KAILASA Library/ஸ்ரீமத் பகவத்கீதை/அத்தியாயம்-7: ஞானவிஞ்ஞான யோகம்Sign in
ஸ்ரீமத் பகவத்கீதை

அத்தியாயம்-7: ஞானவிஞ்ஞான யோகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களை உயர்த்திடும் உன்னத தீர்வு

உலகில் வாழ்கிற எல்லா உயிர்களும்
விருப்பு, வெறுப்பு என்னும்
இருமைத்தன்மையில்
சிக்கித் தவிக்கின்றன.
ஜகத்குருவான கிருஷ்ணர்,
நம்மைப் பிடித்திருக்கும்
இந்தப் பந்தத்திலிருந்து
நாம் வெளிவருவது எப்படி என்பதைப்
பற்றி விளக்குகிறார்.

இறைத்தன்மையை நாம்
வெளிப்படுத்துவதற்காக
இறைவனோடு நம்மை இணைக்கும்
நுட்ப அறிவை வெளிப்படுத்துகிறார்.
கேளுங்கள்,
புரிந்துணர்ந்துகொள்ளுங்கள்,

ஸலோகங்கள்

அத ஸப்தமோSத்யாய:

ஜ்ஞான விஜ்ஞான யோக:

ஏ

ஸ்ரீபகவாநுவாச

மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாஸ்ரய: ந
அஸம்சயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ரு'ணு நந 7.1

ஸ்ரீ பகவான் சொன்னது

7.1 கிருஷ்ணன் சொல்கிறார், "பிருதாவின் மைந்தனே! கேள், என்னைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன், உன்னுடைய மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை நீ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை."

ஜ்ஞானம் தேSஹம் ஸவிஜ்ஞானமிதம் வக்ஷ்யாம்யஸேஷத: ந
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோSந்யஜ்ஜ்ஞாதவ்யமவஸிஷ்யதே நந
7.2

7.2 புலன்களால் உணரக்கூடியதும், முழுமையான அறிவுடையதுமான அதனைப் பற்றி நீ உணர்ந்துகொள்ளும் விதத்தில் விவரமாக விளக்குகிறேன்; இதை அறிந்துகொண்டாயானால், மேற்கொண்டு அறிந்துகொள்ள வேண்டியதென்று வேறெதுவுமே இல்லை.

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே ந

யததாமபி ஸித்தானாம் கஸ்ச்சின்மாம் வேத்தி தத்த்வத: நந 7.3

7.3 ஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒரேயொருவர்தான் தம்மை உணர்ந்துகொள்வதற்கு, ஜீவன்முக்தராவதற்கு பெருமுயற்சி செய்கிறார். அப்படிப் பெருமுயற்சிசெய்பவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே ஜீவன்முக்தியை அடைகிறார். அவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே ஸத்யத்தில் என்னைக் காண்கிறார் அல்லது என்னோடு ஒன்று கலக்கும் நிலையை அடைகிறார்.

பூமிராபோSநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச ந

அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ரு'திரஷ்டதா நந 7.4

7.4 நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு மற்றும் பொய்யான அஹங்காரம் இந்த எட்டும் என்னிடமிருந்து பிரிந்த வெளி-உலகச் சக்திகளாக இருக்கின்றன.

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ரு'திம் வித்தி மே பராம் ந

ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் நந 7.5

7.5 இயல்பில் தாழ்ந்து இருக்கின்ற இந்த வெளி-உலகச் சக்திகளைத்தவிர, ஓ! திரண்ட தோள்களை உடைய அர்ஜுனா, என்னிடம் ஓர் ஈடில்லா சக்தியும் இருக்கிறது. இந்தப் பொருள்சார்ந்த உலகைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அல்லது தங்கள் சுய ஆதாயத்திற்காகச் சுரண்டிக் கொண்டிருக்கும் உடலெடுத்திருக்கும் எல்லா உயிர்களின் உள்ளும் ஆத்மாவாக இந்த பராசக்திதான் இருக்கிறது.

ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய ந

அஹம் க்ரு'த்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா நந 7.6

7.6 என்னுடைய இந்த இரண்டு சக்திகள்தான் உலகிலுள்ள அனைத்துமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகத் தெரிந்துகொள். நானே படைத்தவன், நானே காப்பவன், நானே அனைத்தையும் அழிப்பவன்.

மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய ந

மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ நந 7.7

7.7 வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே! எனக்கு மேலாக எந்த ஸத்யமும் இல்லை. நூல் கோர்க்கப்பட்ட முத்துக்களைப்போல, என்மீதுதான் அனைத்தும் கோர்க்கப்பட்டுள்ளன.

ரஸோண்ஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஶஶிஸூர்யயோ: ந
ப்ரணவ: ஸர்வவேதேஷு ஶப்த: கே பௌருஷம் ந்ரு’ஷு நந 7.8

7.8 ஓ குந்தீயின் மைந்தனே! நானே நீரில் சுவையாக இருக்கிறேன்; சூரியன், சந்திரர்களின் ஒளியாக நானே இருக்கிறேன்; வேத மந்த்ரங்களில் புனிதமான ‘ஓம்’ என்ற மந்த்ரமாக நானே இருக்கிறேன். ஆகாசத்தில் ஒலியாகவும், மனிதரில் திறமையாகவும் நானே இருக்கிறேன்.

புண்யோ கந்த: ப்ரு’திவ்யாம் ச தேஜஶ்சாஸ்மி விபாவஸௌ ந
ஜீவநம் ஸர்வபூதேஷு தபஶ்சாஸ்மி தபஸ்விஷு நந 7.9

7.9 பூமியில் வாசனையாக நானே இருக்கிறேன், நெருப்பில் வெப்பமாக நானே இருக்கிறேன். எல்லா உயிர்களின் வாழ்க்கையாகவும் நானே இருக்கிறேன், சாதுக்களின் தவத்திலும் நானே இருக்கிறேன்.

பீஜம் மாம் ஸர்வபூதாநாம் வித்தி பார்த ஸநாதநம் ந
புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் நந 7.10

7.10 ஓ ப்ரிதாவின் மகனே, எல்லா உயிர்களினுடைய நிலையான ‘மூல’மாக இருப்பதும் நானே, புத்திசாலிகளிடத்தில் இருக்கும் புத்தியாகவும், திறன்மிக்கவர்களிடத்தில் இருக்கும் உள்ளத் துணிவாகவும் நான் இருக்கிறேன்.

பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம் ந
தர் மாவிருத்தோ பூதேஷு காமோண்ஸ்மி பரதர்ஷப நந 7.11

7.11 ஓ பரதக் குலத்தவர்களுள் சிறந்தவனே! பலவான்களுடைய பலமாகவும், உயிர்களிடத்தில் ஆக்க சக்தியாகவும், தர்மத்திற்கு முரண்படாத காமமாகவும் இருக்கிறேன்.

யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஸ்ச யே ந
மத்த ஏவேதி தான்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி நந 7.12

7.12 எல்லா உணர்வுநிலைகளும் அவை நல்லவையோ, தீவிர உணர்ச்சி வயப்பட்டவையோ அல்லது அறியாமையோ - என்னிடமிருந்துதான் தோ ன்றுகின்றன. நான் அவற்றைச் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் அவை என்னைச் சார்ந்துதான் இருக்கின்றன.

த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத் ந
மோஹிதம் நாபிஜானாதி மாமேப்ய: பரமவ்யயம் நந 7.13

7.13 இந்த முழு உலகமும் முக்குணங்களால் (நல்லவை, உணர்ச்சி வயப்பட்ட நிலை மற்றும் அறியாமை) மயக்கப்பட்டு தவறாக வழிநடத்தப்படுகிறது. இதனால்தான் அவற்றால் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் இந்தக் குணங்களை எல்லாம் கடந்தவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறேன்.

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா ந
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே நந 7.14

7.14 உலகியல் இயல்பு கொண்ட முக்குணங்களால் ஆன என்னுடைய இந்தத் தெய்வீக சக்தியை வெற்றிகொள்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஆனால் என்னைச் சரணடைந்தவர்கள் மிகச்சுலபமாக இதைக் கடந்துவிட முடியும்.

ந மாம் துஷ்க்ரு'தினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: ந
மாயயாபஹ்ரு'தஜ்ஞானா ஆஸுரம் பாவமாஸ்ரிதா: நந 7.15

7.15 சமயக்கொள்கையில் நம்பிக்கையற்ற மூடர்கள், மனித இனத்திலேயே மிகவும் தாழ்ந்தவர்கள், மாயையால் அபகரிக்கப்பட்ட அறிவுடையவர்கள், அரக்கத்தனமான இயல்புகளில் நிலைகொண்டவர்கள், மூடர்கள் இத்தகையவர்கள் என்னிடம் சரண் அடைய மாட்டார்கள்.

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ரு'திநோண்டர்ஜுந ந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப நந 7.16

7.16 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான்குவிதமான பக்திமான்கள் எனக்கு பக்திசேவை புரிகிறார்கள். அவர்களை வகைப்படுத்துகிறேன்: துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், இறுதியான அறிவைத் தேடுபவர்கள், உள்ளதை உள்ளபடியே அறிந்தவர்கள்.

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஶிஷ்யதே ந
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோண்த்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய: நந 7.17

7.17 இவர்களுள், யார் ஒருவர் முழுமையான அறிவைப் பெற்றவராகவும் இடைவிடாத யோகத்தால் ஒரே மனத்துடன் என்னையே பக்தி செய்து, என்னுடனேயே இணைந்திருப்பவராகவும் இருக்கிறா ரோ அவரே மிகச்சிறந்தவராகிறார். நான் அந்த ஞானிக்கு மிகவும் ப்ரியமானவன்; அவரும் எனக்குப் ப்ரியமானவர்.

உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ந
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம் நந 7.18

7.18 உண்மையில் இந்த எல்லா பக்தர்களுமே சிறந்தவர்கள்தான். யார் ஒருவர் என்னை அறிந்துகொண்டு, என்னுள் மூழ்கி, என்னுடைய நோக்கத்தின்படி செயல்படுகிறாரோ அவர் என்னையே அடைகிறார்.

பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே ந
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: நந 7.19

7.19 பல பிறவிகளுக்குப் பிறகு, எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகவும், எல்லாமுமாகவும் இருப்பது நானே என்பதை அறிந்து கொண்ட ஒருவர் என்னையே சரணடைகிறார். அதுபோன்ற ஒரு சிறந்த ஆன்மா மிகவும் அரிதானது.

காமைஸ்த்தைஸ்த்தைர்ஹ்ரு'தஜ்ஞானா: ப்ரபத்யந்தேண்யதேவதா: ந
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ரு'த்யா நியதா: ஸ்வயா நந 7.20

7.20 பல்வேறு ஆசைகளால் தவறாக வழிநடத்தப்பட்ட பகுத்தறிவை உடையவர்கள், சிறுதெய்வங்களிடம் சரணடைகிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த இயல்புக்கேற்ப குறிப்பிட்ட வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

யோ யோ யாம் யாம் தனும் பக்த: ஸ்ரத்தயார்சிதும் இச்சதி ந
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் நந 7.21

7.21 நானே எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறேன். ஒருவர் ஒரு சிறு தெய்வத்தை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதன் காரணத்தால் அவர் அந்தக் குறிப்பிட்ட சிறுதெய்வத்திடம் தம்மைத்தாமே அர்ப்பணித்து பக்திசெலுத்த முடியும்.

ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே ந
லபதே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹி தாந் நந 7.22

7.22 இதுபோன்ற ஒரு நம்பிக்கையுடன் கூடியவனாக, ஒரு குறிப்பிட்ட சிறு தெய்வத்தைப் பெருமுயற்சியுடன் வழிபட்டு, அவர் தன் ஆசைகளை அடைகிறார்; உண்மையில், இந்த நன்மைகளை நான் மட்டுமே தருகிறேன்.

அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம் ந
தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி நந 7.23

7.23 எல்லைக்குட்பட்ட அறிவை உடையவர்கள் சிறு தெய்வங்களையே வழிபடுகிறார்கள். அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் பலன்களும் அளவுக்குட்பட்டதாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கின்றன. சிறு தெய்வத்தை வழிபடுபவர்கள் சிறு தெய்வங்களின் உலகிற்கு மட்டும்தான் போகிறார்கள், ஆனால் என் பக்தர்கள் எனது ஒப்பற்ற உலகத்தை அடைகிறார்கள்.

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் நந 7.24

7.24 என்னை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அறிவீனர்கள், தெய்வங்களுக்கெல்லாம் தலைவனான, பகவானான நான் இதற்குமுன் புலன்களால் உணரமுடியாதவனாக இருந்து இப்போது இந்த மனித உருவமெடுத்து வந்திருப்பதாக நினைக்கிறார்கள். உடலெடுத்திருந்தாலும்கூட, நான் அழிவற்றவனாகவும், எல்லாவற்றிற்கும் மேலான வனாகவும் இருக்கிறேன் என்பது பற்றி அவர்கள் அறிவதில்லை.

