KAILASA Library/ஸ்ரீமத் பகவத்கீதை/அத்தியாயம்-1: அர்ஜுந விஷாத யோகம்Sign in
ஸ்ரீமத் பகவத்கீதை

அத்தியாயம்-1: அர்ஜுந விஷாத யோகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் தடுமாற்றங்களுக்கான தீர்வு

வாழ்க்கை என்பது
நல்லது கெட்டது,
தெய்வம் பூதம் என
இரண்டும் கலந்ததே!

இதில் ஏதாவது ஒன்றைத் தாண்டி
ஒன்றைத் தேர்ந்தெடுப்பது
என்பது நமக்கு உதவாது.

நாம்
இவ்விரண்டையுமே தாண்டிச்
சென்றாக

ஸ்லோகங்கள்

அத ப்ரதமோண்த்யாய:

அர்ஜுந விஷாத யோக:

ஏ

த்ரு'தராஷ்ட்ர உவாச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: ந
மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய நந 1.1

திருதராஷ்டிரர் சொன்னது 1.1 “ஸஞ்ஜயா, அந்தப் புனித குருக்ஷேத்ர பூமியில், போர்புரிய விரும்பி ஆர்வத்துடன்கூடிய எனது மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தார்கள்?

ஸஞ்ஜய உவாச
த்ரு'ஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூட॒ம் துர்யோதநஸ்ததா ந
ஆச்சார்யமுபஸங்க‌ம்ய ராஜா வசனமப்ரவீத் நந 1.2

ஸஞ்ஜயன் சொன்னது 1.2 பாண்டவ சேனையின் மொத்த வியூகத்தையும் பார்த்த துரியோதனன் தம்முடைய ஆச்சார்யாரிடம் சென்று சொன்னார்:

பஸ்யேதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம் ந
வ்யூட॒ாம் த்ருபதபுத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா நந 1.3

1.3 என் ஆச்சார்யாரே! உமது சீடரும் துருபதனின் மகனுமான அந்தப் புத்திசாலியால் மிகச்சிறப்பாக வியூகம் அமைக்கப்பட்டுள்ள பாண்டு புத்திரர்களின் சிறந்த சேனையைப் பாருங்கள்.

அத்ர ஸூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி ந
யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத: நந 1.4

1.4 இந்தப் படையில் பலம் பொருந்திய, சிறந்த வில்லாளிகளான பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் இணையான அனேக வீரர்கள் இருக்கிறார்கள்.

த்ருஷ்டகேதுஸ்சேகிதாந: காஸிராஜஸ்ச வீர்யவாந் ந
புருஜித்குந்திபோஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்கவ: நந 1.5

1.5 திருஷ்டகேது, சேகிதானன், வீரிய காசி ராஜன் மேலும் புருஜித், குந்தி போஜன், சிறந்த மனிதர் சைபியா,

யுதாமந்யுஸ்சவிக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந் ந
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா: நந 1.6

1.6 பேராற்றல் படைத்த யுதாமன்யு, வல்லமை பொருந்திய உத்தமௌஜஸ், சுபத்திரை புதல்வன், திரௌபதி புதல்வர்கள் எல்லோரும் பெரிய போர்வீரர்களே!

அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம ந
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே நந 1.7

1.7 சிறந்த பிராஹ்மணரே! நீங்கள் அறிந்துகொள்வதற்காக நம்முடைய சே னையை வழிநடத்தும் வீரர்களைப் பற்றியும் சொல்கிறேன்.

பவாந்பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய: ந
அஸ்வத்தாமா விகர்ணஸ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச நந 1.8

1.8 போரில் வெற்றியை மட்டுமே காணும் தாங்கள் மற்றும் பீஷ்மர், கர்ணன், கிருபர் போன்றவர்கள் இருக்கிறீர்கள். மேலும் அஸ்வத்தாமன், விகர்ணா, ஸோமதத்தரின் மகன் இவர்கள்கூட எப்போதும் போரில் வெற்றியடைபவர்கள்தான்.

அந்யே ச பஹவ: ஶூரா மதர்தே த்யக்தஜீவிதா: ந
நாநாஶஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஶாரதா: நந 1.9

1.9 இங்கே இருக்கும் வீரர்களில் பலர் என் நலனுக்காக உயிரையும் தருவார்கள். என் பொருட்டு எதையும் செய்வார்கள். அவர்கள் போர்க்கலையில் வல்லவர்கள், ஆயுதங்கள் பலவும் செலுத்தவல்லவர்கள்.

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம் ந
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம் நந 1.10

1.10 பீஷ்மரால் காக்கப்படும் நமது படை யாராலும் வெல்ல முடியாததாக இருக்கிறது. ஆனால் பீமனால் காக்கப்படும் அவர்களது படை வெல்லக்கூடியதாக இருக்கிறது.

அயநேஷு ச ஸர்வேஷு யதா பாகமவஸ்திதா: ந
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி நந 1.11

1.11 நீங்கள் அனைவரும் அவரவர்கள் படை பிரிவுகள் இருக்கும் இடத்திலிருந்து கொண்டு, பாட்டனார் பீஷ்மரைக் காத்திருங்கள்.

தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ரு'த்த: பிதாமஹ: ந
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஶங்கம் தத்மௌ ப்ரதாபவாந் நந
1.12

1.12 துரியோதனனுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவகையில் குரு குலத்தின் பாட்டனரான வல்லமை மிக்க பீஷ்மர் சிங்கம் போன்று கர்ஜித்து விட்டு, தம்முடைய சங்கை முழக்கினார்.

தத: ஶங்காஶ்ச பேர்யஶ்ச பணவாநககோமுகா: ந
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஶப்தஸ்துமுலோண்பவத் நந 1.13

1.13 சங்குகளும் எக்காளங்களும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அந்த ஒலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

தத: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ ந
மாதவ: பாண்டவச்சைவ திவ்யௌ ஶங்கௌ ப்ரதத்மது: நந

1.14 வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த க்ருஷ்ணரும் அர்ஜுனனும் தங்கள் தெய்வீக சங்குகளை ஊதினார்கள்.

பாஞ்சஜந்யம் ஹ்ரு'ஷீகேஶோ தேவதத்தம் தநஞ்ஜய: ந
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஶங்கம் பீமகர்தா வ்ரு'கோதர: நந

1.15 க்ருஷ்ணர் தம்முடைய 'பாஞ்சஜந்யம்' என்ற தெய்வீக சங்கை ஒலிக்கச்செய்தார். அர்ஜுனன் தம்முடைய 'தேவதத்தம்' என்னும் சங்கை முழக்கினார். பீமன் தம்முடைய 'பௌண்ட்ரம்' என்னும் பெரிய சங்கை ஒலித்தார்.

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர: ந
நகுல: ஸஹதேவஶ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ நந

காஶ்யஶ்ச பரமேஷ்வாஸ: ஶிகண்டீ ச மஹாரத: ந
த்ரு'ஷ்டத்யும்நோ விராடஶ்ச ஸாத்யகிஶ்சாபராஜித:நந

த்ருபதோ த்ரௌபதேயாஶ்ச ஸர்வஶ: ப்ரு'திவீபதே ந
ஸௌபத்ரஶ்ச மஹாபாஹு: ஶங்காந்தத்மு: ப்ரு'தக் ப்ரு'தக் நந

1.16,17,18 குந்தியின் மைந்தன் ராஜா யுதிஷ்டிரர் தம்முடைய அனந்த விஜயம் என்ற சங்கையும் நகுலனும் சகாதேவனும் தங்களுடைய 'ஸுகோஷம்,' 'மணிபுஷ்பகம்' என்னும் சங்குகளையும் ஊதினார்கள். சிறந்த வில்லாளியும் காசிராஜனும் மஹாவீரனுமாகிய சீகண்டியும் திருஷ்டத்யும்னனும் விராட தேசத்தரசனும் பிறரால் வெல்லப்படாத சாத்யகியும் துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும் தோள் வலிமை உடையவனாகிய சுபத்திரையின் மகனும் அவரவர்களுக்குரிய சங்குகளை ஊதினார்கள்.

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ரு'தயானி வ்யதாரயத் ந
நபஶ்ச ப்ரு'திவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந் ந

1.19 விண்ணையும் மண்ணையும் சேர்ந்து ஒலிக்கச்செய்த அந்தச் சங்குகளின் பெருமுழக்கம் திருதராஷ்டிர மக்களின் நெஞ்சங்களைப் பிளந்தது.

அத வ்யவஸ்திதாந்த்ரு'ஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ: ந
ப்ரவ்ரு'த்தே ஶஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ: ந 1.20
ஹ்ரு'ஷீகேஶம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே ந

1.20,21 பிறகு, அனுமனைக் கொடியில் உடையவனாகிய அர்ஜுனன், போர் தொடங்க ஆயத்தமாயிருந்த திருதராஷ்டிர மக்களைப் பார்த்து, அம்புகளைப் பறக்கவிட ஆரம்பிக்கும் முன்பு, வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணருக்கு இச்சொல்லை உரைத்தார்.

அர்ஜுந உவாச

ஸேநயொருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேன்ச்யுத ந 1.21
யாவதேதாந்நிரீக்ஷேண்ஹம் யோத்துகாமாநவஸ்திதாந் ந
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே ந 1.22

அர்ஜுனன் சொன்னது 1.21,22 "பிழையற்றவரே! படைகள் இரண்டுக்கும் இடையில் என் தேரை நிறுத்துக. போர்செய்யவிரும்பி என் முன்னே நிற்பவர் யார் யார் என்பதையும் இப்போரில் நான் யாரோடு போர்புரிய வேண்டும் என்பதையும் பார்க்கிறேன்."

யோத்ஸ்யமாநாநவேக்ஷேண்ஹம் ய ஏதேண்த்ர ஸமாகதா: ந
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ: ந

1.23 திருதராஷ்டிரனுடைய, கெட்ட புத்தியுடைய புதல்வர்களின் சார்பாகப் போர்புரிய இங்கே திரண்டிருப்போரை நான் காண வேண்டும்.

