அத்தியாயம்-4: ஜ்ஞானகர்ம ஸந்ந்யாஸ யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் கர்மங்களைக் கரைப்பதற்கான தீர்வு
தர்க்கம் ,
தன்னைத் தானே
அறிந்துகொள்வதற்கு
ஒருபோதும் வழிநடத்தாது.
இறுதி ஸத்யம், தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டது.
ஸத்யத்தைப் பெறுவதற்கான தகுதி, பக்தியே.
இந்த ஒப்பற்ற அறிவியலை,
ஞானத்தை,
தன் பக்தனும் நண்பனுமான
அர்ஜுனனிடம் வெளிப்படுத்த
ஸ்லோகங்கள்
அத சதுர்தோண்ட்த்யாய: ஜ்ஞானகர்மஸந்நியாஸயோக:
ஏ
ஸ்ரீபகவாநுவாச
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம் ந
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேண்ப்ரவீத் நந 4.1
பகவான் சொன்னது
4.1 இந்த அழிவற்ற யோக அறிவியலை நான் சூரியக் கடவுளான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத்தின் தந்தையாகிய மனுவுக்கு உபதேசித்தார். மனு இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்தார்.
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது: ந
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப நந 4.2
4.2 இந்த மிகமேலான யோகம், குரு-சீஷ்ய பாரம்பரிய தொடர்ச்சியின்மூலம் பெறப்பட்டது. ராஜரிஷிகள் அவ்வழியேதான் இதனை அறிந்துகொண்டார்கள். காலப்போக்கில் இந்தப் பாரம்பரிய சங்கிலி உடைக்கப்பட்டுவிட்டது. அதனால் இந்த யோக அறிவியல் தொலைக்கப்பட்டுவிட்டதுபோன்ற தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
ஸ ஏவாயம் மயா தேண்ட்த்ய யோக: ப்ரோக்த: புராதந: ந
பக்தோண்டஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் நந 4.3
4.3 நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருப்பதால், ஜீவன்முக்தியை அடையும் அந்தப் பழமையான அறிவியல், நித்யானந்தத்தில் நுழையும் அந்தப் பழமையான அறிவியல் இன்று என்னால் உனக்கு உபதேசி க்கப்பட்டது. இந்த அறிவியலின் மேலான புதிர்களை நீ நிச்சயமாகப் புரிந்துகொள்வாய்.
அர்ஜுந உவாச
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத: ந
கதமேதத் விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி ந
அர்ஜுனன் சொன்னது
4.4 கிருஷ்ணா! பிறப்பால் நீங்கள் சூரியக் கடவுளாகிய விவஸ்வானுக்கு இளையவர். ஆனால் கல்ப ஆரம்பத்திலேயே நீங்கள் இந்த யோகத்தை அவருக்கு உபதேசித்தீர்கள் என்பதை நான் எவ்வாறு புரிந்துகொள்வது?
ஸ்ரீபகவாநுவாச
பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவ சார்ஜுந ந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப ந
பகவான் சொன்னது
4.5 ஓ பரந்தப! நீயும் நானும் நிறைய பிறப்புகளைக் கடந்து இருக்கிறோம். அவை எல்லாவற்றையும் என்னால் நினைவில் வைக்க முடியும். ஆனால் உன்னால் முடியாது!
அஜோண்பி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோண்பி ஸந் ந
ப்ரக்ரு'திம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா ந
நான் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் கடவுளாகவும் பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருந்தாலுங்கூட, என் இயல்பை ஆண்டுகொண்டு என் மாயா சக்தியினால் மீண்டும் அவதரிக்கிறேன்.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத ந
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ரு'ஜாம்யஹம் ந
4.7 கூட்டு நேர்மறை உணர்வுநிலை குறைந்து, கூட்டு எதிர்மறை உணர்வுநிலை அதிகரிக்கும் சமயங்களில் நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறேன்.
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ரு'தாம் ந
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ந
4.8 பக்தி உடையவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் நேர்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் நான் காலங்காலமாக, மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்.
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத: ந
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோண்ர்ஜுந ந
4.9 எனது தெய்வீக தோற்றம் மற்றும் செயல்களைப் பற்றி அறிந்தவர்களும், அதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களும் உடலை விட்ட பிறகு, இந்தப் பொருள்சார்ந்த உலகில் மீண்டும் பிறப்பதில்லை. ஆனால் என்னை அடைகிறார்கள் அர்ஜுனா!
வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா: ந
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா: ந
4.10 பந்தம், பயம், கோபம் இவற்றிலிருந்துவிடுபட்டவர்களாய், என்னையே நினைத்துக் கொண்டிருப்பவர்களாய், என்னையே அடைக்கலம் அடைந்தவர்களாய் இருந்த பலர், என்னை அறிந்ததனாலும் உணர்ந்ததனாலும் புனிதமடைந்து என்னையே அடைந்தார்கள்.
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் ந
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ: ந
4.11 ஓ பார்த்தா! என்னைச் சரண் அடைபவர்களின் இயல்பைப்பொறுத்து, அவர்கள் எந்த வழியில் என்னிடம் பக்தியாக இருக்கிறார்களோ, அந்த வழியில் நான் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிகிறேன். என்னையே நான் அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறேன்.
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா: ந
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா ந
4.12 இந்த உலகில் உள்ள மனிதர்கள் செயல்கள்மூலம் வெற்றியை யே பெற விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் கடவுளை வழிபடுகிறார்கள். அவர்கள் இந்த உலகத்தில் ஊக்கமுள்ள செயலைச்செய்து உடனடியாகப் பலனைப் பெறுகிறார்கள்.
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ரு'ஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம் நந
4.13 மூன்று இயல்புகள் அல்லது குணங்கள், செயல்கள் இவற்றின் பங்கீட்டைப்பொறுத்து, நான் நான்கு ஜாதிகளை உருவாக்கி உள்ளேன். இருப்பினும் நான் செயலைச் செய்யாதவன், மாறாதவன்.
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மப₂லே ஸ்ப்ரு'ஹா ந
இதி மாம் யோண்பி₂ஜானாதி கர்மபி⁴ர்ந ஸ பத்⁴யதே நந
4.14 எந்தச் செயலாலும் நான் பாதிக்கப்படுவதில்லை. அந்தச் செயல்களின் பலன்களில் எனக்கு ஆசையும் இல்லை. என்னைப் பற்றிய இந்த உண்மையைப் புரிந்துகொண்டவர்கள், செயலின் பிணைப்பில் பந்தப்படுவதில்லை.
ஏவம் ஜ்ஞாத்வா க்ரு'தம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி⁴:
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ரு'தம் நந
4.15 முந்தைய காலத்தில் வாழ்ந்த ஞானமடைந்த, விடுதலையடைந்த ஆன்மாக்கள், இந்தப்புரிதலுடன் செயல்பட்டு விடுதலையடைந்தார்கள். இந்தப் புரிதலுடன், முன்னோர்கள் செய்தது போல், உன் கடமையைச் செய்வாயாக!
கிம் கர்ம கிமகர்மேதி கவயோண்ப்யத்ர மோஹிதா:
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேண்பா²பாத்
நந
4.16 எது கர்மா, எது அகர்மா என்பதில் அறிவுடையவர்கள் கூட குழப்பமடைகிறார்கள். எதைத் தெரிந்து கொண்டால் நீ அனைத்து தீமைகளிலிருந்தும் விடுதலையடைவாயோ, அந்தக் கர்மத்தின்
தத்துவம் குறித்து நான் உனக்கு விளக்குகிறேன்.
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண: ந
அகர்மணம்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி: ந
4.17 கர்மத்தின் போக்கைப் புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம். தவறான செயலின் இயல்பையும் செயலற்றதன்மையையும் புரிந்துகொள்வதன்மூலம் கர்மத்தின் இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்வாயாக!
கர்மண்யகர்ம ய: பஸ்யேதகர்மணி ச கர்ம ய: ந
ஸ புத்திமாந் மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ரு'த்ஸ்நகர்மக்ரு'த் ந
4.18 அனைத்து செயல்களில் ஈடுபட்டாலும், எவர் ஒருவர் செயலில் செயலற்றதன்மையும் செயலற்றதன்மையில் செயலையும் பார்க்கிறாரோ அவரே ஞானி, அவரே யோகி.
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்ப்பவர்ஜிதா: ந
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா: ந
4.19 யார் ஒருவர் உறுதி உடையவராகவும், அனைத்து கர்மங்களையும் ஆசையின் வசப்படாமல் செய்கிறாரோ, அவரே முழுமையான அறிவு பெற்றவராக இருக்கிறார். எவருடைய கர்மங்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டு விட்டனவோ, அவரை ஞானிகள் அறிவுடையவர்கள் என்று அறிவிக்கிறார்கள்.
