம் பரம் புருஷ முபைதி திவ்யம் நந 8.10
8.10 எவன் ஒருவன் மரணமடைகிற நேரத்தில், யோகத்தின் பலனாக, தனது கவனத்தைச் சிதறடிக்காமல், மனத்தையும் உயிர்மூச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தியில் நிறுத்தி, முழு ஸரணாகதியோடு என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான். அவன் நிச்சயமாக என்னை அடைகிறான்.
யதக்ஷரம் வேதவிதோ வதந்தி
விஸந்தி யத்யதயோ வீதராகா: ந
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே நந 8.11
8.11 வேதத்தைக் கற்றறிந்தவர்களும், துறவில் மிகச்சிறந்த முனிவர்களும் ப்ரஹ்மத்தில் நுழைகிறார்கள். அந்த முழுமையை அடைய விரும்பும் ஒருவர் ப்ரஹ்மசர்யத்தை அனுசரிக்கிறார். ஒருவர் எவ்வாறு ப்ரஹ்மத்தை, ஜீவன்முக்தியை அடைய முடியும் என்பதற்கான வழிமுறைகளை, நான் இப்போது உனக்கு விளக்கப் போகிறேன்.
ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ரு'தி நிருத்ய ச ந
மூர்த்ந்யாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் நந 8.12
8.12 புலன்களின் கதவுகளை அடைத்து, மனத்தை இதயத்தில் நிறுத்தி, உயிர்மூச்சை உச்சந்தலையில் நிறுத்தி, ஒருவர் யோகத்தில் தம்மை நிலைக்கச் செய்கிறார்.
ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் ந
ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் நந 8.13
8.13 இத்தகையதொரு யோக நிலையில் இருந்துகொண்டு புனித மந்த்ர ஒலியும் மிக உயர்ந்த மந்த்ர எழுத்துக்களின் தொகுப்புமான ‘ஓம்’ என்பதை உச்சரித்தபடி, மிக உயர்ந்த சக்தியை நினைத்தபடி யார் தம் உடலைவிடுகிறாரோ, அவர் நிச்சயமாக பரம்பொருளுடன் இணைகிறார்.
அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ: ந
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந: ந 8.14
8.14 பார்த்தா! எப்போதும் என் நினைவாகவே இருப்பவர்களுக்கு நான் எளிதில் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பக்தியில் கரைந்து, தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
மாமுபேத்ய புநர்ஜன்ம து:காலயமஸாஸ்வதம் ந
நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா: ந 8.15
8.15 என்மீது பக்தி வைத்துள்ள சிறந்த யோகிகள் என்னை அடைந்த பிறகு, துன்பங்களின் இருப்பிடமும், நிலையற்றதுமாகிய, இவ்வுலகில் மீண்டும் பிறக்காமல் மிக உயர்ந்த முழுமை நிலையை அடைகிறார்கள்.
ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திநோகுர்ஜுந ந
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜன்ம ந வித்யதே ந 8.16
8.16 அர்ஜுனா, மிக உயர்ந்த உலகங்களில் இருந்து மிகத் தாழ்வான இந்தப் பொருள்சார்ந்த உலகம்வரை, எங்கெல்லாம் பிறப்பும் இறப்பும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் துக்கமே உள்ளது. ஓ! குந்தியின் மகனே, என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதே இல்லை.
ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது: ந
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேகுஹோராத்ரவிதோ ஜநா: ந 8.17
8.17 மனிதர்களின் கணக்குப்படி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் டூ சார்ந்ததுதான் ப்ரஹ்மாவின் ஒரு பகல், அவரது இரவும் அப்படியே.
அவ்யக்தாத்வ்யக்தய: ஸர்வா: ப்ரபவம்த்யஹராகமே ந
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே ந 8.18
8.18 ‘தோன்றாத நிலை’யிலிருக்கும் ஆத்மாக்கள் அனைத்தும் ப்ரஹ்மாவின் பகலின் தொடக்கத்தில் உயிரினங்களாக வெளிப்படுகின்றன. ப்ரஹ்மாவின் இரவு வரும்போது அவை மீண்டும் ‘தோன்றா நிலை'யிலேயே ஒடுங்கிவிடுகின்றன.
பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே ந
ராத்ர்யாகமேண்வஸ: பார்த ப்ரபவத்யஹராகமே ந 8.19
8.19 ஓ ப்ரிதாவின் மகனே! மீண்டும் மீண்டும் பெருந்திரளாக இவ்வுயிர்கள், பகல் தொடங்கும்போது வெளிப்பட்டு செயல்பட்டு, இரவு வரும்போது இயற்கையாகவே மறைந்துவிடுகின்றன.
பரஸ்தஸ்மாத்து பாவோண்ந்யோண்வ்யக்தோண்வ்யக்தாத்ஸநாதந:
ந
ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நப்யத்ஸு ந விநப்யதி ந 8.20
8.20 ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்ட இயற்கை ஒன்று உண்டு. அது நிலையானது; அது தோன்றிய மற்றும் தோன்றாதவற்றிற்கும் அப்பாற்பட்டது. அந்த மஹோன்னதமான சக்தி அழிவதில்லை. இந்த உலகங்களெல்லாம் அழிக்கப்பட்டாலும், அது மாறாமல்இருக்கிறது.
அவ்யக்தோண்க்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம் ந
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம ந 8.21
8.21 அந்த மஹோன்னதமான இருப்பிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாததாகவும் அழியாததாகவும் முடிவான லக்ஷ்யமாகவும் இருக்கிறது. ஒருவர் எனது அந்த மஹோன்னதமான இருப்பிடத்தை அடைந்துவிட்டால் அவர் திரும்ப வருவதில்லை.
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா ந
யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம் ந 8.22
8.22 ஓ பார்த்தா! உயர்ந்த அந்தப் பரம்பொருளை மாறாத பக்தியால் அடைய முடியும். அவர் தமது இருப்பிடத்திலேயே இருந்தாலும், எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளார். அவரிடத்திலேதான் அனைத்தும் நிலைகொண்டு உள்ளன.
யத்ர காலே த்வநாவ்ரு'த்திமாவ்ரு'த்திம் சைவ யோகிந: ந
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப நந 8.23
8.23 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான் இப்போது, உலகை விட்டுச்சல்பவர்கள் எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் வருவதில்லை, எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் பிறக்கிறார்கள் என்பதை விளக்குகிறேன்.
அக்நிர்ஜ்யோதிரஹ: பஸுக்ல: ஷண்மாஸா உத்தராயணம் ந
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா: நந 8.24
8.24 ஓ! பார்த்தனே! 'தீ'க்கடவுள், ஒளியிருக்கும் நேரம், நல்ல நேரம், வளர்பிறை, சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறுமாத காலம் (உத்தராயண காலம்), இந்தக் காலங்களில் இறப்பவர்கள் முக்தியடைகிறார்கள். மிக உயர்ந்த அந்த ப்ரஹ்மத்தை உணர்ந்தவர்கள் திரும்புவதில்லை.
தூமோ ராத்ரிஸ்ததா க்ரு'ஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம் ந
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே நந 8.25
8.25 புகை, இரவு நேரம், தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிச் செல்கிற ஆறுமாத காலம் (தக்ஷிணாயன காலம்), இந்தக் காலங்களில் உடலைவிடும் யோகிகள் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் ஆத்ம பஸரீரம்வரை சென்று விட்டு, மீண்டும் இவ்வுலகிற்கு திரும்பி வருகிறார்கள்.