நாஹம் ப்ரகாஸ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ரு'த: ந
மூடோsயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் நந 7.25

7.25 நான் என்னை எனது தெய்வீக சக்தியால் மறைத்துக் கொண்டிருப்பதால், முட்டாள்களுக்கும் அறிவில்லாதவர்களுக்கும் நான் ஒருபோதும் என்னை வெளிப்படுத்திக் காட்டுவதில்லை. நான் பிறப்பற்றவன், நிரந்தரமானவன் என்பதை அறியாமையில் இருப்பவர்கள் அறிய மாட்டார்கள்.

வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந ந
பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஸ்சந நந 7.26

7.26 ஓ அர்ஜுனா! தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தலைவனான நான், நடந்த அனைத்தையும் அறிவேன். நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் நான் அறிவேன். நடக்க இருக்கும் அனைத்தையும் அறிவேன். உயிர் வாழும் எல்லா ஜீவன்களையும் நான் அறிவேன்; ஆனால் யாரும் என்னை அறிய மாட்டார்கள்.

இச்சாதDistவேஷஸமுத்தேந த்வந்த்வமோஹேந பாரதந
ஸர்வபூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப நந 7.27

7.27 ஓ எதிரிகளை எல்லாம் வாட்டுகிற பரத குலத்தில் உதித்தவனே! பிறக்கும் பொழுதே எல்லா ஜீவராசிகளும் குழப்பத்துடன்தான் பிறக்கின்றன. அவை விருப்பு, வெறுப்பு ஆகிய இருமைகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.

யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம் ந
தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ரு'டவ்ரதா: நந 7.28

7.28 யாரெல்லாம் தர்ம நெறிப்படி வாழ்ந்தார்களோ, யாருடைய பாவங்கள் எல்லாம் முற்றிலுமாகத் தீர்ந்துவிட்டதோ, யாரெல்லாம் நிஜம், கற்பனை என்ற இருமையிலிருந்துவிடுபட்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் உறுதியான நோக்கத்துடன் என்னுடைய வழிபாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.

ஜராமரணமோக்ஷாய மாமாஸ்ரித்ய யதந்தி யே ந
தே ப்ரஹ்ம தத்விது: க்ரு'த்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம் நந 7.29

7.29 பிறப்பு, முதுமை, மரணம் ஆகியவற்றிலிருந்து விடுதலையடைய கடும் முயற்சிசெய்துகொண்டிருப்பவர்கள் என்னிடம் சரணாகதி அடைகிறார்கள். இவற்றை எல்லாம் கடந்திருக்கும் செயல்களைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்வதால், உண்மையில் அவர்கள் ப்ரஹ்மமாகவே ஆகிறார்கள்.

ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது: ந
ப்ரயாணகாலேண்பி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ: நந 7.30

7.30 யார் என்னை உலகப் படைப்புகளைக் கண்காணிக்கும் மேன்மை மிக்க கடவுளாகவும், எல்லா சிறு தெய்வங்களின் அடிப்படை தத்துவமாகவும், யாக, யஜ்ஞங்களை ஆதரித்து வளர்ப்பவனாகவும் அறிந்துகொள்கிறார்களோ, புரிந்துகொள்கிறார்களோ அவர்கள் மரணகாலத்தில்கூட என்னை நிலையான மனத்துடன் நினைக்கின்றனர்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு

ப்ரஹ்மவித்யாயாம் யோகஸாஸ்த்ரே ஸ்ரீக்ருʼஷ்ணார்ஜுநஸம்வாதே

ஜ்ஞாந விஜ்ஞாந யோகோ நாம ஸப்தமோண்த்யாய:நந

ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள க்ருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஜ்ஞாந விஜ்ஞாந யோகம் என்ற ஏழாவது அத்தியாயம்.

உங்களை

உயர்த்திடும் உன்னத தீர்வு

Krishna and Arjuna on the chariot

முதலில், கிருஷ்ணர் ஏன் இந்த அத்தியாயத்தை சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். அவர், ஒரே ஸத்யத்தைத்தான் மீண்டும் மீண்டும் பேசுகிறார். அந்த ஒரேயொரு ஸத்யத்தைத்தவிர வேறெதையும் பேசவில்லை.

புரிந்துகொள்ளுங்கள், இதற்குமுன்பாக ஒருமுறை கேட்டிருந்தாலும்கூட, கிருஷ்ணர் அதைத் திரும்பச்சொல்ல மாட்டார். கிருஷ்ணர் சொன்னதை நீங்கள் ஸ்ரவண - சிரத்தையுடன் கேட்டிருந்தால், மனன - கேட்டதை உள்வாங்கி பகுத்தாராய்ந்திருந்திருந்தால், இப்போது நீங்கள் அதை -நி hisத்யாஸன - சிரத்தையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருப்பீர்கள்.

அதனால் கிருஷ்ணர் சொல்கின்ற ஒன்றை இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தீர்களென்றால், புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அதை முதன்முதலாக இப்போதுதான் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

கேளுங்கள், பகுத்தாராயுங்கள், வெளிப்படுத்துங்கள்

அர்ஜுனன், தன்னுடைய ‘கேட்டலை’த் தனக்கே கொடுத்துக்கொள்ளும்போது, அவர் ஒரு சீடர் ஆகிறார், கிருஷ்ணர், அர்ஜுனனின் கேட்டலுக்குள் பேசும்போது, அர்ஜுனன் ஞானமடைகிறார், ஞானத்தை வெளிப்படுத்துகிறார்.

‘நீங்கள் நிதித்யாஸனத்தை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்பதன் பொருள், நீங்கள் புரிந்துணர்ந்து உள்வாங்கியதன்படியே சிந்திக்கவும் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும்.

ச்ரவண - சிரத்தையுடன் கேட்பது மனத்தெளிவுக்கு வழிவகுக்கும், மனன - அதை உள்வாங்கி பகுத்தாராய்தல் உணர்வுப் பெருமாற்றத்திற்கு அழைத்துச்செல்லும். அந்த உணர்வுப் பெருமாற்றத்தை நீங்கள் ஆழ்ந்து வாழவில்லையென்றால், நீங்கள் அதை இழக்கநேரிடும். அந்த உணர்வுப் பெருமாற்றத்தை வலிமையுடன் வாழ்வதைத்தான் நிதித்யாஸன - வெளிப்படுத்துதல் என்கிறோம்.

ஸ்ரீகிருஷ்ணர், இந்த ச்ரவண, மனன, நிதித்யாஸன என்னும் மூன்றின் வடிவமாக இருக்கிறார். ஏனெனில், ஸ்ரீகிருஷ்ணர் முழுமையான அவதாரமாக இருக்கிறார். அவர் அர்ஜுனனுக்கு, மனன - உள்வாங்கி, பகுத்தாராய்ந்தலின் அவசியமில்லாமலேயே, நிதித்யாஸன - வெளிப்படுத்தும் உணர்வை நேரடியாகக் கொடுக்கிறார்.