ஸஞ்ஜய உவாச

ஏவமுக்தோ ஹ்ரு'ஷீகேஸோ குடாகேஸேந பாரத ந
ஸேநயொருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் நந 1.24

பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் ந
உவாச பார்த பஸ்யைதாந் ஸமவேதாந்குரூநிதி நந 1.25

ஸஞ்ஜயன் சொன்னது

1.24,25 பரதகுலத்தில் வந்தவரே, அர்ஜுனன் இவ்வாறு சொன்னதும் ஹ்ருஷீகேசர், இரண்டு சேனைகளுக்கு மத்தியில் பீஷ்மர், துரோணர் மற்றும் எல்லா வேந்தர்களுக்கு எதிரிலும் அந்த அழகிய தேரைக்கொண்டு நிறுத்திவிட்டுச் சொன்னார், “பார்த்தா, இங்கே கூடியுள்ள எல்லா கௌரவர்களையும் பார்.’’

தத்ராபஸ்யத்ஸ்திதாந் பார்த: பித்ரு'நத பிதாமஹாந் ந
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரு'ந்புத்ராநபௌத்ராந் ஸகீம்ஸ்ததா நந 1.26
ப்வஸுராந் ஸுஹ்ரு'த ப்சைவ ஸேநயொருபயோரபி ந

1.26,27 அங்கே இரண்டு சேனைகளிலும் அணிவகுத்து நிற்கும் தந்தைமார்களையும் பாட்டன்மார்களையும் ஆச்சாரியர்களையும் தாய்வழி மாமன்மார்களையும் சகோதரர்களையும் மகன்களையும் பேரக்குழந்தைகளையும் தோழர்களையும் மாமனார்களையும் நலன்விரும்பிகளையும் அர்ஜுனன் பார்த்தார்.

தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாநபந்தூநவஸ்திதாந் நந 1.27
க்ரு'பயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத் ந

1.27,28 அங்கே நிற்கிற நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் பார்த்து, இரக்கத்தால் மூழ்கடிக்கப்பட்ட அர்ஜுனன் இவ்வாறு சோகத்துடன் பேசினார்.

அர்ஜுந உவாச

த்ருʼஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருʼஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம் நந
1.28
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஶுஷ்யதி ந

அர்ஜுனன் சொன்னது

1.28,29 போர்புரிவதற்குக் கூடியுள்ள என் உற்றார் உறவினர்களைப் பார்த்து என் அவயங்கள் நடுங்குகின்றன. கிருஷ்ணா என் வாயும் வறள்கிறது.

வேபதுஶ்ச ஶரீரே மே ரோமஹர்ஷஶ்ச ஜாயதே நந 1.29
காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே ந

1.29,30 என் உடலிலுள்ள ரோமங்கள் சிலிர்க்கின்றன. கையிலிருந்து காண்டீவம் நழுவுகிறது; தோல் எரிகிறது.

ந ச ஶக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந: நந 1.30
நிமித்தாநி ச பஶ்யாமி விபரீதாநி கேஶவ ந

1.30,31 இனி இங்கு என்னால் நிற்க முடியாது. என்னுடைய மனம் குழப்பமடைகிறது. கேசவா! கெடுதல்களைக் கொடுக்கக்கூடிய ச குனங்களை நான் பார்க்கிறேன்.

ந ச ஸ்ரேயோண்நுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே நந

ந காங்க்ஷே விஜயம் க்ரு'ஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச ந

கீருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொல்லுவதில் எந்த நன்மையையும் நான் காணவில்லை. வெற்றியையும் இராஜ்ஜியத்தையும் இன்பங்களையும் நான் விரும்பவில்லை.

கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா நந

1.32 ராஜ்யியத்தாலோ இன்பங்களாலோ அல்லது இந்த வாழ்க்கையினாலோ என்ன பயன்?

யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாநி சந
த இமேண்வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச நந

ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா: ந
மாதுலா: ஸ்வஸுரா: பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திநஸ்ததா நந

1.33, 34 கீருஷ்ணா, யார் பொருட்டு நாம் ராஜ்யியங்களையும் இன்பங்களையும் சுகங்களையும் விரும்புகிறோமோ அவர்களாகிய ஆச்சார்யர்கள், தந்தையர், மகன்கள், பாட்டன்மார், தாய்வழி மாமன்மார், மாமனார், பேரர், மைத்துனர் மற்றும் எல்லா உறவினர்களும் போர்க்களத்தில் உயிரையும் செல்வங்களையும் இழக்கத் தயாராக நிற்கிறார்கள்.

ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோண்பி மதுஸூதந ந
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ரு'தே நந

1.35 மதுஸூதனா! நான் கொல்லப்பட்டாலும், மூவுலகங்களின் அரசாட்சி கிடைத்தாலும்கூட நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை. இந்தப் பூமிக்காக நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்பதைச்

சொல்லவும் வேண்டுமா?

நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜநார்தந ந
பாபமேவாஸ்ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந: நந 1.36

1.36 ஜனார்த்தனா! திருதராஷ்டிர புதல்வர்களைக் கொல்வதால் நமக்கு என்ன இன்பம் வரப்போகிறது? இவர்களைக் கொல்வதால் பாவமே நம்மை வந்தடையும்.

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந் ஸ்வபாந்தவாந் ந
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந: ஸ்யாம மாதவ நந 1.37

1.37 நம் தோழர்களையும் திருதராஷ்டிரப் புத்திரர்களையும் கொல்லுதல் நமக்குத் தகாது. மாதவா, நம் உற்றாரைக் கொன்றுவிட்டு, நாம் எப்படி இன்புற்று இருப்பது?

யத்யப்யேதே ந பஶ்யந்தி லோபோபஹதசேதஸ: ந
குலக்ஷயக்ரு'தம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் நந 1.38

1.38 ஜனார்த்தனா! பேராசையால் கவரப்பட்ட மனத்தையும் குலநாச த்தால் உண்டாகும் கேட்டையும் நண்பர்களுடன் சண்டையிடுவதால் உண்டாகும் பாதகத்தையும் இவர்கள் பார்ப்பதில்லை.

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும் ந
குலக்ஷயக்ரு'தம் தோஷம் ப்ரபஶ்யத் பிர்ஜநார்தந நந 1.39

1.39 குலநாசத்தால் விளையும் கேட்டினை நன்கு உணர்ந்த நாம் ஏன் இப்பாதகத்திலிருந்து பின்வாங்கக் கூடாது?

குலக்ஷயே ப்ரணஶ்யந்தி குலதர்மா: ஸநாதநா: ந
தர்மே நஷ்டே குலம் க்ரு'த்ஸ்நமதர்மோன்பிபவத்யுத நந 1.40

1.40 குலம் அழிந்தால் என்றென்றும் நிலைத்திருக்கும் குலதர்மங்கள் அழிகின்றன. தர்மநாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.

அதர்மாபிபவாக்க்ரு'ஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய: ந
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர: ந॥ 1.41

1.41 அதர்மம் மிகும்பொழுது குலப்பெண்கள் களங்கப்படுகிறார்கள். வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவரே! பெண்கள் தூய்மைகெடும்போது, சமுதாயப் பிரச்சினைகள் உண்டாகின்றன.

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச ந
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா: ந॥ 1.42

1.42 சமுதாயப் பிரச்சினைகள் அதிகமாகும்பொழுது, குலத்தோர்க்கும் அதனை அழித்தோர்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்துவிடுகிறார்கள்.

தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை: ந
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா: ந॥ 1.43

1.43 குல நாசகர்கள் செய்யும் கேடுகளால் எல்லா ஜாதிதர்மங்களும் குலதர்மங்களும் அழிக்கப்படுகின்றன.

உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந ந
நரகேந்நியதம் வாஸோ பவதீத்யநுஸுஸ்ரும ந॥ 1.44

1.44 ஜனார்தனா! குலதர்மத்தை அழித்தவர்கள் நரகத்திலேயே எப்போதும் வசிக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் ந
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா: ந॥ 1.45

1.45 இராஜ்யசுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரும் பாவத்தைச் செய்யத் துணிந்தோம், ஐயகோ!

யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய: ந
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் பவேத் ந॥ 1.46

1.46 கையில் ஆயுதமேந்திய கௌரவர்கள், யுத்தத்தில் எதிர்க்காமலும் ஆயுதம் இல்லாமலும் இருக்கிற என்னைக் கொல்லுவார்களானால், அதுவே எனக்கு நன்மையாக இருக்கும்.

ஸஞ்ஜய உவாச

ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த உபাবিশத் நடு
விஸ்ரு'ஜ்ய ஸஸரம் சாபம் சோகஸம்விக்நமாநஸ: நடு 1.47

ஸஞ்ஜயன் சொன்னது 1.47 துக்கத்தால் மனம் குழம்பிய அர்ஜுனன் இவ்வாறு சொல்லிவிட்டு, போர்க்களத்தில் அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டு, தேரின் பின்பகுதியில் அமர்ந்தார்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஸாஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே அர்ஜுநவிஷாதயோகோ நாம ப்ரதமோSத்யாய: நடு ஓம் தத் ஸத், இது ஸ்ரீமத்பகவத்கீதை என்னும் உபநிடதத்தில் அமைந்துள்ள க்ருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான ப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'அர்ஜுன விஷாத யோகம்' எனும் பெயருடைய முதல் அத்தியாயம்.

உங்கள் தடுமாற்றங்களுக்கான தீர்வு

Krishna and Arjuna on the chariot in Kurukshetra

இந்த உலகில் கோடிக்கணக்கான வேத நூல்களும் புத்தகங்களும் உள்ளன. காலங்காலமாக மனிதர்கள் அந்த வேத நூல்களுக்கான விளக்கங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் எந்தவொரு புத்தகமும் பகவத்கீதையின் அளவுக்கு மனிதரின் விழிப்புணர்வை இவ்வளவு ஆழமாக ஊடுருவவில்லை, இத்தனை ஞானிகளை உருவாக்கவுமில்லை.

பகவத்கீதை, சுருக்கப்படாத ஒரு ஆன்மிக அகராதி, ஆன்மிக அறிவுக் களஞ்சியம்.

ஆன்மிக இலக்கியங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

அதில் முதலாக வருவது வகை ஶாஸ்த்ரங்கள் - இவை நமக்கு, மனித வாழ்வின் குறிக்கோளைப் பற்றிய, மனிதன் மற்றும் கடவுளைப் பற்றிய ஸத்யத்தை அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஶாஸ்த்ரங்கள், வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிந்துணர்வைப் பெறுவதற்கான வழிகாட்டிகளாக இருக்கின்றன.

இரண்டாவது வகை இலக்கியமான ஸ்தோத்ரங்கள், தெய்விக அன்பின் சிறுதுளியைப் பருகியவர்களின் ‘ஆனந்த வெளிப்பாடுகளை’ உள்ளடக்கியவையாக இருக்கின்றன.

மூன்றாவது வகை இலக்கியமான ஸூத்ரங்கள், தெய்விகத்துடன் இணைவதற்கான வழிமுறைகளை, நுட்பங்களை நமக்குத் தருகின்றன.

ஆராய்ந்து அறிந்துகொள்ள விரும்புவர்கள் ஶாஸ்த்ரங்களுக்குள் செல்கிறார்கள். நம்பிக்கையுடன் இருப்பவர்கள் ஸ்தோத்ரங்களுக்குள் செல்கிறார்கள். ஆனால் நேரடியான அனுபவத்தை வேண்டுபவர்களால் ஶாஸ்த்ரங்களுக்கோ, ஸ்தோத்ரங்களுக்கோ காத்துக்கொண்டிருக்க முடிவதில்லை. அவர்கள் நேரடியான வழிமுறைகளையே அதாவது ஸூத்ரங்களையே விரும்புகிறார்கள். நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய நுட்பங்கள் மட்டுமே அவர்களுக்குத் தேவை.

பகவத்கீதை மட்டுமே தன்னகத்தே ஶாஸ்த்ரங்களையும் ஸ்தோத்ரங்களையும் ஸூத்ரங்களையும் ஒருங்கேகொண்ட நூல் மட்டுமல்ல, அதற்கு மேலும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு மறைநூல்.

கீதை ஒரு ஶாஸ்த்ரம்; சதுர் வேதங்களான ஒருங்குவித்தல், ஶ்ரத்தை, பொறுப்பெடுத்தல், வளப்படுத்துதல் என்னும் நான்கு தத்துவங்களைப் பற்றியும், நமது வாழ்வு, மரணம், ஆத்மா, நாம்

பகவத்கீதை மட்டுமே தன்னகத்தே ஶாஸ்த்ரங்களையும் ஸ்தோத்ரங்களையும் ஸூத்ரங்களையும்

செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை, ஒழுக்க விதிகள், ஒழுங்குபடுத்தும் முறை, வாழ்வின் மிகப்பெரிய கேள்விகளான ‘ஏன்’ மற்றும் ‘என்ன’ என்பன போன்ற ஸத்யங்களைப் பற்றியும் ஒரு தெளிவான, அறிவுப்பூர்வமான புரிதலைத் தருவதால், அது ஒரு மிகச்சிறந்த ஶாஸ்த்ரமாகத் திகழ்கிறது.

சதுர் வேதங்களான ஒருங்குவித்தல், ஶ்ரத்தை, பொறுப்பெடுத்தல், வளப்படுத்துதல் என்னும் இந்த நான்கு தத்துவங்கள், நம்முடைய புரிந்துணர்வுக்கு அடிப்படையாக அமையாதவரை, நம்முடைய புரிந்துணர்வு முழுமையடைவதில்லை.

இப்போது இந்த நான்கு தத்துவங்களைப் பற்றியும், அவற்றைக் கடைபிடிக்கும்போது, தானாகவே நம்முள் வெளிப்படும் வாக்குசக்தி, சிந்தனைசக்தி, உணர்வுசக்தி மற்றும் வாழ்வுசக்தி எனப்படும் நான்கு சக்திகளைப் பற்றியும் பார்ப்போம்.

முதல் தத்துவம், ஒருங்குவித்தல்:

நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் எண்ணங்களையும் வாக்குறுதிகளையும் உயிராகவே நினைந்து நிறைவேற்றி, உங்களோடும் வாழ்க்கையோடும் பூர்ணத்வ நிலையை உணர்தல் ஒருங்குவித்தல் எனப்படுகிறது!

ஒருங்குவித்தல் என்னும் தத்துவத்தை நீங்கள் உங்கள் வாழ்வின் பாகமாக்கும்பொழுது, வாக்குசக்தியைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு வாக்குசித்தி வாய்க்கிறது.

வாக்குசக்தி வெளிப்படும்பொழுது, உங்களை நோக்கியும், மற்றவர்களை நோக்கியும் சரியான, ஆற்றல் வாய்ந்த, பயன்மிக்க வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தன்னிச்சையான புத்திசாலித்தனத்தைப் பெறுகிறீர்கள்.

இரண்டாவது தத்துவம், ஶ்ரத்தை:

உங்களைப்பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (மமகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களிடம் உங்களை எப்படிக் காண்பித்துக்கொள்கிறீர்களோ (அஹங்காரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களைப் பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (ஸ்வ -அந்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்களோ (அந்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும் செயல்பரிந்து, வாழ்க்கையை விரிவடையச்செய்து வாழ்தலே ஸ்ரத்தைய

நீங்கள் ஸ்ரத்தையைப் பயிற்சிசெய்யும்பொழுது, உங்களுக்குள் சிந்தனைசக்தி திறக்கப்படுகிறது.

சிந்தனைசக்தி வெளிப்படும்பொழுது, உங்கள் வேலையில், உறவில், கல்வித்துறையில், பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையே வெற்றிகொள்ளுமளவுக்கு, உங்கள் எண்ணங்களை ஒருங்குவிக்க உங்களால் முடியும்.

மூன்றாவது தத்துவம், பொறுப்பெடுத்தல்:

உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற அனைத்து நிகழ்விற்கும் நீங்கள்தான் ஆதிமூலம் என்னும் ஸத்யத்தை உணர்ந்து, அதனால், 'உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் பொறுப்பு' என்ற உணர்வுத் தெளிவிலிருந்து வாழ்க்கையை வாழ்தலையும், வாழ்க்கக்குப் பதில்செயல் புரிதலையுமே 'பொறுப்பெடுத்தல்' என்கிறேன்.

நீங்கள் பொறுப்புக்களை எடுத்துச்செயலாற்றும்பொழுது, உங்களுக்கு உணர்வுசக்தி சாத்தியமாகிறது. உணர்வுசக்தி வெளிப்படும்பொழுது, உங்களை வலிமையானவராக்கும் ஆற்றல்மிக்க பொறுப்புக்களை எடுத்துச்செயலாற்றுவதன் மூலம், உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்திக்கொள்வது எப்படி என்கின்ற புரிந்துணர்வு உங்களுள் மலர்கிறது.

நான்காவது தத்துவம், வளப்படுத்துதல்:

வாழ்வில் நிகழும் சம்பவங்கள், மக்கள், சூழ்நிலைகள் என எல்லாமே உங்களின் நீட்டித்த ஒரு பகுதிதான் என்பதை உணர்ந்து, உங்கள் வாழ்வையும் உங்களை சுற்றியிருப்பவர்களின் வாழ்வையும் தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டே இருத்தலையே 'வளப்படுத்தல்' என்கிறோம்.

நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் வளப்படுத்த முடிவுசெய்த அக்கணமே, வாழ்வுசக்தியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.

வாழ்வுசக்தி வெளிப்படும்பொழுது, மற்றவர்களுக்காகவே நீங்கள் வாழும்பொழுது மட்டுமே, மிகச்சிறந்த வெகுமதிகள் உங்களை நோக்கி வருகின்றன என்கின்ற புரிந்துணர்வு உங்களுள் மலர்கிறது.

சதுர் வேதங்களான இவை பிரபஞ்சத்திடம் உங்களை ஸரணாகதி அடையச் செய்து, நீங்கள் விரும்பியதை நிஜமாக்குவதற்கான 4 சக்திகளையும் நீங்கள் பெற வழிவகுக்கின்றன.

கீதை ஒரு ஸ்தோத்ரம்; அர்ஜுனன், கிருஷ்ணரின் விஸ்வரூப தர்ஸனத்திற்குப் பிறகு, கிருஷ்ணரின் இறைசக்தியை தம்முள் உணர்ந்து, தமக்குள் ஏற்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது, அது ஒரு மிகச்சிறந்த ஸ்தோத்ரமாகத் திகழ்கிறது.

கீதை ஒரு ஸூத்ரம்; நேரடியாக ஞானமடையும் வழிமுறைகளை விரும்புபவர்களுக்கான யோகம் மற்றும் த்யான பாதைகளையும், அவற்றின் விதிமுறைகளையும் தருவதால், கீதை ஒரு மிகச்சிறந்த ஸூத்ரமாகவும் திகழ்கிறது.

"ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டாது, நெருப்பு எரிக்காது, நீர் நனைக்காது, காற்று உலர்த்தாது (2. 23)," என்று கிருஷ்ணர் அடிப்படை ஸத்யங்களைப் பற்றிப் பேசும்பொழுது, அது ஸாஸ்த்ரம்.

"ஓ, இறைவா! நான் உம்மை முன்னாலிருந்தும்,பின்னாலிருந்தும், ஏன் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வணங்குகிறேன். நீர் அளவிட முடியாத அளவுக்குச் சக்திவாய்ந்தவராய் இருக்கிறீர், எல்லாப் பொருட்களிலும் பரவி வியாபித்துள்ளீர், நீர்தான் இறுதி நிலை!

உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும்
நிகழுகின்ற அனைத்து நிகழ்விற்கும்
நீங்கள்தான் ஆதிமூலம்!

(11.40),'' என்று கிருஷ்ணர் மீதிருக்கும் தமது ஆழ்ந்த பக்தியை அர்ஜுனன் வெளிப்படுத்தும்பொழுது, அது ஸ்தோத்ரம்.

நீங்கள் சிதறியடித்த
உணர்வுப்பகுதிகளைத்
திரும்பவும்பெற்று, உங்களுடன் நீங்கள்

"அர்ஜுனா! இந்த உடலைவிட்டு நீங்கும்பொழுது, எந்த எண்ணத்துடன் இருக்கிறாயோ, அந்த எண்ணத்திலேயே ஆழ்ந்து, அதை மட்டுமே நீ அடைகிறாய் (8.6)," என்று கிருஷ்ணர் சொல்லும்பொழுது, அர்ஜுனனுக்கான வழிமுறையை, நுட்பத்தைத் தரும்பொழுது, அது ஸ்தோத்ரம்.

பகவான் க்ரு'ஷ்ணர் ,இந்த மூன்றுவிதமான நிலைகளிலும் உள்ள மக்களுடனும் தொடர்புகொள்கிறார். அதனால்தான் எல்லா அவதாரங்களுள், கிருஷ்ணரையே பூர்ணாவதாரம் என்கிறோம்.

மொத்த இந்து விழிப்புணர்வையும் ஆள்பவர் அவரே. இந்த பூமியில் அவதரித்த அவதாரங்களுள் அதிகமாக வழிபடப்படும் அவதாரம் அவரே.

மனிதர்களைத் தெய்வநிலைக்கு உயர்த்துபவரே ஜகத்குரு

தாம் அனுபவித்த தெய்வீக ஆனந்தத்தை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல தெய்வீகத்திலிருந்து இறங்கி வருபவர்களே அவதாரங்கள்.

'நாமும் தெய்வீகதன்மைகொண்டவர்கள்தான், நாமும் கடவுள்தான்' என்று நம்மை உணரச் செய்வதற்காகவே எல்லா அவதாரங்களும் பூமிக்கு இறங்கி வருகிறார்கள்.

ஏன் கிருஷ்ணர் மட்டும் பூர்ணாவதாரமாகக் கருதப்படுகிறார்?

மனிதர்களைத் தெய்வத்தன்மைக்கு, நிறைவுணர்வுக்கு, பூர்ணத்துவத்திற்கு உயர்த்துவதற்குத் தேவையான எல்லாக் குணங்களும் அவரிடம் இருக்கின்றன.

நாம் எதைச் செய்துகொண்டிருந்தாலும், அவற்றில் எந்தவொன்றையும் துறக்காமலேயே, நம்மை ஜீவன்முக்தியை நோக்கி அழைத்துச்செல்லும் பூர்ணত্ব விஞ்ஞானத்தை உலகத்திற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் கிருஷ்ணரே!

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணருக்கு முன்பிருந்த எல்லா

அவதாரங்களுமே, ஒருவர் ஞானமடைய வேண்டுமென்றால், அவர் ‘இந்த உலகைத் துறந்தாக வேண்டும். அனைத்தையும் விட்டுவிட வேண்டும்’ என்று ‘துறத்தல்’ பற்றிய விஞ்ஞானத்தை பற்றி மட்டுமே போதித்தார்கள்.

ஆனால், கிருஷ்ணர் மட்டுமே, இங்கு நீ எதையும் துறக்க வேண்டாம். நீ எங்கிருந்தாலும் வாழ்க்கையை நிறைவுணர்விலிருந்து வெளிப்படுத்தி, அதை ஆனந்தமாக வாழ முடியும் என்று பிரகடனப்படுத்தினார். நிறைவுணர்விலிருந்து வாழும் பூர்ணத்வ விஞ்ஞானத்தைக் கொடுத்தார்.

மனிதர்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைத் தெய்வத்தன்மையை நோக்கி, பூர்ணத்வத்தை நோக்கி முன்னேற்ற முடிந்தவர்தான் ஜகத்குரு. அதனால் கிருஷ்ணரே இந்த முழு பிரபஞ்சத்திற்கும் குருவாகத் திகழ்கிறார்.

இப்போது பூர்ணத்வம் என்னும் நிறைவுணர்வை விளக்குகிறேன். நீங்கள் விழிப்புணர்வில்லாமல், ஆங்காங்கு வீசியெறிந்த உங்களுடைய பாகங்களை, பகுதிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதே பூர்ணத்வம்.

கேளுங்கள், உங்கள் உணர்வைப் பல பகுதிகளாக்கி, அவற்றை உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு நபர்களுடனும் விஷயங்களுடனும் விழிப்புணர்வில்லாமலேயே பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது சிதறியடித்திருக்கிறீர்கள், அவ்வாறு சிதறியடித்த உணர்வுப்பகுதிகளைத் திரும்பவும்பெற்று, உங்களுடன் நீங்கள் நிறைவுணர்வை உணர்வதே பூர்ணத்வம்.

வித்தியாசமான அர்ஜுனன்

பகவத்கீதையின் முதல் அத்தியாயத்திற்கு அர்ஜுன விஷாத யோகம் என்று பெயர். ஸம்ஸ்க்ரு'த மொழியில் விஷாத எனும் வார்த்தைக்கு வருத்தம், துக்கம், ஏக்கம், மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, மனக்குழப்பம் என்று பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன.

அர்ஜுனன் ஒரு யோகியாகவும், ஒரு க்ஷத்ரியராகவும் இருந்தார்.

ஒரு யோகியாக, அவர் ஒரு ஆழ்ந்த ஆன்மிகவாதியாகவும் தன்னிலேயே மையம்கொண்டவராகவும் இருந்தார்.

அதேசமயத்தில், ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்கும், துஷ்டர்களைப் பழிவாங்குவதற்கும் போர்புரியக்கூட தயங்காத, தம்முடைய சமுதாயரீதியான, ஒழுக்கரீதியான பொறுப்புக்களையும் கடமைகளையும் உணர்ந்த ஒரு தலைசிறந்த க்ஷத்ரியராகவும் இருந்தார்.

ஆனால் இந்த முதல் அத்தியாயத்தில், நாம் ஒரு வித்தியாசமான அர்ஜுனனைப் பார்க்கிறோம். அர்ஜுனன் பாண்டவ இளவரசர்களிலேயே மிகவும் தைரியசாலி, மஹாவீரர்; கிருஷ்ணரின் நெருங்கிய நண்பர். ஆனால் அப்படிப்பட்ட அர்ஜுனன் இப்பொழுது ஆழமான மனக்கலக்கத்திலும் சஞ்சலத்திலும் குறைவுணர்விலும் இருக்கிறார்.

அர்ஜுனனது குழப்பம் அவரை இப்பொழுது ஒரு யோகியாகவோ அல்லது ஒரு க்ஷத்ரியராகவோ இருக்க முடியாமல் செய்தது.

ஞானமடைந்த நிலையில் மட்டுமே, ஒருவரால் ஒரு யோகிக்குரிய உள் பூர்ணத்வத்தில் உறுதியாக நிலைபெற்றிடவும், ஒரு க்ஷத்ரியருக்குரிய வெளியுலகப் பொறுப்பான 'வளப்படுத்துதலை' தடுமாற்றமில்லாமல் நிறைவேற்றிடவும் முடியும். ஆனால், போர்க்களத்தில் தமது

> ஒரு ஞானியால் மட்டுமே ஒரேசமயத்தில்
> ஒரு யோகியாகவும், ஒரு க்ஷத்ரியராகவும்
> இருக்க முடியும்!

எதிரிகளைப் பார்த்ததும் அர்ஜுனன் தடுமாற்றமடைந்தார், கலங்கினார்.

காரணம், அர்ஜுனன் தமது எதிரே நிற்கும் எதிரிகளைப் பார்த்தவுடன், அவர்களிடத்தில் தம்மையே கண்டார். அவரெதிரே அவரது வழிகாட்டிகள், குடும்பத்தார் மற்றும் நண்பர்களே நின்றிருந்தார்கள். அவர்கள், அர்ஜுனது இனம், நீட்டிப்புக்கள் மற்றும் அடையாளம்.

அவர்களைப் பார்த்த பிறகு, தம்முடைய வெளி-அடையாளமான க்ஷத்ரியதன்மையில் அவரால் நிலைபெற முடியவில்லை. போரில் இரக்கமின்றி அவர்களைக் கொல்லக்கூடிய ஒரு சிறந்த போர்வீரராக தம்மைக் காட்டிக்கொள்ள முடியவில்லை. அவரால் போலியாகப் பாசாங்கு செய்ய முடியவில்லை

எல்லாப் போராட்டங்களுக்குமான

காரணம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அர்ஜுனனின் குழப்பம்தான் மனித குலத்தின் குழப்பமும்கூட!

இது, மனிதகுலத்தின் ஒட்டுமொத்த மூலமனப்பாங்குகளைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. நம்முடைய நான்கு அடையாளங்களான -அஹங்காரம், மமகாரம், அந்யகாரம், ஸ்வ-அந்யகாரம் இவற்றுக்கிடையே நடக்கும் போராட்டமே இது.

கேளுங்கள்! நீங்கள் கற்பனைசெய்து வைத்திருப்பதுபோல், நீங்கள் ஒரேயொரு அடையாளம் மட்டும்கொண்டவரல்ல; நீங்கள் நான்கு அடையாளங்களைக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாச் சமயங்களிலும், இந்த நான்கு அடையாளங்களையும் ஒருசேரப் பெற்றிருக்கிறீர்கள்.

1. மமகாரம் (உள்-அடையாளம்)

நான்கு அடையாளங்களையும்
ஒருங்கிணையுங்கள்.
உங்களுக்குத் தடுமாற்றமோ
குறைவுணர்வோ இருக்காது.

