அத்தியாயம்-6: ஆத்ம ஸம்யம யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்களின் தடைகளையெல்லாம் தகர்த்திடும் தீர்வு
நீங்கள்தான் உங்களின் நல்ல நண்பன்,
நீங்கள்தான் உங்களின் மோசமான
எதிரி,
உங்களை நீங்களே
உயர்த்திக்கொள்வதும்
உங்களை நீங்களே
தாழ்த்திக்கொள்வதும்
உங்கள் கையில்தான் இருக்கிறது.
யோகி ஆவதன் மூலம் ஒருவன்,
தன்னை மேலான விழிப்புணர்வுடன்
ஐக்கியப்படுத்திக்கொள்வதற்கான
ஒரு நுட்பத்தை இங்குத் தருகிறார்
ஸ்லோகங்கள்
அத ஷஷ்டோண்ட்யாய:
ஆத்ம ஸம்யம யோக:
ஏ
ஸ்ரீபகவாநுவாச
அநாஸ்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய: ந
ஸ ஸந்நியாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய: நந 6.1
பகவான் சொன்னது
6.1 யார் ஒருவர் பலன்களைப்பற்றி யோசிக்காமல் செயல்களைச் செய்கிறாரோ அவரே துறவி. அவர் மனத்தைத் தூய்மைப்படுத்தும் சமயச்சார்புள்ள செயலைச்செய்பவராகிறார். கடமையைச் செய்யாமல் இருப்பவரும் யாகங்கள் செய்வதை நிறுத்தியவரும் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றாமல் விடுபவரும் ஒரு துறவியாகவோ அல்லது கர்மயோகியாகவோ இருக்க முடியாது.
யம் ஸந்நியாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ ந
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஸ்சந நந 6.2
6.2 ஓ பாண்டவா! துறவு ஒன்றே ஒருவரை மேலான பரம்பொருளோடு ஒன்றிப்போகும் யோகநிலைக்கு அழைத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. கடவுள்தன்மையோடு ஒன்றாகும் இந்த நிலை சொந்த விருப்பங்களைத் துறக்கும்பொழுது மட்டும்தான் நிகழ்கிறது.
ஆருருகேஷோர்முநேர்யோகம் கர்மகாரணமுச்யதே ந
யோகாரூடஸ்ய தஸ்யைவ ஶம: காரணமுச்யதே நந 6.3
6.3 துறவிகளால் வடிவமைக்கப்பட்ட யோக முறைகளைப் பழகவிரும்பும் ஒருவர், முதலில் தம்முடைய எல்லாச் செயல்களையும் யோகா அமைப்பில் சொல்லப்பட்டிருக்கிற வரிசைப்படிதான் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது மற்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் எல்லாச் செயல்களும் நின்றுவிடும்.
யதா ஹி நேந்த்ரியார்த்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே ந
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே நந 6.4
6.4 இவர் யோக நிலையை அடைந்துவிட்டார் என்று ஒருவரைச் சொல்லவேண்டுமென்றால், அவர் பொருள்சார்ந்த எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டிருக்க வேண்டும். அதற்குப்பிறகு அவர் புலன்களின் திருப்திக்காகச் செயல்களைச் செய்வதுமில்லை; பலனை அடிப்படையாகக்கொண்ட செயல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதுமில்லை.
உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவஸாதயேத் ந
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந: நந 6.5
6.5 நீங்களே உங்களின் நண்பன்; நீங்களே உங்களின் எதிரி. உங்கள் ஆத்மாவின் (சுயத்தின்) மூலம் உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளுங்கள், உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேனாத்மைவாத்மநா ஜித: ந
அநாத்மநஸ்து ஶத்ருத்வே வர்தேதாத்மைவ ஶத்ருவத் நந 6.6
6.6 தன்னையே வென்ற ஒருவருக்கு, அவரின் நண்பர்களிலேயே மேலான நண்பன் அவருடைய ஆத்மாவே! இதைச் செய்வதில் தோல்வி அடைந்த ஒருவருக்கு, அவருடைய ஆத்மாவே அவரின் மேலான எதிரி!
ஜிதாத்மந: ப்ரஶாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: ந
ஶீதோஷ்ணஸுக து :கேஷு ததா மாநாபமாநயோ: நந 6.7
6.7 யார் ஒருவர் தம்மைத்தாமே வென்றிருக்கிறாரோ, யார் ஒருவர் மன அமைதியை அடைந்திருக்கிறாரோ, அவர் ஏற்கனவே மேலானதன்மையை அடைந்துவிட்டவராகிறார். இப்படிப்பட்ட மனிதர், சந்தோஷம் அல்லது துக்கம் வெப்பம் அல்லது குளிர், மரியாதை அல்லது அவமரியாதைபோன்ற எல்லாவற்றிலும் இதே நிலையிலேயே இருக்கிறார்.
ஜ்ஞானவிஜ்ஞானத்ரு'ப்தாத்மாகூடஸ்தோ விஜிதேந்த்ரிய: ந
யுக்த இத்யுச்யதே யோகீஸமலோஷ்டாஶ்மகாஞ்சந: ந॥ 6.8
6.8 யார் ஒருவர் ஆன்மிக அறிவைப் பெற்றிருப்பதனால் மன நிறைவுடன் இருக்கிறாரோ, யார் ஒருவர் தனது புலன்களை வென்றிருக்கிறா ரோ, யாருக்குக் கல்லும் தங்கமும் ஒன்றுபோல் தோன்றுகிறதோ மேலும் யார் ஒருவர் தம்மிடம் இருப்பதைக்கொண்டு மன திருப்தியுடன் இருக்கிறாரோ, அவர் தம்மை உணர்ந்து, தன்னுள் உறுதியாக நிலைபெற்றவர் என்று கருதப்படுகிறார். மேலும் அவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார்.
ஸுஹ்ரு'ந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு ந
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஶிஷ்யதே ந॥ 6.9
6.9 நேர்மையான நலன் விரும்பிகள், உள்ளன்புள்ள கொடையாளிகள், உதாஸீனர்கள், மத்தியஸ்தர்கள், பொறாமை உள்ளவர்கள், நண்பர்கள், எதிரிகள், பக்தர்கள், பாவிகள் என எல்லோரையும் சமமான மனநிலையோடு, ஆழ்ந்த உணர்வோடு பார்க்கும் ஒருவர்தான் உண்மையிலேயே உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித: ந
ஏகாகீ யதசித்தாத்மா நிராஶீரபரிகிரஹ: ந॥ 6.10
6.10 ஒரு யோகி எப்போதும் தம் மனத்தை அந்த மஹோன்னதமான ஆத்மாவின் (சுயத்தின்) மேல் ஒருமுகப்படுத்த வேண்டும். அவர் தனிமையில் இருந்துகொண்டு,வேறு எதனாலும் ஈர்க்கப்படாதவண்ணம் மனத்தைக் கவனத்துடன் கட்டுப்படுத்தி, ‘எனது’ என்ற எண்ணத்திலிருந்துவிடுபட்டவராய் இருக்க வேண்டும்.
ஶுசௌ தேஶே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந: ந
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஶோத்தரம் நடு 6.11
6.11 ஒரு சுத்தமான தூய்மையான இடத்தில், குஷ புல், மான் தோல், அதன்மேல் ஒரு துணி என்று ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி, மிகவும் உயரமாகவும் இல்லாமல், தாழ்வாகவும் இல்லாமல் தம்முடைய இருக்கையை அமைக்க வேண்டும்.
தத்ரைகாக்ரம் மந: க்ரு'த்வா யதசித்தேந்த்ரியக்ரிய: ந
உபவிஶ்யாஸநே யுஞ்ஜ்யாத் யோகமாத்மவிஶுத்தயே நடு 6.12
6.12 அந்தத் தூய்மையான இருக்கையில் நன்றாக அமர்ந்துகொண்டு, தம் மனத்தின் செயல்களையும், புலன்களின் செயல்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்தும் பயிற்சியை ஒரு யோகி செய்ய வேண்டும்.
ஸமம் காயஶிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர: ந
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஶஶ்சாநவலோகயந் நடு 6.13
6.13 உடல் தலை மற்றும் கழுத்து ஆகியவற்றை நேராக வைத்து, வேறு எந்தத் திசையிலும் பார்க்காமல், மூக்கின் நுனியின்மீது கவனத்தை வைக்க வேண்டும்.