பஸுக்லக்ரு'ஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: பஸாஸ்வதே மதே ந
ஏகயா யாத்யநாவ்ரு'த்திமந்யயாவர்ததே புந: நந 8.26
8.26 வேதங்களைப் பொறுத்தவரை ஒருவர் இறக்கும்போது இரண்டு விதமாகப் பயணம் செய்யலாம். ஒன்று, ஒளியின் பாதை மற்றொன்று, இருளின் பாதை. ஒளியின் பாதையில் செல்பவர் திரும்புவதில்லை; இருளின் பாதையில் செல்பவர் மறு பிறவி எடுக்கிறார்.
நைதே ஸ்ரு’தீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஸ்சந ந
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந நந 8.27
8.27 ஓ பார்த்தா! இந்த இரண்டு வழிகளையும் அறிந்தவர்கள் தடுமாறுவதே இல்லை. ஓ அர்ஜுனா! அதனால் எப்போதும் பக்தியில் நிலைத்திரு.
வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ
தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம் ந
அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா
யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம் நந 8.28
8.28 பக்தியமயமான சேவை என்ற பாதையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் ே வதங்களைக் கற்பது, பூஜைகளைச் செய்வது, வேள்விகள் செய்வது, தான தருமங்களைச் செய்வது, பக்தி செய்வது, பலன்களை எதிர்பார்த்து செய்யும் செயல்கள் ஆகிய எல்லாவற்றின் பலனையும் கடந்துசெல்கிறார். முடிவில் அவர் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஸாஸ்த்ரே ஸ்ரீக்ரு’ஷ்ணார்ஜுநஸம்வாதே
அக்ஷர ப்ரஹ்மயோகோ நாமாஷ்டமோஉnavigationத்யாய: நந
ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய அக்ஷர பிரஹ்ம யோகம் என்னும் பெயர்கொண்ட எட்டாவது அத்தியாயம்.

உங்கள் மரண பயத்தை வெல்வதற்கான தீர்வு
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் மரணத்தைப் பற்றிப் பேசுகிறார். மரணம், அது எப்படி நமக்கு ஒரு விடுதலையாகவும் கொண்டாட்டமாகவும் மாற முடியும் என்பது பற்றிய ஒரு உட்தெளிவைத் தருகிறார்.
இங்கு அர்ஜுனன் மிக அழகாகக் கேட்கிறார், "ஓ பிரபுவே! ப்ரஹ்மம் என்பது என்ன? 'நான்' என்பது என்ன? பலன்களை அடிப்படையாகக் கொண்ட கர்மா என்பது என்ன? வெளிப்படையாகத் தெரியும் இந்த உடல்சார்ந்த உலகம் என்பது என்ன? அதிதேவதைகள் என்பவை எவை? ஓ மதுசூதனா! உடலில் நீ எவ்வாறு இருக்கிறாய்? அந்த நிலையான விழிப்புணர்வு நிலையில் இருக்கும் சாதகர்கள் எவ்வாறு மரண காலத்தில் உன்னை உணர்கிறார்கள்?" என்று தொடர்ந்து அடு க்களுக்காக கேள்விகளைக் கேட்கிறார்.
இங்கு அர்ஜுனன் கேட்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால் "உங்கள் போதனைகளைப் பின்பற்றுகின்ற சாதகர்கள் மரண காலத்தில் உங்களை எப்படி உணர்கிறார்கள்?"
மரணத்தை அறிந்தால்தான் வாழ்வையே அனுபவிக்க முடியும் (8.1-8.2)
இங்குதான் கிருஷ்ணரின் முழுமையான போதனை ஆரம்பிக்கிறது; அவர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.
ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். மேற்கத்திய நாடுகள் வாழ்தலைப் பற்றி அறிந்துகொள்ள தங்கள் முழு ஸக்தியையும் செலவிட்டுள்ளன. கிழக்கத்திய நாடுகள் மரணத்தைப் பற்றி அறிந்துகொள்ள தங்கள் முழு ஸக்தியையும் செலவிட்டுள்ளன.
நமது ரிஷிகளைப்போல மிக ஆழமாக மரண அனுபவத்திற்குள் சென்று, மரணத்தைப் பற்றிய அறிவைப்பெற்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு தாங்கள் பெற்ற மரணம்பற்றிய அறிவை மனிதகுலத்திற்கு வழங்கியதன்மூலம், மனிதகுலத்திற்கு அவர்கள் மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார்கள்.
மரணத்தை அறிவுப்பூர்வமாக உணருங்கள். உங்கள் மொத்த சிந்தனையும் மாறும். உங்கள் வாழ்க்கைமுறையே முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுவிடும். இந்த இடத்தை விட்டு நீங்கள் அதே மனிதராகப் போக வேண்டிய தேவை இல்லை. உங்கள் இருப்புத்தன்மையையே மாற்றி அமைத்துவிட முடியும். உங்கள் உள் மையம் தொடப்படும்.
கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை விளக்க ஆரம்பிக்கிறார்.
| மரணத்தை அறிவுப்பூர்வமாக | | :---: | | உணருங்கள். உங்கள் | | வாழ்க்கைமுறையே முழுமையாக | | மாற்றி அமைக்கப்பட்டுவிடும். |
உங்கள் கடைசி எண்ணமே உங்கள் மறு பிறவியின் தொடக்கம் (8.3 -8.6)
மரண சமயத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிந்துகொள்ளுவதற்கு முன், நாம் இந்த உடலை எப்படி எடுக்கிறோம் என்பதையும், இந்த உடலை வைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறோம் என்பதையும், இந்த உடலை எப்படி விட்டுச்செல்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், நாம் நமது மொத்த உடலையும் பயம், ஆசை, குற்றவுணர்ச்சிபோன்ற மூலமனப்பாங்குகளினாலேயே (ஸம்ஸ்காரங்கள்) உருவாக்குகிறோம். நம்முள் எந்த ஸம்ஸ்காரங்கள் இருக்கிறதோ, அதை வாழ்வதற்கும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கும் ஏற்ற உடலைத்தான் உருவாக்கிக்கொள்கிறோம்.
பிரச்சினை என்னவென்றால், ஒருமுறை நமது உடலை உருவாக்கி, வாழ்க்கையை வாழும்போது, எந்த ஸம்ஸ்காரங்களுக்காக நாம் உடலை உருவாக்கிக் கொண்டோமோ அவற்றை மட்டும் நாம் வாழ்வதில்லை. அவற்றோடு மேலும் புதிய ஸம்ஸ்காரங்களைச் சேர்த்துக்கொள்கிறோம்.
ஆழ்ந்து கேளுங்கள், நீங்கள்கொண்டுவந்த ஆசைகளை நிறைவேற்றி, பூர்ணத்வம் நிறைந்த வளம்படுத்தும் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும்!
நீங்கள்விரும்புவதைநிஜமாக்கும் சக்தியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் வளப்படுத்தி, உங்களுக்கு உடல்நலம் முதற்கொண்டு, செல்வம், அர்த்தமுள்ள உறவுகள், நீண்டகால மகிழ்ச்சி ஆகிய அனைத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் ‘சுய -உணர்வுமாற்றத்தை’ நீங்கள் அடைவதற்குரிய ஆற்றலையும் பெற்றிருக்கிறீர்கள்.
கடவுள், நம்மை இந்தப் பூமிக்கு வெறுங்கையோடு அனுப்பவில்லை. அவர் நம்மோடு நமது உள்ளார்ந்த சக்திகளுடன் எல்லாவற்றையும் சேர்த்தே கொடுத்தனுப்பியிருக்கிறார். ஆனால் நாம்தான் ‘நாம் எல்லா சக்திகளையும் பெற்றிருக்கிறோம்’ என்பதை மறந்துவிட்டோம்.
