அத்தியாயம்-2: ஸாங்க்ய யோகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான தீர்வு
நீங்கள் தெய்வீகமானவர்கள்!
நீங்கள் இப்பொழுது
எந்த நிலையில் இருந்தாலும் சரி,
உங்களுக்குள் நீங்கள்
அதே தெய்வீகத்தன்மையில்தான்
இருக்கிறீர்கள்.
உங்கள் தெய்வீக ஆற்றலைக்
கட்டவிழ்த்து
எப்படி வெளிக்கொணர்வது
என்பது பற்றி
கிருஷ்ணர் உங்களுக்குச் சொல்லுகிறார்.
ஸ்லோகங்கள்
அத த்விதீயோண்ட்ட்யாய:
ஸாங்க்ய யோக:
ஏ
ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ரு’பயாண்ண்விஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம் ந
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதன: நந 2.1
ஸஞ்ஜயன் சொன்னது 2.1 இரக்கத்தாலும் துயரத்தாலும் அர்ஜுனனின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்க, கிருஷ்ணர் இவ்வாறு பேசுகிறார்.
ஸ்ரீபகவாநுவாச
குதஸ்த்வா கஶ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம் ந
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந நந 2.2
ஸ்ரீபகவான் சொன்னது 2.2 இந்த இக்கட்டான வேளையில் எங்கிருந்து உனக்கு இப்படியொரு மனச்சோர்வு வந்தது, அர்ஜுனா, நீ உன்னுடைய தகுதிக்கு ஏற்றபடி நடந்துகொள்ளவில்லை. இது, ‘தன்னை அறிவதிலிருந்து’ உன்னை விலக்கிவிடும்.
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே ந
க்ஷுத்ரம் ஹ்ரு’தயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப நந
2.3
2.3 ஓ பார்த்தா, எதிரிகளை அழிப்பவனே! பயத்தைக் கண்டு பயந்துவிடாதே, அது உனக்கு அழகல்ல. இந்தப் பலவீனமான மன அமைப்பை விட்டுவிட்டு, எழுந்துநில்!
அர்ஜுந உவாச
கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந ந
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந ந
அர்ஜுனன் சொன்னது.
2.4 ஓ மதுவை அழித்தவனே! என்னுடைய வணக்கத்திற்கு உரியவர்களான பீஷ்மரையும் துரோணரையும் எதிர்த்து நான் எப்படிப் போர்செய்ய முடியும்?
குருநஹத்வா ஹி மஹாநுபாவாந்
ஸ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே ந
ஹத்வார்த்தகாமாம்ஸ்து குருநிஹைவ
புஞ்ஜீய போகாந்ருதிரப்ரதிக்தான் ந
2.5 இவர்களைப்போன்ற மேலான ஆச்சாரியர்களை அழித்துவிட்டு வாழ்வதைவிட பிக்ஷையெடுத்து வாழ்வதே சிறந்தது. இவர்களைக் கொன்றபிறகு, நான் அனுபவிக்கும் சொத்துக்களும் ஆசைகளும் இவர்களின் ரத்தத்தால் கறைபடிந்ததாகவே இருக்கும்.
ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு: ந
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ் -
தேண்வஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா: ந
2.6 நம்மை அவர்கள் வீழ்த்துவது நல்லதா அல்லது நாம் அவர்களை வீழ்த்துவது நல்லதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங்கள் முன் இருக்கும், திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொன்றுவிட்டு நாங்கள் உயிர்வாழ விரும்பமாட்டே டாம்.
கார்ப்பண்யதோஷோபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: ந
யச்ச்ரேய: ஸ்யாந் நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம் நந 2.7
2.7 என் இதயம் துக்கத்தால் நிறைந்து இருக்கிறது. எனது கடமை எது என்று தெரியாமல் என் மனம் கலங்கியிருக்கிறது. நான் எதைச் செய்ய வேண்டுமென்று தயவுசெய்து சொல்லுங்கள். நான் உங்களுடைய சீடன். நான் உங்களிடம் தஞ்சம் அடைந்துள்ளதால் எனக்கு வழிகாட்டுங்கள்.
ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம் ந
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம் நந 2.8
2.8 இந்தப் பூலோகத்தில் எல்லையில்லாத செல்வங்களையும், ஐஸ்வர்யங்களையும் நான் அடைந்தாலும், மேல் உலகத்தில் தேவர்களை ஆளும் பதவி கிடைத்தாலும் என் புலன்களை எரிக்கும் இந்தத் துக்கத்திலிருந்து எனக்கு விமோசனம் கிடைக்குமா?
ஸஞ்ஜய உவாச
ஏவமுக் Cinema 3:34 த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ: பரந்தப: ந
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக் Cinema 3:34 த்வா தூஷ்ணீம் பபூவ ஹ நந 2.9
ஸஞ்ஜயன் சொன்னது
2.9 அதற்குப்பிறகு அர்ஜுனன் கிருஷ்ணரிடம் "கோவிந்தா, நான் போரிடமாட்டேன்," என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.
தமுவாச ஹ்ருஷீகேஸ: ப்ரஹஸந்நிவ பாரத ந
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச: நந 2.10
2.10 இரண்டு படைகளுக்கும் நடுவில் துக்கத்தால் துவண்டுபோய் இருக்கும் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சிரித்தவண்ணம் பேசத் தொடங்கினார்.
ஸ்ரீபகவாநுவாச
அஸோச்யாநந்வஶோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஶ்ச பாஷஸே ந
கதாஸூநகதாஸூம்ஶ்ச நாநுஶோசந்தி பண்டிதா: நந 2.11
பகவான் சொன்னது
2.11 யாரைப் பார்த்து நீ துக்கப்பட வேண்டிய தேவை இல்லையோ, அவர்களைப் பார்த்து நீ துக்கப்படுகிறாய். ஆனாலும் நீ உயர்ந்த கருத்துக்களைப்பேசுகிறாய். கற்றறிந்தவர்கள் இறந்தவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள், உயிரோடு இருப்பவர்களுக்காகவும் துக்கப்பட மாட்டார்கள்.
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா: ந
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் நந 2.12
2.12 கடந்தகாலத்தில் நான் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததில்லை. அதேபோல்தான் நீயும் இங்கிருப்பவர்களும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறீர்கள். இனிவரும் எதிர்காலத்திலும் நாம் எல்லோரும் இருப்போம்.
தேஹிநோண்ஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா ந
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி நந 2.13
2.13 எப்படி இந்த ஆத்மா குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய அனுபவங்களைக் கடந்துசெல்கிறதோ, அதேபோல்தான் அது, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலிற்குக் கடந்துசெல்கிறது. தனக்குள் மையத்தில் நிலைபெற்றிருக்கும் மனிதன் இந்த மாற்றங்களைக் கண்டு பயப்படுவதில்லை.
மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஶீதோஷ்ணஸுகது:கதா: ந
ஆகமாபாயிநோணித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத நந 2.14
2.14 ஓ குந்தியின் மைந்தனே! ஐம்புலன்களின் தொடர்பால் வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம் தோன்றுகிறது. இவற்றிற்கு ஒரு தோற்றமும் முடிவும் இருக்கிறது. ஓ பாரதா, இவை நிலையானதல்ல. அதனால் அவற்றைத் தைரியமாக எதிர்கொள்.
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப ந
ஸமது:கஸுகம் தீரம் ஸோsம்ரு'தத்வாய கல்பதே நந 2.15
2.15 வீரர்களில் சிறந்தவனே! தன்னுள் நிலைபெற்று இருக்கும் ஒருவனை இந்த அனுபவங்கள் பாதிக்காது. அப்படிப்பட்ட மனிதனுக்குச் சுகமும் துக்கமும் ஒன்றுதான். அவன் ஞானத்திற்குத் தகுதி உடையவராகிறான்.
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: ந
உபயோspi த்ரு'ஷ்டோsந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி: நந
2.16
2.16 'இருப்பில்' இல்லாததற்கு என்றுமே இருப்பு என்பது இல்லை. 'இருப்பில்' இருப்பதற்கு என்றுமே இறப்பு இல்லை. இந்த இரண்டின் தன்மையை உணர்ந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள் ஆகிறார்கள்.
அவிநாஸி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம் ந
விநாஸமவ்யயஸ்யாஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி நந 2.17
2.17 இந்த உடலும் உலகமும் எதனால் வியாபிக்கப்பட்டுள்ளதோ அதை அழிக்க முடியாது என்பதை அறிந்துகொள். எதனாலும் அதை அழிக்க முடியாது; அது நிலையானது; அது அழிவற்றது.
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண: ந
அநாஸிநோsSecretப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத நந 2.18
2.18 சக்தியின் ஸ்தூல வெளிப்பாடாக இருக்கும் இந்த உடல்கள் அழிந்துவிடும். ஆனால் சக்தி நிலையானது. அதை அழிக்க முடியாது. அதனால், ஓ பாரதா, நீ போர்செய்.
ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம் ந
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே நந 2.19
2.19 எவன் இந்த ஆத்மாவைக் கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவைக் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ அந்த இருவருமே அறியாதவர்கள். ஏனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை; யாராலும் கொல்லப்படுவதுமில்லை.
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் -
நாயம் பூத்வா பவிதா வா ந பூய: ந
அஜோ நித்ய: பாஶ்வதோயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஶரீரே ந 2.20
2.20 ஆத்மா பிறப்பதில்லை. அது இறப்பதும் இல்லை. ஒரு காலத்தில் இல்லாதிருந்து பிறகு பிறந்தது இல்லை. அது என்றும் இல்லாமல் போகப்போவதும் இல்லை. அது பிறவாதது. நிலையானது, மாறாதது மற்றும் புராதனமானது. உடல் கொல்லப்படும்போதும், ஆத்மா கொல்லப்படுவதில்லை.
வேதாவிநாஶிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம் ந
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம் ந 2.21
2.21 ஓ பார்த்தா, ஆத்மா அழிவில்லாதது, நித்யமானது, பிறப்பில்லாதது, மாறாதது என்பதை உணர்ந்துகொண்ட மனிதன் எப்படி மற்றவரைக் கொல்வான் அல்லது மற்றவர்களைக் கொல்லக் காரணமாக இருப்பான்?
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோண்பராணி ந
ததா ஶரீராணி விஹாய ஜீர்ணாந் -
யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ ந 2.22
2.22 மனிதன் எப்படிப் பழைய ஆடையைக் கழற்றிவிட்டுப் புதிய ஆடையை உடுத்திக்கொள்கிறானோ, அதேபோல் ஆத்மாவானது பழைய உடலை விட்டுவிட்டு புதிய உடலை எடுத்துக்கொள்கிறது.
நைநம் சிந்தந்தி ஶஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: ந
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஶோஷயதி மாருத: ந 2.23
2.23 ஆத்மாவை ஆயுதங்களால் வெட்ட முடியாது; நெருப்பால் சுட முடியாது; தண்ணீீரால் நனைக்க முடியாது; காற்றால் உலர்த்த முடியாது.
அச்சேத்யோSயமதாஹ்யோSயமக்லேத்யோSஶோஷ்ய ஏவ ச ந
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோSயம் ஸநாதந: நர
2.24 ஆத்மாவை உடைக்க முடியாது; எரிக்க முடியாது; கரைக்க முடியாது; உலர்த்த முடியாது; அது நிலையானது. எங்கும் வியாபித்து இருக்கிறது; நிலையானது; அசைக்க முடியாதது; புராதனமானது.
அவ்யக்தோSயமசிந்த்யோSயமவிகார்யோSயமுச்யதே ந
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஶோசிதுமர்ஹஸி நர
2.25 ஆத்மா உருவெடுக்காதது; நினைத்துப் பார்க்க முடியாதது; மாற்ற முடியாதது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு புரிந்துகொண்டபிறகு நீ துக்கப்படுவது பொருத்தமுடையதாகாது.
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ரு’தம் ந
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஶோசிதுமர்ஹஸி நர
2.26 சக்திவாய்ந்த ஆயுதங்களைக்கொண்டவனே, ஆத்மாவானது தொடர்ந்து பிறக்கிறது, தொடர்ந்து இறக்கிறது என்று நினைத்தாலும் அதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ரு’த்யுர்த்ருவம் ஜந்ம ம்ரு’தஸ்ய ச ந
தஸ்மாதபரிஹார்யேSர்தே ந த்வம் ஶோசிதுமர்ஹஸி நர
2.27 உண்மையில், எது பிறந்ததோ அதற்கு இறப்பு நிச்சயம். எது இறந்ததோ அதற்குப் பிறப்பு நிச்சயம். அதனால் தவிர்க்க முடியாதவற்றிற்காக நீ துக்கப்படுவது பொருத்தமானதன்று.
அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத ந
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா நர
உ.28 ஓ பாரதா! உயிர்கள் தொடக்கத்தில் வடிவமற்று இருக்கின்றன. முடிவிலும் வடிவமற்று இருக்கின்றன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் வடிவம் பெற்று 'இருப்பதுபோல்' இருக்கிறது. இதில் நாம் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?