> ச்ரவண, மனன, நிதித்யாஸன -
> இம்மூன்றும் நம்முள் நிகழ்வதற்கான
> முழுப்பொறுப்பையும் கிருஷ்ணர்
> ஏற்றுக்கொள்கிறார்.

ஒரு அவதார புருஷரின் ஸாந்நித்யத்தில், அதுவும் அவர் உங்கள் குருவாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் சிரத்தையுடன் 'கேட்டல்' உணர்வில் இருந்தீர்களானால், அவர் நேரடியாகவே உங்களுக்குள் சக்தியையும் ஞான அனுபவத்தையும் பரிமாற்றம் செய்ய முடியும். பரப்பிரம்ம கிருஷ்ணர் இதை விபூதியோகத்திலும் விஸ்வரூபதர்ஸந யோகத்திலும் செய்கிறார்.

ஜ்ஞானவிஜ்ஞான யோகமான இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணர் பேசுகிறார், அதனால் நாம் ஸ்ரவண - கேட்கக் கற்றுக்கொள்கிறோம்; உணர்வுமாற்றமடைய உதவும் மனனத்தை

  • பகுத்தாராயக் கற்றுக்கொள்கிறோம்; நிதித்யாஸன - பூர்ணத்வ உணர்வை வெளிப்படுத்த கற்றுக்கொள்கிறோம். ஸ்ரவண, மனன, நிதித்யாஸன - இம்மூன்றும் நம்முள் நிகழ்வதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார்.

ஒருநூறு கோடியில் ஒருவர் மட்டுமே

என்னை வந்தடைகிறார் (7.1 -7.5)

அவர் சொல்கிறார், "கேள், அர்ஜுனா, என்னைப் பற்றிய முழு விழிப்புணர்வுடன், மனத்தை என்னிடம் முழுமையாக லயப்படுத்தி யோகத்தைப் பயில்வதன் மூலம், என்னை உன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதில் சந்தேகம் இல்லை."

இந்தச் சொற்றொடரில், கிருஷ்ணர் 'என்னை' என்ற பதத்தை மூன்று முறை உபயோகிக்கிறார். அதன்மூலம் தம்முடைய மேன்மையை வெளிப்படுத்துகிறார்.

ஒரு சாதாரண மனிதரைப் பொறுத்தவரை அது அஹங்காரமாகத் தோன்றலாம். கிருஷ்ணரை அஹங்காரம் உடையவராக நினைத்து அவரை வெறுக்கும் ஒருவர் ஸத்யத்தை இழக்கிறார் அல்லது கீதை வெளிப்படுத்தும் சாரத்தை இழக்கிறார்.

கிருஷ்ணர்மீது அன்பு செலுத்துபவர்களோ, அவரின் வடிவத்தைப் பிடித்துக்கொண்டு, மனித வடிவில் வந்திருக்கும் அந்த உருவத்திடம் சரணடைய நினைக்கிறார்கள்.

ஆனால் கிருஷ்ணரை அனுபவமாக உணர்கிறவர்கள் மட்டுமே கீதையை உணர்கிறார்கள்.

எது எப்படியோ, மனித உயிர்கள் எப்படிக் கடவுளை அணுக முடியும், அவர்கள் ஏன் கடவுளை அணுக வேண்டும், அவர்கள் எந்த நிலையிலிருந்து கடவுளை அணுகுகிறார்கள் என்பதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம்.

“ஆயிரக்கணக்கானவர்களில் ஒரேயொருவர் பூர்ணத்வத்திற்காக முயற்சிசெய்கிறார். அதில் யாரோ ஒருவர் மட்டுமே பூர்ணத்வத்தை அடைகிறார். அவ்வாறு பூர்ணத்வத்தை அடைபவர்களிலும், யாரோ ஒருவர் மட்டுமே என்னை உள்ளபடி ஸத்யமாக அறிந்துகொள்கிறார்,” என்கிறார் கிருஷ்ணர்.

அவர் ஆழ்ந்த கருணையோடு சொல்கிறார், “நான் சொல்வதைக் கேள். உன்னை நீயே உணர்ந்துகொண்டு, சுதந்திரம் அடைவாயாக!” நினைவுகொள்ளுங்கள், அவர் நம் சுயத்தை அறிவதைப் பற்றியும், நம்மைப் புரிந்துகொள்வதைப் பற்றியும் பேசுகிறார்.

இனி அடுத்தடுத்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர், தாம் யார் என்பதை விளக்குகிறார். தம்முடைய சக்தி வெளிப்பாடுகளிலிருந்து தம்மைத்தாமே பிரித்துக்காட்டுகிறார்.

வெளிப்படுத்தப்பட்ட சக்திகளாக நாம் கருதும் எட்டு மூலகங்களும்

  • நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும், மனம், அறிவு, அஹங்காரம் என்ற மூன்று உள் மூலகங்களும் கிருஷ்ணருடைய சக்திகளே, அதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் அவை கிருஷ்ணர் இல்லை!

பிரபஞ்சத்தை இயங்கச்செய்யும் கோட்பாடுகள்

> வெளிப்படுத்தப்பட்ட சக்திகளான
> எட்டு மூலகங்களும் கிருஷ்ணருடைய
> சக்திகளே, ஆனாலும் அவை கிருஷ்ணர்

இந்து தத்துவ முறைகளான ஸாங்க்‌யமும் வேதாந்தமும், புருஷ மற்றும் ப்ரக்ரு'தி என்கிற இந்த இரண்டு தத்துவங்கள்தான் பிரபஞ்சத்தை இயங்கச்செய்யும் கோட்பாடுகள் என்று கருதுகின்றன.

புருஷ மற்றும் ப்ரக்ரு'தி - இரண்டுமே வெளிப்படாத சக்தி ஆதாரங்கள்; புருஷ என்பது செயல்படாத சக்தியாகவும், ப்ரக்ரு'தி என்பது செயல்படக்கூடிய சக்தியாகவும் இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து செயல்படத் தொடங்கும்போது, இந்த இரண்டு மூலகங்களிலிருந்து மற்ற அனைத்தும் தோன்றுகின்றன.

ப்ரக்ரு'திதான் (பிரபஞ்ச சக்தி), தனிநபரின் அறிவுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் சக்தியைக் கொடுக்கிறது. ப்ரக்ரு'திதான், பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி பரவியுள்ள ஆகாஶ சக்தியை உருவாக்கியது என்று தைத்த்ரேய உபநிஷத் சொல்கிறது.

பிரபஞ்சத்தில் அதிக அளவில் பரவியுள்ள, மிகவும் ஸூக்ஷ்மமான சக்தியாக ஆகாஶ சக்தி இருக்கிறது. ஆகாஶ சக்தியிலிருந்து காற்று உருவாகிறது. காற்று சக்தியிலிருந்து அக்னி எனப்படும் நெருப்பு உருவாகிறது.

