அத்தியாயம்-3: கர்ம யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் வாழ்வை வளமாக்கும் தீர்வு
பூர்ணத்வ வாழ்வை
வாழ்ந்தனுபவிப்பதற்கே வாழ்க்கை,
இலக்குகளை
விரட்டிக்கொண்டிருப்பதற்கு அல்ல!
வாழ்க்கைக்கென்று எந்த
உண்மையான நோக்கமும்
கிடையாது,
நாம் அடைய வேண்டிய
இலக்குகளை உருவாக்கும் கணமே,
பின்தொடர வேண்டிய
ஸ்லோகங்கள்
அத த்ருʼதீயோகுʼத்யாய:
கர்ம யோக:
ஏ
அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந ந
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஶவ நந 3.1
அர்ஜுனன் சொன்னது
3.1 அர்ஜுனன் சொன்னார், ஓ ஜனார்த்தனா, ஓ கேசவா, செயலைவிட அறிவாற்றல்தான் மேலானது என்று நீங்கள் நினைத்தீர்களென்றால், என்னை ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான போரில் ஈடுபடுத்துகிறீர்கள்?
வ்யாமிஶ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே ந
ததேகம் வத நிஶ்சித்ய யேந ஶ்ரேயோண்ஹமாப்நுயாம் நந 3.2
3.2 உங்களுடைய முரண்பாடான வார்த்தைகளால், என்னுடைய அறிவு குழம்பிப்போய் உள்ளது. எனக்கு எது சிறந்தது என்று தெளிவாகச் சொல்லுங்கள்.
ஶ்ரீபகவாநுவாச
லோகேண்ஸ்மிந்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயானக ந
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம் நந 3.3
ஸ்ரீ பகவான் சொன்னது
3.3 கிருஷ்ணர் சொன்னார், பாவமற்ற அர்ஜுனா, நான் முன் சொன்னதைப்போல், இந்த உலகில் இரண்டு பாதைகள் இருக்கின்றன; மூளைரீதியாக செயல்படுபவர்களுக்கான 'தன்னிலை அறியும் நுண்ணறிவு பாதை' (ஞான யோகம்), மற்றும் யோகிகளுக்கான 'செயல்படும் பாதை' (கர்மயோகம்).
ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோண்ப்நுதே ந
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி நந 3.4
3.4 செயலைச்செய்யாமல் விலகியிருப்பதால் ஒருவர் செயலிலிருந்து விடுதலையடைந்துவிடுவதும் (நிஷ்கர்ம நிலை) இல்லை; செயல்களை விட்டுவிடுவதால், அவர் பூர்ணதன்மையை அடையப்போவதும் இல்லை.
ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்ட்டத்யகர்மக்ரு'த் ந
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ரு'திஜைர்குணை: நந 3.5
3.5 நிச்சயமாக, ஒரு கணம்கூட எதுவும் செய்யாமல் சும்மா இருக்க யாராலும் முடியாது. செயலில் ஈடுபடுவது என்பது அவருடைய இயல்பு என்பதினால், தம்மையும் மீறி அவர் எப்போதும் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்.
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந் ந
இந்த்ரியார்த்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ நஉச்யதே நந 3.6
3.6 எவர் ஒருவர் தம் புலன்களை மட்டும் கட்டுப்படுத்திவிட்டு, ஆனால் மனத்தால் இன்னமும் புலன்களைத் தூண்டும் பொருட்களை நினைத்துக்கொண்டு இருப்பாரோ, மயக்கத்தில் இருக்கும் அவரைப் பொய்யான ஒழுக்கமுடையவர் என்று சொல்கிறோம்.
யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேண்ர்ஜுந ந
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே நந 3.7
3.7 எவரொருவர் தம் மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்தி, தன்னலமற்ற செயல்களைக் கர்மேந்த்ரியங்களின்மூலம் (புலன்கள்) செய்கிறாரோ
அவர் உயர்ந்தவர், ஓ அர்ஜுனா!
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
ஶரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யே தகர்மண: ந
3.8 உனக்கென்று விதிக்கப்பட்ட செயலைச்செய்! சோம்பேறித்தனமாக வீணாகக் காலங்கழிப்பதைவிட செயலைச்செய்வது சிறந்தது. செயல் இல்லாமல் உன் சொந்த உடலைக்கூடப் பராமரிக்க முடியாது.
யஜ்ஞார்தாத்கர்மணோண்யத்ர லோகோண்யம் கர்மபந்தந: ந
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர ந
3.9 தியாக மனப்பான்மையுடன் சுயநலமில்லாமல் செயல்கள் செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் அவை ஒருவனை உலகத்துடன் பந்தப்படுத்திவிடும். ஓ குந்தியின் மைந்தனே! உன்னுடைய வே லைகளை எனக்காகச் செய்; அப்போது அவற்றை மிகச்சரியாகச் சி றப்பாகச் செய்வாய்; விடுதலைபெற்று பற்றற்று இருப்பாய்.
ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ரு'ஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: ந
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோண்ஸ்த்விஷ்டகாமதுக் ந
3.10 சிருஷ்டியின் துவக்கத்தில் பிரம்மதேவன், மனித குலத்தைப் படைக்கும்போது, "இந்தச் சுயநலமற்ற வளப்படுத்துதல் சேவையால் நீங்கள் மேலும் மேலும் செல்வங்களைப் பெற்று வாழுங்கள். இந்தச் சுயநலமற்ற சேவை உங்களுக்கு விருப்பத்தக்க இயல்பான தனித் திறன்களை அளிக்கட்டும்," என்று சொன்னார்.
தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:ந
பரஸ்பரம் பாவயந்த: ஶ்ரேய: பரமவாப்ஸ்யத ந
3.11 இத்தகைய சுயநலமற்ற யாகங்களால் மகிழ்ச்சியடையும் விண்ணுலகவாசிகளும் உன்னை ஆதரிப்பார்கள். ஒருவருக்கொருவரான இத்தகைய பரஸ்பர ஆதரவால், நீங்கள் மேன்மையான நன்மையை அடைவீர்களாக.
இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா: ந
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ: நந 3.12
3.12 சுயநலமற்ற வளப்படுத்துதல் சேவையால் திருப்திபெற்ற விண்ணுலகவாசிகள், நீ விரும்பிய வாழ்க்கையின் சுகங்களை நிச்சயமாக உனக்கு அளிப்பார்கள். அவர்கள் தந்தவற்றை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு, விண்ணுலகவாசிகளுக்கு எதையுமே காணிக்கையாகக் கொடுக்காமல் எவன் இருக்கிறானோ அவன் நிச்சயமாகத் திருடன்.
யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை: ந
புஞ்ஜதே தே த்வதம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் நந 3.13
3.13 சுயநலமற்ற சேவை செய்தபின் உணவை உண்பவர்கள், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். புலனின்பத்திற்காகவே உணவ சமைப்பவர்கள் பொறுக்க முடியாத பாவம் செய்தவர்களாகிறார்கள்.
அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜன்யாதந்நஸம்பவ: ந
யஜ்ஞாத்பவதி பர்ஜன்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ: நந 3.14
3.14 எல்லா உயிரினங்களும் உணவு தானியவகைகளால் வளர்கின்றன. மழை பொழிவதால் உணவு தானியங்கள் கிடைப்பது சாத்தியமாகிறது. தன்னலமற்ற யஜ்ஞத்தால் மழை பொழிகிறது.
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம் ந
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் நந 3.15
3.15 படைத்தவனிடமிருந்து கர்மம் பிறக்கிறது என்பதைத் தெரிந்துகொள்! படைத்தவர் அந்த மேலான பரம்பொருளிடமிருந்து பிறக்கிறார். எங்கும் நிறைந்துள்ள அந்தப் பரம்பொருள் யஜ்ஞங்களில் நிலைபெற்றுள்ளது.
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய: ந
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி நந 3.16
3.16 பார்த்தனே! எவர் ஒருவர் முறைப்படுத்தப்பட்டதும், நிலையானதுமான இந்த வாழ்க்கைச் சுழற்சிமுறையை பின்பற்றவில்லையோ அவர் பாவங்கள்சூழும் வாழ்க்கையை வாழ்கிறார். புலனின்பங்களிலேயே மகிழ்வுபெறுகிறவர் பயனற்ற வாழ்க்கையை வாழ்கிறார்.
யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ரு'ப்தஶ் மாநவ: ந
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே நந 3.17
3.17 எவர் ஒருவர் தம் ஆன்மாவிலேயே ஆனந்தம் பெறுகிறாரோ, தம் ஆன்மாவிலேயே திருப்தியுறுகிறாரோ, தம் சொந்த ஆன்மாவிலேயே மனநிறைவுடன் இருக்கிறாரோ, நிச்சயமாக அவருக்குச் செயல் என்பதே இருப்பதில்லை.
நைவ தஸ்ய க்ரு'தேநார்தோ நாக்ரு'தேநேஹ கஶ்சந ந
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஶ்சிதர்தவ்யபாஶ்ரய: நந 3.18
3.18 நிச்சயமாக, இந்த உலகில் அவர் தம் கடமையைச் செய்வதற் கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ, அவருக்கு எந்தவிதமான காரணமும் இருப்பதில்லை. எந்த உயிரினத்தையும் அவர் சார்ந்து இருப்பதில்லை.
தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர ந
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: நந 3.19
3.19 அதனால் ஒருவர் எப்பொழுதும் பற்றில்லாமல் செயல்பட வேண்டும். பற்றில்லாமல் செயல் புரியும்போது, நிச்சயமாக, அந்த மனிதர் உயர்ந்த நிலையை அடைகிறார்.
கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய: ந
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஶ்யந்கர்துமர்ஹஸி நந 3.20
3.20 தன்னலமற்ற சேவையினாலேயே ஜனக மஹாராஜாவும் மற்றவர்களும் முழுநிறைவடைந்தார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்ட நீயும் தன்னலமற்று செயல்பட வேண்டும்.
யத்யதாசரதி ஶ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந: ந
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே நந 3.21
3.21 ஒரு உயர்ந்த மனிதர் ஒரு செயலைச்செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர் வகுத்த அந்தப் பாதையில் செல்கிறார்கள்.