ஆஸ்ச்சர்யவத் பஶ்யதி கஸ்ச்சிதேந -
மாஸ்ச்சர்யவத்வததி ததைவ சாந்ய: ந
ஆஸ்ச்சர்யவச்சைநமந்ய: ஶ்ரு'ணோதி
ஶ்ரு'த்வாப்யேநம் வேத ந சைவ கஸ்ச்சித் நந 2.29
உ.29 இதை அற்புதம் என்று ஒருவன் பார்க்கிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் பேசுகிறார், 'இது அற்புதம்' என்று இன்னொருவர் கே ட்கிறார். இதையெல்லாம் கேட்ட பிறகுங்கூட, ஒருவன்கூட இதைப் புரிந்துகொள்ளவில்லை.
தேஹீ நித்யமவத்யோயம் தேஹே ஸர்வஸ்ய பாரத ந
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஶோசிதுமர்ஹஸி நந 2.30
உ.30 ஓ பாரதா, உடலில் வாழும் இதை யாராலும் அழிக்க முடியாது. படைப்பில் எந்த உயிருக்காகவும் கவலைப்படாதே!
ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி ந
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோண்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே நந 2.31
உ.31 ஒரு க்ஷத்ரியனாக உன் கடமையைச் செய்ய வேண்டும். நேர்மையான போரில் ஈடுபடுவதைவிட ஒரு க்ஷத்ரியனுக்கு சிறந்தது வேறொன்றுமில்லை. அதற்காக நீ தயங்கக்கூடாது.
யத்ரு'ச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ரு'தம் ந
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ரு'ஶம் நந 2.32
உ.32 ஓ பார்த்தா, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட போரில் கலந்துகொள்ளும் க்ஷத்ரியர்கள் உண்மையில் பாக்கியவான்கள். இது, சொர்க்கத்தின் வாசலை அவர்களுக்குத் திறக்கச் செய்கிறது.
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி ந
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா
பாபமவாப்ஸ்யஸி ந௩ 2.33
2.33 இந்தத் தர்மப்போரில் நீ போர்புரியாமல் இருப்பாயேயானால், கடமையைச் செய்ய தவறிய பாவம் உன்னை வந்தடையும். உன் புகழ் அழியும்.
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேண்வ்யயாம் ந
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே ந௩ 2.34
2.34 உனக்கு ஏற்படும் மாறாத இந்த அவமானத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். புகழை உடையவனுக்கு அதை இழப்பது என்பது மரணத்தைவிடக் கொடுமையானது.
பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா: ந
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம் ந௩ 2.35
2.35 நீ ஒரு கோழை என்பதால்தான் போரில் ஈடுபடவில்லை என்று மாவீரர்கள் நினைப்பார்கள். உன்னைப் பற்றியும், உன் வீரத்தைப் பற்றியும் கடந்தகாலத்தில் உயர்வாக மதித்தவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் உன்னைத் தாழ்வாக மதிப்பார்கள்.
அவாச்யவாதாம்ஸ்ச பஹூந் வதிஷ்யந்திதவாஹிதா: ந
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம் ந௩ 2.36
2.36 உன்னுடைய எதிரிகள் உன் திறமையைப் பழித்து, பேசக்கூடாத வார்த்தைகளால் பழித்துப்பேசி உன்னை அவமானப்படுத்துவார்கள். இதைவிட வலியைத் தரக்கூடியது வேறு ஏதாவது இருக்க முடியுமா?
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் ந
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ரு'தநிஸ்சய: ந௩ 2.37
2.37 யுத்தத்தில் கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய், வெற்றியடைந்தால் இந்த உலகத்தை நீ அனுபவிப்பாய். ஓ குந்தியின் மகனே! போரிட எழுந்து நில்.
ஸுக₂து:கே₂ ஸமே க்ரு'த்வா லாபா₂லாபௌ⁴ ஜயாஜயௌ ந
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ந
2.38 சுகம் வலி, லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி இவை எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள். போரின் நீயதியைக் காப்பதற்காகப் போரிடு. உனக்கு எந்தப் பாவங்களும் வராது.
ஏஷா தேண்பிஹிதா ஸாங்க்₂யே பு³த்திர்யோகே த்விமாம் ஸ்ரு'ணு ந
பு³த்³த்யா யுக்தோ யயா பார்த கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி ந
2.39 ஓ பார்த்தனே! இதுவரை உனக்கு ஸாங்க்ய யோகத்தைப் (ஞானயோகம்) பற்றிய விஷயங்கள் சொல்லப்பட்டன. இனி கர்மயோகத்தைப் பற்றிய விஷயங்களைக் கேள். இதைத் தெரிந்துகொள்வதன்மூலம் கர்மபந்தத்தை முழுமையாக விலக்கிவிடுவாய்.
நேஹாபிக்ரமநாஶோண்ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே ந
ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் ந
2.40 இந்தக் கர்மயோகம் வீண்போவதும் இல்லை; ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தப் போவதும் இல்லை. இந்தக் கர்மயோகம் என்கிற தர்மத்தைச் சிறிதளவு கைக்கொண்டால்கூடப்போதும், இது மிகப்பெரிய பயத்திலிருந்து காப்பாற்றுகிறது.
வ்யவஸாயாத்மிகா பு³த்திரேகேஹ குருநந்தந ந
ப³ஹுஶாகா ஹ்யநந்தாஶ்ச பு³த்தயோண்வ்யவஸாயிநாம் ந
2.41 குரு வம்சத்தில் உதித்தவனே, இப்போது உனக்குத் தேவை ஒருமுகப்பட்ட தீர்மானமான புத்தி ஒன்றே! மனஉறுதி இல்லாத மனிதர்களுடைய புத்திகள், பல நோக்கங்களுடையனவாகவும் முடிவற்றவையாகவும் இருக்கின்றன.
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித: ந
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதின: நந 2.42
2.42 ஓ, பார்த்தா! வேதங்களின் புகழ்ச்சிமிக்க வார்த்தைகளிலேயே இன்பம் காணும் முட்டாள்கள், "இதைத்தவிர வேறு ஒன்றுமில்லை,” என்று சொல்கிறார்கள்.
காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம் ந
க்ரியাবিশேஷபஹுலாம் போகைச்வர்யகதிம் ப்ரதி நந 2.43
2.43 சொர்க்கம்போன்றமேல் உலகங்களையும், மேலான பிறப்பு மற்றும் அதிகாரம்போன்ற இந்தக் கீழ் உலக செல்வங்களையும் அடைவதற்கு உதவுகிற பல்வேறு விதமான செயல்களைப் பற்றிப் பேசுகிற வே தங்களின் மலர்போன்ற பேச்சுகளில் மிகக்குறைந்த அறிவை உடைய அறிவிலிகள் பற்றுதல் வைக்கின்றனர். புலன்களின் ஆசைகளைத் திருப்திபடுத்திக்கொண்டும், செல்வவளம்மிக வாழ்க்கையினை வாழ்வதும்தவிர, வேறு சிறந்தவாழ்க்கை இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள்.
போகைச்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ரு’தசேதஸாம் ந
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே நந 2.44
2.44 இவ்வாறு வேறுநோக்கங்களில் மனம் திருப்பப்பட்டவர்களும், உறுதியற்றவர்களும் தியானத்திற்கும், ஸமாதி அனுபவத்திற்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதில்லை.
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந ந
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்த்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்
நந 2.45
2.45 ஓ அர்ஜுனா, வேதங்கள் சொல்கிற முக்குணங்களையும் கடந்தவனாக இரு; இருமைகளிலிருந்துவிடுபட்டவனாய், ஸத்வ குணத்தில் நிலைபெற்றவனாய், பொருள் சேர்ப்பது, அதைக் காப்பாற்றுவது என்கிற எண்ணங்களிலிருந்துவிடுபட்டவனாய், தன்னிலே நிலைகொண்டவனாய் இரு.
யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே ந
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத: நந 2.46
2.46 ஏற்கெனவே வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஒருவனுக்கு கிணற்று நீரினால் என்ன பலனோ, அதேபோலத்தான் தன்னை உணர்ந்துகொண்ட துறவி, வேதங்களினால் மிகக்குறைந்த பலனே அடைகிறான்.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந ந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோண்ஸ்த்வகர்மணி நந 2.47
2.47 உனக்குக் கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பலன்களில் ஒருகாலும் உரிமையில்லை. பலன்களே உன் நோக்கமாக இருக்கக் கூடாது; இதற்காக நீ செயலற்றதன்மையில் வீழ்ந்துவிடவுங்கூடாது.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய ந
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே நந
2.48
2.48 ஓ தனஞ்ஜயா! நீ செய்ய வேண்டிய கர்மங்களை, யோகத்தில் மையம்கொண்டவனாய், பலன்களில் பற்றில்லாமல் செய். வெற்றி தால்விகளில் சமநிலையுடையவனாக இரு. சமபாவனைதான் யோகம் என்று சொல்லப்படுகிறது.
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய ந
புத்தௌ ஸரணமன்விச்ச க்ரு'பணா: பலஹேதவ: நந 2.49
2.49 இந்தச் சமபாவனையான புத்தியோகத்தைக்காட்டிலும் பலன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது. ஆகவே அர்ஜுனா, ஸமபுத்தியில் தஞ்சம் அடைவாய். பயன் கருதுபவர்கள் இரங்கத்தக்கவர்கள்.
புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ரு'ததுஷ்க்ரு'தே ந
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம் ந
2.50 ஸமபுத்தியுடையவன் புண்ய பாவங்கள் என்ற இரண்டையும் இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். இதனால் நீ ஸமத்வ யோகத்தில் ஈடுபட்டிரு. கடமையை ஆற்றுவதில் உள்ள திறமையே யோகம். கர்மபந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உபாயமாகும்.
கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண: ந
ஜன்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம் ந
2.51 ஏனெனில் ஸமபுத்தியுடைய ஞானிகள் கர்மத்தினால் உண்டாகும் பலனைத் தியாகம்செய்து, பிறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபட்டு எல்லாவித துக்கங்களையும் கடந்த உயர்ந்த நிலையினை அடைகிறார்கள்.
யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி ந
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச ந
2.52 மாயையைக் கடக்க உன்னுடைய புத்தி உனக்கு உதவுகிறபோது, நீ இதுவரை கேட்ட எல்லாவற்றிலும், இனி கேட்கப் போகிற எல்லாவற்றிலும் விருப்பு வெறுப்பு அற்ற நிலையை அடைவாய்.
ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா ந
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி ந
2.53 நீ இதுவரை கேட்டவற்றால் குழப்பம் அடையாதவனாய், உன் இருப்புத்தன்மையை விட்டகலாத புத்தியுடையவனாய் இருக்கும்போது, நீ ‘தன்னை-உணர்தல்’ நிலையை அடைகிறாய்.
அர்ஜுந உவாச
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஶவ ந
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ந
அர்ஜுனன் சொன்னது
2.54 கேசவா! நிகழ்காலத்திலேயே நிலைபெற்று, சத்தியத்தின் விழிப்புணர்விலும் ஞானத்திலும் கரைந்திருக்கும் ஒருவடைய இலக்கணம் என்ன? இந்த ஞானத்தில் நிலைகொண்ட மனிதர் எப்படிப் பேசுவார்? எப்படி உட்காருவார்? மேலும் எப்படி நடப்பார்?
ஸ்ரீபகவாநுவாச
ப்ரஜஹாதி யதாகாமாந் ஸர்வாந்பார்த மநோகதாந் ந
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே நந 2.55
ஸ்ரீ பகவான் சொன்னது
2.55 பார்த்தா, எப்பொழுது இந்த மனிதன் மனத்திலுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறந்துவிட்டு, ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ, அப்பொழுது அவன் ஸ்தீதப்ரஜ்ஞன் (ஞானத்தில் நிலைபெற்றிருப்பவன்) என்று சொல்லப்படுகிறான்.
து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ரு'ஹ: ந
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே நந 2.56
2.56 துன்பங்கள் நேர்கையில் யாருடைய மனம் கலங்குவதில்லையோ, விருப்பு, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறதோ, செல்வவளம்மிக்க நிலையிலிருந்தாலும் புலனின்பங்கள் பின்னால் ஓடுவதில்லையோ, அந்தத் துறவி ஸ்தீதப்ரஜ்ஞன் என்று சொல்லப்படுகிறான்.
ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஶுபாஶுபம் ந
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா நந 2.57
2.57 யார் ஒருவன், இது நல்லது கெட்டது என்று எதிலுமே பற்று வைக்காமல், எல்லாவற்றையும் எல்லா சமயங்களிலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்கிறாரோ அவருடைய புத்தி ஸ்தீரமானது.
