KAILASA Library/உள்ளே/நீங்கள் நீங்களேயல்ல...Sign in
உள்ளே

நீங்கள் நீங்களேயல்ல...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அப்படியென்றால்

நீங்கள் யார்?

ஒரு மனிதன் காட்டில் அமர்ந்திருப்பது போன்ற சித்திரம்

இது ஒரு பார்சல். இது பெங்களூரி-ருந்து திருவண்ணாமலைக்குச் செல்கிறது. இந்த விலாசத்திற்குச் செல்கிறது - என்கின்ற விளக்கங்கள் பார்சல் அல்ல. அது அதன் மேல் ஒட்டப்பட்ட லேபிள் மட்டுமே.

நீங்கள் ஒரு ஆண்.

இன்னாருடைய மகன் நீங்கள், இவர்களுடைய தந்தை நீங்கள், நீங்கள் ஒரு டாக்டர், இன்ஜினியர்... என்ற எல்லா விளக்கங்களும் நீங்கள் அல்ல.

மேற்கண்ட எல்லா விளக்கங்களிலும் இடம்பெற்றிருக்கும் அந்த 'நீங்கள்' யார்?

உங்களைப் பற்றிய எல்லா விளக்கங்களும், வர்ணனைகளும் உங்களைச் சுற்றியிருக்கும் போர்வை மட்டுமே. போர்வை நீங்களல்ல.

ஆனால், இன்றைய எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம் இந்தப் போர்வையே. 'நான் போர்வை மட்டுமே' என்ற உண்மையைத் தாண்டி அந்த மனப்போர்வையே தன்னை மனிதன் என நம்ப ஆரம்பித்துவிட்டது. புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தாலும் இது உண்மையே.

உங்களைப் பற்றிய சில விளக்கங்கள் தான் உங்களுக்குத் தெரிந்த இன்றைய நீங்கள்.

ஆனால், விசித்திரமென்னவென்றால் இந்த விளக்கங்களை நீங்கள் தாண்டிச் சொல்லாதவரை, நீங்கள் நீங்களேயல்ல.