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந ந
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி நந 3.22
3.22 ஓ பார்த்தனே, மூன்று உலகங்களிலும் நான் செய்வதற்கு என்று காரியம் எதுவும் இல்லை. எனக்கு விருப்பங்களும் இல்லை; செயல் மூலம் அடையப்பட வேண்டிய பலன்களும் இல்லை; இருந்தும், நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித: ந
மம வர்த்மானுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ: நந 3.23
3.23 நான் செயலைப் பொறுப்பாகச் செய்யவில்லை என்றால், ஓ பார்த்தா, நிச்சயமாக மக்கள் எல்லாவகையிலும் என் பாதையைப் பின்பற்றுவார்கள்.
உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் ந
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: நந 3.24
3.24 நான் கர்மங்களைச் செய்யவில்லை என்றால் பிறகு இந்த மூன்று உலகங்களும் அழிந்துவிடும். குழப்பங்களும், சர்வநாசமும் உருவாக நான் காரணமாகிவிடுவேன்.
ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத ந
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தஸ்சிகீர்ஷுர்லோகஸங்க்ரஹம் நந 3.25
3.25 அறியாமையில் உள்ளவர்கள் விளைவில் பற்றுவைத்தே செயலைச்செய்கிறார்கள். ஓ பாரதா, விவேகிகள் மக்கள் நலனுக்காகவே செயல்களை பற்றில்லாமல் செய்கிறார்கள்.
ந புத்திபேதம் ஜநயேஜ்ஜ his ஞானாம் கர்மஸங்கிநாம் ந
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வான்யுக்த: ஸமாசரந் நந 3.26
3.26 பலன்களின்மீது பற்றுவைத்துள்ள, அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் அந்த மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்குவது நல்லதல்ல. ஞானிகள், தாங்களே எல்லாக் கர்மங்களையும் பற்றற்று செய்வதன்மூலம், மற்றவர்களையும் பற்றற்று செயல்களைச்செய்யத் தூண்டுபவர்களாக இருக்க வேண்டும்.
ப்ரக்ரு'தே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ: ந
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே நந 3.27
3.27 அஹங்காரத்தால் குழப்பம் அடைந்துள்ள மக்கள், இயற்கையின் சக்தியால் செய்யப்படும் எல்லாவகை செயல்களையும் தாங்களே செய்வதாக நினைக்கிறார்கள்.
தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ: ந
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே நந 3.28
3.28 தீரண்ட தோள்களை உடையவனே, ஸத்யத்தை அறிந்த ஒருவர், இயற்கையின் இயல்பிலும் கர்மங்களின் இயல்பிலும் இருக்கிற வே றுபாடுகளைப் பற்றி அறிந்துகொள்கிறார்! இயல்புகளைப் பற்றியும், புலனின்பங்களைப் பற்றியும் நன்கு அறிந்துகொண்டதால், அவர் அதில் எப்போதும் பற்றுகொள்வதில்லை.
ப்ரக்ரு'தேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு ந
தாநக்ரு'த்ஸ்நவிதோ மந்தாந்க்ரு'த்ஸ்நவிந்ந விசாலயேத் நந 3.29
3.29 பொருள்சார்ந்த இயற்கையின் இயல்புகளால் முட்டாளாக்கப்பட்டவர்களும், குறைவான அறிவு கொண்டவர்களும், சோம்பேறிகளும் முக்குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் விவேகமுள்ளவர்கள் கண்டிப்பாக இவர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கக் கூடாது.
மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா ந
நிராசீ'ர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர: நந 3.30
3.30 ஆதாயத்தைப் பற்றிய ஆசையோ, பொருட்களைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல், சோம்பேறித்தனமற்று, நீ என்ன செய்ய வேண்டுமோ அதை ஆத்மஞானத்தால் நிரப்பப்பட்ட விழிப்புணர்வ்டன் செய்து, செயலின் விளைவை எனக்கு அர்ப்பணம் செய்.
யே மே மதமிதம் நித்யமநுதிஷ்ட_ந்தி மாநவா: ந
ஶ்ரத்தாவந்தோண்நஸூயந்தோ முச்யந்தே தேண்பி கர்மபி: நடு
3.31
3.31 என்னுடைய போதனைகளின்படி தம் கடமைகளைச் செய்பவர்களும், என் வார்த்தைகளை நம்பிக்கையுடன் பொறாமையின்றி பின்பற்றுபவர்களும் செயலின் பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்ட_ந்தி மே மதம் ந
ஸர்வஜ்ஞாநவிமூடா_ம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ: ந3 3.32
3.32 என் சொற்களின்படி தம் கடமைகளைச் சீராக, நியமத்துடன் செய்யாதவர்கள், அறிவற்றவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமையால் அழிவார்கள்.
ஸத்ரு'ஶம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ரு'தேர்ஜ்ஞாநவாநபீ ந
ப்ரக்ரு'திம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி ந3 3.33
3.33 வாழும் எல்லா உயிரினங்களும் அதனதன் இயற்கை சுபாவப்படியே செல்கின்றன. புத்திசாலித்தனம்மிக்க ஒருவர்கூட தம் இயல்பான சுபாவப்படியே செயல்களைச் செய்கிறார். புலன்களின் செயல்களை எது தடுத்துநிறுத்த முடியும்?
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ ந
தயோர்ந வஶமாகச்சேத் தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ ந3 3.34
3.34 புலனின்ப பொருட்கள்மீது பற்றுகொள்ளுதலையோ அல்லது வெறுப்புகொள்ளுதலையோ செய்யும் இந்தப் புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவர வேண்டும். ஞானப்பாதைக்கு தடைக்கற்களாக இருக்கும் அவற்றின் ஆட்சிக்குள் ஒருவர் எப்போதும் இருக்கக் கூடாது.
ஶ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத் ந
ஸ்வதர்மே நிதநம் ஶ்ரேய: பரதர்மோ பயாவஹ: ந3 3.35
3.35 வேறுயாரோ ஒருவரின் கடமையைச் சிறப்பாகச் செய்வதைவிட, சொந்தக் கடமையைத் தவறுதலாகச் செய்தாலும்கூட அது சிறந்ததே. மற்றவர் கடமையைச் செய்வதைவிட தம் கடமையைச் செய்வதில் மரணமே அடைந்தாலும்கூட சிறந்ததே. ஏனென்றால் மற்றவருடைய கடமை அபாயத்தைத் தருவதாக இருக்கிறது.
அர்ஜுந உவாச
அத கேந ப்ரயுக்தோ3Sயம் பாபம் சரதி பூருஷ: ந
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித: ந 3.36
அர்ஜுனன் சொன்னது 3.36 அர்ஜுனன் சொன்னார், "ஓ விருஷ்ணி குலத்தில் அவதரித்தவரே, ஏதோ ஒரு ஆற்றலால் ஆட்டுவிக்கப்பட்டதுபோல, மனிதன் அவன் ஆசைப்படாவிட்டாலும், பாவச்செயல்கள் செய்ய வலுக்கட்டாயமாக ஏன் தூண்டப்படுகிறான்?"
ஸ்ரீப4க3வாநுவாச
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகு3ணஸமுத்ப4வ: ந
மஹாஸநோ மஹாபாப்மா வித்3த்யேநமிஹ வைரிணம் ந 3.37
ஸ்ரீபகவான் சொன்னது 3.37 பகவான் சொல்கிறார், இந்த உலகத்தில் ஒருவருக்கு மிகப்பெரிய எதிரிகளாக இருப்பவை பேரார்வத்திலிருந்து பிறக்கும் காமமும் கோ காபமும்தான். இவை, எல்லாவற்றையும் விழுங்கக்கூடியதாகவும் பாபத்தை உண்டுபண்ணுவதாகவும் இருக்கிறது.
தூ4மேநாவ்ரியதே வஹ்நிர்யதா3தர்ஸோ மலேந ச ந
யதோ2ல்பேநாவ்ரு'தோ க3ர்ப4ஸ்ததா2 தேநேதமாவ்ரு'தம் ந 3.38
3.38 நெருப்பு, புகையால் மறைக்கப்படுவதுபோல், கண்ணாடி, தூசுக்களால் மறைக்கப்படுவதுபோல், கரு, பனிக்குடத்தால் (கருப்பையால்) மறைக்கப்படுவதுபோல், உயிரினங்கள், காமத்தால் மறைக்கப்படுகின்றன.
ஆவ்ரு'தம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா ந
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணானலேந ச ந 3.39
3.39 ஓ குந்திமைந்தனே! நெருப்பைப்போல் எரிந்து கொண்டிருக்கும் ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாத காமம் என்கிற வடிவம் கொண்ட இந்த அழிவற்ற எதிரியால், அறிபவருடைய ஞானம் மறைக்கப்பட்டுள்ளது.
இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே ந
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ரு'த்ய தேஹிநம் ந
3.40 புலன்கள், மனம், புத்தி இவையே காமத்தின் இருப்பிடங்கள். அவை உள்ளே உள்ள இருப்புத்தன்மையைக் குழப்பி ஞானத்தை மறைக்கிறது.
தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப ந
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸநம் ந
3.41 பரத வம்சவழிவந்தவர்களின் தலைவனே! அதனால் ஆரம்பத்திலேயே, பாவத்தின் அடையாளமாகிய புலன்களை அடக்கி அதற்குக் கடிவாளம் இடு. பாவம் நிச்சயமாக ஞானத்தையும் விழிப்புணர்வையும் அழிக்கிறது.
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந: ந
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ: ந
3.42 புலன்கள் உடலைவிட உயர்ந்தது என்று சொல்கிறார்கள். மனம் புலன்களைவிட உயர்ந்தது. புத்தி மனத்தைவிட உயர்ந்தது. விழிப்புணர்வு புத்தியைவிட உயர்ந்தது.
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா ந
ஜஹி ஸத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம் ந
3.43 மனம் மற்றும் புத்தியைக்காட்டிலும் ஆத்மாவே உயர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, தீரண்டதோள் படைத்தோனே, மனநிறைவு பெறாத எதிரியான காமத்தை வெற்றிகொள்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்_ப_கவக்கீதாஸூபநிஷத்ஸு ப்_ரஹ்மவித்யாயாம் யோக_ஸாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே கர்மயோகோ நாம த்ரு'தீயோண்த்யாய: நந
ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய கர்மயோகம் எனும் பெயருடைய மூன்றாவது அத்தியாயம்.
உங்கள் வாழ்வை வளமாக்கும் தீர்வு

மொத்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையும், மொத்த உலகமும் நோக்கமற்றதே!
இந்தப் பிரபஞ்சத்திற்கும் இயற்கைக்கும் எந்த நோக்கமும் இல்லை. அது வெறுமனே அப்படியே இருக்கிறது. அப்படியே தொடர்ந்து வாழ்கிறது. ஆறானது மலையின் மேலிருந்து கீழ்நோக்கி ஓடி கடலுக்குள் கலக்கிறது. காரணம் மேலிருந்து கீழ்நோக்கி ஓடுதல் அதனுடைய இயல்பு.
கடலைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தை வைத்துக்கொண்டு, அந்த நோக்கத்திற்காக அது ஓடுவதில்லை.
நோக்கமற்றதன்மையின் அழகு
அதேபோலத்தான் நம் வாழ்வும் எந்தவொரு நோக்கமும் இல்லாதது. இலக்கை நோக்கி நீங்கள் அதிகமாக ஓட, ஓட உங்கள் வாழ்க்கையையே அதிகமாக இழக்கிறீர்கள்!
நிகழ்காலத்தில் வெறுமனே பூர்ணத்வ உணர்வில் இருந்தாலே போதும், அதுவே ஒவ்வொரு கணத்திலும் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவுசெய்ய நமக்கு உதவிபுரியும்.
நிகழ்கால நிமிடங்களைப் பூர்ணத்வ உணர்வில் இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ளும்போது, கவனித்துக்கொள்ளும்போது, எதிர்காலம் தானாகவே உறுதிபெற்றதாகிவிடுகிறது.
பாதை சரியாக இருந்தால் நாம் அடைகிற இடமும் சரியாகவே இருக்கும். ஆனால் நாம் கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதால், மகிழ்ச்சியைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம்.
மகிழ்ச்சி என்பது நாம் இருக்கும் இடத்தில் இருக்கிறதேதவிர, நாம் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிற அந்த இடத்தில் அல்ல.
நீங்கள் அதிகமாக ஓட, ஓட அதிகமான பட்டங்கள், வெகுமதிகள் பெறுகிறீர்கள். 'பல பரிமாணங்கள் உடையவர்' என்று அழைக்கப்படுகிறீர்கள்.
ஆனால் தம்மையே ஆழமாக அனுபவித்த ஒருவரால் மட்டுமே, தமக்குள் முழுமையுடன் இருக்கும் ஒருவரால் மட்டுமே, தமக்குள்ளேயே அமைதியாக இருக்கத்தெரிந்த ஒருவரால் மட்டுமே, செயல்களுக்கு நடுவிலேயே செயலற்றதன்மையை அனுபவிக்கும் ஒருவரால் மட்டுமே பல பரிமாணங்கள் உடையவராக இருக்க முடியும்.
பாதை சரியாக இருந்தால்
நாம் அடைகிற இடமும்
சரியாகவே இருக்கும்.
பூர்ணாவதாரமான கிருஷ்ணர் மட்டுமே பல பரிமாணமுடையவராக இருக்க முடியும்.
சமுதாயத்தைத் திருப்திபடுத்துவதற்காக ஓடுபவர் அல்லது சமுதாயத்தால் ஓட வைக்கப்படுகிறவர், இவரால் அமைதியை ஒருபோதும் அனுபவிக்க முடியாது.
இலக்கு என்பது முடிவல்ல அது அடுத்த இலக்கின் ஆரம்பம்
வாழ்க்கை, நோக்கமற்றதன்மை கொண்டது. எதையெல்லாம் உங்கள் வாழ்க்கையின் இலக்காக நினைக்கிறீர்களோ, அதுவெல்லாமே நிறைவேறினால்கூட, நீங்கள் அடைந்ததை உணர்ந்து, அதை அனுபவிக்கக்கூட உங்களுக்கு நேரம் இருப்பதில்லை.
ஒரு இலக்கிலிருந்து இன்னொரு இலக்கிற்கு என்று நீங்கள் தொடர்ந்து தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். இந்தச் செயல்முறையில் திருப்தி என்ற வார்த்தைக்கே இடமில்லை. குறைவுணர்வு மட்டுமே எப்போதும் இருக்கிறது.
வாழ்வு, பூர்ணத்துவத்துடன் ஆரம்பமாகிறது. நீங்கள் பூர்ணத்துவத்துடன் இல்லையென்றால், நிர்பந்தத்தினால் மட்டுமே ஓடிக்கொண்டிருப்பீர்கள். நிஜத்துடன் ஒத்திசைந்து செல்வதே பூர்ணத்வம். நிஜம், உங்களை சக்தியற்றவராக, பலஹீனராக ஆக்கக்கூடாது.
அர்ஜுனன், தம்முடைய சொந்த நிஜநிலைமையை எதிர்கொள்ளாமல், தம்முடைய பொறுப்பிலிருந்து விலகியதன் மூலம், அவர் ஶ்ரத்தையற்ற தன்மையில் இருக்கிறார். அதனால் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, தம்முடைய உச்ச சொந்த நிஜநிலைமையை நிறைவேற்றுவதற்கான பொறுப்பேற்று, அதனை வலிமையுடன் செயல்படுத்தி, பூர்ணত্ব உணர்வில் ஆனந்தமாக வாழ்வதற்கான தீக்ஷையைக் கொடுக்கிறார்.
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, ஶ்ரத்தையான செயல்பாட்டிற்கான அறிவியலை தீக்ஷையாகக் கொடுக்கிறார்.
செயல்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதுதான் கேள்வி (3.1-3.3)
அது பொருள்சார்ந்த வாழ்வோ அல்லது ஆன்மிக வாழ்வோ, உங்கள் மொத்த வாழ்க்கையும் நோக்கமற்றதுதான். பொருள்சார்ந்த இலக்கானாலும், ஆன்மிகம்சார்ந்த இலக்கானாலும், இலக்கு என்று சொல்லப்படுகிற எதுவுமே, 'நீங்கள் முழுமையாக இல்லை' என்று உங்களை உணரவைக்கிறது. அதனால் நீங்கள் 'அடுத்து, அடுத்து' என்று ஏறிக்கொண்டேயிருப்பீர்கள்.
புரிந்துகொள்ளுங்கள், உங்கள் நோக்கம் என்று நீங்கள் நினைப்பது எல்லாமே, அது செல்வமாகட்டும், உறவுகளாகட்டும், பணம், பெயர், புகழாகட்டும், இதில் எந்தப் பரிமாணத்தில் நீங்கள் உச்சத்தை அடைந்தாலும், நீங்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை, நீங்கள் முழுமையடையப்போவதில்லை!
ஏனென்றால் நீங்கள் உச்சத்தை அடையும் சமயத்தில், ஏறுதல் என்பது உங்களுடைய பழக்கமாகி இருக்கும். ஏறுதல் என்பது பழக்கமாகும்போது, உங்களுக்குள் நீங்கள் ஒருபோதும் தளர்வாக இருக்க முடிவதில்லை. உங்களுடன் நீங்களே அமைதியாக அமர முடிவதில்லை.
தன்னுடன் தானே அமைதியாக அமர முடியாத ஒரு மனிதன், தன் இருப்புத்தன்மையின் மிகப்பெரிய பரிமாணத்தை இழக்கிறான்.
மேலும் மேலும் பொருட்களைச் சேர்ப்பதற்கே எல்லோரும் பேராசைப்படுகிறோம். தொடர்ந்து பொருள்சார்ந்த இலக்குகளையே தேடியோடுகிறோம். உடலை விட்டுச்செல்லும்போது, நாம் நம்முடன் எதையுமே எடுத்துச்செல்ல முடியாது.
நம்மால் எதையுமே எடுத்துச்செல்ல முடியாவிட்டால், பிறகு
> உங்கள் உள்-உணர்வைக் காலியாக
> இருக்கவிடுங்கள் போதும்! அது
> பூர்ணத்துவத்தால் நிறைக்கப்பட்டுவிடும்!
நம்முடைய இந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கைக்கு என்று எந்த நோக்கமும் இல்லை, அதற்கு அர்த்தம்தான் உண்டு. வாழ்க்கைக்கு நோக்கம் கிடையாது என்ற நோக்கமற்றதின் அழகை ஏற்றுக்கொண்ட அந்தக் கணமே, வாழ்க்கையை வாழ்வதன் அர்த்தத்தை உணர்ந்துகொள்வீர்கள்.
வாழ்க்கைக்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது என்ற கருத்தினால் உங்கள் உள்-உணர்வு மாசுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள், உள்-உணர்வு என்று நான் சொல்லும்போது, உங்கள் மனத்தையும், மமகாரத்தையும், ஸ்வ - அந்யகாரத்தையுமே குறிக்கிறேன்.
"உங்கள் உள்-உணர்வு இலக்குகளாலும் குறைவுணர்வுகளாலும் பாதிக்கப்படாமல் அல்லது நிரப்பப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்," என்கிறார் கிருஷ்ணர். ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள், இயற்கையாகவே உங்கள் உள்-உணர்வு பூர்ணத்வ உணர்வே, அது ஸக்தியால், ஆனந்த ஸக்தியால் நிரம்பியிருக்கிறது.
மேலும் மேலும் குறைவுணர்வுகளைச் சேர்க்காமலும், இலக்குகள் இல்லாமலும் உங்கள் உள்-உணர்வை வெறுமையாக்கும்போது, அங்கு ஆனந்தத்திற்கும் பூர்ணත්වத்திற்கும் இடம் அதிகமாகிறது.
உங்கள் உள்-உணர்வைக் காலியாக இருக்கவிடுங்கள்! ஆனால் அதற்குப்பிறகு அது எப்போதும் காலியாகவே இருக்காது; அது பூர்ணத்வத்தால், ஆனந்தத்தால் நிறைக்கப்பட்டுவிடும்! நீங்கள் பூர்ணத்வ உணர்வை அதிகமாக உருவாக்க உருவாக்க, உங்கள் வாழ்வே ஆனந்தமாகிவிடும். அதைத்தான் கிருஷ்ணர், "பலனில் பற்று வைக்காதே," என்று சொல்கிறார்.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே
ஒன்றுதான்: அகந்தையை விட்டுவிட்டு,
அமைதியாக இருப்பதுதான்,
ஒசிரத்தையுடன் செயல்புரிவது கர்மயோகியின் இயல்பு (3.4-3.6)
உள்ளுலகத்திலும், வெளியுலகத்திலும் - இந்த இரண்டிலும் வெற்றி பெறுவதற்கான நுட்பங்களை அறிந்தவர் கிருஷ்ணர். ஒரே நேரத்தில் ஞானியாக, அரசராக என இரண்டுமாகவும் இருந்த ஒரே குரு கிருஷ்ணர்.
