KAILASA Library/உள்ளே/உலகம்Sign in
உள்ளே

உலகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு தியான களம்!

விளையாட

நீ தயாரா?

மூளையை விற்று - பட்டம் பெறுவது நவீன சட்டம். எளிமையை விற்று - நாகரீகம் பெறுவது நவீன இரகம். வாழ்க்கையை விற்று - பணம் பெறுவது நவீன குணம்.

பட்டம், நாகரீகம், பணம் பெற்றபின் திரும்பிப் பார்த்தால், பெற்றவரிடம் கீழ்கண்டவை காணவில்லை... விற்றுவிட்டதால்! 1. மூளை; 2. எளிமை; 3. வாழ்க்கை.

மனிதன் எதற்காக வந்தானோ அந்த வேலையை
விட்டுவிட்டு, மற்ற எல்லாவற்றையும் செய்து
கொண்டேயிருக்கிறான்.

அது மட்டுமல்லாமல் தன் மூலதனத்தையே விற்றுவிட்டு முடங்கி போயிருக்கிறான்.

வேலை கிடைப்பதற்காகப் படிக்கிறான், சம்பளம் கிடைப்பதற்காக உழைக்கிறான், நல்ல அந்தஸ்து கிடைக்கச் சாதிக்கிறான்... இவ்வளவும் எதற்காக எனக் கேட்டால் வரும் பதில், 'நல்ல வாழ்க்கைக்காக!'

'நல்ல வாழ்க்கை வாழ' என்ன படித்தீர்கள், என்ன உழைத்தீர்கள்?

'வாழ்கிறேன் பேர்வழி' என வாழ்வையே மனிதன் இழந்து கொண்டிருக்கும் பரிதாபச் செயல், நிறுத்தத்திற்கு வரவேண்டும்.

வாழ்வு என்பது ஆனந்தமயமானது. அதை மீண்டும் மனிதனுக்குக் கிடைக்கச் செய்யும் வழிமுறைகளின் தொகுப்புதான் ஆன்மீகம்.

நீங்கள் என்ன தேடினாலும், அதன் உள்நோக்கம் நிலையான நித்யமான திருப்தி, நிம்மதி, ஆனந்தத்தை