ப்ரஶாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மஶார்வதே ஸ்தித: ந
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர: நடு 6.14
6.14 கலக்கமில்லாத அமைதியான மனத்தோடு அமர்ந்து பயமில்லாமல், மனத்தை பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு இயைந்து மனத்தைக் கட்டுப்படுத்தி என்மீது ஒருமுகப்படுத்தி, என்னையே உயர்ந்த இலட்சியமாகக்கொள்!
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ: ந
ஸாந்திம் நிர்வாணபரமாம் மத்சம்ஸ்தாமதிகச்சதி நந 6.15
6.15 மனத்தைக் கட்டுப்படுத்தி, ஆத்மாவில் நிலைபெற்ற யோகியானவர் என் ராஜ்யத்தையும் முக்தியையும் அமைதியையும் பெறுகிறார்.
நாத்யஸ்நதஸ்து யோகோண்ஸ்தி ந சைகாந்தமநஸ்நத: ந
ந சாதி ஸ்வப்நசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந நந 6.16
6.16 ஓ அர்ஜுனா, யோகா என்பது மிக அதிகமாக உண்பதோ அல்லது மிகக் குறைவாக உண்பதோ அல்ல. மிக அதிகமாக உறங்குவதோ அல்லது மிகக் குறைவாக உறங்குவதோ அல்ல.
யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு ந
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா நந 6.17
6.17 உணவு, ஓய்வு, பொழுதுபோக்கு, வேலை, தூக்கம், விழிப்பு - இவற்றை ஒழுங்குமுறைப்படுத்தியிருக்கும் ஒருவர் தம் துக்கத்தைக் குறைத்து க்கொள்ள முடியும்.
யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே ந
நி:ஸ்ப்ரு'ஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா நந 6.18
6.18 கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன் ஒருவர், தம்முடைய ஆத்மாவிலேயே நிலைபெற்று, எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபடும்பொழுது, அவர் யோகத்தில் நிலைபெற்றவர் என்று சொல்லப்படுகிறார்.
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா ந
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந: நந 6.19
6.19 காற்று இல்லாத இடத்தில் விளக்கு அலையாது இருப்பதுபோல, யோகத்திலும் ஆத்ம தியானத்திலும் ஈடுபடுகிற யோகியின் மனமும் கட்டுப்பாட்டுடன் நிலையாக இருக்கும்.
யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா ந
யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்யந்நாத்மநி துஷ்யதி நந 6.20
6.20 மனம் யோகாவில் அமைதியாகிறது, ஆத்மாவினால் ஆத்மாவைக் கண்டு ஆத்மாவிலேயே திருப்தியடைகிறது.
ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம் ந
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஶ்சலதி தத்த்வத: ந॥ 6.21
6.21 புலன்களைக் கடந்துசெல்லும் புத்திசாலித்தனத்தால் உயர்ந்த ஆனந்தம் க்ரஹிக்கப்படுகிறது. இதை அறிந்த மனிதர் ஸத்யத்தில் நிலைத்திருப்பார்.
யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத: ந
யஸ்மிந்ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே ந॥ 6.22
6.22 இந்த உயர்ந்த நிலையை அடைந்ததனால், ஒருவர் அதற்குப்பின் எவ்வளவு பெரிய பலனையும் சிறப்பாகக் கருதமாட்டார். இந்த உச்சத்திலேயே நிலைத்திருப்பதனால், ஒருவர் மிகப்பெரிய துன்பம் வந்தாலுமே அதனால் அசைக்கப்படுவதில்லை.
தம் வித்யாத் து:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம் ந
ஸ நிஶ்சயேந யோக்தவ்யோ யோகோSநிர்விண்ண சேதஸா ந॥
6.23
6.23 உறுதியுடனும் தளராத நெஞ்சத்துடனும் யோகம் செய்யப்படும்பொழுது, புலன்களோடு தொடர்பு கொள்வதால் ஏற்படும் துன்பங்கள் நீக்கப்படுகின்றன.
ஸங்கல்பப்ரபவாங்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஶேஷத: ந
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத: ந॥ 6.24
6.24 ஒருவர் தம் மனத்திலிருந்து தோன்றும் கற்பனைகளை முழுவதுமாக விட்டுவிடுவதன் மூலம் தம் மனத்தைக் கொண்டு, புலன்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் முறைப்படுத்த முடியும்.
ஶநை: ஶநைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா ந
ஆத்மஸம்ஸ்தம் மந: க்ரு'த்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் நந 6.25
6.25 புத்தியினால் தீர்மானிக்கப்பட்ட நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு, வேறு எதைப் பற்றியும் நினைக்காத மனத்தோடு, மெதுவாகப் படிப்படியாக ஒருவர் ஆத்மாவில் நிலைகொள்ள வேண்டும்.
யதோ யதோ நிஸ்சரதி மநஸ்சஞ்சலமஸ்திரம் ந
ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஸம் நயேத் நந 6.26
6.26 மனம், தனது இயல்பான தன்மைகளான நிலையில்லாமல் இருத்தல், இங்குமங்கும் அலைபாய்தல் போன்றவற்றால் எப்பொழுதெல்லாம் நிம்மதி இழந்திருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அதை அங்கிருந்துமீட்டு, ஆத்மாவின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர வேண்டும்.
ப்ரஸாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம் ந
உபைதி ஸாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம் நந 6.27
6.27 அந்த மேலான பிரபஞ்ச இருப்புத்தன்மையால் அவர் எல்லாவகை உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிடுவதால், அமைதியான மன நிலையுடன் இருக்கும் யோகி உயர்ந்த ஆனந்தத்தை அடைகிறார்.
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ: ந
ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஸமத்யந்தம் ஸுகமஸ்நுதே நந 6.28
6.28 மனத்தை எப்போதும் ஆன்மாவில் நிலைபெறச்செய்து, வெளி-உலகப் பொருள்களால் களங்கப்படாமல் இருக்கும் யோகியானவர் மேலான பரம்பொருளுடன் எப்போதும் தொடர்புகொண்டு மிக உயர்ந்த ஆனந்தத்தை அடைகிறார்.
ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி ந
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந: நந 6.29
6.29 யோகத்தில் நிலைப்பெற்று ஆத்ம தரிசனம் பெற்ற யோகீ, மேலான ப்ரஹ்மத்தை எல்லா உயிர்களிலும் எல்லா உயிர்களை ப்ரஹ்மத்திலும் காண்கிறார். அவர், அந்தப் ப்ரஹ்மத்தை எங்கும் எல்லா இடத்திலும் பார்க்கிறார்.
யோ மாம் பஶ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஶ்யதி ந
தஸ்யாஹம் ந ப்ரணஶ்யாமி ஸ ச மே ந ப்ரணஶ்யதி நஃ
6.30 எல்லா இடத்திலும், எல்லாப் பொருட்களிலும் என்னைப் பார்க்கும் ஒருவரின் பார்வையிலிருந்து நான் மறைவதில்லை; அவரும் என் பார்வையிலிருந்து மறைவதில்லை.
ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: ந
ஸர்வதா வர்தமாநோண்பி ஸ யோகீ மயி வர்ததே நஃ
6.31 எல்லா வகையிலும் என்னோடு ஒருமித்து இணக்கமாய் இருந்துகொண்டு, எல்லா உயிர்களிலும் இருக்கும் என்னை வழிபடும் ஒருவர் என்னுடனேயே இருக்கிறார்.
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஶ்யதி யோணர்ஜுந ந
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத: நஃ
6.32 ஓ அர்ஜுனா! என்னுடைய கருத்தின் படி, தம்முடைய மகிழ்ச்சி மற்றும் துன்பத்தைப்போலவே, பிறருடைய மகிழ்ச்சி மற்றும் துன்பத்தைச் சமமாகப் பார்ப்பவர்தான் சிறந்த யோகீ!
அர்ஜுந உவாச
யோ ண்யம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸூதந ந
ஏதஸ்யாஹம் ந பஶ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம் நஃ
அர்ஜுனன் சொன்னது
6.33 ஓ மதுசூதனா! மனம் அமைதியில்லாமலும் நிலையில்லாமலும் இருக்கிற இந்த நிலைமையில், நீர் சொன்ன இந்த யோக அமைப்பை என்னால் பார்க்க முடியவில்லை.