த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ரு'ப்தோ நிராஸ்ரய: ந
கர்மண்யபிப்ரவ்ரு'த்தோண்பி நைவ கிஞ்சித்கரோதி ஸ: ந
4.20 கர்மபலன்களின்மேல் உள்ள பிணைப்பை விட்டுவிட்டதால், திருப்தியுடனும் சுதந்திரமாகவும் இருக்கிற அறிவுடைய மனிதர், எல்லாவிதமான கர்மங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர் கர்மம் செய்வதில்லை.
நிராஸீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்கிரஹ: ந
ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் ந
4.21 யார் ஒருவர், பலனை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்கிறாரோ, தம் மனத்தினை விழிப்புணர்வுடன் கட்டுப்படுத்தி, தனது உடைமைகள் மற்றும் உடல்மீதுள்ள உடைமை உணர்வை உதறித்தள்ளிவிட்டு, செயலை மட்டும் செய்கிறாரோ, அவர் பாவத்திற்கு ஆளாவதில்லை.
யத்ரு'ச்சாலாயஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர: ந
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ரு'த்வாபி ந நிபத்யதே நந 4.22
4.22 யார் ஒருவர் தற்செயலாகவும் தானாகவும் கிடைத்தவற்றைக்கொண்டு திருப்தி அடைபவராகவும் இருமையைக் கடந்தவராகவும் பொறாமையிலிருந்து விடுபட்டவராகவும் வெற்றியிலும் தோல்வியிலும் சம நிலையோடு இருப்பவராகவும் இருக்கிறாரோ, அவர் செயலாற்றிக் கொண்டிருந்தாலும்கூட, அதனால் அவர் கட்டுப்பட மாட்டார்.
கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞானாவஸ்திதசேதஸ: ந
யஜ்ஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே நந 4.23
4.23 யார் ஒருவர் பொருள்சார்ந்த உலகியல் செயல்களில் பற்று வைக்காமல், அவற்றிலிருந்துவிடுபட்டு, பரமாத்ம ஞானத்தில் மனத்தை நிலைநிறுத்தி, யாகத்திற்காகவே கர்மங்களைச் செய்கிறாரோ, அவருடைய கர்மங்கள் அனைத்தும் கரைந்து போய்விடுகின்றன.
ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம ஹவிர்-
ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம் ந
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம்
ப்ரஹ்மகர்மஸமாதிநா நந 4.24
4.24 ப்ரஹ்மமாகிய அக்னியில், ப்ரஹ்மமேயான திரவியங்களும் நெய்யும் ப்ரஹ்மத்தினாலேயே ப்ரஹ்மத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. யார் ஒருவர் தம்மை முழுவதுமாக செயலில் ஆழ்ந்து ஈடுபடுத்திக்கொள்கிறா ரோ, அவரால் நிச்சயமாக ப்ரஹ்மத்தை அடைந்துவிட முடியும்.
தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே ந
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி நந 4.25
4.25 சில யோகிகள் கடவுளை பல்வேறு வகையான யாகங்களைச் செய்து வழிபடுகிறார்கள். வேறு சிலர் ப்ரஹ்மமாகிய அக்னியில் யாகங்களையே அர்ப்பணம் செய்து வழிபடுகிறார்கள்.
ஸ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி ந
ஸப்தாதீன்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி ந 4.26
4.26 வேறு சில யோகிகள், காது முதலிய எல்லாப் புலன்களையும் மன அமைதி என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். மற்றும் சில யோகிகள், ஒலி முதலிய எல்லாப் புலன்நுகர் பொருட்களையும் புலன்கள் என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்.
ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே ந
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே ந 4.27
4.27 ஆத்ம ஞானத்தில் விருப்பமுடைய வேறு சில யோகிகள், புலன்கள் மற்றும் பிராணன்களின் செயல்கள் அனைத்தையும் யோகம் என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். அவர்கள், மனஅமைதி என்னும் யோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே ந
ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்ச யதய: ஸம்ஸிதவ்ரதா: ந 4.28
4.28 வேறு சிலர், திரவியங்களைக்கொண்டு யாகம் செய்கிறார்கள்; சிலர், தவம் என்னும் யாகத்தையும், சிலர் அஷ்டாங்க யோக வடிவான யாகத்தையும், மேலும் சிலர், அஹிம்சை முதலிய தீவிரக்கொள்கையோடு கூடிய தன்னைப் பற்றிய அறிவைக் கற்றுக்கொள்ளுதலாகிய 'ஞான யக்ஞ'த்தைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேண்பாநம் ததாபரே ந
ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா: ந 4.29
4.29 மற்றும் சிலர் உள்இழுக்கும் சுவாசமாகவும் வெளிவிடும் சுவாசமாகவும் இருக்கிற உயிர்ச்சக்தியான பிராணனை ஹோமம் செய்கிறார்கள். உள்-சுவாசம், வெளி-சுவாசம் இவற்றின் போக்கைக் கவனிப்பதன்மூலம் சுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
அபரே நிய hisதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி ந
ஸர்வேண்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா: நந 4.30
4.30 வேறு சிலர் முறையாக உண்பவர்களாக உயிர்ச் சக்தியை உயிர்ச் சக்தியிலேயே ஹோமம் செய்கிறார்கள். இந்த சாதகர்கள் யக்ஞங்களின் பொருளை அறிந்தவர்கள், யாகத்தின் மூலம் பாவங்கள் அல்லது கர்மங்கள் நீக்கப்பட்டு, அவர்கள் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள்.
யஜ்ஞஸிஷ்டாம்ரு’தபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம் ந
நாயம் லோகோண்ஸ்த்யயஜ்ஞஸ்ய குதோண்ந்ய: குருஸத்தம நந
4.31
4.31 குரு வம்சத்தில் சிறந்தவனான அர்ஜுனா! யக்ஞத்தில் எஞ்சிய அமுதத்தைப் பருகுகிற யோகிகள் சாச்வதமான மேலான பரமாத்மாவை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவருக்கு இவ்வுலகமே இல்லை. அப்படியிருக்கப் பரலோகம் ஏது?
ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே ந
கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே நந
4.32
4.32 இவ்வாறு, செயல்களிலிருந்து பிறக்கும் பல வகை யக்ஞங்களைப் பற்றி வேதங்களில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்வதின் மூலம் ஒருவர் விடுதலையடைகிறார்.
ச்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப ந
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே நந 4.33
4.33 ஓ எதிரிகளை வெல்பவனே! திரவியங்களால் செய்யப்படும் யக்ஞத்தைக்காட்டிலும் ஞான யக்ஞமே மிகவும் மேலானது. ஓ ப்ரீதாவின் மகனே! கர்மங்கள் அனைத்துமே ஞானத்திலேயே வந்து முடிவுபெறுகின்றன.
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா ந
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந: நந 4.34
4.34 ஒரு ஞான குருவை அணுகி கேள்விகள் கேட்டும் தொண்டுகள் செய்தும் இந்த ஸத்யங்களைப் புரிந்துகொள். ஒரு ஜ்ஞானகுரு ஸத்யத்தை உணர்ந்து இருப்பதால், அவர் உனக்குத் தீட்சை அளித்து ஞானத்தை உபதேசிக்க முடியும்.
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ ந
யேந பூதாந்யஸேஷேண த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி நந 4.35
4.35 ஓ பாண்டவா, இதைத் தெரிந்து கொண்டால் ஆசையினாலோ அல்லது மாயையினாலோ வேதனைப் படமாட்டாய். இதன் மூலம் உயிர்கள் அனைத்தும் மகோன்னதமான என்னிடத்தில் இருப்பதை நீ அறிந்துகொள்வாய்.
அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ரு'த்தம: ந
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ரு'ஜிநம் ஸந்தரிஷ்யஸி நந 4.36
4.36 நீ பாவிகளுக்குள்ளேயே அதிக பாவம் செய்தவனாக இருந்தாலும் ஞானம் என்னும் படகினால், நிச்சயமாக நீ துன்பம் என்னும் கடலை முழுமையாகக் கடந்துவிடுவாய்.
யதைதாம்ஸி ஸமித்தோSக்நிர்பஸ்மஸாத்குருதேSர்ஜுந ந
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா நந 4.37
4.37 அர்ஜுனா! கொழுந்து விட்டு எரியும் நெருப்பானது விறகை எரித்துச் சாம்பாலாக்குவது போல, ஞானமாகிய நெருப்பு எல்லாக் கர்மாக்களையும் எரித்து சாம்பாலாக்குகிறது.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ரு'ஸம் பவித்ரமிஹ வித்யதே ந
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி நந 4.38
4.38 உண்மையில்,ஞானத்தைவிடத் தூய்மையான பொருள் இந்த உலகில் வேறு ஏதும் இல்லை. இதை அறிந்த பக்குவமடைந்த மனிதர், காலக்கிரமத்தில் தன்னிடத்திலேயே ஆனந்தத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரத்தாவாந்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய: ந
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திமசிரேணாதிகச்சதி நந 4.39
4.39 ச்ரத்தையோடு (துணிவுடன் கூடிய நம்பிக்கை) இருக்கும் ஒருவர் ஞானத்தை அடைகிறார். அவருக்கு, புலன்கள்மீது கட்டுப்பாடு இருக்கிறது. இந்த ஞானத்தை அடைபவர் தாமதமின்றி அந்தக் கணமே மேலான அமைதியைப் பெறுகிறார்.
