KAILASA Library/ஸ்ரீமத் பகவத்கீதை/அத்தியாயம்-5: கர்ம ஸந்நியாஸ யோகம்Sign in
ஸ்ரீமத் பகவத்கீதை

அத்தியாயம்-5: கர்ம ஸந்நியாஸ யோகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களின்
எல்லாப் பரிமாணங்களிலும்
ஒளிர்வதற்கான தீர்வு

மேலும் மேலும்
வெளியுலக தேடுதல் என்பது
சந்தோஷத்திற்கு வழி காட்டாது.

அது மன அழுத்தத்தில்தான் கொண்டுபோய்ச் சேர்க்கும்.

அப்படியென்றால் எது சந்தோஷத்திற்கு வழிகாட்டும்?

ஸ்லோகங்கள்

அத பஞ்சமோஉத்யாய:

கர்ம ஸந்ந்யாஸ யோக:

ஏ

அர்ஜுந உவாச

ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ரு'ஷ்ண புநர்யோகம் ச ஸம்ஸஸி ந
யச்ச்ரேய ஏதயோரைகம் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம் நந 5.1

அர்ஜுனன் சொன்னது

5.1 "ஓ க்ருஷ்ணா! நீங்கள் என்னிடம் செயலைத் துறந்துவிடு என்றும் சொல்கிறீர்கள். பின்பு பக்தியுடன் வேலையைச் செய் என்றும் சொல்கிறீர்கள். எப்படியிருந்தாலும் இந்த இரண்டில் எனக்கு ஏற்றது எது என்பதைத் தயவுசெய்து சொல்லுங்கள்."

ஸ்ரீபகவாநுவாச

ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நி:ஸ்ரேயஸகாரவுபௌ ந
தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விஸிஷ்யதே நந 5.2

ஸ்ரீ பகவான் சொன்னது

5.2 "செயலைத் துறந்துவிடுவதும் பக்தியுடன் செயலைச்செய்வதும் ஆகிய இரண்டுமே விடுதலைக்கு ஏற்றவைதான். ஆனாலும்கூட இந்த இரண்டில் பக்தியுடன் செயல்படுவது, செயலைத் துறப்பதைவிடச் சிறந்தது.

ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி ந

நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே ந
5.3.

5.3 எவரொருவர் தம்முடைய செயல்களின் பலன்மீது பற்றோ, வெறுப்போ இல்லாமல் இருக்கிறாரோ அவரே துறந்தவராகிறார். ஓ பெருந்தோள்களை உடையவனே அர்ஜுனா, அப்படிப்பட்டவர் எல்லா இருமைத்தன்மைகளிலிருந்தும் எளிதாகவிடுபட்டு, உலகியல் வாழ்க்கை என்ற பற்றிலிருந்து முழுமையாக விடுதலையடைகிறார்.

ஸாங்க்யயோகௌ ப்ரு'தக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா: ந
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம் நந 5.4

5.4 செயல்படும் பாதையானது துறவறப் பாதையிலிருந்து வேறுபட்டது என்று அறியாமையில் இருப்பவர்கள்தான் சொல்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே கற்றவர்கள், செயல்படுவதும் துறவறமும் ஒரே ஸத்யத்திற்குத்தான் நம்மை அழைத்துச்செல்கின்றன என்று சொல்கிறார்கள்.

யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தானம் தத்யோகைரபி கம்யதே ந
ஏகம் ஸாங்க்யஞ்ச யோகஞ்ச ய: பஶ்யதி ஸ பஶ்யதி நந 5.5

5.5 துறவாலும் கர்மத்தாலும் அடையப்படுகிற நிலை ஒன்றுதான் என்பதை யார் ஒருவர் அறிந்து கொள்ளுகிறாரோ, அவரே ஸத்யத்தை அறிந்தவராகிறார். துறவால் அடையப்படுகிற நிலை, கர்மத்தாலும் அடையப்படும். அவை இரண்டும் ஒரே நிலையில் இருப்பதைத் தெரிந்துகொள். அவற்றை அவை எப்படி இருக்கிறதோ அப்படியே பார்.

ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத: ந
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி நந 5.6

5.6 வலிமை வாய்ந்த தோள்களையுடையவனே! பக்தி இல்லாத துறவு ஒருவரை துக்கங்களால் காயப்படுத்திவிடும். பக்தியில் ஈடுபட்டுள்ள புத்திசாலிகள் அந்த உயர்வான ப்ரஹ்மத்தை காலம்தாழ்த்தாமல் அடைகிறார்கள்.

யோகயுக்தோ விஶுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய: ந
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே நந 5.7

5.7 யார் ஒருவர் பக்திசேவையில் ஈடுபட்டிருக்கிறாரோ, யார் ஒருவர் கருத்துக்கள் சரியா? தவறா? தூய்மையானதா? தூய்மையற்றதா? என்பதையெல்லாம்தாண்டி, தம்மை அடக்கியவராக இருக்கிறாரோ, யார் ஒருவர் தன்னுடைய புலன்களை வென்றவராக இருக்கிறாரோ, அவர் கருணையுள்ளவராகவும் எல்லோரிடம் அன்புடையவராகவும் இருக்கிறார். வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர் ஒருபோதும் வேலையில் சிக்கிக்கொள்வதில்லை.

நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித் ந
பஶ்யந் ஶ்ரு’ண்வந் ஸ்ப்ரு’ஶந் ஜிக்ரந் அஶ்நந் கச்சந்
ஸ்வபந் ஶ்வஸந் நந 5.8

ப்ரலபந் விஸ்ரு’ஜந் க்ரு’ஹ்ணந் உன்மிஷன் நிமிஷன்நபி ந
இந்த்ரியாணீந்த்ரியார்த்தேஷு வர்தந்த இதிதாரயந் நந 5.9

5.8, 5.9 ஸத்யத்தைத் தெரிந்துகொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவுகண்டாலும் மூச்சுவிட்டாலும் இவை எதையுமே, தான் செய்யவில்லை என்பதை அறிவார். பேசும்போதும் வெளியேற்றும்போதும் அடையும்போதும் கண்திறக்கும்போதும் கண்மூடும்போதும் எல்லாப் புலன்களும் நிறைவாகச் செயல்படுவதை உணர்கிறார்.

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதிய: ந
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா நந 5.10

5.10 எவரொருவர் பற்றுதல்களைத் துறந்துவிட்டு, நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வைச் சரணடைந்து செயல்படுகிறாரோ, தாமரை இலை தண்ணீரினால் பாதிப்படையாமல் இருப்பதைப்போல, அவர்

பாவங்களால் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.

காயேந மநஸா பு³த்³த்⁴யா கேவலைரிந்த்³ரியைரபி ந
யோகி³ந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஸுத்³த⁴யே நந 5.11

5.11 பற்றைத் துறந்த யோகிகள் சித்தத்தைத் தூய்மைப் படுத்திக்கொள்வதற்காக உடல், மனம், புத்தி மற்றும் புலன்களாலுமே செயல்படுகிறார்கள்.

யுக்த: கர்மப²லம் த்யக்த்வா ஸாந்திமாப்நோதி நைஷ்டிகீம் ந
அயுக்த: காமகாரேண ப²லே ஸக்தோ நிப³த்⁴யதே நந 5.12

5.12 தம்முடைய செயல்களினால் வரும் விளைவுகளில் பற்றுக்களைத் துறந்துவிட்டு பக்தியில் ஈடுபட்டுள்ள ஒருவர், தன்னுள்ளமையம்கொள்ளும் ஒருவர் அமைதியில் நிலைக்கிறார். தம்முடைய செயல்களினால் வரும் பலன்களின்மீது பற்றுக்கொண்டு பக்தியில் ஈடுபடாத ஒருவர், துன்பத்தில் சிக்கிக்கொள்கிறார்.

ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுக²ம் வசீ ந
நவத்³வாரே புரே தே³ஹீ நைவ குர்வந் ந காரயந் நந 5.13.