சஞ்சலம் ஹி மந: க்ரு'ஷ்ண ப்ரமாதீ பலவத்த்ரு'டம் ந தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் நடு 6.34 6.34 ஓ கிருஷ்ணா! அலைபாயும் மனமானது திடமான, உறுதியான குழப்பத்தில் இருக்கிறது. காற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதுபோல், அலையும் இந்த மனத்தைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று நினைக்கிறேன்.
ஸ்ரீபகவாநுவாச அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் நடு அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ரு'ஹ்யதேநடு 6.35 பகவான் சொன்னது 6.35 ஓ வலிமையான கைகளை உடைய குந்தியின் மகனே! அலையும் மனத்தைக் கட்டுப்படுத்துவது சந்தேகத்திற்கு இடமில்லாமல் கடினமான விஷயம்தான். ஆனால் பயிற்சியினாலும் பற்றற்றதன்மையாலும் அதைக் கட்டுப்படுத்திவிட முடியும்.
அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: நடு வச்யாத்மநா து யததா ஶக்யோண்வாப்NYOதுமுபாயத: நடு 6.36 6.36 என்னுடைய கருத்துப்படி, மனம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒருவர் யோகத்தை அடைவது கடினமே! ஆனால் தகுந்த வழிமுறைகள் மூலம் மனத்தின் மீதான கட்டுப்பாட்டை அடைவது சாத்தியமே!
அர்ஜுந உவாச அயதி: ஶ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமானஸ: நடு அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ரு'ஷ்ண கச்சதி நடு 6.37 அர்ஜுனன் சொன்னது 6.37 ஓ கிருஷ்ணா! ஒருவர் யோகாவை நம்பிக்கையுடன் செய்தும் அலையும் மனத்தின் காரணமாக யோகத்தை அடைய முடியவில்லையென்றால் அவர் எந்த இடத்தை அடைவார்?
கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்Huரமிவ நச்யதி நடு
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி ந
6.38 ஓ, வலிமையான தோள்களையுடைய க்ருஷ்ணா! தெய்விகத்தை அடையச் செய்யும் பாதையிலிருந்து விலகி நடக்கும் ஒருவர், உறுதியாக நிலைபெறாமல் சிதறிய மேகம்போல் அழிந்து போகிறாரா?
ஏதந்மே ஸம்சயம் க்ரு'ஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத: ந
த்வதந்ய: ஸம்சயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே ந
6.39 இதுதான் என்னுடைய சந்தேகம். ஓ க்ருஷ்ணா! உன்னை வேண்டிக் கேட்கிறேன். நீர்தான் இதை முழுவதுமாக நீக்க வேண்டும். நிச்சயமாக இந்தச் சந்தேகத்தை நீக்க உம்மைவிட வேறு யாருமே இங்கே இல்லை.
ஸ்ரீபகவாநுவாச
பார்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே ந
ந ஹி கல்யாணக்ரு'த் கஸ்சிthruர்கதிம் தாத கச்சதி ந
பகவான் சொன்னது
6.40 ப்ரிதாவின் மகனே! நல்ல செயல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்பவன், இந்த உலகத்தில் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்திலும் அழிவைச் சந்திக்க மாட்டான்; அவமதிப்பையும் சந்திக்க மாட்டான்.
ப்ராப்ய புண்யக்ரு'தாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ: ஸமா: ந
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோsபிஜாயதே ந
6.41 யோக முறையிலிருந்து வழுவியவர், இந்த உலகில் நீண்ட காலம் வாழ்ந்து பல நல்ல தர்ம செயல்களைச் செய்கிறார். பிறகு, செல்வம் நிறைந்த ஒழுக்க சீலர் வீட்டில் பிறப்பெடுக்கிறார்.
அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம் ந
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ரு'ஸம் ந
6.42 ஒரு யோகி கண்டிப்பாக ஞானமுள்ள மக்கள் உள்ள குடும்பத்தில்தான் பிறப்பெடுப்பார். உண்மையில், இது போன்ற பிறவி இந்த உலகத்தில் பெறுவதற்கரியது.
தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம் |
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந || 6.43
6.43 ஓ குருவம்சத்தில் வந்தவனே! இப்படிப்பட்ட பிறவியை எடுப்பதால், அவர் முற்பிறவியின் யோக அறிவை பெற்று மீண்டும் யோகத்தை அடைய முயற்சிசெய்கிறார்.
பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஶோsபி ஸ: |
ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஶப்தப்ரஹ்மாதிவர்ததே || 6.44
6.44 அவர் முன்ஜன்ம பயிற்சியின் காரணமாக, தானாகவே யோகாவினால் கவரப்பட்டு, யோகத்தை அறிய ஆவல் உடையவராக இருக்கிறார்; அவர் நிச்சயமாக வேதங்களையும் கடக்கிறார்.
ப்ரயத்நாத்யதமானஸ்து யோகீ ஸம்ஶுத்தகில்பிஷ: |
அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம் || 6.45
6.45 ஒரு யோகி, தம்முடைய பயிற்சி மற்றும் முயற்சியின் மூலம், பல பிறவிகளுக்குப் பிறகு அவருடைய பாவங்களை எல்லாம் களைந்துவிட்டு மிக உயர்ந்த நிலையை அடைகிறார்.
தபஸ்விப்யோsதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோsபி மதோsதிக: |
கர்மிப்யஶ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந || 6.46
6.46 ஒரு துறவியைவிட, ஞானமுடையவரைவிட, செயலின் பலனுக்காக வேலைசெய்பவரைவிட ஒரு யோகியே சிறந்தவர். அதனால் ஓ அர்ஜுனா! நீ யோகியாவாயாக!
யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா |
ஶ்ரத்தாவாநபஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:|| 6.47
6.47 யார் ஒருவர்,எப்போதும் என்னிலேயே வாழ்ந்து, என்னைப் பற்றியே நினைத்து, என்னையே முழு நம்பிக்கையுடன் பூஜித்து, என்னோடு தொடர்புடையவராக இருக்கிறாரோ, அவரே யோகிகளுள் சிறந்தவர்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ஆத்மஸம்யமயோகோ நாம ஷஷ்டோsத்யாய: நந ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள க்ருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஆத்ம ஸம்யம யோகம்' எனும் பெயருடைய ஆறாவது அத்தியாயம்.
உங்களின் தடைகளையெல்லாம் தகர்த்திடும் தீர்வு

உள்ளே நோக்குங்கள், எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்பும் பூர்ணத்வ உணர்வில் இருங்கள்!
- த்யான யோகம் என்னும் இந்த அத்தியாயத்தின் செய்தி இதுதான்!
ஸந்நியாஸம் - அது ஒரு 'அந்தஸ்து' அல்ல, ஒரு 'நிலை'! (6.1 - 6.4).
கிருஷ்ணர் அவருடைய பதில்களை முந்தைய அத்தியாயத்திலிருந்து தொடர்கிறார்.
கர்மா - செயல்புரியும் நிலை, ஸந்நியாஸம் - துறவு நிலை. இவை நாம் செய்யும் செயல்களோடு தொடர்பு உடையது அல்ல; இவை நேரடியாக நம் இருப்புத்தன்மையோடு தொடர்பு கொண்டவை.
ஸந்யாஸியாக இருப்பது என்பது நீங்கள் வகிக்கும் ஒரு அந்தஸ்து அல்ல; அது உங்கள் மனத்தினுடைய ஒருநிலை.
நீங்கள் கர்மயோகத்தைச் செய்யும் கர்மயோகியாக இருந்தாலும் அல்லது துறவு வாழ்வை மேற்கொண்டிருக்கும் ஸந்யாஸியாக இருந்தாலும், அது எந்தவிதத்திலும் உங்களைப் பாதிக்கப் போவதில்லை.
அது, ஒருவருடைய உள்-உணர்வைச் சார்ந்தது, ஒருவருடைய இருப்புத்தன்மையைச் சார்ந்தது.
இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், "ஒருவர் நெருப்பை அடிப்படையாகக் கொண்ட செயல்களைச் செய்யாமல் விட்டுவிடுவதாலும், அவருடைய கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் அவர் ஒரு ஸந்யாஸி என்று அர்த்தம் இல்லை."
அந்தக்காலத்தில் நெருப்பே எல்லாவற்றிற்கும் அடிப்படை. சமைப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஆன்மிகப் பயிற்சியாகவே இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் நெருப்பு தேவையாய் இருந்தது.
