KAILASA Library/உள்ளே/எதிரியும் நண்பரும் மாயத் தோற்றங்கள்Sign in
உள்ளே

எதிரியும் நண்பரும் மாயத் தோற்றங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

illustration

ஒரு முழு நாவ- ன் இரு பக்கங்கள் மட்டும் உங்களின் கைக்குப் படிக்கக் கிடைக்கிறது.

அந்த இரு பக்கங்களைக் கொண்டு முழு நாவ- ன் கதையையே நீங்கள் சொல்ல நினைத்தால் அது எப்படியிருக்கும். அது கதையாகவா இருக்கும்?

நிஜ நாவலுக்கும், நீங்கள் ஜோடித்த கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இருக்காது. இருக்கவும் முடியாது.

உங்களுக்கு, உங்களைப் பற்றி முழுமையாகத் தெரியுமா? சிந்தியுங்கள்...

உங்களைப் போன்றவர்கள்தானே மற்றவர்களும். அவர்களுக்கே அவர்களைப் பற்றித் தெரியாதபோது...

"அவர் இப்படிப்பட்டவர்...

இவர் மோசமானவர்...

அவர் நல்லவர்..."

என நீங்கள் சொல்லும் எல்லா அபிப்பிராயங்களும் நிஜமான அந்த மனிதனின் குணம் பற்றிய இரண்டு பக்க அளவு உண்மையாகக் கூட இருக்க முடியாது.

ஒரு மனிதனால் இன்னொரு மனிதனைப் பற்றி வர்ணனை செய்ய முடியாது. மீறி நீங்கள் செய்யும் நல்ல, கெட்ட என்ற இரண்டு வர்ணனைகளுமே பொய்யானவையே. அழகாய், தத்ரூபமாய் தெரியும் ஜோடனைகளே!