அஜ்ஞாஸ்சாஶ்ரத்ததாநஶ்ச ஸம்ஶயாத்மா விநஶ்யதி ந
நாயம் லோகோண்ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஶயாத்மந: நடு
4.40 ஞானமற்றவர்களும் நம்பிக்கை அற்றவர்களும் எப்போதும் சந் தேகத்தன்மையோடு இருப்பவர்களும் அழிக்கப்படுகிறார்கள். இந்த உலகத்திலோ, அடுத்த உலகத்திலோ அவர்களுக்கு இன்பம் கிடையாது.
யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்ஶயம் ந
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய நடு
4.41 யார் ஒருவர் தம் செயல்களினால் விளையும் பலன்களைத் துறந்து விட்டாரோ, யாருடைய சந்தேகங்கள் அழிக்கப்பட்டு விட்டனவோ, யார் ஒருவர் தன்னுள் உறுதியாக நிலைகொண்டிருக்கிறாரோ, அவர், அவருடைய செயல்களால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.
தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ரு'த்த்ஸ்த்தம் ஜ்ஞாநாஸிநாத்மந: ந
சித்த்வைநம் ஸம்ஶயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத நடு
4.42 பரதனின் வழிவந்தவனே, அதனால் எழுந்து நில்! யோகத்தில் உன்னை நிலைநிறுத்து. உன் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அறியாமையால் தோன்றிய சந்தேகங்களை ஞானம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்திவிடு.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே ஜ்ஞாந கர்ம ஸந்ந்யாஸயோகோ நாம சதுர்தோண்த்யாய: நடு ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக
விஞ்ஞானமுமாகிய ஜ்ஞான கர்ம ஸந்ந்யாஸ யோகம் என்ற நான்காவது அத்தியாயம்.

உங்கள்
கர்மங்களைக் கரைப்பதற்கான தீர்வு
முப்பத்திரண்டு வயது நிரம்பி இருந்தபோது கிருஷ்ணர், இந்த அறிக்கையைவிடுத்தார், "இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம் (4.1) - இந்த அழிவற்ற யோக அறிவியலை சூரியக் கடவுளான விவஸ்வானுக்கு நான் உபதேசித்தேன்!"
தர்க்கரீதியாக உங்களால் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாது. அடுத்த வரியில் கிருஷ்ணர் சொல்கிறார், "அறிவியல் எப்படி இருந்ததோ, அப்படி இல்லாமல் அழிந்துவிட்டதுபோலத் தெரிகிறது."
இந்த இரண்டு வாக்கியங்களை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஓஇது புதியதுமல்ல, பழையதுமல்ல என்றும் நிலைத்திருப்பது
‘இந்த ஸத்யம் புதியது அல்ல’, இது முடிவற்றது, இது புதுமையானதும் இல்லை, பழமையானதும் இல்லை, நிலையானது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
நிலையானது என்றால், அது எப்போதும் இருப்பது, காலத்தையும் இடத்தையும் கடந்து இருப்பது என்று பொருள். அவ்யயம் - ‘இந்த யோகம் அழிவற்றது’ எனக் கிருஷ்ணர் அறிவிக்கிறார். பூர்ணத்வத்திலிருந்து உருவாக்கப்பட்ட எதுவொன்றும் என்றென்றும் நிலைத்திருக்கும். பூர்ணத்வமே சாசுவதமானது, நித்யமானது.
மூன்றாவது அத்தியாயத்தில் நாம் கற்ற அதே யோகம், மேலும் விரிவாக இங்கே நான்காவது அத்தியாயத்திலும் சொல்லப்படுகிறது.
நீங்கள் அந்த வார்த்தைகளை உங்களுக்குள் ஊடுருவ அனுமதித்தால், அந்த வார்த்தைகள் ஞானமடைதலின் முதல் துளியை உங்களுக்கு நேரடியாகவே கொடுக்க முடியும்.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணர் சொல்கிறார், "நான் இந்த யோகத்தை விவஸ்வான் எனப்படும் சூரியனுக்குக் கொடுத்தேன். விவஸ்வான் மனிதகுலத்தின் தந்தையாகிய மனுவுக்கு உபதேசித்தார். மனு இந்த ஞானத்தை இக்ஷ்வாகுவுக்கு அளித்தார்.''
இங்கே கிருஷ்ணர் மரபுவழியை, வம்சாவழியை சீடர்கள்மூலம் கொடுக்கிறார். குரு-சீடர் பரம்பரையை அவர் வழங்குகிறார்.
"ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப (4.2) -காலப்போக்கில் அந்த யோக விஞ்ஞானம் காணாமல் போய்விட்டது," என்று அவர் சொல்கிறார்.
| உபநிஷத் என்கிற ஸம்ஸ்க்ரு’த சொல்லிற்கு 'குருவின் ஸாந்நித்யத்தில் அமர்ந்திருத்தல்' |
இந்தப் பூர்ணத்வ யோக விஞ்ஞானம் ஏன் மறைந்துபோய்விட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நுட்பத்தைக் கேட்கும் சீடர் பூர்ணத்வ உணர்வில் இல்லாமலும், கேட்பதற்குத் தயாராக இல்லாமலும் இருக்கும்போது, இயற்கையிலேயே அந்த நுட்பம் ஒரு சடங்காக மாறிவிடும்.
நுட்பத்திற்கும் சடங்கிற்கும் இடையே ஒரேயொரு வித்தியாசம்தான் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருங்குவித்தலுடனும் ஸ்ரத்தையுடனும் செய்யப்படும்போது, சாதாரண சடங்கும் ஒரு பெரிய தியான நுட்பமாக மாறி, உங்களை ஜீவன்முக்திக்கு அழைத்துச்செல்லும்.
ஒருங்குவித்தலோடு செய்யாமல், சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதை ஒரு நடைமுறை வழக்கமாகச் செய்தால், மிகச்சிறந்த தியான முறையும் ஒரு சடங்காக மாறிவிடும்.
ஒரேயொரு ஞானமடையாத சீடர் இருந்தால் போதும், காலப்போக்கில் அந்த முழு அறிவியலும் அழிந்துவிடும்.
பிரச்சினை என்னவென்றால், உங்கள் குரு ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கும்போது, நீங்கள் சரியான தகுதியை அடையாமல் அவருடைய இருக்கையில் அமரும்போது, நீங்கள்தான் மிகவும் அபாயகரமான மனிதராக இருக்கிறீர்கள். உங்களிடம் ஞானத்தைத்தவிர மற்ற அனைத்தும் இருக்கும்.
ஒரு ஆன்மிக இயக்கத்தை உருவாக்கும் மனிதர், அதைத் தம்முடைய அன்பிலிருந்தும் கருணையிலிருந்தும் வெளிப்பட்ட வளப்படுத்தும் ஞான சக்தியின் மூலம்தான் உருவாக்குகிறார்.
உபநிஷத்-அனுபவப் பரிமாற்றம்
நம்முடைய வேத குருமார்கள், வாய்மொழி மூலமாகவே ஸத்யங்களைப் பரிமாற்றம் செய்தனர். சீடர்கள் குருவின் ஸாந்நித்யத்தில் அமர்ந்து அவற்றைக் கேட்டனர். இதையே உபநிஷத் என்கிறோம்.
உபநிஷத் என்கிற ஸம்ஸ்க்ரு'த சொல்லிற்கு 'குருவின் ஸாந்நித்யத்தில் அமர்ந்திருத்தல்’ என்று பொருள்.
சீடர்களின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக, குரு, தம் உயர் விழிப்புணர்வு சக்தி ஸாந்நித்யத்திற்குள் சீடர்களை அமரச்செய்து, அவர்களும் அதே உணர்வைப்பெற்று, அதை வெளிப்படுத்தி வாழ வேண்டும் என்பதற்காக தம் மூளை நரம்பணு செயல்பாட்டை (மீஞூதணூணிண ச்ஞிணாடிதிடிணூதூ) சீடர்களின் மூளை நரம்பணுக்களிலும் பிரதிபலிmockச் செய்கிறார். இதன்மூலம் மாபெரும் ஸத்யங்களை, தத்துவங்களை சீடர்களுக்கு அனுபவமாகப் பரிமாற்றம் செய்கிறார்.
இவ்வாறே கிருஷ்ணர், சூரியனுக்கும் விவஸ்வானுக்கும் இந்த ஸத்யங்களை அனுபவமாகத் தந்தார். இப்பொழுது அர்ஜுனனுக்கும் தருகிறார்.
அதனால்தான் மீண்டும் மீண்டும் நமது உபநிஷதங்கள் வாழும் ஞானிகளிடம் செல்லுமாறு வற்புறுத்துகின்றன.
நமது புத்தகங்கள் அனைத்தும் ஆலோசனைப் பெட்டகங்களே! (ஞூச்ணாதச் டூண்).