பூர்ணத்வ உணர்வினால் உள்ளுலகத்தை நிறைத்து, வளப்படுத்துதல் உணர்வினால் வெளியுலகத்தை நிறைத்து வாழ்வது எப்படி என்பதை அவர் வாழ்ந்து காண்பிக்கிறார். இதுவே முழுமையான வாழ்க்கை.
மொத்த கீதையுமே, வெளியுலகத்தை செல்வச்செழிப்பால் நிறைப்பது எப்படி மற்றும் உள்ளுலகத்தை உச்ச ஆனந்தத்துடன் வைத்துக்கொள்வது எப்படி என்ற இந்த ஒரு கருத்தைப்பற்றியதுதான்.
வேலையைத் தவிர்ப்பதன்மூலம் ஒருவர், செயல்களிலிருந்து விடுதலையடைந்துவிடமுடியாது (3.4) மற்றும் செயலைச்செய்யாமல் விட்டுவிடுவதன்மூலம் திருப்தியடைய முடியாது. வெளி-உலகத்தை துறப்பதால் மட்டுமே ஒருவர், கர்மயோகி ஆகிவிடமுடியாது.
ஸ்ரத்தை என்றால் என்ன?
நோக்கங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட உங்கள் நான்கு அடையாளங்களையும் துறந்துவிட்டு, உங்களின் உச்சபட்ச சாத்தியக்கூறுகளுக்கு அவற்றைக் கட்டமைப்பதே ஸ்ரத்தை!
1. உங்களுடைய உள்ளுலகிலுள்ள அடையாளங்களைத் துறப்பது,
2. உங்களுள் பூர்ணத்வ உணர்வை உருவாக்குவது - இவையே நீங்கள் அடையப்பட வேண்டியவை.
இதுவே யோகஹ கர்மஸு கௌசலம் - செயலில் ஸ்ரத்தை என்பதாகும்.
உங்கள் உள்ளுணர்விலிருந்து அடையாளங்களைத் துறந்துவிட்டீர்கள் என்றால், அதன்பிறகு நீங்கள் வெளியுலகில் எச்செயலைச்செய்தாலும் அது எந்தவொரு முக்கியத்துவத்தையும் பெறுவதில்லை.
அதன்பின் எதுவும் உள்ளுணர்வைத் தீண்டாது. ஆனாலும், ஸர்வ: ப்ரக்ரு'திஜைர்குணை: (3.4) - இயற்கையின் சுபாவத்தால் உங்கள் உடலும் மனமும் இயங்கிக்கொண்டுதானிருக்கும் என்று கிருஷ்ணர் உறுதியளிக்கிறார்.
தங்களால் செய்யப்பட வேண்டிய சரியான செயல்களைப்பற்றிய அறிவு உங்களுடைய உடலுக்கும் மனத்திற்கும் இருக்கிறது. உங்கள் உடலும் மனமும் அதனதனுக்குரிய வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளும். நீங்கள் வெறுமனே உள்ளுணர்வில் அமைதியாக இருந்தால் போதும்.
பிரச்சினை என்னவென்றால், நீங்கள் உங்கள் உடலையும் மனத்தையும் நம்புவதில்லை. உங்கள் அகந்தையை நம்புகிறீர்கள். இறுதியில் அது உங்களை அழித்துவிடுகிறது.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அமைதியாக இருப்பதும், அகந்தையை விட்டுவிடுவதும்தான். கிருஷ்ணர் சொல்கிறார்- எவரொருவர் பூர்ணத்வ உணர்வில் நிலைபெற்று, ஶ்ரத்தையுடன் செயலைச்செய்கிறாரோ அவரே கர்ம யோகியாவார்.
பூர்ணத்வ உணர்வில் நிலைபெற்று இருங்கள், நீங்கள் தானாகவே வழிநடத்தப்படுவீர்கள். இலக்கைப்பற்றி கவலைப்படாதீர்கள். அவற்றை விட்டுவிடுங்கள். நோக்கமற்றதன்மையின் அழகைப் புரிந்துகொண்டீர்களென்றால் உங்கள் உள்-உணர்வில் இருக்கும் காயங்கள் குணமடைந்துவிடும்.
நீங்கள் பல பரிமாணமுடையவர் என்பதை அறிவீர்களா?
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந் / இந்த்ரியார்த்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே // 3.6
உங்கள் உள்-உணர்வில் பூர்ணத்வத்தை உருவாக்காமல், உங்கள் உடலையும் புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்கூட நீங்கள் போலியானவர்களே. உங்கள் வாழ்க்கையின் தரம் உங்கள் உள்-உணர்வின் தரத்தைப் பொறுத்ததேதவிர, வெளி-உணர்வின் தரத்தைப் பொறுத்தது அல்ல.
வளப்படுத்துதல் மட்டுமே
உங்களை உணர்வுமாற்றம்
பெறச்செய்யும்.
உங்களுக்குப் பூர்ணத்வ உள்-உணர்வு வேண்டுமானால், அதற்காக முயற்சி எடுத்து, அதை உருவாக்குவதற்கு வேலைசெய்ய வேண்டும்.
வாழ்வின் நோக்கம், இலக்கு என்று நீங்கள் எதைக் கருதினாலுமே, அவற்றுக்கு எல்லாம் இறுதியில் அர்த்தமே இல்லை என்பதை நீங்கள் உணர்ந்த அந்தக் கணமே வாழ்வின் மீதுள்ள கவர்ச்சி போய்விடும். இலக்கை நோக்கி வியர்வை சிந்தி ஓட வேண்டிய தேவையும் போய்விடுகிற அந்தக் கணமே, நீங்கள் ஓடுவதை நிறுத்திவிடுவீர்கள்.
நன்றாகக் கவனியுங்கள், நீங்கள் கைவிடுவது உத்சாகத்தை அல்ல; வெறுமனே எதன் பின்னாலேயோ ஓடி, பதட்டப்பட்டு வியர்வை சிந்துவதைத்தான் விடுவீர்கள்!
நோக்கத்தின்மீது நீங்கள் வைத்திருந்த மரியாதை போய்விட்ட அந்தக் கணமே, நீங்கள் உங்கள் இருப்புத்தன்மைக்குள் விழுந்துவிடுவீர்கள்.
ஒரு முக்கியமான விஷயம், உங்கள் உள்-இருப்புத்தன்மைக்குள் நீங்கள் விழுந்தகணமே, நீங்கள் பல பரிமாணங்களில் வெளிப்படுவீர்கள்!
உங்களால் கற்பனைசெய்ய முடிந்த மற்றும் உங்களால் கற்பனைசெய்ய முடியாததெல்லாம் நிகழ ஆரம்பித்துவிடும். உங்கள் கற்பனைக்கெட்டாத பரிமாணங்களில் வெளிப்பட ஆரம்பித்துவிடுவீர்கள். அப்போது மட்டுமே, நீங்கள் பல பரிமாணங்களுடைய ஒருமனிதராக உண்மையிலேயே மாறுகிறீர்கள்.
உங்கள் ‘வெளி-உலக’ ஓட்டம், மற்றவர்களை வளப்படுத்துவதற்காக இருக்கட்டும்
மனிதன், தம்முடைய சுபாவத்தினாலேயே, செயலில் ஈடுபட வேண்டியிருக்கிறது. நீங்கள் முயற்சிசெய்து புலன்களைக்
ஒருசெயலைத் திட்டமிடும்போது,
அதைக்குறித்த ஆசைகளையும்
எதிர்பார்ப்புகளையும் விட்டுவிடுங்கள்,
கட்டுப்படுத்தி, வெளி-உலகில் எந்தச் செயலையும் செய்யாமல் இருந்தால்கூட, அந்தக் கட்டுப்படுத்துதல் என்ற செயலேகூட, தன்னளவில் ஒரு செயலாகிவிடுகிறது. அதுவும் ஒரு செயலே.
கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார். “சுபாவத்தாலேயே, இந்த்ரியங்கள் 'வெளி-உலகை' நோக்கி ஓடுபவையாகவே இருக்கின்றன.” ‘வெளி-உலகை நோக்கி ஓடுவது’ என்றால், அது ஏதோ எதிர்மறையானது அல்ல. வெளி-உலகை நோக்கி ஓடும் புலன்கள் எப்போதும் உயிர்ப்போடும் படைப்பாற்றலோடும் செயல்திறனோடும் பங்களிப்புத்தன்மையோடும் இருக்கின்றன.
கிருஷ்ணர் சொல்கிறார், “உங்கள் புலன்கள் ‘வெளி-உலகை’ நோக்கி ஓடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன!’
வெளி-உலக நாட்டம் இரு வழிகளில் நிகழலாம் : ஒன்று, மற்றவர்களை வளப்படுத்துவதற்காக அல்லது மற்றவர்களை வஞ்சிப்பதற்காக. நிச்சயமாக, மற்றவர்களை வஞ்சிப்பது உங்களை உணர்வுமாற்றம் செய்யப்போவதில்லை, வளப்படுத்துதல் மட்டுமே உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்யும்.
உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது, எப்படிச் செயலைச்செய்வது என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. இப்போது நமது கேள்வி, “நான் எப்படிச் செயலாற்ற வேண்டும்?” என்பதுதான்.
இங்கே கிருஷ்ணர், இதற்குப் பதிலளிக்கிறார். நாம் பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும் செயலைச்செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். நாம் எதிர்பார்ப்பதைப்போன்ற பலனை அது தருமா அல்லது தராதா என்பதைப் பற்றிய தேவையற்ற கவலைகள் இல்லாமல், நம்மைச் செயலாற்றச் சொல்கிறார்.
திட்டமிடுங்கள், ஆனால் யூகித்துக்கொண்டிருக்காதீர்கள்
கிருஷ்ணர் சொல்கிறார், “ஆசையை விட்டுவிடு, எதிர்பார்ப்பை விட்டுவிடு!”
“நாம் எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டோம் என்றால், எப்படி நம்மால் செயல்பட முடியும்?’’ என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் திட்டமிட வேண்டாம் என்றோ அல்லது ஏதோ ஒன்றை யோசிக்காமல் செய்ய வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை.
“திட்டமிடுங்கள், ஆனால் மனரீதியாக அல்லாமல் காலவரிசைப்படி திட்டமிடுங்கள்,’’ என்று சொல்கிறேன். இரண்டு விஷயங்கள் இருக்கின்றன: ஒன்று, காலவரிசைப்படி திட்டமிடுவது, மற்றொன்று, மனரீதியாகத் திட்டமிடுவது.