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோரங்காநீவ ஸர்வஶ: ந
இந்த்ரியாணீந்த்ரியார்த்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா நந
2.58
2.58 எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனது அங்கங்களை உள்ளிழுத்து க்கொள்ளும் ஆமையைப்போல, புலனுகர் பொருட்களிலிருந்து தம்முடைய புலன்களை ஒரு மனிதர் முற்றிலும் உள் இழுத்து க்கொள்ளும் போது அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந: ந
ரஸவர்ஜம் ரஸோண்ப்யஸ்ய பரம் த்ரு'ஷ்ட்வா நிவர்ததே நந 2.59
2.59 புலனுகர் பொருட்கள் உடலிலிருந்து விலகி நிற்கின்றன. ஆனால் அவற்றின்மேல் உள்ள ஆசைகள் விலகுவதில்லை. பரமாத்மாவைத் தரிசித்த பிறகு அவருடைய அந்த ஆசைகளும் விலகிவிடுகிறது.
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித: ந
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந: நந 2.60
2.60 ஒ குந்தியின் மகனே! கொந்தளிப்புள்ள புலன்கள், முயற்சியுள்ள புத்திசாலியான மனிதனின் மனத்தைக்கூடப் பலவந்தமாக இழுத்துச் சென்றுவிடுகின்றன.
தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ந
வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா நந 2.61
2.61 அந்த அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒழுங்கப்படுத்தி என்னையே பரமகதியாகக்கொண்டு தியானத்தில் அமர வேண்டும். யார் ஒருவருடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ, அவருடைய புத்தி ஸ்திரமாகிறது.
த்யாயதோ விஷயான்பும்ஸ: ஸங்கஸ்தேஷுபஜாயதே ந
ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்த்க்ரோதோண்பிஜாயதே நந 2.62
2.62 புலனுகர் பொருட்களையே சிந்தித்துக் கொண்டிருக்கிற மனிதனுக்கு அவ்விஷயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றுதலிலிருந்து ஆசை உண் டாகிறது. ஆசையிலிருந்து கோபம் உண்டாகிறது.
க்ரோதாத்3ப4வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ரு'திவிப்4ரம: ந
ஸ்ம்ரு'திப்4ரம்ஸாத் பு3த்தி4நாஸோ பு3த்தி4நாஸாத் ப்ரணஸ்யதி நந
2.63
2.63 கோபத்தினால் மிகுந்த அறிவின்மை ஏற்படும். அறிவின்மையால் நினைவுத் தடுமாற்றம் உண்டாகிறது. நினைவு தடுமாறுவதனால் புத்தி அதாவது விவேகத்தின் அழிவு உண்டாகிறது. விவேகம் அழிவதனால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சியடைகிறான்.
ராக3த்3வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்3ரியைஸ்சரந் ந
ஆத்மவஸ்யைர்விதே4யாத்மா ப்ரஸாதமதிக3ச்ச2தி நந 2.64
2.64 ஆனால் தன்னால் வசப்படுத்தப்பட்டுவிட்ட புலன்களின் மூலம் விருப்பு வெறுப்பின்றி போக விஷயங்களில் சஞ்சரிக்கும் தன்வசப்பட்ட மனதுடைய சாதகன் உள்ளத்தெளிவை அடைகிறான்.
ப்ரஸாதே3 ஸர்வது3:கா2நாம் ஹாநிரஸ்யோபஜாயதே ந
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு பு3த்தி4: பர்யவதிஷ்ட2தே நந 2.65
2.65 அந்த அமைதியில் இவனுடைய எல்லாத் துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். அமைதியடைந்த பட்டறிவு மனம் விரைவிலேயே நன்கு ஸ்திரமாகிவிடுகிறது.
நாஸ்தி பு3த்தி4ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா4வநா ந
ந சாபா4வயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுக2ம் நந 2.66
2.66 தன்னைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாத ஒரு மனிதன், அறிவுடையவனாகவோ மகிழ்ச்சி உடையவனாகவோ அமைதி உடையவனாகவோ இருக்க முடியாது. அமைதியற்றவன் மனத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும்?!
இந்த்3ரியாணாம் ஹி சரதாம் யந்மநோநூ விதீ4யதே ந
தத3ஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பு4ஸி நந 2.67
2.67 நீரில் இருக்கும் படகை, காற்றானது அடித்துச் செல்வதுபோல், மனத்தை புலன்கள் இழுத்துச் செல்கின்றன. மனம், அலைபாயும் புலன்களைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்போது, அவன் நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. அவன் நிகழ்காலத்தை இழக்கிறான்.
தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ரு'ஹீதானி ஸர்வஸ: ந
இந்த்ரியாணீந்த்ரியார்த்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா நந
2.68
2.68 ஆகையால் வலிமையான தோள்களை உடைய அர்ஜுனனே! எந்த மனிதனுடைய புலன்கள், புலன்களுக்குரிய போகப்பொருட்களில் இருந்து மீட்கப்பட்டு விட்டனவோ, அவனுடைய புத்தி ஸ்திரமானது.
யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ ந
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே: நந 2.69
2.69 அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவோ, அதில் புலன்களை தம் வசப்படுத்திய யோகி விழித்திருக்கிறான். அனைத்து உயிரினங்களும் எதில் விழித்திருக்கின்றனவோ, அது, தன்னை உணர்ந்த ஞானிக்கு இரவு ஆகிறது.
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத் ந
தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே
ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ நந 2.70
2.70 எல்லாப் பக்கங்களில் இருந்து வரும் பல ஆறுகள் கடலில் புகுந்தாலும் கடல் அசைவதில்லை; அதேபோல் ஞானி எல்லாப் பக்கங்களில் இருந்து வருகிற அனைத்துவித ஆசைகள் புகுந்தாலும் அவர் நிலைதடுமாறுவதில்லை. அவரே மேலான அமைதியை அடைகிறான்; போகங்களை விரும்புபவன் அமைதியை அடைவதில்லை.
விஹாய காமான்ய: ஸர்வான்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:ந
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி நந 2.71
2.71 எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவனாக, தன்முனைப்பற்றவனாக, சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக ஸஞ்சரிக்கிறானோ, அவனே அமைதியை அடைகிறான்
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி ந
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேன்பி ப்ரஹ்மநிர்வாணம் ரு'ச்சதி நந
2.72 ஓ பார்த்தா, கடவுள்தன்மையை உணர்ந்த நிலை என்பது இதுதான். இதை அடைந்தபின் ஞானி ஒருபோதும் மோஹமடைவதில்லை. மேலும் இந்தப் ப்ரஹ்ம நிலையில் நிலைபெற்றிருக்கும் ஒருவன், உயிர்பிரியும் நேரத்திலும் கடவுள்தன்மையோடு ஒன்றிணைகிறான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஸாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே
ஸாங்க்யயோகோ நாம த்விதீயோண்த்யாய: நந
ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ஸாங்கிய யோகம் எனும் பெயருடைய இரண்டாவது அத்தியாயம்.
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான தீர்வு

நாம் இப்போதுதான் உண்மையான கீதைக்குள் நுழைகிறோம்.
பகவான் நாராயணர், கீதோபநிஷத்தை நரனான அர்ஜுனனின் கேட்டலுக்குள் பேசுகிறார், பாடுகிறார்; அதன்மூலம் மொத்த மனிதகுலத்தின் கேட்டலுக்குள் பேசுகிறார்.
இதுவரை கிருஷ்ணர் ஒரு மனிதராக, வாஸுதேவ கிருஷ்ணராகப் பேசிக்கொண்டிருந்தார். இரண்டாம் அத்தியாயத்திலிருந்து அவர் பரப்ரஹ்ம கிருஷ்ணராக, பகவானாக, தம்முடைய தெய்விக நிலையிலிருந்து பேசத்தொடங்குகிறார்.
ஒரு 'கேட்டல்' உங்களைக் கடவுளாக்கிவிடும்
முதல் அத்தியாயத்தில் அர்ஜுனன் பேசும்போது, கிருஷ்ணர் ஒருவார்த்தைகூடக் குறுக்கிட்டுப் பேசவில்லை. அர்ஜுனனை முழுமையாகத் தம்முடைய கேட்டலுக்குள் பேச அனுமதிக்கிறார்.
இந்த முழு அத்தியாயமுமே அர்ஜுனனின் பேச்சுதான். அர்ஜுனன் தம் குழப்பங்களையும் மன உளைச்சலையும் கொட்டுகிறார். ஆனால் கிருஷ்ணர், அதை அமைதியாக, 'ஒருங்குவித்தலுடனான கேட்டல்' உணர்விலிருந்து கேட்கிறார்.
கேளுங்கள், பேசுவதற்குக்கூட நமக்குப் புத்திசாலித்தனம் தேவையில்லை. ஆனால் கேட்பதற்கு புத்திசாலித்தனம் மட்டுமல்ல, ஞானமும் நிறைவுணர்வும் வேண்டுமென்றுதான் சொல்வேன்.
ஒருங்குவித்தல் - வாக்குசக்தி, கேட்டலில் இருந்துதான் ஆரம்பமாகிறது, கேட்டலில்தான் தொடர்கிறது. மனிதர்கள் கேட்டலைத் தவறவிடும்போது, வாழ்க்கையையே தவறவிடுகிறார்கள். வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று விரும்பும் யாராகிலும் கற்றுக்கொள்ள வேண்டிய முதல்விஷயம், 'கேட்டல்'தான்! கேட்டலே கடவுள்!
வேதாந்தத்தில் முதல் கோட்பாடே ச்ரவணம் - ஒருங்குவித்தலுடனான 'கேட்டல்'தான்.
இரண்டாவது கோட்பாடு மனனம் - ஸத்யத்தை ஒதுக்கும்பொருட்டு அல்லாமல், உள்வாங்கும்பொருட்டு பகுத்தாராய்தல்.
மூன்றாவது கோட்பாடு நிதித்யாஸனம் - ஸத்யத்தை வாழ்தல் மற்றும் வெளிப்படுத்துதல்!
சீடர், 'கேட்டல்'தன்மையுடன் இருந்தால் மட்டுமே, குருவுக்கும்
வாக்குசக்தி, கேட்டலிலிருந்துதான்
ஆரம்பமாகிறது,
கேட்டலில்தான் தொடர்கிறது.
சீடருக்கும் இடையில் எந்தவொரு அறிவு பரிமாற்றமோ அல்லது சக்தி மற்றும் அனுபவ பரிமாற்றமோ நிகழும்.
இங்கு கிருஷ்ணர், தம்முடைய 'ஒருங்குவித்தலுடனான கேட்டலை' அர்ஜுனனுக்குத் தருகிறார். கிருஷ்ணருக்கு அர்ஜுனனின் உண்மையான பிரச்சினையைத் தெரிந்துகொள்வதற்கான ஆர்வம்தான் இருக்கிறது. அவர் தமக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'கேட்டல்' என்பதின் பொருள் விளக்கத்தை நான் மறுபடியும் உங்களுக்குத் தருகிறேன்: உங்கள் உள்-உணர்வுக்குள் வார்த்தைகளைத் தானாகவே உள்ளிறங்க அனுமதிப்பதும், உங்கள் குறைவுணர்வுகளின் தலையீடு இல்லாமல் அவற்றை தானாகவே புரிந்துணர அனுமதிப்பதும்தான் சரியான 'கேட்டல்'!
'கேட்டலில்' இருக்கும் போது, நீங்கள் கடவுளாகிறீர்கள். கடவுள் மட்டுந்தான் உங்களைக் கடவுளாக்க முடியும். எந்தவொரு கேட்டலும் கடவுளே!
ஒரு குரு உங்களைக் ‘கேட்கும்’ நேரங்கள்
குருக்ஷேத்ர போர்க்களத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கீதையைச் சொல்லும்போது இதுதான் நடக்கிறது. ஆனால் பட்டறிவை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் மக்கள், காலத்தை மட்டும் கணக்கில்கொண்டு, 'அர்ஜுனனும் கிருஷ்ணரும் இவ்வளவு விரிவாகப் பேசுவது என்பது எப்படிச் சாத்தியமாகும்?!' என்று ஆச்சரியப்படலாம்.
பகுத்தறிவான, விழிப்புணர்வு இல்லாத மனம் அப்படித்தான் நினைக்கிறது. அமைதியின் மூலமாகவும், சரியான கேட்டலின் மூலமாகவுமே ஒரு மிகப்பெரிய உரையாடல் நிகழ்ந்துவிட முடியும் என்று விழிப்புணர்வற் மனத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
'கேட்டல் உணர்வுடன்' பூர்ணத்வத்தில் அமர்வதே உபநிஷத். மற்றெந்த கருத்துப்பரிமாற்றத்தையும்விட மிகவும் சக்திமிக்க மிக ஸூக்ஷ்மமான கருத்துப்பரிமாற்ற வழிமுறை இதுவே.
வேத நூல்களின் சாரம்தான் உபநிஷத் - வெறுமனே அமர்ந்திருத்தல் என்றழைக்கப்படுகிறது. இதுவே உச்ச நுட்பம். நீங்கள் குருவுடன் அமர்ந்திருக்கும் போது, உபநிஷத் நிகழ்கிறது. அப்போது உங்களுள் ஏதோஒன்று வித்தியாசமான செயல்முறை நிகழ ஆரம்பிக்கிறது. அதை ஒரு நுட்பம் என்றோ அல்லது நுட்பம் அல்ல என்றோ கூற முடியாது.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அது சமையலைப் போன்றது அல்லது கொதிக்கவைப்பதைப் போன்றதுதான். என்னுடைய ஸத்ஸங்கங்களின்பொழுது, நான் வார்த்தைகளின் இடையிடையே சிறுஇடைவெளிகளை விடுவேன். உண்மையில் இந்த இடைவெளிகள்தான், உங்களை நான் 'கேட்கும்' நேரங்கள்.