தங்களால் ஞானத்தைக் கொடுக்கமுடியாது என்பதையும் தாங்கள் வெறும் ஆலோசனை நூல்கள் மட்டுமே என்பதையும் தாங்களே இறுதி லக்ஷியம் அல்ல என்பதையும் மிகவும் தைரியத்துடன் ஒப்புக்கொண்டு, அதைத் துணிவுடன் தெளிவாக அறிவிக்கிற ஒரே நூல்கள் வேதங்கள் மட்டுமே!
வெளியே தேடிமுடித்தால்தான் உள்ளே நுழையமுடியும்
இங்கே கிருஷ்ணர், ராஜர்ஷ்யோ விது: - என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அதன் பொருள் -'இந்த யோகம் ராஜரிஷிகளுக்குக் கொடுக்கப்பட்டது, சாதாரண ஞானிகளுக்கு
நமது புத்தகங்கள் அனைத்தும் ஆலோசனைப் பெட்டகங்களே!
அல்ல' என்பதாகும்.
அவர்களால்தான் இந்த யோகத்தை உள்ளவாறே பாதுகாக்க முடியும். தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், ஞானமடைந்த ஒருவர், அரசராக இருந்தாலோ அல்லது ஒரு அரசர், ஞானமடைந்தவராக இருந்தாலோ மட்டுமேதான் ஆன்மிகத்தின் முழுமைத்தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
பொருள்சார்ந்த உலகின் செல்வத்தை அனுபவித்த பணக்காரர்களால் மட்டுமே ஆன்மிகத்தின் பொருளையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
அரசர் மட்டுமே வெளி-உலகில் முழுமையான விரக்தியடைந்திருக்க முடியும். அதனால் ஞானமடைவதற்கான பாதையில் நுழைவதற்கு அவரே பூர்ணத் தகுதி உள்ளவராகிறார். ஏனென்றால், வெளி-உலகில் இருக்கிற எந்த ஒன்றினாலும் தம்மை நிறைவடையச் செய்ய முடியாது என்று அவருக்குத் தெரியும். அவர் எல்லாவற்றையும் பார்த்து விட்டார். அனைத்து விதமான சௌகரியங்கள், புலனின்பங்கள், பிற சுகங்கள் இவற்றை அதன் உச்ச அளவிற்கு அனுபவித்தவர் அவர்.
“மிகப்பழைய யோகமாகிய, இறுதி ஞானமாகிய நித்ய ஆனந்தத்தில் நுழைவது பற்றித்தான் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருக்கிற காரணத்தால், இந்த யோகத்தின் மிகஉயர்ந்த இரகசியத்தைப் புரிந்துகொள்வாய்,” என்று அவர் சொல்கிறார். கிருஷ்ணருடன் உணர்வுரீதியாகத் தொடர்புகொள்ளாத ஒருவரால் இந்த உயர்ந்த இரகசியத்தை உள்வாங்க முடியாது.
இதை மிக ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இறுதி ஸத்யம் என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. தர்க்க மனப்பான்மை கொண்டவராக நீங்கள் இருந்தீர்களானால், உங்களால் கடவுளிடம் பேசமுடியாது.
ஸத்யத்தை வெளிப்படுத்த,
அதனைக் கேட்கும் மக்களின்
இயல்புதான் முக்கியமேதவிர,
மக்களின் எண்ணிக்கை அல்ல.
இங்கே ஸத்யத்தை உள்வாங்குவதற்கான ஒரே தகுதி பக்தfabricதான்.
அதனால்தான் அவர், “பக்தோண்ஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம் (4.3) -நீ எனது பக்தனாகவும் நண்பனாகவும் இருப்பதாலும் மிகவும் நெருங்கியவனாக இருப்பதாலும் இப்போது நான் உனக்கு இந்த இரகசியங்களைச் சொல்கிறேன். நீ என்னைச் சேர்ந்தவன்,” என்று சொல்கிறார்.
அந்தக் காரணத்தினால்தான் அவர் பக்தோஸி என்கிற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். “நீ எனது பக்தன், நீ எனது நண்பன்,” என்று சொல்கிறார். ஸகா என்றால் நண்பன் என்று அர்த்தம்.
நாம் இப்போது கிருஷ்ணர் போதித்த யோக விஞ்ஞானத்துக்குள் நுழைவோம். நிறைவான, தளர்வான, திறந்த மனநிலையில் கேட்கும் உணர்வோடு அமர்ந்திருங்கள்.
அதனால், நாம் சிறிதுநேரம் மிக உயர்ந்த ஜ்ஞானகுருவாகிய கிருஷ்ணர்மீது த்யானம் செய்வோம். அவரது வார்த்தைகள், நம்முடைய இருப்புத்தன்மையை ஊடுருவிச்செல்ல அனுமதிக்குமாறு அவரை வேண்டிக்கொள்வோம். அவர் நமது உணர்வுநிலையில் தங்கி இருக்கட்டும். அவர் நம்மை இறுதி பேரானந்தத்திற்கு அழைத்துச்செல்லட்டும்.
யுகந்தோறும் மீண்டும் மீண்டும் பிறப்பேன்(4.4 -4.8)
அர்ஜுனனின் கேள்விக்கு மறுமொழியாக, கிருஷ்ணர் இந்தச் செய்தியை வழங்குகிறார்.
“சூரியக் கடவுள் உங்களைவிட வயதில் மிகவும் மூத்தவர். வயதில் இளையவரான நீங்கள் இந்த யோகத்தை அவருக்கு ஆரம்பத்திலேயே உபதேசித்தீர்கள் என்பதை எப்படி நான் புரிந்துகொள்ள முடியும்,” என்று கேட்கிறார்.
அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒரே வயதுடையவர்கள். ஆனால் இப்போது கிருஷ்ணர் திடீரென்று ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே அவர் இந்த யோகத்தைச் சூரியக் கடவுளுக்குக் கொடுத்ததாகச் சொல்கிறார். அதனால் இப்போது அர்ஜுனனுக்குக் கிருஷ்ணரின் வார்த்தைகளை நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
இப்போதுதான் அவர் அர்ஜுனனிடம் தம் தெய்வத்தன்மையை முதன்முறையாகப் பிரகடனப்படுத்துகிறார். இந்த மொத்தக் கீதையுமே ஒரேயொரு மனிதருக்குத்தான் வழங்கப்பட்டது. ஸத்யத்தை வெளிப்படுத்த, அதனைக் கேட்கும் மக்களின் இயல்புதான் முக்கியமேதவிர, மக்களின் எண்ணிக்கை அல்ல.
ஒரு சீடர் தயாராக இல்லாதபோது, குரு தன்னைத் திறந்துவைக்க முடியாது, இப்போது அந்தச் சீடர் தயாராக இருக்கிறார். உடனே கிருஷ்ணர் தம்முடைய இயல்பை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். இப்போது கிருஷ்ணர் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்குகிறார்.
பகவான் சொல்கிறார், “அர்ஜுனா, நிறைய நிறைய பிறப்புகள் நீயும் நானும் கடந்திருக்கிறோம். என்னால் அவற்றை எல்லாம் நினைவில்கொள்ள முடியும். ஆனால் உன்னால் முடியாது.”
பிறகு அவர் சொல்கிறார்: “நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், அனைத்து உயிரினங்களுக்குக் கடவுளாக இருந்துங்கூட, ஸம்பவாமி ஆத்ம மாயயா - எனது மாயா ஸக்தியை உபயோகித்து, என் இயல்பை வசப்படுத்தி மீண்டும் மீண்டும் அவதரிப்பேன்!”
மக்களை வழிநடத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் அவர் இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் பல்வேறு உருவங்களில் தோன்றுகிறார் என்பதை அவர் உணர்த்துகிறார்.
சாதாரண மக்கள் மாயையின் பிடியில் உள்ளதால், அதன் பொருட்டு அவர்கள் பிறவி எடுக்கிறார்கள். ஆனால் மாயை கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர் அவருடைய விருப்பத்தினால் மட்டுமே பிறவி எடுக்கிறார்! ஆனால் மீண்டும் மீண்டும் நாம்தான் அவரைத் தவறவிட்டு விடுகிறோம்.
நாம் அனைவரும் புத்தரை வென்றோம் (இணிணணூதுணூ), கிருஷ்ணரை வென்றோம், இராமகிருஷ்ணரை வென்றோம், இரமண மகரிஷியை வென்றோம், அதனால்தான், நாம் மீண்டும் மீண்டும் இங்கு, இந்தப் பூமியில் இருக்கிறோம்!
நம்மை உயர்த்தவும், நமக்கு வழிகாட்டவும், நம்மை வளப்படுத்தவும் கீழிறங்கி இந்தப் பூமிக்கு அவர்கள் மீண்டும் மீண்டும் வரநேரிடுகிறது.
'நான் உடலை எடுப்பதில்லை' என்பதை
நீங்கள் புரிந்துகொண்டீர்களானால்,
நீங்களும் உடலை எடுக்க மாட்டீர்கள்!
