மனித மனத்தால்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
'நான் மாட்டேன் போ!' என ஒரு குட்டி மீன் அடம்பிடித்து நிற்க முயற்சித்தாலும், ஓடும் நதியில் வாழும் அது, நதியின் போக்கில் இழுத்துச் செல்லப்படும்.
மீறி, அந்த குட்டி மீன் நிற்க முயற்சித்தாலும், தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
நதியை எதிர்க்கும் மீன் தடுமாறும்! தூக்கியெறியப் படும்! தான் தண்ணீரால் துஷ்பிரயோகப் படுத்தப்படுவதாக அது நினைத்துக் கொள்ளும்! தன்னைச் சுற்றியுள்ள தண்ணீர் துளிகள் தன் சுதந்திரத்தைப் பறிப்பதாக நம்பித் தொலைக்கும்!
கடவுள் எனும் இயற்கை சக்தி, நதியை விடப் பல மடங்கு வேகமானது. சூட்சுமமானது.
மீனின் எண்ணங்களை விடப், பல மடங்கு சூட்சுமமான மனம் கொண்ட மனிதன், இயற்கையி- ருந்து பிரிந்திருக்கிறான்.
இயற்கையின் போக்கில் அழைத்துச் செல்லப்படுவதை விட, தன் கற்பனைகளின் படி, நதிபோல் ஓடும் வாழ்க்கையின் எதிர்த்திசையில் செல்வதையும் விரும்புகிறான்.
விளைவு - தான் தடுமாற்றப்படுவதாகவும்! தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும், தன் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் நம்பித் தொலைகிறான்.
நதியின் போக்கில் தன்னை சமர்ப்பித்துவிட்ட, நதிக்குப் போகும் வழியெல்லாம் கொண்டாட்டமே! நதியின் வேகத்தில் செல்வது தொடர்ந்து ராட்டினத்தில் இருப்பது போல சுகமாக இருக்கும்.
இயற்கையின் போக்கில் வாழத் தன்னைச் சரணாகதி செய்துவிட்ட மனிதன், தன்னை வாழ்வெனும் இன்ப நதியின் ஒரு துளி போலவே பாவித்துக் கொள்வான். ஆனந்தமாக இருப்பான்.
ஒரு உண்மை: