KAILASA Library/உள்ளே/நீயும் நீயும் சேர வேண்டும்Sign in
உள்ளே

நீயும் நீயும் சேர வேண்டும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களின் மிக நெருங்கிய நண்பன் யார்?

பதில் கண்ட பின் தொடருங்கள்.

நிச்சயம் உங்கள் பெயரைத் தவிர மற்ற எல்லோரின் பெயரும் மனதில் ஓடியிருக்குமே!

மனிதன், அவனைத் தவிர மற்ற எல்லோரையும் நேசிக்கத் துடிக்கிறான். அதில் மிக ஆர்வமாயிருக்கிறான்.

உங்களுக்காகவே வாழும் உங்களின் உடலுக்காக இதுவரை என்ன உதவி செய்திருக்கிறீர்கள்.

ஆசைப்படும் போதெல்லாம், அதன் ஐம்புலன்களையும் அளவுக்கதிகமாக பயன்படுத்துவதைத் தவிர வேறு எந்த நல்லதையும் மனிதன் தன் உடலுக்குச் செய்வதில்லை.

வீட்டுச் செல்லப்பிராணியை விட, மிக விசுவாசத்தோடு வேலை செய்யும், மிக அருமையான நண்பனான உடல் மதிக்கப்படுவதேயில்லை.

உங்கள் உடலை மதிப்பது ஆனந்தத்தின் துவக்கம். உண்மையான அன்பின் நுழைவாயில்.

அது ஆழமான உறவின் அஸ்திவாரம். உங்கள் துணிமணியைப் பராமரிப்பதில் பாதியளவுக்காவது உங்கள் உடலைப் பராமரியுங்கள்.

உடல் மேல் அக்கறை கொள்ளுங்கள். உடலைக் கவனியுங்கள். காப்பாற்றுங்கள். அன்பு செய்யுங்கள். உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்.