- ஸ்ரீகிருஷ்ணர்
ஒரு நம்மைக் கடவுளாக்கிட வந்த கடவுளின் இரகசியம்
கிருஷ்ணரின் அடுத்த உபதேசம் இதுதான் என்று அடுத்து வரும் இந்த இரண்டு ஸ்லோகங்களைச் சொல்லலாம். அவற்றைப் புரிந்துகொண்டால், பிறகு கீதை முழுவதும் மட்டுமின்றி, அனைத்து ஆன்மிக திருமறை நூல்களையும் உணர்ந்து, புரிந்துகொள்ள முடியும்.
கிருஷ்ணரைப்போல் துணிச்சல் உள்ள ஒருவரால்தான் இந்த ஸத்யத்தை வெளியிட முடியும்:
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத /
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ரு'ஜாம்யஹம் // 4. 7
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ரு'தாம் /
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே // 4. 8
எப்போதெல்லாம் தனி-மனித விழிப்புணர்வுநிலை குறைந்து, கூட்டு-விழிப்புணர்வுநிலையும் குறைகிறதோ, எப்போதெல்லாம் சமுதாயத்தில் விழிப்புணர்வற்றநிலை அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தர்ம ஸம்ஸ்தாபநார்தாய - தர்மத்தை நிலைநாட்டுவதற்கு, ஸம்பவாமியுகே யுகே - நான் யுகந்தோறும் அவதரிப்பேன்.
இங்கே கிருஷ்ணர் அறிவிக்கிறார், "தவற்றைத் திருத்துவதற்காக நான் மீண்டும் மீண்டும் கீழே வருகிறேன்!"
இந்த வாக்குறுதியை கிருஷ்ணர் தருவதன்மூலம் ஞான குருமார்களின் தலைமுறையை, ஞானமடைதலின் சாத்தியத்தை, முழு யோக அறிவியலை எதிர்காலத்திற்காக திறந்து வைக்கிறார்.
காலப்போக்கில் நேர்மறை- எதிர்மறைதன்மைகளில் ஏற்றத்தாழ்வு
வேறுயாரும் உங்கள் பிறப்பை
முடிவுசெய்வதில்லை. நீங்கள்தான்
அதை முடிவுசெய்கிறீர்கள்.
நிகழ்கிறது. ஆனாலும், இறுதியில் தர்மமே வெல்லும். இதுவே மொத்த மனித குலத்திற்கும் கிருஷ்ணர் அளிக்கும் உத்திரவாதம்.
இந்த ஒரு ஸத்யத்தைப் புரிந்துகொண்டால் போதும், அந்தப் புரிதலே நேரடியாக உங்களை ஞானியாக்கிவிடும்.
ஓ நீங்கள் என்னை அறிவது நீங்கள் விடுதலையடைவதற்கே! (4.9 - 4.12)
இது ஒரு விந்தையான அறிக்கை: "எனது தோற்றம் செயல்கள் இவற்றின் இயல்பைப் புரிந்துகொண்டவர்கள் பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்."
"தெய்வத்தன்மையான எனது தோற்றம், செயல்கள் இவற்றில் உள்ள ஸத்யத்தை நீ புரிந்துகொண்டாயானால், நீ உடலைவிட்டவுடன் மற்ற சாதாரண மனிதர்களைப்போன்று பிறப்பெடுக்கமாட்டாய்; தெய்வத்தன்மையான எனது இயல்பைப் புரிந்துகொள்ளும்போது, நீயும் அதே தெய்வத்தன்மையைப் பெறுவாய்," என்று சொல்கிறார்.
'நான் உடலை எடுப்பதில்லை' என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களானால், நீங்களும் உடலை எடுக்க மாட்டீர்கள். 'நான் சுதந்திரமானவன்' என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களானால், நீங்களும் சுதந்திரமானவர்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இது எப்படிச் சாத்தியம்?
பூதாநாம் ஈஶ்வரோSபி என்ற வார்த்தைகள் மிகவும் அழகானவை; 'அனைத்து ஜீவராசிகளுக்கும் நானே கடவுள்' என்பதுதான் அதன் பொருள்.
பிருந்தாவனத்திலிருந்த ஒரு சாதாரண மாடு மேய்க்கும் சிறுவன் இதைச் சொல்கிறார்! கிருஷ்ணர் மிகுந்த பரவசமான, தன்னியல்பான வாழ்க்கையை வாழ்ந்தார். 'அவர் யார்' என்று அறிவது அவ்வளவு சுலபமல்ல. 'அவர் யார்' எனும் ஸத்யத்தை கிருஷ்ணரே நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
என்னால் முடியும்போது உங்களால் ஏன் முடியாது
இங்கு அவர், "நான் கடவுள், நான் முடிவானவன்," என்று சொல்லும்போது, "நான் முயன்று பெறும்போது, ஏன் உங்களால் முடியாது?" என்கிற சாத்திய நிலையைப் பற்றிச் சொல்கிறார்.
ஒரு விதை வெடித்து மரமாவதற்குப் பயந்துகொண்டிருக்கும்போது, ஒரு விதையாக இருந்து, இப்போது மரமாக ஆகியுள்ள ஒரு மரம், "தைரியசாலியாக இரு. கவலைப்படாதே, நீ என்றும் அழிய மாட்டாய், வெடித்துவிடு, என்னைப் போல் நீயும் ஒருபெரிய மரமாக ஆவாய்!" என்று அந்த விதைக்குத் தைரியம் கொடுப்பது போல்தான் கிருஷ்ணர் நமக்கு, "நீங்களும் என்னைப்போல் ஸத்யத்தை உணர்ந்தனுபவித்து, கடவுளாக ஆகலாம்," என்று ஸ்ரத்தையின் துணிவைக் கொடுக்கிறார்.
ஒரு விதை வெடித்து மரமாவதற்கு, எப்போதும் பயந்துகொண்டுதான் இருக்கிறது.
"நான் வெடித்து, அந்த மரம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நான் மரணம் அடைந்துவிடுவேனே," என்றுதான் அந்த விதை எப்போதும் நினைக்கிறது.
ஆனால் உள்ளிருக்கும் மரமோ விதையைப் பார்த்து, "நீ வெடித்தால் அன்றி நான் வளரமுடியாது?" என்று சொல்கிறது.
யாராவது ஒருவர், அந்த விதைக்கு தைரியம் கொடுக்க வேண்டும். இங்கே கிருஷ்ணர் முடிவான உபதேசத்தைக் கொடுத்து, அந்த தைரியத்தைக் கொடுக்கிறார்.
ஜன்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத: /
த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோணர்ஜுந // 4. 9
அதன் பொருள், "என்னுடைய பிறப்பு-இறப்பின் இரகசியத்தை நீ புரிந்துகொண்டால், உனது பிறப்பு-இறப்பிலிருந்து நீ விடுதலைபெறுவாய் அர்ஜுனா," என்பதே!
கிருஷ்ணரின் பிறப்பு-இறப்பின் இரகசியத்தைப் புரிந்துகொண்டால் நாம் எப்படி பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபடுவோம்?
இப்போது நாம் கிருஷ்ணரின் பிறப்பு-இறப்பின் இரகசியத்தையும், நாம் எவ்வாறு பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் செல்கிறோம் என்பதையும் பார்ப்போம்.
நமது தர்க்கத்தைத் தாண்டியது சத்தியம்!
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விடுத்த அறிக்கையைப் போல், இப்போது நானும் அதே அறிக்கையை உங்கள் அனைவருக்கும் விடுக்க வேண்டும். இங்கு நான் தர்க்கத்தைத் தாண்டிய ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறேன். எப்பொழுதெல்லாம் தர்க்கத்தைத் தாண்டிய விஷயம் சொல்லப்படுகிறதோ, எப்பொழுதெல்லாம் முடிவான ஸத்யம் சொல்லப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதை நாம் முழுமையாகக் கேட்பதில்லை.
நாம் துணிச்சல் உடையவராக இருந்தால், ஸத்யத்தைச் சொல்பவருடன் சண்டையிடுவோம், வாதிடுவோம் அல்லது அவரைக் கேள்வி கேட்போம். நமக்கு அந்த அளவிற்குத் துணிச்சல் இல்லையென்றால் நாம் அந்த வார்த்தைகளை நம்முள் நுழைய அனுமதிக்கமாட்டோம்.
உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்கிறேன், ‘நாம் யாரையும் நம்புவதில்லை’ என்பதே அது!
அதனால்தான் ஸத்யத்திற்குள் நுழைவதற்கு முன், உங்களுடன் பேசுவதற்கு முன், ஒருங்குவித்தலுடனும் ஸ்ரத்தையுடனும் நான் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறேன்: “நான் பேசுவதெல்லாம் ஸத்யம்!”’
உங்களால் இந்த ஸத்யத்தை உள்வாங்க முடிந்தால், உணர்வுமாற்றம்
ஞானகுருமார்கள்,
அன்பு, கருணையின் காரணமாக
உடல் எடுக்கிறார்கள்.
பெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் நான் இங்கு அனுபவத்தால் மட்டுமே உணர்ந்த ஸத்யத்தைப் பேசுகிறேன்; அது தர்க்கத்தின்படி உண்மையாக இருக்க முடியாது.
இப்போது நாம் நுழைந்து கொண்டிருக்கும் அறிவியலைப் பற்றிய முன்னுரையை உங்களுக்கு நான் கொடுக்க விரும்புகிறேன்.
ஞானத்தையும் விடுதலையையும் தரக்கூடிய வழிகாட்டிகள்
உடலைவிடும்போது துல்லியமாக என்ன நிகழ்கிறது?
நீங்கள் உடலைவிடும்போது, அந்தக் கணமே ஸ்தூல உடல் மரணம் அடைந்து ஓய்வுபெறும் அந்தக் கணமே, ஆன்மா உடலைவிட்டுச்செல்கிறது.
அந்த சமயம் நீங்கள் வாழ்ந்த 70-80 வருட வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு, உங்கள் வாழ்வில் மிக உயர்ந்த இன்பம் என்று எதை நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த விருப்பத்தின் அடிப்படையில்தான்உங்கள் அடுத்த பிறவியைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
தயவுசெய்து மிகத்தெளிவாக இருங்கள், வேறுயாரும் உங்கள் பிறப்பை முடிவுசெய்வதில்லை. நீங்கள்தான் அதை முடிவுசெய்கிறீர்கள். அது உங்கள் தனிப்பட்ட ஆன்மாவின் மிகத்தெளிவான, உணர்வுப்பூர்வமான முடிவு.
அதன் முழு இரகசியமும் இதுதான். சாதாரண மனிதன் அச்சம் ஆசையின் அடிப்படையில் பிறக்கிறான். அதனால்தான் அவனுடைய முழு வாழ்வும் அச்சம் ஆசை இவற்றிற்கு உட்பட்டு இயங்குகிறது. அவனுடைய முழு வாழ்வும் அச்சம் ஆசை இவற்றில் செல்கிறது.
ஜ்ஞானகுருமார்கள், அன்பு, கருணையின் காரணமாக உடல்
உங்கள் வாழ்வில் ஆனந்தத்தை வெளிப்படுத்த மட்டுமே
எடுக்கிறார்கள்.
அதனால்தான் கிருஷ்ணர் சொல்கிறார், ஆத்ம மாயயா, என்னுடைய ஸக்தியினாலும் எனது அன்பு, கருணையினாலும் நான் இந்தப் பூமியை வந்தடைகிறேன்.
இதனை அடுத்து பின்தொடரும் கேள்விகள் இவை:
இந்த ஸத்யத்தைத் தெரிந்துகொள்வதன்மூலம் நாம் எப்படி விடுதலையடைய முடியும்? இது, நம் வாழ்வில் நேரடியாக எந்தமுறையில் பயன்படப்போகிறது? அவற்றுக்கான பதில்தான் அடுத்த பகுதி.
நீங்கள் ஓர் அவதாரமாகலாம்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நான் இறப்பு பிறப்பு என்ற வார்த்தைகளைச் சொல்லும்போது, நம் வாழ்வின் இறுதியில் நாம் மரணம் அடைவதைப் பற்றி சொல்லவில்லை. ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கி எழும் இறப்பு பிறப்பைப் பற்றிச் சொல்கிறேன்.
ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கச் செல்லும்போது, நீங்கள் இறக்கிறீர்கள்! நீங்கள் மறுநாள் எழுந்துவரும்போது, மீண்டும் இன்னொரு முறை நீங்கள் பிறக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் உடலை எடுக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் உடலைவிடுகிறீர்கள்.
இன்றுவரை தினமும் காலையில் எப்படி நீங்கள் உயிர் பெற்றீர்கள்? எப்படி இந்த உடலை எடுத்தீர்கள்? என்பதை அப்படியே ஆழமாகப் பாருங்கள்.
ஆசையாலோ அச்சத்தாலோ எழுந்த ஏதோ ஒரு எண்ணம்தான், உங்களுக்குள் முதலில் எழும். உடனே நீங்கள் உங்கள் படுக்கையை விட்டுக் குதித்தெழுகிறீர்கள். நான் சொல்வது சரிதானே?
மிகத்தெளிவாக இருங்கள், நீங்கள் உடலை எடுக்கும் அந்த நேரம்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவை அனைத்தும் முழு விழிப்புணர்வு நிலையையும் மாற்றியமைக்கக்கூடிய, மிக நுட்பமான, புதிர் நிறைந்த அடிப்படை இரகசியங்கள்.
விடியற்காலை, எந்த எண்ணத்தில் நீங்கள் உங்கள் உடலில் நுழைகிறீர்களோ, எந்த எண்ணம் உங்களை உடல் எடுக்கச் செய்கிறதோ, அந்த எண்ணம்தான் உங்களின் முழு விழிப்புணர்வு நிலையில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த முதல் எண்ணம் அந்த நாள் முழுவதும் உங்கள் விழிப்புணர்வு நிலையில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆனால் ஞ்ஞானகுருமார்கள் அன்பினாலும் கருணையினாலும் உடலை எடுக்கிறார்கள். அவர்களுடைய கருணையைப் பொழியவும், தங்களை இந்த முழு உலகத்துடன் பங்கிட்டுக்கொள்ளவும் அவர்கள் திரும்பிவருகிறார்கள். நீங்கள் இதைப் புரிந்துகொண்டு, காலையில் கண் விழிக்கும்போது எழுகிற உங்கள் முதல் எண்ணத்தை மாற்றி அமைத்தீர்களானால், உங்களுடைய முழு விழிப்புணர்வு நிலையையும் மாற்றி அமைத்துவிடமுடியும்.
நீங்கள் படுக்கையை விட்டு எழும்போது, உங்கள் முதல் எண்ணம் அன்பு, கருணை இவற்றுடன் தொடர்புடையதாக இருக்கட்டும்! ஆழ்ந்த, தெய்விக, ஆன்மிக எண்ணத்துடன் தொடர்புடையதாக இருக்கட்டும்!
உங்கள் வாழ்வில் ஆனந்தத்தை வெளிப்படுத்த மட்டுமே எழுந்திருங்கள். வாழ்வு உங்களது பிறப்புரிமை என்று நினைக்காதீர்கள்.
உங்கள் தனித்துவமான அஹங்காரத்திற்கு, உங்கள் பிறப்பை முடிவுசெய்யும் உரிமை கிடையாது. அது ஒரு பரிசு. அதனால் ஒவ்வொரு நாளும் இறைவனின் ஆசீர்வாதமே! படுக்கையை விட்டு எழும்போது, இந்த உடலை எடுக்கும்போது இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!
உங்கள் முழு விழிப்புணர்வு நிலையின்தன்மையே மாறிவிடும். அதன்பின் நீங்கள் ஒரு அவதாரமாவீர்கள்.
இங்கு, நீங்கள் கிருஷ்ணராக மாறுவது எப்படி, கிருஷ்ணரின் விழிப்புணர்வு நிலைக்குள் நுழைவது எப்படி, ஒரு அவதாரமாவது எப்படி என்ற உத்தியை, நுட்பத்தை உங்களுக்கு நேரடியாகக் கொடுக்கிறேன்.
நீங்கள் அன்பினாலும் கருணையினாலும் உடலை எடுத்தீர்களானால், நீங்கள் ஒரு அவதாரமாகிறீர்கள், நீங்கள் தெய்வமாகிறீர்கள். ஆசையினாலும் அச்சத்தினாலும் உடலை எடுத்தீர்களானால், நீங்கள் மனிதராகிறீர்கள்.
நீங்கள் அவதாரமாகும்போது உங்கள் முழு வாழ்வும் முடிவற்ற உண்மையான ஆனந்தமாக மாறும். உங்கள் முழு வாழ்வும் வேறு உணர்வுநிலையில் நடைபெறும்.
துன்பங்கள் மறைந்துவிடும் என்னோடு கரைந்துவிட்டால்...
இங்குக் கிருஷ்ணர் அவரை அடைவதற்கான, அவரை உணர்வதற்கான - ஜந்ம கர்ம ச மே திவ்யம் (4.9) -உத்தியைக் கொடுக்கிறார். கோபம் அச்சம் இவற்றினால் ஏற்படும் பந்தத்திலிருந்து விடுதலைபெற்ற வாழ்வை நாம் வாழ முடிந்தால், அவரில் நாம் கரைந்து விடமுடியும்; அவரை அடைந்துவிட முடியும்.
ஒவ்வொரு செயலும் அதற்கு எதிர்ச்செயலை உருவாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஒரு விதையை விதைக்கும்போது, அந்தச் செயல் ஒரு முழுமையான செயலாகத் தோன்றினாலும் உண்மையில் அது முழுமையான செயல் அல்ல. ஒரு இயக்கத்தில், ஒரு இயங்கு முறையில் நாம் ஒரு சுழற்சியை, ஒரு சங்கிலித் தொடர் நிகழ்ச்சியை இணைக்கிறோம். அந்த விதை முளைத்து ஒரு செடியாகவோ, மரமாகவோ ஆகிறது.