மிகப்பெரியதும், நுண்ணியதுமான பிரபஞ்சத்தின் ஆகாஶ சக்தியை த்யானத்தால் மட்டுமே உள்வாங்க முடியும்.

வேத கால அக்னி சடங்குகள் என்பது பெருந்திரளாகக் கூடும் பெரிய கூட்டத்திற்கு உதவக்கூடிய ஒரு த்யான முறையாக இருந்தது. இது, பெயரளவுக்கு மட்டுமே த்யானம் செய்பவர்களுக்கான ஒரு நுட்பம்! த்யானத்தை ஆழமாகச் செய்ய முடியாதவர்கள், அந்த இடத்தில் வெறுமனே அமர்ந்திருந்தால்கூட போதும், அவர்களால் அந்த சக்தியை உள்வாங்கிக்கொள்ள முடியும்.

பிரபஞ்ச அறிவுதான் மனிதர்களில் மனமாகப் பிரதிபலிக்கிறது. இந்த மனம், அது வெளி-உலகத்தோடு தொடர்புகொள்ள புலன்களைப் பயன்படுத்துகிறது. பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது,

குணங்களுக்கு இடையிலான
விளையாட்டே,
மனத்தின் இயக்கத்தையும்

தொடுவது (ஸ்பர்ஸம்) போன்ற ஒவ்வொரு உணர்வும் இயற்கை மூலகங்களோடு (பஞ்ச பூதங்கள்) தொடர்புகொண்டுள்ளன.

ஆகாயத்திற்கு ஒலியோடும் காதுகளோடும்; காற்றுக்குத் தொடுதலோடும் தோலோடும்; நெருப்புக்கு நிறத்தோடும் வடிவத்தோடும் தொடர்பு உண்டு, அதேபோல பார்வையோடும் கண்களோடும் நெருப்புக்குத் தொடர்பு உண்டு; சுவையோடும் நாக்குடனும் தண்ணீருக்குத் தொடர்பு உண்டு; மணத்தோடும் மூக்குடனும் நிலத்திற்குத் தொடர்பு உண்டு.

நானே நூலிழை! (7.6 -7.9)

கிருஷ்ணர், "நான்தான் நூலிழை, எல்லாப் படைப்புகளும் கோர்க்கப்பட்டிருக்கும் ஸூத்ரம் - நுட்பம் நானே," என்கிறார்.

"மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய - நானே கண்களுக்குத் தெரியாத இறுதி சக்தியாக இருக்கிறேன்; அச்சக்தியில்லாமல் இந்தப் பிரபஞ்சமே இருக்க முடியாது, வெற்றியால் அடைந்த செல்வங்களை உடையவனே, ஸூத்ரே மணிகணா இவ - நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களைப்போல, மயி ஸர்வமிதம் ப்ரோதம் -என்னில்தான் அனைத்தும் கோர்க்கப்பட்டுள்ளன," என்று மிகத் தெளிவாக உறுதியுடன் பிரகடனப்படுத்துகிறார்.

என்னவொரு அருமையான ஒப்புமை பாருங்கள்! அதனால்தான், அவர் ஸூத்ரதாரியாக இருக்கிறார். அனைத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் பிரபஞ்ச நாடகத்தின் இயக்குனராகவுமிருக்கிறார்! அவர் இல்லாமல் எதுவும் அசையாது, எதையும் அசைக்கவும் முடியாது. அவருடைய சக்தி இல்லாமல், எதையும் படைக்கவோ காக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது.

ஜகத்குருவாகிய கிருஷ்ணர் சொல்கிறார், "நீ எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயோ, அது நானல்ல, வெளிப்பட்டிருக்கும் இச்சக்தியானது நானல்ல. கையில் புல்லாங்குழலுடனும் எல்லாவற்றையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிற இந்த ஆறடி உயர கிருஷ்ணரும் நான் கிடையாது. வாஸுதேவ கிருஷ்ணரையும்

தாண்டிய உருவமற்ற சக்தியே நான். பிரபஞ்ச சக்தியான பரப்பிரம்ம கிருஷ்ணரே நான். இந்த உலகத்திலோ அல்லது வேறு எந்த கிரகத்திலோ பிரபஞ்ச கிருஷ்ணரின் இச்சக்தியில்லாமல் எந்தவொரு உயிரும், எந்தவொரு வகையிலும் இருக்க முடியாது.''

ஆனால், இச்சக்திக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இச்சக்தியை காண முடிவதில்லை. நாம் இச்சக்தியை உணரமுடியாத அளவிற்கு விழிப்பற்றவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்குதான் கிருஷ்ணர் ஆழமாகவும் விளக்கமாகவும் சொல்கிறார், "நானே எல்லாமுமாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவுமிருக்கிறேன்,'' என்கிறார்.

அவரே ஆக்குபவர் - ப்ரஹ்மா, அவரே காப்பவர் - விஷ்ணு, அவரே புதுப்பிப்பவர் - ஶிவன். கிருஷ்ணர், அவரோ அல்லது இவரோ அல்ல; அவரே எல்லாமுமாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவுமிருக்கிறார்.

ஓநான் நிலையானவன் (7.10 - 7.15)

"நான்தான் ஆக்க சக்தியாக இருக்கிறேன்'' என்று சொல்லும் கிருஷ்ணர், "எல்லா உயிர்களின் விதையாகவும் நானே இருக்கிறேன் (7.11),'' என்கிறார். அவர் எந்தவித சாக்குப்போக்கோ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை.

இந்த ஸ்லோகங்களில் நமக்குள் இருக்கும் ப்ரக்ரு'தியின் சக்திகளாகிய ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்றுவித குணங்களைப் பற்றிக் கிருஷ்ணர் பேசுகிறார்.

ப்ரக்ரு'தி சமநிலையில் இருக்கும்போது, அது தூய்மையான சக்தியாக இருக்கிறது. அதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதுதான் குணங்கள் செயலுக்கு வருகின்றன. கட்டிடங்களில் இருக்கும் செங்கல்களைப்போல, அவை பலவழிகளில் ஒன்றோடொன்று இணைந்திருந்துகொண்டு, செயல்களையும் எண்ணங்களையும் உருவாக்குகின்றன, தாங்கிப்பிடித்துக் காப்பாற்றுகின்றன, அழிக்கின்றன.

இந்த குணங்களுக்கு இடையிலான விளையாட்டுதான், மனத்தின் இயக்கத்தையும் செயற்பாடுகளையும் உருவாக்குகிறது.