இங்கே கிருஷ்ணர் தம்முடைய கேட்டலுக்குள் அர்ஜுனனைப் பேச அனுமதிக்கிறார். அதனால் அர்ஜுனனால் தமக்குள் 'ஒருங்குவித்தலுடனான கேட்டல்' திறனை வளர்த்துக்கொள்ளவும், தம்முடைய பிரச்சினைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவும், தம்முடைய குழப்பங்களை வெளிப்படுத்தவும் முடிகிறது.
தம்முடைய குழப்பங்களை வெளிப்படுத்தியவுடன் அவரால் ஆழ்ந்த அமைதிக்குள் செல்வதற்கும், நிறைவுணர்வான குருவோடு உபநிஷத உணர்வில் ஒருங்கிணைவதற்கும் முடிகிறது.
மனப்பாங்குகள் சோர்வடையும்வரை உங்களுக்காகக் காத்திருப்பார்(2.1 -2.3)
அர்ஜுனன் இரக்கத்தாலும் மனத்தளர்ச்சியினாலும் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அப்படியே தம் ரதத்தில் சாய்ந்துவிடுகிறார். வில்லும் அம்பும் அவருடைய கைகளைவிட்டு நழுவி விழுகின்றன.
உடல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் ஆன்மரீதியாகவும் அர்ஜுனன் தம்மை முழுமையாக வெறுமையாக்கிக்கொள்வதற்கு கிருஷ்ணர் அனுமதிக்கிறார்.
அர்ஜுனன் சொல்வதை முழுமையாகக் கவனமாகக் கேட்கிறார். நண்பனும் வழிகாட்டியும் குருவுமான தம்மிடம் அர்ஜுனன் தம் உணர்வைத் திறப்பதற்காகக் அவர் காத்திருக்கிறார். அப்படியென்றால் மட்டுமே அவர் சொல்லும் பதில் முழுமையாக அர்ஜுனனின் இருப்புத்தன்மைக்குள் ஊடுருவ முடியும்.
அதன் பிறகே முதன்முதலாக கிருஷ்ணர் பேசுகிறார். தம்முடைய இருப்புநிலையில் இருந்து பேசுகிறார். கிருஷ்ணர் சொல்கிறார், "என் அன்புக்குரிய அர்ஜுனா, எப்படி நீ இந்த மனப்பாங்குகள் என்னும் அசுத்தங்களைச் சேகரித்துக்கொண்டாய்? வாழ்க்கையின் அருமையை உணர்ந்த உன்னைப்போன்ற ஒருவனுக்கு இந்தத் துக்கம் பொருந்தாது, அது உனக்கு நல்லதல்ல. இந்த மன அமைப்பு உன்னை உயர்ந்த தளத்திற்கு எடுத்துச்செல்லாது. மாறாக அவமானத்திற்குத்தான் எடுத்துச்செல்லும்."
அர்ஜுனனின் மூல எண்ண மனப்பாங்குகள், அவருடைய கவலைகளிலிருந்தும் பயத்திலிருந்தும் முளைத்திருக்கின்றன என்பது கிருஷ்ணருக்கு நன்றாகத் தெரியும். அர்ஜுனனுக்குள் ஏற்பட்ட மனச்சோர்விற்கு எந்தவொரு ஆன்மிகத் தேடுதலும் காரணம் இல்லை. உண்மையில் அவர் தீர்வை விரும்பவில்லை. அவர் கிருஷ்ணரிடம் எதிர்பார்த்தது ஆதரவைத்தான்.
அதனால் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எந்தவொரு உபதேசத்தையும் இந்த முதல் இரண்டு ஸ்லோகங்களிலும் தரவில்லை. நேரடியாக அவருடைய பயத்தைப் பற்றியும் பலவீனத்தைப் பற்றியும் பேசுகிறார்.
"உன்னுடைய முட்டாள்தனமான பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நின்று போர்செய்," என்று சொல்வதன்மூலம் நேரடியாகக் கன்னத்தில் ஓர்அறைவிட்டு விழிக்கச்செய்வதைப்போல, அர்ஜுனனை விழிக்கச்செய்கிறார்!
'கேட்டல் உணர்வுடன்' பூர்ணத்வத்தில் அமர்வதே உபநிஷத்.
அர்ஜுனனை அவருடைய கற்பனையான குறைவுணர்வுகளிலிருந்து விழிப்படையச் செய்வதன் மூலம், மொத்தக் கீதையின் பாதையையும் நோக்கத்தையும் இந்த ஒரு ஸ்லோகத்தில் கிருஷ்ணர் நமக்குக் காட்டிவிடுகிறார்
கிருஷ்ணர் ஓர் உண்மையான ஞானி. அவர் எதையும் சுற்றிவளைத்துப் பேசவில்லை. அவர் நேரடியாக அர்ஜுனனின் தடுமாற்றத்தைப் பற்றிப் பேசுகிறார். இங்கே கிருஷ்ணர், உடனடியாக ஞானமடைவதற்கான உச்ச சாத்தியங்களைப் பற்றிய நுட்பத்தை அர்ஜுனனுக்குத் தர முயற்சிக்கிறார்.
ஆனால் கிருஷ்ணர் சொல்லும் ஸத்யங்களை ஆழ்ந்து உள்வாங்கி, அதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அர்ஜுனனுக்குள் போதிய மனப்பக்குவம் வளரவில்லை. அதனால், அவருக்குப் படிப்படியாக விளக்கத் தொடங்குகிறார்.
கிருஷ்ணரின் தெய்வீகத்தை ஏற்றுக்கொள்வதும் புரிந்துகொள்வதுமே நம் சொந்த தெய்வீகத்தை உணர்ந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்குமான முதற்படி. நாம் கடவுளாகும் அந்த சாத்தியமே நம்மை முழுமைப்படுத்துகிறது, முக்திக்கு எடுத்துச்செல்கிறது.
ஒ பலமே, உங்கள் வாழ்க்கையை அடுத்தநிலைக்கு எடுத்துச்செல்லும் (2.4-2.8)
அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கெஞ்சுகிறார், "இறைவா, என்னை விட்டுவிடுங்கள், இவர்களைக் கொல்வதைவிட நான் பிக்ஷையorphan றா அல்லது ஸந்நியாஸம் பூண்டோ வாழ்வதேமேல் (2.5)."
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணர் ஸந்நியாஸத்திற்கு
குருவின் தெய்வீகத்தை
ஏற்றுக்கொள்வதே நம்
சொந்த தெய்வீகத்தை
உணர்ந்துகொள்வதற்கான முதற்படி.
எதிரானவர் அல்ல. ஆனால் பலஹீனத்தின் காரணமாக எடுக்கப்படும் ஸந்நியாஸத்தை அவர் விரும்பவில்லை.
கேளுங்கள், ‘போர்புரிய வேண்டுமென்ற’ அர்ஜுனனின் தீர்மானத்தைக்கூட கிருஷ்ணர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அர்ஜுனனின் ஸந்நியாஸ தீர்மானத்தை கிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் ‘போர்புரிய வேண்டுமென்ற’ தீர்மானத்தை அர்ஜுனன் வலிமைமிக்க உணர்விலிருந்து எடுக்கிறார், பூர்ணத்வ உணர்விலிருந்து எடுக்கிறார். ஆனால் ஸந்நியாஸம்பூண வேண்டுமென்ற தீர்மானத்தைத் தம்முடைய பலஹீனத்தின் காரணமாக எடுக்கிறார்.
அது ஸந்நியாஸமோ அல்லது போரோ, பலஹீனத்தின் காரணமாக எடுக்கப்பட்ட தீர்மானமாக இருந்தால், அது உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லாது.
"இப்பொழுது நான் உங்களுடைய சீடன். என் ஆத்மா உங்களிடம் சரணடைந்துள்ளது. தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள்,” என்று சொல்கிறார். அது ஒருபொய்.
உண்மையிலேயே அர்ஜுனனுடைய ஆத்மா கிருஷ்ணரிடம் சரணடைந்திருந்தால், கிருஷ்ணர் என்ன சொல்கிறாரோ, வெறுமனே அதை மட்டும் அவர் செய்திருப்பார். ஆனால் கிருஷ்ணர், ஒருசெயலைச் செய்யச்சொல்லி உத்தரவு கொடுத்தால், அதைச் செய்வதற்கு அவர் தயாராக இல்லை. இது கிருஷ்ணருக்கு மிக நன்றாகவே தெரியும்.
ஆனால் பொங்கும் கருணையின் காரணமாக, கிருஷ்ணர் அர்ஜுனனைத் தொடர்ந்து வளப்படுத்துகிறார், அவருக்கு ஸத்யத்தை வெளிப்படுத்துகிறார். இங்கே கிருஷ்ணர் ஸாஸ்த்ரத்தைச் சொல்லத் தொடங்குகிறார். இதற்குமுன் கிருஷ்ணர் சொன்ன இரண்டு ஸ்லோகங்களும் ஸூத்ரங்கள்தான். ஆனால் அவற்றை உள்வாங்குவதற்கு அர்ஜுனன் தயாராக இல்லாததால், அவர் ஞானத்தை விளக்கும் ஸாஸ்த்ரங்களைத் தரத்தொடங்குகிறார்.
குழப்பத்தினால் வரும் ஸரணாகதி உண்மையான ஸரணாகதி அல்ல. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஸாஸ்த்ரத்தைப் படித்து அதன் ஞானக்கருத்துக்களைப் புரிந்துகொண்ட பூர்ணத்வ உணர்விலிருந்து பிறக்கும் ஸரணாகதிதான் உண்மையான ஸரணாகதி.
மூல எண்ணப்பாங்கெனும் புற்றுநோயைக் குணப்படுத்த வந்தவர்
அர்ஜுனனின் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் முழுத் தெளிவோடு புரிந்துகொண்ட கிருஷ்ணர், தம் லக்ஷியப் பாதையின் அடுத்தகட்டப் பணியாக, அர்ஜுனனுக்குள் இருக்கும் உறவுகள் என்னும் அடையாளங்களையும் மூலமனப்பாங்குகளையும் அழிக்கும்வேலையைத் தொடங்குகிறார்.
உங்களுக்குள் இருக்கும் ‘மூல எண்ணப்பாங்கு’ என்னும் கொடிய புற்றுநோயை அறுத்தெடுக்கும் அறுவைசிகிச்சை நிபுணர்தான் குரு. கீதை முழுவதும் கிருஷ்ணர் இதைத்தான் செய்கிறார். அர்ஜுனன் பாராட்டுக்குரியவராகிறார். ஏனென்றால் அந்த அறுவைசிகிச்சை முழுமையாக நடைபெறுவதற்கு அவர் அனுமதிக்கிறார்.
பலவீனமானவர்கள், தங்கள் அடையாளங்களை இழக்கவிரும்பாமல் பாதியிலேயே அறுவைசிகிச்சையிலிருந்து, போர்க்களத்திலிருந்து தப்பியோடிவிடுவார்கள். ஆனால் அர்ஜுனனுடைய சிறப்பு, அவருடைய ஒருங்குவித்தலிலும் ஸ்ரத்தையிலும் வைராக்கியத்திலும்தான் இருக்கிறது.
குரு சொன்னதைக் கேட்க வேண்டும், அவர் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்று தீர்மானித்ததுதான் அர்ஜுனனுடைய சிறப்பு.
கிருஷ்ணர், ஒரு ஸாங்க்ய யோகி (2.9 -2.13)
அடம்பிடிக்கும் ஒரு குழந்தையைப்போல் கீழே அமர்ந்துகொண்டு, “ந யோத்ஸ்ய இதி கோவிந்தம் (2.9) -கோவிந்தா, நான் போரிட மாட்டேன்,” என்கிறார்.
கிருஷ்ணர் புன்னகையோடும், கனிவோடும் சொல்கிறார், "உயர்ந்த கருத்துகளைப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, எதற்காகத்துக்கப்பட வேண்டிய தேவை இல்லையோ, அதற்காகத் துக்கப்படுகிறாய்.
கதாஸூநகதாஸூம்ஶ்ச நாநுஶோசந்தி பண்டிதா: (2.11) - ஞானிகள் உயிருடன் இருப்பவர்களுக்காகவும் கவலைப்படுவதில்லை, இறந்தவர்களுக்காகவும் கவலைப்படுவதில்லை."
"ஓ அர்ஜுனா, நீ இறந்தவர்களுக்காகவோ, உயிருடன் இருப்பவர்களுக்காகவோ துக்கப்பட்டால், அதிலிருந்தே நீ புத்திசாலி இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மரணமோ அல்லது வாழ்க்கையோ இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? பல கோடிக்கணக்கானவர்கள் இங்கு வாழ்ந்துவிட்டு, இறந்துபோயிருக்கிறார்கள்!"