5.13 புலன்களைக் கட்டுப்படுத்தி, மனத்தின் எல்லாச் செயல்பாடுகளையும் விட்டுவிட்டு, எதையும் செய்யாமலும், எதையும் செய்விக்காமலும் இருக்கும் ஒருவர் ஒன்பது வாயில்களைக் கொண்ட இந்த உடலில் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ந கர்த்ரு'த்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ரு'ஜதி ப்ரபு⁴: ந
ந கர்மப²லஸம்யோகம் ஸ்வபா⁴வஸ்து ப்ரவர்ததே நந 5.14

5.14 குருவாக இருப்பவர்கள், செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செயல்களைச் செய்யும்படி தூண்டுவதும் இல்லை அல்லது அச்செயல்களின் பலன்களோடு தங்களை இணைத்துக்கொள்வதும் இல்லை. இந்தச் செயல்பாடுகள் எல்லாம் பொருள்சார்ந்த இயற்கையால் செய்யப்படுகின்றன.

நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ரு'தம் விபு: ந
அஜ்ஞானேநாவ்ரு'தம் ஜ்ஞானம் தேந முஹ்யந்தி ஜந்தவ: நந 5.15

5.15 நிச்சயமாக, யாருடைய பாவங்களையும் புண்ணியங்களையும் பகவான் ஏற்றுக்கொள்வதில்லை. உயிரினங்கள் எல்லாம் அறிவை மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமையினால் குழப்பமடைந்து இருக்கின்றன.

ஜ்ஞானேந து ததஜ்ஞானம் யேஷாம் நாஸிதமாத்மந: ந
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞானம் ப்ரகாஸயதி தத்பரம் நந 5.16

5.16 ஞானத்தால், யாருடைய அறியாமை அழிக்கப்படுகிறதோ, அவருடைய அந்த ஞானம், ஒரு உதிக்கும் சூரியனைப்போல், மேலான அந்தப் பரமாத்மாவைப் பிரகாசிக்கச் செய்கிறது.

தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா: ந
கச்சந்த்யபுநராவ்ரு'த்திம் ஜ்ஞானநிர்தூதகல்மஷா: நந 5.17

5.17 யார் ஒருவர் இறைவனிடம் சரணடைகிறாரோ, யாருடைய அறிவும், மனமும், நம்பிக்கையும் அந்த மேலான இறைவனிடம் ஒன்றியிருக்கிறதோ, அவருடைய அறியாமை அறிவின்மூலம் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது. அவர் முக்தியை நோக்கிச் செல்கிறார்.

வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி ந
ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந: நந 5.18

5.18 அறிவும் கருணையும் நிரம்பிய ஒருவர், கற்றறிந்த பிராமணனையும் பசுவையும் யானையையும் நாயையும் நாயை உண்பவரையும் எல்லாவற்றையும் சமமாகவே பார்க்கிறார்.

இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந: ந
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:நந
5.19

5.19 இந்த வாழ்க்கையில், வேறுபாடில்லாத சாந்தமான மனத்துடன் இருப்பவர்கள் நிச்சயமாக பிறப்பையும் இறப்பையும் வென்றவர்களாகிறார்கள். அவர்கள் மேலான இறைவனைப் போன்று மாசற்றவர்கள், அதனால்தான் அவர்கள் இறைவனில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ந ப்ரஹ்ரு'ஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்
ப்ராப்ய சாப்ரியம் ந
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்
ப்ரஹ்மணி ஸ்தித: நந 5.20

5.20 யார் ஒருவர் நிலையான அறிவைப் பெற்றிருக்கிறாரோ, மன குழப்பமடையாதவராகவும் இறைவனை அறிந்தவராகவும் இறைவனில் நிலைபெற்றிருப்பவராகவும் இருக்கிறாரோ அவர் விரும்பிய ஒன்றை அடையும்பொழுது மகிழ்வதும் இல்லை, விரும்பாத ஒன்றை பெறும்பொழுது துன்பமடைவதும் இல்லை.

பாஹ்யஸ்பர்ஸேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம் ந
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே நந 5.21

5.21 வெளியுலகப் புலனின்பங்களில் நாட்டமில்லாத ஒருவர் தம் ஆன்மாவில் நிலைபெற்று மகிழ்வார். அந்த மகிழ்ச்சியில் அவர் சமாதி நிலை அடைந்து பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறார்.

யே ஹி ஸம்ஸ்பர்ஸஜா போகா து:கயோநய ஏவ தே ந
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத: நந 5.22

5.22 ஓ குந்தியின் மைந்தா! துக்கத்திற்குக் காரணமானதும், ஆரம்பமும் முடிவும் கொண்டதுமான புலனின்பங்களையும், சுகங்களையும் நிச்சயமாக புத்திசாலியான ஒருவர் அனுபவிக்க மாட்டார்.

ஸக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஸரீரவிமோக்ஷணாத் ந

காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர: நந 5.23

5.23 இந்த உடலை விட்டுச்செல்வதற்கு முன்பே, யார் ஒருவர் பொருள்சார்ந்த புலன்களின் தூண்டுதல்களை வெறுப்பின்றிப்பொறுத்துக்கொண்டு ஆசை மற்றும் கோபத்தின் வேகத்தைத் தடைசெய்கிறாரோ, அவர் இந்த உலகில் நல்ல சூழலில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

யோஉந்த: ஸுகோஉந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய: ந
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோஉதிகச்சதி நந 5.24

5.24 எவரொருவர் தமக்குள்ளேயே இன்பம் அடைந்து, தமக்குள்ளேயே விழிப்புடன் செயல்பட்டு, மேலும் தமக்குள்ளேயே உள்ளொளி கண்டு உணர்ந்து இருக்கிறாரோ அவர் நிச்சயமாக ஒரு யோகி (உடல், மனம் மற்றும் ஆன்மா மற்றும் ஒருங்கிணைந்ததன்மை). அவர் மேலான விடுதலையை அடைந்தவராகிறார்; அவர் தம்மை உணர்ந்தவராகி றார்; அவர் அந்த மேலான பரப்ரஹ்மத்தை அடைகிறார்.

லபScaleந்தே ப்ரஹ்மநிர்வாணம் ரு'ஷய: க்ஷீணகல்மஷா: ந
சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா: நந 5.25

5.25 பாவங்கள் அழிக்கப்பட்டு, மற்ற உயிரினங்களின் நலனுக்காகப் பாடுபடுகிற புனிதமான மனிதர்கள், புலனின்பங்களை மறுத்தவர்கள், தங்களுடைய சந்தேகங்களையும் இருமைத்தன்மையையும் நீ க்கி தெளிவு பெற்றவர்கள் ஆகிய அனைவரும் தெய்வீகமான ஆனந்தத்தை அடைகிறார்கள்.

காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம் ந
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம் நந 5.26

5.26 காமம், கோபம் இவற்றிலிருந்து விடுதலைபெற்றவர்கள், மனத்தையும், புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்தவர்கள், தம்மை உணர்ந்தவர்கள் - இவர்கள் எளிதாக விடுதலைபெற்றுவிடுவார்கள்.

ஸ்பர்ஸாந் க்ரு'த்வா பஹிர்பாஹ்யாம்ப் -

சக்ஷுச்சைவாந்தரே ப்ருவோ: ந
ப்ராணாபாநௌ ஸமௌ க்ரு'த்வா
நாஸாப்யந்தரஸாரிணௌ நந 5.27
யதேந்த்ரியமநோபுத்திர் முநிர்மோக்ஷபராயண: ந
விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ: நந 5.28

5.27,5.28 வெளிப் புலன்களாலான எல்லாவற்றையும் தடைசெய்து, கண்களையும் பார்வையையும் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் ஒருமுனைப்படுத்தி, நாசி வழியாக உட்செல்லும், வெளிச்செல்லும் சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தி, அதன் மூலமாக மனத்தையும் புலன்களையும் புத்திசாலித்தனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இவற்றைக் கடந்து, விடுதலைக்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒருவர், ஆசையிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலைபெறுகிறார். ஆசை, அச்சம், கோபம் இந்த மூன்றின் உப பொருட்களிலிருந்தும் விடுதலைபெறுகிறார். எப்போதும் இந்த நிலையிலிருக்கும் ஒருவர், நிச்சயமாக விடுதலையடையப்பெற்றவர்தான்.