கேளுங்கள், கர்மா என்பது பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளாகும். அந்த நிறைவேறாத ஆசைகள்தான், நம்மை மீண்டும் மீண்டும் பிடித்து இழுக்கின்றன. அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாம் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியுள்ளது.
ஸஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா, ப்ராரப்த கர்மா என்று மூன்று வகையான கர்மாக்கள் உள்ளன.
ஸஞ்சித கர்மா என்பது நமது நிறைவேறாத ஆசைகளின் மொத்த இருப்பாகும். நமது அலுவலக அலமாரியில் எதிர்காலத் தேவைக்காக அதாவது எதிர்கால ஆய்வுக்காக பாதுகாப்பாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப்போன்றது.
ப்ராரப்த கர்மா என்பது இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக நாம்கொண்டு வந்திருக்கும் ஆசைகளாகும். தினமும் நாம் எளிதில் எடுத்து, வேலை செய்வதற்கேற்ற வகையில் நமது மேஜை இழுப்பறையில் வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப்போன்றது இது.
ஆகாம்ய கர்மா என்பது இந்தப் பிறவியில் புதிதாகச் சேர்க்கும் ஆசைகள், இந்தப் பிறவியில் நாம் உருவாக்கும் புதிய கர்மாக்கள்; இப்போது புதிதாகச் செய்துகொண்டிருக்கும் வேலைகளுக்காக உருவாக்கி வைத்திருக்கும் புதிய ஃபைல்கள் இது.
இந்த மூன்று விதமான கர்மாக்களையும் நாம் முழுவதுமாக அனுபவித்து தீர்த்தால் மட்டுமே ஞானமடைய முடியும்.
நீங்கள் பூமிக்கு வந்த வேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ப்ராரப்த கர்மா என்பது 'ஓபனிங் பேலன்ஸ்'போல. இந்தப் பிறவியில் அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்தியோடுதான் வந்திருக்கிறோம். பிறகு ஏன் நாம் இந்த வாழ்வை நிறைவாக உணர்வதில்லை?! இந்த வாழ்க்கை போதாதென்று ஏன் நினைக்கிறோம்?
பிரச்சினை என்னவென்றால் இங்குக் கீழிறங்கி வந்தபிறகு நாம் எந்த ஆசைகளை, எந்த ஸம்ஸ்காரங்களை, மூலமனப்பாங்குகளை வாழ்ந்து தீர்ப்பதற்காக வந்தோம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
நாம் கொண்டுவந்த ஸம்ஸ்காரங்கள், ஆசைகள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் சமுதாயத்திடமிருந்தும் புதிய புதிய ஆசைகளை வாங்கிக் கொள்கிறோம். மற்றவர்களுடைய ஆசைகளை வாங்கி அவற்றை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்காக நாம் உழைக்கிறோம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் நம்முடைய சொந்த ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும்வரை வாழ்க்கைப் பிரச்சினைகள் இல்லாமல் நன்றாகவே இயங்குகிறது. ஆனால் நாம் மற்றவர்களின் ஆசைகளை வாழ ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
நம் வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நமது ஆசைகள்தான் நிர்ணயிக்கின்றன, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் நமது ஆசைகளால் எப்படி ஆளப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது மரணத்தின் இரகசியத்தையும் புரிந்துகொள்கிறோம். மரணத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ள இது ஒரு அடிப்படையாக அமைகிறது.
நாம் எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, நாம் உடலை விட்டுப்போகும்போது என்ன நடக்கிறது என்பதையும் எளிதாகப் புரிந்துகொள்கிறோம்.
நாம் இதை ஆழமாகப் புரிந்துகொண்டால், 'எல்லாவற்றையும் நம்முடைய உடைமைகளாக்கிக்கொள்ள வேண்டும்' என்கிற நம்முடைய ஆசைகள் தானாகவே விழுந்துவிடும்.
மூன்று விதமான கர்மாக்களையும்
நாம் முழுவதுமாக அனுபவித்து
தீர்த்தால் மட்டுமே ஞானமடைய
நம்பமுடியாத உண்மை
கிருஷ்ணர் அடுத்த ஸ்லோகத்தில் இன்னும் ஆழமாகப் போகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், "ஓ மனிதர்களுக்குள் சிறந்தவனே! மாறிக்கொண்டே இருக்கிற உடலின் இயல்புதான் அதி பூதம். கடவுளின் வடிவமாக வெளிப்பட்டிருக்கும் பிரபஞ்சமும், சிறு தெய்வங்களும் - உதாரணத்திற்கு சூரியன், சந்திரன் போன்றவை அதி தெய்வங்கள் எனப்படுகின்றன. உடல் எடுத்திருக்கிற எல்லா உயிர்களின் இதயத்திலும் ஆத்மாவாக இருக்கும் மேலான பரமாத்மா நானே, என்னை அதியஜ்ஞ என்று அழைக்கிறார்கள்."
நாம் எதையெல்லாம் பருப்பொருள் என்கிறோமோ, அவையெல்லாம் சக்திதான். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த உண்மை உள்-உலக விஞ்ஞானிகளான ரிஷிகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது
எல்லாத் திடப் பொருட்களுமே சக்தியாகும். அவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது அதை வெறும் திடப் பொருளாகவே நினைக்கிறோம், உடல்சார்ந்த பொருளாகவே அதை நாம் பார்க்கிறோம். நாம் அதை நம்முடைய உடைமையாக்கிக்கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். எல்லாமே சக்திதான் என்பதையும் அந்தச் சக்தியை ஒரே இடத்தில் பிடித்துவைக்க முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்.
அது எல்லோருக்குமானது. நாம் பார்க்கிற ஒவ்வொரு திடப்பொருளும் பிரபஞ்ச சக்தியின் வடிவமே! இந்த அடிப்படை ஸத்யத்தைப் புரிந்துகொண்டால், ஒன்றைப் பற்றிக்கொண்டு
நாம் பார்க்கிற ஒவ்வொரு திடப்பொருளும் பிரபஞ்ச சக்தியின் தொங்குவதோ, பொருட்களின் பின்னால் ஓடுவதோ பயனற்ற செயல் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
புரிந்துகொள்ளுங்கள், எல்லாப் பொருட்களும், எல்லா மனிதர்களும் அந்த அடிப்படையான சக்தியில் இருந்துதான் உருவாக்கப்படுகிறார்கள்.
கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில் மிகத் தெளிவாகச் சொல்கிறார், “அதியஜ்ஞோண்ஹமேவாத்ர தேஹே தேஹப்ரு’தாம் வர (8.4) -எல்லாப் பொருட்களும், அவை உயிர் உள்ளவையானாலும்சரி, உயிரற்றவையானாலும்சரி பரமாத்மாவின் வடிவங்களே, பரமாத்மா எல்லாவற்றிலும் இருக்கிறார்.”
இதைப் புரிந்துகொண்டால், நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாவற்றிலும் நாமும் ஒரு பகுதியாகவே இருக்கிறோம் என்ற ஸத்யத்தைப் புரிந்து கொள்வோம், எல்லாவற்றுடனும் பூர்ணத்வம் செய்துகொள்வோம்.
உங்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்த நாற்காலிக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அந்த மரத்திற்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாவற்றிலும் நாம் நம்மையே பார்க்கிறோம்!
ஆழ்ந்து கேளுங்கள்! ‘மற்றவர்களை வளப்படுத்துவது உங்களையும் வளப்படுத்துகிறது’ என்று நான் சொல்வதற்கு இதுவே பொருள்.