கிருஷ்ணர் திருவாய் மலர்ந்தவுடன் அவரிடமிருந்து வெளிப்பட்ட முதல் வளப்படுத்தும் வார்த்தைகள் ஸாங்க்ய யோகம்தான், பூர்ணத்வ உணர்வுதான்; அத்வைதம் அல்ல!
ஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக் கொண்டாடப்படும் கபிலமுனியே ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூர்ணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸநாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹா நி்ர்வாணி பீடத்தை நிறுவியவர். கபிலமுனியைப் பின்பற்றுபவர்களுள் மிகச்சிறந்த ஒருவராக பகவான் கிருஷ்ணர் விளக்குகிறார்.
அர்ஜுனனின் பிரச்சினையைத் தீர்க்க, அவர் உபயோகப்படுத்திய முதல் கருத்தே ஸாங்க்ய யோகம்தான். ஸாங்க்ய யோகத்தைப் பின்பற்றுபவராக கிருஷ்ணர் இருந்தார். அவர் பூர்ணத்வ ஜ்ஞானத்தில் நிலைபெற்றவராக இருந்தார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பகவான் கிருஷ்ணர் திருவாய் மலர்ந்தருளியகணமே உங்களைப்பற்றிய வியப்பூட்டும்
ஞானக்கருத்துகளைப் புரிந்துகொண்ட
பூர்ணத்வ உணர்விலிருந்து பிறக்கும்
ஶரணாகதிதான் உண்மையான
அருமையான அறிமுகத்தை உங்களுக்கு அளிக்கிறார். கிருஷ்ணர் சொல்கிறார், "நீயோ நானோ இங்கிருக்கும் அரசர்களோ அத்தனைபேரும் இருந்திராத காலம் என்று ஒன்று இதற்குமுன் இருந்தது கிடையாது. இதற்குப்பிறகும் நாம் இருக்காத காலம் என்று ஒன்று இருக்கப்போவதில்லை (2.12)."
இந்த ஸ்லோகத்திலிருந்தே கீதையின் சாரம் தொடங்குகிறது. இதைத்தான் ஆத்ம ஜ்ஞானம் , பூர்ணത്വத்தின் ஜ்ஞானம் என்று சொல்கிறோம். இந்த ஒரு ஸ்லோகம் உங்களுக்குப் புரிந்துவிடுமானால், நீங்கள் உடனடியாக ஞானமடைந்துவிடலாம். நித்யானந்தத்தில் நிலைத்துவிடலாம்.
நீங்கள் எக்காலத்திலும் வாழ்வீர்கள்
இந்த உடல் இறக்கும்போது, இந்த உடலோடு சேர்ந்து நம்முடைய ஆத்மாவும் இறந்துபோய்விடும் என்று நினைப்பது தவறு. இந்த உடல் பிறப்பதற்கு முன்பும் நாம் இருந்தோம். இந்த உடல் இறந்த பின்பும் நாம் இருக்கப் போகிறோம். இதுதான் ஸத்யம். பிறகு நாம் ஏன் இறந்துவிடுவோமோ என்று பயப்பட வேண்டும், நாம் ஏன் மரணத்தைப் பார்த்துப் பயப்பட வேண்டும்?!
கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இந்த மூன்றும் சேர்ந்து ஒரேகாலமாக ஆவதைத்தான் நாம் நித்யம் என்கிறோம்; ஆத்மன் என்று சொல்கிறோம். நீங்கள் நிகழ்காலத்திற்கு வரும்பொழுதுதான் ஆத்மாவை, உங்கள் உண்மையான சொரூபத்தை உணர முடியும்.
ஆனால் தற்போது நீங்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அலைந்துகொண்டேயிருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து எண்ணவோட்டங்களினால் அடித்துச் செல்லப்படுபவர்களாக இருக்கிறீர்கள்.
நிகழ்காலத்திற்கு வரும்பொழுதுதான்
உங்கள் உண்மையான சொரூபத்தை
உணர முடியும்.
உங்களுக்குள் எண்ணங்களே எழாதபோது, உங்களை நீங்கள் ஆத்மா அல்லது இருப்பு என்று உணர்வீர்கள். அப்பொழுது நீங்கள் நிகழ்காலத்திலும் கடந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பீர்கள்.
எந்த மனிதருக்கு எண்ணங்களே இல்லையோ அந்த மனிதரால்தான், “நீ எல்லாக் காலங்களிலும் இருப்பாய்,” என்று கிருஷ்ணர் சொல்கிற ஸத்யத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
கிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார்: “எதுவெல்லாம் இறக்கிறதோ அதுவெல்லாம் எப்பொழுதும் வாழ்ந்ததில்லை. எதுவெல்லாம் வாழ்கிறதோ அதுவெல்லாம் எப்பொழுதும் இறப்பதில்லை.”
உங்களுடைய ஆழமான விழிப்புணர்வு, உங்களுக்குள் அழிவற்ற ஏதோ ஒன்று வாழ்வதாக உங்களுக்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த அழிவற்ற தன்மையை, குணத்தை நீங்கள் உங்கள் உடலுடனும் மனத்துடனும் சம்மந்தப்படுத்திக்கொள்கிறீர்கள். அந்த ஏதோ ஒன்றை உங்கள் உடல் என்றும், மனம் என்றும் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள்.
நீங்கள் எதிர்காலத்திலும் கடந்தகாலத்திலும் கட்டுப்பட்டு இருக்கும்வரை நீங்கள் உங்களை உங்கள் உடல் என்றும், மனம் என்றும்தான் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் நிகழ்காலத்திற்கு வருகிற அந்தக் கணத்தில் நீங்கள் பூர்ணத்வ உணர்வில் இருக்கிறீர்கள்; உங்கள் உடலையும் மனத்தையும் கடந்துள்ளீர்கள் என்பதை உணர்கிறீர்கள்.
நாம் எல்லாக் காலத்திலும் இருக்கிறோம் என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நாம் இதே உடலில் இதே வடிவத்தில் என்றும் இருப்போம் என்று சொல்லவில்லை.
அதேபோல் கிருஷ்ணரும் அதே வடிவத்தில் நாம் கற்பனைசெய்து வைத்திருப்பதுபோல் கையில் ஒரு புல்லாங்குழலோடும், தலையில் மயிலிறகோடும் எல்லாக் காலங்களிலும் இருப்பார் என்று அவர் சொல்லவில்லை.
நம் முகமும் உடலும் மாறிக்கொண்டே இருக்கும்; ஆனால் நாம் தொடர்ந்து இருக்கப்போகிறோம். நம்முடைய ஆத்மா எல்லாக் காலங்களிலும் இருக்கும் என்று சொல்கிறார்.
ஆன்மிக உணர்விலிருந்து பார்க்கும்போது, நாம் தெய்விகமானவர்கள். ப்ரஹ்மம் எனப்படும் ப்ரபஞ்ச vசக்தியில் நாம் ஒன்றாகக் கலந்திருக்கிறோம்.
இரண்டாம் அத்தியாயத்தின் சாராம்சம் 'நீங்கள் ஆத்மா, நீங்கள் தெய்விகமானவர், பூர்ணமானவர், நீங்கள் கடவுள்' என்பதுதான். கடந்தகால மற்றும் எதிர்கால குறைவுணர்வுகளை நிறைவுசெய்ய முடிந்த ஒரே முறையாகும்.
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான ஸத்யம், இப்போது நீங்கள் பூர்ணத்வ க்ரியாவைச் செய்தால், நீங்கள் எதிர்காலத்தில் மட்டுமே நிறைவுணர்வுடன் இருக்க முடியுமென்று நினைக்காதீர்கள், உங்கள் கடந்தகாலத்தையும் நிறைவுசெய்துவிட முடியும், மாற்றியமைத்துவிட முடியும்! நீங்கள் பூர்ணத்வ உணர்வை உருவாக்கத் தொடங்கிய கணமே, கிருஷ்ணர் பிரகடனப்படுத்தும் 'நீங்கள் அழியா ஆன்மா, உடல் -மனத் தாக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்' என்னும் ஸத்யம் உங்கள் வாழ்வில் நிஜமாகும்.
வாழ்வின் ஒரேயொரு சத்தியம்- நிலையிலாத்தன்மையே! (2.14 - 2.18)
ஐம்புலன்களால் அனுபவிக்கப்படும் எல்லா அனுபவங்களும் - ஶீதோஷ்ணஸுகது:கதா: (2.14) -வெப்பம் குளிர், இனிப்பு கசப்பு, ஈரம் உலர்வு, வலி சுகம், விருப்பு வெறுப்பு போன்ற உணர்ச்சிகளும் தற்காலிகமானவையே என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஞானமடைவதற்குத் தகுதியுடையவராக, தம் மையத்தில் நிலைகொண்டிருக்கும் ஒருவரை இந்த அனுபவங்கள் பாதிப்பதில்லை. ஸோண்ம்ரு'தத்வாய கல்பதே (2.15) - ‘அவர் ஞானத்திற்குத் தகுதி உடையவராகிறார்' என்கிறார் கிருஷ்ணர்.
ஆழ்ந்து கேளுங்கள், இப்போது நான் 'நேர் உணர்வு' (cognition), என்பதை வரையறுக்கிறேன். வெளியுலகத்திலிருந்து பெறும் தகவல்களை, 'குறைவுணர்வு'களின் அடிப்படையில் நோக்காமல், அவற்றை 'உள்ளது உள்ளபடியே' உணர்ந்துகொள்வதையே 'நேர் உணர்வு' என்கிறேன்.
ஆனால் நாம் பொதுவாக எதையும் 'உள்ளது உள்ளபடியே' பார்ப்பதில்லை. அதனால் நம்முடைய நேர் உணர்வானது, ஏதோ ஒன்றைச் சேர்த்து அல்லது நீக்கி செயல்முறைபடுத்தப்பட்ட தகவல்களின் தொகுப்பாகவே இருக்கிறது. உங்களால் புரிந்துகொள்ளப்படும் உணர்வை 'புரிந்துணர்வு' என்கிறேன்.
'புரிந்துணர்வு' என்பது (cognition) புலன்கள் வழியாகப் பெறும் அனுபவங்கள். இவை நிலையில்லாதவை, உண்மையில்லாதவை.தவிர, அவை எல்லோருக்கும் பொதுவானவையுங்கூட கிடையாது. அவை, காலம், இடம் மற்றும் தனிநபரைப்பொறுத்து மாறுகின்றன. ஒருவரால் எது வெப்பமாக உணரப்படுகிறதோ அது மற்றொருவரால் வெப்பமாக உணரப்படுவதில்லை.
மூன்று நிலைகளான நேர் உணர்வுகள் இருக்கின்றன. அவையாவன:
1. மனப்பாங்கும் இல்லை, புரிந்துணர்வும் இல்லை - இது கல் போன்ற தாழ்நிலையிலானது.
2. மனப்பாங்குடன் கூடிய புரிந்துணர்வு - இது மனித நிலை. 'பரவாயில்லை' என்னும் இரகம் இது.
3. மனப்பாங்குகளற்ற புரிந்துணர்வு - இதுவே ஞான நிலை, தெய்வ நிலை, உயர்நிலையான நேர் உணர்வு நிலை!
உங்கள் மனப்பாங்குகள் மற்றும் ஐம்புலன்களின் மூலம் பெறப்படும் தகவல்களும் இணைந்த தத்துவத்தின் சாரத்தை இப்பொழுது உங்களுக்குத் தருகிறேன்.
உங்கள் வாழ்வில் வெளி-உலகிலிருந்து பெறப்படும் தக வல்கள் மட்டுமே 100 சதவிகிதம் பங்காற்றினால், அதாவது -
இரண்டாம் அத்தியாயத்தின்
சாராம்சம்: 'நீங்கள் ஆத்மா,
நீங்கள் பூர்ணமானவர்,
உங்களுக்கு மனப்பாங்குகளே இல்லையென்றால், நேர் உணர்வும் இல்லையென்றால் - நீங்கள் எதற்கும் பதில்செயல் புரிய மாட்டீர்கள், மந்தத்தன்மையில் மூழ்கிவிடுவீர்கள். 11 லட்சம் கௌரவ போர்வீரர்களும் 'மனப்பாங்கும் இல்லை, நேர் உணர்வும் இல்லை' என்ற தாழ்நிலையின் உருவகங்களாகவே இருக்கின்றனர்.
இரண்டாவது வகையினரான, மனப்பாங்குடன் கூடிய புரிந்துணர்வாளர்களின் பதில்செயல்கள், அவர்களுடைய மனப்பாங்குகள் மற்றும் ஐம்புலன்களின்மூலம் பெறப்பட்ட தகவல்கள் - இந்த இரண்டின் அடிப்படையிலும் இருக்கும்.
இங்கு கௌரவர்களின் மாபெரும் படையைப் பார்த்தவுடன் அர்ஜுனனுக்கு மொத்த உடலும் 'பய' மனப்பாங்கால் நடுங்கத் தொடங்குகிறது.