இங்குக் கிருஷ்ணர் கர்ம பந்தத்தை அறுத்து, அதிலிருந்து
கிருஷ்ணரை அடைவதற்கு
ஒருவர் த்ரிகுண ரஹித - மூன்று
குணங்களையும் கடந்தவராக இருக்கே
தப்பிப்பதற்கும் உண்மையை உணர்வதற்கும் ஒரு நுட்பத்தை வழங்குகிறார்.
எல்லாமே நீங்கள்தான்.
இந்த உலகின் பல்வேறு
உருவங்களையும் வெளிப்பாடுகளையும்
மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.
கிருஷ்ணர், அவரைப்போன்று நாமும் பூர்ணத்வத்தில் இருப்பதற்கு ஒரு மார்க்கத்தை நமக்கு அளிக்கிறார். அவர், “மந்மயா மாமுபாஸ்ரிதா: (4.10) -என்னில் மூழ்கி இருங்கள், உங்களுக்குக் கோபம் இருக்காது, பயம் இருக்காது. அனைத்து செயல்களும் பிணைப்பின்றி இருக்கும். பூதா மத்பாவமாகதா: (4.10) -இந்த முறையில் நீ தூய்மையாகி, என்னை உணரலாம்,” என்று சொல்கிறார்.
இந்தப் பாதையைப் பின்பற்றி அநேக மக்கள் கடந்தகாலத்தில் ஜீவன்முக்தி நிலையை அடைந்திருக்கிறார்கள் என்ற வாக்குறுதியையும் உறுதியான சான்றையும் தருகிறார்.
நீங்கள் இதைச் செய்தால், ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம் என்று அவர் நமக்குச் சொல்லவில்லை. அவர் நேரடியாகவே நேர்மறை வாக்குறுதியைக் கொடுக்கிறார். “இதைச் செய்யுங்கள், நீங்கள் அடைவீர்கள், ஒருவர் இருவர் அல்ல. பஹவோ ஜ்ஞானதபஸா (4.10) -அநேக மக்கள் அவ்வாறு செய்து என்னை உணர்ந்திருக்கிறார்கள்!” என்கிறார்.
இங்கே கிருஷ்ணர், “என்னுடைய ஒவ்வொரு பக்தருடைய தேவையையும் நானே கவனித்துக்கொள்கிறேன்,” என்று சொல்வதன் மூலம், இதற்குமுன்தான் சொன்னவற்றை மீண்டும் உறுதிசெய்து வாக்குறுதி அளிக்கிறார்.
மிக மிக கருணை உள்ள ஒருவரால்தான், மிக மிக கருணையுடன் எல்லோரிடத்தும் கவனம் செலுத்தும் ஒருவரால்தான், இந்த வாக்குறுதியை அளிக்க முடியும்.
ஒபுரிந்துகொள்ளுங்கள், செயலால் பாதிக்கப்படாமல் இருங்கள் (4.13 -4.16)
இப்போது, நாம் ஜாதி அமைப்பு பற்றிப் பார்க்கவுள்ளோம். இப்போது கிருஷ்ணர் சொல்கிறார், “மூன்று குணங்களின் பங்கீட்டைப்பொறுத்து, நான் நான்கு ஜாதிகளை உருவாக்கியுள்ளேன்.”
குணம் என்ற வார்த்தைக்குப் பொருள், நாம் பிறக்கும்போதே நம்மோடு ஒட்டிக்கொண்டு வரும் 'தன்மை' அல்லது 'இயல்பு' என்பதாகும்.
அடிப்படையாக குணங்கள் மூன்று இருக்கின்றன. அவை: ஸத்வம் - தூய்மை, ரஜஸ் - செயல், தமஸ் - செயல் இன்மை.
கேளுங்கள், கிருஷ்ணர் இந்த வார்த்தைகளை, 'மூன்று குணங்களின் பங்கைச்சார்ந்தது' என்றுதான் பயன்படுத்துகிறார். அவர், 'பிறப்பைச்சார்ந்தது' என்று சொல்லவில்லை.
“அடிப்படையாக நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள். எந்தக் குணத்தின் ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் இருக்கிறதோ, அந்த ஆதிக்க குணத்தின் அடிப்படையில்தான் ஒருவருடைய பண்பு அமையும்,'' என்று மாத்திரமே கிருஷ்ணர் சொல்கிறார்.
7 சரீரங்கள்

வர்ண அமைப்பில் நான்கு பிரிவுகள் இருந்தன.
அறிஞர்கள், சமய குருமார்கள் அனைவரும் ப்ராஹ்மணர்கள்.
வீரம், பேராசை மற்றும் உடற்பலங்கொண்ட படைவீரர்கள் அனைவரும் க்ஷத்ரியர்கள்.
வணிகம் செய்யும் சமுதாயத்தினர், வியாபாரிகள், வலுவான தொழில் திறமை உடையவர்கள் யாவரும் வைஸ்யர்கள்.
உடல்ரீதியாகச் செயல்திறன், செயலாற்றல் உடையவர்கள் யாவரும் தொழிலாளிகள் அதாவது சூ'த்ரர்கள். மூன்று குணங்களையும் கடந்த ஒருவரால் மட்டுமே தம்முடைய நிலையை அடையமுடியும், விழிப்புணர்வின் உயர்ந்த நிலைகளை அடையமுடியும் என்றும் கிருஷ்ணர் மிகத்தெளிவாக அறிவிக்கிறார்.
கிருஷ்ணரை அடைவதற்கு ஒருவர் த்ரிகுண ரஹித - மூன்று குணங்களையும் கடந்தவராக இருக்கவேண்டும். பிறகு அவர் செயல்களைச் செய்யாதவராகவும் ஜாதி அற்றவராகவும் குறிப்பிட்டதன்மையற்றவராகவும் ஆகிறார்.
உள் அடுக்காகிய நிர்வாண
ஶரீரத்தில் கடவுள், நீங்கள், நான்
அனைத்தும் ஒன்றே.
செயலற்றதன்மையில் செயல்... செயலில் செயலற்றதன்மை... (4.17 - 4.20)
இங்கே கிருஷ்ணர், கர்மண்யகர்ம ய: பஸ்யேதகர்மணி ச கர்ம ய: (4.18) - செயலில் செயலற்றதன்மையையும் செயலற்றதன்மையில் செயலையும் பார்க்கும் ஒருவர் பூர்ணத்வ நிலையை அடைகிறார் என்று சொல்கிறார்.
உங்களுக்குள் இருக்கும் 'நான்' செயல்களைச் செய்வதில்லை, 'புலன்கள்'தான் அவற்றின் இயல்புப்படி செயல்களைச் செய்கின்றன என்பதை நீங்கள் உணர்கிறபோதுதான், நீங்கள் பூர்ணத்வ நிலையை அடைகிறீர்கள். அதனால், இயல்பாகவே நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதை மிக அழகாக, எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் செய்யலாம்.
அதைத்தான் கிருஷ்ணர், செயல்படுதல், செயல்படாமல் இருத்தல் என்று சொல்லும்போது குறிக்கிறார்.
உங்கள் ஸ்வபாவத்தின்படி நீங்கள் செயல்படாமல் இருக்கமுடியாது. ஒன்றும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்துகொண்டு இருந்தீர்களென்றால், நீங்கள் பகற்கனவாவது கண்டு கொண்டிருப்பீர்கள்!
நீங்கள் பகற்கனவு கண்டுகொண்டு, கற்பனை, சந்தோஷம் இவற்றுடன் கலந்த கவலை, துக்கம் இவற்றின் தண்டில் பிடிபட்டு இருந்தீர்களென்றால், நீங்கள் வெளிப்பார்வைக்குச் சுறுசுறுப்பாக, செயலாற்றும் திறனுடையவராகத் தோற்றம் அளித்தாலும், இது முற்றிலும் உபயோகமில்லாத சுறுசுறுப்பு.
உண்மையில், 'நான்' என்பது நிரந்தரமானது. உங்களிடம் இருக்கும் 'நான்', என்னிடம் உள்ள 'நான்', உங்களுக்கு அருகில் உள்ளவரிடம்
வளப்படுத்துவதற்காகவே வளப்படுத்துங்கள்! இருக்கும் ‘நான்’ இவையாவும் ஒன்றே. எல்லாமே நீங்களாக இருக்கும்போது அங்குப் பயப்பட என்ன இருக்கிறது? முரண்பாடு, பொறாமை, பயம் அல்லது ஆசை இவற்றைப் பற்றிய கேள்விக்கு இடம் ஏது?
எல்லாமே நீங்கள்தான். இந்த உலகின் பல்வேறு உருவங்களையும் வெளிப்பாடுகளையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். எப்படியானாலும் பந்தத்தின் பிணைப்பில் பிடிபடாமல் மகிழுங்கள்.