இன்றைய உலகத்திற்காக, நான், 'நெருப்பு' என்ற வார்த்தையை 'அலைபேசி என்று மாற்றிக்கொள்கிறேன். அலைபேசி
நம்முடைய கற்பனைகளை நாம்
துறந்தாக வேண்டுமென்று நம்மை
உணரச்செய்வதுதான் யோகா!
யையோ, கணினியையோ தியாகம் செய்வதால் மட்டுமே ஸந்யாஸியாகிவிடலாம் அல்லது கர்மயோகி ஆகிவிடலாம் என்று நினைக்காதீர்கள்' எனலாம்.
மனம், தன்னுடைய எண்ணங்களைத் துறப்பதே உண்மையான துறவு! இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் துறந்து, நிகழ்கால பூர்ணத்வத்தில் (கணூஞுண்ஞுணண ண்ணீசூழிகு னினூ ஞிணிட்டீணீடு ணாடிணிண) மனத்தை இருக்கச் செய்வதுதான் உண்மையான துறவாகும். இதைத்தான் கிருஷ்ணர், ஸங்கல்பம் - சுய விருப்பம் என்று குறிப்பிடுகிறார்.
‘நான்’ என்பதைப் பற்றி கிருஷ்ணர் பேசும்பொழுது, நம்முடைய வெளிப்புற அடையாளத்தைத்தான் 'நான்' என்று எண்ணி குழம்பிவிடுகிறோம். ஆனால் உண்மையில் 'நான்' என்பது நம்முடைய உள்மையப் பகுதியைத்தான் குறிக்கிறது.
நிஜமில்லாத 'நான்' என்கிற இந்த வெளிப்புற அடையாளத்தை நாம் விட்டுவிடும்போது, நம்முடைய உண்மையான அடையாளம் நம்முடைய 'உள்மையப் பகுதி'தான் என்பதை உணர்ந்துவிடுவோம்.
கேளுங்கள், இப்போது யோகாவை வரையறுக்கிறேன். நம்முள் நாமே திருப்தியுடன் இருக்கவேண்டுமென்றால், நம்முடைய கற்பனைகளை நாம் துறந்தாக வேண்டுமென்று நம்மை உணரச்செய்வதுதான் யோகா.
புலனின்பங்களின் மூலம் வெளிப்படுத்தப்படும்போதே ஆசைகள் கரைந்துவிடுகிற நிலைதான் யோகா. இந்த நிலையில், நம்முடைய உண்மையான 'நான்' உடன் நாம் இணைந்துவிடுகிறோம். இந்த நிலையில், கடவுள்தன்மைக்கும் நமக்கும் எந்த இடைவெளியும் இருப்பதில்லை.
வாழ்வே யோகமானால் ஜீவன்முக்தியில் மலர்ந்திடலாம்
'அடக்குதல்' இல்லாத உண்மையான 'துறவு நிலை' என்று கிருஷ்ணர் சொல்கிற யோக நிலை இதுவே. 'அடக்குதலுக்குப்' பதிலாக, பூர்ணத்வத்தை நோக்கிய உணர்வுமாற்றமே இங்கு நடக்கிறது.
இந்தப் பாதை ‘நான்’ என்பதை நோக்கியதோ அல்லது புலன்களின் திருப்தியை நோக்கியதோ அல்ல.
உண்மையில் அங்கே ‘அதை நோக்கி’ என்பதே இல்லை. அங்கே குறிக்கோள் கிடையாது. பாதையே குறிக்கோள்; அதைத்தவிர வேறொன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்தோம் என்றால், நம் மனம் கற்பனைக்கோட்டை கட்டவும் முடியாது; நம்மைக் கட்டுப்படுத்தவும் முடியாது.
அடுத்ததாகக் கிருஷ்ணர், “துறவிகளால் வடிவமைக்கப்பட்ட யோக முறைகளை ஒருவர் முதலில் செய்யத் தொடங்கும்பொழுது, அவற்றை அவர்கள் வரையறுத்த முறைப்படிதான் செய்ய வேண்டும். அப்படிச்செய்யும்பொழுது, மற்ற காரணங்களுக்காகச் செய்யும் செயல்கள் அனைத்துமே தாமாகவே நிறுத்தத்திற்கு வந்துவிடும்,” என்று சொல்கிறார்.
மூலமனப்பாங்குகளைக் கண்டுபிடித்து, அவற்றை நிறைவுசெய்வதே யோகத்தின் முதற்படி! பதஞ்ஜலி அருளிய அஷ்டாங்க யோகத்தில் விளக்கப்பட்டுள்ள யோகத்தின் எட்டு நிலைகளுமே ஒன்றுக்கொன்று இணையாக செய்யப்பட வேண்டிய முறைகளே, அது வரிசைப்படி செய்யும் முறைகள் அல்ல.
இதன் ஒவ்வொரு பகுதியுமே முழு விழிப்புணர்வோடு செய்யப்பட்டால், நாம் செய்யும் ஒவ்வொரு தனிச் செயலுமே நம்மை இயற்கையோடு இணைத்துவிடும். நாம் இயற்கையிடம் நாமாகவே ஸரணாகதி அடைந்துவிடுவோம். உண்மையான யோக நிலையான ஸமாதி நிலையை நாம் அடைந்துவிடுவோம்.
யோகத்தைப் பயில்தல் என்றால் உடலோடு ஒருங்குவித்தலை எடுத்து வருதல்’ என்று பொருள். ஸம்ஸ்க்ரு’தத்தில் யோகா என்ற சொல்லிற்கு ‘இணைதல்’ அல்லது ‘இறையோடு ஒன்றாகடுதல்’ என்று பொருள். நாம் யோக நிலையில் இருக்கும்பொழுது, ஆனந்தமான தியான நிலையில் இருக்கிறோம்.
நீங்கள் உங்களின் நண்பரா?
எதிரியா? (6.5 -6.9)
உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத் /
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந: // (6.5)
நீங்களே உங்களின் நண்பன்; நீங்களே உங்களின் எதிரி. உங்கள் இருப்புத்தன்மையின்மூலம் உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
மொத்தக் கீதையினுடைய சாரமே இந்த ஸ்லோகம்தான் என்று என்னால் சொல்ல முடியும்.
உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ளும் நுட்பத்தை நீங்கள் தெரிந்துகொண்டீர்களென்றால், நீங்களே உங்களின் நண்பனாகிவிடுவீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொண்டீர்களென்றால், நீங்களே உங்களின் எதிரியாகிவிடுவீர்கள்.
இந்த வார்த்தைகளை, இந்தப் போதனைகளை, த்யான நுட்பங்களை பின்பற்றும்பொழுது நீங்கள் தோல்வி அடைந்தாலோ அல்லது நீங்கள் அவற்றை மறந்துவிட்டாலோ, கவலைப்படாதீர்கள்.
மீண்டும் மீண்டும் உங்களை மேலேகொண்டுவாருங்கள். மன அழுத்தத்திலும் குற்றவுணர்விலும் விழாதீர்கள்.
இந்த முக்கியமான உண்மையை பகுத்தராய்வு செய்யுங்கள். உங்களையும், மற்றவர்களையும் கைவிடாதீர்கள். மற்றவர் நூறுமுறை தோற்றாலும், அவரோடு இணைந்து தொடர்ந்து பணியாற்றுங்கள்.
மற்றவர்களின் தோல்வியைக் கண்டு நீங்கள் ஏமாற்றம் அடைந்தால், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அது உங்களுடைய சொந்தத் தோல்வியை நோக்கிய உங்களுடைய ஏமாற்றமே.
இங்கே கிருஷ்ணர் சொல்கிறார் -உத்தரேதாத்மநாத்மாநம்
> நீங்களே உங்களை
> உயர்த்திக்கொள்ளவில்லை என்றால்,
> உங்களை ஒருவராலும் விடுவிக்க
நாத்மாநமவஸாதயேத் - உங்கள் இருப்புத்தன்மையால் உங்களை நீங்களே மேலேகொண்டுவாருங்கள். நீங்களே உங்களை உயர்த்திக்கொள்ளவில்லை என்றால், உங்களை ஒருவராலும் விடுவிக்க முடியாது.
மூலமனப்பாங்குகளை
நிறைவுசெய்தால்,
சமநிலை சாத்தியமே!