அவருடைய மனப்பாங்கு, எதிரில் நிற்கும் படையை ஒரு படையாக மட்டுமே பார்க்கவோ அல்லது அவர் தம்மை ஒரு போர்வீரராகக் கருதிக்கொள்வதால், அவர்களோடு போரிடுவதே தம்முடைய கடமை என்று உணரவோ அனுமதிக்கவில்லை. அவர், தம்முடைய உறவினர்களையும், நண்பர்களையும், ஆசிரியர்களையும் பார்த்ததும், போரிலிருந்து விலகிவிடவே விரும்புகிறார். வாழ்விலிருந்து சுருங்கிக்கொள்ளவே விரும்புகிறார். இது கௌரவ போர்வீரர்களின் நிலையைவிட சற்று மேம்பட்ட நிலை.
மூன்றாவது நிலை மனப்பாங்குகளற்ற நேர் உணர்வு நிலை. இதன் உருவமாக, எல்லா நேர் உணர்வுகளுக்கும், முழுமையான விழிப்புணர்வுக்கும் கடவுளான கிருஷ்ணர் இருக்கிறார்.
கிருஷ்ணரின் இருப்பே தூய்மையான நேர் உணர்வுதான். எல்லா மனப்பாங்குகளையும் அழிப்பவர் அவர். அர்ஜுனனின் புரிந்துணர்வுக் கருத்தை உணர்வுமாற்றம் பெறச்செய்து, படையென குவிந்திருந்த அவரது மூலமனப்பாங்குகளை அழித்து, அவற்றை
உள்ளதை உள்ளபடியே உணர்வதே ஸாங்க்ய யோகம்! நிறைவுசெய்யுமாறு அர்ஜுனனை கிருஷ்ணர் வளப்படுத்தினார்!
உங்கள் ஆத்மாவிற்கு மரணமே கிடையாது
கிருஷ்ணர் அர்ஜுனனின் கண்களை, மனப்பாங்குகளற்ற நேர் உணர்வு நிலைக்குத் திறக்கச் சொல்கிறார்.
மேலும் அவர், "நீ எதைக் கொன்று அழிக்கப்போகிறாயோ, அது என்றாவது ஒரு நாள் அழியக்கூடியதுதான். ஆனால் நீயே விரும்பினாலும் என்றும் அழியாத ஆத்மாவை உன்னால் அழிக்க முடியாது," என்று அர்ஜுனனிடம் சொல்கிறார்.
உங்களுக்குள் பாருங்கள், ஒருங்குவித்தலுடனும் ஸ்ரத்தையுடனும் இருக்கும்போது, சாதாரண 'நேர் உணர்வுக் கருத்தே' நேரடியாக நம்மை எல்லாச் செயல்பாடுகளுக்கும் காரணமான 'ஆதார உணர்வு'க்கே எடுத்துச்செல்கிறது.
அப்பொழுது, 'அழியா ஆத்மாவே உங்கள் உண்மையான இயல்பு' என்று கிருஷ்ணரால் பகரப்பட்ட அறுதி இறுதி 'நேர் உணர்வுக் கருத்தே' உங்கள் நிஜமாகிறது.
உங்களுடைய பலஹீன மனப்பாங்குகளால் உருவாக்கப்பட்ட, நெறிதவறிய 'புரிந்துணர்வுகளின் தலையீடு இல்லாமல், உள்ளதை உள்ளபடியே உணர்வதே ஸாங்க்ய யோகம்!
ஸாங்க்ய யோகம், உண்மையான வாழ்வியல் தத்துவம்.
பூர்ணத்வம் மட்டுமே, இந்த ஸாங்க்ய யோகத்தை உங்கள் அனுபவமாக்கும். இதுவே வாழ்வியலின் ஸத்ய தத்துவம் - தத்வ ஸத்ய, ஸத்ய தத்வ!
உங்களை மரணமில்லாப் பெருவாழ்விற்கு அழைத்துச்செல்லும் சத்தியங்கள்(2.19 -2.25)
அர்ஜுனன், ‘தான் தம் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் அழிப்பதனால் தமக்கு இந்த உலகிலும் எதிர்காலப் பிறப்பிலும் சொல்லொணா துக்கம் ஏற்படுமென்றும், தம்முடைய செயலால் எதிர்காலச் சந்ததிகளும் துன்பமடைவார்களென்றும்’ சொல்லிக்கொள்கிறார்.
அதற்குக் கிருஷ்ணர், “அர்ஜுனா உன்னுடைய எல்லாப் பயங்களுக்கும் அர்த்தமே இல்லை, ஏனென்றால் உண்மையில், ஸக்திக்கு, ஆத்மாவுக்கு மரணம் என்பதே இல்லை. நாம் எதைக் கொல்கிறோம்? என்றாவது ஒருநாள் அழிந்தே ஆக வேண்டிய உடலைத்தான் கொல்கிறோம். அதனால் யாரும் யாரையும் கொல்லவும் முடியாது; யாராலும் கொல்லப்படவும் முடியாது. இரண்டுமே கற்பனைகள்தான்.
இந்த உடலில் குடிகொள்ளும் ஆத்மாவானது என்றும் வாழ்கிறது. அது இந்த உடலில் தற்காலிகமாகத்தான் வாசம்செய்கிறது. ஆனால் அது நிலையானது. அழிவில்லாதது. மேலும் அதற்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. ஆத்மாவை மூடியிருக்கும் உடலுக்குத்தான் அழிவும் மறு பிறப்பும். ஆத்மா என்றும் வாழ்கிறது,” என்று விளக்குகிறார்.
கிருஷ்ணர், ‘மரணம்’ என்கிற கருத்தையே மறுக்கிறார். ‘மரணம் என்ற ஒரு நிகழ்வே கிடையாது’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
எப்படி ஒரு மனிதன் பழைய துணியைக் கழற்றிவிட்டு, யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ (2.22) - புதிய துணியை உடுத்திக்கொள்கிறாரோ, அதேபோல் ஆத்மாவானது பழைய உடலைக் கழற்றிவிட்டு புதிய உடலை உடுத்திக்கொள்கிறது. ஆயுதங்களால் ஆத்மாவை வெட்ட முடியாது. நெருப்பால் சுட முடியாது. தண்ணீரால் நனைக்க முடியாது. காற்றால் உலர்த்த முடியாது. அது நிலையானது, எங்கும் வியாபித்து இருக்கிறது, அசைக்க முடியாதது, புராதனமானது.
நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக: /
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஸோஷயதி மாருத: // 2.23
கீதையின் இந்த வரிகள் பிரசித்திப் பெற்றவை. இந்தச் சில
வார்த்தைகளைக்கொண்டு கிருஷ்ணர் வாழ்க்கை, மரணம், மனம், உடல், ஆத்மா போன்ற எல்லாவிஷயங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.
மரணத்தைப் பார்த்துத் துன்பப்படுவதைவிட, எப்படி அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறார்.
இந்த உயர்ந்த ஸத்யத்தை ஒரு சிறு குழந்தைகூடப் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக அவர் எடுத்துரைக்கிறார்.
நமக்குப் புது உடை இருக்கும்போது, உபயோகமற்றுப்போன பழைய, அழுக்கான உடையைக் கழற்றியெறிவதற்கு நாம் தயங்குவோமா? எப்படிப் பழைய சட்டையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமோ, அதேபோல் நம் உடலுக்கு வயதாகிவிட்டபிறகு, அந்த உடலை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒருபுரிதல் நமக்குள் மலர்ந்துவிட்டால், அதன் பிறகு நமக்கு எந்தப் பந்தமும் கவலையும் இருக்காது.
"ஆத்மா, பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டதல்ல, ஆகவே அதைப் பஞ்சபூதங்களால் அழிக்க முடியாது. அது பஞ்சபூதங்களுக்கும் அப்பாற்பட்டது. பஞ்சபூதங்களையே உருவாக்கும் சக்திதான் ஆத்மா. பஞ்சபூதங்களால் எப்படி ஆத்மாவை அழிக்க முடியும்?!
மரணம் ஒரு பாதை (2.26 -2.30)
அதனால் உன்னுடைய மரணத்தையோ அல்லது மற்றவர்களுடைய மரணத்தையோ கண்டு பயப்படாதே. அது ஒரு பயணம்தான். ஸ்தூல ஶரீரம் அழிகிறது. அவ்வளவுதான். ஆனாலும் நீ இந்த ஶரீரத்தையும் கடந்து இருக்கிறாய்," என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
ஆத்மா, பஞ்சபூதங்களால்
ஆக்கப்பட்டதல்ல, ஆகவே அதைப்
பஞ்சபூதங்களால் அழிக்க முடியாது.
உண்மையில், மரணம்கூட நம்மை அச்சுறுத்துவதில்லை. நம்முடைய நிறைவேறாத ஆசைகளும், முற்றுப்பெறாத வாழ்வும்தான் நம்மை பயமுறுத்துகின்றன.
பிரச்சினை என்னவென்றால் நிறைவுணர்வோடு வாழ்வை வாழ்வது எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை. நம்முடைய எல்லா ஆசைகளும் அரைகுறையாகத்தான் அனுபவிக்கப்படுகின்றன. காரணம் நாம் ஒரு ஆசையை அனுபவிப்பதற்குமுன் அடுத்த ஆசையை நோக்கி ஓடிவிடுகிறோம். அந்த நிறைவேற்றப்படாத ஆசைகளேமனப்பாங்குகளாகமாறிநம்மைத்துரத்துகின்றன. கேளுங்கள், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைக்கு முன்னரும் பின்னனரும் நீங்கள் நிறைவேற்றப்படாத ஆசைகளால் ஏற்பட்ட எந்தவொரு குறைவுணர்வும் இல்லாமல், உங்களை சக்திமிக்கவராகவும் பலம்வாய்ந்தவராகவும் உணர்வதே நிறைவுணர்வு, பூர்ணத்வம் என்கிறேன்!
நீங்கள் சக்திமிக்கவராக இருந்தால் நீங்கள் வன்முறையாளராக இருக்கமாட்டீர்கள். நீங்கள் குறைவுணர்விலோ, குற்றவுணர்விலோ, பய உணர்விலோ அல்லது நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டோ இருக்கமாட்டீர்கள்.
'நீங்கள் அழிவில்லாதவர், உங்கள் ஆத்மா தொடர்ந்து என்றென்றும் வாழ்கிறது' என்று கிருஷ்ணர் வெளிப்படுத்தும் ஸத்யத்தைப் உணர்ந்தால் மட்டுமே, நாம் உண்மையில் பூர்ணத்வத்தில் வாழ முடியும், என்றென்றும் ஆனந்தமாக இருக்க முடியும்.
நீங்கள் இந்த ஸத்யத்தை 'ஒருங்குவித்தலுடனான ஸ்ரத்தையுடன்' வாழ ஆரம்பித்தீர்களென்றால், நீங்கள் ஒரு 'வாழும் மரணம்' (ஃடிதிடிணஞ் ஞீளுச்ச்ணட). அப்படியில்லையென்றால் உங்கள் வாழ்வு ஒரு 'மரண வாழ்வு', அதாவது வாழும்பொழுதும் மரணித்துக் கொண்டிருப்பீர்கள் (ஈஞுச்ச்ரீ டீடுதிடிணஞ்).
பிறப்பு இறப்பு என்கிற இந்தச் சுழற்சி பிறப்பு இறப்பு என்கிற இந்தச் சுழற்சி ஒரு புதிர், ஒரு அற்புதம். வாழ்க்கையோடும் மரணத்தோடும் நம்மால் சண்டையிட முடியாது. அவை இரண்டும் நம்மைத் தாண்டி இருக்கின்றன. நம் கட்டுப்பாட்டில் அவை இல்லை. மரணத்தைப் பார்த்து அதிசயிக்கவும் ஆனந்தப்படவும் சந்தோஷப்படவும் மட்டுமே நம்மால் முடியும்.
ஓ மரணம் -முடிவல்ல, புதிய வாழ்க்கையின் துவக்கம்!
(2.31-2.38)
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இரண்டு நிலைகளில் உபதேசிக்கிறார். ஒரு நிலையில், மிக உயர்ந்த உணர்வு தளத்திலிருந்து அவர் அர்ஜுனனிடம் இறுதி ஸத்யத்தைப் பற்றி விளக்குகிறார். உடல் இறந்துவிடுவதால் வாழ்வு முற்றுப்பெறுவதில்லை என்றும், ஆத்மா என்றும் இறவாதது என்றும் அவர் விளக்குகிறார்.
உறவினர்களையும் பெரியவர்களையும் கொல்ல அர்ஜுனனுக்கு இருந்த பயத்தைக் குறித்தே அவர் இதை உபதேசிக்கிறார். எதை இறுதியான முடிவு என்று அர்ஜுனன் நினைக்கிறாரோ அது முடிவல்ல, வாழ்க்கை பயணத்தின் இன்னொரு படிதான் என்று அர்ஜுனனுக்குப் புரியவைக்கிறார்.
அதன் பிறகு கிருஷ்ணர், அர்ஜுனன் இருக்கும் நடைமுறைநிலைக்கு வருகிறார். அர்ஜுனனுடைய ஸ்வதர்மத்தின்படி பார்த்தாலும், போர்புரிதல் என்பது அவருடைய பொறுப்பு என்பதையும் அவருக்கு விளக்குகிறார்.