போக்தாரம் யக்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம் ந
ஸுஹ்ரு'தம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ரு'ச்சதி நந 5.29

5.29 யாகங்கள் மற்றும் தவத்தின் மூலமாக அடையப்படுபவராகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும், எல்லா உயிரினங்களுக்கும் நன்மை அளிப்பவராகவும், 'என்னை' அறிந்து கொண்டவர் அமைதியை அடைகிறார்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஸாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
கர்ம ஸந்நியாஸ யோகோ நாம பஞ்சமோண்த்யாய: நந

ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள

கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய கர்ம ஸந்ந்யாஸ யோகம் என்ற ஐந்தாவது அத்தியாயம்.

உங்களின் எல்லாப் பரிமாணங்களிலும் ஒளிர்வதற்கான தீர்வு

Krishna and Arjuna on the chariot

கர்மஸந்ந்யாஸயோகம் என்னும் இவ்வத்தியாயத்தில், நமது சுய -சந்தேகங்களையெல்லாம் அகற்றிவிட்டு, நமது உச்சபட்ச சாத்தியங்களை உணர்வதற்கும், அவற்றை வெளிப்படுத்துவதற்கும் ஏற்றவகையில் நாம் பல பரிமாணங்கள் கொண்டவராக மாறுவது எப்படி என்பது பற்றிப் பின்வரும் ஸ்லோகங்களிலும், கீதையின் மீதமுள்ள பகுதியிலும் ஜகத்குருவான கிருஷ்ணர் விளக்கிச் சொல்கிறார்.

பல அசாத்தியங்களை சாத்தியங்களாக மாற்றி, அவற்றைக்கொண்டு, மனித சட்ட திட்ட வரையறைக்குள் விளையாடிக் கொண்டிருப்பதே ஒரு அவதாரத்தின் லீலையாகும். எல்லா அவதாரங்களின் ஒட்டுமொத்த சாத்தியக்கூறாகத் திகழும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நமது ‘உண்மைநிலை’யை நாம் அடைவது எப்படி என்பதை நமக்குக் கற்பிக்கிறார்.

நமது ‘உண்மைநிலை’க்கே நாம் திரும்புவதைத்தான் ஸமாதி என்ற சொல் குறிக்கிறது.

நிஜமான நிலைக்கு மீண்டும் திரும்புவதே ‘யோகம்’

மனித விதிமுறைகளுக்குட்பட்டும், குருக்ஷேத்ர யுத்தக் களத்தின் விதிமுறைகளுக்குட்பட்டும், கிருஷ்ணர் தொடர்ந்து, அர்ஜுனன் மூலமாகத் தமது உச்சபட்ச சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தி, அர்ஜுனன் ‘சாத்தியமில்லை’ என்று நினைத்ததையெல்லாம் சாத்தியங்களாக மாற்றிக்காட்டுகிறார்.

மஹாபாரத யுத்தம் முழுவதும், கிருஷ்ணர் ஆயுதந்தாங்கி போர்புரியவில்லை. ஆனால், அர்ஜுனன் தம்முடைய உச்சபட்ச சாத்தியங்களை வாழ்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் அவர் ஒரு காரணியாக விளங்குகிறார். பாண்டவர்களிடமுள்ள பல பரிமாணங்களையும் ஸ்ரீகிருஷ்ணர் விழிப்படையச் செய்ததால்தான், அவர்கள் போரில் வெற்றிபெற்றார்கள்.

கிருஷ்ணர், கீதை முழுவதும் யோகத்தைப் பற்றிப் பேசுகிறார். எல்லா அத்தியாயங்களுமே ஏதாவது ஒரு யோகத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

யோக என்பது ஸமாதி போன்றதுதான். யோக என்றால் ‘இணைதல்’. அதாவது நம்முடைய உண்மையான இயற்கை நிலையுடன் நாம் இணைவதையே யோக என்ற சொல் குறிக்கிறது.

நம்முடைய இருப்புநிலையோடு நாம் இணையும்போது, நாம் பல

> நம்முடைய இருப்புநிலையோடு
> நாம் இணையும்போது,
> பல சாத்தியங்களுக்குரிய
> உணர்வுக்களமாக மாறிவிடுகிறோம்.

பரிமாணங்கள் உடையவர்களாகவும், பல சாத்தியங்களுக்குரிய உணர்வுக்களமாகவும் (குணீச்ஞிநு ணினுா ணீணிண்டீஞுடீடீணாடிதுண்) மாறிவிடுகிறோம். அதற்குப்பிறகு நம்மால் பொருள்சார்ந்த வாழ்க்கையையும் வாழ முடியும்; ஆன்மிக வாழ்க்கையையும் வாழ முடியும். அதற்கு எந்தவித தடைகளோ எல்லைகளோ கிடையாது. நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.

ஓ வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்திடலாம் (5.1-5.9)

கிருஷ்ணர் எல்லா விளக்கங்களையும் தெளிவாகச் சொன்னபிறகும்கூட அர்ஜுனன் தொடர்ந்து, "ஓ, கிருஷ்ணா! முதலில் நீங்கள் என்னிடம் செயல்களைத் துறந்துவிடு என்று சொன்னீர்கள். பிறகு பக்தியுடன் பணிகளைச் செய் என்றும் பரிந்துரை செய்கிறீர்கள். யச்ச்ரேய ஏதயோரfeaturesேகந் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம் (5.1) -இந்த இரண்டில் எது அதிக பலனைத் தரக்கூடியது என்று கருணை கூர்ந்து எனக்குச் சொல்வீர்களா?" என்று கேட்கிறார்.

எது நமக்கு அதிகமான பலனைத் தரக்கூடியது என்று யோசிக்கத் தொடங்கினீர்களானால், நமக்கு ஒருபோதும் எந்தவொரு விடையும் கிடைக்காது; நம்மால் ஒருபோதும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவும் முடியாது.

அர்ஜுனன் கேட்கிறார், "இப்போது உறுதியாக, தீர்மானமாகச் சொல்லுங்கள். செயலைச் செய்வதா அல்லது வாழ்க்கையைத் துறப்பதா? இரண்டில் எது அதிக நன்மையைத் தரும்?" இலாப நஷ்டக் கணக்குப் பார்ப்பது வியாபாரத்திற்கு நல்லதுதான், ஆனால் வாழ்க்கைக்கு அல்ல.

நம்முடைய மனம் என்பது குழப்பத்தைத்தவிர வேறெதுவும் இல்லை.

இரண்டு துருவங்களுக்கிடையே நாம் மாட்டிக் கொண்டிருக்கும்வரை, நம்முடைய மனமும் உயிருடன் இருக்கும். நாம் ஏதாவது ஒரு தீர்மானத்துக்கு வந்தவுடனேயே நாம் விடுதலையடைகிறோம்.

கேளுங்கள், வாழ்க்கை தனக்கென்று தனியாக எந்தப் பலனையும் கொண்டது அல்ல; வாழ்க்கையே ஒரு பலன்தான்.

நீங்கள் பெறப்போகும் பலனைக் கணக்கிட்டுப்பார்ப்பதை நிறுத்திவிட்டு, மற்றவர்களை வளப்படுத்தும்போதுதான் நீங்கள் வாழ்க்கையையே அனுபவிக்கத் தொடங்குகிறீர்கள். நீங்கள் உயிர்ப்போடு இருப்பீர்கள்.