'புரிந்துணர்வு' சரியானதாக இருந்தால் புலன்களை ஜெயிக்கலாம்
நாம் மனத்தை வெல்லும்போது, சந்தோஷம், துக்கம் இரண்டுமே ஒன்றுதான். நாம் அவற்றால் பாதிக்கப்பட மாட்டோம்.
கிருஷ்ணர் சொல்கிறார், "ஜிதாத்மந: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: - யார் ஒருவர் தம்மைத்தாமே வென்றிருக்கிறாரோ, அவர் ஏற்கெனவே மேலான ஆனந்தத்தை அடைந்துவிட்டவராகிறார்.
ஸீதோஷ்ணஸுக து:கேஷு ததா மாநாபமாநயோ: (6.7) - இப்படிப்பட்ட மனிதர், சந்தோஷம் அல்லது துக்கம் வெப்பம் அல்லது குளிர், மரியாதை அல்லது அவமரியாதைபோன்ற எல்லாவற்றிலும் இதே நிலையிலேயே இருக்கிறார்."
சந்தோஷம் துக்கம், வெப்பம் குளிர்ச்சி, மரியாதை அவமரியாதை இவை எல்லாம் ஒரு மனிதனுக்கு எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும்? இது எப்படிச் சாத்தியம்?
நம்முடைய மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்யும்பொழுது இது சாத்தியம் என்கிறார், கிருஷ்ணர்.
கேளுங்கள், புலன்கள்மூலம் நாம் செயல்களைச் செய்யும்போது, நம்முடைய கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டுதான், நாம் 'ஆம்' அல்லது 'இல்லை' என்கிற முடிவையே எடுக்கிறோம்.
எந்த அனுபவங்களோடு நாம் வளர்ந்தோமோ அல்லது எந்த வார்த்தைகளைக்கொண்டு நம் மனத்தையும் எண்ணப் பதிவுகளையும் கட்டுறுத்தி வைத்திருக்கிறோமோ அதை அடிப்படையாக வைத்துத்தான் எந்தவொரு முடிவையும் நாம் எடுக்கிறோம்.
நம்முடைய மூலமனப்பாங்குகளின் அடிப்படையில்தான் நம்முடைய புத்தி முடிவெடுக்கிறது.
எது எப்படியிருந்தாலும் எப்பொழுதெல்லாம் நம் மனம் இருமைத்தன்மையில் சிக்கிக்கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் நாம் மீண்டும் மீண்டும் குழப்பமான நிலைக்குள், நம்முடைய
துக்கங்களுக்குள், நம்முடைய இயல்பூக்க நிலைக்குள் விழுகிறோம்.
புலன்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அழிக்கவோ நாம் முயற்சிசெய்தோமென்றால், நாம் மேலும் மேலும் அதிகமாகப் போராடுவோம்; மேலும் மேலும் அதிகமாகத் துக்கப்படுவோம்.
நாம் நம் உடலைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்தால், அதுவும் பயனற்ற வீண்முயற்சியே.
'ஜிதாத்மந: -தன்னை வென்றவருக்கு' என்று கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார். இதில் 'தன்னை' என்று அவர் சொல்லும்போது, நம்முடைய 'புரிந்துணர்வையே' அவர் குறிக்கிறார்.
‘தீர்மானங்களை எடுக்கும்' செயல் நடைபெறும் இடங்களாகிய மனம், புத்தி மற்றும் அஹங்காரம் அல்லது மூலமனப்பாங்குகள் -என்னும் இம்மூன்று இடங்கள்தான், நம்முடைய 'புரிந்துணர்வை'த் தீர்மானிக்கின்றன. இவை மூன்றுந்தான் தொடர்ந்து நம் புலன்களுக்குச் சக்தியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆகவே நாம் செய்யவேண்டியதெல்லாம், நமது மூலமனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்வது மட்டுந்தான்.
புலன்கள் மற்றும் குறைவுணர்வுகள் என்னும் தவறான பக்கத்திலிருந்து வேலைசெய்து புலன்களை வெல்வதற்கு முயன்றோமானால், நம்மால் அவற்றை வெற்றிகொள்ளவே முடியாது.
பிரஷர் குக்கரின் அழுத்தத்தை அதிகரிக்க முயற்சித்தால், நம்மால் அதன் மூடியைத் திறக்கவே முடியாது. மூடியைத் திறக்க வேண்டுமென்றால், முதலில் நாம் நெருப்பினை அணைக்கவேண்டும். அப்போதுதான் அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி குறையும்.
தீயை அணைப்பது என்பது நமது மூலமனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்வதையே குறிக்கிறது. அதற்கு நாம் பூர்ணத்வ உணர்வை உருவாக்கும் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நமது மூலமனப்பாங்குகளைப் பூர்ணத்வம் செய்யும்பொழுது, நம்முடைய 'புரிந்துணர்வு'ம் சரியானதாகவே இருக்கும்; 'புரிந்துணர்வு' சரியானதாக இருக்கும்பொழுது புலன்களை நம்மால் வெற்றிகொள்ள முடியும்!
புலன்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பை மனத்திற்குக் கொடுங்கள்
நாம் வெறுமனே புலன்களை ஜெயிக்க முயற்சிசெய்தோமென்றால், நாம் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டே இருப்போம். அதன் பிறகு நம்மை அறியாமலேயே, புலன்களை வெல்வது என்பது முடியாதசெயல் என்று எண்ண ஆரம்பித்துவிடுவோம். நம்பிக்கையை இழந்துவிடுவோம். இந்த வழியில் செயல்பட நமக்குப் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.
ஜிதாத்மன் ஆவதற்கு, நமது மனத்தின் நிலையிலிருந்துதான் முயல வேண்டுமேதவிர, புலன்களின் நிலையிலிருந்து அல்ல.
"ஜிதாத்மந: -என்றால் சரியான பூர்ணத்வ புரிந்துணர்வைக் கற்றுத் தேர்ந்தவர். புலன்களோடு பூர்ணத்வம் செய்த ஒருவர், தம்முடைய வாழ்க்கைக்கான முடிவுகளைத் தெளிவுடன் எடுக்கும் திறமைசாலியாக இருப்பார். மனத்தையும், புலன்களையும் வென்ற ஒரு இருப்புத்தன்மையையே ஜிதாத்மந: என்கிறோம்.
நாம் ஆனந்தத்தை அடைய வேண்டியதில்லை. அது ஏற்கனவே நமக்கு உள்ளேதான் இருக்கிறது. அது அடையப்பட வேண்டிய ஒன்று என்றால் அதை இழப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும்.
தனித்துவமான முறையில் முயன்றுதான் ஏதோ ஒன்றை அடையமுடியும் என்றால், அது அடைவதற்குத் தகுதியான ஒன்று அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நாம் நமது இருப்புத்தன்மையை அடைய வேண்டியதில்லை. ஏனெனில், இருப்புத்தன்மை ஏற்கனவே அடையப்பட்டதுதான். நமக்கு தேவைப்படுவதெல்லாம் நம்முடைய 'சுய' இருப்புடனான பூர்ணத்வம் மட்டுமே!
குருவினுடைய தகுதிகளே நாம் பயிற்சிசெய்ய வேண்டிய நுட்பங்கள்.
ஞானிகள்- நமக்குக் கிடைத்த தியான நுட்பங்கள்
"யார் ஒருவர் ஆன்மிக அறிவைப்பெற்றிருப்பதால் மனநிறைவுடன் இருக்கிறாரோ, தம் புலன்களை யார் ஒருவர் வெற்றிகொண்டிருக்கிறாரோ, யாருக்குக் கல்லும் தங்கமும் ஒன்றாகத் தெரிகிறதோ, யார் தம்மிடம் இருப்பதைக்கொண்டு திருப்தியாயிருக்கிறாரோ, அவர் தம்மை உணர்ந்து தன்னுள் உறுதியாக நிலைபெற்றிருப்பவர் என்று கருதப்படுகிறார். அவர் ஞானி என்று அழைக்கப்படுகிறார்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஒரு குருவினுடைய எல்லாத் தகுதிகளைப் பற்றியும் ஏன் கிருஷ்ணர் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் இந்த எல்லாத் தகுதிகளையும் அவர் விளக்கிக் கொண்டிருக்கிறார்?
ஏனென்றால் இந்தத் தகுதிகள்தான் நுட்பங்கள். நாம் இவற்றைப் பின்பற்றி, பயிற்சிசெய்தாலே போதும், நாம் அந்த ஞான நிலையை அடைந்துவிடுவோம். கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் விஜிதேந்த்ரியன் (புலன்களை வெற்றிகண்டவர்) என்று சொல்கிறார்.