கிருஷ்ணர் சொல்கிறார், "போர்செய்! நீ ஒரு க்ஷத்ரியன். உனது கடமை போர்செய்வது. அதைச் சரியாகச் செய்யும்போது உனக்குச் சமுதாயத்திலும் பலன்கள் கிடைக்கும், சொர்க்கமும் கிடைக்கும்.
போரிலிருந்து விலகி ஓடினால், உன்னுடைய ஒருங்குவித்தலின்மையின் காரணமாக உனக்குரிய பொறுப்பைச் செய்யாமல் கைவிடுவதால், நீ பாவம் செய்தவனாவாய். உனக்குக் கோழை என்ற பட்டம்தான் கிடைக்கும். இதனால் மக்கள் உன்னைப் பார்த்து ஏளனம் செய்வார்கள். உன்னை அவமரியாதை செய்வார்கள்.
ஒரு க்ஷத்ரியனுக்கு அவமரியாதை என்பது மரணத்தைவிட மிகக் கொடியதாக இருக்கிறது.
வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதே. நீ போரில் கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய். நீ வெற்றிபெற்றால் இந்த உலகத்திலேயே சகல இன்பங்களையும் அனுபவிப்பாய். அதனால் க்ஷத்ரியனாக நீ உன் தர்மப்படி, யுத்தாய க்ரு'தநிபர்சய: (2.37) -போர்செய்.”
இதை, அந்தப் பரமாத்மாவே சொல்லும்போது, அர்ஜுனன் நல்லது கெட்டது பற்றியும் பாவ புண்ணியம் பற்றியும் கவலைப்படவேண்டிய தேவையில்லை.
‘க்ஷத்ரிய’னுக்குப் போர்புரிவதே ஸ்வதர்மம்
கிருஷ்ணர், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்று மட்டும்தான் பார்க்கிறார்.
ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், ஒருங்குவித்தல் உணர்விலிருந்து நீங்கள் எந்தச் செயலைச்செய்தாலும் அது சரியான செயல்தான்.
நீங்கள் செய்யும் செயல் ஆசை அல்லது அச்சம், சுகம் அல்லது துக்கம், வெற்றி அல்லது தோல்விபோன்ற உணர்ச்சிகளால் தூண்டப்பட்டதாக இருக்குமானால், உங்களால் எந்த நல்லதையும் செய்துவிட முடியாது. சுய-லாபத்திற்காக நாம் செய்யும் எந்தச் செயலும் பாவச் செயல்தான்.
அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து வெளியேறினால் நடைமுறைரீதியாகவும் சமுதாயரீதியாகவும் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி பரப்ரஹ்ம நிலையில் உள்ள கிருஷ்ணர் கவலைப்படவில்லை, அதனால் அர்ஜுனனுடைய உள்-உலகில் ஏற்படும் மாற்றத்தைப்பற்றி மட்டும் கவலைப்படுகிறார்.
சுய-சந்தேகங்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் தமது உள்-உணர்வை அர்ஜுனன் மீட்டெடுத்துக்கொள்ள வேண்டுமென கிருஷ்ணர் விரும்புகிறார்.
‘நான் சண்டையிட மாட்டேன்’ என்று அர்ஜுனன் சொல்வதற்குக் காரணம் ஜீவகாருண்யமோ அல்லது அஹிம்ஸையோ அல்ல. தம்முடைய சுற்றத்தார்களுடன் தமக்கு இருந்த சமூக அடையாளத்தாலும் அவர்கள்மேல் அவருக்கு இருந்த உணர்ச்சி ரீதியான பற்றுதலாலுமே அவர் போரிட மறுத்தார்.
அர்ஜுனனைத் தெளிவாகப் பார்க்கவிடாமல், அவர் கண்களை மறைத்துக்கொண்டிருக்கும் மூலமனப்பாங்குகளிலிருந்தும், மனக் குழப்பத்திலிருந்தும் மனச்சோர்விலிருந்தும் தடுமாற்றத்திலிருந்தும் அவரை வெளிக்கொணர கிருஷ்ணர் முயற்சிசெய்கிறார்.
அர்ஜுனனை, செயலால் விளையும் பலனைப்பற்றிக் கவலைப்படாமல், நிறைவுணர்விலிருந்தும் ஸ்வதர்மத்திலிருந்தும் கர்மங்களைச் செய்யவைக்க கிருஷ்ணர் முயற்சிசெய்கிறார்.
அறிவை விட்டுவிட்டு அனுபவத்தில் மலருங்கள்(2.39 -2.46)
கிருஷ்ணர் கர்மயோகத்தைப் பற்றி இங்கு விளக்க ஆரம்பிக்கிறார். இங்குக் கிருஷ்ணர், ‘‘வேதங்களை மறந்துவிடு, வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி என்னிடமே சொல்லாதே,’’ என்கிறார் கிருஷ்ணர்.
மேலும், ‘‘ஏற்கெனவே வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஒருவருக்கு கிணற்று நீரினால் என்ன பலனோ, அதேபோலத்தான் தம்மை உணர்ந்துகொண்ட துறவி, வேதங்களினால் மிகக்குறைந்த பலனே அடைகிறார். அதனால்
பலனை எதிர்பார்க்காமல், ஒருங்குவித்தல்
உணர்விலிருந்து நீங்கள் எந்தச் செயலை
செய்தாலும் அது சரியான செயல்தான்.
அவற்றைக் கடந்து, நிலைத்த, ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்துடன், நான் கற்றுத்தரும் யோகத்தை நோக்கி வா! படைத்தல், காத்தல், அழித்தல் இவற்றைப் பற்றிய நினைவுகளே இல்லாத ஒருநிலையில் நீ உறுதியாக நில்! நீ இவற்றைக் கடந்து, பரப்ரஹ்ம நிலையை அடைந்துவிடுவாய்” என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.
பிரபஞ்ச குரு மட்டுமே இதைச்சொல்ல முடியும்.
ஸத்யத்தின் சாரத்தை அர்ஜுனனின் உள்-உணர்வில் ஆழமாய்ப் பதிக்க வேண்டுமென்பதற்காக, தெய்விகத்தால் சொல்லப்பட்ட வேதங்களைப் புறக்கணிக்கிறார் கிருஷ்ணர்!
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், “வேதங்கள் எதை விரும்புகின்றனவோ அதைச் சொல்லட்டும்! ஆனால் நீ மாயையைக் கடந்துசெல்ல வேண்டுமானால், நீ கேட்பதை, பார்ப்பதை, படிப்பதை ஞானத்தீயில் புடம்போடு,” என்று சொல்கிறார்.
முன்னரே கிருஷ்ணர் கீதையில், தாமே வேதங்கள் என்றும், தாமே அறிவு என்றும் சொல்கிறார். இருந்தாலும் கேட்பதை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு செயல்படாமல், நீ உன் உள்-ஞானம் மற்றும் அனுபவத்தின் வழிகாட்டுதலின்படி செயல்படு என்று அர்ஜுனனிடம் சொல்கிறார்.
என்னவொரு துணிவு, என்னவொரு உறுதியான நம்பிக்கை!
தாம் சொல்கிற ஸத்யத்தை முழுமையாக உணர்ந்த ஒருவரால் மட்டுமே, “நான் சொல்வதையும், என்னுடைய செயல்பாட்டையும் கவனிக்காதே. உன்னுடைய அனுபவத்தால் பிறந்த உன்னுடைய உள்மனத்தின் குரல்படியே செயல்படு,” என்று சொல்ல முடியும்.
ஒருவர் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த வார்த்தைகளுக்குமுன் அவை பொருளற்றவையே!
நீங்கள்
கேட்பதை, பார்ப்பதை, படிப்பதை
ஞானத்தீயில் புடம்போடுங்கள்.
குரு சொல்கிறார், “இருமையைத் தாண்டிச்செல், இவையெல்லாம் மகிழ்ச்சியைத் தருவதுபோல் தெரியும். ஆனால் இவை தற்காலிகமானவையே! இந்தச் சந்தோஷங்கள் இரு துயரங்களுக்கு இடைப்பட்ட நிகழ்வுகளே! முக்குணங்களைக் கடந்து முடிவற்ற, ஐக்கியமான ஒன்றைத் தேடு. இதுவே யோகம்.’’
செயல்படுங்கள்,
பலனை எதிர்பார்க்காதீர்கள்(2.42 -2.48)
பகவத்கீதையின் கருத்துகள் அனைத்தையும் மேற்சொன்ன இரு ஸ்லோகங்களிலும் அடக்கிவிடலாம். ஜகத்குருவின் செம்மையான புத்திக்கூர்மையே இந்த ஸ்லோகங்களில் வெளிப்படுகின்றன.
கிருஷ்ணர் இந்தச் சில வார்த்தைகளில் பல விஷயங்களைச் சொல்கிறார். “கடமையைச் செய்ய உனக்கு உரிமையும் உண்டு, பொறுப்பும் உண்டு. ஆனால் அந்தச் செயல்களுக்கான பலனில் உனக்கு உரிமையும் கிடையாது, பொறுப்பும் கிடையாது.
பலனின் மேல் கருத்தை வைத்து, அதனை ஆசைக்குரிய பொருளாக நினைத்து அதைத் துரத்தவோ அல்லது அதனை வெறுப்புக்குரிய பொருளாக நினைத்து அதை விட்டுப் பயந்து ஓடவோ செய்யும் மனப்பாங்கை வளர்க்க வேண்டாம். நீ செய்யவேண்டிய செயல்களை, அது வெற்றிபெறுமா அல்லது தோல்வியுறுமா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், ஒருமுனைப்போடும் நிறைவுணர்வோடும் செய்.’’
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ப²லேஷு கதா³சந /
மா கர்மப²லஹேதுர்பூ³ர்மா தே ஸங்கோ³ண்ஸ்த்வகர்மணி // 2.47
ஒருவர் ஏன் ஒரு செயலைச்செய்ய வேண்டும், எப்படிச் செயல்படவேண்டும் என்பதைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எதுவுமே சொல்லத் தேவையுமில்லை; சொல்லவும் முடியாது.
கிருஷ்ணர், “நிறுத்து, உன்னை யாரென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ இங்கு என் பணியைச் செய்யவே இருக்கிறாய். எனக்குச் சொந்தமான பலன்களை எடுத்துச்செல்ல உனக்கு உரிமை கிடையாது,” என்று சொல்கிறார்.
இங்கே கிருஷ்ணரின் நிலை, தம் நிலத்தில் பணிபுரிவதற்கென பல ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கும் ஒரு நிலஉரிமையாளரின் நிலையைப் போன்றதே.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத் தங்கள் கூலியைத்தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. நிலம் நன்கு விளைகிறதா, இல்லையா என அவர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. நிலத்தைப் பராமரிக்கும் தங்கள் வேலையை ஒருங்குவித்தலோடும் ஶ்ரத்தையோடும் செய்தாலே போதும். நிலஉரிமையாளரே அதன் பலனை அனுபவிக்கக்கூடிய உரிமையாளர்.
கேளுங்கள், இங்கே கிருஷ்ணர் என்ன சொல்கிறாரோ, அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதே நாம் அன்றாடம் காணும் பிரச்சினைகளுக்குத் தீர்வு. நீங்கள் செய்யும் செயலின் பலனைப்பற்றிய கவலையில்லாமல் செயலைச்செய்யுங்கள்.
பரிசுகள் கிடைக்கும் என எண்ணி எந்தச் செயலையும் செய்யாதீர்கள். அடுத்து என்ன நிகழுமோ என்ற பயத்தில், செய்கின்ற செயலை இடையிலேயே நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து செயல்களைச் செய்ய வேண்டியதுதான் உங்கள் பொறுப்பு.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஶ்ரத்தையின்றி இருக்கும்போது, நீங்கள் ஒருங்குவித்தலின்றி இருக்கும்போது - உடனடியாக அவற்றை நிறைவுசெய்துவிட்டு, மீண்டும் மீண்டும் தொடர்ந்து உங்கள் சிந்தனையில் ஒருங்குவித்தலைக் கொண்டுவாருங்கள், உங்கள் உணர்வில் ஶ்ரத்தையைக் கொண்டுவாருங்கள், உங்கள் செயலில் பொறுப்புணர்வைக் கொண்டுவாருங்கள், வாழ்க்கைமுறையில் வளப்படுத்துதலைக் கொண்டுவாருங்கள்!
அப்படிச் செய்யும்போது, கிருஷ்ணர் சொல்லும் ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே (2.48)
- ‘வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலைகுலையா அசாதாரணமான உணர்வை, யோகத்தில் நிலைபெற்ற உணர்வை உங்கள் வாழ்வில் உணர்வீர்கள்.
பூர்ணத்வ ஞானத்தில்
மையம்கொண்டால் மட்டுமே
புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள்.
செயலில் சிரத்தையைக் கொண்டுவாருங்கள் (2.49 -2.59)
கிருஷ்ணர், இங்கு மீண்டும், "பற்றில்லாமல் செயல்படுங்கள், இறுதியில் ஏற்படும் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பூர்ணத்வ ஞானத்தில் உங்களை நீங்களே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; அது, செயல்கள் மற்றும் பலன்களின்மேல் உள்ள ஆசை, இந்த இரண்டையும் கடந்தநிலைக்கு உங்களை எடுத்துச்செல்லும்," என்று வலியுறுத்துகிறார்.