ஒவ்வொருவரும் இந்தச்
சமுதாயத்தை வளப்படுத்த
ஏதோவொரு வகையில் தங்களால்

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பகவத்கீதை பரப்ரஹ்ம கிருஷ்ணரால் அளிக்கப்பட்டது. வாஸுதேவ கிருஷ்ணரால் அல்ல. அதனால்தான் அவர், "நான் குணங்களைக் கடந்தவன்," என்று தைரியமாகச் சொல்கிறார்.

"நானே பரம புருஷன், நானே இந்த ப்ரக்ரு'தியை ஆட்டுவிக்கும் ஆதியானவன், நான் அதன் பாதிப்புகளை எல்லாம் கடந்தவன்," என்கிறார். ப்ரக்ரு'திக்கு அப்பால் இருக்கும் இயற்கையையும் படைத்தவர் கிருஷ்ணர். ஆகவே இயற்கை நிகழ்வுகளுக்கு அப்பால் இருப்பவரும் அவரே.

ஒவ்வொருவருமே சமுதாயத்திற்குப் பகிர்ந்தளிக்கிறார்கள் (7.16 - 7.19)

கிருஷ்ணர் இப்போது மேலும் ஆழமாகப் போகிறார். அவர் இந்திய சமுதாய அமைப்புமுறையைப் பற்றிப் பேசுகிறார்.

இந்த விஷயத்திற்குள் நுழைவதற்கு முன்னால், நமது வேதங்களை, நமது ஆன்மிக விஞ்ஞானத்தை உயிருடன் வைத்திருக்க உதவிய நமது ரிஷிகளால் உருவாக்கப்பட்ட இந்தச் சமுதாய அமைப்புமுறைக்கு நான் தலைவணங்குகிறேன். ஏனென்றால் இந்தச் சமுதாய அமைப்புதான் நமது ஒட்டுமொத்த ஆன்மிக விஞ் ஞானத்தையும் நிஜமாக்கி இருக்கிறது.

நான், இந்த முழுச் சமுதாய அமைப்பும் எந்த உணர்வுடன் உருவாக்கப்பட்டது என்பதை விளக்குகிறேன்.

வேத கால ரிஷிகள் அறிவுப்பூர்வமாகவும், ஞானத்தின் அடிப்படையிலும் இயங்குகிற சமுதாய அமைப்புமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் பிற கலாச்சாரங்களில் சமுதாய

சரியான மனப்பான்மையுடன்
நீங்கள் கடவுளை அணுகும்பொழுது,
நீங்களும் கடவுளாக

அமைப்புமுறையானது பணத்தின் அடிப்படையிலும், அதிகாரத்தின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மட்டும்தான் புத்திசாலித்தனத்தையும் ஞானத்தையும் மதித்தவர்கள் இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறைகளை உருவாக்கினார்கள். அதனால்தான் இந்தியாவில் மெய்யறிவு பெற்றவர்கள், ஆன்மிகத்தில் ஆழமாக இருப்பவர்கள், அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.

அந்த ஒட்டுமொத்தச் சமுதாய அமைப்பும், வளப்படுத்தும் உணர்வுடன் கூடிய பகிர்தலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

முதலில், இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறையும் நமது பிறப்பின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை. இது நம்முடைய குணங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

பயத்தால் உந்தப்பட்டு பயத்தின் காரணமாக வேலைகளைச் செய்பவர், ஶூத்ரர் என்ற பிரிவைச் சேர்ந்தவராகிறார்.

பேராசையுடன் வேலை செய்பவர்கள், வியாபாரம் அல்லது வணிகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வைஸ்யர்கள்.

பிறருடைய கவனத்தை ஈர்க்கவோ அல்லது தமது தலைமையை நிரூபிக்கவோ செயல்படுபவர் க்ஷத்ரியர்கள் பிரிவில் அடங்குவார்.

வளப்படுத்தும் உணர்விலிருந்தும், நன்றி உணர்விலிருந்தும் செயல்பட்டு, தமது ஆனந்தத்தை வெளிப்படுத்துபவர்கள் ப்ராஹ்மணர்கள்.

ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தை வளப்படுத்த ஏதோவொரு வகையில் தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.

இந்த மாதிரியான பிரிவுகள், முற்றிலுமாக நம்முடைய 'பங்களிப்பின்' அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்த வகையிலும், இது பிறப்பின் அடிப்படையில் உண்டாக்கப்படவில்லை. பிறப்புக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இங்கு உயர்ந்தவர்கள் என்று யாரும் கிடையாது; தாழ்ந்தவர்கள் என்றும் யாரும் கிடையாது.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இன்று நடைமுறையில் இருப்பது போன்ற உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பிரிவு அப்போது கிடையாது.

குருவின் வளப்படுத்தும் ஸேவையில் இணைந்து கொள்ளுங்கள்

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ரு'திநோண்ர்ஜுந /
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப // 7.16

ஓ! பரத வம்சத்தோருள் சிறந்தவனே அர்ஜுனா, 'துக்கத்தில் இருப்பவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், தேடல் மிக்கவர்கள், முக்தியைத் தேடுபவர்கள்' என நான்குவிதமான பக்திமான்கள் என்னைப் பூஜிக்கிறார்கள்.

இங்கே கிருஷ்ணர், இறைவனை அடைபவர்களைப் பற்றியும், அவர்கள் இறைவனை எந்தெந்த வழியில் அடைகிறார்கள் என்பதைப் பற்றியும் பேசுகிறார்.

நமது பக்குவ நிலைக்கேற்பவே, நாம் கடவுளைக் கற்பனைசெய்து பார்க்கிறோம்.

ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்: வாழ்க்கையைப் பிரார்த்தனைகளுடன் தொடங்குவது சரிதான், அதுவொரு நல்ல தொடக்கம்தான், ஆனால் முடிப்பதற்கான சரியான இடம் அல்ல அது.

"அன்பு மற்றும் நன்றியுணர்வுடன் என்னிடம் வருபவர்தான் சிறந்த மனிதர், அஹம் ஸ ச மம ப்ரிய: (7.17) -அவனே எனக்கு நெருக்கமானவன், அவனுக்கு நான் நெருக்கமானவன். அவன் எனக்குள் இருக்கிறான், நான் அவனுக்குள் இருக்கிறேன்." இந்த ஒரு வரியின்மூலம், கிருஷ்ணர் ஒட்டுமொத்தக் கருத்தையுமே சொல்லிமுடித்துவிடுகிறார்.

"வெவ்வேறு நிலைகளில் இருந்து தொடங்குவது சரிதான். ஆனால் அதிலேயே நின்று விடாதீர்கள்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்:

இந்த இறுதி ஸத்யத்தை நீங்கள் புரிந்துகொண்டு, சரியான மனப்பான்மையுடன் நீங்கள் கடவுளை அணுகும்பொழுது, நீங்களும் கடவுளாக மாறிவிடுகிறீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் உள்-உணர்வை மாற்றிக்கொள்வது மட்டும்தான்!