காலவரிசைப்படி திட்டமிடுவது என்பது நேரஅளவை வைத்துத் திட்டமிடுவது, உதாரணத்திற்கு, நீங்கள் காலையில் ஒருகுறிப்பிட்ட நேரத்தில் எழுவது, உங்கள் காலைவேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிப்பது, அலுவலகத்தில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை ஒருகுறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிப்பது என்பதைப்போல பல செயல்களை நீங்கள் திட்டமிடுகிறீர்கள். நடைமுறையில் செயல்களைச்செய்ய, இந்த வகையில் திட்டமிட்டு நீங்கள் செயல்களை ஒருங்கிணைக்கும்போது, அது மிகவும் சிறப்பான பலனை அளிக்கும்.
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இதோடு நீங்கள் நிற்பதில்லை, நீங்கள் திட்டங்களை உங்களுடைய தலைக்குள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கிறீர்கள். ‘இதை நம்மால் செய்ய முடியுமா?’, ‘இப்படியானால் என்னாகும்?, அப்படியானால் என்னாகும்?’ என்று ஊகித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இதையே மனரீதியான திட்டமிடுதல் என்கிறேன்.
இது, உங்கள் மூலமனப்பாங்குகளை அதிகமாக்குகிறது. ‘நீங்கள் மிக உயர்ந்தவர், சிறந்தவர்’ என உங்களை நினைக்க வைக்கிறது. அது உங்களை மிகவும் அக்கறைமிக்கவராகவும் பெரிய விஷயங்களைக் கையாள்பவராகவும் நினைக்க வைக்கிறது. ஆனால் நீங்கள் மொத்த விஷயத்தையுமே, மொத்த நிகழ்வையுமே சிக்கலாக்கிவிடுகிறீர்கள்.
மேலும் நீங்கள் திட்டமிடும்போது, நிகழ்வதற்கு சாத்தியமான எல்லா எதிர்பாராத பின்நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டீர்களா அல்லது எதையாவது கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டீர்களா என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.
கர்மபலன் மீதுள்ள பற்றை விடுவதற்கான
நுட்பங்கள் (3.7 -3.12)
கிருஷ்ணர் சொல்கிறார்: “எவர் ஒருவர் பக்திப்பூர்வமான காரியங்களை ச்ரத்தையுடனும் எந்தவிதமான பற்றுமில்லாமல் செய்கிறாரோ, யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேண்டீர்ஜுந (3.7) - தம் புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறாரோ அவர், துறந்துவிட்டதாக நடித்துக்கொண்டும் புலன்களைக் கட்டுப்படுத்தியதாகப் பாசாங்குக்காட்டிக்கொண்டும் இருப்பவரைவிட உயர்ந்தவர்.
கேளுங்கள், கேளுங்கள் : புலன்கள் வெளி-உலகை நோக்கி ஓடுபவையே. இயல்பிலேயே, அவை 'அடைதலை' நோக்கியே செயல்படுகின்றன. இதன் பொருள் இயற்கையாகவே நீங்கள் ஒரு வெற்றியாளராக இருக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளீர்கள்.
உங்கள் இயல்பினாலேயே, நீங்கள் செயல்படுவீர்கள். செயலைச் செய்யும்போது, 'புலன்கள்தான் செயல்படுகின்றன' என்கிற விழிப்புணர்வுடன் இருங்கள். விழிப்புணர்வுடன் இருக்கும்பொழுது செயலிலோ அல்லது பலனிலோ உங்களுக்குப் பற்று வராது. அப்போது நீங்கள் அச்செயலின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலைபெற்று விடுவீர்கள்.
'செயலைச்செய்பவன் நான்தான்' என்று உங்களை நீங்கள் கருதும்போதும், விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்திலேதான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கும்போதும் மட்டுமே அச்செயல் உங்களைக் கட்டுப்படுத்துகிறது.
செயலின் பலனைத் தெய்விகத்திடம் ஸரணாகதி செய்
வேலையின்மீது இருக்கும் பற்றிலிருந்து விடுதலை பெற இரண்டு நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்று என்னவென்றால் "நான் செய்பவன் இல்லை," என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வது.
'புலன்கள்தான் செயலைச் செய்கின்றன, நீங்கள் அல்ல' என்று இடைவிடாமல் உங்களுக்குள்ளேயே ஞாபகப்படுத்திக்கொள்வதன் மூலம், நீங்கள் செயலிலிருந்து தூரவிலகி, 'செயலைச்செய்பவர் நீங்கள் அல்ல' என்கிற விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.
இதைத்தான் கிருஷ்ணர் இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் விளக்கினார்.
மற்றொரு வழியானது, செயலின் பலனைத் தெய்வத்திடம் ஸரணாகதி செய்துவிடுவது. "ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர (3.9) -உன்னுடைய வேலைகளை எனக்காகச் செய், அப்போது அவற்றை மிகச்சரியாகத் துல்லியமாகச் செய்வாய்; விடுதலைபெற்று, பற்றற்று இருப்பாய்."
சிரத்தை, துணிவைத் தரும்
ஒரு செயலை ஸ்ரத்தையாகவும் தெய்வத்திற்குத் தரும் எளிய காணிக்கையாகவும் நினைத்துச்செய்யும்போது, இந்த ஸரணாகதி மனப்பான்மை உங்கள் வேலையை உங்கள் உச்சபட்ச செயற்திறனுடன், ஸ்ரத்தையுடன் முழுமையாகச் செய்யவைக்கிறது. நீங்கள் விடுதலையும் அடைவீர்கள்.
ஒருசெயலின் முடிவைப்பற்றி நீங்கள் அளவுக்கதிகமாகக் கவலைப்படும்போது, அந்த நேரத்தில் அச்செயலைச்செய்பவர் நீங்கள்தான் என்று உண்மையில் நினைக்கிறீர்கள்! அதனால்தான் அந்தச் செயலிலும் பலனிலும் பற்றுவைக்கிறீர்கள்.
இப்போதுதான் அச்செயலின் முடிவைப்பற்றிய பதட்டமும்
| ஸரணாகதியடைய ஒருங்குவித்தலும் ஸ்ரத்தையும் இருந்தாலே போதுமானது, |
அழுத்தமும் ஏற்பட ஆரம்பிக்கிறது. நீங்கள் பதற்றமாக இருக்கும்போது, இயல்பாகவே, உங்களுடைய உச்சபட்ச திறமையில் நீங்கள் செயல்படுவதில்லை. உங்களுடைய அதிகபட்ச திறமையைப் பயன்படுத்தி, செயல்பட முடியாமல் போவதற்கான காரணம், மதிப்புமிகுந்த உங்களுடைய சக்தியானது பதற்றத்தினால் விரயமாகிவிடுகிறது. பிறகு எப்படி உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும்?
உங்களுடைய மொத்த வாழ்க்கையையும் தவறுகள் செய்யாமல் தவிர்க்க முயற்சிசெய்வதிலும், மிகச்சரியாக இருக்க முயற்சி செய்வதிலுமே வீணாக்குகிறீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கையே முட்டாள்தனமாகிவிடுகிறது.
நீங்கள் உங்கள் வேலையைப்பற்றிய பொறுப்போ, கவனமோ இல்லாமல் இருக்கலாம் என்பது இதன் அர்த்தம் அல்ல; தவறுகள் செய்ய உங்களுக்குப் போதுமான ச்ரத்தையின் துணிவு இருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்.
நீங்கள் தவறுகள் செய்யும்பொழுது மட்டுமே, உங்களால் அதிலிருந்து கற்றுக்கொள்ளவும், உங்களது விழிப்புணர்வproperty அச்ரத்தையை முழுமைசெய்யவும் முடியும். அப்போது மட்டுமே உங்களது விழிப்புணர்வproperty அச்ரத்தை வெளிச்சத்திற்கு வரும், அப்போது மட்டுமே நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் நீங்கள் பார்க்க முடியும்.
பிறகு, உங்கள் அனுபவங்களின்மூலமாகவும், தவறிலிருந்து கற்றுக்கொண்டதன்மூலமாகவும், பூர்ணproperty உணர்வில் நிலைகொள்வீர்கள். விஷயத்தின் இரண்டு பக்கங்களைப் பற்றிய அறிவாற்றலைப் பெறுகிறீர்கள். இல்லையென்றால், சரியாக இக்கட்டான நேரத்தில், உங்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் அச்ரத்தையின் காரணமாகத் தவறுகள் செய்வீர்கள், உடனே பலஹீனமடைந்து உங்களை நீங்களே கைவிட்டுவிடுவீர்கள். செய்கின்ற வேலைகளின்மீதும், பலன்களின்மீதும் பற்றுவைக்காமல் இருக்கும்போதுதான் இந்தத் தைரியம் வரும்.
ஓசரணாகதி- வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும்
உற்சாகமாக அனுபவிக்கும் நுட்பம்
பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு நோக்கம் இல்லை என்பதையும், அக்கறையுடனும் பொறுப்புடனும் அது உங்களைக் கவனித்துக்கொள்ளும் என்பதையும், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அன்பான கரங்களில்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்ளும்போது, தளர்வடைகிறீர்கள்; அந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடமே சரணடைகிறீர்கள்.
நீங்கள் இதுபோல் தளர்வான மனநிலையில் இருக்கும்போது, மிகச்சிறப்பாகச் செயல்படுவீர்கள். ‘நான் செய்பவன்’ என்கிற உணர்வில்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் உற்சாகமாக அனுபவிக்கத் தொடங்குவீர்கள். சின்ன தவறுகள் செய்வதைப் பற்றிய கவலைகள் உங்களுக்குள் இருக்காது. இந்தப் புரிதல் உங்களுக்குள் அனுபவமாக மாறும்போது உண்மையான ஸரணாகதி நிகழும்.
ஸரணாகதியடைய ஒருங்குவித்தலும் ஸ்ரத்தையும் இருந்தாலே போதுமானது, வேறு எதுவும் தேவை இல்லை.
ஸரணாகதிக்கு அபரிமிதமான சக்தியும் ஆற்றலும் உண்டு. புரிந்துகொள்ளுங்கள், பிரபஞ்ச சக்தி உங்கள்மேல் அன்பு செலுத்துகிறது. நீங்கள் உங்களைப் புரிந்துகொண்டதைவிட, அது உங்களை நன்றாகவே புரிந்துவைத்துள்ளது. உதாரணத்திற்கு, அர்ஜுனனையே எடுத்துக்கொள்ளுங்கள், அர்ஜுனன் தம்மைப்பற்றி தெரிந்துவைத்திருப்பதைவிட, கிருஷ்ணர் அவரைப்பற்றி அதிகமாகத் தெரிந்துவைத்துள்ளார்.