வளப்படுத்துதல் என்பது வாழ்க்கையின் இனிமையை தானும் அனுபவித்து, மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்வதே! நீங்கள் ஒரு மாம்பழத்தை உண்டபின்பு, அந்த விதையை அழித்துவிட்டால், அந்த மாம்பழம் அதன் உச்ச பயனை அடைவதில்லை. ஒரு விதை மேலும் பல பழங்களைத் தரமுடியும்போது மட்டுமே, அது தன்னையே உணர்ந்துகொள்கிறது.

துணிச்சல், ஸந்நியாஸத்தின் அஸ்திவாரம்

கிருஷ்ணர், கர்ம ஸந்நியாஸ யோகம் - பொறுப்பு மற்றும் துறவு என்ற பாதைகளின் கோட்பாட்டை விளக்குவதற்காக மட்டும் குறைந்தது நூறு ஸ்லோகங்கள் சொல்லியிருக்கிறார்.

அவர் இதை, எந்த நேரத்திலும் தம்முடைய பொறுமையை இழக்காமல் செய்திருக்கிறார். அவர் கருணையே வடிவானவர்.

அவர் அர்ஜுனனுடைய நிலைக்குக் கீழிறங்கிவந்து, ஒரே கருத்துக்களைப் பல்வேறு கோணங்களில் வலியுறுத்திச் சொல்லி, அர்ஜுனனை வளப்படுத்தியதன் மூலம், படிப்படியாக அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினார்.

கர்மம் மற்றும் ஸந்நியாஸம் அதாவது பொறுப்பு மற்றும் துறவு பற்றிய கேள்விகள், நினைவுதெரிந்த காலந்தொட்டே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் பதிலளிக்கப்பட்டும் வருகின்றன. ஆனாலும் இன்னமும் இந்தக் கேள்விகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

கீதை ஏன் இன்றளவும் பொருத்தமுடையதாக இருக்கிறது என்று சிலர் என்னிடம் கேட்பார்கள். ஏனென்றால் அதை இன்னும் நாம் கற்றுக்கொள்ளவே இல்லை!

கர்ம - செயல்பாடு என்ற பெயரில், மக்கள் பேராசையினால் பொருள்சார்ந்த செல்வங்களைத் தேடி அதன்பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆசையின் காரணமாகவும் பேராசையின் காரணமாகவும் செய்யப்படுவதாகவே இருக்கிறது கர்மம்.

அடுத்து, ஸந்ந்யாஸம், பயத்தின் காரணமாகச் செய்யப்படுவதாகவே இருக்கிறது; வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பொறுப்புக்களைத் தட்டிக்கழித்துவிட்டு, தப்பியோடுவதாகத்தான் இருக்கிறது. காயப்பட்டுவிடுவோமோ என்ற பயம்தான் ஸந்ந்யாஸத்திற்கு முதல் காரணம். ஆனால் இது உண்மையான ஸந்ந்யாஸம் கிடையாது.

இந்த இரண்டு வகை மக்களுமே நித்யானந்தத்தையடையவோ அல்லது விழிப்புணர்வைப் பெறவோ மாட்டார்கள்.

உலகில் மொத்தம் மூன்று வகையான மக்கள் இருக்கிறார்கள்.

✦பேராசையிடம் சரணடைந்தவர்கள்.

✦பயத்திடம் சரணடைந்தவர்கள்.

✦மூன்றாவதாக, மிக உயர்ந்த பிரபஞ்சப் பேரறிவிடம், தெய்விக விழிப்புணர்விடம், நிலையான முடிவில்லாத விழிப்புணர்விடம் சரணடைந்தவர்கள்.

பயத்திற்கும் பேராசைக்கும் இடையே நாம் மாட்டிகொண்டிருக்கிறோம் என்று கிருஷ்ணர் இங்கு விளக்குகிறார். தொடர்ந்து நாம் ஒன்று பயத்திடம் சரணடைகிறோம் அல்லது பேராசையிடம் சரணடைகிறோம். மிக மிகச்சிலரே, அபூர்வமானவர்களே புத்திசாலித்தனத்திடம், தெய்விக விழிப்புணர்விடம் சரணடைகிறார்கள்.

வளப்படுத்துதல்
வாழ்க்கையின் இனிமையை தானும்
அனுபவித்து, மற்றவர்களோடும்
பகிர்ந்துகொள்வதே!

தங்களை அறிவாளிகள் என்று கருதிக் கொண்டிருக்கிற சிலர் என்னிடம் வந்து, “ஏன் நாம் தெய்வத்திடம் சரணடைய வேண்டும்? அப்படியே நான் சரணடைந்தாலும் எனக்கு என்ன நன்மை கிடைக்கும்?” என்று கேட்பார்கள்.

தெய்வத்திடம் நீங்கள் சரணடையவில்லை என்றால், ஆசை அச்சம்போன்ற குறைவுணர்வுகளிடம் சரணடைவீர்கள், அவ்வளவுதான்.

கேளுங்கள், நீங்கள் குறைவுணர்வில் இருக்கும்போது, நீங்கள் சக்தியற்றவராக உணர்வீர்கள், நீங்கள் எதைச் செய்தாலும், அதை அந்த பலஹீன உணர்விலிருந்தே செய்வீர்கள். குறைவுணர்விலிருந்து செய்யும் எதுவும், அது கர்மயோகமோ அல்லது ஸந்நியாஸ யோகமோ, அது மேலும் மேலும் உங்களை குறைவுணர்வுகளுக்கே எடுத்துச்செல்லும். பூர்ணத்வ நிலையிலிருந்து செய்யும் எதுவும் உங்களை மேலும் மேலும் பூர்ணத்வ நிலைக்கே எடுத்துச்செல்லும்.

உங்களின் வாழ்க்கைப் பாதையே வாழ்த்தாக அமைந்திடும்

கர்மம், ஸந்நியாஸம் இந்தப் பாதைகளைப் பற்றிப் பகுத்துப் பார்ப்போம்.

பற்றுதல்களைத் துறந்துவிட்டு, நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வைச் சரணடைந்து செயல்படுவதே கர்மயோகம்.

பூர்ணத்வ உணர்வில் இருப்பதும், மற்றவர்களையும் பூர்ணத்வ உணர்வில் இருக்குமாறு வளப்படுத்திக் கொண்டேயிருப்பதுமே ஸந்நியாஸம்.

திரும்பத் திரும்ப கிருஷ்ணர், பூர்ணத்வத்திற்கும், 'இருத்தலுக்குமே’

பூர்ணத்வ உணர்வில்
இருப்பதும், மற்றவர்களையும்
பூர்ணத்வ உணர்வில்
இருக்குமாறு வளப்படுத்திக்

முக்கியத்துவம் தருகிறார்.

நம்முடைய செயல்பாட்டின் மூலகாரணம் நமக்குத் தெரியவில்லையென்றால், நாம் ஏன் கர்மங்களைச் செய்துகொண்டிருக்கிறோம் அல்லது ஸந்ந்யாஸத்தை ஏன் தேர்வுசெய்கிறோம் என்பதுகூட நமக்குப் புரியாது. நம்மால் நம்முடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவும் முடியாது.

நம்முடைய துக்கங்களுக்குக் காரணம் கர்மாவோ, ஸந்ந்யாஸமோ அல்ல. நம்முடைய தவறான குறைவுணர்வு மனப்பான்மைதான் துக்கங்களுக்கான காரணம்.

இந்தத் தவறான குறைவுணர்வுடன் இருக்கும்போது, கர்மாவோ அல்லது ஸந்ந்யாஸமோ எதுவாக இருந்தாலும், அந்தப் பாதை நமக்கு ஒரு தண்டனையாகத்தான் இருக்கும். பூர்ணத்வ உணர்வுடன் செய்யப்படும் கர்மம் அல்லது ஸந்ந்யாஸம் எதுவாக இருந்தாலும், அந்தப் பாதை நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரு உண்மையான வாழ்த்தாகவே அமையும்.

ஜீவன்முக்தியை மலர்த்திடும் அருமையான உபாயம்

கிருஷ்ணர் சொல்கிறார்: ஸாங்க்​ய யோகோ ப்ரு’தக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா: (5.4) -அறியாமையில் இருக்கும் ஒருவர்தான், கர்மயோகத்திலிருந்து ஸாங்க்​யம் அதாவது ஸந்ந்யாஸம் வித்தியாசமானது என்று சொல்வார்.