இந்தப் பூர்ணத்வ ஞானத்தில் மையம்கொண்டால் மட்டுமே புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். பலன்கள்மீதுள்ள பற்றை விட்டுவிட்டால், பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்துவிடுபட்டு, துக்கத்தைக் கடந்தநிலையில் இருப்பீர்கள்.
அடுத்த ஸ்லோகத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனை வளப்படுத்தி, அவரை வாழ்வில் வெற்றியடையவும், விரிவடையவும் செய்யும் இரண்டாவது தத்துவமான ஸ்ரத்தையில் நிலைபெறுவதற்கான தீக்ஷை கொடுக்கத் தொடங்குகிறார்.
கிருஷ்ணர் மிகச்சிறந்த வாழ்க்கை கலையியலாளர்! இங்கு அவர் ஸ்ரத்தையின் ஸத்யத்தை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். வாழ்க்கையைச் செம்மையாக வழிநடத்தும் நடைமுறை திட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
கிருஷ்ணர், யோக: கர்மஸு கௌஸலம் - செயலில் ஸ்ரத்தையுடன் இருப்பதே யோகம் என்று பிரகடனப்படுத்துகிறார். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், யோக: கர்மஸு கௌஸலம் என்றால் 'செயலைச் சரியாகச் செய்வது' என்று நான் இதை மொழிபெயர்ப்பு செய்யவில்லை, செயலில் ஸ்ரத்தையுடன் இருப்பதே யோகம் என்று
பற்றற்ற மனமே 'பற்று அற்ற'தை C மொழிபெயர்ப்பு செய்கிறேன்.
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, வாழ்க்கையை வெல்லும் ஒரு தலைசிறந்த திட்டச் செயல்முறையைக் கொடுக்கிறார். எல்லாச் செயல்களையும் ஶ்ரத்தையின் துணிவுடன் செய்யுமாறு வலியுறுத்துகிறார்.
ஒரு க்ஷத்ரிய போர்வீரராக துணிவுடன் எழுந்துநின்று போரிட்டு, தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு, தன்னை விரிவடையச் செய்துகொண்டால் மட்டுமே, தம்முடைய ‘பய’ மூலமனப்பாங்குகளை நிறைவுசெய்ய முடியும். அதன்பிறகே, அர்ஜுனன் ஶ்ரத்தை உடையவராக ஆக முடியும்.
அர்ஜுனன் இப்பொழுது மேலும் தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார்.
தெய்வத்திடமிருந்து வரும் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள்
இப்பொழுது அர்ஜுனன், தெய்வத்திடமிருந்து வரும் இந்த அறிவுரையை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை கிருஷ்ணர் மேலுள்ள நம்பிக்கையால் உணர்கிறார்.
கிருஷ்ணரிடம், “நீங்கள் மிக உயர்ந்த விஷயங்களைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். நான் எதிர்பார்ப்பு, பற்றுதல் இல்லாமல் பூர்ணத்வ ஞானத்தில் இருக்க வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபடியே வாழ வேண்டுமென நான் விரும்புகிறேன்.
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஶவ (2.54) - எப்பொழுதும் பூர்ணத்வ ஞானத்திலேயே நிலைத்திருக்கும் ஒருவர் எப்படிச் செயல்படுவார்? எப்படிப் பேசுவார், எப்படி நடப்பார்? நானும் அதைப்போல் ஸ்திதப்ரஜ்ஞனாக மாற உதவுங்கள், கேசவா!” என்கிறார். அதற்கு கிருஷ்ணர் பதிலளிக்கிறார்: “இந்த மனிதர் ஆசைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவர். பயமோ ஆசையோ அவருக்குக் கிடையாது. அவருக்கு மனப்பாங்குகள் கிடையாது. பூர்ணத்வநிலையிலிலேயே எப்போதும் இருப்பார். புலனின்பங்கள்மேல் அவருக்கு விருப்பம் இருக்காது. புலன்களை வெளி-உலகிலிருந்து விலக்கி, அவற்றை உள்முகமாகத் திருப்பி, எல்லா ஆசைகள், உணர்ச்சிகள், இன்பங்கள் மற்றும் புலனின்ப பொருட்களையெல்லாம் கடந்து இருக்கும் மிக உயர்ந்த ஸத்யத்தை நோக்கியே செலுத்துவார். அந்த ஸத்யத்தை உணர்ந்த பிறகு, ஸத்யத்தை அடைய வேண்டும் என்ற ஆவல்கூட அவரிடமிருந்து உதிர்ந்துவிடுகிறது," என்கிறார் .
அதனால் கிருஷ்ணர், 'தன்னை உணர்ந்த' ஞானியைப் பற்றி அர்ஜுனனுக்கு விளக்குகிறார். அப்படியென்றால்தான், அர்ஜுனனும் தம்மை அந்நிலைக்கு உயர்த்திக்கொண்டு, தம்மையே உணர்ந்துகொள்ள முடியும் என்கிறார்.
மனத்தில் பயமோ கோபமோ இல்லாதபோது, வெற்றி தோல்வியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாதபோது, அந்தப் பற்றற்ற மனமானது 'பற்று அற்ற'தையே தேடும்.
முதலில் பொருட்கள் விலகும். பிறகு, பொருட்கள்மீது உள்ள ஆசை விலகி, ஸத்யம் மலரும்.
இது கேட்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதுபோல மிக எளிமையானதே!
பூர்ணத்துவ ஞானத்தில் நிலைபெறுங்கள் (2.60-2.67)
கிருஷ்ணர், புலன்களை அடக்குவது எவ்வளவு கடினமானது என்றும், ஒருவர் புலன்களின் கட்டுப்பாட்டை இழந்தால் என்ன நடக்கும் என்றும் மேலும் விவரிக்கிறார்.
கிருஷ்ணர், நம் புலன்கள் எப்போதும் ஒருவித குழப்பத்துடனும் பிடிவாதத்துடனுமே இருக்கும் என்கிறார். நமது புலன்களை, நாம் எந்த அளவுக்கு அடக்க முயற்சிசெய்கிறோமோ, அது அந்த அளவிற்கு மூர்க்கத்தனத்துடன் நம் கட்டுப்பாட்டைமீறிச் செயல்படும்தன்மை கொண்டதாக இருக்கும்.
'கட்டுப்படுத்துதல்' மனத்தின்மேல் வேலைசெய்யாது.
அடக்கப்பட்ட உணர்ச்சிகள் என்பது சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெடித்துச்சிதறக் காத்திருக்கும் மூலமனப்பாங்குகளே. அவை எரிமலைகளைப்போன்றவை, சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கின்றன.
இதற்கு ஒரே வழி, மனத்தை அவர்மேல் ஒருங்குவிப்பதே! அப்போது மட்டுமே புலன்கள் கட்டுப்படுகின்றன, மனம் ஒருமுகப்படுகிறது என்கிறார் கிருஷ்ணர்.
மனத்தை நிறுத்த முடியாது. உடல் இருக்கும்வரை எண்ணங்களையும் நிறுத்த முடியாது. உங்கள் சிந்தனையில் ஒருங்குவித்தலைக் கொண்டுவந்து,உங்கள் மூலமனப்பாங்குகளை உங்களால் நிறைவுசெய்ய முடியும்.
மனம் ஒருமுறை பூர்ணத்வத்தின் பேரானந்தத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அது மீண்டும் அலைந்துதிரிய விரும்புவதில்லை. ஆனால் நினைவுகொள்ளுங்கள், உங்கள் எண்ணங்களை நிறுத்தமுயற்சித்தால், நீங்கள் தோல்விதான் அடைவீர்கள்.
உங்கள் மனம் உங்களின் வயப்பட்டுவிடும்
கிருஷ்ணன் சொல்கிறார், பற்றிலிருந்து ஆசை, ஆசையிலிருந்து கோபம், கோபத்திலிருந்து மனக்குழப்பம், மனக்குழப்பத்திலிருந்து நினைவின்மை, நினைவின்மையிலிருந்து பகுத்தறிவின்மை என்று ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுகிறது. இறுதியில் பகுத்தறிவின்மை அவரின் அழிவிற்கு வழிவகுக்கிறது.
பிரபஞ்ச சக்தியான அவரைச் சரணடைந்து, புலன்களை அடக்கி, பூர்ணத்வத்தில் நிலைத்து, நிரந்தரமான அமைதியைப் பெறுவதே
குரு வகுத்துக் கொடுத்துள்ளபடி,
ஒவ்வொரு படியிலும் கவனமாகவும்
ஆழமாகவும் செல்லுங்கள்.
இந்த அழிவை நிறுத்துவதற்கான ஒரேவழி என்கிறார்.
அழிவை நிறுத்துவதற்கான சிறப்புவாய்ந்த இந்த வரைபடத்தை, குருமார்களுக்கு எல்லாம் குருவான கிருஷ்ணர் நம்முன் வைக்கிறார்.
கிருஷ்ணரைச் சரணடையுங்கள்
புலன்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுங்கள்
நிகழ்கால பூர்ணத்வத்தில் நிலைகொள்ளுங்கள்
அதன் பிறகே நீங்கள் அமைதி அடைவீர்கள்
அமைதியற்றவர் மனத்தில் மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும்?!” என்கிறார் கிருஷ்ணர். ஆகவே நீங்கள், இந்த வரைபடத்தில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தினீர்களானால், 'உங்களுள் வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைப் பற்றி நீங்கள் உணர முடியும்' என்பதை, தம் எல்லையற்ற அருளாலும் கருணையாலும் உங்களுக்கு உணர்த்துகிறார்.
குரு வகுத்துக் கொடுத்துள்ளபடி, ஒவ்வொரு படியிலும் கவனமாகவும் ஆழமாகவும் செல்லுங்கள். இந்தப் பாதை கண்ணாடிபோன்று மிகத் தெளிவாக உள்ளது.
விழிப்புடனிருங்கள்! (2.68 -2.72)
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மீண்டும் ஒருமுறை, மோக்ஷத்தை அடைவது எப்படி என்பதைப் பற்றியும் ஒருவருடைய உண்மையான, இயல்பான விழிப்புநிலையாகிய அந்த ப்ரஹ்ம நிலையோடு
பூர்ணத்வமே
அத்வைத உணர்வுநிலையை,
உங்கள் அனுபவமாக்கும்.
ஒருமைத்துவத்தை உணர்வது எப்படி என்பதைப் பற்றியும் விளக்கி இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.
உண்மையில் நாம் விழிப்போடு இருக்கும் ஒரே தருணம் நாம் பூர்ணத்வ உணர்வில் இருக்கும் தருணம் மட்டுமே!
இப்படிப்பட்ட பூர்ணத்வ உணர்வில் இருக்கும் ஒருவரைத்தான் கிருஷ்ணர், முநி - முனிவர் என்று அழைக்கிறார். முநி என்றால் தம்மைத்தாமே உணர்ந்து நிகழ்காலத்தில் இருப்பவர் என்று பொருள்.
அப்படிப்பட்ட ஒருவர், யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே: (2.69) - மற்றவர்கள் உறங்கும்போது விழித்துக்கொண்டு இருப்பார்; மற்றவர்கள் விழித்துக்கொண்டு இருக்கும்போது உறங்குவார் என்கிறார், கிருஷ்ணர்.
அவர் உறங்கும்போதும்கூட விழிப்புடனேயே இருப்பார். இந்த நிலையை ஸுப்த சித்தம் என்பார்கள்.
அப்படிப்பட்ட முநிக்கு, ப்ரஹ்மத்தோடு ஒன்றிய அத்வைத ஞானம், வாழும் ஒரு வாழ்வுமுறையாகவே ஆகிவிடுகிறது. கேளுங்கள், பூர்ணத்வமே அத்வைத உணர்வுநிலையை, இறுதி விழிப்புணர்வை உங்கள் அனுபவமாக்குகிறது.
அப்போது பிரபஞ்ச முழுமையான இயல்புநிலையை கண்டுகொள்வதும் ஞானமடைதலும் நீங்களும்

சக்தியினிடத்தில் ஸரணாகதியும் நமது அடையாளம் நிகழ்கிறது; நிகழ்கிறது. பிறகு கடவுளாகிறீர்கள்!
யோகத்தில் நிலைபெற்றிருப்பவர்களின் அடையாளம் என்ன என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு, கிருஷ்ணர் தம்முடைய விரிவான விளக்கத்தின்மூலம் பதில்சொல்லி முடிக்கிறார்.
யோகத்தில் மூழ்கியிருக்கும் ஒருவர், ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: (2.72) - அவர் ப்ரஹ்மத்துடன் ஒன்றுபட்ட நிலையில் இருக்கிறார் என்று முடிக்கிறார். இவர் இந்த நிலையை, மரணத்தின்போது அடைந்தாலும்கூட அவர், ப்ரஹ்மநிர்வாணம் ரு‘ச்சதி (2.72) -