அர்ஜுனனுக்கு இருந்த மிகஉயர்ந்த நம்பிக்கையும், இணக்கமான உணர்வுத்தன்மையும்தான் கிருஷ்ணருடன் உறவாடும் நிலையைத் தந்தது. கிருஷ்ணர், அவரை முடிவான விழிப்புணர்விற்கு அழைத்துச் சென்றார். பிரபஞ்ச சக்தியின்மீதும், உயிர் சக்தியின் புத்திசாலித்தனத்தின்மீதும் எளிமையான நம்பிக்கை வையுங்கள். இதுதான், உங்கள் வாழ்க்கையின் உயிர் சக்தி; இந்த சக்திதான் உங்களை உயிர்ப்புடன் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
தியாகம்--எதிர்பார்ப்பெனும் குப்பையை எரித்துவிடும்
கிருஷ்ணர், யாகம் என்று சொல்லும்போது, உண்மையான உணர்விலிருந்து பிரபஞ்ச சக்திக்கு ஸரணாகதி செய்வதைத்தான் சொல்கிறார்.
நாம் மற்றவர்களுக்கு நம்மால் கொடுக்கமுடிவதைக் கொடுத்து வளப்படுத்துவது த்யாகம் அல்ல. நமக்கென்று எதுவும் இல்லாமலிருக்கும்பொழுதும் மற்றவர்களுக்குக் கொடுத்து வளப்படுத்துவது மட்டுமே த்யாகம்.
அதனால்தான் மக்களால் நடத்தப்படும் பல தர்மஸ்தாபனங்கள் நல்ல நோக்கத்தில் நடத்தப்பட்டாலும், இங்கே கிருஷ்ணர் சொல்லும் சாரத்திற்குள் அவை பொருந்துவதில்லை. ஆனாலும் ஒருவிதத்தில் நீங்கள் உங்களிடமே எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்குக் கொடுத்து வளப்படுத்துவது நல்லதுதான். வளப்படுத்தலுக்காகவே மற்றவர்களை வளப்படுத்துங்கள்.
நீங்கள் பட்டினியாக இருக்க நேர்ந்தாலும், உங்களுக்கென்று வைத்திருப்பதை நீங்கள் உண்ணாமல் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது நீங்கள் ப்ரபஞ்ச ஸக்தி நிலையில் செயல்படுவீர்கள்.
கிருஷ்ணர் சொன்னதுபோல, இந்த 'உலகம் முழுவதும் என் குடும்பம்' என்ற நிலையில், கருணையின் வெளிப்பாட்டில்
அனைத்து வாழ்வாதாரங்களையும்
அடுத்த தலைமுறையினருக்காக
உயிர்ப்போடு வைத்திருப்பதே
நீங்கள் செயல்படும்போது, மற்றவர்களுக்குக் கொடுத்தால் நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வீர்கள், இல்லையென்றால் நரகத்திற்குச் செல்வீர்கள் என்கிற எதிர்பார்ப்புகளும் இருப்பதில்லை.
மற்றவர்களை வளப்படுத்துங்கள். நீங்கள் எதைப் பார்த்தாலும் உணர்ந்தாலும் அது உங்களுடைய நீடிப்பே.
அனைவரும் நம்முடைய பாகம் என்பதால், கிருஷ்ணர் நம்மை வளப்படுத்துதலை பயிற்சிசெய்யச் சொல்கிறார். யாரும் நம்மிடமிருந்து தனியானவர் அல்லர். இந்த உணர்விலிருந்து வளப்படுத்துதல் நிகழும்பொழுதுதான், அது சுயநலமற்ற தியாகமாக, யஜ்ஞமாக ஆகிறது. அத்தகைய உணர்விலிருந்து செய்யும் பொழுது, மகிழ்ச்சியும் ஆனந்தமும் உங்கள் இருப்பிற்குள் நுழைந்து குடியிருக்கும்.
"சுயநலமற்ற வளப்படுத்துதல் சேவையால் திருப்திபெற்ற விண்ணுலகவாசிகள், நீ விரும்பும் வாழ்க்கை சுகங்களை நிச்சயமாக உனக்கு அளிப்பார்கள். யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ: (3.12) - விண்ணுலகவாசிகள் தந்தவற்றை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு, அவர்களுக்கு எதையுமே காணிக்கையாகக் கொடுக்காமல் எவன் இருக்கிறானோ அவன் நிச்சயமாகத் திருடன்.
கிருஷ்ணர், உண்மையில் எது ஸ்ரத்தையான செயல் என்பதைப்பற்றிப் பேசுகிறார். அனைத்து வாழ்வாதாரங்களையும் தொடர்ந்து வளப்படுத்தி, அவற்றை அடுத்த தலைமுறையினருக்காக உயிர்ப்போடு வைத்திருப்பதே யஜ்ஞம்.
மற்றொன்றால் ஈடுசெய்திட முடியாத எந்தவொன்றையும் தொடாதீர்கள். இதுவும் வளப்படுத்தும் யஜ்ஞத்தின் ஒரு பாகமே. வளப்படுத்தாமல், வாழ்வாதாரங்களைத் தொடர்ந்து எடுப்பது, அனுபவிப்பது என இருந்தீர்களென்றால், நீங்கள் ஒரு திருடன்தான்.
தெரிந்துகொள்ளுங்கள்... ஒன்று நீ
ங்கள் வளப்படுத்துவீர்கள் அல்லது
வஞ்சிப்பீர்கள். நடுவழி என்பதே
வளப்படுத்தினால்தான் உங்களுக்கு வாழ்வு நிகழும்.
வளப்படுத்துதல் என்றால், வாழ்க்கை ஸத்யங்களுடன் ஒருங்குவித்தல், ஸ்ரத்தை, பொறுப்பெடுத்தல் ஆகிய மூன்று தத்துவங்களையும் இணைப்பதே.

வளப்படுத்துதல்-கடவுள்தன்மையோடு தொடர்புகொள்வதற்கான நுட்பம்
கடவுள்தன்மை, அவ்யக்தம்-வெளிப்படா கடவுள்தன்மை, மற்றும் வ்யக்தம்- வெளிப்படும் கடவுள்தன்மை என்னும் இரு பரிமாணங்களில் உள்ளது. 'வெளிப்படும் கடவுள்தன்மை' என்பது இப்பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.
அவ்யக்தம்-வெளிப்படாத கடவுள்தன்மையுடன் தொடர்புகொள்ள ஒருங்குவித்தலும் ஸ்ரத்தையும் மிகச்சரியான வழிகளாகும். வ்யக்தம், வெளிப்படும் கடவுள்தன்மையுடன் தொடர்புகொள்ள பொறுப்பெடுத்தலும் வளப்படுத்துதலும் மிகச்சரியான வழிகளாகும்.
வளப்படுத்துதல், வெளிப்படாத கடவுள்தன்மை மற்றும் வெளிப்படும் கடவுள்தன்மை - இந்த இரண்டோடும் உங்களைத் தொடர்புபடுத்தும்.
வளப்படுத்துங்கள்... கடவுள்தன்மையோடு தொடர்புகொள்ளுங்கள்... - வளப்படுத்தும் ஆற்றலையும், வாழ்வின் ஆற்றலையும் நிரூபிக்கும் இறுதி அறிக்கை இது.
நாம் யஜ்ஞங்கள் செய்யும்போது, உயர்ந்த ஸக்திகளிடம் சில குறிப்பிட்ட பிரார்த்தனைகளை வைக்கிறோம். அதனால் நாம் செய்யும் செயலுக்குத் தகுந்தாற்போன்ற பலனை வசீகரிக்கிறோம். நம்முடைய செயல்கள் யஜ்ஞத்தில் அர்ப்பணிக்கப்படுகிற ஆஹுதிகளைப்போன்றது.
நம் செயல்கள், நான்கு தத்துவங்களான ஒருங்குவித்தலுடனும் ஸ்ரத்தையுடனும் பொறுப்புணர்வுடனும் வளப்படுத்துதலுடனும் ஒருங்கிணைந்து இருக்கும்பொழுது, தீயில் சமர்ப்பிக்கப்படும் நெய்யைப் போன்று அவை செயல்படுகின்றன.
அதேபோல் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இயைந்து செல்லவில்லையென்றால், அது தீயில் போடும் சேற்றைப் போன்று செயல்படுகிறது. வளப்படுத்தும் யஜ்ஞங்களைச் செய்யாமலிருந்தால், நீங்கள் சுயநல மனப்பாங்கை உருவாக்குவதில்தான் தீவிரமாக இருப்பீர்கள். அதனால் நீங்கள் செலுத்தும் காணிக்கைகளும் அதே பலனையே உங்களுக்குக் கொண்டுவரும்.
தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்... ஒன்று நீங்கள் வளப்படுத்துவீர்கள் அல்லது வஞ்சிப்பீர்கள். நடுவழி என்பதே இல்லை.
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ - வளப்படுத்தும் யஜ்ஞங்கள் செய்யப்படுவதாலேயே மழை வர்ஷிக்கிறது, மழை சாத்தியமாகிறது.
மழையால் உணவு தானியங்கள் வளர்கின்றன.
உணவு தானியங்களால் நம் உடலும் மனமும் உயிருடன் நிலைபெற்றிருக்கின்றன.
உடலும் மனமும், ஒருங்குவித்தல், ஸ்ரத்தை, பொறுப்பெடுத்தல் மற்றும் வளப்படுத்துதலை முறையாகச் செய்யும்போது, அச்செயல்களே (கர்மங்களே) வளப்படுத்தும் யஜ்ஞங்களாகின்றன.
இதையே கிருஷ்ணர், யஜ்ஞ: கர்மஸமுத்பவ: (3.14) - யஜ்ஞம் கர்மத்திலிருந்து உண்டாகிறது- என்கிறார்.
இந்த வளப்படுத்தும் யஜ்ஞங்கள், சூட்சுமமான வெளிப்படாத (அவ்யக்த) சக்திகளைச் செயல்பரியத் தூண்டுகின்றன.
அதன் விளைவாக, ஸ்தூலமான மழை (வ்யக்த) வெளிப்படுகிறது. மழையால் உணவு தானியங்கள் சாத்தியமாகின்றன என்ற சுழற்சி தொடர்கிறது.
அவ்யக்தமும் வ்யக்தமும் ஒன்றையொன்று எவ்வாறு வளப்படுத்திக் கொள்கின்றன என்பதை இப்படத்தின்மூலம் புரிந்துகொள்வோம்.