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அல்லது குருவின் வளப்படுத்தும் சேவையில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக்கொண்டால் மட்டுமே, அவர் உங்களுக்குள் இருப்பார்.

கடவுளின் செயல்களுக்காக உங்களை அர்ப்பணிக்கும்போது, நீங்கள் பக்தர்களாக ஆகிறீர்கள். அந்நிலையில்தான் நீங்கள் கடவுளின் அன்புக்குரியவராக மாறுகிறீர்கள். அப்போது உங்களின் வழிபாடு சுயநல நோக்கம் கொண்டதாக இருப்பதில்லை. அது எந்த வடிவத்தில் இருந்தாலும்சரி, அது இறைவனுடைய விருப்பங்களை, நோக்கங்களை நிறைவேற்றுவதாகவே இருக்கிறது.

நன்றியுணர்வுடன் என்னை நீங்கள் அணுகினால், அனுபவமாக என்னை உணர்வீர்கள்

“ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம் (7.18) -யார் ஒருவர் என்னை அறிந்துகொண்டு, என்னுள் மூழ்கி, என்னுடைய நோக்கத்தின்படி செயல்படுகிறாரோ அவர் என்னையே அடைகிறார்.

ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே (7.19)-யார் ஒருவர் ஞானமடைந்த ஜீவனிடம் சரணடைகிறாரோ, யார் ஒருவர் எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகவும், எல்லாமுமாகவும் இருப்பது நானே என்பதை அறிந்துகொள்கிறாரோ, அவர் உயர்ந்த கடவுள் நிலையை உணர்கிறார்.

நீங்கள் நன்றியுணர்வுடனும்
புரிதலுடனும் சென்றால் மட்டுமே
உங்களால்

வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: (7.19) - அதுபோன்றதொரு ஆன்மா மிகவும் அரிதானது," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

உடலை விட்டுவிட்ட ஞானிகளோடு நம்மை நாமே இணைத்துக்கொள்வது மிகவும் சுலபம். அவர்களிடம் நாம் சரணடைய வேண்டியதில்லை.

ஆனால் வாழும் ஞானியுடன் நாம் வாழும்பொழுது, நாம் நமது வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் நம்மைத் தூங்கவிடமாட்டார். நாம் ஸத்யத்தை உணரும்வரை அவர் நம்மை ஓய்வெடுக்க விடமாட்டார். அவர் நம்மை உலுக்கிவிடுகிறார். அவர் நம்மை எழுப்பிவிடுகிறார்.

வாழும் ஞானிகள் ஒரு ஸிம்ஹ-ஸ்வப்னமாக இருக்கிறார்கள். பல பிறப்பு இறப்புகளுக்குப் பிறகு இதைப் புரிந்துகொண்டவர்கள், பக்குவமடைந்தவர்கள், போதிய அறிவு இருப்பவர்கள் இவர்கள் மட்டும்தான் என்னை சரணடைகிறார்கள், வாழும் ஞானியிடம் சரணடைகிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

நீங்கள் அன்புடனும் நன்றியுணர்வுடனும் புரிதலுடனும் பக்குவத்துடனும் சென்றால் மட்டுமே உங்களால் ஒரு வாழும் குருவைச் சந்திக்க முடியும். ஒரு ஞானமடைந்த ஜீவனை உள்ளது உள்ளவாறே பார்த்த அடுத்த நொடியே, நீங்கள் ஞானமடைவீர்கள். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நான் உங்கள் இதயங்களில் இருக்கிறேன்!

(7.20 -7.23)

கிருஷ்ணர் சொல்கிறார், நானே எல்லோருடைய இதயங்களிலும்

நீங்கள்ேகூட உங்களைக் கைவிட்டு
விடலாம், ஆனால் குரு எப்போதுமே
உங்களைக் கைவிட மாட்டார்.

பரமாத்மாவாக இருக்கிறேன். ஒருவர் ஒரு குறிப்பிட்ட கடவுளை வழிபட விரும்பிய உடனேயே, நான் அவரின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன். அதனால் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் அவரால் தம்மை முழுமையாக ஒப்படைக்க முடியும்.

தயவுசெய்து தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், ‘சிறு தெய்வம்’ என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நாம் எந்த மனப்பான்மையுடன் கடவுளை அணுகுகிறோம் என்பதையே அவர் குறிக்கிறார். நீங்கள் பயம் அல்லது பேராசையினால் கிருஷ்ணரை அணுகினால்கூட, நீங்கள் ஒரு சிறு தெய்வத்தைத்தான் அடைகிறீர்கள்.

சரியான மனப்பான்மையுடன் நீங்கள் சிறு தெய்வத்தை அணுகினால்கூட, நீங்கள் ஒப்பற்றவராக ஆகிவிடுவீர்கள்! அவர் உங்களுக்கு ஞானத்தை அளிப்பார்.

தவறான மனப்பான்மையுடன் நீங்கள் கிருஷ்ணரையே அணுகினால்கூட, உங்களுக்குப் பொருள்சார்ந்த நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.

கிருஷ்ணர் சொல்கிறார், “நானே ஒவ்வொருவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கிறேன். ஏதோவொரு சிறு தெய்வத்தை நீங்கள் வழிபட நினைத்த உடனேயே, நான் உங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறேன், அதனால் நீங்கள் அந்தக் குறிப்பிட்ட கடவுளிடம் உங்களை நீங்களே அர்ப்பணிக்க முடியும்.”

நீங்கள் முதல் நிலையிலிருந்து கடவுளை அணுகினாலும்கூட, நிச்சயமாக அவர் உங்களை வளப்படுத்துவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நீங்களேகூட உங்களைக் கைவிட்டு விடலாம், ஆனால் அவர் எப்போதுமே உங்களைக் கைவிட மாட்டார். ஒரு அவதாரத்தினுடைய மிக உயர்ந்த பண்பு எதுவென்றால் அவர் எப்போதுமே கைவிட மாட்டார்!

“நீங்கள் பயம் அல்லது பேராசை மனோபாவத்தோடு என்னை வணங்கினாலும்கூட, நான் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவேன். என்னுடைய சொந்த சக்தி அவற்றை நிறைவேற்றும், இதன் மூலம் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள், நீங்கள் பூர்ணத்துவத்தின் அடுத்த நிலைக்கு வருவீர்கள்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

குருவே சக்தியையும் புத்தியையும் தருகிறார்

சிறு தெய்வங்களிடமிருந்து நீங்கள் வரங்களைப் பெறும்போதுகூட, நீங்கள் வணங்கும் சிலைகள்தான் உங்களின் வேண்டுதல்களை எல்லாம் கொடுத்தது என்று நினைக்காதீர்கள்.