நீங்கள் உங்களையும் வளப்படுத்திகொண்டு மற்றவர்களையும் வளப்படுத்துங்கள். அதன்பின்பு, நீங்கள் மற்றவர்களுடன் ஒன்றுபட்டு இருக்கிறீர்கள் என்பதையும், மற்றவர்களும் உங்களுடன் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதையும் அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொள்வீர்கள்.
அதன்பின்பு நாம் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிடும். இது நாம் நம் ஆசைகளையும், நம் கற்பனைகளையும் உணர்ந்துகொள்ளும் விதத்தையே முற்றிலும் மாற்றிவிடும். கிருஷ்ணர், ஒரே ஒரு சூத்திரம், ஒரே ஒரு நுட்பத்தின் மூலம் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்துவிடுகிறார்.
ஓசொல்லப்படும் அனைத்தும்
ஸத்யத்தைத்தவிர வேறொன்றுமில்லை
கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.
"எவரொருவர் இறக்கும்தறுவாயில் என்னை மட்டுமே நினைக்கிறாரோ அவர் என்னை உடனடியாக அடைவார்," என்று சொல்கிறார்.
'என்னை மட்டுமே!' என்று சொல்வதன் மூலமாக கிருஷ்ணர் என்ன சொல்லவருகிறார்! "யார் வாழ்க்கையின் முடிவில் என்னை நினைத்தபடி உடலைவிடுகிறாரோ, அவர் என் நிலையை அடைகிறார். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
நாஸ்த்யத்ர ஸம்சய: - அதில் சந்தேகமேயில்லை என்ற வார்த்தைகளை ஏன் சொல்கிறார்? ஏனென்றால் அவர் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசப்போகிறார். வெளி-உலகைப் புரிந்துகொள்வதற்கு நமக்குத் தர்க்க அறிவு தேவை. உள்-உலகைத் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஒரு குரு தேவை, நம்மைத் தர்க்கத்திற்கு அப்பால் எடுத்துச்செல்ல நமக்கு ஒரு குரு தேவை.
அவர், "யார் மரணத்தறுவாயில் என்னை மட்டுமே நினைத்துக்கொண்டு உடலைவிடுகிறார்களோ அவர்கள் உடனடியாக எனது தன்மையை அடைகிறார்கள்," என்ற ஸத்ய ப்ரமாணம் எடுத்துக்கொள்கிறார். 'இதுதான் ஸத்யம்' என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.
இன்னுமொரு முக்கியமான விஷயம். கர்மாக்கள், ஸம்ஸ்காரங்கள் என்றாலே முழுமையாக அனுபவிக்கப்படாத ஆசைகளையே குறிக்கின்றன. அடிப்படையில் நீங்கள் நிறைவானவர்களே! ஆனால் நீங்கள் ஏதாவது ஒரு செயலை முழுமையாக நிறைவேற்றாமல் விட்டுவிடும் போதெல்லாம், அதில் மிச்சம்வைத்துவிடுகிறீர்கள். உங்கள் மனத்தில் அதைப்பற்றிய எண்ணப்பதிவை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள்.
ஸம்ஸ்காரம் என்பது உங்கள் விழிப்புணர்வற்ற மனநிலையில் பதிவுசெய்யப்பட்ட இறந்துபோன நினைவு மட்டுமல்ல, அந்த ஆசை நிறைவடையும்வரை மீண்டும் மீண்டும் அதே செயல்களைச் செய்ய உங்களைத் தூண்டிக்கொண்டே இருக்கும் சக்திகொண்டதாகவும் அது இருக்கிறது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஸம்ஸ்காரம் என்பது வாழும் ஶக்தி. ஏனென்றால் உங்களை ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும் ஶக்தி அதற்குண்டு. ஒரே பாதையில் மீண்டும் மீண்டும் உங்களைப் பயணிக்க வைக்கக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் ஸம்ஸ்காரங்களை, மூலமனப்பாங்குகளை எண்ணப் பதிவுகள் என்கிறோம்.
எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அந்தப் பாதையில் போகிறீர்களோ அந்தளவுக்கு அது ஆழமானதாகிவிடும், பலங்கொண்டதாகிவிடும்.
ஆனால் ஒரு ஸமஸ்காரத்தையாவது நீங்கள் முழுமையாக வாழ்ந்து முடித்து விட்டீர்கள் என்றால் அந்த எண்ணப் பதிவு உங்களைவிட்டு நீங்கிவிடுகிறது! உங்கள் உணர்விலிருந்து அது உதிர்ந்துவிடுகிறது. நீங்கள் அதிலிருந்து விடுதலையடைந்துவிடுவீர்கள்.
எதை நீங்கள் முழுமையாக அனுபவிக்கவில்லையோ அது ஸம்ஸ்காரமாக, கர்மாவாக உங்களுக்குள் தங்கிவிடுகிறது.
நீங்கள் முடிவெடுக்கும் நேரம்
கேளுங்கள், உங்களுடைய ஒவ்வொரு பிறப்புமே பூர்ணத்துவத்தைப் பற்றிய உங்களுடைய பிரகடனம்தான்; நீங்கள் முழுவதையும் புதிதாகத் தொடங்குகிறீர்கள். ஆனால் நீங்கள் பிறக்கும்சமயத்தில், உங்களுடைய பிரகடனத்திலிருந்து தவறிவிடுகிறீர்கள், உங்களுடைய கடந்தகால குறைவுணர்வுகளிலிருந்து
வெளி-உலகைப் புரிந்துகொள்ள
தர்க்க அறிவு தேவை. உள்-உலகைத்
தெரிந்துகொள்ள ஒரு குரு தேவை.
சிலவற்றை திரும்பவும் கொண்டுவந்துகொள்கிறீர்கள். அதுவே ப்ராரப்த கர்மம் எனப்படுகிறது.
புண்ணியங்களும் கர்மங்கள்தான்.
அவையும் நம்மை ஞானமடைய
அனுமதிக்காது.
நீங்கள் நிலைதவறுவதே இல்லையென்றால், மறுபடியும் குறைவுணர்வு நிலைக்குப் போகவில்லையென்றால், தொடர்ந்து பூர்ணத்வ உணர்வுநிலையிலேயே உங்களால் இருக்க முடிந்ததென்றால், நான் சொல்கிறேன், நீங்கள் ஒரு அவதாரம்!
மரணத்தறுவாயில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள். அதனால்தான், கிருஷ்ணர், யம் யம் வா பி ஸ்மரன் பாவம் என்று சொல்கிறார். அதாவது மரணத்தறுவாயில் நினைவற்ற நிலையில் இருந்தால் கீழான நிலையிலான உடலையே நாம் அடுத்த பிறவியில் எடுக்கிறோம். மிக உயர்ந்த உணர்வுநிலையை அடையாத பிறவியையே எடுக்கிறோம்.
நான்கு ஸரீரங்களுக்குப் பிறகு அடுத்த மூன்று உள் ஸரீரங்களிலும்தான் நமது ஆனந்த அனுபவங்கள் பதிந்துள்ளன. இவற்றைத்தான் நாம் சொர்க்கம் என்கிறோம். நாம் இங்கேயே தங்கியிருந்தாலும்கூட, அங்கிருந்தும் நகரத்தான் வேண்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், புண்ணியங்களும் கர்மங்கள்தான். அவையும் நம்மை ஞானமடைய அனுமதிக்காது.