ஆனந்த ஊற்று தன்னிச்சையாகவே
நம் ஒவ்வொருவரின் உள்ளேயும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
ங்யஜ்ஞம் சூட்சமமான வெளிப்படுத்தப்படாத(அவ்யக்த) சக்திகளைச் செயல்புரியத் தூண்டுகின்றன மழை(வ்யக்த) உணவு-தானியங்கள் உடல்-மனம் கர்மம் (ஒருங்குவித்தல், ஸ்ரத்தை, பொறுப்பெடுத்தல் மற்றும் வளப்படுத்துதல்) சூட்சுமமான வெளிப்படுத்தப்படாத (அவ்யக்த) சக்திகளைச் செயல்புரியத் தூண்டுகின்றன யஜ்ஞம் சி
ஸூக்ஷ்ம ஸக்தி, அவ்யக்த தன்னைத்தானே இந்தப் பொருள்சார்ந்த உலகில் எப்படி வெளிப்படுத்திக்கொள்கிறது(வ்யக்த) என்பதையும், பொருள்சார்ந்த உலகின் செயல்கள் ஸூக்ஷ்ம பூதங்களை எப்படிச் செயல்புரியத் தூண்டுகின்றன என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
இதை நாம் புரிந்துகொண்டால் போதும். நாம் செய்வது, அனுபவிப்பது எல்லாமே, நம்முடைய சொந்த செயல்களால் உண்டாக்கப்பட்டவைதான், நாம்தான் அனைத்திற்கும் மூல ஆதாரம், ஆகவே நாம்தான் நிகழும் அனைத்திற்கும் பொறுப்பு என்பதை உணர்ந்துவிடுவோம்.
ஒரு தலைவனாக இருப்பதற்கு
வேறெதுவும் தேவையில்லை,
தலைமைப்பண்புணர்வைத்தவிர!
பிரபஞ்சம் -ததாஸ்து எனும் ஒரு மிகப்பெரிய அலை
தனிமனிதர்களின் சிந்தனையிலும், செயலிலும் ஒருங்குவித்தலையும் ஸ்ரத்தையையும் கொண்டுவருவதற்கு பொறுப்பெடுத்து, அவர்களை வளப்படுத்தும்பொழுது, அந்தத் தனிமனித உணர்வுகள், கூட்டு உணர்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்வகையில் அவை ஒத்திசைந்து, விரிவடைந்து கொள்கின்றன.
உண்மையில், நம் எண்ணங்கள் மூலம் பருவநிலையில்கூட நம்மால் தாக்கத்தை நிகழ்த்த முடியும்.
பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடி, பிரபஞ்சத்தின் அபரிமிதமான ஆற்றலின்மேல் முழுநம்பிக்கைவைத்து, எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், தங்கள் எண்ணங்களை ஒருங்குவித்து, மற்றவர்களை வளப்படுத்த தங்கள் செயல்களை ஒருமுகப்படுத்தும்போது, பிரபஞ்சம் அவர்களுக்குப் பதிலளிக்கிறது.
அப்போது மழை பொழியும்! பயிர்கள் விளையும்! அபரிமிதமான பயன்கள் நிகழும்!
இப்பிரபஞ்சமே -ததாஸ்து - அப்படியே ஆகட்டும் எனும் ஒரு மிகப்பெரிய அலைதான்.
அதேபோலத்தான், ஒவ்வொரு செயலும் ஒரு விளைவைக் கொண்டிருக்கிறது. இதே விதியைக்கொண்டு, நீங்கள் விரும்பும் விளைவை உள்-உணர்வில் காட்சியாகக் காண்பதின்மூலம் அதை அப்படியே உருவாக்கலாம் என்று நான் சொல்கிறேன்.
உதாரணமாக, நீங்கள் தியானம் செய்துகொண்டிருக்கும்பொழுது, நீங்கள் ஆனந்தமயமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் மனக்காட்சியாகப் பார்த்தீர்களென்றால், அதன் விளைவாக ஆனந்தம் உங்களுக்குள்ளேயும், உங்களைச்சுற்றிலும் நிகழ்ந்தே ஆக வேண்டும்.
காரணம்தான் காரியத்தை ஏற்படுத்தியதுபோல் தெரியலாம். ஆனால் வாழ்க்கையில் காரணமும் காரியமும் ஒரு சுழற்சிதான்; ஒன்றையொன்று உருவாக்கிக்கொண்டும், ஒன்று மற்றொன்றினால் உருவாக்கப்பட்டுக் கொண்டுமாக, அது ஒரு சுழற்சியாகவே இருக்கிறது.
செயல், படைப்புக் கடவுளிடமிருந்து தோன்றுகிறது, அவர் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடமிருந்து தோன்றுகிறார். அதனால் எல்லா த்யாகங்களுமே ப்ரஹ்மத்திலிருந்து பரப்ரஹ்மத்திற்கேதான்.
பிரபஞ்ச சக்தியே ஒவ்வொரு நிமிடத்திற்கும் பொறுப்பு (3.17 - 3.20)
கிழக்கில் உள்ள ஞானிகள் நமக்கு மீண்டும், மீண்டும் இதையேதான் வலியுறுத்திச் சொல்கிறார்கள், ‘நீங்கள் ஆனந்தமயமானவர்களே’! இந்த ஸத்யத்தை நீங்கள் உணர்ந்துகொண்டபின், நீங்கள் உங்களுக்குள்ளேயே முழுமையான நிறைவுடையவர்களாக உணர்கிறீர்கள். ஏனென்றால் அடைய வேண்டிய பூர்ணத்வமே நீங்கள்தான்! அதை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்!
ஒவ்வொரு கணமும் தன்னுடைய அரவணைப்பில், பிரபஞ்ச இருப்பே பொறுப்பெடுத்து உங்களைக் கவனித்துக்கொள்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்கிற இந்த நிதர்சனமான உண்மையே, இருப்புத்தன்மை இப்போது நீங்கள் இங்கே, இந்த வடிவில், இந்த இடத்தில் இருக்க வேண்டுமென விரும்புகிறது என்பதை நிரூபிக்கிறது.
வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு இதுவே உறுதியான காரணமாகிறது!
உண்மையில், அந்த ஆனந்த ஊற்று தன்னிச்சையாகவே நம் ஒவ்வொருவரின் உள்ளேயும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தன்னிச்சையாக நிகழ்கிறது என்று நான் சொல்லும்போது, எந்தக் காரணமும் இல்லாமல் அது நிகழ்கிறது என்பதையே குறிப்பிடுகிறேன்.
ஆனால் நாம் எப்போதுமே, ‘இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது?’ என்ற சிடுசிடுப்புடன், எந்தவொரு காரணமும் இல்லாமல், மகிழ்ச்சியற்றவராக, துக்கத்துடன் இருக்கிறோம். ஆனால் சந்தோஷமாக இருக்க ஏதோ காரணம் வேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம்.
உங்கள் இருப்புத்தன்மையில் ஒவ்வொரு கணமும் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்த ஊற்றை நிறுத்த முயற்சி எடுப்பவர் நீங்கள்தான்.
முதல் நிலை த்யான முகாமான நித்யானந்த த்யான யோகாவில் நம் உடலில் உள்ள ஏழு சக்தி மையங்களைப் பற்றியும் நமக்குள் பொங்கிக்கொண்டே இருக்கும் ஆனந்த ஊற்றைத் தடுத்துநிறுத்துவதை நிறுத்தத்திற்குக் கொண்டுவருவது எப்படி என்பதைப் பற்றியும் கற்றுத்தரப்படுகிறது.
இரண்டாம் நிலை முகாமான நித்ய க்ரியா யோகா இதைத் திரும்ப உறுதிப்படுத்துகிறது. இந்த முகாமில், உங்களுக்குள் நிலையாகப் பொங்கிக்கொண்டிருக்கும் இந்த ஆனந்த ஊற்றை தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றியும், நிலையாக எப்போதும் நித்யானந்த நிலையில் இருப்பது எப்படி என்பது பற்றியும் உணர்த்தப்படுகிறது.
இங்கே கிருஷ்ணர் ஒரு அழகான செய்தியைச் சொல்கிறார்.
அரசர் ஜனகர், ஒரு உண்மையான கர்மயோகிக்கு உதாரண புருஷராக இருக்கிறார். அவர், தன்னலமில்லா ஸ்ரத்தையுடன் செயல்களைச் செய்து, தம்மையும் தம்மைச்சுற்றியுள்ள உலகையும் தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டேயிருக்கும் ஒரு பொறுப்பை எடுத்த கர்மயோகி! அவர் ஒரு பெரும் நாட்டையே ஆட்சி செய்தார், இருந்தும் பற்றில்லாமல், சுதந்திரமாக இருந்தார்.
ஒரு விவேகி பற்றில்லாமல் செயலைச்
செய்துகாட்டுவதன்மூலம், மற்றவர்களுக்கு
தாமே ஒரு முன்னுதாரணமாக
இருக்கவேண்டும்.
பொறுப்பெடுத்தல், தலைமைப்பண்பை விழிக்கச்செய்யும் யுக்தி (3.21- 3.25)
கிருஷ்ணர் இங்கு, ஒரு தலைவரானவர் பொறுப்பான முறையில் செயல்பட வேண்டியதின் தேவை என்ன என்பதைப் பற்றிய நடைமுறை அம்சங்களைப்பற்றிப் பேசுகிறார்.
ஏனென்றால், ஒரு தலைவர் செயல்களில் ஈடுபடாவிட்டால், செயலற்றதன்மையில் வீழ்ந்துவிட்டால், மற்றவர்களைப் பொறுப்புள்ளவர்களாக்கும் பொறுப்பெடுக்காவிட்டால், மக்கள் அவரையே தங்களுடைய முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு செயலற்றதன்மையில், தமஸில் விழுந்துவிடுவார்கள்.
பொறுப்பெடுக்கும் பொழுது, ஈஸ்வரத்துவத்தை தலைமைப் பண்புணர்வை உணர்வீர்கள். ஒரு தலைவனாக இருப்பதற்கு வேறெதுவும் தேவையில்லை, தலைமைப்பண்புணர்வைத்தவிர! தலைவன் எனும் அந்தஸ்த்தில் மட்டுமே இருப்பவர் ஒரு அடிமையாகவே இருப்பார். தலைமைப்பண்புணர்வில் இருப்பவர் மட்டுமே ஈஸ்வரத்துவத்தில் இருப்பார், அவர் தன்னைபோன்றே தலைமைப்பண்புணர்வுகொண்ட தலைவர்களை உருவாக்குவதற்குப் பொறுப்பெடுப்பார்.