நீங்கள், உங்களுக்குள் உங்களைப்பற்றிகொண்டுள்ள கருத்தும் அனுபவமுமே மமகாரம் எனப்படுகிறது.

உதாரணத்திற்கு, ‘நான் ஆரோக்யமானவன், என்னால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது, நான் மக்களை நேசிக்கிறேன்...’

  • என்று இதுபோன்ற உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்களே மமகாரம்.

2. அஹங்காரம் (வெளி -அடையாளம்)

நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை எப்படிக் காட்டிக்கொள்கிறீர்களோ இதுவே அஹங்காரம் எனப்படுகிறது.

உதாரணத்திற்கு, உங்களை ஒரு பலசாலியாக, நேர்மையானவராக... -என்று இதுபோன்ற உங்களைப்பற்றி நீங்கள் வெளியில் காட்டிக்கொள்ளும் அடையாளமே அஹங்காரம் எனப்படுகிறது.

3.அந்யகாரம் (உங்களைப்பற்றி மற்றவர்கள் கொண்டிருக்கும் அடையாளம்)

மற்றவர்கள் உங்களைப் பற்றிக்கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்கள் அந்யகாரம் எனப்படுகிறது.

உதாரணத்திற்கு, உங்களை ஒரு புத்திசாலியாக, ஒரு கயவராக... என்று இதுபோன்ற உங்களைப்பற்றி மற்றவர்கள் கொண்டிருக்கும் கருத்து அந்யகாரம் எனப்படுகிறது.

4. ஸ்வ -அந்யகாரம் (வாழ்க்கையைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அடையாளம்)

வாழ்க்கையைப்பற்றிய உங்களுடைய கருத்து ஸ்வ -அந்யகாரம் எனப்படுகிறது.

உதாரணத்திற்கு, ‘வாழ்வே முரண்பாடுகள் நிறைந்ததுதான், வாழ்க்கை நான் எதையெல்லாம் விரும்புகின்றேனோ, அவற்றையெல்லாம் எனக்கு வழங்குகிறது’ என்பதுபோன்ற வாழ்க்கையைப்பற்றிய உங்களுடைய கருத்துக்கள் ஸ்வ -அந்யகாரம் எனப்படுகிறது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மக்களிடமிருந்தும்,

சூழ்நிலைகளிடமிருந்தும் பெறப்போகும் அனுபவங்களை வரையறுப்பது இதுவே. ஆதலால், இதுகூட உங்களுடைய அடையாளமே! இந்த அடையாளங்களுக்கிடையே நிலவும் ஒத்திசைவற்றதன்மையே நம்முடைய எல்லாத் தடுமாற்றங்களுக்கும் அப்ஸரத்தைக்கும் துக்கங்களுக்கும் காரணம்.

அர்ஜுனன், தம்முடைய க்ஷத்ரிய தர்மத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி நன்றாகவே புரிந்துவைத்திருந்தார். ஒரு க்ஷத்ரியனுக்கு ஒரு போருக்கான சவாலோ அல்லது ஒரு சூதாட்டத்திற்கான சவாலோ விடுக்கப்பட்டால் அதை நிராகரிப்பது என்பது தர்மமாகாது.

இது அர்ஜுனனுடைய அஹங்காரம் மட்டுமல்ல, அந்யகாரமும்கூட. அதாவது, இது அர்ஜுனன் தம்மை மற்றவர்களிடம் காட்டிக்கொண்டவிதம் மட்டுமல்ல, அர்ஜுனன் எப்படி இருக்க வேண்டுமென்று மற்றவர்கள் எதிர்பார்த்தவிதமும்கூட!

ஆனாலும் அவருடைய மமகாரம், அவருடைய அஹங்காரத்தைக்காட்டிலும் வலிமையாக இருந்தது. அதாவது அவர் தம்மைப் பற்றிக்கொண்டிருந்த எண்ணமானது (மமகாரம்) அவருடைய உறவினர்கள்மீதும் பரம்பரைமீதும் அவர் கொண்டிருந்த ஆழமான பற்றினையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்தப் பற்றானது, தம்முடைய பொறுப்புகள் என்று எவற்றையெல்லாம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தாரோ (அஹங்காரம்) அதைக்காட்டிலும் வலிமையாக இருந்தது.

தர்மப் பாதையில் முன்னேறுங்கள்

அர்ஜுனன், தம்மை யார் என்று கண்டுணர்வதற்கும், மீண்டும் தம்மைப் பூர்ணத்வ உணர்வில் நிலைநிறுத்திக்கொள்வதற்கும் கீதை காட்டும் தர்மப் பாதையில் முன்னேறுகிறார். நாம் கீதை சொல்லும் செய்தியை உள்வாங்குவோமாக, ஏனெனில் அதுதான் நம்முடைய தர்மப் பாதையுங்கூட! நம்முடைய அஹங்காரத்திற்கும், மமகாரத்திற்கும், அந்யகாரத்திற்கும், ஸ்வ -அந்யகாரத்திற்கும் முரண்பாடில்லாமல் இருக்கும்போது, நமக்குத் தடுமாற்றமோ குறைவுணர்வோ இருக்காது. நம்முடைய மூலமனப்பாங்கை நிறைவுசெய்து, நாம் பூர்ணத்வ உணர்விலிருந்து செயல்படும்போது, நாம் பூர்ணத்வ உணர்வில் நிலைகொள்வோம்.

பூர்ணத்வம் மற்றும் படைப்பு (இணூஞூணடிணிண) பற்றிய விஞ்ஞானங்கூட யோக முறையின் ஒரு செயல்முறையே.

கிருஷ்ணர், அர்ஜுனனை பகவத்கீதையின் 18 அத்யாயங்கள் மூலமாக இந்தப் பாதையில் அழைத்துச்செல்கிறார். இந்த போதனைகள் அர்ஜுனனுக்கானது மட்டும் அல்ல, அவை நமக்கானவையுங்கூட!

அதனால் நாமும் நம்முடைய தடுமாற்றங்களையும் சுய -சந்தேகங்களையும் நிறைவுசெய்து, எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு, இருப்புத்தன்மையிடம் சரணடைந்து, ஜீவன்முக்தியின், மோக்ஷத்தின் உச்ச ஸத்யத்தை அனுபவமாகப் பெறமுடியும். கீதோபநிஷத், பூர்ணத்வத்தின் விஞ்ஞானம், நித்ய ஆனந்தத்தின் விஞ்ஞானம்.

போர்க்களத்தை மாற்றுவதே ஒரு வெற்றிதான் (1.1 -1.7)

பகவத்கீதை என்ற இந்தச் சிறந்த பெருமைவாய்ந்த நூலின் தொடக்கமே ஒரு கண்பார்வை இழந்தவர் மூலமாகத்தான் தொடங்குகிறது. அதில் ஒரு மிக முக்கியமான குறிப்பிடத்தக்க விஷயம் இருக்கிறது. அவர் கண்பார்வை இழந்தது மட்டுமல்ல, உள்முகப் பார்வையையும், நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்திக் காணும் மதிநுட்பத்தையும்

கீதை சொல்லும் செய்தியை
உள்வாங்குவோமாக, ஏனெனில்
, அதுதான் நம்முடைய தர்மப்

இழந்திருந்தார்.

திருதராஷ்டிரன், குருக்ஷேத்ரத்தை, யுத்த பூமியை, புனித நிலமாகவும் தர்ம க்ஷேத்ரமாகவும் குறிப்பிடுகிறார்.

கேளுங்கள், மஹாபாரதம் மிக அழகாகச் சொல்கிறது: “குருக்ஷேத்ரத்தில் போர் நிகழட்டும்!” ஸம்ஸ்க்ரு’தத்தில், குரு (ஒதணூத) என்றால் செயல்புரிதல் அல்லது படைப்பு என்று பொருள், க்ஷேத்ரா என்றால் களம் அல்லது உணர்வு என்று பொருள்.

குருக்ஷேத்ரத்தில் போர் நிகழட்டும் என்றால் ‘படைத்தல் உணர்வில்’ போர் நிகழட்டும் என்று பொருள்!

நீங்கள் ஞானமடையும்வரை, வாழ்க்கை ஒரு போர்க்களமாகத்தான் இருக்கும். ஆனால், உங்கள் போர் படைப்புக்களத்தில் நடைபெறட்டும். தோல்விக்களத்தில் அல்ல. போர்க்களம் என்பது தாழ்வான செயற்களத்துடன் இருக்கக்கூடாது, அது மேன்மையான செயற்களத்துடனானதாக இருக்க வேண்டும்.

உங்கள் போர் - தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே -படைப்புக்களத்தில் நடந்தால், நீங்கள் தர்மத்தில் வாழ்கிறீர்கள்; அப்படியல்லாமல் உங்கள் போர் தோல்விக்களத்தில் நடந்தால், நீங்கள் அதர்மத்தில் வாழ்கிறீர்கள். இதுவே கீதையின் முதல் ஸ்லோகத்திற்கு அர்த்தம்.

கேளுங்கள், போர்க்களத்தை மாற்றுவதே ஒரு வெற்றிதான்.

அதர்மத்திலிருந்து தர்மத்திற்கு உங்கள் போர்க்களத்தை மாற்றிய கணமே, நீங்கள் ஞானத்தை அடைந்துவிடக் கூடும்; ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே ஞானமடைந்தவர்தான். அதை வெறுமனே நீ ங்கள் ஞாபகப்படுத்தி, மீண்டும் உரிமைகோரினாலே போதும்.

கிருஷ்ணர் இருக்கும் இடத்தில்தான்

நீங்கள் ஞானமடையும்வரை,
வாழ்க்கை ஒரு போர்க்களமாகத்தான்
இருக்கும். ஆனால், உங்கள் போர்
படைப்புக்களத்தில் நடைபெறட்டும்.

தர்மம் நிலவும்

நீங்கள் கிருஷ்ணரால் வழிநடத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் தர்மக் களத்திற்குள் நுழையுங்கள். உடனே உங்களுள் முழுமையான பூர்ணத்வத்தை உணர்வீர்கள், தர்மத்தின் பொருளே ஸ்ரீகிருஷ்ணர்தான். அவரே பாண்டவர் பக்கம் இருக்கும்போது, அவர்கள் எப்படி தோல்வியடைய முடியும்?