என்னையே நினைத்திருந்தால்... உன்னிடமே வந்திடுவேன்(8.7 -8.10)
முதல் இரண்டு ஸ்லோகங்களிலும் கிருஷ்ணர், “அர்ஜுனா, நீ எப்போதும் என்னையே நினைக்க வேண்டும். உன்னுடைய வழக்கமான கடமைகளைச் செய்யும்பொழுதுகூட நீ என்னைப் பற்றிய உணர்விலேயே இருக்க வேண்டும். உன்னுடைய மனமும் புத்தியும் என்னில் நிலைத்திருக்குமானால், உறுதியாக நீ என்னை அடைவாய். இதில் சந்தேகமே இல்லை,” என்கிறார்.
மாம் ஏவ ஏஷ்யஸி அஸம்ஶய: (8.7) - “சந்தேகம் இல்லாமல் நீ என்னை அடைவாய்,” என்கிறார். மீண்டும் மீண்டும் அவர், அஸம்ஶய - ‘சந்தேகம் இல்லாமல்’ என்கிற சொல்லைச் சொல்கிறார்.
நாம் எதை வாழ்நாள் முழுவதும் நினைக்கிறோமோ அந்த நினைவுதான் மரணத்தறுவாயிலும் வரும். மரணத்தறுவாயில் நாம் எதை நினைக்க விரும்புகிறோமோ, அதை நம்மால் அப்போது கடைசி நேரத்தில் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. நமது விழிப்புணர்வு அந்த நேரத்தில் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.
எந்த நினைவில் வாழ்நாள் முழுவதும் ஆழமாக வாழ்ந்திருக்கிறோமோ அந்த நினைவுதான் தோன்றும்.
அதனால்தான் கிருஷ்ணர், "மய்யர்பிதமநோபுத்திர் (8.7) -நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்யும்போதுகூட என் நினைவிலேயே இருங்கள்," என்கிறார். இதன் பொருள் என்னவென்றால் நாம் வாழும்போதுகூட, தொடர்ந்து நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வில், கிருஷ்ண உணர்வுநிலையில், ஸாக்ஷி பாவனையுடன் இருக்க வேண்டும்.
காரோட்டும்போது, அமர்ந்திருக்கும்போது, பேசும்போது, உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். அவ்வாறு உங்கள் உடலையும் மனத்தையும் ஸாக்ஷியாக இருந்து பார்க்கும்போது, உங்களுக்குள் ஏற்படும் தளர்வான நிலையையும் துக்கத்திலிருந்துவிடுபட்ட நிம்மதியான உணர்வையும் ஒருமுறை நீங்கள் அனுபவித்துவிட்டீர்களானால், அந்த அமைதி நிலைக்காக, அந்த ஆனந்த அனுபத்திற்காகவே ஸாக்ஷி பாவனைக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் திரும்பி வருவீர்கள்.
மரணத்தறுவாயிலும் உங்கள் உயிரின், இருப்புத்தன்மையின் ஆழ்ந்த விழிப்புணர்வு நிலைக்கு, உடல் -மனம் தாண்டிய ஸமாதி நிலைக்குச் செல்வீர்கள். மிகஉயர்ந்த விழிப்புணர்வு நிலையை அடைவீர்கள்.
ஒருவேளை நீங்கள் மீண்டும் பிறப்பெடுக்கக்கூட முடிவுசெய்யலாம். அப்போது உங்கள் பிறப்பை நீங்களே விழிப்புணர்வுடன் முடிவுசெய்ய முடியும், ஞானிகளைப்போல!
கிருஷ்ணர் இதை யோக ப்ரஷ்ட என்று சொல்கிறார். நமது ஆன்மிக வளர்ச்சிக்குத் தடை சொல்லாத, நமது ஆன்மிக வளர்ச்சிக்கு ஏற்ற குடும்பத்தில் பிறப்போம். வெகு சில ஆத்மாக்கள்தான் இதுபோன்ற முடிவை எடுத்து, தம் ஆன்மிக வளர்ச்சிக்குத் தடைசொல்லாத குடும்பங்களில் பிறக்கின்றன என்று சொல்கிறார்.
உள்-உலக மாற்றத்திற்காகவே உருவானவை ஸ்லோகங்கள் (8.11 -8.14)
ப்ரஹ்மத்தை, கடவுளை அல்லது அந்த உயர்ந்த உணர்வுநிலையை அடைவதற்குப் பல வழிமுறைகளைச் சொல்கிறார் கிருஷ்ணர். வேதத்தில் சிறந்தவர்கள் ப்ரஹ்மத்தை அடைகிறார்கள் என்று அவர் சொல்கிறார்.
கிருஷ்ணர் இவ்வாறு சொல்லும்போது, வேதங்களைப் படித்துவிட்டு, அவற்றை அப்படியே மறந்துவிடுவதைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை; அவற்றுனுள் இன்னும் ஆழமாகப் போவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். நாம் இறக்கும்தறுவாயில் எதை நினைக்கிறோமோ அது நமது அடுத்த பிறவியோடு நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கிறது. ஒருவர் வேதங்களிலேயே தொடர்ந்து ஆழ்ந்து இருப்பாரேயானால், அவரது நினைவுகளும் தொடர்ந்து அதிலேயே ஆழ்ந்து இருக்கும். அதைத்தான் கிருஷ்ணர், “வேதங்களிலேயே ஆழ்ந்திடுங்கள்,” என்ற தமது வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்.
வேத நூல்களை மீண்டும் மீண்டும் படித்து அதன் ஸத்யங்களை உள்வாங்கிப் புரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதைத்தான் கிருஷ்ணர் விரும்புகிறார்!
‘தன்னை உணர்தல்’ என்ற இலக்கை நோக்கியே நமது எண்ணங்கள் இயக்கப்படும்போது, செலுத்தப்படும்போது, இயற்கையாகவே,
> ‘தன்னை உணர்தல்’ என்ற இலக்கை
> நோக்கியே உங்களது எண்ணங்களை
> செலுத்துங்கள்.
மரணத்தறுவாயிலும் நமது எண்ணங்கள் ஞானத்தைப் பற்றியதாகவே நிச்சயம் இருக்கும்.
கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இறப்புக்கு முந்தைய அந்தக் கடைசி நினைவின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறார். இது மிகச்சிறந்த நுட்பம். மக்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, மிக அழகாக உடலைவிட்டுச் சென்றிருக்கிறார்கள்!
புரிந்துகொள்ளுங்கள், இதைப் பயிற்சிசெய்து, மிக உயர்ந்த சக்தியான உச்சமான விழிப்புணர்வு சக்தியுடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். கிருஷ்ணர், அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறார். “நாம் நமது எண்ணங்களை தெய்விகத்தை நோக்கிச் செலுத்தும்போது, நமது ஆசைகளும் பயங்களும் துடைக்கப்பட்டுவிடுகின்றன. நமது மொத்த இருப்புத்தன்மையும் அந்தத் தெய்விக சக்தியின் மீதான நன்றியுணர்வால் நிறைகிறது.
நாம் கடவுளை நினைப்பதும், அவர்மீது பக்திகொள்வதும் பிரபஞ்ச சக்தியின் மீதான நன்றியுணர்வினாலேயே இருக்க வேண்டும்.
என்னை அடைந்தவர் மீண்டும் பிறப்பதில்லை (8.15-8.18)
இப்போது கிருஷ்ணர், “ஆழ்ந்த யோக நிலையை அடைந்த மிக உயர்ந்த ஆத்மாக்கள், என்னை அடைந்த பிறகு இந்தத் துக்கங்கள் நிறைந்த நிலையற்ற உலகிற்கு வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் மிக உயர்ந்த முழுமையை அடைந்துவிடுகிறார்கள் (8.15),” என்று சொல்கிறார்.