தலைமைப்பண்புணர்வு உங்களுக்கு வெற்றியை மட்டும் தருவதில்லை, திருப்தியுணர்வையும் கொண்டுவரும். அதனால், முதலில் அடையப்பட வேண்டியது ஈஸ்வரத்துவமே!
ஈஸ்வரத்துவம் - தலைமைப்பண்புணர்வு என்பது சுதந்திரமான புத்திசாலித்தனம். அதை மற்றவரிடமிருந்து மறைக்க முடியாது. ஈஸ்வரத்துவம் உங்களிடம் இருந்தால், உலகமே நீங்கள் பெற்றிருப்பதை அறிந்துகொள்ளும், உங்கள் சொல்லுக்குப்
ஆசைகள் பூர்த்தியடைந்த
பூர்ணத்துவநிலையை அடைந்த ஒருவர்,
தம்மைக் கர்த்தாவாகக் கருதுவதில்லை.
பணியும். நீங்கள் வீதியில் நடந்தாலும், மற்ற மனிதர்கள் மத்தியிலும் தனித்துவமிக்கவராக இருப்பீர்கள்.
தலைமைப்பண்புணர்வில், பொறுப்பெடுத்தலில் இருக்கும் கிருஷ்ணர், அர்ஜுனனையும் பொறுப்பெடுக்கச் சொல்கிறார். மாமனிதர் ஒருவர் எச்செயலை செய்தாலும், அதை மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என கிருஷ்ணர் மிக அழகாக அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.
யாரெல்லாம் தம்முடைய நிலையை அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்குத் தம்முடைய கருணையின் காரணத்தினால், பொறுப்பெடுத்தல் என்னும் அந்தப் பாதையைக் காட்டி, அவர்களை வளப்படுத்துகிறார்.
இந்தப் பூமண்டலம், விண்ணுலகமான சொர்க்கம் மற்றும் பாதாள உலகம் ஆகிய இம்மூன்று உலகங்களிலும் அவர் அடைய வேண்டியது என்று எதுவுமில்லை என்றும், அவரைக் கட்டுப்படுத்தும் கடமை என்று ஒன்று இல்லை என்றும் கிருஷ்ணர் சொல்கிறார். இதில் அவருக்கு லாபமோ, நஷ்டமோ அல்லது ஏதோ ஒரு செயலைச்செய்ய வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமோ இல்லையென்றாலும்கூட அவர் தொடர்ந்து செயலாற்றி, இவ்வுலகை வளப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். ஏன்?
காரணம், மக்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அவர் எதைச் செய்கிறாரோ, அதை அப்படியே பின்பற்றுவார்கள். இப்போது அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு அவருடையதாகிறது. அதனால் அவர் தமக்காக வேலைசெய்ய வேண்டிய காரணம் எதுவும் இல்லையென்றாலும்கூட, அவரைப் பின்பற்றும் மக்களின் வளத்திற்காகச் செயல்களைச் செய்கிறார்.
'தாம் முன்னின்று வழிநடத்தவேண்டும்' என்ற மற்றவர்களின் அந்யகாரத்தை ஏற்கிறார். அதுவே பகவான் கிருஷ்ணரின் ஸ்ரத்தை, பொறுப்புணர்வு.
விவேகியின் பங்கு (3.26 - 3.29)
அறியாமையில் உள்ள மனிதர் தமக்குள், 'நான் இந்தச் செயலைச்செய்கிறேன், அதனால் அதன் பலனைச் சந்தோஷமாக அனுபவிப்பேன்' என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் ஒரு விவேகமான மனிதர், அறியாமையில் இந்த நம்பிக்கைக்கு கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது.
அதற்குப்பதிலாக அந்த விவேகி, தம்முடைய பொறுப்புக்களைத் தலைமைப்பண்புணர்விலிருந்து தளராமல் செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றைப் பற்றில்லாமல் செய்துகாட்டுவதன்மூலம், மற்றவர்களுக்கு தாமே ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
விவேகியானவர், பற்றுடன் செய்யப்படும் செயல்களைப் பற்றிக் குற்றம் சொல்வாரேயானால், அறியாமையில் இருக்கும் மனிதர், இதைத் தவறாகப் புரிந்துகொண்டு தம்முடைய நடைமுறை கடமைகளையேகூட விட்டுவிட முடிவுசெய்துவிடுவார்.
ஒரு சின்ன உதாரணத்தின்மூலம் இதை விளக்குகிறேன். ஒரு குழந்தையிடம், அதன் பொம்மைகள் சாதாரணமானவைதான், அவை ஒன்றும் விலைமதிக்கமுடியாத பொருட்கள் அல்ல, மிக உயர்ந்தது அல்ல என்று விளக்க முடியுமா? முடியாது! நிச்சயமாக குழந்தையால் அதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இதைப் புரிந்துகொள்ள குழந்தை வளரவேண்டியிருக்கிறது. குழந்தை வளர்ந்து மனமுதிர்ச்சி அடையும்போது, தானாகவே பொம்மைமேல் உள்ள பிடிப்பை விட்டுவிடும்.
அதைப்போலவே, அறியாமையில் இருக்கும் நபரும் முதலில் செயல்களைப் பற்றுதலோடுதான் செய்வார். ஆனால் நாளடைவில், விவேகியானவர் தம்முடைய செயல்களால் பாதிக்கப்படாமல் எப்போதும் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்து, தாமும் அதேபோல் ஆனந்தமாக இருந்திட அறியாமையில் இருக்கும் நபரும் ஆர்வம்கொள்வார். விவேகியின் உற்சாகத்திற்குப் பின்னால் உள்ள ரகசியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவார். பிறகு விவேகியின் முன்னுதாரணத்தால், அறியாமையில் இருப்பவர் தாமாகவே பற்றற்று வேலைசெய்யும்தன்மையை நோக்கி ஈர்க்கப்படுவார்.
கடவுளிடம் நாம் தொடர்புகொள்ளும் முறையையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள், நம்மில் பெரும்பாலானோர் கடவுளிடம் ஏதாவது பெறவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறோம். நம்முடைய சில ஆசைகளை நிறைவேற்றும்படியும், நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும்படியும்தான் கடவுளிடம் வேண்டுகிறோம்.
ஆரம்பத்தில் கடவுளிடம் நாம் இது போன்று உறவுகொள்வது மிகவும் சரியே. நீங்கள் பிரார்த்தனைசெய்து விரும்பிக் கேட்டவை எல்லாம், உங்களுக்குக் கிடைத்துவிடும்போது உங்கள் நம்பிக்கை வளர்கிறது. இதுதான் மிகவும் முக்கியமான திருப்பம்.
மூன்று நாட்களாக பட்டினிகிடக்கும் ஒருவரை நீங்கள் த்யானம் செய்யச் சொன்னால், அவரால் அது முடியுமா? முடியாது!
அவருடைய தேவைகள் வேறு வகையானவை. அவரை நீங்கள் த்யானம் செய்யச் சொன்னீர்களென்றால், நீங்கள் முட்டாளாவீர்கள். இப்படிப்பட்டவருக்கு இப்போது வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது சாப்பாட்டிற்கான ஏதோ ஒருவழி. அதற்குப்பிறகுதான் அவருக்குத் த்யானத்தைப் பற்றிச்சொல்ல முடியும்.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து ஒரு செயலைச் செய்துகொண்டிருக்கும்போது, விவேகியானவர் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அந்தச் செயலானது பற்று இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது விவேகிக்குத் தெரிந்திருந்தாலும்கூட, அவரைத் தொந்தரவுசெய்யாமல் இருக்க வேண்டும்.
மந்தமாக உட்காராமல், அந்த நபர் ஏதோ ஒரு வேலையாவது செய்கிறாரே, அது போதும்! அவர் ரஜஸில் தீவிரமாகச் செயல்புரியும்தன்மையில் இருக்கிறார். இது, சோம்பேறித்தனமான தமஸைவிட நல்லது.
ஸ்த்தை என்னும் மலரின் நறுமணமே துணிவு. ஆமாம்! அவரை ரஜஸிலிருந்து பற்றற்ற நிலைக்கு, நிலையான ஸத்வ நிலைக்கு, எதிர்பார்ப்பற்று செயல்புரியும் நிலைக்கு, அமைதி நிலைக்கு அழைத்துச்செல்ல, அவருக்கு ஒருவழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அது குருவின் வேலை.
முன்ஜென்ம செயலே, இந்த ஜென்மத்தின் மன அமைப்பு
நாம் எல்லோரும் நம் அடிப்படை இயல்பினால், இயற்கையினால், குணங்களால் ஆளப்படுகிறோம். இது குண என்று ஸம்ஸ்க்ரு'தத்தில் சொல்லப்படுகிறது. முன் ஜென்மங்களில் நாம் வாழ்ந்த முறையும் இந்த ஜென்மத்தில் இதுவரை நாம் வாழ்ந்த முறையும்தான் நம் குணங்களை வரையறுக்கிறது; நிர்ணயிக்கிறது.
பிறவிகள் தோறும் நம்மோடு கொண்டுவரப்பட்ட வாஸனைகள் என்றழைக்கப்படும் நம்முடைய மன அமைப்பு அல்லது நம்முடைய மனத்தின் சாரம்தான், நாம் யார், இந்தப் பிறவியில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதோடு, நம்முடைய அடுத்த பிறவியில் நடக்கப்போகிற நிகழ்வுகளையும் தீர்மானம் செய்கிறது.
வாஸனாவில் இருந்து பிறக்கும் ஆசைகள், அவற்றை நிறைவேற்றுவதற்கான சக்தியையும் தங்களுடனேயே எடுத்துக்கொண்டு வருகின்றன. உங்கள் வாஸனாவைப் பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தீர்களென்றால், அவற்றை நீ ங்கள் நிறைவேற்றிவிட முடியும். இந்த வாஸனாவும் கர்மாவும் முழுமையாக நிறைவேற்றப்படும்பொழுது, அவை எந்தவித தடயங்களையும் விட்டுவைக்காமல் கரைந்து மறைந்துவிடுகின்றன.
ஆசைகள் பூர்த்தியடைந்த பூர்ணத்வநிலையை அடைந்த ஒருவர், தம்மைச் செயலைச்செய்பவராகக் கருதுவதில்லை, செயல்களைச்
செயலற்று இருப்பது நம்முடைய
இயல்பு அல்ல. செயல்களைச்
செய்வதே நம்முடைய இயல்பு.
செய்வது அவர் இல்லை என்பதை உணர்ந்துகொள்கிறார்.