நமது குறைவுணர்வுகளும் மூலமனப்பாங்குகளும் எங்கு உறைந்து கிடக்கின்றன என்பதை நாம் முதலில் புரிந்துகொண்டாக வேண்டும். அஹங்காரத்திற்கு அப்பால், மூலமனப்பாங்குகளுக்கப்பால், நமது ஆத்மன், சுயம், இருப்புத்தன்மை இருக்கிறது. ஆத்மாவின் இருப்பே பேரொளியைப் பரப்பி கொண்டிருக்கிறது.
நமது உள்ளுணர்வுக்கு நமது
'கேட்டலைத்' தொடர்ந்து
கொடுப்பதே ஒருங்குவித்தலின்
மனத்தைக் கட்டுப்படுத்த ஒருங்குவித்தலைக் கொண்டுவாருங்கள் (6.10-6.14)
யோகத்தைப் பயிற்சிசெய்யும் ஒரு யோகிக்கான பல வழிமுறைகளை இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர் கொடுத்திருக்கிறார்.
புரிந்துகொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் எப்படி அமர்ந்து த்யானம் செய்ய வேண்டும் என்று நமக்கு உதவுவதற்கான பொதுவான பயிற்சி வழிமுறைகள். இவை எல்லாம் ஞானத்திற்கு அவசியமான தகுதிகள் இல்லை.
ஞானப்பாதைக்கு ‘உள்முகமாகத் திரும்பிப்பார்ப்பது’தான் ஒரே வழி.
புலன்களைக் கட்டுப்படுத்த மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மனத்தைக் கட்டுப்படுத்த எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். எண்ணங்களைக் கட்டுப்படுத்த தேவைப்படுவது ஒருங்குவித்தலே!
நாம் தொடர்ந்து ஒருங்குவித்தலோடு வாழ்ந்தோமானால் நமது உள்ளுணர்வில் நிகழும் எண்ணங்களைப் பற்றிய விழிப்புள்ளவர்களாவோம்.
நாம், நமது உள்ளுணர்வுக்கு நமது ‘கேட்டலைத்’ தொடர்ந்து கொடுப்பதே ஒருங்குவித்தலின் துவக்கம். நமது உள்ளுணர்வு இனி கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னால், அங்கு ‘மௌனம்’ மட்டுமே நிலவினால் நாம் ஒருங்குவித்தலை அடைந்துவிட்டோம்.
நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்த, நாம் இரண்டு செயல்களை செய்யவேண்டியிருக்கிறது. முதலாவதாக, இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செல்வதைவிடுத்து நிகழ்காலத்திலேயே இருக்க வேண்டும். இரண்டாவது, எண்ணங்களைத் துண்டிக்க வேண்டும். நான் இதை அன்க்ளட்சிங் (க்ணஞிதேணஞிடடிணஞ்) என்று அழைக்கிறேன்.
இதை எளிதாக்க, கிருஷ்ணர் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்.
நாம் அதற்கென்று உள்ள தனியான, ஏகாந்தமான இடத்திற்குத்தான் செல்ல வேண்டும். எந்த த்யானத்திலும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நாம் தளர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் சிரமமான சூழ்நிலையில் நம்மால் த்யானம் செய்ய முடியாது.
ஸ்திர (உறுதி) மற்றும் ஸுகம் (இனிமை) - இவையே த்யானம் செய்ய அமர்வதற்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன.
இறுதியாக, கிருஷ்ணர், “மந: ஸம்யம்ய மச்சித்தோ - என்மீது மனத்தை ஒருமுகப்படுத்து, யுக்த ஆஸீத மத்பர: -என்னையே இலக்காகக்கொள்,” என்கிறார். இங்கு ‘என்மீது’ என்று அவர் சொல்லும்பொழுது நம்முடைய இருப்புத்தன்மையையே குறிக்கிறார்.
யோகநிலையை அடையுங்கள் (6.15-6.19)
இறுதி குறிக்கோளை அடைய, யோகப் பயிற்சி மட்டுமே பாதையாகவும் இலக்காகவும் இருக்கிறது. யோகி என்பவர் ஆன்ம தரிசனத்திலும் ஆனந்தத்திலும் மூழ்கி இருப்பவர்.
நமக்குளிரண்டு வாழ்க்கைகள் உள்ளன. ஒன்று - நாம் வாழ விரும்பும் வாழ்க்கை - அதாவது நம் கனவு. மற்றொன்று, நிஜமான வாழ்க்கை
- அதாவது நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை. இந்த இரண்டு வாழ்க்கையும் சந்திப்பதைத்தான் யோகா என்கிறோம்.
கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு இங்கே சொல்பவற்றை எல்லாம், ‘யோக கையேடுகள்’ நமக்குத் தராது. அதிகமாகத் தூங்குவது அல்லது குறைவாகத் தூங்குவது, அதிகமாக உண்பது அல்லது குறைவாக உண்பதுபோன்ற வழிகாட்டுதல்கள், யோகாவிற்கான வரையறுக்கப்பட்ட முறைகளில் அடங்காது.
இந்த உபதேசத்தில் கிருஷ்ணர் ஆஹாரம் என்பதைப் பற்றி சொல்கிறார். ஆஹாரம் என்றால் ஸம்ஸ்க்ரு'தத்தில் உணவு என்று பொருள்.
ஆஹாரம் என்று சொல்லும்பொழுது, நாம் வாய்மூலம் எடுத்துக்கொள்வதை மட்டும் அது குறிக்கவில்லை; ஐந்து புலன்களின்மூலம் எடுத்துக்கொள்ளப்படும் எல்லாவற்றையும் அது குறிக்கிறது.
ப்ரத்யாஹாரம், புலன்கள்சார்ந்த பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் எட்டுப் பகுதிகளில் இதுவும் ஒன்று. ப்ரத்யாஹாரா என்றால் ஆஹாரங்களைக் கடந்து செல்வது என்று பொருள். புலனால் அறியக்கூடிய பொருள்களையும் கடந்து செல்வது என்று பொருள். அப்படிக் கடந்து செல்லும்பொழுது மட்டுமே நமக்குள் இருக்கும் அந்த உயர்ந்த விழிப்புணர்வு நிலை விழிப்பூட்டப்படுகிறது.
நம்முடைய யோகா மற்றும் த்யான நுட்பங்கள் எல்லாவற்றின் நோக்கமுமே நம் இருப்புத்தன்மையை அடைவதுதான்.
ஓர் இருப்புத்தன்மை, இருப்புத்தன்மையினாலேயே இருப்புத்தன்மையில் திருப்தியடைகிறது
கிருஷ்ணர் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார். உறுதியோடு பயிற்சிசெய்வது மற்றும் குறிப்பிட்ட பாதையிலிருந்து விலகாமல் பயிற்சிசெய்வது.
இவை இரண்டுமே யோகாவை உணர்வதற்கான அடிப்படைத் தகுதிகள். ஏனெனில், பல வருடங்களாக நாம் பின்பற்றிவரும் நம்முடைய பழைய நடைமுறைகளின் அடிப்படையிலேயே நம்முடைய மனம் வடிவமைக்கப்படுவதால், சிலநாள் பயிற்சி க்குப்பின், சுலபமாக நாம் தமஸில் -செயலற்றதன்மையில் விழுந்துவிடுவோம்.
> யோகாவிற்கான அடிப்படைத் தகுதிகள்:
> உறுதியோடு பயிற்சிசெய்வது மற்றும்
> குறிப்பிட்ட பாதையிலிருந்து விலகாமல்
அதனால், குறிப்பிட்டமுறையில்தான் யோகப் பயிற்சிகள் செய்யப்பட வேண்டும் என்று கிருஷ்ணர் இங்கே வலியுறுத்துகிறார்.
ஆழ்ந்து கேளுங்கள்! இயமம்தான் ஒருங்குவித்தல்; நியமம் என்றால் சிரத்தை; ஆஸனம், பிராணாயாமம், பிரத்யாஹாரா, தாரணா என்பவை பொறுப்புக்கள்; தியானமும் ஸமாதியும் வளப்படுத்துதல்.
யோகாவின் எட்டுப் பகுதிகளும், ஒரேசமயத்தில் பயிற்சி செய்யப்பட வேண்டுமேதவிர, இன்று விளக்கப்படும் அடுத்தடுத்த எட்டுப்படிகளைப்போல் அல்ல.