அவர், “பிரபஞ்ச சக்தி பார்த்துக்கொள்ளட்டும்,” என்று சொல்கிறார். எல்லாப் பொறுப்புக்களையும் பிரபஞ்ச சக்தியிடமே விட்டுவிடச் சொல்கிறார்.
பூர்ணத்வ உணர்வைப் பெறுவதற்காக ஆழமாக உழையுங்கள்.
அப்படியொரு ஸரணாகதி நிகழ்கிறபோது உள்ளே மிகப்பெரிய விடுதலையுணர்வு ஏற்படுகிறது. விடுதலையுணர்வு ஏற்பட்ட அந்தக் கணமே நமக்குள் பளிச் என ஆனந்த உணர்வு மலர்கிறது. நாம் ஆனந்தத்தால் மலர்கிறோம்.
நாம் எதிர்பார்த்தபடி செயல்கள் நடக்காதபொழுது, அதனைத்துக்கமாக நினைக்கிறோம். ஏனென்றால் நாம் அதைக் கட்டுப்படுத்துவதாக நினைக்கிறோம். ஆனால் ஞானிகள் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் நீரோட்டம்போல் தளர்வாய் செல்கிறார்கள். எது வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்; அதைப் பிரபஞ்ச சக்தியிடம் சமர்ப்பித்துவிடுகிறார்கள்.
அடுத்த ஸ்லோகத்தில் கிருஷ்ணர் துக்கம் நிறைந்த உலகைப் பற்றியும், நற்செயல்களும்கூட நம்மைப் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியிலிருந்து ஏன் வெளியே எடுத்துச்செல்ல முடிவதில்லை எனவும் விளக்குகிறார்.
"பொருள்சார்ந்த உலகங்களிலேயே மிக உயர்ந்த உலகமாக கருதப்படும் ப்ரஹ்ம லோகத்தில் இருந்து மிகத் தாழ்ந்த பொருள்சார்ந்த உலகமான பூலோகமவரை பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நிகழ்வதால் துக்கமே நிறைந்துள்ளது. ஆனால் யார் ஒருவர் என்னை அடைகிறாரோ, யார் ஒருவர் எனது இருப்புத்தன்மையையும் விழிப்புணர்வு நிலையையும் அடைகிறா ரா அவர் -புநர்ஜன்ம ந வித்யதே (8.16) -மீண்டும் பிறப்பதில்லை."
நாம் பிரபஞ்ச அடுக்கான ப்ரஹ்ம லோகத்தையே அடைந்தாலும் மீண்டும் நாம் பிறப்பை அடைவோம். அதாவது நாம் நல்ல நோக்கங்களையும் செயல்களையும் உடையவர்களாகவே இருந்தாலும்கூட மீண்டும் நாம் உடலுக்குள் வரவேண்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நல்ல செயல்களைச் செய்யவேண்டுமென்ற எண்ணங்களில் சிக்கிக்கொண்டு நாம் நல்லவற்றையே செய்தாலும்கூட நாம் மீண்டும் வருவோம்.
ஞானகுருவின் தீக்ஷை வாழ்க்கைப் பாதைக்கு மட்டுமல்ல, மரணப்பாதைக்கும் ஒளிவிளக்கு
நாம் உடலில் இருக்கும்போதே ஏதாவது ஒருவழியில் தியானத்தின் மூலமாகவோ அல்லது ஸரணாகதியின் மூலமாகவோ ஒருமுறையாவது அந்த 'எண்ணங்களற்ற விழிப்புணர்வை', பூர்ணத்வ உணர்வை அனுபவித்துவிட வேண்டும்.
ஒரேயொருமுறை அந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை, பூர்ணத்வ உணர்வை, ஸாக்ஷியாகப் பார்க்கும் விழிப்புணர்வு நிலையைப் பெறுவதற்காக ஆழமாக உழையுங்கள். ஸாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை ஒரு கணமாவது உணர்ந்துவிடுங்கள். ஒரேயொருமுறை நீங்கள் அந்த அனுபவத்தை அடைந்துவிட்டீர்களென்றாலே போதும். அந்த ஒரு அனுபவம் தீப்பந்தத்தைப்போன்றது.
உங்கள் அகத்தை விழிப்படையச் செய்யும் ஞானகுருவின் தீக்ஷையானது, நீங்கள் வாழும்பொழுதும் உடலைவிட்டு நீ ங்கும்பொழுதும் ஒரு விழிப்புணர்வு ஒளிவிளக்காக விளங்கி, நாம் இந்தப் பாதையில் முன்னேற வழிகாட்டுகிறது.
இந்த முழு அத்தியாயத்திலும் கிருஷ்ணர் இந்த ஒரு ஸத்யத்தைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிப் புரியவைக்கிறார்.
கிருஷ்ணர் எந்த விழிப்புணர்வு நிலையில், எந்த எண்ணங்கள் அற்ற நிலையில், எந்த ஸாக்ஷி நிலையில் இருந்துகொண்டு தம் வாழ்க்கை என்னும் விளையாட்டை விளையாடினாரோ, மொத்த வாழ்க்கையையும் எப்படி லீலையாக வாழ்ந்து காட்டினாரோ, அந்த நிலையை அனுபவமாகப் பெறுங்கள் என்றுதான் சொல்கிறார்.
கிருஷ்ணர் ஒரு விஷயத்தைத்தான் தெளிவுபடுத்துகிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், 'எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை'யை, 'பூர்ணத்வ உணர்வு நிலை'யை ஒருமுறையாவது சுவைத்துவிடுவதற்கான முயற்சிசெய்வதே.
அடுத்து வருகிற அத்தியாயங்களில் ஆழமாக அதைப்பற்றி கிருஷ்ணர் பேசுகிறார்.
எப்படி ஒவ்வொரு சரீரமாகத் திறப்பது, எப்படி முன்னேறுவது, எப்படி ஒவ்வொரு சரீரத்தையும் சுத்தப்படுத்துவது, எப்படிக் கடப்பது, எப்படி எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அடைவது என்பது பற்றித்தான் சொல்கிறார்.
கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், "மனிதர்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான், ப்ரஹ்மாவின் ஒரு பகல். அதேபோல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்ததுதான் ப்ரஹ்மாவின் இரவு.
ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னதுபோல், நம்முடைய ஒரு வருடம், தேவர்களின் ஒரு நாள். ஆயிரக்கணக்கான வருடங்கள் சேர்ந்ததுதான் ப்ரஹ்மாவின் ஒரு நாள். நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை, நிர்வாண நிலையை அடைந்தால்தான் நாம் மீண்டும் பிறக்க மாட்டோம்.
காலம் இடம், நிலையானது நிலையற்றது என்பதெல்லாம் நம் புரிந்துணர்வைப் பொறுத்தது (8.19 -8.22)
கிருஷ்ணர் உலகாயத வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்பதை விளக்குகிறார். படைப்புக்கடவுளான பிரம்மாவின் ஒரு கண்ணிமை பொழுதிற்குள் எத்தனையோ விஷயங்கள் மாறிவிடுகின்றன. ஆனால் நம்மைப் பொறுத்தவரை காலம் என்பது நிலையானது. ஆனால் நாம் வேறொரு தளத்தில், வேறொரு காலத்தில் இயங்கும்போது, எல்லாமே தற்காலிகமாகிவிடுவதைப் பார்க்கலாம்.
நமது அறியாமைதான், நாம் பார்க்கிற எல்லாமே நிரந்தரமானவை
> நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வு
> நிலையை அடைந்தால்தான்,
> மீண்டும் பிறக்க மாட்டோம்.