இங்கே கர்மம், ஸந்ந்யாஸம் - என்ற இந்த இரு வார்த்தைகளும் கர்ம யோகத்திற்கும் ஸாங்க்​ய யோகத்திற்கும் சமமானதாகச் சொல்லப்பட்டுள்ளன. கர்ம யோகத்தில், நமது ஆசை மனப்பாங்கை நாம் நிறைவுசெய்யும்போதும், ஸந்ந்யாஸ யோகத்தில், நமது அச்ச மனப்பாங்கை நாம் நிறைவுசெய்யும்போதும் நாம் நிலையான, நித்யமான பிரபஞ்ச விழிப்புணர்விற்குள் செல்வோம்.

இந்தக் கருத்து முற்றிலுமே ஒருவரிச் செய்தியாகச் சுருக்கப்பட்டிருக்கிறது: துறவு என்பது ஆசை அச்சங்களுக்கு அப்பாற்பட்டது; ‘ஆசை இல்லாமல் இருக்க வேண்டும்’ என்கின்ற ஆசை உட்பட!

நம்முடைய மனத்தால் நினைக்கப்படும் எல்லா எண்ணங்களும், நம்முடைய உடலால் செய்யப்படும் எல்லாச் செயல்களும் இறைசக்திக்கு நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டாகவே இருக்க வேண்டும். நன்றியுணர்வு, ஜீவன்முக்தியை மலர்த்திடும் அருமையான பண்பு.

உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து விடுதலை

யத்ஸாங்க்‍யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபிகம்யதே /
ஏகம் ஸாங்க்‍யஞ் ச யோகம் ச ய: பஶ்யதி ஸ பஶ்யதி // 5.5

தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஆசையும் பயமும் இல்லாமல்கூட, உங்களைப் பராமரித்துக்கொள்வதற்கான போதுமான சக்தியும் பலமும் உங்களிடமும் இருக்கின்றன.

முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு, உங்களுக்கு ஆசையிடமிருந்தோ பயத்திடமிருந்தோ சக்தி தேவையில்லை என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டும்.

நீங்கள் இந்தப் பூமிக்கு வரும்போதே, நீங்கள் விரும்பியபடியெல்லாம் வாழ்வதற்கும், நீங்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் அடைய வேண்டுமென்று விரும்பினீர்களோ அதையெல்லாம் அடைவதற்கும் போதுமான சக்தியைக்கொண்டு வருகிறீர்கள். ஆசையிடமிருந்தோ, பயத்திடமிருந்தோ உங்களுக்கு எரிபொருள் தேவையில்லை.

அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார், ய: பஶ்யதி ஸா பஶ்யதி

ஆசை, பயம் இவற்றின் தாக்கங்களைத் தாண்டிய ஒரு மனிதரால்தான், பொருட்களை, விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடியும். நீங்கள் அச்சம் அல்லது ஆசை இவைகளின் பிடியில் சிக்கிக்கொண்டீர்களானால், விஷயங்களை நீங்கள் விரும்பியபடிதான் பார்ப்பீர்கள். அவற்றை ‘உள்ளது உள்ளபடியே’ பார்க்கமாட்டீர்கள்.

“எனக்குப் பயத்திடம் இருந்தும் ஆசையிடம் இருந்தும் சக்தி தேவையில்லை!” என்று முடிவெடுங்கள். உங்கள் உள்-உணர்வை அழுத்திக்கொண்டிருக்கும் அழுத்தத்தை விடுவியுங்கள். சட்டென உங்கள் இருப்பிலிருந்து ஒரு புதிய சக்தியும் சுத்தமான உற்சாகமும் காரணமில்லாத மங்களத்துவ சக்தியும் மேலெழும்பி வருவதை உணர்வீர்கள். காரணமில்லாத மங்களத்துவ சக்தியைத்தான் நாம் ஶிவம் என்கிறோம்.

மஹாபாரத யுத்தத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுடைய தேரைச் செலுத்தினார். இங்கு அர்ஜுனன், ஜீவாத்மாவைக் குறிக்கிறார். அந்த ஜீவாத்மாவை ஊக்கமளித்து அழைத்துச்செல்லும் சாரதியாக கிருஷ்ணர் இருக்கிறார்.

தேரினில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகள், தெய்விகச் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டு, அழகாக அவர் பிடிக்குள் இருக்கும் புலன்களையே குறிக்கின்றன.

வெற்றியை நோக்கியும் ஆனந்தத்தை நோக்கியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரதம், உடலைக் குறிக்கிறது.

தனி-மனித உணர்வு(ஜீவாத்மா) இறைவனைச் சரணடையும்பொழுது, இறைவன் அந்த மனிதனின் உடல், மனம், ஆன்மா இவற்றைக் கட்டுப்படுத்தி, அவருடைய உண்மை இயல்பை நோக்கி, ஆனந்தத்தை நோக்கி செலுத்தத் தொடங்குகிறார்

உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாதநிலையே கிருஷ்ண நிலை

கிருஷ்ணரின் இந்த ஸ்லோகங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. ஆனால் பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன.

ஸத்யத்தைத் தெரிந்துகொண்ட ஒருவர், பார்த்தாலும் கேட்டாலும்

நன்றியுணர்வு, ஜீவன்முக்தியை மலர்த்திடும் அருமையான பண்பு. தொட்டாலும் முகர்ந்தாலும் சாப்பிட்டாலும் சென்றாலும் கனவு கண்டாலும் மூச்சுவிட்டாலும் இவை எதையுமே தாம் செய்யவில்லை என்பதை அறிவார். (5.8)

பற்றுக்களைத் துறப்பதே உண்மையான துறவு!

இந்த ஸ்லோகத்தில், ஒன்பது வாயில்களுடன் (வெளி-உலகுடன் தொடர்புகொள்ள உதவும் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்புகள் இரண்டு) இருக்கிற உடலைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்.

இங்கே கிருஷ்ணர் 'எதையும் செய்யவில்லை' என்று சொல்லும்பொழுது, சோம்பேறித்தனத்தையும் மனம்போனபோக்கில் இருப்பதைப்பற்றிக்குறிப்பிடவில்லை; நம்முடைய செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதிருப்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

'நான் இந்தச் செயலைச் செய்கிறேன்' என்ற எண்ணம்கூட இல்லாமல், எதிலுமே முழுமையாக ஈடுபடுவதையும், நாம் அந்தச் செயலாகவே மாறிவிடுவதையும், நமக்குள்ளிருந்து பொங்கும் ஆனந்த சக்தியிலிருந்து மட்டுமே செயல்படுவதைப் பற்றியே இங்கே கிருஷ்ணர் பேசுகிறார்.

உண்மையில், செயல் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை; அந்தச் செயலின்மூலமாக நமக்குள் இருக்கும் ஆனந்தத்தை உணர்வதுதான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

செய்பவர் யார், செயல் என்ன என்பதையெல்லாம் விளக்கிச்சொல்கின்ற நம் மனம், செயலிலிருந்து செய்பவரைத் தனிமைப்படுத்திவிடுகிறது. நாம் விலகியிருந்து, சாட்சியாகப் பார்க்க ஆரம்பிக்கும்பொழுதுதான், நாம் செய்கிற செயலில் முழுமையாக ஈடுபடுகிறோம்.

கேளுங்கள், செய்யக்கூடிய செயலில் நாம் எப்பொழுது முழுமையாகவும் நிறைவாகவும் இருக்கிறோமோ, அப்பொழுது நம்முடைய செயலுக்குப் பின்புலமாக நம்முடைய புத்திசாலித்தனமும் முழு சக்தியும் இருக்கும். எந்தச் செயலிலும் நாம் உண்மையாக ஈடுபடும்பொழுது, நாம் அந்தச் செயலாகவே மாறிவிடுகிறோம்.