கிருஷ்ணர் எங்கு இருக்கிறாரோ அங்குதான் தர்மம் நிலவும். சுய-சந்தேகக் குழப்பத்தின் உச்சத்திலிருந்த திருதராஷ்டிரர்கூட இதை அறிந்திருந்தார்.

கௌரவர்கள் எப்போதும் தங்களுடைய பாதுகாப்பற்ற தன்மையுடனான போரில்ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்தார்கள்.

பாண்டவர்கள், தங்களுடைய மொத்த நேரத்தையும் இந்திரபிரஸ்தத்தை உருவாக்குவதற்காகப் போரிடுவதில் செலவிட்டார்கள். அதனால் பாண்டவர்கள் தர்மத்தில் வாழ்ந்தார்கள்.

கௌரவர்கள் சுய-சந்தேகம், சுய-வெறுப்பு மற்றும் சுய-மறுப்பு மனப்பாங்குகளாகிய அதர்மத்தில் வாழ்ந்தார்கள்.

சுய-சந்தேகம், சுய-வெறுப்பு மற்றும் சுய-மறுப்பு மனப்பாங்குகள் - இன்றைய மனிதகுலத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய்கள் இவையே!

சுய-சந்தேகம்: உங்களுக்குள்ளேயே உங்களைப் பற்றிய உறுதியான கருத்தோ அல்லது தீர்மானமோ இல்லாததிருத்தல்.

சுய-வெறுப்பு: உங்களை எதற்குமே தகுதியற்றவராக நீங்களே உணர்தல்.

சுய-மறுப்பு: உங்கள் கனவுகள் ஒருபோதும் நிறைவேற்றப்பட முடியாதவை என்று மட்டுமல்ல, அவை எப்போதுமே நிறைவேறப்போவதில்லை என்றும் நீங்களே முடிவு செய்துகொள்வது.

இந்த சுய-சந்தேகம், சுய-வெறுப்பு மற்றும் சுய-மறுப்பின் விளைவாக, இறுதியில் உங்களை நீங்களே கைவிட்டுவிடுகிறீர்கள். இது சுய-அழிவுக்கே வழிவகுக்கும்.

துரியோதனன் சுய-மறுப்பின் உருவாகவே இருந்தார். சுய-மறுப்பு என்னும் குறைவுணர்விலிருந்து பிறந்த ஆழமான பயம் மற்றும் பாதுகாப்பற்றதன்மையில்தான், துரியோதனனின் உள் அடையாளமான மமகாரம் வேரூன்றியிருந்தது. எல்லாவற்றையும் தமது உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்னும் பேராசைதன்மையே அவருடைய வெளி-அடையாளமான அஹங்காரமாக இருந்தது.

இப்பேராசையே அவரது கோபம், வெறுப்பு, வன்முறை மனப்பான்மைக்குக் காரணமாக இருந்தது. இறுதியில் அது அவரது அழிவுக்கே வழிவகுத்தது.

புரிந்துகொள்ளுங்கள், இப்போது நான் குறைவுணர்வுகள் என்றால் என்ன என்பதை விளக்குகிறேன்.

ஒரு தகவலை உள்ளது உள்ளபடியே பார்க்காமல், அதற்குத் தவறான அர்த்தங்களைக் கற்பித்து, திரித்துக்கூற நீங்கள் தீட்டும் திட்டங்களைத்தான் குறைவுணர்வுகள் என்று சொல்கின்றேன்.

துரியோதனன் எல்லாவற்றையும் வென்று, தமதாக்கிக்கொள்ள மிகவும் விரும்பியதால், அவற்றை இழிவுபடுத்தி, திரித்துக் காண்பிக்க முயன்றார். ஆனால், தர்மம் எங்கு நிலவுகிறதோ, கிருஷ்ணர் எங்கு இருக்கிறாரோ அங்குதான் வெற்றியும் இருக்கும்.

ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கதாபாத்திரங்கள் (1.8 -1.12)

தம்முடைய தந்தை குருடராகவும், தம்முடைய செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்குரிய சக்தியற்றவராகவும் இருந்ததால், பட்டத்து இளவரசரான துரியோதனன் தாமே மன்னருக்குரிய நடைமுறை அதிகாரங்களைத் தம் கையில் எடுத்துக்கொண்டார். துரியோதனன், தமக்கு முன்னால் அணிவகுத்து நின்ற பாண்டவ சேனையைப் பார்த்தார்.

எதிரியின் படையைப் பார்த்தவுடன் துரியோதனன், பாண்டவர் மற்றும் கௌரவர்களின் ஆச்சாரியரும், கௌரவ சேனையின்

சேனாதிபதிகளுள் ஒருவருமான துரோணரிடம் ஆசிபெறச் சென்றார். அவரது அந்தச் செய்கை, ஒன்றை நிச்சயப்படுத்திக்கொள்ளவே செய்யப்பட்டது! அதாவது, போரின் முடிவினால் ஏதாவது பழிநேரும் என்றால், அது ஆச்சாரியரின் மீதே இருக்க வேண்டும் என்பதுதான் அது.

ஆசிபெறச்சென்ற துரியோதனன் துரோணரிடம், பாண்டவர்கள் பக்கமிருந்து போரிடும் சிறந்த வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடத் தொடங்கினார். அதன்பின் தங்கள் பக்கம் உள்ள சிறந்த வீரர்களைப் பற்றியும் விளக்கி உரைத்தார். இவர்களைப்பற்றி இதற்குமுன் துரோணர் அறியாதது போன்றும், இப்போதுதான் துரோணருக்குப் புதிதாக இவர் அறிமுகப்படுத்துவது போன்றும் துரியோதனன் பேசினார்.

அடுத்ததாக துரியோதனன் கௌரவ சேனை வீரர்கள் அனைவரும் தளபதி பீஷ்மருக்கு பக்கபலமாயிருந்து போர்புரிய வேண்டும் என்று அவர்களை உற்சாகமூட்டினார்.

பாண்டவர் மற்றும் கௌரவர்களின் பிதாமஹரும், அந்தப் போர்க்களத்தில் குழுமியிருந்தவர்களிலேயே மிகச்சிறந்த வீரருமான பீஷ்மர், கௌரவர்களை வழிநடத்திச்செல்லும் தலைமை படைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

தூய்மையான உள்ளுணர்வின் வடிவான அன்னை கங்கையின் மைந்தரான பீஷ்மரது தர்மமும் ஒருங்குவித்தலும் ஸ்ரத்தையுமே அவர் வாழ்ந்த காலத்திற்கான தர்மத்துக்கும் ஒருங்குவித்தலுக்கும் ஸ்ரத்தைக்குமான அளவுகோல்களாக இருந்தன.

பீஷ்மரும் துரோணரும் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் வேதங்களின் உண்மைகளைக் கற்றறிந்தவர்கள். கிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.

போரில் துரியோதனன் அழியப்போவது உறுதி என்பதையும்,

> கிருஷ்ணர் எங்கு இருக்கிறாரோ > அங்குதான் வெற்றியும் இருக்கும்.

அவருடன் சேர்ந்து தாங்களும் அழியப்போவது உறுதி என்பதையும் அறிந்தே அவர்கள் துரியோதனனின் பக்கம் இருந்தார்கள்.

துரியோதனன் நீதிநெறிகளுக்கு எதிராகச் செல்கிறார் என்று தெரிந்தபிறகும் புத்திமான்களான பீஷ்மரும் துரோணரும்கூட, துரியோதனன் பக்கமிருக்க தேர்வுசெய்ததுதான் மஹாபாரதத்திலிருக்கும் முரண்பாடுகளில் மிகப்பெரியது.

இப்பொழுது பீஷ்மருக்கு, துரியோதனனது தீய செயல்களால் அவர்மீது ஏற்பட்ட வெறுப்பைவிட, அவர்மீதுகொண்ட கருணை அதிகமாக இருந்தது. துரியோதனனின் மனத்தில் உள்ள நம்பிக்கையிழந்த பய உணர்வுகளை பீஷ்மர் நன்கு புரிந்திருந்தார். அவருக்குத் தைரிய மூட்ட வேண்டிய தேவையையும் உணர்ந்தார்.

துரியோதனனின் மிகையான சொற்களுக்குப் பதிலாக, பீஷ்மர் தமது சங்கை எடுத்து முழக்கினார். அது, துரியோதனனுக்குத் தெம்பூட்டும்விதமாக இருந்தது. போர் தொடங்கியதற்கான அறிகுறியாக முழக்கப்பட்ட பீஷ்மரின் சங்கொலி, ஒரு சிங்கத்தின் கர்ஜனையைப்போல இருந்தது என்று ஸஞ்ஜயன் சொல்கிறார்.

ஓபொறுப்பெடுத்தல் - இதுவே பிரபஞ்சத்தின் விதிமுறை (1.13 -1.18)

பீஷ்மரின் சங்கொலிக்குப் பதிலொலி, பாண்டவ சேனையின் படைத்தளபதியான திருஷ்டத்யும்னனிடமிருந்தோ அல்லது பஞ்ச பாண்டவர்களிடமிருந்தோ வரவில்லை.

மாறாக, கிருஷ்ணரிடமிருந்து வந்தது. இது மிகவும் முக்கியத்துவம்வாய்ந்தது. ஏனென்றால் கிருஷ்ணரின் சங்கொலி பீஷ்மரின் சவாலுக்கு எதிரொலியாக இல்லாமல், பாண்டவர்களின் வெற்றியைப் பறைசாட்டும் பதிலொலியாக அமைந்தது.

ஒரு அவதாரத்தின் பணி
மற்றவர்களுடைய அஸ்ரத்தைக்குத்
தாமே பொறுப்பேற்று, தர்மத்தை

விஷ்ணுவின் சங்காகிய பாஞ்சஜந்யம் என்ற சங்கையெடுத்து கிருஷ்ணர் ஊதினார். அந்த ஒலி போர்க்களத்தில் மற்ற எல்லோருடைய சங்கொலிகளையும் மூழ்கடித்துவிட்டது.