எட்டுப் பகுதிகளும் ஒன்றாகவே நடக்க வேண்டும், தனித்தனியாக அல்ல. இவற்றுள் ஒன்று நிறைவடையும்பொழுது மற்ற எல்லாமும் நிறைவடைகின்றன. இதுதான் பூர்ண நிலை, அதாவது முழுமைத்தன்மை.
பூர்ணத்வ நிலையிலிருந்து எதுவும் எடுக்கப்படவும் முடியாது; அதனோடு எதுவும் சேர்க்கப்படவும் முடியாது; அதனுடைய முழுமைத்தன்மையில் எந்த வேறுபாட்டையும் நம்மால் செய்ய முடியாது. எந்த இன்பமும் அதை மேலும் ஆனந்தமாக்க முடியாது. எந்தத் துன்பமும் அந்த ஆனந்தத்தைக் குறைக்க முடியாது. பூர்ண நிலையிலிருக்கும் ஒருவர் ஆனந்தத்தில் மையம்கொண்டுவிடுகிறார்.
இதைத்தான் கிருஷ்ணர், ஆத்மநாத்மாநம் பஸ்யந்நாத்மநி துஷ்யதி (6.20) -ஆத்மாவில் ஆத்மாவைக்கண்டு ஆத்மா திருப்தியடைகிறது என்கிறார்.
விடாமுயற்சியும் பொறுமையும்
வெற்றியின் படிக்கட்டுகள் (6.25 -6.29)
இன்றைய மனிதனின் மன அமைப்பிற்கு, பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகாவின் ஒரே ஒரு பகுதியைச்செய்து வெற்றியடைய
செயலற்று இருப்பது நம்முடைய
இயல்பு அல்ல. செயல்களைச்
செய்வதே நம்முடைய இயல்பு.
வேண்டுமென்றாலும்கூட, அதற்கு வாழ்க்கை முழுவதும் வேண்டும்.
அதனால்தான், ஆத்மாவின்கண் நிலைபெறுவதற்கு திடமான நம்பிக்கையும் புத்திசாலித்தனமும் வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார். 'விடாமுயற்சி' என்கிற ஆன்மிகத் தகுதிக்குத்தான் அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
ஒரு உறுதியான 'பட்டறிவு அஸ்திவாரம்' இல்லாமல், திடமான நம்பிக்கையும் புத்திசாலித்தனமும் விடாமுயற்சியும் நிகழாது. ஸாஸ்த்ரங்கள், நமக்கு அந்த 'பட்டறிவு அஸ்திவாரத்தை' அளிக்கின்றன.
உண்மையான மாற்றம் நிகழ வேண்டுமானால், விடாமுயற்சியும் பொறுமையும் ஒரு சாதகனுக்கு மிக முக்கிய தேவைகளாகயிருக்கின்றன.
இங்கே கிருஷ்ணர், பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஒன்றிணைந்து இருக்கும் ஒரு ஞானியின் நிலையை விவரிக்கிறார். யோகயுக்தாத்மா
- தம்மைத்தாமே உணர்ந்த மனிதர், ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொன்றிலும் கடவுளையே பார்க்கிறார். மேலும், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றும் அந்தக் கிருஷ்ண நிலையில் நிலைகொண்டிருப்பதையும் பார்க்கிறார்.
நாம் ஸத்யத்தை உணரும்பொழுது, நம்முள் அனைத்தையும், அனைத்துள் நம்மையும் பார்க்கிறோம். ஆன்ம நிலையில் நாம் ஆழமாகவும், முழுமையாகவும், தீவிரமாகவும், மொத்தக் குழுவோடும், மொத்தப் பிரபஞ்சத்தோடும் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளும் அந்தக் கணத்திலிருந்துதான், உண்மையில் நாம் பூர்ணத்வ உணர்வில், அத்வைத உணர்வில் வாழவே ஆரம்பிக்கிறோம்.
கிருஷ்ணருடைய பார்வையிலிருந்து அவன் மறைவதில்லை (6.30-6.35)
இங்கே கிருஷ்ணர் ஒரு வாக்குறுதி தருகிறார். பார்க்கிற அனைத்திலும் கிருஷ்ணனையும், கிருஷ்ணனிடத்தில் அனைத்தையும் யார் ஒருவன் பார்க்கிறானோ அவனுடன் தாம் எப்போதும் இருப்பதாகச் சொல்கிறார். அவனுடைய பார்வையிலிருந்து கிருஷ்ணர் மறைவதில்லை; கிருஷ்ணருடைய பார்வையிலிருந்து அவனும் மறைவதில்லை.
எல்லோருக்குள்ளும் மற்றும் எல்லாவற்றிலும் கடவுள்தன்மையைப் பாருங்கள், தானாகவே நீங்கள் தளர்வாகிவிடுவீர்கள்.
அதற்குபிறகு, நீங்கள் எதனோடும் சண்டையிட்டுக்கொண்டிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் உங்களையும் உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் அந்தக் கடவுள்தன்மையின் பாகமாகவே பார்ப்பீர்கள்.
அங்கே சண்டையிட என்ன இருக்கிறது. மேலும் எதற்காகச் சண்டையிட வேண்டும்? நீங்கள் சாதாரணமாகவே தளர்வாகிவிடுவீர்கள்.
கடவுளின் மூலவேர் அன்பு! பார்க்கும் அனைத்திலும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதில்தான் கடவுளின் மூலவேரே ஊன்றியிருக்கிறது. உள்ளே ஆழ்ந்து செல்வதற்கும், அன்புக்குள் செல்வதற்கும் அசாத்தியமான துணிவு தேவை. நாம் காணும் எல்லாவற்றிலுமே அந்த இருப்பின் பொதுவான நூலிழை இழைந்தோடுவதை உணரத் தொடங்கிவிடுவோம்.
பற்றற்றதன்மை அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்தும்
வாயோரிவ ஸுதுஷ்கரம் (6.34) - "ஓ கிருஷ்ணா, காற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதுபோல், அலையும் இந்த மனத்தைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று நினைக்கிறேன்," என்கிறார்.
அர்ஜுனன் இங்கே ஸுதுஷ்கரம் -கடினம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகிறார். உண்மையில் எதிர்காலச் சந்ததியினர் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகளைப் பற்றிய சந்தேகங்களையும் கேட்கிறார்.
இங்கே கிருஷ்ணர், அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு அர்ஜுனன்
இருக்கும் அதேநிலையில் இருந்தே பதிலளிக்க வேண்டியிருக்கிறது. மனத்தைக் கட்டுப்படுத்துவது கடினம் என்கிற அவரின் எண்ணத்திற்கு அவர் துணைநிற்க வேண்டியிருக்கிறது. முள்ளை முள்ளாலேயே எடுப்பதுபோல, பிரச்சினையை உருவாக்கக்கூடிய ஏதோ ஒன்றைத்தான் அவர் மனத்துக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
‘பயிற்சி மற்றும் பற்றற்றதன்மை’ -என்ற த்யான நுட்பத்தை கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தருகிறார்.
குருமார்கள் நமக்கு த்யான நுட்பங்களைத் தருகிறார்கள். அவற்றை நாம் பயிற்சிசெய்து பார்த்துவிட்டு, த்யானம்தான் நம்முடைய இயற்கையான நிலை, அதற்கு மேல் அடைவதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்துகொள்கிறோம்.
நாம் அஹங்காரம் என்றோ அல்லது மனம் என்றோ சொல்லும்பொழுது, அது எண்ணங்களின் தொகுப்பைத்தான் குறிக்கிறது. நம் மனம் எப்போதும் நம் அடையாளத்தோடு தொடர்புடைய ஆசை அல்லது அச்சத்தால்தான் இயக்கப்படுகிறது. அது, நமக்காக நாம் கவனமாக உருவாக்கிய அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயமாகவும் இருக்கலாம் அல்லது சமுதாயத்தில் நம்மைப் பற்றிய நல்ல கருத்தை வளர்க்க வேண்டுமென்ற பேராசையாகவும் இருக்கலாம்.
கேளுங்கள், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். ‘நான் கடவுள்’ என்ற அடையாளத்தைத்தவிர, நம்மைப் பற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கும் வேறெந்த அடையாளமாக இருந்தாலும்சரி, அது ஒரு தவறான அடையாளம்தான்; அது ‘நான் கடவுள்’ என்ற ஸத்யத்தைக்காட்டிலும் குறைவானதுதான்.