ஒபிரபஞ்சத்திடம் சரணடைவதே புத்திசாலித்தனம் (5.10 - 5.13)

பற்றுக்களைத் துறப்பதே உண்மையான துறவு!

கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் பற்றில்லாமல் இருப்பதைப் பற்றிப் பேசுகிறார். கீதையின் மொத்த சாரம் இதுவே.

நீங்கள் உங்களிடமுள்ள பொருள்சார்ந்த உலகின் உடைமைகளை எல்லாம் விட்டுவிட்டு, ஒரு காட்டிற்கோ அல்லது ஆஃப்ரமத்திற்கோ சென்றுவிடலாம். ஆனால் மனம் இன்னமும் அந்த உடைமைகளைப் பற்றியே தொங்கிக் கொண்டிருக்குமேயானால், அங்குத் துறவு நிகழவே இல்லை.

ஒருவர் இந்தப் பொருள்சார்ந்த உலகத்திலிருந்துகொண்டே, சுறுசுறுப்பாக அனைத்துக் காரியங்களையும் செய்துகொண்டு, விளைவுகளை எதிர்நோக்காமல் பற்றற்று வாழலாம்.

அடிப்படையான ஸத்யம் இதுதான்: பிரபஞ்ச இருப்புத்தன்மை என்பது நமக்குத் தேவையானவற்றை எல்லாம் அளித்து, ஒவ்வொரு கணமும் நம்மை அன்புடன் கவனித்துக்கொள்கிற தாயாக இருக்கிறது. இந்தப் புரிந்துகொள்ளுதல் நமக்குள் மலரும்பொழுது, நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையைச் சரணடைகிறோம்.

பெருங்கடலுக்குள் எழுந்து விழுகிற அலை, தான் பெருங்கடலின் ஒரு அங்கம்தான் என்பதை ஆனந்தமாக உணர்கிறது. அந்தப் பெருங்கடலை, அந்த முழுமையான இருப்புத்தன்மையை தன்னுடைய எதிரியாகக் கருதிக்கொண்டு, அதனுடன் போரிடுவதற்கு தனக்கென்று தனி ஸ்தூல இருப்பு இருப்பதாக ஒருபோதும் அது நினைத்ததே இல்லை.

கேளுங்கள், சர’ணாகதி பற்றி இன்னொரு முக்கியமான விஷயம், யாரிடம் அல்லது எதனிடம் சரணடைகிறோம் என்பது முக்கியம் அல்ல. எது முக்கியமென்றால், சர’ணாகதி மட்டும்தான்.

பிரபஞ்ச இருப்புத்தன்மை நம்மைக் கவனித்துக்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்கிற புத்தியைப் பெற்றிருப்பதும், பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் சரணடைவதும்தான், உச்ச புத்திசாலித்தனம்.

பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒரு மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான சக்தி அல்ல என்பதையும், அதுதான் நம்முடைய ஆனந்த வாழ்க்கைக்குத் திறவுகோலாக இருக்கிற புத்திசாலித்தனமான சக்தி என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஸாக்ஷிபாவனை பூர்ணත්වத்திற்கு வழிகோலும்

மீண்டும் மீண்டும் கிருஷ்ணர் இதுவரை சொன்ன ஸ்லோகங்களில் எல்லாம்,ஸங்கம் த்யக்த்வா கரோதிய: (5.10) - பற்றுதல் இல்லாத செயல்பாடுதான் துறவு. இந்தத் துறவுதான் விடுதலைக்கு வழிவகுக்கும் என்கிறார் கிருஷ்ணர். இந்த ஒரே கருத்தை பல வழிகளில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளார்.

நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளோடு நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாமலும், அவற்றோடு நம்மை பந்தப்படுத்திக்கொள்ளாமலும், அவற்றை ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து பார்க்கும்பொழுதுதான், வாழ்க்கை நிகழ்கிறது என்பதை மீண்டும் மீண்டும் அவர் வலியுறுத்துகிறார். அப்பொழுது மட்டுமே நாம் புத்திசாதுர்யத்துடன் வாழ்க்கையை வாழ முடியும். அதுவே நம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்கும், பூர்ணත්වத்திற்கும் வழிகாட்டி அழைத்துச்செல்கிறது.

இந்த சூட்சுமத்தை உணர்ந்து, வாழ்க்கையை நாம் பூர்ணত্ব உணர்வில் வாழத்தொடங்கிவிட்ட மாத்திரத்திலேயே, நம்முடைய எல்லாக் குறைவுணர்வுகளும் சுலபமாக மறைந்துவிடுவதை நம்மால் காண முடியும்.

‘நாம் யார்’ என்பதை உணர்ந்துகொள்வதற்காக ஒரு அருமையான நுட்பத்தை இங்கே கிருஷ்ணர் நமக்கு வழங்குகிறார்.

நம்முடைய கடமை, செயல்களைச் செய்வது மட்டுமே! விளைவுகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று

பிரபஞ்சம் படைத்திருக்கிற ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியோடு

கிருஷ்ணர் சொல்கிறார்.

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி (5.10) - நிலையான பிரபஞ்ச விழிப்புணர்வைச் சரணடைந்து, ஏதாவது ஒன்றை நாம் செய்துகொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் நாம் அந்தளவிற்கு மிக அதிகமான அன்புசக்தியை நம்முள் பெற்றிருக்கிறோம்.

அப்போது நாம் விளைவுகளை எதிர்பார்ப்பதற்குக்கூட தெரியாமல் இருக்கிறோம். ஏனென்றால் நாம் தொடர்ந்து நம்முடைய உள் சக்தியான ஆனந்த சக்தியிலிருந்து இயங்கிக்கொண்டும், அதை வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம். அவ்வளவுதான்.

பிரபஞ்சம் படைத்திருக்கிற ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியோடு அனுபவித்து வாழுங்கள். ஒவ்வொரு கணமும் பூர்ணத்வ உணர்வில் நிலைபெறுங்கள்.

காலையில் உதிக்கிற சூரியனையும், பறவைகளின் கீச்சிடும் ஒலியையும் கவனியுங்கள்.

கதிரவனின் இதமான கதிர்கள் பட்டவுடன் பரவசத்துடன் மடல் விரிக்கும் மலர்களை ஆழ்ந்து கவனியுங்கள்.

இந்தச் சில கணங்களே, நம்முடைய இருப்பின் முழுமையான புதிய பரிமாணத்தை நமக்குக் காட்டிவிடும். வாழ்க்கையை, ‘எந்தவொரு காரணமும் இல்லாமலேயே அனுபவிப்பது’ என்றால் என்ன என்பதை அவை நமக்குக் காட்டிவிடும்.

நம்மை வரவேற்று, தழுவிக்கொள்கிற பிரபஞ்ச சக்தியின் கரங்களுக்குள் நாம் எப்படி இளைப்பாறுவது என்பதை வாழ்க்கை நமக்குக் கற்றுத்தருகிறது.

கற்றுக்கொடுக்க முடியாத
மற்றும்
கற்றுக்கொள்ள முடியாத அறிவுதான்
ஸரணாகதி.

ஒஅனுமதியுங்கள், உங்களை விடுவிக்கும் சரணாகதி நிகழ்ந்துவிடும் (5.14 -5.17)

“நான் செயல்களை உருவாக்குவதும் இல்லை அல்லது மக்களைச் செய்ய வைப்பதும் இல்லை அல்லது செயல்களுக்கான பலன்களுடன் இணைவதும் இல்லை. இவை எல்லாமே வெளி-உலக சுகங்களை நாடும் மனித சுபாவத்தாலேயே செய்யப்படுகின்றன (5.14).” இந்த ஸ்லோகத்தின் மூலம் கிருஷ்ணர் மிக ஆழமானதொரு கருத்தைப் பதியவைத்திருக்கிறார்.

புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பிரபஞ்சத்தில் எதையும் உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. நான் ‘எதையும்’ என்று சொல்லும்பொழுது ‘எதையும்’ என்ற பொருளில்தான் சொல்கிறேன். இங்கு இருப்பவை எல்லாமே எப்போதும் இங்கேயே ஏதோ ஒரு வடிவத்திலிருந்துகொண்டுதான் இருக்கின்றன.

இனிமேலும் அது ஒரு வடிவத்திலோ அல்லது மற்றொரு வடிவத்திலோ தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். அது ஒரு பொருளாக இருந்தாலும் சரி அல்லது உயிரினமாக இருந்தாலும் சரி அது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. வடிவம் மட்டும் வேண்டுமானால் மாறுபடலாம்.

கிருஷ்ணர், ஒரு தனி மனிதனைப் பற்றிப் பேசவில்லை; இந்தப் பிரபஞ்சத்தின் உற்பத்தியைப் பற்றிப் பேசுகிறார்.

வாழ்க்கை என்கிற விளையாட்டே, மனிதன் தனக்குள் கடவுளை உணர்வதற்கு முயற்சிசெய்வதும், தெய்வம் தன்னை மனிதன் வாயிலாக வெளிப்படுத்த முயற்சிசெய்வதும்தான்!

‘உங்களுடைய அறிவையும் மனத்தையும் அந்த மேலான இறைவனிடம் ஒருமுகப்படுத்துங்கள், நீங்கள் முக்தியை நோக்கிச்செல்வீர்கள்’ என்று கிருஷ்ணர் நம்மை விடுவிப்பதற்காக இன்னொரு நுட்பத்தையும் வழங்குகிறார்.

ஒருவருடைய புத்திசாலித்தனம் ‘கிருஷ்ணரை’ நோக்கி ஒருமுகப்படுத்தப்படும்பொழுது, அது விடுதலைக்கு வழிவகுக்கும்.

இந்தப் பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டும் நம்மையெல்லாம் காத்துக்கொண்டும் ஒரு உயிர்ச்சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்துணர்ந்துகொள்ளும்பொழுது, நாம் தளர்வாக இருக்கிறோம்.

நம்மை நாம் தளர்த்திக்கொண்டு, மன அழுத்தமில்லாமல் இருக்கும்பொழுது, நாம் நம்முடைய உச்ச ஆற்றலுடன் வாழ முடியும்; நாம் மிகப்பெரிய அளவிலான சுதந்திரத்தை உணர முடியும். இதுதான் பஸரணாகதி. இதுதான் உண்மையான அறிவுகூட.

கற்றுக்கொடுக்க முடியாத அல்லது கற்றுக்கொள்ள முடியாத அறிவுதான் பஸரணாகதி.

நம்முடைய இருப்புநிலை இதைப் பெற்றுக்கொள்ளத் தயாரான நிலையில் இருக்கும்பொழுது, குருவானவர் நமக்குள் மிகச்சுலபமாக இதைச் செலுத்திவிடுகிறார்.

ஓஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்சத்தின் அங்கமே (5.18 -5.19)

கிருஷ்ணர், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் நடுநிலைமையையும், வேறுபாடு இல்லாத சீரான மனநிலையையும் சுருக்கமாக விவரிக்கிறார். பிரபஞ்ச இருப்புத்தன்மைக்குப் பிரியமானது என்று தனியாக எதுவும் இல்லை. எல்லா ஒப்பீடுகளும் விளக்கங்களும் மனிதரால் உருவாக்கப்பட்டவை.

ஒரு மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாம் புனிதமானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கும் பாவிகள் என்று கருதப்படுபவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டுமென்றால், பஸுநி சைவ ஶ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந: (5.18) -அறிவும் கருணையும் நிரம்பிய ஒருவர், நாயையும் நாயை உண்பவரையும் சமமாகவே பார்க்கிறார் என்று அவர் சொல்கிறார்.

‘நான் எழுவாயும் இல்லை, செயப்படுபொருளும் இல்லை, வினையும் இல்லை' என்பதை உணர்ந்து, நாம் இந்த மூன்றையும் கடந்து செல்லும்பொழுது, எல்லாமே மறைந்துவிடுகின்றன. உண்பவனும் உணவும் உண்ணும் அனுபவமும் இணைகின்றன. நாம் மூலத்தையே அடைந்துவிடுகிறோம்.

அங்கு எண்ணங்களும் இல்லை, மனமும் இல்லை. அங்கு உங்கள் இருப்புத்தன்மை மட்டுமே இருக்கும். அதுதான் உண்மையான நீங்கள்.

வெளியில் உள்ள புறத்தோற்றங்கள், தோன்றி மறையக்கூடியவை. பூமியில் உள்ள ஒவ்வொரு அணுவும் தெய்விகமானதுதான்.

இந்தவாழ்க்கையேதெய்வம் நமக்குத்தந்த ஒருகொடை என்பதை நாம் உணரும்பொழுது, வாழ்க்கையைச் சாதாரணமாக, மேம்போக்காக எடுத்துக்கொள்ளும் நமது உணர்வு மாற்றம்பெறுகிறது. அது, நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளங்களையும் கொடுத்த இறைவனுக்கு, பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு நன்றி தெரிவிக்கும் உணர்வாக மாற்றம் பெறுகிறது!

தெய்விகம் அதிபுத்திசாலித்தனமானது, அது நமக்கு உண்மையிலேயே என்ன தேவைப்படுகிறது என்பதை நன்றாகவே அறியும்.

நாம் என்ன விரும்புகிறோம் என்பதற்கும், நமக்கு என்ன தேவை என்பதற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நமக்கு அந்த வித்தியாசம் தெரிவதில்லை. ஆனால் அதற்குத் தெரியும்.

பிரபஞ்ச இருப்புத்தன்மை தொடர்ந்து நம்மீது ஆனந்தத்தைப் பொழிந்துகொண்டே இருக்கிறது. நாம்தான் அதைப் பெற்றுக்கொள்ள திறந்தநிலையில் இல்லை. பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒவ்வொருவரையும் அதே பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒரு அங்கமாகவே பார்க்கிறது.

வாழ்க்கை, தெய்வம் நமக்குத் தந்த நன்கொடை. நன்றி தெரிவிக்கும் மனப்பாங்குடனும், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றின்மீது அன்பு செலுத்தியும், பூர்ணத்துவத்துடனும் வாழ்வதற்கு முயற்சிசெய்யுங்கள். பிறகு இயல்பாகவே நீங்கள், ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு பொருளும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் தனித்துவமான படைப்பே, தெய்விகத்தின் பிரதிபிம்பமே என்பதை உணர்வீர்கள்.

கசப்பு இனிப்பு, வலி சுகம்போன்ற இரட்டைகளைக் கடக்க... (5.20-5.29)

மஹோன்னதமான நிலையில் இருப்பவரின் குணாதிசயங்களைக் கிருஷ்ணர் விளக்குகிறார்.

ஸ்திரபுத்திரஸம்மூடோ (5.20) - யாரொருவர் மாறுபாடில்லாத, நிலையான புத்திசாலித்தனத்துடன் இருக்கிறாரோ, இன்பம் துன்பம், மகிழ்ச்சி துயரம்போன்ற எதிரெதிரான உணர்ச்சிகளின் செயல்பாட்டில் சிக்காமல் இருக்கிறாரோ, அவர் ஏமாற்றப்படுவதில்லை. ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித: (5.20) -அவர் ஸத்யத்தில் நிலைபெற்றிருக்கிறார், இறைவனில் நிலைபெற்றிருக்கிறார். அவரேதான் இறைவன்.

கிருஷ்ணர் உண்மையிலேயே, ஒரு ஸூத்ரமாக, ஒரு நுட்பமாக இதை வழங்குகிறார். நாம் நம்முடைய கவனத்தை இன்பத்தின் மீதோ, துக்கத்தின் மீதோ செலுத்தாமல், இவை இரண்டிற்கும் நடுவில் செலுத்தும்பொழுது, நாம் உண்மையாகவே இவை இரண்டையும் கடந்து செல்வோம். மனத்தினுடைய விளையாட்டையும் கடந்து செல்வோம்.