அதைத்தான் கிருஷ்ணர் இங்குச் சொல்கிறார். பற்றில்லாமல், ஆனால் அதே சமயத்தில் செயலில் முழுமையாக ஈடுபடுங்கள். உங்களுக்குள் முழுத் திருப்தியுடன் இருங்கள். பிறகு நீங்கள் தன்னிச்சையாக பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஒருங்கிணைந்து பாய முடியும்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு மகிழ்ச்சிகரமான செயலாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் முழுமையாக உங்களுக்குள் மையங்கொண்டு இருக்கிறீர்கள்.
உங்கள் உள்ளுணர்வு- அது ஹிரண்ய கர்ப்பம் (4.21-4.25)
பூர்ணத்வ உணர்வை உருவாக்குங்கள். உங்கள் மனப்பாங்குகளை நிறைவுசெய்யுங்கள். இதைவிட வேறொரு குறுக்கு வழி இல்லை. குறுகிய குறுக்கு வழியே பூர்ணத்வம் செய்வதுதான். அதனால், இதனைப் புரிந்துகொண்டு, பூர்ணத்வம் செய்து, ஒருங்குவித்தல் மற்றும் ஸ்ரத்தை உணர்வையும் உருவாக்குங்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்கள் உள்ளுணர்வு மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. அது ஹிரண்ய கர்ப்பம். கோள்கள் அங்கிருந்தே தோன்றுகின்றன. நீங்கள் தனி நபராக இருக்கலாம். ஆனால் உங்கள் உள்ளுணர்வு தனியானது அல்ல. இந்த மொத்தப் பிரபஞ்சத்தோடும் இணக்கமுடன் இணைந்திருப்பது. அதனால், நீங்கள், உள்ளுணர்வில் எதை நினைத்தாலும், அது பிரபஞ்சத்தில் நிஜமாகிறது, உங்கள் வாழ்வில் நிஜமாகிறது.
அடுத்த ஸத்யம்: உங்கள் உடல் வெறுமனே ஒரு உடல் இல்லை.
உண்மையில் அங்கு ஏழு அடுக்குகளாக அதாவது ஏழு உடல்கள் இருக்கின்றன.
முதல் அடுக்கு நமது ஸ்தூல ஸ்ரீரம் .இரண்டாவது ப்ராண ஸ்ரீரம். இவ்வாறு ஏழு உடல்கள் இருக்கின்றன. ஒரு பொது மையத்தைச் சுற்றியுள்ள வட்டங்கள் மூலம், இந்த ஏழு உடல்களை (ஆற்றல் அடுக்குகளை) உருவப்படுத்தலாம்.
ஸ்தூல ஸ்ரீரம் முதல் வெளிவட்டமாகவும் ஏழாவது அடுக்காக உள்வட்டத்தில் நிர்வாண ஸ்ரீரமும் இருக்கின்றன.
ஏழு ஸ்ரீரங்களின் படம்
நீங்கள், கடவுள், நான், இந்த மூன்றையும் வெளி வட்டமாக உள்ள ஸ்தூல ஸ்ரீர வட்டத்தில் மூன்று வெவ்வேறு புள்ளிகளாகக் குறிக்கலாம்.
ஸ்தூல ஸ்ரீர நிலையில், இந்தப் புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகமாக உள்ளது. நீங்கள் சிறிது உள்ளே ப்ராண ஸ்ரீரத்திற்கு வந்தால் இந்தத் தூரம் சிறிது குறைகிறது. நீங்கள் இன்னும் ஆழமாகச் செல்லச் செல்ல, இறுதியில் உள் அடுக்காகிய நிர்வாண ஸ்ரீரத்தில் இந்த மூன்றும் ஒன்றாகக் கரையும்.
தயவுசெய்து மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், உள் அடுக்காகிய நிர்வாண ஸ்ரீரத்தில் கடவுள், நீங்கள், நான் அனைத்தும் ஒன்றே. இவை மூன்றுக்கும் இடையே இடைவெளி இல்லை.
திரண்ட விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நீங்கள் என்பதை நீங்கள் உணர்ந்த அந்தக் கணமே வலி, துக்கம், மனச்சோர்வு, வியாதிகள் இவற்றைத் தாண்டிச்செல்வீர்கள்.
இதைப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் தனிப்பட்ட அடையாளத்துடனும் ‘நான் தனியானவன்' என்ற உணர்வுடன் உள்ளவரை நீங்கள் தொடர்ந்து துக்கப்படுவீர்கள்.
நீங்கள் கூட்டு உணர்வில் இருக்கும்பொழுது, உங்களுக்குள் ஒன்றுபட்டிருப்பீர்கள். தனி உணர்வில் இருக்கும்பொழுது, உங்கள் உணர்வையே பல துண்டுகளாக்கிவிடுகிறீர்கள். இறுதியில், ஆன்மிக நிலையில், 'நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையோடு ஆழமாக இணைக்கப்பட்டவர் என்று புரிந்துகொள்ளும்போது மட்டுமே, நீங்கள் அத்வைத உணர்வில், ஓர்மை உணர்வில் வாழ ஆரம்பிப்பீர்கள், உங்கள் இருப்புத்தன்மையின் பல பரிமாணங்களையும் திறந்து வைப்பீர்கள்.
இந்த ஒரு உடலுடன் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் நினைக்கவும் வளப்படுத்தவும் அனுபவித்துமகிழவும் முடியும். ஆனால் நீங்கள் கூட்டு விழிப்புணர்வில் கரைந்தால், நீங்கள் பல பரிமாணங்களையும், பல சாத்தியக் கூறுகளையும் உணர்வீர்கள். அதை இப்போது உங்களால் கற்பனைசெய்து பார்க்கக்கூட முடியாது!
வாழ்க்கையின்
சாரம் வளப்படுத்துதலே!
வாழ்வின் ஒரே நோக்கம் - உங்கள் வாழ்க்கையையும், மற்றவர்களின் வாழ்க்கையையும் பூர்ணத்துவத்துடன் வளப்படுத்துவதே!
வாழ்க்கையின் நோக்கமற்றதன்மையை உணர்ந்தவரே, தன்னையும் மற்றவர்களையும் வளப்படுத்தும் பலத்தைப் பெறுகிறார். அவரால் மட்டுமே, யத்ரு'ச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர: (4.22) - செய்கின்ற செயலுக்கு எவ்விதமான பலன் கிடைக்கப்பெற்றாலும், அதைக்கொண்டு திருப்தியோடு வாழ முடியும். இருமை உணர்வைக் கடக்க முடியும், பொறாமையை தாண்டிச்செல்ல முடியும்.
இந்த ஸத்யத்தை உணர்ந்தால், ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ரு'த்வாபி ந நிபத்யதே (4.22) - நீங்கள் செயல்களைச் செய்தாலும், அச்செயல்களின் வெற்றி-தோல்விகளால் பாதிக்கப்படாமல், பூர்ணত্ব உணர்வில் இருந்து அமைதியுடன் தளர்வாகச் செயல்பரிவீர்கள்.
ஷ்ரத்தை என்றால் உங்களின் உச்சபட்ச
சாத்தியங்களில் வாழ்வதற்கான
உங்களின் நம்பிக்கையையும்
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே (4.23) -வளப்படுத்துவதற்காகவே வளப்படுத்துபவர், இந்த ஞானத்திற்குள் கரைகிறார்.
கொடுக்க முடியாததைத் தியாகம் செய்வதே உன்னதத்திலும் உன்னதம் (4.26 -4.32)
கிருஷ்ணர், இங்குப் பல்வேறுவிதமான தியாகங்களைப் பற்றி - செல்வ தியாகம், உடல் தியாகம், மனதியாகம், ஆன்மிக தியாகம், மற்றும் செல்வம், உடல், மனம், ஆன்மிகம் இவை அனைத்தும் இணைந்த தியாகம் - என பலவிதமான தியாகங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
‘தியாகம்’ என்ற வார்த்தை, ‘ஏதோ ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கும் செயலைக்’ குறிப்பிடுவதற்காகச் சொல்லப்படும் சாதாரணமான வார்த்தை இல்லை. அது, ‘ஏதோ ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கும்போது நமக்குள்ள மனப்பாங்கு, எந்த உணர்விலிருந்து கொடுக்கப்படுகிறது?’ என்பவை பற்றிக் குறிப்பிடுவதற்காகச் சொல்லப்படும் வார்த்தை.
‘செயல்’, ‘மனப்பாங்கு’ இந்த இரண்டின் பொருளைப் பற்றிய புரிதல் மிகவும் முக்கியம்.
உங்களால் கொடுக்கமுடியாத ஒன்றை நீங்கள் கொடுக்கும்போதுதான், அது உண்மையான வளப்படுத்தும் தியாகமாகிறது.
ஒருவர் தமக்கு மிகவும் பிடித்த ஒன்றையோ அல்லது கொடுப்பதற்கு மிகவும் கஷ்டமான ஒன்றையோ தியாகம் செய்தால், அவர் முற்றிலும் மாறுபாடான தியாக நிலையை அடைந்து, அதன்மூலம்