இந்தச் சமுதாயத்தின் சான்றிதழ்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் தைரியமும் நம்மைப் பற்றிய தவறான அடையாளத்தை விட்டுவிடும் தைரியமும் இருந்தால் மட்டுமே
ஒரு திடமான நோக்கத்தோடுகூடிய
உடலசைவு, அந்த நோக்கத்தை
நம் உயிர்ப்பதிவாகவே ஆழமாகப்
பதித்துவிடுகிறது.
நாம் கடவுள்தன்மமையைத் தழுவ முடியும்.
அஹங்காரம் மற்றும் அடையாளத்தின்மீது பற்றற்று இருத்தல், நம்மை ஆசைகளில் இருந்து விடுவித்துக்கொள்ள வழிவகுக்கும். வேர் மட்டத்தில் ‘பற்றில்லாமல் இருத்தல்’ மட்டுமே, நம்மை மற்ற எல்லாவற்றிலும் இருந்து விடுவிக்கும்.
அந்த நுட்பம்தான் அன்க்ளட்ச். கடந்தகாலம், எதிர்காலம் இவற்றிலிருந்து விடுதலையடைவதற்கான ஒரே வழி அன்க்ளட்ச், அதாவது ‘பற்றற்று இருத்தல்’தான்!
யோகா இல்லாமல் நான் எங்கே செல்வது?
கிருஷ்ணர் இந்த உபதேசத்திலும் தொடர்ந்து அறிவிக்கிறார், ஒருவர் பூர்ணத்வ நுட்பங்களை ஆழமாகப் பயிற்சிசெய்தால், மனத்தை நிறுத்தி அதன்மூலம் ‘சுயத்தை உணர்வது’ என்பது சாத்தியமே!
இங்கு அர்ஜுனன் கிருஷ்ணரிடம், “நாம் நம்பிக்கையோடு ஒன்றைத் துவங்கினாலும்கூட, எங்கோ ஓரிடத்தில் நாம் நம் மனத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்தால் என்ன நிகழும்? என்று கேட்கிறார். மேலும் அப்படி தோல்வியடையும்போதும்கூட ‘ஞானமடைவது சாத்தியமே’ என்ற உறுதியைத் தருமாறு கேட்கிறார்.
நம் மனத்தை பூர்ணத்வம் செய்யும் முயற்சியில், நாம் பல சமயங்களில் நிச்சயமாகத் தோல்வியடைகிறோம். ஒருவர் தீவிரமாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்து, அலையும் மனத்தின் காரணமாக தோல்வியடைய நேர்ந்தாலும், அவர் கடவுள்தன்மையை, தெய்விக விழிப்புணர்வு நிலையை அடைவதற்கான சாத்தியம் இருக்கிறதென்னும் உறுதியை கிருஷ்ணர் தர வேண்டுமென்று அர்ஜுனன் விரும்புகிறார்.
உடனே கிருஷ்ணரும், ‘யோகப் பாதையில் செல்லும் ஒருவருக்கு இந்தப் பிறப்பிலும், அடுத்த பிறப்பிலும் அழிவே கிடையாது. மிகச்சிறிய அளவிலான யோகப் பயிற்சிகூட பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து காப்பாற்றிவிடும்’ என்ற ஒரு அருமையான உறுதிமொழியை நம் எல்லோர்க்கும் தருகிறார்.
கேளுங்கள், நாம் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு திடமான நோக்கத்தோடுகூடிய உடலசைவு, அந்த நோக்கத்தை நம் தசைப்பதிவாகவும் உயிர்ப்பதிவாகவும் ஆழமாகப் பதித்துவிடுகிறது. எந்தவொரு உணர்ச்சியால் நம் உடலை அசைத்தாலும் அது நம்முடைய உடல்-மன அமைப்பில் திடமாக ஆழப்பதிந்துவிடுகிறது. புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் ஆனந்த உணர்வோடு உடலை அசைத்தோமென்றால், அந்த ஆனந்த உணர்வு நம் உடல்-மன அமைப்பில் பதிந்துவிடுகிறது.
கோப உணர்ச்சி நம் உடலை அசைத்தால், அந்தக் கோப உணர்ச்சிகள் நம் உடல்-மன அமைப்பில் பதிந்துவிடுகிறது. இது ஒரு மிக முக்கியமான, ஆழமான ஸத்யம். இதைத் தவறவிட்டுவிடாதீர்கள்.
என்ன மாதிரியான உணர்ச்சிகளை நம் உடலுக்குள் அனுமதிப்பது என்பதையும், நம் உடல்-மன அமைப்பில் என்ன மாதிரி உணர்ச்சிகளை ஆழப்பதிய வைப்பது என்பதையும் முடிவுசெய்வது நம்மைப் பொறுத்ததுதான், அது நம் கையில்தான் உள்ளது.
யோகியாய் பிறத்தல் அரிது (6.41-6.47)
கிருஷ்ணர், நாம் எங்கே, எப்பொழுது பிறக்க வேண்டும்; யாரைப் பெற்றோர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையுமே நம் வாழ்க்கையில் நாமே தேர்ந்தெடுப்பதைப் பற்றிச் சொல்கிறார்.
நம்முடைய பிறப்பு ஒரு விபத்து அல்ல. அது ஒரு நிகழ்வு, அந்த நிகழ்வைப் பற்றிய எல்லா விவரங்களையும் தேர்வுசெய்வது நாமே. இறக்கும்நேரத்தில் நாம் எவற்றையெல்லாம் தேர்வுசெய்கிறோமோ, அவையெல்லாம்தான் நம் அடுத்த பிறப்பில் உண்மையாகின்றன.
‘நேர்மையான செயல்களையே செய்யும் ஒருவர் ஞானமுள்ள, செல்வம் மிக்க குடும்பத்தில்தான் பிறப்பெடுப்பார், அவருடைய புனிதமான, பக்திப்பூர்வமான செயல்களே அவருக்கு உயர்ந்த உலகத்தில் ஒரு இடத்தைப் பெற்றுத்தரும்' என்று கிருஷ்ணர், இங்கே அர்ஜுனனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்குமே உறுதியளிக்கிறார்.
இந்த உபதேசங்களில், கிருஷ்ணர் சில உறுதிமொழிகளைத் தருகிறார். வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் கற்றுக் கொண்டோமோ அது எதுவுமே வீணாகாது என்று அவர் சொல்கிறார்.
நாம் அடுத்த பிறவியில் மறுபடியும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கப் போவதில்லை. நாம் எங்கே விட்டுச் சென்றோமோ அங்கிருந்துதான் தொடங்குவோம். நம்முடைய ஒரு பிறப்பின் வாசனாக்கள், மன அமைப்பு அடுத்த பிறவியிலும் தொடர்கிறது.
இறுதியாக, கிருஷ்ணர் குறிப்பிடுவது இதைத்தான். நாம் செய்ய வேண்டியது ஒரு சிறிய வேலைதான். ஸ்வ -பூர்ணத்வம் நோக்கியும், கிருஷ்ணரை நோக்கியும் அழைத்துச்செல்லும் பாதையான யோகாவை, நாம் அர்ப்பணிப்புணர்வோடும் திடமான நம்பிக்கையுடனும் ஒருங்குவித்தலுடனும் சிரத்தையுடனும் பயிற்சி செய்ய வேண்டும். வேறுவழியே இல்லை.
இதற்கு வேறு எந்தக் குறுக்குவழியுமில்லை. நம்முடைய சிறுவேலையை நாம் செய்துவிட்டால், அதிலிருந்து விடுதலையடைய குரு நமக்கு உறுதியளிக்கிறார். நீங்களும் அவருள் ஒன்றானவர் என்று அவர் சொல்கிறார். வெறுமனே ஆழ்ந்து உள்ளே நோக்குங்கள், பூர்ணத்வத்தில் இருங்கள், நீங்கள் நித்ய ஆனந்தத்தை அனுபூதியாக உணர்வீர்கள். அந்த இறுதியான சக்தியாகிய பரபிரம்ம கிருஷ்ணரிடம் நித்யானந்தத்தைத் தருமாறு பிரார்த்தித்துக்கொள்வோம்.
ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஆத்மஸம்யம யோகம் எனும் பெயருடைய ஆறாவது அத்தியாயம்.