இன்பத்தைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்க அல்லது துக்கத்திலிருந்து ஓடிவிட முயற்சிசெய்வதற்குப் பதிலாக அதனோடேயே இருங்கள்;

நாம் நமக்குள்ளேயே
ஒன்றியிருக்கும்போது
மேலோட்டத்தில் நிகழும் உணர்ச்சி
களால் நாம் பாதிக்கப்படுவதில்லை.

அதைச் சாட்சியாகப் பாருங்கள்.

இந்த நுட்பத்தைப் பயன்படுத்தியே, மனத்தின் இந்த இயல்பை நாம் தாண்டிச் சென்றுவிட முடியும்.

ஒவ்வொரு தனி விஷயத்தையும் எந்தவொரு வேறுபாட்டுணர்வும் இல்லாமல், எவ்வித ஆர்வமும் இல்லாமல், எவ்வித பற்றும் இல்லாமல் நீங்கள் பார்க்கும்பொழுதுதான், நீங்கள் உண்மையான ஸந்யாஸி ஆகிறீர்கள். ஒரு உண்மையான துறவி ஆகிறீர்கள்.

கேளுங்கள், கர்மா என்பது வேறொன்றும் இல்லை; நம்மை மீண்டும் மீண்டும் அதே செயலைச்செய்யத் தூண்டும் முழுமையாக நிறைவேற்றப்படாத நம்முடைய ஆசைகளையே கர்மா என்கிறோம். ஏனென்றால் முழுமையான விழிப்புணர்வுடன் நாம் ஒரு ஆசைக்குள் சென்று, அதை முழுமையாக அனுபவித்துவிட்டு வெளிவருவதற்கான புத்திசாலித்தனம் நம்மிடம் இல்லை.

ஒருமுறை அந்தச் சூழ்நிலையை அந்தக் கணத்திலேயே விழிப்புணர்வுடன் அனுபவித்து, அதை நிறைவுசெய்து விட்டோமென்றால், நாம் செய்பவராகவோ செயலாகவோ செய்தலாகவோ இருப்பதில்லை. நாம் இந்த மூன்றையும் கடந்துவிட்டிருப்போம். நாம் கர்மாவைக் கடந்து இருப்போம். நாம் மேலானதாக மாறியிருப்போம்.

உள்முகத் திருப்பமே உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை

நாம் நம்முடைய இருப்புத்தன்மையின் உள்-மையத்தில் இருக்கும்போதும், நாம் நமக்குள்ளேயே ஒன்றியிருக்கும்போதும், மேலோட்டத்தில் நிகழும் உணர்ச்சிகளால் நாம் பாதிக்கப்படுவதில்லை. ஸுகமக்ஷயமஸ்நுதே (5.21) - நம்முடைய இருப்புத்தன்மையிலிருந்து மகிழ்ச்சி எழுகிறது. அது எல்லையில்லாதது. ஏனென்றால் அது எந்தவிதமான புறப்பொருட்களாலும் விஷயங்களாலும் நிறுத்த முடியாதது என்கிறார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் நம்மை உள்முகமாகத் திரும்புமாறு அறிவுறுத்துகிறார். “உங்களுடைய புலன்களிலிருந்து விலகி, உங்களுடைய மூலத்திற்குள் செல்லுங்கள்,” என்று சொல்கிறார். புலனின்பங்கள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவையே, அவை நீடித்து இருப்பதில்லை, அவை தற்காலிகமானவையே என்கிறார்.

பொதுவாக நாம், நமக்கு வெளியே நிகழும் நிகழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப்படுகிறோம். அந்த வெளி விஷயம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டவுடன் துக்கத்தை அனுபவிக்கிறோம்.

நாம் எப்போதும் நம்முடைய மகிழ்ச்சியை, நமக்கு வெளியேயுள்ள ஏதோ ஒன்றுடன் இணைத்தே வைத்திருக்கிறோம்.

அந்தச் சம்பவமோ அல்லது அந்த நபரோ, நமக்கு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ தருவதில்லை. நம்முடைய புலன்களின் மூலம் பெற்ற கருத்துக்களும் அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நாம் எடுக்கிற தீர்மானமும்தான் இதற்குக் காரணம்.

கிருஷ்ணரிடமிருந்து அழகான ஒரு சூத்திரம், உன்னதமான விழிப்புணர்வுநிலைக்குள் நுழைவதற்கான நுட்பம்: யோஉந்த: ஸுகோஉந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய: (5.24) - உங்களுக்குள்ளேயே மகிழ்ச்சியாகவும் தளர்வாகவும் நிறைவாகவும் இருங்கள் என்கிறார், கிருஷ்ணர்.

ஏனென்றால் நிறைவுணர்வில் நிலைபெறும் ஒருவர், எப்போதும் உற்சாகமாகவும் நிறைவாகவும் சக்திமிக்கவராகவும் ஆனந்தமாகவும் இருக்கிறார். அவர் முழுமையாக நிகழ்காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஸத்யத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கிருஷ்ணர் இதைத்தான் சொல்கிறார். நாம் முற்றிலும் உள்முகமாகத் திரும்பும்பொழுது, வெளி நிகழ்வுகளின்மீது எந்தவித பற்றும் இருப்பதில்லை; எல்லாவற்றுடனும் தெய்விகத்துடனும் ஒன்றாகி

நீங்கள் பூர்ணத்துவமடைந்த பிறகே,
பொறுப்பெடுப்பது உங்களுக்குள்
நிகழும்!

எல்லாக் கர்மாக்களையும் பாவங்களையும் கடந்துவிடுகிறோம்.

பிறகு ப்ரஹ்ம நிர்வாணம் என்ற இறுதி விடுதலையை அடைகிறோம். பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஒன்றாகிறோம். நாம் நிலையான, எல்லையில்லாத ஆனந்தமான நித்யானந்தத்தை அடைகிறோம்.

அன்பு, பொறுப்பெடுக்கச் செய்யும்!

நாம் மற்றவர்களிடம் உண்மையிலேயே அன்பாக இருக்கும்பொழுது, நாம் மேலும் மேலும் அதிகமான பொறுப்புக்களை எடுத்துக் கொள்கிறோம். எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடமும் நாம் அன்பைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். அதற்காக நாம் பொறுப்பெடுத்துக்கொள்கிறோம். பொறுப்பெடுப்பது, நமக்குள் ‘உணர்வுசக்தி’யை விழிப்பிக்கும்.

ஆனால் நீங்கள் பூர்ணத்துவமடைந்த பிறகே, பொறுப்பெடுப்பது உங்களுக்குள் நிகழும்!

நான் இப்போது உங்களுக்கு, நீங்கள் ஏன் உங்களை ஒரு பொறுப்புள்ளவராக உணர வேண்டும் என்று சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்கு உள்ளும் வெளியிலும் எது நடந்தாலும் - அதற்கு நீங்கள்தான் மூல ஆதாரமாக இருக்கிறீர்கள்! அதனால், உங்களுக்கும் உள்ளேயும், உங்களைச் சுற்றிலும் என்ன

கைகளில் புல்லாங்குழல்

நிகழ்ந்தாலும், அதற்கு நீங்கள்தான் பொறுப்பெடுத்தாக வேண்டும். நீ ங்கள்தான் அவற்றுக்கான ஆதாரமாக இருப்பதால் நீங்கள் பொறுப்பெடுத்தாக வேண்டும்.

‘பொறுப்பெடுத்தல்’ - இந்தத் தத்துவத்தை வாழுங்கள். அதற்குப் பின்பு, நீங்கள் எடுக்கும் எல்லாத் தீர்மானங்களுமே ‘நானே மூல ஆதாரம்’ என்னும் அனுபவத்திலிருந்து எடுப்பவையாகவே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

நம்முடைய மனதின் குறைவுணர்வுகளுக்கு அப்பால்,