பாண்டவ சேனையுடன் பரந்தாமனாகிய இறைவன் நிறைந்துள்ளார் என்பதனை அனைவருக்கும் உணர்த்தும்விதமாக அந்தச் சங்கொலி அமைந்தது.

கிருஷ்ணரின் பாஞ்சஜன்ய சங்கிலிருந்து வெளிப்பட்ட பிரபஞ்ச அதிர்வுகள், அவருக்குள்ளும், அவரைச் சுற்றி வெளியேயுள்ள அனைத்துக்கும் அவரே பொறுப்பேற்கிறார் என்பதற்கான பிரகடனம் ஆகும். தெய்விக அவதாரமாகிய ஸ்ரீகிருஷ்ணரே பாண்டவ சேனைமீது தொடுக்கப்படும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கிறார் என்பது இதன்மூலம் உணர்த்தப்பட்டது.

‘பொறுப்பெடுத்தல்’ என்னும் ஸத்யத்தை முன்னிறுத்தித்தான் கிருஷ்ணர் மொத்தப்போரையும் முன்னடத்திச் செல்கிறார். கேளுங்கள், இந்த ஸத்யங்களின் (தத்துவங்கள்) அடிப்படை அஸ்திவாரமே பூர்ணத்வம்தான், நம்முள் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து மனப்பாங்குகளையும் நிறைவுசெய்வதுதான்.

நாம் இந்த ஆன்மிகத் தத்துவங்களை வாழ்ந்து, இந்த நான்கு சக்திகளையும் வெளிப்படுத்தும்போது, தனிப்பட்ட ஆன்மா, பிரபஞ்ச ஆன்மாவுடன் இணைந்துவிடுகிறது. பரப்ரஹ்மத்தின் ஒரு பாகமே நாம் என்னும் அனுபவத்திலிருந்துதான் உண்மையான கருணை பிறக்கிறது.

கிருஷ்ணர், அந்தப் போருக்குக் காரணமாக இல்லாவிட்டாலும், மற்றவர்களுடைய அஸ்ரத்தைக்கும் பொறுப்பற்றதன்மைக்கும் தாமே பொறுப்பேற்றுக்கொண்டு, தர்மத்தை திரும்பவும் நிலைநாட்டுகிறார். இதுவே ஒரு அவதாரத்தின் பணி.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஏதோ ஒரு விஷயத்திற்கு ‘நீங்கள் பொறுப்பாளி அல்ல’ என்று நீங்கள் உணர்ந்தீர்களானால், உடனே நீங்கள் அதை எதிர்ப்பீர்கள்; ஆனால் அதற்குமாறாக, நீங்கள்தான் அதற்குப் பொறுப்பு என்று உணர்ந்தீர்களானால், உடனே அந்தச் சூழலுக்குத் தகுந்தபடி நீங்கள் பதில்செயல் செய்வீர்கள்.

உங்களுடைய அனைத்து செயல்களும் எதிர்ச்செயல்களாக இல்லாமல், தகுந்த பதில்செயல்களாக அமைந்துவிட்டால், அப்போது நீங்கள் ஒரு கர்மயோகி, எந்தக் கர்மாவும் உங்களைக் கட்டுப்படுத்தாது.

‘எல்லாவற்றுக்கும் நீங்களே பொறுப்பெடுப்பது’ என்பது பற்றி கேட்டவுடனேயே, உங்கள் மனத்திற்குள் எழும் மிகப்பெரிய

கேள்வி ‘எனக்குள் நிகழ்பவற்றுக்கு நான்தான் பொறுப்பாளி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என்னைச் சுற்றி நடப்பவற்றிற்கு, எனக்கு வெளியில் நடப்பவற்றிற்கு நான் எப்படிப் பொறுப்பெடுக்க முடியும்’ என்பதுதான்.

கேளுங்கள்: ஏதோ ஒன்றுக்கு காரணமாக இருப்பதற்கும், அதற்கான பொறுப்பெடுப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது!

சில சமயங்களில, சில நிகழ்வுகள் நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அந்நிகழ்வு உங்கள் வாழ்வைப் பாதிக்குமானால், நீங்கள்தான் அந்நிகழ்வுக்குப் பொறுப்பு!

உதாரணத்திற்கு, உங்கள் நாட்டில் நிலவும் பொருளாதார லஞ்ச -லாவண்யங்களுக்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்நாட்டின் பிரஜை என்ற முறையில் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு! உங்கள் தர்க்கத்தின்படி, நீங்கள் அதற்குக் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் அதற்கு பொறுப்பு அல்ல என்பது உண்மை அல்ல.

நீங்கள் பொறுப்பெடுக்காவிட்டால், நீங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ளப்போவதும் இல்லை, உங்களுடைய உள்-உலகை விரிவுபடுத்திக்கொள்ளப்போவதும் இல்லை என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொறுப்பெடுத்தல் என்பது ஒரு சுமை என்றுதான் நாம் எப்போதுமே நினைக்கின்றோம். இல்லை! அது ஒரு சக்தி! பொறுப்பு, நேரடியாகவே உங்களை தலைமைப்பண்பு உணர்விற்கு எடுத்துச்சென்றுவிடும்.

உங்களுடைய குடும்பத்திற்கு மட்டுமே பொறுப்பு என்று உணரும் வரை, நீங்கள் உங்களுடைய வீட்டுக்குத் தலைவராகிறீர்கள். சமுதாயத்திற்குப் பொறுப்பு என்று உணரும்பொழுது, நீங்கள் சமுதாயத்திற்கு தலைவராகிறீர்கள். உங்களுடைய

மொத்தப்பிரபஞ்சத்திற்கே பொறுப்பெடுக்க உணரும் தீர்மானமே

பொறுப்பெடுக்கும்தன்மை விரிவடைய விரிவடைய, உங்களுடைய தலைமைப்பண்பும் விரிவடையும். மொத்தப்பிரபஞ்சத்திற்கே பொறுப்பெடுக்க உணரும் தீர்மானமே ஞானத்தன்மை!

தர்ம யுத்தத்திற்குத் தொடர்ந்து உதவும் இறைசக்தி (1.19-1.22)

பாண்டவ சேனையின் முன்னணியில் அர்ஜுனன் நின்று கொண்டிருந்தார். கிருஷ்ணர் தமது சங்கை ஊதிய அதே நேரத்தில், அர்ஜுனனும் அவரது தேவதத்தம் என்னும் சங்கை ஒலிக்கச்செய்தார். அதனைத் தொடர்ந்து பாண்டவ சேனையினர் கிருஷ்ணரது தலைமையை ஏற்று, தங்களது சங்குகளை முழக்கினார்கள்.

அர்ஜுனன் தமது தெய்விக வில்லாகிய காண்டீவத்தை எடுத்து நிறுத்தி, அம்பு தொடுக்கத் தயாரானார். ஆனால் வில்லிலிருந்து அம்பு தொடுக்காமல், அர்ஜுனன் தம் கண்முன்னே ஒன்று திரண்டிருந்த கௌரவர்களையும் அவரது சகோதரர்களையும் கண்டு மலைத்து நின்றார்.

வில்லையேந்தியவாறே, இரத ஓட்டியும் தெய்வக்தியுமாக வீற்றிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.

கீதை எனும் இந்நூலில், அர்ஜுனன் முதன் முறையாகப் பேசுகிறார். தமது தோழனும் வழிகாட்டியுமாகிய கிருஷ்ணரிடம், "அச்யுதா (உயர் நிலையிலிருந்து வழுவாதவரே), தயைகூர்ந்து, எதிரிசேனையை நான் நன்கு பார்க்கும்வகையில் இரண்டு சேனைகளுக்கு மத்தியில் ரதத்தைச் செலுத்துங்கள். அப்படியானால்தான் நான் யார் யாரோடு யுத்தம்புரியப் போகிறேன் என்பதை நானே பார்க்க முடியும்," என்று

உங்களுக்கு நீங்களே
கொடுத்துக்கொள்ளும்
வார்த்தைகளை நிறைவேற்றுவதுதான்

சொன்னார்.

இங்கு அர்ஜுனன், மஹாபாரதத்தின் நாயகனாக மட்டும் இருக்கவில்லை. மனித குலத்தின் மொத்த வடிவமாக, உருவகமாக இருக்கிறார்.

பகவான் நாராயணனின் மனித அம்சம்தான் நரன் என்று புராணங்களும் இத his[?] இதிகாஸங்களும் குறிப்பிடுகின்றன. அந்த நரனாக இங்கு அர்ஜுனன் இருக்கிறார். கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களை நர நாராயணர்களாக, இறைசக்தி மற்றும் மனித சக்தியாக, வெளிப்படுத்திக்கொண்ட கருத்துத்தான் கீதை முழுவதும் மட்டுமல்ல, மஹாபாரத்தின் பெரும் பகுதியிலுமே ஊடுருவி இருக்கிற மையக் கருத்தாக இருக்கிறது.

அர்ஜுனனின் வாக்கு சக்தி (1.23-1.25)

அர்ஜுனன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிருஷ்ணரும் தேரை இரண்டு சேனைகளுக்கு மத்தியில், அங்கே திரண்டிருக்கும் அனைவரையும் அர்ஜுனன் நன்கு பார்க்கும்படிகொண்டுவந்து நிறுத்தினார்.

ஒருங்குவித்தல் இரண்டு பரிமாணங்களைக்கொண்டுள்ளது. ஒன்று, உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகளை நிறைவேற்றுவது. மற்றொன்று மற்றவர்களுக்கு கொடுக்கும் வார்த்தைகளை நிறைவேற்றுவது.

கேளுங்கள், உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் வாக்கை உயிராகவே நினைந்து நிறைவேற்றுவதுதான், இங்கு மிக முக்கியமானது.

உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகளை நிறைவேற்றும்பொழுது, உங்கள் சுய-சந்தேகங்கள் கரைந்துவிடும். உங்களுள் தன்னம்பிக்கை வளரும். நீங்கள் பலமிக்கவர்களாகிவிடுகிறீர்கள்.

மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, உங்கள்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வளரும். அந்த நபருடனான உங்கள் உறவு பலப்படும்!

உங்களிடமும், மற்றவர்களிடமும் நீங்கள் பேசும் வார்த்தைகளாகவே நீங்கள் ஆகிறீர்கள். தொடர்ந்து நீங்கள், "நான் ஆரோக்யமாக இருக்கிறேன். நான் ஆரோக்யமாக இருக்கிறேன்," என்று சொல்லிக்கொண்டிருந்தால், உங்களுடைய துணிவும் சக்தியும் விழிப்படைந்துவிடும். நீங்கள் ஆரோக்கியமடைந்துவிடுவீர்கள்!

நாம் ஒருங்குவித்தலையும் ஸ்ரத்தையையும் கொண்டிருக்கும்போது, நம் வார்த்தைகளை நிறைவேற்ற நமது வாழ்க்கையையே கொடுக்க முன்வரும்போது பிரபஞ்சமே முன்வந்து நமது வார்த்தைகளை நிறைவேற்றி, அவற்றை நிஜமாக்கும்.

அவ்வாறு அர்ஜுனன் தம்முடைய எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் ஒருங்குவித்தலைக்கொண்டு வந்ததின்மூலம், தம்முடைய களைப்பையும் சலிப்பையும் வென்றிருந்தார்.

அர்ஜுனனின் ஒருங்குவித்தல்தன்மையின் காரணமாகவே அவருக்கு வாக்குசக்தி சாத்தியமாயிற்று. அர்ஜுனனுடைய வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக, பிரபஞ்ச சக்தியான ஸ்ரீகிருஷ்ணனே அவரது சாரதியாக இருந்து, தெய்விகத்தினிடம் முழுமையாக சரணடைய அவரை வழிநடத்திச்சென்றார்.

கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவுமுறையானது, தெய்வத்திற்கும் மனிதருக்கும் இடையில் ஏற்பட்ட மிக உயர்ந்த உன்னதமான உறவுமுறையாக இருக்கிறது.

அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் இடையே ஏற்படும் போர், எல்லா மனிதர்களும் தங்களுக்குள் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கும் அல்லது இனி சந்திக்கப் போகும் போராட்டமே.

இது, ஒருவருடைய மனப்பாங்குகளுக்கும் சாத்தியகூறுகளுக்கும் இடையே நிகழும் ஒரு போராட்டமே, அதாவது ஒருவரின் விழிப்புணர்வற்ற ஆசைகள் மற்றும் மூலமனப்பாங்குகளால் தூண்டப்பட்ட குறைவுணர்வுகளுக்கும், அவரின் விழிப்புணர்வு பூர்ணத்துவமடைவதற்கான சாத்தியகூறுக்கும் இடையே நிகழும் போராட்டமே. இந்த இரண்டில் எந்தப் பகுதி வெற்றியடைவது என்பது பூர்ணத்வமடைந்து, பரமாத்மா கிருஷ்ணரிடம் சரணடைய ஒருவருக்கு இருக்கும் திறமையைப் பொறுத்தது.

கிருஷ்ணர் இரண்டு படைகளுக்கும் இடையில் தேரை நிறுத்திவிட்டு, “அர்ஜுனா, நீ காண விரும்பிய மக்களை இதோ பார்த்துக்கொள்,” என்று சொல்கிறார்.

குழப்பத்திலிருந்து விடுதலை அளித்திடும் கீதை(1.26 -1.30)

அங்கே தம்முன் அர்ஜுனன், தம் தந்தை பாண்டுவின்மீது பற்றுகொண்டவர்கள், பாட்டன்மார்கள், பீஷ்மரைப் போன்ற முப்பாட்டன்மார்கள், மேலும் தமக்குக் கற்றுக்கொடுத்த துரோணர், கிருபர் போன்ற ஆச்சார்யார்கள், நண்பர்கள் மற்றும் தம்முடைய நலத்தை விரும்புபவர்களையே பார்த்தார்.

அர்ஜுனனின் தடுமாற்றம் இங்குதான் ஆரம்பமாகிறது.

அர்ஜுனனின் தடுமாற்றத்தைப் பற்றியும், அவரது குறைவுணர்வுகளைப் பற்றியும், அவற்றைக் கிருஷ்ணர் எப்படி நிறைவுசெய்கிறார் என்பதைப் பற்றியும்தான் கீதை விளக்குகிறது. கீதையின் மொத்த சாரம் இதுதான்.

அர்ஜுனன் தன்னால் இயன்றவரையில் தம் மையத்தை நோக்கி நகர முற்படுகிறார். அவர் தம் மனத்தையும் புலன்களையும் கட்டுப்படுத்த முயற்சிசெய்கிறார். அவர் தம்முடைய அகந்தையை (உஞ்ணி) விட்டொழிக்க முயற்சிக்கும் ஒரு சீடர்.

கிருஷ்ண பரமாத்மாவை குருவாக அடைந்ததால், அர்ஜுனன் தம்முடைய முயற்சியில் வெற்றியடைந்தார்.

தம்முடைய அகந்தையை (உஞ்ணி) விட்டொழிக்க முயற்சிப்பவரே - சீடர்

சந்தேகத்தில் தெளிவிருந்தால் தீர்வு நிச்சயம் (1.31 -1.35)

இப்பொழுது அர்ஜுனன், தமது சந்தேகங்களைத் தெளிவாக விளக்க ஆரம்பிக்கிறார்.

சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டுமானால் அவை தெளிவாக இருப்பது மிகவும் அவசியம். தெளிவற்ற சந்தேகங்கள் மேலும் மேலும் குழப்பத்திற்கே வழி வகுக்கும்.

அர்ஜுனனது குழப்பம் அறியாமையிலிருந்து எழுந்தது அல்ல, மாறாக புத்திசாலித்தனத்திலிருந்து பிறந்த குழப்பம்.

'நான் ஏன் இதைச் செய்துகொண்டிருக்கிறேன்?' என்னும் இந்த ஒரு கேள்வியை உயிர்ப்போடு வைத்திருந்து, அதைத் தர்க்கரீதியான முடிவுவரை எடுத்துச்செல்லும் ஆற்றல் உங்களுக்கு இருந்தாலே போதும், நீங்கள் ஞானமடைந்துவிடுவீர்கள். இதனால் நீங்கள் வளப்படுத்துதலை வெளிப்படுத்துவீர்கள்!

குறைவுணர்வே மாயை (1.36-1.39)

"கிருஷ்ணா, என் வாழ்வின் லக்ஷியம்தான் என்ன?" என்று அர்ஜுனன் அழுது புலம்புகிறார்.

அர்ஜுனனது குழப்பத்திற்கு இரு குறைவுணர்வுகள் மையமாக இருக்கின்றன.

முதல் குறைவுணர்வு, அது உறவுகளோடு சம்மந்தமுடையது. நமக்கு ஏற்கெனவே தெரிந்தவர்களுக்குத் தீங்கிழைக்கும்படி நம்மை யாராவது கேட்டுக்கொண்டால், நாம் எப்படி உணர்வோமோ

அர்ஜுனனது குழப்பம் அறியாமையால்
ஏற்பட்டது அல்ல, மாறாக
புத்திசாலித்தனத்திலிருந்து பிறந்த

அதுபோன்று அர்ஜுனனும் உணர்ந்தார். எப்பொழுதுமே அறிமுகமில்லாத மனிதர்களைக் குறைசொல்வதும் தண்டிப்பதும் மிகவும் எளிதானது.

நன்கு பழகி நட்புறவோடு இருக்கும் மனிதர்களிடம் எதிர்மறையாக நடந்துகொள்ளும்பொழுது, நம்முடைய செய்கை நியாயமான செய்கையாக இருந்தாலும்கூட, அங்கு அந்த நட்பே உடைந்துவிடும் அபாயம் இருக்கிறது!

இதுபோன்ற குறைவுணர்வை எதிர்கொள்ள வேண்டுமானால், விளைவுகளைப் பற்றிக் கவலைகொள்ளாத பற்றற்ற மனநிலையை உருவாக்கிக்கொள்வது அவசியமாகிறது. இந்தப் பற்றற்ற நிலை வரவே ண்டுமானால், ஒருவர், தம்முடனும் மற்றவர்களுடனும் பூர்ணத்துவ உணர்வுடன் இருந்தாக வேண்டும். பூர்ணத்துவப் பாதையைப் பின்பற்றும் ஒருவர், பலன்களைத் துறந்துவிடுகிறார்.

இப்போது பூர்ணத்துவ உணர்வை உங்களுக்கு விளக்குகிறேன். ஏதோ ஒன்றை, உங்களில் இருந்து வேறானது என்று உங்களை உணரச்செய்யும் குறைவுணர்வு என்னும் மாயையை நீக்குவதே பூர்ணத்துவம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், குறைவுணர்வுக்கு இருப்பே கிடையாது. அது, உண்மையைப் போன்றே தோன்றும் ஒரு புரிந்துணர்வு, அவ்வளவுதான். உங்களுக்கும் முழுமைக்கும் இடையில் இந்தக் குறைவுணர்வு என்னும் மாயையே ஒரு தடுப்பாக நிற்கிறது. ஆகவே அவற்றை நிறைவுசெய்யுங்கள்.

அர்ஜுனன் எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சினை, செயலின் நேரடித்தன்மை. படைகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் நின்றுகொண்டு போரிடும் நிலையில் அர்ஜுனன் தமது செயலின் நேரடியான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பொத்தானை அழுத்தி, தொலை தூரத்திலிருந்தே அவர்களைக் கொல்வதற்கான வச இருக்கவில்லை. அம்பை எய்வதற்கு எதிராளியின்

Hands playing a flute

திகள் அர்ஜுனனுக்கு
வில்லில் இருந்து
முன், அவர்
கண்களை