எதிராளி சொல்லும் போதனைகள்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
‘வா, பில் கிளிண்ட்டா!’ என உங்களை அழைத்தால் உங்களுக்குக் கோபம் வராது.
உங்களை ‘வா கிறுக்கா!’ என்றால் கண்கள் சிவக்க கோபம் வெடிக்கும். ‘அமெரிக்க அதிபர்’ என உங்களை சொல்லும்போது வராத கோபம் ‘கிறுக்கர்’ எனச் சொல்லும்போது வருகிறது. ஏன்?
அதிபர் என்பது முழுப் பொய் - கிறுக்கர் என்பதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
அதிபர் என்றால் சிரிப்பவர், கிறுக்கர் என்றதும் கிளர்ந்தெழுந்து கோபப்பட்டுக் கிறுக்குத்தனமாக எதையாவது செய்து கிறுக்கராகவே நடந்து கொண்டால்... எதிராளி சொன்னதில் கணிசமான அளவுக்கு உண்மை இருக்கிறது என்று அர்த்தம்.
எரிச்சல், கோபம் வந்த நிமிடங்களையும் வரப்போகும் நிமிடங்களையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த நிமிடத்தில் எதிராளி சொன்ன வார்த்தைகளை மனதிற்குள் எடுத்துவந்து ஆராயுங்கள். காரணம் அந்த வார்த்தைகள் உங்களைப் பற்றிய கணிசமான அளவு உண்மைகளைப் பறைசாற்றுகின்றன.
அவை உங்களைத் திருத்திக் கொள்ள உதவும் பிரத்யேக சூத்திரங்கள்.
உங்களைப் பற்றி உங்களுக்கே போதிக்கும் இது போன்ற நிமிடங்களைத் தவறவிடாதீர்கள். எரிச்சல், கோபம் வரும் காலங்களைத் தியான ஆராய்ச்சிக் காலங்களாக மாற்றுங்கள்.

கோபம் வர வைக்கும்
வார்த்தை...
உள் அவலம்,
வெளிவரச் செய்யும்
வேத மந்திரம்!