என்றும், உண்மையானவை என்றும் நம்மை நம்பவைக்கிறது. ஒருமுறை இந்த உலகமும், நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களும் அழியக்கூடியவை என்பதைப் புரிந்துகொண்டோமேயானால், அதற்குப்பிறகு எல்லாவற்றையும் ஒரு புதுக்கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பித்துவிடுவோம்; பொருட்களின்மீது, இன்னும் சொல்லப்போனால், நமது உடலின்மீது வைக்கிற பற்றுக்கூட பயனற்றது என்பதையும் உணர்வோம்.
கிருஷ்ணர் சொல்கிறார், இந்த மொத்தப் படைத்தல் மற்றும் அழித்தல் என்ற நிகழ்வில், ‘உயர்ந்த விழிப்புணர்வு’ என்ற ஒன்று மட்டுமே படைக்கப்படுவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எதை ஒரு வருடம் என்று நினைக்கிறோமோ அது பிரம்மாவின் ஒரு நொடிக்கும் குறைவான நேரம். பிரம்மாவின் ஒரு நொடிக்கும் குறைவான நேரம்தான், நமக்கு ஒரு வருடமாகத் தோன்றுகிறது.
நாம் நிலையானது என்று பார்க்கிற அனைத்துமே, பிரம்மாவின் ஒரு கண்சிமிட்டலுக்குள் படைக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஒவ்வொரு முறை பிரம்மா கண்ணிமைக்கும்போதும் படைத்தலும் அழித்தலும் நடந்து முடிந்துவிடுகின்றன.
இதனை நேரடியான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு ஆராயாதீர்கள். கிருஷ்ணர் காலத்தைப்பற்றியும் இடத்தைப்பற்றியும் பேசும்போது, அவை அந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் எப்படி இருக்கிறதோ அதன் அடிப்படையிலும், ஒரு ஜ்ஞானகுரு அதை எப்படி உணர்கிறாரோ அந்த அடிப்படையிலும் விளக்குகிறார்.
உடலை விட்டுச்செல்லும் கலை
கர்மங்கள் இல்லையென்றால் மறுபடியும் நீங்கள் பிறக்க ொ
மரணத்தின்போது, நமது உயிர் ஏழு ஸ்ரீரங்களைக் கடந்துசெல்கிறது. உடலைவிடும்போது என்ன நடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முதல் சரீரத்தை ஸ்தூல ஸ்ரீரம் என்கிறோம். ஒருவர் இந்த ஸ்தூல உடலை விட்டுச்செல்லும்போது, இது மொத்த உடல் அமைப்பிலும் பயங்கரமான வலியை ஏற்படுத்துகிறது. ஸ்தூல ஸ்ரீரத்தைக் கடக்கும்போது ஆயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டினாற்போன்ற வலி ஏற்படும் என்று உபநிஷதங்கள் சொல்கின்றன.
இந்த ஸ்தூல உடலை விட்ட கணமே நாம் ப்ராண ஸ்ரீரத்தை அடைகிறோம். ப்ராண ஸ்ரீரம் என்பதுதான் நம் உடலுக்குச் சக்தி கொடுக்கிறது. காற்றை உள்ளிழுக்கவும் வெளிச் செலுத்தவும் காரணமாக இருக்கும் ப்ராணஸ்ரீரத்தில்தான் நம் ஆசைகள் நிரம்பியுள்ளன.
அடுத்தபடியாக மன ஸ்ரீரம். நமது வாழ்க்கை முழுவதும் நாம் உருவாக்கி வைத்திருக்கிற குற்ற உணர்ச்சிகள் முழுவதும் இங்குதான் பதிவாகி இருக்கின்றன. ஆசை என்பது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு. குற்ற உணர்ச்சி என்பது கடந்தகாலத்தைப் பற்றிய வருத்தம்.
மரணம் நேரும்போது நாம் கடக்க வேண்டிய அடுத்த சரீரம் ஸூக்ஷ்ம ஸ்ரீரம். இங்குதான் நமது வாழ்வில் நிகழ்ந்த அனைத்து துக்ககரமான சம்பவங்களும் பதிந்துள்ளன.
ஸ்தூல ஸ்ரீரம், ப்ராண ஸ்ரீரம், மன ஸ்ரீரம் மற்றும் ஸூக்ஷ்ம ஸ்ரீரம் ஆகிய நான்கு ஸ்ரீரங்களையும் நமது உயிர் கடக்கும்போது ஏற்படும் அனுபவம்தான் நரகம். நமது வாழ்க்கையில் இந்த நான்கு ஸ்ரீரங்களையும் நாம் தூய்மையாக வைத்திருந்தால் நாம் நரகத்தில் நுழைவதே இல்லை.
அதாவது, நாம் சில நுட்பங்களால் இந்த நான்கு சரீரங்களையும் தூய்மைப்படுத்தினோமானால், ‘நுட்பங்கள்’ என்று நான் சொல்லும்போது த்யானத்தையே குறிப்பிடுகிறேன்; நாம் சரியான த்யானங்களின் மூலமாக இந்த நான்கு சரீரங்களையும் தூய்மையாக வைத்திருந்தோமேயானால், நாம் உடலை விட்டுச்செல்லும்போது நமக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது. இது நமக்குச் சரியான நெடுஞ்சாலையை அமைத்துக் கொடுக்கிறது. நேரடியாகவே நாம் அதில் பயணம் செய்யலாம்.
நான்கு ஶரீரங்களுக்குப் பிறகு அடுத்த மூன்று உள் ஶரீரங்களிலும்தான் நமது ஆனந்த அனுபவங்கள் பதிந்துள்ளன. இவற்றைத்தான் நாம் சொர்க்கம் என்கிறோம். நாம் அங்கிருந்தும் நகர்ந்துதான் ஆகவேண்டும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், புண்ணியங்களும் கர்மங்கள்தான். அவையும் நம்மை ஞானமடைய அனுமதிக்காது. நாம் நன்றாக இருப்பதாக உணர்வோம், மகிழ்ச்சியாகவும் இருப்போம். ஆனால் கொஞ்ச நாள்களுக்குத்தான். நமது மனம் அதற்குப்பிறகு அதையும் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறது.
ஐந்தாவது ஶரீரம், ஆழ்ந்த தூக்கத்திலும், மரணத்தின்போதும் உணரப்படுகிறது. ஆறாவது ஶரீரம் மகிழ்ச்சிகரமான நினைவுகளைக் குறிக்கிறது. ஏழாவது ஶரீரம்தான் உச்சகட்ட விழிப்புணர்வு நிலை. அது துன்பத்தையும் இன்பத்தையும் கடந்தநிலை.
கிருஷ்ணர் பகவத்கீதையில் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால் பலன்களைப் பற்றிக் கவலைப்படாமல் காரியங்களைச் செய்யுங்கள் என்பதுதான். எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல், எந்தவிதமான பற்றும் இல்லாமல் காரியங்களைச் செய்யும்போது உங்களுக்குக் கர்மங்கள் சேர்வதில்லை. கர்மங்கள் இல்லையென்றால் மறுபடியும் நீங்கள் பிறக்க வேண்டியதில்லை.
முக்தியின் ரகசியம் என்ன என்று கிருஷ்ணர் இங்கே சொல்கிறார்: "யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம (8.21) -எனது இடத்தை அடைந்தவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்!"
மீண்டும் திரும்பாத நிலை என்பது எந்த நிலையைக் குறிக்கிறதென்றால், மகிழ்ச்சியையும் துன்பத்தையும் கடந்த நம் இருப்புத்தன்மையின் நிலையைத்தான் குறிக்கிறது!