இவை எல்லாம் எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் அந்தச் சக்தியால் கொடுக்கப்பட்டதே. ஆனால் நீங்கள் அந்த வரங்களை வாங்கியதோடு மட்டும் நின்றுவிடாதீர்கள். நீங்கள் அடுத்தடுத்த பூர்ணத்வ நிலைகளுக்கு வளர வேண்டும்.

நான் எப்போதும் சொல்வதுண்டு, நீங்கள் கடவுளை வழிபடும்போது, முதலில் உங்கள் கனவுகள் நனவாகும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களின் எல்லா ஆசைகளும் நிறைவேறும். அதற்குப்பிறகு, நீங்கள் உண்மை என்று நம்பும் இந்த நனவுகூட கனவுதான் என்பதை அந்தக் கடவுள் உங்களுக்குப் புரியவைப்பார்!

கடவுள், முதலில் உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான சக்தியைத் தருகிறார். அதற்குப்பிறகு, நனவு என்பதே ஒரு கனவுதான் என்கிற புத்தியைத் தருகிறார்!

அதைத்தான் அவர், “நான் உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்களின் பக்குவ நிலையைப்பொறுத்தும், உங்களுடைய பூர்ணத்வ நிலையைப்பொறுத்தும், நீங்கள் என்னை எந்த மனோபாவத்துடன் வழிபடுகிறீர்கள் என்பதைப்பொறுத்தும்தான் நான் உங்களுக்கு எல்லாவற்றையும் தருகிறேன்,” என்று சொல்கிறார்.

நம்மிடம் புத்தி இல்லாததால்தான், கடவுளிடம் சென்று சக்தியைக் கேட்கிறோம். புத்தி இல்லாமல் நாம் சக்தியைப் பெற்றால், அது நீடித்து நிலைப்பதில்லை.

> நமது கடவுள்தன்மையை
> நாம் உணரும்பொழுதுதான்,
> நாம் தெய்விகத்தையேகூடப்

அதைத்தான் கிருஷ்ணர் சொல்கிறார், புத்தி இல்லாமல் சக்தி மட்டும் நமக்குக் கிடைத்தால், அது நம்மிடம் நிரந்தரமாகத் தங்குவதில்லை. அதனால்தான் சிறு தெய்வங்களிடமிருந்து வாங்கும் வரங்கள் தற்காலிகமானவைதான் என்று சொல்கிறார்.

கிருஷ்ணர் மற்றொரு கருத்தையும் வெளிப்படுத்துகிறார்: மத் பக்தா யாந்தி மாம் அபி - என் பக்தர்கள் என்னை வந்தடைகிறார்கள்.

அதற்குப்பிறகு அவர் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: "சிறந்த மனோபாவமான அன்புடனும் நன்றியுணர்வுடனும் என்னை நீங்கள் அணுகினால், உங்களால் என்னை அடைய முடியும்."

யாரும் என்னை அறியவில்லை

(7.24 -7.27)

கிருஷ்ணர், தமது கடவுள்தன்மையை வெளிப்படையாகவே அறிவிக்கிறார்: "பக்குவமடையாத அறிவீனர்கள், நான் இந்த வடிவத்தில் மட்டும் இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள். நான் வடிவமற்றவன் என்பதைப் புத்திசாலிகள் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். நான் வடிவம் எடுக்கும் போதுகூட, அதே பரப்ரஹ்ம உணர்வோடுதான் இருக்கிறேன். அதனால் என்னை மற்றொரு சிறு தெய்வமாக நினைக்காதே, நான் மனித வடிவத்தை எடுத்திருந்தாலும்கூட, நான் பிறக்கவும் இல்லை, எனக்கு மரணமும் இல்லை, வடிவமும் இல்லை, சாதாரண மனிதன் ஆகிவிடவில்லை, நான் எல்லாம்வல்ல அதே தெய்விகமாகவே இருக்கிறேன்!"

இந்த அறிவிப்பு, அவருடைய ஞானத்தைப் பிரகடனப்படுத்துகிறது.

இங்கே நாம் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. முதலில், கிருஷ்ணரின் வடிவமற்ற சக்தி

எல்லாம்வல்ல ஞானி வேறெங்கே
கா இல்லை, நமக்குள்ளேயே

என்று சொல்லும்பொழுது, அது அவரின் வல்லமையை, அவரின் தெய்விகத்தை, அவரின் கிருஷ்ண உணர்வை வெளிப்படுத்துகிறது.

இரண்டாவதாக, அந்த வடிவமற்றதன்மை எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும்சரி, அது கடவுளாகவே இருக்கிறது.

நமது கடவுள்தன்மையை நாம் உணரும்பொழுதுதான், நாம் தெய்விகத்தையேகூடப் போற்றுகிறோம். தனக்குள் இருக்கும் அந்தக் கடவுள்தன்மையை உணர்ந்துகொண்ட விழிப்புணர்வு நிலைதான், கிருஷ்ணரைக் கடவுளாக, ஜகத்குருவாகக் காட்டுகிறது.

அதே விழிப்புணர்வு உங்களுக்குள்ளும் ஏற்படுமேயானால், நீங்களும் கிருஷ்ண உணர்விற்குள்தான் இருப்பீர்கள். அவரோடு ஒன்று கலந்துவிடுவீர்கள்; அதனால் நீங்களும் கடவுளாக மாறிவிடுவீர்கள்.

அறியாமையிலிருந்து வெளிவாருங்கள்

கிருஷ்ணர் கேட்கிறார்: நீங்கள் அறியாமையால் மூடப்பட்டிருக்கும்போது, உங்களால் எப்படிக் கடவுள்தன்மையை உணர முடியும்?

பாண்டவர்களால் கிருஷ்ணரின் உண்மைநிலையை உள்ளது உள்ளபடியே உணர்ந்துகொள்ள முடிந்தது. அதை உணர்த்துவதற்கு அவர்களுக்கு யாரும் தேவைப்படவில்லை. மற்றொருபுறம், கௌரவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணரை மறுத்தார்கள். அவர்கள் அவரைப் புறக்கணித்தார்கள், கேலிசெய்தார்கள்.

“மாம் து வேத ந கஸ்சந (7.26) -யாரும் என்னை அறிய

Flute

மாட்டார்கள்,” என்று ஒரு குரு சொல் கிறார். எத்தனை ஸத்யமான வாக்கியம் பாருங்கள்!

‘ ‘ உங்கள் கருத்துக்களுக்கேற்ப நடந்துகொள்ளும் ஒரு சாதாரண மனிதனாக என்னை நீங்கள் நினைத்துவிடாதீர்கள்; ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் என்னை வரையறுக்காதீர்கள்; நான் அங்கு இருக்கமாட்டேன்,” என்று கிருஷ்ணர் சொல்கிறார்.