ஒருவர் தம்முடைய எண்ணங்களைத் தெய்வத்தின்மேல் வைக்க வேண்டியதன் அவசியத்தைக் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும், குறிப்பிடுகிறார். தெய்வீகத்தை மரணத்தறுவாயில் நினைப்பதற்கான ஒரேவழி எதுவென்றால், வாழும்போதே எல்லா நேரங்களிலும் அவரை நினைப்பதுதான்.
கடவுளைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து போகும்போது, நமது உள்-உணர்வு தூய்மைப்படுத்தப்பட்டு, பூர்ணcollection-level
மரணத்தின்போது, உயிர் ஒவ்வொரு அடுக்குகளைக் கடக்கும்போது எவ்வளவு வேதனையையும் துன்பத்தையும் அடைகிறது என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
மரணத்தறுவாயில் மட்டும், நாம் திடீரென்று கடவுளை நினைக்க முடியாது. எப்போதுமே பணத்தையும் உணவையுமே பற்றி நினைத்துக்கொண்டிருந்த ஒருவரால், அதிக வலியையும் வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண சமயத்தில் திடீரென்று கடவுளை நினைக்க முடியாது. அது நடக்கவே நடக்காது.
அதனால்தான், கிருஷ்ணர் பக்த்யா லப்யஸ்த்வநந்யயா (8.22) -அந்த மிக உயர்ந்த சக்தியைத் தொடர்ந்து பக்திசெய்ய வே ண்டுமென்று வலியுறுத்துகிறார். நாம் தொடர்ந்து பக்தி நிலையிலேயே இருக்கும்பொழுது, நமது கடைசி நினைவும் கடவுளைப் பற்றியதாகவே இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நாம் கடவுளைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து போகும்போது, நமது உள்-உணர்வு தூய்மைப்படுத்தப்பட்டு, பூர்ணத்வ உணர்வாக மலர்கிறது. பூர்ணத்வ உணர்வே கடவுள்!
இறக்கும்தறுவாயில், நம்முடைய இந்த எண்ணங்கள்தான் நமக்கு முக்தி தரும். நாம் நம்மைத் தயார்செய்துகொள்கிறோம். கடவுளை இடைவிடாது தியானிப்பது ஒன்றே, மரண சமயத்தில் நமது உயிர் ஏழு சக்தி அடுக்குகளைக் கடந்துசெல்லும்போது நம்மை வளப்படுத்த உதவுகிற ஒரே ஊன்று கோல்.
ஒளியின் வழியில் பயணம்(8.23 -8.26)
இந்தச் சில ஸ்லோகங்களில் கிருஷ்ணர், எந்த நேரத்தில், எப்படி
ஒருவர் ஆழ்ந்த பக்தியுடன் தமது
செயல்களைச் செய்தாரேயானால், அவர்
இறக்கும் சமயத்தில், அவரருகில் நான்
இருப்பேன்! - ஸ்ரீகிருஷ்ணர்.
ஒருவர் ஞானத்தை அடைய முடியும் என்பவற்றை விளக்குகிறார். மேலும் அவர், மக்கள் பிறப்பு இறப்பு என்ற இந்தச் சுழற்சிக்குள் எப்படி வருகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.
அவர் சொல்கிறார்: உயர்ந்த தெய்விக சக்தியைப் பற்றி அறிந்தவர்கள் அக்னியின் ஆதிக்கத்தின்போதும், ஒளியிருக்கும் நேரத்தின்போதும், நல்ல நேரத்தின்போதும், வளர்பிறையின்போதும், சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிற உத்தராயண நேரத்தின்போதும் உடலைவிடுவதன்மூலம் ப்ரஹ்மத்தை அடைகிறார்கள்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இந்தக் காலக்கட்டங்கள் நமது கால அட்டவணையைச் சேர்ந்தது இல்லை. உத்தராயணம் எனும் சொல், நமது மனம் சமநிலையில் இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
கிருஷ்ணர் எந்த நேரத்தில் நமது மனம் முழுமையான சமநிலையில் இருக்குமோ, நமது மனத்தில் போராட்டம் இல்லாமல் இருக்குமோ, அந்த நிலையைக் குறிப்பிடுகிறார்.
மஹாபாரதப் போரில், பீஷ்மர் தமது உடலைவிடுவதற்கு உத்தராயண காலம்வரை காத்திருந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் ஜனவரி மாதத்திற்காகக் காத்திருந்தார் என்று நினைத்துவிடாதீர்கள், அவரது மனம் குறைவுணர்வுகளிலிருந்து விடுபடும்வரை காத்திருந்தார். தம் மனத்தைப் பூர்ணத்வ உணர்வில் நிலைநிறுத்திக்கொள்ளும்வரை காத்திருந்தார். அது

விழிப்புணர்வுடன்கூடிய தேர்வு!
அதனால், அக்நிர் ஜ்யோதிர: ஸுக்ல: எனும்போது, அவர் குறிப்பிடுவது உயர் விழிப்புணர்வுடன் இருக்கிற நிலையைத்தான். உங்கள் உயிர், உங்கள் இருப்புத்தன்மை முழுமையான விழிப்புணர்வுடன், உயிர்ப்புடன் இருந்தால் நீங்கள் மேலே செல்கிறீர்கள். (ஸுக்ல என்றால் மேலே செல்லல்; க்ரு'ஷ்ண என்றால் கீழே செல்லல்)
ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜந: என்கிறார் கிருஷ்ணர். நாம் எப்போதும் மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையை நோக்கி நம் கவனத்தைச் செலுத்தியிருந்தோமானால், நாம் அந்தப் பாதையில் போய் ப்ரஹ்மத்துடன் கலப்போம். நாம் ஞானமடைவோம்.
வேதங்களைப் பொறுத்தவரை இந்த உலகிலிருந்து வெளியேற இரண்டு வழிகள்தான் இருக்கின்றன.
ஒன்று -ஸுக்லக்ரு'ஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: ஶாஶ்வதே மதே (8.26) ஒளியின் வழியாக. இன்னொன்று இருட்டின் வழியாக. ஏகயா யாத்யநாவ்ரு'த்திமன்யயாவர்ததே புந: (8.26) ஒளியின் வழியாகப் போகிறவர்கள் இந்த உலகிற்கு திரும்ப வருவதில்லை. இருட்டின் வழியாகப் போகிறவர்கள் திரும்ப வருகிறார்கள்.
பக்தியுணர்வே கடேசிகாலத்திற்கும் உதவிடும் (8.27 -8.28)
இந்தக் கடைசி சில ஸ்லோகங்களில் கிருஷ்ணர் மொத்த அத்தியாயத்தையும் தொகுத்துச் சொல்லிவிடுகிறார். அவர் ''ஓ ப்ரீத்தாவின் மகனே! இந்த இரண்டு விதமான பாதைகளையும் அறிந்தவர்கள் தடுமாறுவதில்லை. அதனால் அர்ஜுனா! யோகயுக்தோ பவார்ஜுந (8.27) -எப்போதும் நீ பக்தியில் நிலைத்து இரு,'' என்று சொல்கிறார்.
இந்த உடலைவிட்டுச்செல்லும்போது உயிர் செல்லக்கூடிய இந்த இரண்டு பாதைகளையும் அறிந்த ஒருவர் எப்போதுமே இறப்புக்குத் தயாராய் இருக்கிறார். அவர், தம்முடைய வாழ்நாள் முழுவதும் பக்தியிலேயே மூழ்கி, தமக்குள்ளேயே கரைந்துவிடுவதால், பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலையடைகிறார்.
உடலைவிடும் நேரத்தில் எந்த எண்ணம் எழுகிறதோ அந்த எண்ணம்தான், உயிர் தனது அடுத்த உடலை தேர்ந்தெடுக்கச் செல்லும்